இதுதாண்டா அற்ப ஸாகரிகா கோஷ்!
May 27, 2017

சரி. அவர்கள் மட்டுமே வீழ்ந்தால், சனி விட்டது ஒழிந்தார்கள் கயவர்கள் என ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம் – ஆனால் அது அப்படிமட்டுமேயல்லாமல், இவர்களுடையதைப் பிடித்துக்கொண்டு தொங்கும் கருத்துலகப் போராளிக் குளுவான் அரைகுறைகளின் ஆகாத்தியமும் – அதனால் ஏற்படும் நம் சமூகத்தின் தொடர்ந்த வீழ்ச்சியும் வ்யர்த்தமாகும் சக்தியும் எனக்குத் தாங்கொணா துயரத்தைத் தருவதினால் இது…
ஒரு மூட்டை அழுகிப் புழுத்துப்போன மாம்பழ எழவுகளுக்கு ஒரு புளுகுணி மாங்கொட்டை பதம். அதுதாண்டா ஸாகரிகா கோஷ், டடா!
-0-0-0-0-0-
அம்மணி எழுதியுள்ள இரண்டு புத்தக எழவுகளையும் படித்துள்ளேன்; இவர் ஒரு அதிசராசரித்தனமான எழுத்தாளர் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை.
இவருடைய எழுத்துலகு(!) அற்புதமான அரைகுறைத்தனத்தைக் கொண்டிருப்பது மட்டுமில்லாமல், இவருடைய ஆங்கிலத்திலும், வரிகளை வடிப்பதிலும் ஏகப்பட்ட சொதப்பல்கள். என்னைப் போல ஒரு அரைகுறைத் தமிழ் வழிக்கல்வி படித்திருந்தாலாவது மண்டையில் அடித்துக்கொண்டு கழுதை ஆங்கிலத்தில் எழுதக் கற்றுக்கொண்டிருக்கிறது, ஐயோ பாவம், மன்னித்து விடலாம் எனவாவது சால்ஜாப்பு சொல்லலாம்; ஆனால் அம்மணி படித்ததென்னவோ அந்த தில்லிப் பிலுக்கர்களின் கல்லூரிகளில் ஒன்றான அந்த ஸெய்ன்ட் ஸ்டீஃபன்ஸ் எழவில்! பின்னர் ரோட்ஸ் ஸ்காலர்ஷிப் எழவு வேறு என நினைவு. வரவர இம்மாதிரி ஸ்காலர்ஷிப் நல்கை எனப் பிச்சை வாங்கி கதாகாலட்சேபம் செய்பவர்களுடன் எனக்கு ஒத்து வரவே மாட்டேனென்கிறது…
…அம்மணியின் கதைகளோ – வெள்ளைக்கார மனதாளர்களுக்கு ஏற்ப வலுக்கட்டாயமாக முத்திரை குத்தலும், பொதுமைப் படுத்தலும் நிரப்பி நிரவி விட்டு – ஆக, சந்தை ரீதியாக எந்த எழவெழுத்து செல்லுபடியாகும் – மதச் சார்பின்மையையும், பாலுறவையும் கலந்துகட்டி எப்படி எழுதினால், சீண்டினால் பிரபலமாகும் எனக் கணித்து எழுதப்பட்டவை. வாழ்க.
-0-0-0-0-0-
இந்த விஷயம் 2017 ஃபெப்ருவரியிலோ ஜனவரியிலோ நடந்தது.
