வாய்கூசாமல் புளுகிவிட்டு, பின் வெட்கமேயில்லாமல் அரைகுறை மனதுடன் ஒற்றைவரி மன்னிப்புக் கேட்ட ‘த ஹிந்து’
October 15, 2017
கூச்சநாச்சமேயில்லாத அயோக்கியர்கள், இந்த ஊடகப்பேடிகள் – வேறென்ன சொல்ல…
-0-0-0-0-0-
இந்த தஹிந்துத்துவா தினசரியின் தொடரும் பேடித்தனங்களைப் பற்றி எழுதியெழுதி (=அதனை அடியேன் உட்பட 7.5 பேர் மட்டும் தொடர்ந்து ஸ்தம்பித்துப் படிக்கத்தான், பயப்படாதீர்கள்!) தொடர்ந்து என் ரத்த அழுத்தத்தை ஏற்றிக்கொள்ளவேண்டாம் எனத்தான் நினைத்தேன்.
ஆனால் துரதிருஷ்ட வசமாக நேற்று, நான் மிகவும் (இப்பவும்) மதிக்கும் இடதுசாரித்தனமான ‘சமூகவியல்(!)’ பேராசிரியர் ஒருவருடன் வாக்குவாதம். அமைதியாகத் தோட்டவேலைத் தியானயோகம் செய்துகொண்டிருந்தவனைச் சீண்டிவிட்டுவிட்டார். ‘த ஹிந்து’ ராம் அவர்கள் மீது மிகவும் மரியாதை வைத்திருப்பவர் அவர். போஃபர்ஸ் ஊழல் வெளிக்கொணர்தல் விஷயத்திற்குப் பின் ஏற்பட்ட பிரச்சினைகளில் வித்யா சித்ரா சுப்ரமணியம் (இவர் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்?) அவர்களை அம்போ என இந்தச் சுயநல ராம் விட்டுவிட்டதைச் சொன்னபோதும்கூட அதற்கு ருசு கேட்டவர். கொடுத்தபின் அரைகுறை மனதுடன் ஒப்புக்கொண்டவர்.
“சும்மா பேசாதே, உன்னுடைய தஹிந்துத்துவாகாரர்கள் மனமாறப் பொய் சொன்னதற்கு ருசு உண்டா” எனக் கேட்டார்
பிரச்சினை என்னவென்றால் – எனக்கு இன்னமும் இந்த சமூகவலைத்தள அடிப்படைகள் பிடிபடவில்லையாதலால் – ஒப்புக்கொள்ளத்தக்க, நியாயமான தரவுகளில்லாமல் எந்தவொரு விஷயத்தையும் அட்ச்சுவுடக்கூடாது என நினைப்பவன்.
ஆகவே — ஆஹா அம்மணீ – பக்கம் பக்கமாக உங்களுக்குத் தேவையான ருசுக்களை ஆனந்தமாக அள்ளித்தருகிறேன் என ஒரு கொத்து ‘தமிழ் இந்து’ அரைகுறைத்தனத்தின் சுட்டிகளை (சமஸ் அவர்கள் எழுதிய சிலபல காட்டுரைகள் உட்பட) அனுப்பினேன். ஆனந்தவிகடன் உயிர்மை விடுதலை நக்கீரன் தரத்திலிருக்கும் பப்பரப்பாக் குப்பைகள் அவை. (இந்த விகட நக்கீரக்குப்பைகள் போகிற போக்கில் உதிர்க்கும் இளம் ஊடகமசுர்களைப் பொறுக்கிப் பொறுக்கியே , தங்கள் ஆசிரியர் குழுவை இந்த ‘தமிழ் இந்து’ காரர்கள் உருவாக்கிக் கொண்டு விட்டார்கள் என்பதென் எண்ணம்)
ஆனால், அவர் – இந்தப் பாவப்பட்ட ‘தமிழ் இந்து’ தினசொறியானது – முரசொலி தினகர தினமலர்களுடன் போட்டியில் இருப்பதால், ஆகவே தினசரி அச்சிடும் ~~40,000 பிரதிகளில் இருந்து முக்கிமுக்கி மேலே செல்ல விருப்பப் படுவதால் அது வெளியிடும் செய்திகளின் தரத்தை வைத்து, ‘த ஹிந்து’ குழுமத்தை மதிப்பிடக் கூடாதென்றார். ஆங்கில ‘த ஹிந்து’வில் இப்படி ஏடாகூடமாகியிருக்கிறதா எனக் கேட்டார்.
