மாரடைப்பு வர காரணிகள் – ஒரு பேலியோ அலசல்
September 15, 2017
இந்தப் பேலியோவைப் பற்றி அநியாயமாகக் குற்றம் சொல்கிறார்கள்.
ஆனால், குற்றம் பார்த்தால்தான் சுற்றம் பெருகும் எனும் இணைய தத்துப்பித்துவத்தைக் கொண்டொழுகி மேலதிகப் பதிவுப்படிப்பாளிகளின்மீது என் கவனத்தைக் குவித்து, பேலியோ ஒன்றே வழியும் சத்தியமும் ஜீவனும் என்பதை மாராற உணர்ந்து தெரிந்து தெளிந்துள்ள நான், கீழ்கண்டபடி உண்மைகளை இயம்புவதில் எருமை அடைகிறேன். வாழ்க பேலியோ! உளர்க பேலியோ!
பேலியோவினால் மாரடைப்பு என்பவர்களுக்கு மாராப்பு வைப்போம்!
மசுர்க்கூச்செறிகிறது! நம் கோமணங்களையும் கழட்டிவிட்டு ஆதிகால மனிதன் போல பேலியோ வேட்டையாடி உண்போம். நல்வாழ்வு முக்கியமா Nullவாழ்வு முக்கியமா என்பதைப் புரிந்து Nullaவர்களாக இருப்போம்! வள்ளவர்களாக வலர்வோம். வள்வள் என்று குரைப்போம். சங்ககால வள்வில் ஓரியாக ஓங்குவோம்! காரியாக காரித்துப்புவோம்!
இவண்:
டாக்டர் வெ. ராமசாமி*,
எம்பிபிஎஸ்**, எம்டி (பயோக்கெ மிஸ்ட்ரி), பிஹெச்டி (பேலியோ), போராளி (ஃபேஸ்புக்), (தற்போது) மும்பய்.
சரி. குறிப்புகளுக்குச் செல்வோமா?
-0-0-0-0-0-0-
2. சொல்லப்போனால் பேலியோ காலத்திலேயே பேலியோ உணவைச் சாப்பிட்டவர்களும் இறந்து போய் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகின்றன. அப்போதே பேலியோ நல்வாழ்வுக் குழுமம் மட்டுமில்லாமல் பேலியோ நற்சாவுக் குழுமமும் இருந்தது என்பதை பேலியோ இகழ்வாராய்ச்சியாளர்கள்கூடத் தெரிவித்திருக்கிறார்கள்.
4. மார்அடைப்பு என்பதை மார்ரிப் புரிந்துகொள்ளாமல் பார்த்தால் அடைப்பை மாற்றுபவர்கள் என அர்த்தம் விரியலாம். ஆனால் இது தொ. பரமசிவம் அவர்களின் ஏரியா. ஆகவே குளமையா, கால்வாயையா என இதனை உடனே விட்டுவிடுகிறேன். இன்னொரு முறை ‘மடையர்’ ரவுண்ட் வர சக்தியில்லை. பமை மரமே பனை மரமே ஏன் வளர்ந்தாய் பனமரமே!
6. விசாலமான மார் உடையவர்களுக்கு, மாரடைப்பு வராது. ஆக, சிலபல அதாவது சுமார் 99.95% தமிழ் நடிகைகளுக்கு இதுவரும் வாய்ப்பே இல்லை. நன்றி.
8. மார் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரலாம். ஆனால் சீமார் உடையவர்களுக்குக் கண்டிப்பாகச் சீமாரடைப்பு வரும். நாம் தமிழர்கள் கவனிக்கவும்.
9. மாரடைப்பு என்றால் மார் அடைக்காது. இதயம் அடைத்துக்கொள்ளும். ஆனால் அண்ணாயிஸம் எனும் தத்துவத்தை நீங்கள் மார்மேற்கொண்டு ஒழுகுவீர்கள் (எங்கிருந்து எனக் கேட்காதீர்கள்!) என்றால் உங்களுக்கு எதையும் தாங்கும் இதயம், சுமார் 99% வந்துவிடும். ஒரு பிரச்சினையும் வராது.
