ஞானத்தங்கமே! கவி தையாதக்கா! ஆ! அய்யய்யோ! —-> மறுபடியும் எஸ்ரா!!

April 27, 2017

நமக்கு எனக்கு விமோசனமேயில்லை.

என் மகாமகோ பேராசான் போடும் கொடும் கோலாகலக் குத்தாட்டத்துக்கு அளவேயில்லை – ஆக, எனக்கும் வேறுவேலையேயில்லை என்பது வேறு விஷயமுமில்லை. :-( இவருக்கு என்ன எம்டிஎம் என நினைப்பா? ஸில்வியா என ஸில்லியா ராகம் தானம் பல்லவிஜோஷியென கட்பேஸ்ட் பண்ணி அட்ச்சுவுடுவற்கு? ஏனய்யா இப்படிக் கூட்டணிவைத்து ரவுண்டு கட்டிக்கொண்டு எங்களைப் போன்ற பாவப்பட்ட தமிழ் வாசகர்களை அடிக்கிறீர்கள்? :-(

-0-0-0-0-0-0-

ஹ்ம்ம்… ஆனாலும் நான் பேராசானின் பேராசீடன், ஆகவே!

எஸ்ராவே! கண்டமேனிக்கும் கடன்வாங்கிய, ஆனால் திருப்பியே தராத – ஆக நிலுவையில் இருக்கும் அரைகுறை அனுபவங்களை அமோகத் தமிழில் தொடர்ந்து வாரிவழங்கும் வள்ளலே!

எம் எள்ளலே!

வாழ்கவே நீ எம்மானே, வாழ்கவாழ்கவே!

…ஹ்ம்ம்… ஆக, கொஞ்ச நாள் தம் நெகிழ்வுகளை நிப்பாட்டிய பின்னர் – ஜென் டர்புர் ஸூஃபி என மறுபடியும் இன்னொரு நெகிழ்வாலஜி ஸீரிஸ் ஒன்றை ஸீரியஸாக ஆரம்பித்துவிட்டார், அவர். என்னைப்போலவே கையையும் கீபோர்டையும் வைத்துக்கொண்டு என்னசெய்வதென்றே தெரியவில்லை போலும். ஆக்கபூர்வமாகப் பணியாற்றுவதற்குப் பதிலாக, ஏனிப்படி அழிவுபூர்வம், சொல்லுங்கள்?  :-(

….ஆக எனக்கு நெகிழ்ச்சி மிக அதிகமோதியதிகமாகிவிட்டதால் ஜட்டி சனியன் இடுப்பில் நிற்கவேமாட்டேனென்கிறது, என்ன செய்ய!

ஆண்குறியிரண்டும் அயில்வேல் காக்க. ஆ!

இன்னாடா இதூ! குன்ஞ்சி பாத்தா ஒண்ணுதாண்டா கீது. இன்னொண்ணு தற்குறியா அப்ப?

அல்லாகாட்டி, நான் எஸ்ரான்னிட்டு ஆரம்ப்ச்ச உட்ன துண்டக் காணம் கோமணத்தக் காணம்னிட்டு அந்த தற்குறி கள்ட்டிக்கினு ஓடிப் பூட்ச்சா?

என்ன எளவோ… எஸ்ராவ படிக்கணுமேன்னிட்டு நென்ச்சாலே பயம்மாக்கீதேடா! கந்தர் சஷ்டி கவசத்த சத்தமா சொல்லி பெரார்த்தன பண்ணனும்போலக்கீதேடா!

பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க

…யாமத்தில் பதின்த்தில் எதிர்வேல் காக்க

ஒர்ரேயடிய்யா … தாக்க தாக்க தடையறக் தாக்க ன்னிட்டு தாக்கறாரேடா! வோத்தா, நம்க்கு வுடுதலயே கெடைக்காதாடா… வர்த்தமா கீதேடா!