சரிதான்.
தமிழில் இலக்கியம் என்றாலும் சரி, திரைப்படம் என்றாலும் சரி, செய்தி என்றாலும் சரி – தரத்தையும் நம்பகத்தன்மையையும் பொறுத்தவரை, ஒரு ஆடிமாதத் தள்ளுபடி ‘deep discount’ எழவை தாராளமாகக் கொடுப்பதுதானே முறை? இந்தச் சோகத்துக்கு ஒரு விதிவிலக்காவது உண்டா, சொல்லுங்கள்?
சரி.
பொதுவாகவே, இந்தியர்கள் – குறிப்பாகத் தமிழர்கள் – ஒரு மகத்தான ஊடக மாயையில் சிக்கியிருக்கிறார்கள். டீவியில் விகடனில் ஏதாவது வந்துவிட்டால் அது உண்மை. மயிர்மையில் ஏதாவது வந்து விட்டால் அது இலக்கியவுச்சத்தின் உயிர்மை. என்ன எழவோ!
… ‘த ஹிந்து’ தினசரியில், ஆங்கிலத்தில் வந்து விட்டாலோ அது வேதவாக்கு! “ஹிண்டுலயே சொல்லிட்டான்!” புளகாங்கிதம்தான், வேறென்ன.
போதாக்குறைக்கு, ஊழல் கருணாநிதி முதல் மதராஸ் மங்கம கனிமொழி ஊடாக எந்தவொரு கீழ்மட்டப் பொறுக்கி வரையும்கூட – இந்த ‘த ஹிந்து’ செய்திகளையும் திரிப்புகளையும் அவர்களுக்குத் தோதுப்பட்டபோதெல்லாம் மேற்கோள் காட்டி நியாயவான்களாகப் பவனி வருவார்கள்.
ஆனால் எனக்குத் தெரிந்து, கடந்த 35 ஆண்டுகளாக (விடுதலைப் புலி லும்பன்களைக் காத்திரமாக எதிர்த்ததைத் தவிர) இந்தத் தினசரி செய்ததெல்லாம் திரித்தல்தான்; லிபரல்வகைத் திரித்தல்வாதமும் பாரத பாரம்பரியங்களின்மீது அதீத வெறுப்புணர்ச்சியும்தான் இவர்களின் ஒட்டுமொத்த பங்களிப்புகள். (சரி. அவ்வப்போது தன் இயல்பையும் மீறி, ஓரிரு நல்ல விஷயங்களையும் இந்தத் தினசொறி வெளியிட்டுவிடும் என்பதையும் நான் மண்டையில் அடித்துக்கொண்டு ஒப்புக்கொள்கிறேன்)
இன்னொரு விஷயம் – ‘த ஹிந்து’ பத்திரிகையின் ஆங்கிலப் புலமை பற்றிய பிரமை. சுமார் 10 வருடங்களுக்கு முன்புகூட – இத்தினசொறியின் ஆங்கிலமும், செய்தித் தலைப்புகளும் ஓரளவுக்கு மெச்சத்தகுந்ததாகவே இருந்தன என எனக்கொரு பிரமை.
ஆனால் இப்போதோ? கேட்கவே வேண்டாம்! என் ஆங்கிலத்தைவிடப் படுகேவலமான மொழியில் அடிப்படை இலக்கணத் தவறுகளுடனும் தொடர்பற்ற, பப்பரப்பாத்தனமான சீண்டும் தலைப்புகளுடனும் கதிகலங்க வைக்கிறார்கள்.
போதாக்குறைக்கு எக்கச்சக்க கேரள நிருபர்களும் இன்னபிறரையும் வேறு ‘த ஹிந்து’ ஆங்கில தினசொறியில் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்! ஏன், தமிழ் நாட்டில் இல்லாத அரைகுறைப் பத்திரிகையாளர்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை? தமிழனாகிய எனக்கு வரும் அறச்சீற்றத்துக்கு அளவேயில்லை. (உடனடியாக மெரீனா போய் ப்ரொட்டெஸ்ட் செய்யவேண்டுமோ?)

