எஸ்ராமகிருஷ்ணம்
June 9, 2017
…எஸ்ராமகிருஷ்ணம், எஸ்ராமகிருஷ்ணம்
எஸ்ராமகிருஷ்ணம் மூடமதே!
[இதனை எம்எஸ் சுப்புலட்சுமி அம்மையார் பாடிய ‘பஜகோவிந்தம்’ பாடலைப் போலவோ, அல்லது திடீரெக்ஸ் கர்நாடக இசை வல்லுநரான எம்டி முத்துக்குமாரசாமி அண்ணனார் பாடக்கூடியது போலவோ எடுத்துக் கொல்லலாம்; நன்றி]
…பணிசார்ந்த அழுத்தங்களில் இருந்து கொஞ்சம் விடுதலை பெற இன்று என் பேராசான் தளத்தில் சரணடைந்தால் – அவர் என்னை தடுத்தாட்கொண்டார். அவருக்குத்தான் எவ்வளவு ஆழமான நகைச்சுவை உணர்ச்சி! எனக்கோ ஒர்ரே புல்லரிப்பு. இப்படியுமா ஒருவருக்குக் கற்பனை வளமென்பது அவர்தம் தொப்பையேபோல விரியும் என்கிற மலைப்பே எனக்கு மிஞ்சுகிறது.
இதுதாண்டா எஸ்ராமகிருஷ்ணம்! கோ யுன்
;-)
-0-0-0-0-0-
// உலகக் கவிதையரங்கில் கொரியக்கவிஞர் கோ யுன் (Ko Un) மிகப்பெரும் கவியாக கொண்டாடப்படுகிறார்.
அய்யா! ஒரு வாரம் முன் இவரைப் பற்றி அறிந்துகொண்டு, ஒர்ர்ர்ரேயடியாக இப்படி ஒரு போடு போடுகிறீரே! மிகப் பெரும் கவியாமே? அப்படியா என்ன? அப்போது மிச்சமிருப்பவர்களும் வெறும் பெரும்கவிகள்தாமா? என்னப்பா இது?
// இரண்டு முறை இவரது பெயர் நோபல் பரிசிற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
ஆ! நேரில் பார்த்தது போல இப்படி எழுத உங்களுக்குக் கொஞ்சம் குண்டு தைரியம் அதிகம்தான். உங்கள் உடலும் உங்களுடன் ஒத்துழைக்கிறது, வேறென்ன சொல்ல…
அய்யா, மற்ற பல பரிசுகள் போலல்லாமல், நொபெல் பரிசுகளில் இந்த விவரங்கள் — லாங் லிஸ்ட் ஷார்ட் லிஸ்ட் என்றெல்லாம் வெளியிடப் படுவதில்லை; யார் பெயர் என்ன எழவு பரிசீலனையில் இருக்கிறது என்றெல்லாம் வரும் செய்திகள் குருட்டாம் போக்கில் வெளியிடப் படுபவை, அவ்வளவுதான்.
நொபெல் பரிசு கொடுக்கும் நிறுவனமானது – பரிசு கொடுக்கப்பட்ட ஐம்பது (50!) ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இம்மாதிரி தேர்வு செய்யப்பட உபயோகிக்கப்பட்ட ஜாபிதாக்களை வெளியிடும்.
… சரி. என்னவோ உங்கள் ஞானக் கண்ணினாலும் எதிர்காலத்திற்குச் சென்று வரக்கூடிய மாயாஜால வித்தைகளினாலும் இந்தப் பரிந்துரைகளைப் பற்றித் தெரிந்துகொண்டுவிட்டீர் போலும்!
ஆக – நீங்கள் தேசாந்திரி மட்டுமல்லர், காலாந்திரியும் கூட! உங்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாகவே (pOgeon turtle therefore) இருக்கிறது.
நீவிர் எதிர்காலத்திற்கும் ஏகுக! கடந்தகாலத்துக்கும் பயணிக்க! நிகழ்காலத்துக்கும் அவ்வப்போது வருக! வாழ்க! பொலிக!!
//அரசு எதிர்ப்பின் காரணமாக சிறையில் அடைக்கபட்ட கோ யுன் இருட்டறையில் வாழ்ந்த போது அவருக்குக்கிருந்த ஒரே துணை சூரிய வெளிச்சம் மட்டுமே. துளை வழியாக உள்ளே வரும் அந்த வெளிச்சத்தை கடலாகவே அவர் கருதினார்.
அய்யா நீங்கள், பிற இணைய அரைகுறைகள் எழுதிய உளறல்களை ஒற்றியெடுத்து இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள். அந்த அரைகுறைகள் எழுதியிருப்பதுபோல, அவர் பலவருடங்கள் சிறையில் இருந்திருக்கவில்லை. சுமார் 2.5 வருடங்கள் மட்டுமே இருந்திருக்கிறார்.
