ஹஹ்ஹா! நம் தமிழர்களுடைய நகைச்சுவை உணர்ச்சி!! (= நகைச்சுவை)
November 30, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (10/n) — சாளரம் #4
சாளரம் #4:பொதுவாக நம் தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி என்பது ஒரு சுக்குக்கும் கிடையாது, அப்படியே தப்பித்தவறி இருந்தாலும் அது, மிகமிகக் குறைவாகவும் அதுவும் — ஒருவழிச் சாலையாகவும் இருக்கும் – அதாவது மற்றவர்கள் கிண்டலடிக்கப்படும்போது, பகடி செய்யப் படும்போது அதனால் புளகாங்கிதம் அடைவோம்.
ஆனால், நம்மை யாராவது, நாக்கின்மேல் பல்லைப் போட்டுச் சொன்னால்…. அவ்வளவுதான்! நமக்கு, அதனைப் பொறுக்கவே முடியாது. கோபப்படுவோம், அழுது மூக்கைச் சிந்திப் பிலாக்கணம் வைப்போம், ‘என் கையறு நிலையைப் பாரீர்’ என, சக பேராண்மைக் குறைவாளர்களிடம் முறையிடுவோம்.

மைக்கெல் பிக்கரிங், ஷரன் லாக்யெர் / பேல்க்ரேவ் மேக்மில்லன் / 2009 / flipkart / இப்புத்தகத்தில் அழகான, நம் அறிவை விரிவாக்கும், நகைச்சுவையைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டியவையை விளக்கும், கோடிட்டுக் காட்டும் கட்டுரைகள் உள்ளன. இம்மாதிரிப் புத்தகங்கள் தமிழில், நம் பண்பாட்டிற்கேற்ப விரிக்கப் பட்டு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இப்புத்தகத்தின் துணைத் தலைப்பைப் படித்தால், நகைச்சுவையின் எல்லைகள் குறுக்கப்படவேண்டும் என்று இது சொல்வதாகத் தோன்றும்; ஆனால், இப்புத்தகம் அப்படியில்லை.
(அல்லது) டீடலஸ், இகரஸ் – நான்காவது குறிப்பு (=கொஞ்சம் நகைச்சுவை)
இதன் முதல் பகுதியைப் படித்தீர்களா? (டீடலஸ், இகரஸ் – நான்கு குறிப்புகள் (=கொஞ்சம் தொன்மம் + கொஞ்சம் ஸானெட்+ கொஞ்சம் தவிப்பு))
<–/-0-0-0-0- குறிப்பு #4 -0-0-0-0-\–>
சென்னை. மெட்றாஸ். ஆமாம். இது நடந்து சுமார் இருபத்தெட்டு வருடங்களாகி யிருக்கும் என நினைக்கிறேன்.
அப்போதெல்லாம், என்னுடன் ஒரு சிறு கூட்டம் அலைந்து தொங்கிக் கொண்டிருக்கும், நான் சொன்னதையெல்லாம் ஏற்றுக்கொண்டு, கேள்வியே கேட்காமல் என்னை மேலெழும்ப விடாமல், சராசரித்தனத்திலேயே அமுக்கிக் கொண்டிருந்தது அது. நானும் ஒரு மேதாவி என்றெல்லாம் பிரமையில் மூழ்கியிருந்த காலம். எல்லாவற்றுக்கும் எனக்கு திட்டவட்டமான, மிகக் கறாரான பதில்கள் இருந்த நாட்கள் அவை… இப்போது இருப்பதை விட, கொஞ்சம் அதிகமாகவே நக்கலும், கிண்டலும் என்னிடம் இருந்தன என நினைக்கிறேன். :-( ம்ம்ம் B-)!
ஆழ்ந்த, பரவலான படிப்பும், சமகால அரசியல் அறிவும் நுண்மான் நுழைபுலம் அறியும் பக்குவமும் எனக்கு இருப்பதாகவும், தொழில் நுட்பப் படிப்பில் சிறந்து விளங்குவதாகவும் பலப்பல புல்லரிப்புப் பிம்பங்கள், மனப் பிரமைகள், பிறழ்வுகள்…
என்ன சிக்கலில்லாத உலகம் அது! எதனைப் பற்றியும் என்னால் ஏதாவது சொல்ல முடிந்தது. எந்தப் பிரச்சினைக்கும், இடியாப்பச் சிக்கலுக்கும் என்னிடம் ஒரு தீர்மானமான தீர்வு இருந்தது.