நல்ல தொழில்முறைத் தொழிற்சங்கம். நல்ல தொழிற்சங்கத் தலை
இதெல்லாம் ஒரு சுக்குக்கும் பிரயோஜனம் இல்லையென்றாலும், தரவுகளுடன் கூடிய வாக்குவாதங்களினால்கூட ஒரு மனிதன் (அவன் மற்றபடிக்குச் சரியானவன் என்றாலும்) தன் சிந்தனைச் சரடுகளை மாற்றிக்கொள்ளவே மாட்டான் என்பது நன்றாகவே தெரிந்தாலும்…
…ஒரு ஆற்றாமை காரணமாகத்தான் கீழ்கண்டவற்றையும் தொடர்ந்து எழுதுகிறேன். :-(
(சரி. ‘த ஹிந்து’ கருத்துத் திரிப்புவாத குண்டர்கள்பக்கம் வருவோம். இதைத்தான் ஒரு எடுத்துக்காட்டாக அந்தப் பேராசிரிய அம்மணியிடம் கொடுத்தேன். ஊக்கபோனஸாக தமிழர்களின் காரியார்த்தமான அறச்சீற்றம் பற்றியும் ஒரு பிலாக்கணத்தை வைத்தேன்)
-0-0-0-0-0-0-
அஜித் குமார் டோவால் – 2014 மே மாதத்திலிருந்து, நம் மத்திய அரசின் தற்போதைய தேசப் பாதுகாப்பு அறிவுரையாளர்/ஆலோசகர் (National Security Advisor) – தேசத்தின் பாதுகாப்பு குறித்துப் பலப்பல கச்சிதமான, நுணுக்கமான காரியங்களைச் செய்திருப்பவர். ரகசியத் துறைகளில் வெற்றிகரமாகவும் சச்சரவுகளில் ஈடுபடாமலும் பணியாற்றியுள்ளவர். அதிகம் பேசாமல் மகத்தான பணிபுரியும் ஆட்களில் ஒருவர்.
ஆனால் – இவரைப் பற்றிப் பேடித்தனமாகவும் அயோக்கியத்தனமாகவும் இந்த ‘த ஹிந்து’ மஞ்சள் பத்திரிகை – ஃபெப்ருவரி2014 வாக்கில், அஜித் டோவால் அவர்கள் அடுத்த என்எஸ்ஏ ஆகலாம் எனச் செய்திகள் சுற்றிக்கொண்டிருந்தபோது ஒரு எதிர்மறைச் செய்தியை வெளியிடுகிறது. ஏனிப்படிச் செய்கிறதென்றால் – இப்பத்திரிகை உள்ளிட்ட, இடதுசாரிப் பாவலா காட்டி இளிக்கும் பொய்மையாளர்களுக்கு – இந்தியாவுக்கு ஏதாவது நல்லது நடக்கப்போகிறது என்றாலே ரத்த அழுத்தம் ஏறிவிடும். முழுமூச்சுடன் அவர்களுக்கு முடிந்த எல்லா வழிகளிலும் (பெரும்பாலும் வெட்டிப் பரப்புரையும் பொய்மையும்தான்!) அதனைத் தடுக்க முயற்சிகள் செய்வார்கள்.