11. மனிதர்களில் சுமார் 100% பேர் மனிதர்களாக இருக்கலாம். இவர்களில் சுமார் 100% ஆட்களுக்கு மார் இருக்கலாம். இவர்களிலும் சுமார் 100% பேர்களுக்கு இதயம் இருக்கலாம். ஆகவே இவர்களில் 100% பேர்களுக்கு 100 வயதுக்குள் மாரடைப்பு வரலாம் அல்லது வராமலும் இருக்கலாம். (இந்தப் .விவரங்கள் முக்கியமானவை, இவற்றைச் சேகரம் செய்ய நான் பட்ட கஷ்டம் இருக்கிறதே!)
12. மாரடைப்பு என்பது காலையில் வரலாம், அல்லது மாலையில் வரலாம். இரவிலும் வரலாம், பகலிலும் வரலாம். அதிகாலையிலும் வரலாம், சாயங்காலத்திலும் வரலாம். நீங்கள் ஹெர்னியாகசியபுவாக இருந்தாலும் விரைவீக்கத்தால் துயருற்றாலும் இப்படித்தான். பேலியோ பிரஹல்லாதனாக இருந்தாலுமேகூட!
14. ஆண்களுக்கு 1 வயதிலிருந்து 20 வயது வரை, 95% மாரடைப்பு வராது. அதேபோல 120 வயதிற்கு மேற்பட்டாலும் 100% வரவே வராது. இதற்கு பேலியோ உணவு முறைதான் காரணம்.
16. இரவுவேளையில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு ஒரு கோப்பையில் குடிஇருக்கும் என் அபார்ட்மெண்டில் கண்ணதாசத்தனமாக கொஞ்சம் ஜின்னைக் குடித்தால் – அது மார்ஜின் எனப்படும். இஸ்லாமியர்கள் இதனைத்தான் மார்ஜின்னு என்று சொல்வார்கள். இந்த மார்ஜின்னை அனுதினமும் குடித்தால் மாரடைப்பு போயே போச்!
18. மாராது போல வந்த மாமணி போன்ற கவிதைகளைக் கட்டினால், மாரடைப்பினால் மரணம் வராது. மாராக, வயிற்றுப்போக்கினாலோ பட்டினியாலோ வரலாம். (உதாரணம்: பாரதி)
19. மார்ரணம் ஆயிரம் என அந்தக்கால ஆண்டாள் ஆண்டையைப் பார்த்து முறையிட்டது போல கடவுளைச் சேவித்து மெக்காவை நோக்கி துவா செய்தாலும் மாரடைப்பு வராது. ஏசுவே! பாய்மார்களை மன்னியும்.
20. ஆட்டின் இதயத்தை, அந்த ஆடு உயிருடன் இருக்கும் போதே முன் பற்களால் கடித்துக் குதறி – ஒரு பேலியோ வீரன் போலச் சாப்பிட்டால், அந்த ஆட்டுக்கு ஆட்டோமேடிக்காக மாரடைப்பு வர சான்ஸேயில்லை. அதேபோல ஒரு பேலியோ காரனின் இதயத்தைக் கடித்துக்குதறி இன்னொரு பேலியோகாரன் உண்டால், முதலாமவனுக்கு மாரடைப்பு வந்து இறக்கும் வாய்ப்பே இல்லை.
22. பேலியோவில் பேலியோவுக்காக இருக்கும் குழு மம்களால் ஒரு பிரச்சினையுமில்லை. குழுடாட்டிகளால்தான் இது வருகிறது. பேலியோ உணவை உண்டு எந்தப் பெண்ணாவது இறந்ததாக சரித்திரம், பூகோளம் ஏதாவது உண்டா? மாறாக குழுடாட்டிகள் தாம் இறக்கிறார்கள்.
23. உலகத்தில் பட்டினியால் இறப்பவர்கள் 20%; ஆனால் பேலியோவால் இறப்பவர்கள் 5% தான்! ஆனால் இந்த 5% பேரில் 100% பேலியோ உணவாளர்கள் என்பது 100% பொய்.
24. பேலியோ வாழ்க. மாரடைப்பு ஒழிக.