போர்டிங் பாஸ், பாதுகாப்புப் பரிசோதனை முடிந்தபின்னர் ஒரு ‘கட்டிங் சாய்’ குடித்துவிட்டு, சுவாரசியமாக அர்விந்த் கெஜ்ரீவால் (அவருடைய முன்னாள் மாணவர்!) கோமாளித்தனங்கள் பற்றி ஏதோ பேசிக்கொண்டே மெதுவாக எங்கள் விமானம் வரப்போகும் நுழைவாயிலுக்குச் சென்றோம். அங்கு எங்களுக்கு முன்செல்லவிருந்த விமானம் கிளம்பத்தயார் நிலையில் இருந்தாலும் சில சோம்பேறிப் பயணிகளுக்காக ‘கடைசி அழைப்பு’ எனத் தொடர்ந்து அரற்றிக்கொண்டே இருந்த மணியம்… தாமதம். அசிங்கம். ஏற்கனவே அரைமணி நேரம் தாமதம். ஒருவழியாக நுழை வாயிலை மூடிவிட்டு அடுத்த விமானத்துக்கு இடத்தை ஒழித்துக் கொடுக்கும் முனைப்பில் இருந்தார்கள் அவ்விமான சேவை அதிகாரிகள்! அந்த விமானத்தின் கதவுகளை மூடி புஷ்பேக் (பின் தள்ளல்) கூட ஆரம்பிக்கலாம் என…
…சாவகாசமாக ஆட்டி ஆட்டி நடந்துக்கொண்டே முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஒரு வழியாக வந்துசேர்ந்தார்கள் ஒரு பெண்மணியும் ஆண்குஞ்சாமணியும். நுழைவாயில் அதிகாரிகளிடம் பெருஞ் சண்டை. எங்களை உள்ளே விட்டுத்தான் ஆகவேண்டும் என ஆகாத்தியம். எவ்வளவோ சொன்னார்கள் அவ்வதிகாரிகள். ஆனால் அம்மணியும் அம்மணரும் விடவில்லை. ஏன் இவ்வளவு தாமதமாக வந்தீர்கள் என்றால் மிகக் கோபமாக – ஏன் நாங்கள் சிற்றுண்டி சாப்பிடவேண்டாமா?
அதற்குள் அவ்வதிகாரிகளுக்கு அவர்களுடைய மேலதிகாரிகளிமிருந்து ஃபோன். விஷயம் என்னவென்றால் – தாமதமாக வந்தது மட்டுமல்லாமல் வழி நெடுகச் சண்டை போட்டுக்கொண்டு வந்திருக்கிறார்கள். விமான நிலைய நுழை வாயிலில் ஸிஐஎஸ்எஃப் ஜவான்களுடன். போர்டிங் பாஸ் வாங்கும்போது. பின்னர் பாதுகாப்புப் பரிசோதனையிடத்தில் – மறுபடியும் ஸிஐஎஸ்எஃப் ஆட்களுடன் மல்லுக்கட்டல். ஒவ்வொரு இடத்திலும் – ‘நாங்கள் ப்ரெஸ்’ என்று சொல்லிச் சொல்லியே ‘தாங்கள் யாரென்று காண்பித்துவிடுவோம்’ எனக் கத்திக் கத்தியே வரிசைக் கிரமத்தை மீறி, மற்ற பயணிகளின் உரிமையை மீறி, அதிகாரிகளைத் துச்சமாக மதித்து, கீழ்மட்டப் பணியாளர்களை ஏளனமாக நடத்தி தேச மக்களின் நேரத்தை வீணடித்து… அசிங்கம்.
இவ்வளவு தாமதத்திற்குப் பின்னும் அவர்கள் உள்ளே ஒரு சாப்பாட்டுக் கடையில் நுழைந்து மேய்ந்ததால் விமானத்துக்கு மேலதிகமாகத் தாமதம்! ஊடகத் திமிர். PRESS எனப் போட்டுக் கொண்டால் எப்படி வேண்டுமானாலும் வண்டி ஓட்டலாம், அயோக்கியத்தனம் செய்யலாம், பிறருடைய அனைத்து உரிமைகளையும் அவமதித்து மிதித்துத் தள்ளலாம் – ஆனால் அதேசமயம் ஊடகங்களின் மூலமாக, கொஞ்சம் கூடக் கூச்சமேயில்லாமல் மனிதவுரிமை மாட்டுரிமை மசுத்துரிமை ஊழல் உரிமைமீறல் இதனைக்_கேட்பாரில்லையா என முழ நீளத்துக்குப் பசப்பலாம், அறச்சீற்றத்தை அறுவடை செய்யலாம்… அற்பப் பேடிகள்.