சுமார் ஒரு வருடம் போல அவருக்கு இருட்டுச் சிறையில் அவர் இருக்க நேர்ந்தது. வெளிச்சமில்லை. ஆனால் நீங்கள் கற்பனை வளத்துடன் எழுதியிருப்பதுபோல சிறையில் இருந்த துளை வழியாக சூரியவெளிச்சம் கடல் என்றெல்லாம் இல்லை… அவர் அப்படி எழுதவும் இல்லை. கும்மிருட்டில் இருந்தார் – சில நாட்களுக்கு ஒருமுறை வெளித் தாழ்வாரத்தில் சூரியவெளிச்சம் இருக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப் பட்டிருக்கிறார்! எது எப்படியோ — அப்படி, துளை வழியாக சூரியவெளிச்சம் வந்திருந்தால் எப்படி அந்தச் சிறை இருட்டறையாக இருந்திருக்கும், சொல்லுங்கள்? (எப்படி நீங்களே அவரருகில் சிறையில் அடைந்து இருந்ததுபோல துளை, சூரியன், வெளிச்சம், கடல் என உங்கள் கற்பனைக் கழுதையைத் தட்டி விட்டிருக்கிறீர்கள்! ஆ, அய்யோ!)
// கோ யுன் ஒரு பௌத்த துறவி.
அய்யா எஸ்ரா, 1933ல் பிறந்த அவர் 1962லேயே துறவித்தனத்தைத் துறந்துவிட்டார். நீங்கள் நிகழ்காலத்திலும் அப்படியே அவர் துறவியாக இருக்கிறார் என்று அட்ச்சுவுடுவது எப்படி இருக்கிறது என்றால்…
நீங்கள் பச்சைக் குழந்தையாக (=green child like) இருந்தபோது அம்மணக்குண்டியாராக அலைந்துகொண்டிருந்திருப்பீர்கள் அல்லவா?
ஆக, நான் இப்போது சொல்கிறேன்: எஸ் ராமகிருஷ்ணன் அம்மணக் குண்டியாக அலைபவர். (என் கற்பனை எனக்கே படுகோரமாக இருக்கிறது. டிங்டாங்!)
நன்றி!
//சிறையில் இருந்த நாட்களில் தான் விடுதலையாகி வெளியே வந்தவுடன் வாழ்நாளில் தான் சந்தித்த ஒவ்வொரு மனிதரைப்பற்றியும் ஒரு கவிதை எழுதிவிட வேண்டும் என முடிவு செய்து பத்தாயிரம் பேர்களை பற்றி கவிதைகள் எழுதியிருக்கிறார்.
அய்யா! அவர் சிறையில் இருக்கும்போதே இந்த எழவை எழுத ஆரம்பித்துவிட்டார். பீலா வுடுவதற்கும் ஒரு அளவு வேண்டுமல்லவா?
//கவிதை வாசிப்பிற்காக உலகெங்கும் பயணம் செய்துவருகிறார் கோ யுன்.
அப்படியா என்ன? அவர் கவிதைகள்(!) சிலவற்றைப் படித்துள்ள எனக்கு அப்படிப் படவில்லையே! தானுண்டு தன் வேலையுண்டு, தொழிலாளி வர்க்க இணைப்புண்டு என. தென்கொரியாவில் இருக்கத்தானே அவருக்குப் பெரும்பாலும் பிடிக்கிறது?
//அவரது கவிதைவாசிப்பு வீடியோக்களை சில நாட்களாகப் பார்த்து கிறங்கிக்கிடக்கிறேன்.
அதுதான் உடனடியாக ஒரு ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தனமான’ பதிவைத் தேற்றி விட்டீர்களே!
// கவிதை வாசிப்பை எப்படி நிகழ்த்துவது என்பதற்கு இவை சிறந்த உதாரணங்கள்.
அய்யா, அவர் கவிதைகளில் உச்சாடனவகை. சிலபல நம் செல்ல ‘வினவு’ தரத்திலும் இருக்கின்றன. சில மிக நன்றாகவும் இருக்கின்றன.
ஆனால் கவிதை வாசிப்பு நிகழ்வுகளில் – உச்சாடனக் கிவிதைகளே முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது என் எண்ணம்.
ஹ்ம்ம்ம்… எனக்கு இப்போதே அடிவயிற்றில் கலக்கமாக இருக்கிறதே! நீங்கள் உங்கள் நெகிழ்வாலஜி திரைப்படக் கதைசொல்லி விமர்சனம், அலக்கியமிஸ்டிக்ஸ் வகை டப்பாங்குத்து வியாபாரத்தை – இப்போது கிவிதை வாசிப்புக்கும் விஸ்தரிக்கப் போகிறீர்களோ?