*குறிப்பு: என்னுடைய இந்த அலசலுக்கு, நான் இதற்குக் கடமைப்பட்டிருக்கிறேண்: மாரடைப்பு வர காரணிகள்: Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore ; வெட்டியொட்டி இந்தக் காட்டுரைய அனுப்பி, மேலதிகமாக இந்தச் சுடடியையும் எனக்கு அளித்து என் மூளையையும் பார்வையையும் பேலியோ எழவில்லாமலேயே அதிகப்படுத்திய, அந்தக் குசும்புமிகு பெண்மணிக்கு நன்றி! இந்த அம்மணியானவர் இந்த பேலியோ மதவெறியர்களின் குழுமம் ஒன்றில் இருக்கும் மம். நகைச்சுவைக்காக அங்கே இருக்கிறேன் என்கிறார். அங்கிருந்தும் அது தொடர்பாகவும் படுமோசமான பேலியோதர துணுக்குகளை அனுப்பி என்னை இறும்பூதடையவைக்கும் இவர் வாழ்க! :-))
(நீங்கள் பாவம்தான்! இதுவரை படித்திருக்கும் உங்களுடைய பிரச்சினை என்னவென்றால் – என்னைத் தேவுடு காக்கவைத்து – கடந்த ஒன்றரை மணி நேரமாக ஜாலியாக (அல்லது பேலியோவாக) என்னை இப்படி வேலைவெட்டியில்லாமல் தட்டச்சு செய்யவைத்திருக்கும் அந்த மும்பய் வார்ட் கவுன்ஸிலர். இந்தக் காட்டுரைக்கு அவர்தாம் காரணம்!)
…விடாது பேலியோ!
உப்புமாவோயிஸம்29/11/2016
பேலியோ ஜிஹாதிகள்13/12/2016
September 15, 2017 at 13:09
அரிகரன் சொல்லும் ஆராய்ச்சி முடிவுகள் எத்தனை பேர்கள் கொண்டு எடுக்கப்பட்டன? அவர்கள் எல்லோரும் ஒரே வயதினரா? ஒரே பழக்க வழக்கங்கள் உள்ளவர்களா? ஒரே இடத்தில் வாழ்பவர்களா? ஒரே வேலை செய்பவர்களா? இதெல்லாம் எந்த அளவுக்கு சரியாக இருக்கும். நம்ம ஆளுங்களுக்கு புள்ளியல் விவரம் சொன்னாலே வெலவெலக்கும்.
September 15, 2017 at 13:37
அய்யா மகாபிரபு,
நீனக்ள் கேட்பதெல்லாம் சரிதான். ஏறக்குறைய 99%த்துக்கும் 101%க்கும் நடுவே நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்லக் கூடியதென 99% நினைத்துக் கொள்கிறேன். அதாவது உங்களுக்கு 25 வயதுக்கு மேலென்றால்.
அப்படியில்லாமல் உங்கள் வ்யது 25க்குக் கீழ் என 90% நான் கருதினால், மேற்கண்ட சதவீத வீச்சு 1%க்கும் 1.5% இடையே என 85% அனுமானிப்பேண்.
ஆனால் வெறும் புள்ளிகளைப் புள்ளிமான் தனமாகக் குதித்துக்கொண்டே படித்தால் போதும், ஒருவர் புள்ளியியல் விற்பன்னர் என்ன புள்ளிராஜாவாகவே ஆகிவிடுவதற்கு.
இப்படிக்கு,
ஹரிஹரப் புள்ளிராஜாவின் அடிவருடி,
டாக்டர் ராமசாமி எம்பிபிஎஸ்.
September 15, 2017 at 18:19
Dear Ram,
This Facebook has evidence how the Paleo works.
I have doubt is Rangasamy = Ramasamy
( looks similar to “salem sivaraj siddha vaithiya salai ” advertisement)
Original Facebook post has photo
God’s own paleo diet
Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore
Mr. N. Rangasamy Came to my clinic at the end of Feb 2017. He is just 39 years old and got morbid obesity, 173cm height, 112kg weight. His Hba1c was a shocking 11.2. He had diabetes for some time and was struggling to control his blood sugar levels using tablets.