…பாவம் அந்த அதிகாரிகளுக்கு – இந்தப் பேடிகளை உள்ளே விட்டுவிடும்படி ஒரு ஆணை வந்தது. வேண்டா வெறுப்பாக அவர்களை உள்ளே அனுமதித்தனர். உள்ளே சென்றதும் – அவர்களுக்கு பிஸினெஸ் க்லாஸ் இருக்கைகளில் அமர இடமில்லை என இன்னொரு கலாட்டா – ஒரு வழியாக அதனையும் சரிக்கட்டியிருக்கின்றனர்.
இந்தப் பேடிகளின் –
“டேய், நான் ஸொல்றாமாரீ நீ நட்க்கலே, வொதவி செய்யலே,… வோத்தா, நட்க்கற்தே வேற! வொன்னப் பத்தீ அசிங்கமா எள்திடுவோம்! அப்றம் நீ அவ்ளோதான்!”
…மிரட்டல்கள் தொடர்வது, ஒரு அசிங்கம். ஆனால், இந்த அசிங்கமும் நம் ஜனநாயகத்தில் ஒரு அங்கம்தான். சோகம். பேடிப் பதர்கள், வேறென்ன சொல்ல…
இதுதாண்டா ஸாகரிகா கோஷ்!
(எனக்கு, நேரில் இந்த அம்மணியைப் பார்த்தால் அடையாளம் கண்டுகொள்ளமுடியாது – ஏனெனில் நான், அவர் எழுத்துக்களை மட்டும்தான் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறேன். ஆகவே, என் நண்பர் சொல்லித்தான் அந்த அரைகுறை அம்மணியார், என் செல்ல அறச்சீற்றவாதியான ஸாகரிகா கோஷ்டம் என்பதை அறிந்துகொண்டேன்; கூட இருந்த அம்மணர், ராஜ்தீப் ஸர்தேஸாய் அல்லர் – நண்பர் என்ன பெயரைச் சொன்னார் என்பது நினைவிலில்லை! நண்பர் விமானசேவை அதிகாரிகளிடம் சேகரம் செய்த வம்பு விஷயங்கள்தாம் மேலுள்ளவை)
-0-0-0-0-0-0-
…அச்சமயம் அவர் ஐபிஎன்-சிஎன்என் தொலைக்காட்சியில் இருந்தார். ‘தேசத்தை எதிர்கொள்’ (face the nation) எனவொரு பேச்சுக்கச்சேரி (talk show) வகையறா பித்தலாட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார். அதில் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் உட்பட ஐந்துபேரிடையே ஒரு உரையாடலை நிகழ்த்தி – அதில் கோஷ்டகுமாரி அவரையும் சில சங்கடமான கேள்விகள் கேட்டு அவரை நெளிய வைத்தமாதிரியெல்லாம் செய்திருந்தார்.

வேறு வழியேயில்லாமல் – தப்பும் தவறுமாக, அரைகுறையாக அரைமனதுடன் அந்தத் தொலைக்காட்சி அலைவரிசையும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க நேர்ந்தது. ஆனால் – இந்த ‘மன்னிப்புக் கோரல்’ எழவில் சொல்லியிருப்பதும் உண்மையில்லை. ‘இரண்டு மணி நேரம் போல’ என்பது சரியில்லை; பல நாட்கள் முன் எடுத்த விடியோவை வைத்துத்தான் இந்தப் பொய்மையை அரங்கேற்றியிருக்கின்றனர் அந்த ஊடகப் பேடிகள்.
ஸாகரிகா கோஷ்டமும் தன் பங்குக்குப் பயந்துபோய் இதற்கு ஏனோதானோ எனவொரு மன்னிப்பைக் கேட்டதாகவும் நினைவு. ஆனால் பேடிகள் திருந்தவே மாட்டார்கள். ஸ்ரீஸ்ரீ தரப்பினரும் இதனை பெரிது படுத்தாமல் விட்டுவிட்டனர்.