இதற்குமேற்பட்டு, அஜித் டோவால் அவர்கள், பாரதமேன்மை குறித்த கருத்தாக்கங்களுக்காக இயங்கும் ‘விவேகானந்தா இன்டெர்நேஷனல் ஃபௌன்டேஷன்‘ நிறுவனத்தின் தொடங்கியோர்களில் ஒருவராக இருப்பதும் ஒரேயடியாகக் கண்ணை உறுத்தியிருக்கிறது. ஆகவே அவர்களை முடக்கும் ஒரு முயற்சிதான் இச்செய்தி…
ஆனால் தலையங்கங்கள் என்பவை (அதுவும் ‘த ஹிந்து’ போன்ற ‘பாரம்பரியம்’ மிக்க தினசரிகளில்) படு ஸீரியஸானவை. அவற்றில் சொல்லப்படுபவை – மிகுந்த ஆலோசனைக்குப் பின், தரவுகளுடனும், பொறுப்புணர்ச்சியுடனும், நீண்ட கால முன்னேற்றத்தைப் பற்றிய கரிசனத்துடன் எழுதப்படுபவையாக பரவலாக நம்பப்படுபவை. அறச்சீற்றத்துடனும் அதிகவனத்துடனும் அதிநேர்மையுடனும் மக்களுக்கு உண்மையான விஷயங்கள் போய்ச் சேரவேண்டும் என்கிற தார்மீக உணர்ச்சியுடனும் விஷயங்கள் சொல்லப்படுவதாக நம்பப் படுபவை.
அச்சமயம் தினசரியின் ஆசிரியராக இருந்தவர் – சித்தார்த் வரதராஜன் – இவருடைய கைவண்ணத்தில்தாம் – முக்கியமாக இவருடைய பொறுப்பில்தான் இப்பேடித்தனமான தலையங்கம் வந்தது.
சொல்லப் போனால் – இந்த மனிதர் ஒரு அமெரிக்கக் குடிமகனாதனால் இந்தியச் சட்டங்களின் படி, ஒரு இந்திய தினசரியின் ஆசிரியராக முடியாது. (இது ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் இருக்கும் சட்டம்தான் – அதாவது அந்தந்த நாட்டின் குடிமகன் (அல்லது குடிமகள்)தான் அந்தந்த நாட்டின் பத்திரிகைத் துறைகளின் உச்சத்தில் இருக்கமுடியும் என்பது… யோசித்துப் பாருங்கள் – நம் அப்துல் ‘மனுஷ்யபுத்திரன்’ ஹமீதுப் பெருந்தகை அவர்கள், அமெரிக்க ந்யூயார்க் டைம்ஸ் தினசரியின் பொறுப்பாசிரியராகப் பணியேற்றால், அமெரிக்காவையே விடுங்கள் – உலகத்துக்கே கதி கலங்கிவிடாதா?)
சரி, இந்த அறச்சீற்ற நடிகர்தனமான அரைகுறைகளை விட்டுவிட்டு, இந்தத் தலையங்கத்தின் சர்ச்சைமிகுந்த பகுதிக்கு வருவோம்:
அதாவது – “முன்னாள் இந்தியத் துப்புத்துலக்கும் துறை (ஐபி) இயக்குநராகவும், கீர்த்தி சக்ரா விருது பெற்ற ஒரே இந்திய பொலிஸ் அதிகாரியாகவும் இருந்த அஜித் டோவால் என்பவர் மிக வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ள விஷயம் – தனக்கு ஜனாதிபதியால் இவ்விருது கொடுக்கப்பட்டதற்கான காரணமான சம்பவத்தில் – பாகிஸ்தானிய ஒற்றன் ஒருவனைக் கொன்றது, சர்வதேச எல்லைகளினூடே கடத்தல் செய்தது, பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களை சட்டவிரோதமாகக் காவலில் வைத்தது ஆகியவை அடங்கும்.“
இப்படியெல்லாம் செய்தியை வெளியிட்டால், அஜித் டோவால் முடக்கப்படுவார் என சித்தார்த் வரதராஜனும், அழிச்சாட்டிய ‘த ஹிந்து’ பேய்களும் நினைத்துவிட்டார்கள் போலும்.
-0-0-0-0-0-
என் வெறிப் பிலாக்கணத்தை முழுவதும் கேட்டுவிட்டு, தரவுகளையும் பார்த்துவிட்டு – அம்மணி கொஞ்சம் யோசித்தபின் ஒரு குறுஞ்செய்தியை அனுப்புகிறார். “Whatever it is Ram, at least you should be happy that The Hindu apologized. Can you even imagine getting an apology from Viduthalai?”
ஏனிப்படிச் செய்தார்கள், அவர்களுடைய தரவுகள் என்ன, இச்செய்திக்குப் பரிகாரமாக என்ன செய்தார்கள், இம்மாதிரிக் கயமைகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க என்ன செய்தார்கள் – என ஒரு மசுரு விவரணையோ ஆழ்ந்த மன்னிப்போ, தங்கள் திருட்டுத்தனம் வெளிப்பட்டதில் அசிங்க உணர்ச்சியோ கிடையாது!