பயமாக இருக்கிறதே! :-(
//கோ யுன்னின் கவிதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு தனிநூலாக வெளிவர வேண்டும்.
அடுத்த 2018 சென்னைப்புத்தகச் சந்தையில் மயிர்மை வெளியீடாக இந்த எழவு வெளிவந்துவிடுமோ? எஸ்ரா அவர்களுடைய தனிக்கைவண்ண முழி பெயர்ப்பில்?
வ்வோத்தா, ஓட்றா டேய்!
-0-0-0-0-0-0-
… :-( இந்த எழவெடுத்த மனிதருடைய கட்டுரையில், வரிக்கு வரி இஷ்டத்துக்கு பீலாவும் உளறலும். என்ன செய்ய. துளிக்கூட பொறுப்புணர்ச்சியோ சிரத்தையோ இல்லவேயில்லை. இவர் தம்மைத் திருத்திக்கொண்டு மேன்மையடையப் போவதேயில்லை.
இந்த அழகில் – ஒரு மசுத்துக்கும் தெரியாத, அறிமுகமில்லாத விஷயங்களிலெல்லாம் மூக்கை நுழைத்து மேதமை வாய்ந்த மேலான கருத்துகளை உளறிக்கொட்டல் வேறு! சோகம்! முட்டாக்கூ தமிழனுக்கு, தம் அளவு போதும் என ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்போலும்!
ஹ்ம்ம்… இம்மனிதர்வேறு தமிழக அரசின் ‘தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம்‘ எழவிற்குப் பரிந்துரை செய்யும் அமைப்பில் இப்போது இருக்கிறார் என அரசல்புரசலாகக் கேள்விப் படுகிறேன். அடி வயிற்றில் கலக்கமாக இருக்கிறது. :-(
ஆக இனிவரும் புத்தகங்களில் இப்படியெல்லாம் முழிபெயர்ப்பு இருக்கக் கூடுமோ?
In these matters, TN government has a big role to play = இத்தகைய பருப்பொருட்களில், தமிழக அரசு ஒரு பெரிய உருளையை விளையாடக் கொண்டுள்ளது.
… …ங்கொம்மாள, இன்னுமாடா வெய்ட் பண்ணிக்கினுகீறீங்கோ? ஷோ முண்ட்ஜிடிச்சிடா! துண்டக் காணம் துணியக் காணம்னிட்டு ஓடுங்கடா பொறம்போக்குங்களா! பெருஸ்ஸா கண்டகண்ட அக்கப்போர பட்க்க வந்த்ட்டானுவ… அடீங்…
June 10, 2017 at 17:26
Ko Un – கோ உன், எனினும் பேராசான் கோ யுன் என (வழமைபோல) எழுதி, முதல் கோணல் முற்றிலும் கோணலென்பதை (வழமைபோல) காட்டுரைத்துள்ளார், இதை உணர நாம் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டும்.-:(
June 10, 2017 at 21:58
ஐயா ராம்,
நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் எஸ்ராவை கட்டுடைக்க (bundle breaking) முடியாது. தன்னளவில் அவர் ஒரு அலக்கிய wikipedia (திரி நான் பிவிட்டம்)
அவருடைய ஆரம்ப கால படைப்புகளில் ஒரு நேர்மை இருந்தது . கொஞ்ச காலம் அவரை தொடர்ந்த பிறகு இப்போது வந்து சேர்ந்த இடம் புரிந்தது..
ஆனாலும் உங்கள் ரகளை கொஞ்சம் அதிகம்தான்….
June 11, 2017 at 05:54
அய்யா, நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்.
ஆரம்பகாலத்தில் அவரிடம் நேர்மை இருந்திருக்கலாமோ என்ன எழவோ, ஆனால் இக்காலங்களில் அவரிடம் இருப்பது உயிர்மை அல்லவா? ஆகவே! இந்தக் காலத்தின் கோலம் கந்தறகோளம்தான்.
மற்றபடி — ரகளை = fn(ஆச்சரியம், வெறுப்பு, கடுப்பு, வேறுயாருமேஇந்தமனிதரைஎதுவுமேசொல்லமாட்டேனென்கிறார்களே, …)
June 11, 2017 at 07:06
எஸ்ரா பேரவையின் கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன் :(
இப்படிக்கு
வெள்ளைரவை.
June 11, 2017 at 08:27
யோவ்! ரொம்பத் துள்ள வேண்டாம்! கொஞ்சமாவது ரவையடக்கம் வேண்டுமப்பா!
இல்லையேல்…. துப்பாக்கி ரவையுடன் வருவேன் அவைக்கு!