அப்டியே வுட்தல கெட்ச்சாலும் எலவச எணைப்பா வீரமணி வந்த்டுவாரேடா! ஊற்கா மாரீ தொட்டுக்க சொய மர்யாதச் சிங்கங்களும் அலைகடலப்போல ஆர்பரித்து இனமானத்தோட  தெரண்டு பெராண்ட வந்த்டுவாங்களேடா! இவ்ங்கள பேஸ்புக்குமாரீ அன்பெராண்டு பண்ண முட்யாதேடா!

…இப்ப நான் இன்னாதாண்டா செய்வேன்! பிர்யவே யில்லையேடா! பயபீதியா கீதேடா!

-0-0-0-0-0-0-

ரூமி ரூமி என ஏதோ ஒரு அறையி (அதே! அதே!! அதே முழிபெயர்ப்பு காப்பிரைட் சமாச்சாரம்தான்!) அனாமத்தார் ஒருகாலத்தில் எங்கோ இரானிய டொக்கில் இருந்துகொண்டு கஞ்சாஅட்ச்சிக்கினு என்னவோ ங்கோத்தா ஆண்மி கம் பெண்மி கோ ன்னிட்டு எள்தித் தள்ளிக்கீறார் போலக்கீது! அதுல ஃபேமஸ்ஸா இர்க்க்றது என்னவோ மதன்வி ன்னிட்டு புத்தகமாம். வோத்தா, எப்டிதான் இப்டீ பேரு வெக்கறானுவங்களோ!

ஆனந்த விகடனிலிருந்து மதன் அப்டீன்னிட்டுதான் மதன்வி! இப்ப பிர்ஞ்சிது.ரூம்பீக்கே ஆப்பு வெச்சவன் தமிளண்டா!  அத்தொட்டு அல்லாவே டமிள்க்கடவுள்டா! வோத்தா, இத்தப் புர்யாம வடக்கு தெர்க்கு கெள்க் மேர்க்ன்னிட்டு வந்தேறி ஆரியனுங்கோ பெருஸ்ஸா பேஸ வந்த்ட்டானுவ… இஸ்லாமே தமிழ்ச் சைவம்தாண்டா!

மக்கா அங்க அர்ரேபியால மட்டும் இல்லடா, இங்க நாஞ்சில்நாட்ல, அடிக்கடி சொல்வானுவோ, மக்கா. அதே மக்காதாண்டா ரெண்டும், மக்காப் பயலுவளா!  வொங்கள வச்சிக்கினு மக்கும் வொரம் கூட பண்ணமிட்யாதேடா!

ரூம்பீ எள்தின கவிதங்க அல்லாத்தயும் அவ்ரு டமிள்ல வட்டெள்த்து சுள்க்கெள்த்துலதாண்டா எள்தினாரு. அத்தப் போய் அவ்னுங்கோ அரபுப் பாவீங்கோ கடத்திக்கினு இட்டுக்கினுபோய் அரேபியால சுத்தியால சுத்திசுத்தி ரவுண்டு கட்டிக்கினு அட்ச்சு இப்டி அநியாயத்துக்கு சாவடிச்சுட்டானுங்களேடா.  இந்துத்துவா ஒளிக!

(கருத்துப்படம்:  வட்டெழுத்து-அரபியெழுத்து)

ரூம்பீ பச்சத் தமிளண்டா!  தெராவிடண்டா! ஆரியனில்லடா! கைபர் போலன் வளியா உள்ளாற வர்ராம, அவ்ரு டமிள்னாட்லேர்ந்து சங்ககாலத்தலயே எந்திரிச்சு அதே கணவாய் வளியா வெள்ல போனவ்ருடா!

கொக்குனு நென்ச்சியா கொங்கணவாய்? வோத்தா, எனிக்கும் தமிள் தெரியுண்டா, கபோதிப்பயலே! சங்கம் லிட்டரேச்சரு அல்லாம் எங்க்ளுக்கு கலைஞ்சர் கத்துக்கொடுத்துக்கீறாரு டா.

ரோமாபூரி ராணி கெளங்கு நாஷ்டா பண்ணியே வளந்த தமிளனுங்கடா நாங்க!