வெறுமனே ‘The Hindu regrets the error and conveys its apologies to Mr. Doval. — Editor-in-Chief’ அவ்ளோதான்! கூச்சமேயில்லாமல் கடந்து போய்விட்டார்கள்! போய்க்கொண்டே இருக்கிறார்கள்!!
இந்தக் கூறுகெட்ட ரீடர்ஸ்’ எடிட்டர் (இதன் பொம்மைவடிவம் ஏஎஸ் பன்னீர்செல்வம் அவர்களிடம் இருக்கிறது) என்னதான் செய்தார் இந்தப் பொய்மையையும் கயமையையும் குறித்து?
ஓட்டுமொத்தமாகவே ஊடகப் பேடிகள்… இவர்களிடமிருந்தா நேர்மையையும் நியாயத்தையும் எதிர்பார்க்க முடியும், சொல்லுங்கள்?
இப்படிப் பேடித்தனமாக ஒரு தினசரியை நடத்துவதற்குப் பதில் நாக்கையும் (ஊக்கபோனஸாக ஆண்குறியையும்) பிடுங்கிக்கொண்டு சாகலாம், வேறென்ன சொல்ல இந்த தண்டக் கருமாந்திரங்களைப் பற்றி…
ச்சீ… நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு.
—
October 15, 2017 at 17:48
தீ இந்து மூன்று மாதங்களுக்கு முன் வாஞ்சிநாதன் குறித்து எதையோ கிறுக்கி அசிங்கபட்டு, ஒரு ஓரமாக மன்னிப்பு கேட்டு இருக்கிறது. ராஜீவ் கொலைக்கு பிறகே வி.புலிகள் குறித்து எதிர்த்து எழுதினார்கள். அதற்கு முன் அவர்களுடைய பேட்டிகளைக் கூட எடுத்துப் போட்டார்கள்.
October 15, 2017 at 20:02
உண்மைதான், பிரபு. ஆனால் அந்த விடுதலைப்புளி நேர்காணல்களில் (இந்தியா டுடே எழவுகூட இதனைச் செய்ததாக நினைவு) அப்பட்டமான பரப்புரை இருந்திருக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்.
October 15, 2017 at 20:05
ஓ! வாஞ்சிநாதன் பற்றி இந்த ஜந்துக்கள் என்ன எழுதினார்கள்? (தினசரிகளைப் படிக்கும் வழக்கம் இல்லாததால், எவ்வளவோ மனவுளைச்சல்களை இப்படி வெற்றிகரமாகத் தவிர்த்துக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சிதான்! :-( )
October 16, 2017 at 07:40
http://www.jeyamohan.in/101474#.WeQgO1uCzIU சுட்டி இதோ. வாஞ்சியின் பேரன் என்று ஒருவரின் தகவல்கள் அடிப்படையில் ஏகப்பட்ட தகவல் பிழைகளுடன் ஒரு கட்டுரையை வெளியிட்டது. திரு பி.ஏ. கிருஷ்ணன் -எழுத்தாளர்-புலிநகக்கொன்றை, கலங்கிய நதி நாவல்களை எழுதியவர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். (உங்களைப்போலவே அரைகுறைத்தனங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பவர் என்பது கூடுதல் தகவல்.) அவர் ஒரு மறுப்பு எழுத அதைப் பிரசுரிக்கவோ கட்டுரையின் பிழைகளுக்கு வருத்தம் தெரிவிக்கவோ இல்லை. இத்தனைக்கும் திரு கிருஷ்ணன் அடிப்படையில் நேருவிய மார்க்ஸிஸ ஆதரவாளர் இன்னமும் ஆங்கில ஹிந்து பற்றி மிகவும் மதிப்பு கொண்டிருப்பவர்.