இதே கோஷ்டமார் முன்னொரு முறை இப்படிப் பதவிசாக உளறிக்கொட்டினார். பேச்சுரிமை கருத்துரிமை பற்றியெல்லாம் தம் மேலான கருத்துகளை வரிந்துகட்டிக்கொண்டு எழுதினார்…
கோஷ்டமார் அருள்வாக்குச் சொல்வது என்னவென்றால் – ‘கருத்துச் சுதந்திரம் என்றால், என்ன வேண்டுமானாலும் சொல்லிவிடலாம் என்பதல்ல, விளக்கத்துக்கு நம் அரசமைப்புச் சட்டத்தைப் படிக்கவும்.’
…ஒருவரிடம் – ஓரளவு அயோக்கியத்தனம் (அதாவது ஊடகப் பேடித்தனம்) இருந்தால், அதனைப் பொறுத்துக் கொள்ளலாம். அதுவும் நீங்கள் ஒரு முற்போக்கு வயிற்றுப்போக்காளர் என்பதால் இன்னமும் கொஞ்சம் அயோக்கியத்தனம் செய்தால்கூட அதனையும் உங்கள் உரிமை என விட்டுவிடலாம். கொசுறாக, நீங்கள் ஒரு பெண் என்பதால் – குண்ஸாக ஒரு 10% அதிகமான அயோக்கியத்தனத்துக்கும் ஒதுக்கீடு செய்யலாம்.
இருந்தாலும் கூட – இப்படியா பச்சை அயோக்கியத்தனத்துடன், வெறுப்புணர்ச்சியுடன், இந்தியாவை மேன்மேலும் பிரிவினை செய்து அதில் குளிர்காயவேண்டுமென்று அலைவீர்கள்?
-0-0-0-0-0-
ஸாகரிகா கோஷ்டங்கள் கடைந்தெடுத்த அயோக்கியர்கள், பொறுப்புணர்ச்சியற்ற விடலை உதிரிகள் என எனக்கு நன்றாகவே தெரிந்தாலும் என் கேள்விகள்:
0. கருத்துரிமை, சுதந்திரம் – அதன் எல்லைகள் பற்றி, நம் கோஷ்டங்கள் என்ன அறிவுரை பொழிப்புரை சொன்னாலும் ஏற்றுக்கொள்வோம். அப்படியே அவர்கள் ப்ளேட்டைத் திருப்பிப் போட்டு எதிர்ப்பதமாக உளறிக்கொட்டினாலும் அப்படியே வேதவாக்காக ஏற்றுக்கொள்வோம்! நம்முடைய தடித்தனம்தான் ஊடகப்பேடிகளின் மூலதனம்?
1. இவர்களுக்கு கூச்ச நாச்சம் என்று எழவு ஏதாவது கடுகளவாவது இருக்கிறதா?
2. எப்படி அற்பப் பொய்களை பவனி வரச் செய்தாலும் – இவர்கள் பின்னர் காக்காய்க் கூட்டம் எனவொன்று அலைகிறதே? ஒருவேளை இவர் திராவிடரோ?
3. இப்படி அப்பட்டமாக வன்முறையைத் தூண்டும் வதந்திபரப்புதலுக்கு இவர்மீது வழக்குகளைத் தொடர்ந்து ஊர் ஊராக வழக்குத் தொடர்ந்து நீதிமன்றங்களில் ஏற்றிஇறக்கிக்கொண்டிருக்கவேண்டாமா? (நான் என் பங்குக்கு என் நண்பர் ஒருவருடன் சேர்ந்து கோஷ்டமார் மேல் ஒரு வழக்கு பதிவுசெய்யலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன்)
4. அப்படி என்ன இவர்களுக்கு பாரதத்தின் மீது ஒரு கொலைவெறி? அதிலும் முக்கியமாக ஹிந்து என்றாலே ஏன் இவர்கள் வரிந்துகட்டிக்கொண்டு தங்களுடைய புனைசுருட்டுப் போருக்குக் கிளம்பிவிடுகிறார்கள்?