தமிள்ல கீற ள வேறெங்கடாகீது? ள அப்டீன்னிட்டு ஆரியனுங்களால சொல்லமுட்யுமாடா?

இப்ப சொல்லுடா பாப்போம்:  கெளவண் வாளப்பலத் தோலிள் வலுக்கி விளுந்தாண்!

எங்கும் டமிள் எதிலும் தமில். தெராவிடம் வால்க!

…ஆனாக்க, ஏண்டா இந்த ரூம்பீ தன்னோட புக்குக்கு மதனவி அப்டீன்னிட்டு ஒர் பேர வெச்சாரு? கொஞ்சம் சர்க்கு போட்டாக்கா தெளிவு கெட்ச்சிடும்…

ஸார், டாஸ்மாக்கு கடை எங்க ஸார் கீது…

ஆ!  அநியாயமாகீதே! ஐவேலேந்து ஐனூர் மீட்டர்லகீதா! எடம் மாத்திட்டாங்களா! டேய்! பாஜக சதி பண்ணுதுடா! ங்கோத்தா காவிய வுட்டா கலைஞ்சர் கோமணத்தயே உர்விக்குனுபோய்டுவானுங்கடா!

தேசீய நதினீர் எணப்பு வேண்டாண்டா… தேசீய சர்க்க எணைங்கடா, புண்ணியமா போவும்… எப்டிக்கீது நாஞ் சொல்றது…

தேசிய மொளிக் கொல்கை வோண்டாண்டா! தேசீய சர்க்குக் கொள்கதாண்டா தெராவிடனுக்கு வோணும்!

இது எங்க உரிமடா! எங்க இணமாணம்டா! தமிள் எங்கல் உய்ர், மத்ததெல்லாம் மய்ர்!

…ரெண்டு குவாட்டர் கொட்பா.

-0-0-0-0-0-0-

மதனவி? மாறாக — அழகாக இப்படியெல்லாம் எஸ்ராவல்பிண்டி தலைப்பு வைக்கலாமே — ஸூஃபியெழுத்து, ஸூஃபீந்தரி, ஸூஃபின், ஸூப்பசி, ஸூஃபியின் மீது சனி பெய்கிறது, உபஸூஃபியம், ஸூஃபீஸின் அற்புதவுலகம், யாமஸூஃபி, என்றார் ஸூஃபி சிறுகதைகள்… (இன்னமும் சுமார் 2000ச் சொச்சம் எஸ்ரா டைட்டில்கள் இப்படியே ஸூஃபிக்கூத்தனமாக இருக்கின்றன என நினைக்கிறேன் – ஆனால் என் நினைவில் இருப்பவை(!) இப்போதைக்கு இவைதான்!)அந்த அறையி ஆளின் கவிதைகளை நம்மூர் ஆள் ஒருவர் (இவர் நாகூர் அறையி அல்லர்) தமிழ்ப் படுத்தியிருக்கிறார். உடனே பேராசான் அதற்கு வேலை மெனெக்கெட்டு ஒரு பொழிப்புரை எழுதியிருக்கிறார் – அதுதாண்டா, இந்த… கவிதையைப் பூசிக்கொள்ளுங்கள்.   :-(

பூசிக்கொள்ளுங்கள். ஆமாண்டா. அது மட்டுமல்லடா. தடவிக் கொள்ளுங்கள். நக்கிக் கொள்ளுங்கள். துடைத்துக்கொள்ளுங்கள். வழித்துக்கொள்ளுங்கள். கழுவி ஊற்றிக்கொள்ளுங்கள்! மேலதிகமாக, சிரைத்துக்கொள்ளுங்கள்…

>> ஒருவேளை பனிரெண்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உலகெங்கும் ஆன்மீக எழுச்சி நடந்திருக்கிறது போலும்.

ஏனுங்கோ, மிச்ச நூற்றாண்டுல வெறும் எழுச்சி மட்டும்தானா? ஏனய்யா இப்படி விரசமாக எழுதுகிறீர்?

