திமுகவுடன், தமிழகமும் பிளக்கிறது!
January 7, 2013
ஆக, நான், படிக்காதுப் படிக்காது நம் தலைவர் கருணாநிதி அவர்களுக்கு சொன்ன அறிவுரை(!) போலக் கடைசியில் உண்மையாகவே, நடக்கவே ஆரம்பித்து விட்டதோ?
ஊழிற் பெருவலி யாவுள !:-(
திமுகவின் இடியாப்பச் சிக்கல்களுக்கு ஒரே தீர்வு, நான் ஏற்கனவே சொன்னது போல, அதனை (அதாவது, பின்னதை) சாம்பாருடன் சேர்த்து, சாம்பாரகத்தை, நமது சாம்பார்நாட்டை, மூன்று பாத்திரங்களில் ஊத்திமூடி. ஒரு முடிவுக்குக் கொணடு வருவதுதான்.

சாம்பார் நாடு 2021 – எல்லைகள் – உள் நாட்டுப் பிரிவுகள் – முக்கிய, முக்காத சுற்றுலா தளங்கள் – இன்ன பிற…
அடிப்படை வரைபடத்துக்கு ’மேப்ஸ் ஆஃப் இந்தியா’ தளத்துக்கு நன்றி.
மேலதிக விவரங்களுக்கு –
|| சாம்பார் தேசம் || சர்வதேச ’சாம்பார்’ கோடு ||
-0-0-0-0-0-
சாம்பாரகம் ஒருபுறமிருக்க, தளபதி மு.க. இசுடாலிர் ஆனந்தசாம்பார் (9.1.2013) பேட்டிக்குப் போட்டி:
கேள்வி: கொள்கை… கொள்கை என்று பேசுகிறீர் களே.. உங்கள் கட்சிக்கு என்னதான் கொள்கை?
தளபதி மு.க. இசுடாலிர்: சாம்பார்மொழி, சாம்பார் இனம், சாம்பார்நாடு, சாம்பார்க் கலை, சாம்பார்ப் பண்பாடு ஆகியவை பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். பருப்பின் பெயராலும், காய்களின் பெயராலும், வெங்காயத்தின் பெயராலும், வேறு எதன் பெயராலும் சாம்பாரினம் பிரிக்கப்படவோ, சுரண்டப்படவோ கூடாது. சுயசாம்பாரும் சாம்பாரறிவும் மிகுந்த பருப்புவ சமஉப்ப சாம்பாராயம் அமைக்கப்பட வேண்டும்.
சீவப்பட்டும் நறுக்கப்பட்டும் கிடக்கும் சாம்பார்வெங்காயங்களின் வாழ்வு வளம்பெறச் செய்ய வேண்டும்.
கிண்டியத் துணை உப்புக்கண்டத்தில் சாம்பார்நாடு யாருடைய மேலாதிக்கமும் இன்றிச் சுவைத்துச் செழித்திட, மாநிலத்தில் சுயசாம்பாராட்சி… மத்தியில் கூட்டுக்கறியாட்சி எனும் சத்துவம் மணம் பெறவும் வேண்டும். இந்த லட்சியங்களை அடையப்பாடுபடுவதே சாம்பார் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை.
அய்யா! வாழ்த்த வயதில்லை, சாப்பிட்டு மகிழ்கிறேன். நன்றி. (இச்செய்தியின் மூலம், பித்தம் இன்னபிற இங்கே)
-0-0-0-0-0-
வாழ்த்த வயதிருக்கிறது. வணங்கி மகிழும் பண்பும் இருக்கிறது. இடைநாட்டரசி அவர்களை வாழ்த்தும் தமிழர் தலைவர் கி வீரமணி அவர்கள் (5.1.2013 அன்று) பொன்னாடை போர்த்திய காட்சி. பின்னர் அவர் வெங்காயத்தை எப்படி வெட்ட வேண்டும் என கனிமொழி அவர்களுக்குக் கோடிட்டுக் காண்பித்ததும் கூட!
ஃபீமேலதிக விவரம் இங்கே.
-0-0-0-0-
யோசித்துப் பார்த்தால், ஒரு காலத்தில் எப்படி ஒரு கட்டுக்கோப்புடன் இருந்த கட்சி திமுக! என்னவோ The Decline and Fall of Roman Empire-ஐயும், King Lear-ஐயும் ஒரு சேரப் படிப்பது போல இருக்கிறது காட்சி.
Karma does catch up, eventually. (கடவுளுக்கு நன்றி)
January 7, 2013 at 16:03
இது நடக்காமலிருக்க ஆண்டவனை வேண்டுவோம்
April 22, 2021 at 09:56
சாம்பார் நாடு? மராட்டி உணவல்லவோ அது? சுவையான குழம்பும், பொறியலும் இருக்கும் போது அன்னிய சாம்பார் எதற்கு?
April 22, 2021 at 10:17
ஐயன்மீர்! ஸி க் ஸ ர்!! :-)
உடனடியாக உங்களை ‘மட சாம்பாராணி ஐடி அணி கொபசெ’வாக நியமிக்கிறேன், ஆனா சொல்லிப்புட்டேன்: நான் தான் தலீவர்!
April 22, 2021 at 10:36
[…] 2013லேயே ஆரூடம் கூறப்பட்டது அண்ணாத்தேயால்… மேலதிக விவரங்களுக்கு. […]