‘திமுக வரலாறு’ – கருணாநிதி அவர்களின் தன்னிலை வாக்குமூலம் – மூன்று உண்மைகள்
December 27, 2016
மன்னிக்கவும். கருணாநிதி அவர்கள் 1960களிலேயே உலகம் போற்றும் கடற்புல உயிரியல் ஆராய்ச்சியாளராக இருந்திருக்கிறார்! மிக முக்கியமாக, கடற்சார் பாலூட்டி உயிரினங்களைப் பற்றி அசத்தவைக்கும் அதியுன்னத அகழ்வாராய்ச்சிகளைச் செய்து நம் செல்ல திராவிட இனமானத்தை விண்ணோக்கிச் செலுத்தியிருக்கிறார்! சுயமரியாதையைச் சூடுபறக்கப் பரப்பியிருக்கிறார்!! பகுத்தறிவைத் தொகுத்தளித்திருக்கிறார்!!! இதற்காகவே இவருக்கு ஆருடத்துக்கான 2017 நொபெல் பரிசு கொடுக்கப்படவிருக்கிறது என்பதைத் தரணி அறியும்! ஆனால், கேடுகெட்ட நமக்குத்தான் இவருடைய மேதமையைச் சரியாக மதிக்கத் தெரியவில்லை. ஹ்ம்ம்…
-0-0-0-0-0-0-
-0-0-0-0-0-0-
என்னிடம் இருப்பது இப்புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு (ஜனவரி, 1963); சுமார் 25 வருடங்களுக்குப் பின் இதன்பக்கம் வந்திருக்கிறேன்! இருந்தாலும் – திராவிட லெமூரியா காலத்திலிருந்து தொடர்ந்துகொண்டிருக்கும் தமிழவீழ்ச்சியை ஆவணப்படுத்துவதன் ஒரு அங்கமாக இப்போதுமேகூட புதுக்கருக்கு மறையாத உளறாறு இது ஒன்றேதான் என்பதற்குப் பானை சோற்றையும் சாட்சியமாக அளிக்கமுடியும் – ஆனால் என் விலா இன்னமும் வலித்துக் கொண்டிருக்கிறதே, என்ன செய்ய!
“உப்புக்கும் முத்துக்கும் இடமளிக்கும் கடல், உயிர் பறிக்கும் திமிங்கிலங்களுக்கும் இடமளிப்பதுபோல் வல்லவர்க்கும் நல்லவர்க்கும் இடம்தரும் வரலாறு, வஞ்சகர்களுக்கும் கோழைகட்கும் இடமளிக்கத்தான்* செய்கிறது. அதுவும் விடுதலை வரலாற்றில்** அத்தகையோர் குறிக்கீடு ஏராளம்! ஏராளம்!!திறமை மிக்க நண்பர் டி.எம்.பார்த்தசாரதி அவர்கள் தரும் இந்த திராவிட இயக்க வரலாற்றில் தீய சக்திகளால் சுதந்திரப்போர் வீரர்கட்கு விளைந்த இடையூறுகள்*** – அவைகளைக் கெல்லி எறிந்த இயக்கம் பெற்ற வெற்றிகள் பற்றிக் குறிப்பிடப் பட்டிருக்கின்றன.
திரு. டி.எம்.பார்த்தசாரதி அவர்களின் இந்த நற்பணியை நாடு மறவாது. காப்பாற்றவேண்டிய திராவிடத்தின் கருவூலங்களில் இந்த ஏடும் ஒன்றாகும். ஒவ்வொருவரும் பேணி பாதுகாக்கவேண்டிய ஏடு, ‘தி.மு.க வரலாறு!’
இந்த மேற்கண்ட உளறலை எங்கிருந்து உரிப்பது என மலைப்பாகவே இருக்கிறது. சரி. ;-)
‘உயிர் பறிக்கும் திமிங்கிலங்கள்‘ என எழுதியிருக்கிறார். ஆனால் எனக்குத் தெரியும், அவர் கடற்சார் உயிரினங்களைப் பற்றிய ஒரு உலகப் பிரசித்தி பெற்ற ஆராய்ச்சியாளர் என்பது…
மேலும், பலப்பல பாலூட்டிகளும் தயிரூட்டிகளும், ஏன் சீஸூட்டிகளுமேகூடக் கடலில் இருக்கும்போது, ஏன் இந்த திமிங்கிலத்தை மட்டும் எதுகை மோனை அடுக்குமொழி மண்ணாங்கட்டிதெருப்புழுதியென வம்புக்கு இழுத்திருக்கிறார் இந்தச் சீரிய ஆராய்ச்சியாளர் எனத் தோன்றுகிறது…
…ஆனால் அவர் தரவுகளைத் தரதரவென்று கொணர்ந்துதராமல் பதிலுக்கு – ‘நான் கருணாநிதியாகப் பிறக்காவிட்டால், திமிங்கிலமாகத்தான் பிறந்திருப்பேன்! ஆகவே எனக்கு திமிங்கிலங்களைப் பற்றிய பகுத்தறிவு அதிகம்!!’ என அவர் வழக்கம்போலவே திராவிடத்தனமாக அட்ச்சுவுட எவ்வளவு நேரமாகும், சொல்லுங்கள்? :-(
** அதுவும் விடுதலை வரலாற்றில் அத்தகையோர் குறிக்கீடு ஏராளம்! ஏராளம்!!
இதுதாண்டா தன்னிலைவாக்குமூலம் #2. இப்போதாவது புரிகிறதா – ஏன் இந்த விடுதலை தினசொறியானது திமுகவுக்கும் அதன் தலைவருக்கும் தொடர் ஜால்ரா அடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுவிட்டதென்று?
*** வரலாற்றில் தீய சக்திகளால் சுதந்திரப்போர் வீரர்கட்கு விளைந்த இடையூறுகள்…
இதுதாண்டா தன்னிலைவாக்குமூலம் #3.



December 28, 2016 at 01:31
இந்த திராவிடம் பேசும் திருட்டுக்கூட்டம் ஒழியும் நாளே விடிவு காலம். வோட்டு போடுவதற்கு காசு ஏன் கொடுக்கவில்லை என்று கேட்கும் மக்களை பார்க்கும்போது (கற்பனை இல்லை, எங்கள் ஊரில் நடந்தது) மிக அச்சமாக இருக்கிறது.
பசுமை விகடன் மட்டும் சற்றுப் பரவாயில்லை என்று தோன்றுகிறது. மற்ற அனைத்து விகடன் பத்திரிக்கைகளும் குப்பை :(