ஆனால், அடுத்தவரி இன்னமும் விரசம்! :-(

>> அதை ஒவ்வொரு தேசத்தில் சிலர் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் எனப் புரிந்து கொள்ளமுடியுமா எனவும் முயன்று பார்த்தேன்.

நீங்களே அதனை வெளிப்படுத்த முயன்றீர்களோ? ஆனால், அந்த முயல்வதை (rabbit torture) நடுரோட்டில் செய்யாதிரும், பாவம் மக்களுக்கு பயபீதியாகிவிடும். எழுச்சித் தமிழர் கிழிச்சிக் கிமிழர் எனப் பலப்பலர் உங்களுடன் போட்டிக்கு வந்துவிடுவார்கள் வேறு! :-( தேவையா??

கருத்துப்படம்: முயல்வதை

>> கவிதையின் உன்னதநிலைகளில் ஒன்று பிரார்த்தனை. நவீன கவிதைகள் அதை உணரவில்லை.

அய்யா நவீன கவிதைகளையெல்லாம் ஒன்றுவிடாமல் கரைத்துக்குடித்திருக்கிறார் போலும். அட்ச்சுவுட்டாலஜிக்கும் ஒரு அளவுவேண்டும்…

அல்லது நவீன கழுதைகளில் ஒருவராகத் தன்னைத்தானே தந்தானே நானே நான் … … என உணர்ந்து அனுபூதி நிலையை அடைந்துவிட்டதால், அண்ணன் இப்படி உளறிக்கொட்டுகிறாரோ?

வரிக்கு வரி எனக்கு மாளா இறும்பூதினை அளித்த  எஸ்ராவல் காட்டுரையின் மீதான என் கட்டுரை தொடரும்… எச்சரிக்கை… :-(

 

பயப்படாதீர்கள்! இதைச் சொடுக்கினால் நூற்றுக்கணக்கில் எஸ்ரா புகழ்பாடும் பதிவுகள் வரும். ஒவ்வொன்றாகப் படித்து விழுந்து விழுந்து சிரிக்கலாம். ஏதோ என்னால் தமிழுலகுக்கு ஆன கைங்கரியம் – நன்றி!

 

2 Responses to “ஞானத்தங்கமே! கவி தையாதக்கா! ஆ! அய்யய்யோ! —-> மறுபடியும் எஸ்ரா!!”

  1. mekaviraj Says:

    அன்புள்ள ராம்,

    பதிவுக்கு தொடர்பற்றது

    இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கட்டுரை – தங்களின் பார்வைக்கு – https://indiraparthasarathy.wordpress.com/2017/04/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/

    தொடர்புடைய பதிவு :
    http://www.giriblog.com/2017/04/hindi-imposition-damages-tamil-identity.html

    நமக்கு பிடித்தவர்கள் எது செய்தாலும் அது சரி – பிடிக்காதவர்கள் எது செய்தாலும் சரியல்ல – என்றிப்பது சரியா ? 😦


    கவி


    • அய்யா (அல்லது அம்மணி?) மேகவிராஜ், நீங்கள் சொல்வது உண்மைதான். :-(

      எனக்கு என்னை மிகவும் பிடிக்கும். ஆகவே எனக்கு நான் எது செய்தாலும் சரி. என்ன செய்வது சொல்லுங்கள்.

      எனக்கு என்னைக் கண்டாலே மிக விருப்பாக இருக்கிறது. என்ன செய்வது.

      நிலைமை இப்படி இருக்கையிலே, நீங்கள் என்னை நன்றாகத் திட்டலாம். நீங்கள் என்னதான் சொன்னாலும், என்னுடைய பேராசான் எஸ்ரா அவர்கள் தாம் என்னை வழி நடத்துகிறார்கள். இது உண்மை.

      அவர் உளறும்போது, அவருடைய அடிப்பொடியான நான் என்ன, அவரை ஆதரிக்காமல் உங்களையா ஆதரிப்பேன், சொல்லுங்கள்?

      நன்றி. வாழ்க #எஸ்ராவுடன்.

      __ரா.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s