5. ஏன் எல்லா வன்முறைகளுக்கு எதிராகவும் இந்த கோஷ்டங்கள், அருந்ததி அரைகுறை ராய்கள் கொதித்தெழுவதில்லை?
6. எப்படி இந்த அற்பர்கள் — ஊடகங்களின், நம் கூறுகெட்ட அறிவுஜீவிகளின் கண்மணிகளாக இருக்கிறார்கள்?
7. யார் இந்த ஜென்மங்களின் பொய்சொல்லும் வாய்களில் எலும்புத் துண்டுகளை விட்டெறிகிறார்கள்?
… …
May 29, 2017 at 07:44
ஒரு “ய” விகுதி சேர்த்திருந்தால் , கட்டுரையின் முடிவு சரியான அளவு “உப்பு” சேர்த்த மாதிரி இருந்திருக்கும்.
‘எல்லாம் நல்லதற்கே’ எனக் குண்டி மண்ணைத் தட்டிக்கொண்டு கிளம்பி(ய) ரஜினிகாந்தனார் அவர்களின் அரசியல்பிரவேசம் பற்றி உரையாடக் கற்றுக்கொள்ளப் போகிறேன்?
June 5, 2017 at 22:33
வர வர உமது ஆணாதிக்க சிந்தனைக்கு எல்லையே இல்லை. ஒரு பெண் , அதுவும் பத்திரிக்கையாளர், அதுவும் ஆங்கிலத்தில் பேச முடிந்தவர், அதுவும் சிவப்பாக இருப்பவர் , அதுவும் மோடி எதிர்ப்பாளர் , அதுவும் காவி பயங்கரவாத எதிர்ப்பு போராளி, அதுவும் டெல்லிவாலா …… இவ்ளோ பொறுப்புகளை சுமக்கும் ஒருவர் மீது உமக்கு பொறாமை அன்றி வேறென்ன ? வழக்கமா ஒண்ணு சொல்லணுமே ….ம்ம். ஆங்…. பெண்கள் மீதான காழ்ப்பு உங்களுக்கு….
இப்படிக்கு போராளித் திலகம்,
ராஜகோபாலன் ஜா,சென்னை
June 6, 2017 at 15:37
“இப்படி அப்பட்டமாக வன்முறையைத் தூண்டும் வதந்திபரப்புதலுக்கு இவர்மீது வழக்குகளைத் தொடர்ந்து ஊர் ஊராக வழக்குத் தொடர்ந்து நீதிமன்றங்களில் ஏற்றிஇறக்கிக்கொண்டிருக்கவேண்டாமா? ”
என்று நீங்கள் குமுறியிருக்கும் வேளையில் உமது மதிப்பிற்கும்,அன்பிற்கும் உரிய “மது பூர்ணிமா கிஷ்வர் ” அவர்கள் இந்த “அறிவிலிக்கு’எதிராக பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா'(Press Council Of India )வில் புகார் கொடுத்திருப்பதை நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்.
http://madhukishwar.blogspot.in/2017/05/when-journalists-serve-isi-agenda.html?m=1
ஆனால் என்ன செய்ய? இந்த P.C.I. இதில் என்ன “பிடுங்கப்போகிறதென” எனக்குத்தெரியவில்லை.காரணம் இன்று ‘NDTV’ ஊடகத்தின் மீது வரி ஏய்ப்புக்காக சி.பி .ஐ .ரெய்டு நடத்தியதை பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் என்று கூட்டத்தோடு திருவாய் மலர்ந்திருக்கிறது!
‘NDTV’யின் இந்த ஊழல் மஹாமத்தியத்தை பற்றி குருமூர்த்தி எழுதிய கட்டுரையின் சுட்டி கீழே :
http://www.newindianexpress.com/opinions/columns/s-gurumurthy/2017/jun/06/against-fraud-or-against-freedom-mr-roy-1613261–4.html