‘ராசா கைய வெச்சா’ திராவிடர்தர ‘அறிவியல் பூர்வமான’ 2ஜி ஊழலும், தாஜ்மஹலும் – சில குறிப்புகள்​

October 18, 2017

​என்னைப் பொறுத்தவரை இவை இரண்டுக்குமிடையே ஒரு பெரிய மசுருக்கும் வித்தியாசம் இல்லை. நன்றி.

ஏனெனில் அம்மணிகளே, அம்மணர்களே – இரண்டுமே உல்லாசத்திலும் படாடோபத்திலும் மிதந்துகொண்டு, பொய்பல பேசி, ‘அந்தக் கால மத-சமூக மேன்மை(!)’யைப் பின்பற்றி அட்டூழியங்கள் செய்து, மக்களைப் பஞ்சத்தில் ஆழ்த்திப் ​பட்டினிபோட்டு, கொலை செய்து, மக்கள் வரிப்பணத்தை அமோகமாகக் களவாடி, நாட்டைப் பற்றி எள்ளளவும் கரிசனம் இல்லாமல் சொந்தப் புல்லரிப்புகளுக்கு மட்டுமே களவாடிய பணத்தைத் செலவழித்து​ – அனைத்துக்கும் பின்னர் மினுக்கிக்கொண்டலையும் அரச அயோக்கியத்தனங்களின் உருவகங்கள்தாம்.​
​-0-0-0-0-​

… இது 2010 வாக்கில் எழுதியது – ​குழந்தைகளுடன், ஊழல்கள் குறித்தும்  மாறிக்கொண்டேவரும் நம் சமூகத்தின் பார்வைகளையும் அலசிக்கொண்டிருந்தபோது நடந்த விஷயம்.  ஊக்கபோனஸாக – ஸுல்தானிய-முகலாய-ப்ரிட்டிஷ் கால கட்டங்களில் நடந்த நம்பவேமுடியாத அட்டூழியங்களைக் குறித்த சில பல உரையாடல்களும் நடந்ததாக நினைவு.

shah jahan’s tajmahal vs raja’s 2G corruption

(முடிந்தால்) படித்து இன்புறவும். நன்றி.

 

4 Responses to “‘ராசா கைய வெச்சா’ திராவிடர்தர ‘அறிவியல் பூர்வமான’ 2ஜி ஊழலும், தாஜ்மஹலும் – சில குறிப்புகள்​”

  1. nparamasivam1951 Says:

    சார், இப்போது தாஜ்மகல் இருந்த இடத்தில், ஒரு சிவன் கோவில் இருந்ததாக படித்தேன். இப்போதும் பேஸ்மென்ட்டில், ஒரு அறை பூட்டப் பட்டு, மக்கள் பார்வைக்கு அப்பாற் பட்டதாய் உள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் இதுபற்றி உலகறிய அறிவிப்பார் என படித்தேன். இது குறித்து உங்கள் கருத்து?


    • அய்யா, அது அப்படியும் இருக்கலாம்; அதற்கு அசைக்கமுடியாத ருசு இருக்கலாம், எனக்குத் தெரியாது.

      ஆனால் வட இந்தியாவில் (+தென்னிந்தியாவிலும்) – ஸுல்தானிய/முகலாய ஆதிக்கம் இருந்த இடங்களிலெல்லாம் ஆயிரக் கணக்கில் கோவில்கள் (புத்த விஹாரங்களும்கூடத்தான்) இடிக்கப்பட்டு அந்த இடிமானக் கற்களைக்கொண்டே மசூதிகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல – கோவில் பணியாட்களும் அமோகமாகக் கொல்லப்பட்டு, பெண்கள் அடிமைகளாக்கப்பட்டு எனப் பலப்பல சோகமான விஷயங்கள் நடந்திருக்கின்றன. (நானே கடந்த 25-30 ஆண்டுகளில், அவற்றில் குறைந்த பட்சம் 15-16 ‘மசூதி’களுக்காவது சென்றிருக்கிறேன்)

      என்னைக் கேட்டால் – வெகு தீர்க்கமாக இவையெல்லாம் சரியல்ல, ஆனால் அக்காலத்தில் நடந்தவைதான் என (வெட்டிப் பொய்யோ சால்ஜாப்போ சொல்லாமல்) மனதாற ஒப்புக்கொண்டு – இனிமேல் அப்படிப் பட்ட மதவெறி விஷயங்கள் நடக்கக்கூடாது என முன்னேறவேண்டும் என நினைக்கிறேன். ஆனால் தீவிர இஸ்லாமிய இயக்கங்களுக்கு இது ஒத்துவராது என்றும் தெரியும்.

      யோகி ஆதித்யநாத் அவர்களின் அறிவிப்பு பற்றியெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. மன்னிக்கவும்.

      • nparamasivam1951 Says:

        உங்கள் உடனடி கருத்துரைக்கு நன்றி சார். யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு பதில் Dr. சுப்பிரமணியம் சுவாமி, தன்னிடம் ஆதாரம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அது போக, நானும் தங்களைப் போன்ற எண்ணத்தில் தான் இதுவரை இருந்தேன். ஆயினும், ஆயினும்…….மன்னிக்கவும் சார்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s