October 16, 2017 at 08:27
நன்றி! :- ) இன்னொரு நண்பர் மூலமாக இதே பிகேகிருஷ்ணன் அவர்களின் கட்டுரையின் சுட்டியையும் (திராவிட(!) அறிவு(!!)ஜீவிகள்(!!!) பற்றியது) கல்யாணராமன் கட்டுரை ++ பற்றியெல்லாம் அறிந்துகொண்டேன். இன்னொரு வயிற்றெரிச்சலாலஜி கட்டுரை வந்துகொண்டிருக்கிறது. கபர்தார்! ;-)
ஹ்ம்ம்… ஜெயமோகன் அவர்களின் சோம்பலின்மை குறித்துப் பொறாமையாக இருக்கிறது. மனிதர் தொடர்ந்து எல்லாவற்றையும் படித்துக்கொண்டிருப்பது மட்டுமல்லாமல் தன் கருத்துகளையும் எழுதிவிடுகிறார்.
October 16, 2017 at 09:03
https://thewire.in/179688/periyar-ev-ramasamy-dravida-nadu-brahmins-dmk/ நீங்கள் குறிப்பிடுவது இந்தக் கட்டுரையா? முகநூலை ஒரு கலக்குக் கலக்கியது இது… இது அதற்கு எதிர்வினை: https://thewire.in/181972/periyar-right-liberal-critiques/ இது எதிர் எதிர்வினை: https://thewire.in/185309/periyar-colonialism-freedom-brahminism-hegemony-casteism/
October 16, 2017 at 09:47
ஆம். கூடவே அரவிந்தன் கண்ணையன் அவர் தளத்தில் எழுதியது, அந்த அறியா இளைஞன் பூகொ ஃபேஸ்புக்கில் எழுதியது – எல்லாமும்தான்! :-)
இதையும் கடந்து தொடர்ந்து, போராளிப் பீடை நடை போடுவோம் நாம்! கவலை வேண்டேல். யாரும் திருந்தப் போவதில்லை.
October 17, 2017 at 16:04
நானும் ஜெயமோகன் தளத்தில் தான் வாசித்தேன்.
October 15, 2017 at 19:24
” ‘த ஹிந்து’ ராம் அவர்கள் மீது மிகவும் மரியாதை வைத்திருப்பவர் அவர். போஃபர் ஊழல் வெளிக்கொணர்தல் விஷயத்திற்குப் பின் ஏற்பட்ட பிரச்சினைகளில் வித்யா சுப்ரமணியம் (இவர் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்?) ”
அவர் வித்யா சுப்ரமணியம் இல்லை.சித்ரா சுப்ரமணியம்.எனக்கு தெரிந்து இப்பவும் ‘வித்யா சுப்ரமணியம்’ ஹிந்துவில் இன்னமும் பணி புரிகிறார் என்றே நினைக்கிறேன்.(“அதற்கேற்ற” கட்டுரைகளையும் செய்திகளையும் வழங்கி கொண்டு!)
எப்படியோ “ஹிந்துவின்” அவதூறுகளை பொருட்படுத்தாமல் மோதி அவர்கள் அஜித் டோவால் அவர்களை ‘தேசப் பாதுகாப்பு அறிவுரையாளர்/ஆலோசகர்’ ஆக நியமித்து அவரும் திறம்பட பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.
October 15, 2017 at 20:00
ஆ! தவற்றினைச் சுட்டியதற்கு நன்றி. அவர் பெயர் சித்ரா சுப்ரமணியம்தான். பழைய நினைவிலிருந்து எழுதுவதில் இது ஒரு பிரச்சினை. :-(
October 15, 2017 at 22:50
ஐயா,
சித்ரா சுப்ரமணியன் அவர்கள் ட்விட்டரில் செயலாற்றுகிறார் .
நன்றி
விஜய்
October 16, 2017 at 04:15
நன்றி. :-)
October 16, 2017 at 09:14
“இந்த மனிதர்- சித்தார்த் வரதராஜன் – ஒரு அமெரிக்கக் குடிமகனாதனால் இந்தியச் சட்டங்களின் படி, ஒரு இந்திய தினசரியின் ஆசிரியராக முடியாது. (இது ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் இருக்கும் சட்டம்தான் – ”
அது சரி இப்படிப்பட்ட ஆட்களை ‘ஆசிரியராகக்கொண்டு தினசரி செய்திகள் வழங்கும் வலைத்தளங்களை
(News Website) சட்டப்படி தொடங்கி நடத்தலாமா?.ஏனெனில் தற்போது அவர் The Wire (thewire.in) என்ற செய்தி ஊடகத்தை தோற்றுவித்து-Founding Editor – நடத்திவருகிறார் என்பது தங்களுக்கு தெரியுமென நினைக்கிறேன்.