கருப்பு-வெள்ளை ரீதி சார் எளிமையான உலக அவதானிப்பில் தயக்கங்களுக்கும், தர்ம மயக்கங்களுக்கும், கருணைக்கும், மென்மைக்கும் இடமே இருந்ததில்லை. ஒரே கறார் தான். ஒரே விமர்சனப் பார்வைதான். வெட்னா ஒண்ணு துண்டு ரெண்டுதான்.
எதனையும் ஏதோ ஒரு கோட்பாட்டு டப்பாவுக்குள் அடைத்து விட முடிந்தது. அந்த டப்பாவை மிகுந்த தன்னம்பிக்கையுடன் ஆட்டி ஆட்டி குடுகுடுப்பைக்காரத்தனமாக அதிகப் பிரசங்கம் செய்ய முடிந்தது. இடக்கையால் ஒவ்வாததைப் புறம் ஒதுக்குவதும் மிக லகுவாக இருந்தது… கூட நான் பேசுவதை ஆமோதிக்க, கேள்வியே கேட்காமல் வழிமொழிய, ஒரு சிறு கும்பலும் இருந்தது.
இந்த அழகில் மார்க்ஸீய, முரணியக்கப் பொருள்முதல்வாதச் சார்பு நிலை வேறு. கோவிந்தன், கோஸம்பி, க்ராம்ஷி, அல்துஸஹ்ர், ஹாப்ஸ்பாம் என்று கரைத்துக் (!) குடித்துப் (!!) பலவாறாக அலைக்கழிக்கப் பட்டுக் கொண்டிருந்தேன். Read the rest of this entry »
டீடலஸ், இகரஸ் – நான்கு குறிப்புகள் (=கொஞ்சம் தொன்மம் + கொஞ்சம் ஸானெட்+ கொஞ்சம் தவிப்பு)
October 15, 2013
கடந்த நான்கு மாதங்களில் இலியட் + ஆடிஸ்ஸி காவியங்களைப் பிழிந்து, சக்கையை மட்டும் என் குழந்தைகளுக்குக் கொடுத்ததை, உதவியாக இருந்த புத்தக ஜாபிதாவைப் பற்றியென்று — இரண்டு பதிவுகளில் எழுதியிருந்தேன்; பாவம் அந்தப் பிள்ளைகள். (ஏன், நீங்களும் தான்!)
இதன் தொடர்ச்சியாக, இந்த டீடலஸ்+இகரஸ் (Daedalus, Icarus) கதைகளை, சென்ற பத்து நாட்களில் – நான்கு நாட்கள் (மொத்தமாக சுமார் ஒன்றரை மணி நேரம்) என் குழந்தைகளுக்குச் சொன்னேன்.
எது எப்படியோ…
இந்த டீடலஸ், ஸிஸிபஸ் (Sisyphus) கதைகளெல்லாம் எனக்குப் பிடித்தமானவை. இதற்கு முக்கியமான காரணம், டீடலஸ் பாத்திரம் – இவன் ஒரு நல்ல பொறியியலாளன், கண்டுபிடிப்போன், கட்டமைப்போன் – என்பவை மட்டுமல்ல, அவன் மனிதனின் உட்கிடக்கையின் உன்னதங்களும் சகல கீழ்த்தரங்களும் உள்ளவனாக – ஒரு சாதாரணனாகச் சித்திரிக்கப் படுவதனாலும்தான் எனக் கருதுகிறேன்.