After thorough history taking, examination, analysis of 93 different blood tests, i gave him paleo diet chart. He is sincerely following it till now. He checked sugar twice a day and within two weeks we stopped all the tablets. He used to ask so much doubts in beginning but now people see him and ask him doubts regarding paleo diet.
He followed regular paleo, slowly went in to intermittent fasting (Paleo Warrior diet) and now he eats just one meal a day at 8 pm. He is not at all hungry at other times.
He reduced 34kgs in 170 days. He did the orbitoasia lab’s 94 tests paleo essentials package thrice in these 170 days. His post paleo tests are perfectly alright and he is going to live a healthy life for 100 years. congrats Mr. Rangasamy.
திரு. ரங்கசாமி. N. பேலியோ மூலம் சர்க்கரை வியாதியை கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து 34கிலோ எடையை 170நாளில் குறைத்தார். அவரின் விடாமுயற்சிக்கு வாழ்த்துகள். சீக்கிரம் 71கிலோ வந்து பாடிபில்டர் ஆகவும் வாழ்த்துகள்
September 15, 2017 at 19:10
heh!
God’s OWN paleo diet?
Hard to believe that such hoaxers are there, blatantly displaying their wares!
Thanks Loganathan, for a hearty laughter! :-)
Jai Paleo!
__r.
September 16, 2017 at 14:43
//நீங்கள் பேலியோ சொர்க்கம் சென்றதும் உங்களுக்கு 72 அக்மார்க் பேலியோ 100% தேவதைகள் கிடைப்பார்கள். இது பேலியோ மீது சத்தியம். அவர்களுடன் நீங்கள் பேலியோ உணவை சலிக்குமட்டும் சாப்பிட்டுக்கொண்டு ஆனந்தமாக இருக்கலாம்!//
இதென்ன அந்நியாயம்? நான் மட்டுமே நானாக இருக்க முடியும் என்று நான் நினைத்துக்கொண்டிருக்கும்போது இப்படி ஒரு படிவலது மீறல் செய்யலாமா? தவிர ஆனந்தமாக இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று தெரியுமா? தினம் மூன்று வேளைகள் ஒத்திசைவைத் திறந்து புதிய பதிவுகள் வந்திருக்கிறதா என்று பார்த்து பின்னூட்டம் போட்டு… அந்த 4+1/2 பேரில் நிரந்தர 7+1/2யாக இடம்பெறப் போராடிப் பார்த்தால்தானே தெரியும்?
September 16, 2017 at 19:41
கவலைப் படாதீர்கள், ஆனந்தம்.(=ElephantNCigarette)
உங்கள் ஆனந்தத்தைக் கெடுத்து சச்சிதானந்தத்தை அடையலாமென ஒரு எண்ணம்.
கூடிய விரைவில், இருக்கும் வேலையற்றவேலைக்கு முழுக்கு போட்டு முழுநேர (அல்லது முழிநேர) பின்னூட்டவாதியும் பதிவாதி பயங்கரமாகவும் மாறி – உங்களுடன் சேர்ந்து பிற தளங்களுக்குச் சென்று அவர்களுக்கெல்லாம் என் ஞானத்தை (wisdomaunt), விடலைச் சொல்லாடல்களை வாரி வழங்கலாமா?
ஊக்கபோனஸாக, ட்விட்டர் ஃபேஸ்புக் வாட்ஸப் போன்ற அனைத்து வழிகளிலும் நீக்கமற நிறையலாம் எனவொரு நிறைகுட எண்ணம்வேறு.
ஏனெனில் லிபரல் + இடது அறிவுஜீவிகளின் அழிச்சாட்டிய உளறல்களைத் தாங்கவே முடியவில்லை. திராவிடெங்கிக்கொசுக்களின் ரீங்காரத் தொந்திரவு வேறு! நம்மை விட்டால், வேறு யார் தான் இந்தக் கேடுகெட்ட சமூகத்தைக் காப்பாற்ற முடியும், சொல்லுங்கள்?
;-)
March 23, 2020 at 20:18
[…] […]
May 5, 2020 at 17:12
[…] […]