அதில் அவர்களுடைய “கொள்கை பிரகனட த்தில்”இந்தவாறு எழுதி நம்மை ‘புளகாங்கிதம்’அடைய செய்திருக்கிறார். :-)
“The founding premise of The Wire is this: if good journalism is to survive and thrive, it can only do so by being both editorially and financially independent. This means relying principally on contributions from readers and concerned citizens who have no interest other than to sustain a space for quality journalism.”
வாழ்க வளமுடன்!!
October 16, 2017 at 09:49
நன்றி. எனக்கு இந்த தவயர் தளத்தின் பின்னணி பற்றித் தெரியாது. ஆனால் அதில் சில கட்டுரைகளை (பிஏ கிருஷ்ணன், கல்யாணராமன்) படித்திருக்கிறேன். அவ்வளவுதான்.
இணைய பத்திரிகைகளுக்காகவென தனிப்பட்ட இந்திய விதிகள் எதுவும், எனக்குத் தெரிந்தவரை இல்லை.
ஆனால் இணையத்தில் நிறைய தலைவிதிகள் இருக்கின்றன, என்ன செய்ய.
இந்த சித்தார்த் வரதராஜன் – நம்மில் எவரைப்போலவுமே கறுப்பும்வெளுப்பும் கலந்த கலவைதான். ஆகவேதான் அவர் quality journalism அப்படிச்சொல்லி மினுக்கிக்கொள்ளும்போது பலவிஷயங்கள் நினைவுக்கு வந்து சங்கடம் தருகின்றன.
ஆனால் என்ன, அவரவருக்கு அவரவர் வேடம். :-)
மேலும் ஐயா, வளமுடன் வாழவெல்லாம் வேண்டாம், அளவுடன் வாழ்ந்தாலே போதுமல்லவா?
October 16, 2017 at 12:32
சமீபத்தில் the wire இணைய பத்திரிகையில் அமித்ஷாவின் மகன் தொழில் குறித்த கட்டுரையும், அதற்கு the wire மீது அமித்ஷா மகன் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருப்பதையும் அறிவீர்கள் என நம்புகிறேன்.
http://www.opindia.com/2017/10/after-opindia-expose-the-wire-selectively-alters-its-story-to-be-further-slammed-by-readers/
October 17, 2017 at 08:55
[…] வாய்கூசாமல் புளுகிவிட்டு, பின் வெட்க… 15/10/2017 […]
October 17, 2017 at 14:29
“நல்ல தொழில்முறைத் தொழிற்சங்கம். நல்ல தொழிற்சங்கத் தலைவர்வி. ஒரு நேர்மையான (+உண்மையாகவே உழைக்கும்) ஆளே கிடைக்கவில்லையா, இந்த ‘த ஹிந்து’ தொழிற்சங்க அரைகுறைகளுக்கு?”
“தலைவியின்” எதிரொலி இப்போதே கேட்க ஆரம்பித்துவிட்டது!. – ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்!’ (கருணாநிதி!!) – விவரங்களுக்கு பார்க்க …..
https://www.minnambalam.com/k/2017/10/17/1508223612
October 17, 2017 at 19:07
“இதுவரை திரைப்படம், பாடல் போன்றவற்றுக்கு மட்டுமே முதல் பார்வை வந்துள்ள நிலையில், பதிப்பக வரலாற்றிலேயே முதல் பார்வை வந்தது தெற்கிலிருந்து ஒரு சூரியன் என்ற புத்தகத்திற்கு மட்டுமே.”