<–/-0-0-0-0- குறிப்பு #1 -0-0-0-0-\–>
கொஞ்சம் அதிகமாகவே சுருக்கமாக இந்த டீடலஸ், இகரஸ் (கிரேக்க) கர்ண பரம்பரைக் கதைகளை – அவற்றின் ஒருவிதமான கதையாக்கத்தைக் கொடுக்கிறேன்: Read the rest of this entry »
ஹோமர்-ன் காவியங்கள்: இவற்றை, நான் (கொஞ்சமாவது) புரிந்து கொள்வதற்கு உதவிய புத்தகங்கள்
October 13, 2013
ஹோமர்: இலியட், ஆடிஸ்ஸி – சில குறிப்புகள் படித்தீர்களா? (அதில் ஒரு விஷயம் எழுத மறந்துவிட்டேன் – அந்தப் பேச்சுகள் ஆங்கிலத்தில்தான் இருந்தன – அதாவது குறுந்தொகை + புறநானூறு குறிப்புகளைத் தவிர)
எனக்குத் தெரிந்து, மேற்கண்ட குறிப்புகளைப் பார்த்த படித்த இரண்டே பேர்களில் ஒருவர் எனக்கு உதவியாக இருந்த புத்தகங்களின் ஜாபிதாவைக் கேட்டிருக்கிறார். ஆக, அதனைக் கீழே கொடுக்கிறேன்; எனக்கு எப்போதுமே, ‘யாம் பெற்ற பேறு, பெருக இவ்வையகம்’ தான். ;-) Read the rest of this entry »
ஹோமர்: இலியட், ஆடிஸ்ஸி – சில குறிப்புகள்
October 12, 2013
இந்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் தேதி தொடங்கி செப்டெம்பர் 20 வரை, பெரும்பாலான தினங்களில் (=ஏறக்குறைய 55 நாட்கள்), காலை நேரக் கூட்டுப் பிரார்த்தனைக்குப் பின் 20-22 நிமிடங்கள் (மொத்தமாகச் சுமார் 1100 நிமிடங்கள் – குறைந்த பட்சம் 18 மணி நேரங்கள்) ஹோமர்-ன் இந்த இதிஹாசங்களை – Iliad + Odyssey – ஒரு கதை (பேருரையல்ல. மன்னிக்கவும்) போலச் சொல்லியிருக்கிறேன்.
என்னுடன் வேலை செய்யும் பாவப்பட்ட சகஆசிரியர்களும், பரிதாபத்துக்குரிய 7-10 வகுப்பு மாணவர்களும் தான் கேட்டுக் கொண்டிருந்தவர்கள். பாவம், அவர்கள் அபாக்கியவான்கள். பரலோக ராஜ்ஜியம் நிச்சயம் அவர்களுடையதில்லை. Read the rest of this entry »
ebrahim alkazi, studying mahabharatha – some notes
September 28, 2013
I’ve read the Odyssey and the Iliad a few times, soaked in them (not in the original Greek though, sadly), I respect them – but nothing that I have ever read so far, comes even reasonably close to that grand epic mahabharatha.
It is not because, I am from India or anything that I think so about mahabharata. I would consider the likes of Kurosawa Akira, Johannes Sebastian Bach, Dawn Upshaw, Parveen Sultana, Kiri Te Kanawa, M S Subbulakshmi (this listing is delightfully endless..) – not to mention ‘The Brothers Karamazov,’ ‘Remembrance of things past’ etc etc – all part of my tradition & hoary past too! In my view, all great and grand things & people of the world are part of our common tradition. Ahem!
So, one can ask why? What is so significant about mahabharata?? Read the rest of this entry »
If you are in Bangalore, and if you can spare the time, please go listen to the talk. (Oh how I miss these kinds of stuff that are available & accessible only to the city-dwellers!)
In a world that abounds in fake-science, fake-technology, fake-religion, fake-activism and fake-atheism – and various other singletonian views of The Universe – I feel that these kinds of discussions are important to get our bearings right…
Robert Geraci is the Author of ‘Apocalyptic AI: Visions of Heaven in Robotics, Artificial Intelligence, and Virtual Reality‘ a 2010 book that I liked a lot for its integrity – and for its deep knowledge of the semantics of technology and of religion. I strongly recommend this book too!
———- Forwarded message ———- Read the rest of this entry »
களப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி?
February 26, 2013
(அல்லது) முஸ்லீம்களைக் காதலிப்பது எப்படி?
ஆம். ’ஸர்வேஜனோ ஸுகினோ பவந்து’ என்று சொல்லிக்கொண்டு அல்லது ‘யாவரும் கேளிர்’ என ஒப்பித்துக் கொண்டு – நம் சகோதர முஸ்லீம்களின் மேல், தூரத்திலிருந்து மட்டும்தான் அன்பு செலுத்துவேன் என இல்லாமல் இருப்பது எப்படி?
அல்லது தொழில்முறை மனிதவுரிமைவாதிகளைப் போல, களப்பிணியாளர்களைப் போல , முஸ்லீம்களின் பெரும்பாலான மதஅரசியற்தலைவர்கள் போல, அரசியல்-சுய ஆதாயங்களுக்காக, வஞ்சகமாகப் போலிக் கரிசனப்பட்டு, அரைகுறைத்தனமாக நுரைதள்ளப் பேசி, வெறுப்பை மட்டுமே அவர்கள் சமூகத்திற்கு ஊட்டி, அவர்களுடய நம்பிக்கைகளை எரித்துப் பொசுக்கி, அந்தத் பெருந்தீக்கு அச்சமூகத்தையே தாரை வார்த்து, அதனை அழித்துக் கொண்டிருக்காமல் —
… விடாமுயற்சி செய்து, விட்டேனா பார் என்று காதலிப்பது எப்படி?
-0-0-0-0-0-
எல்லாம் பத்ரி சேஷாத்ரி அவர்களால் வந்த வினை. அவர் விதைத்த வினையை நான் அறுத்து இரண்டு நாட்கள் முன்பு இதுதாண்டா தொழில்முறை களப்பிணியாளன்! எழுதினேன். நீங்கள் அதனைப் படிக்கவில்லையானால், முதலில் அந்தப் பதிவைப் படித்துவிட்டு மேலே/கீழே படித்தால் நலம்.
… மாய்ந்து மாய்ந்து அவ்வளவு, நீயாநானா என்று மல்லுக் கட்டி எழுதியது போதவில்லை எனக்கு. ஏனெனில், இந்த நிகழ்ச்சியில் நடந்த ஒரு உரையாடலுக்கு (அதாவது: சில சுவாரசியமான கற்பனைச் சதிகள் பற்றி ஒரு களப்பிணியாளர் ஆத்மார்த்தமாகச் சொல்லியிருக்கும் பொய்களுக்கு) எதிர்வினையைக் கொடுத்தே ஆக வேண்டும் எனத் தோன்றியதால்… இந்தப் பொய்கள் இம்மாதிரி களப்பணியடிச்சான் குஞ்சுகளால், அயோக்கியத்தனமாகத் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வருவதால்…
விடாது, கருப்பு (= விஜய் டிவியின் ‘நீயா நானா: இளைஞர்கள் vs களப்பணியாளர்கள் டட்டடா டட்டடா டட்டடா டட்டடா’…)
மன்னிப்பீர்களா? B-)
அபு ல்-வலித் மொஹம்மத் பின் அஹ்மத் பின் ரஷித் எனும் அவெர்ரீஸ்
January 28, 2013
ஏதோ ஒன்றிரண்டு கொர்ரான் செய்யுட்களை மட்டும் படித்து விட்டு அதனையும் புரிந்து கொள்ளாமல் இருக்கும் அரைகுறைகள் தான் இஸ்லாமின் பெயரால் அட்டூழியம் செய்வார்கள்.
— இப்ன் ரஷித் (அவெர்ரீஸ் – Averroës) (1126-1198)
என் இளமைக்கால அதிமனிதர்களில் (’ஹீரோ’க்களின் தமிழ்ப்’படுத்தல்’ தான், பயப்படாதீர்கள்) ஒருவர் இந்த இப்ன் ரஷித் – அவருடைய சமகால ஐரோப்பியர்களால் லத்தீன்மயமாக்கப் பட்டு அவெர்ரீஸ் என அழைக்கப் பட்டவர்.
Read the rest of this entry »