யோவ் சேஷகிரி, இன்னாமாரீ பீலா வுட்றானுங்கோ இவ்னுங்கோ! சிர்ப்பு சிர்ப்பா வர்தேப்பா! :-))
October 20, 2017 at 22:01
இதற்கு ஜெயமோகன் அவர்களின் எதிரொலி! ‘தி ஹிந்துவுக்கு’ உறைக்குமாவென்று தெரியவில்லை!
http://www.jeyamohan.in/103090#.WeoxuI-Cxdg
November 4, 2017 at 14:33
இந்தக் கட்டுரையில் அஜித் குமார் டோவால் அவர்களைப்பற்றி…
“தேசத்தின் பாதுகாப்பு குறித்துப் பலப்பல கச்சிதமான, நுணுக்கமான காரியங்களைச் செய்திருப்பவர். ரகசியத் துறைகளில் வெற்றிகரமாகவும் சச்சரவுகளில் ஈடுபடாமலும் பணியாற்றியுள்ளவர். அதிகம் பேசாமல் மகத்தான பணிபுரியும் ஆட்களில் ஒருவர் என்றும் மேலும் ஊழல் செய்ததாக, சுயலாபத்துக்காகப் பொய் சொன்னதாக இவர்பேரில் ஒரு குற்றச்சாட்டுகூட இல்லை.” என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள்.
இப்போது இவர் மகன் மீது குறி வைத்து புகார் ஓன்று கிளம்பியிருக்கிறது.’அதே’ சித்தார்த் வரதராஜன் தலைமையில் இயங்கும் ‘The Wire’ இணைய செய்தி ஊடகத்தில் இன்று வந்திருக்கும் கட்டுரை ஒன்றில்,அஜித் டோவலின் மகன் நடத்தி வரும் இந்தியா ஃபவுண்டேஷன் அறக்கட்டளையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா உள்ளிட்டோர் இயக்குனர்களாக இருப்பதாகவும்,அந்த அறக்கட்டளை வெளிநாட்டிலிருந்தும்,உள் நாட்டிலிருந்தும் நிதி பெறுவதால் அதில் இயக்குனராக இருக்கும் மூன்று அமைச்சர்களும் ‘conflict of interest’என்ற முறையில் பயனடைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் செய்தி வந்திருக்கிறது. இது பற்றி விளக்கம் கேட்டதற்கு அவர்களிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறது.இது பற்றிய சரியான தகவல்கள் தங்களுக்கு தெரியுமா? இவர்கள் கிளப்பும் சர்ச்சையில் சாரம் உள்ளதா?
https://thewire.in/193873/exclusive-think-tank-run-nsa-ajit-dovals-son-conflict-interest-writ-large/
November 5, 2017 at 08:30
அய்யா சேஷகிரி, எனக்கு இது குறித்து ஒன்றும் தெரியாது. ஆகவே மேலான கருத்தும் இல்லை. ஆனால் – பொதுவாகவே, இந்த ஸ்க்ரோல்.இன் தளம் பற்றியோ அதன் ‘ஆராய்ச்சிகள்’ பற்றியோ எனக்குப் பெரிதாக நம்பிக்கை இல்லை – ஏனெனில் இவை, சில குறிப்பிடத்தக்க விதிவிலக்குகள் தவிர்த்து பப்பரப்பாத்தனம் நிரம்பியவை. அடுத்த பப்பரப்பா கிளம்பும்வரை (அவற்றுக்கு ஆதாரமோ முகாந்திரமோ இருக்கின்றனவா என்ற பிரச்சினையையும் தாண்டி) இதில் இருப்பார்கள், பின்னர் அடுத்ததற்குக் குண்டி மண்ணைத் தட்டிக்கொண்டு கிளம்புவிடுவார்கள். அவ்ளோதான்.
நன்றி.
November 5, 2017 at 19:10
ஐயா, சித் வரதராஜும் அவரது பத்திரிக்கை ஆசிரியரும், RS TV ல், 10வருடங்களாக ஒப்பந்தம் போட்டிருந்து நல்ல வருமானம் அடைந்து வந்தார்கள். இந்த ஆண்டு, புது துணைஜனாதிபதி/RS Chairman, பதவி ஏற்றதும், ஒப்பந்தம் கலைக்கப்பட்டது. அதன் வெளிப்பாடுகள் தான், அடிப்படை இல்லாமலே புரளிகளை அப்பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது.