களப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி?
February 26, 2013
(அல்லது) முஸ்லீம்களைக் காதலிப்பது எப்படி?
ஆம். ’ஸர்வேஜனோ ஸுகினோ பவந்து’ என்று சொல்லிக்கொண்டு அல்லது ‘யாவரும் கேளிர்’ என ஒப்பித்துக் கொண்டு – நம் சகோதர முஸ்லீம்களின் மேல், தூரத்திலிருந்து மட்டும்தான் அன்பு செலுத்துவேன் என இல்லாமல் இருப்பது எப்படி?
அல்லது தொழில்முறை மனிதவுரிமைவாதிகளைப் போல, களப்பிணியாளர்களைப் போல , முஸ்லீம்களின் பெரும்பாலான மதஅரசியற்தலைவர்கள் போல, அரசியல்-சுய ஆதாயங்களுக்காக, வஞ்சகமாகப் போலிக் கரிசனப்பட்டு, அரைகுறைத்தனமாக நுரைதள்ளப் பேசி, வெறுப்பை மட்டுமே அவர்கள் சமூகத்திற்கு ஊட்டி, அவர்களுடய நம்பிக்கைகளை எரித்துப் பொசுக்கி, அந்தத் பெருந்தீக்கு அச்சமூகத்தையே தாரை வார்த்து, அதனை அழித்துக் கொண்டிருக்காமல் —
… விடாமுயற்சி செய்து, விட்டேனா பார் என்று காதலிப்பது எப்படி?
-0-0-0-0-0-
எல்லாம் பத்ரி சேஷாத்ரி அவர்களால் வந்த வினை. அவர் விதைத்த வினையை நான் அறுத்து இரண்டு நாட்கள் முன்பு இதுதாண்டா தொழில்முறை களப்பிணியாளன்! எழுதினேன். நீங்கள் அதனைப் படிக்கவில்லையானால், முதலில் அந்தப் பதிவைப் படித்துவிட்டு மேலே/கீழே படித்தால் நலம்.
… மாய்ந்து மாய்ந்து அவ்வளவு, நீயாநானா என்று மல்லுக் கட்டி எழுதியது போதவில்லை எனக்கு. ஏனெனில், இந்த நிகழ்ச்சியில் நடந்த ஒரு உரையாடலுக்கு (அதாவது: சில சுவாரசியமான கற்பனைச் சதிகள் பற்றி ஒரு களப்பிணியாளர் ஆத்மார்த்தமாகச் சொல்லியிருக்கும் பொய்களுக்கு) எதிர்வினையைக் கொடுத்தே ஆக வேண்டும் எனத் தோன்றியதால்… இந்தப் பொய்கள் இம்மாதிரி களப்பணியடிச்சான் குஞ்சுகளால், அயோக்கியத்தனமாகத் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வருவதால்…
விடாது, கருப்பு (= விஜய் டிவியின் ‘நீயா நானா: இளைஞர்கள் vs களப்பணியாளர்கள் டட்டடா டட்டடா டட்டடா டட்டடா’…)
மன்னிப்பீர்களா? B-)
ஷங்கர் குஹா நியோகி – சில நினைவுகள்
February 14, 2013
ஆம்.
நான் எப்பொழுதுமே ஒரு பாக்கியசாலியாகத்தான் இருந்திருக்கிறேன், தொடர்ந்தும் அப்படியேதான் இருப்பேன். எனக்குக் கிடைத்த (தொடர்ந்து கிடைக்கும்) அருமையான அனுபவங்கள், நிகழ்வுகள், நட்புக்கள் – எனக்கு அவைகளைப் பெறுவதற்கும் அடைவதற்கும் அருகதை இருந்ததோ இல்லையோ, இருக்கிறதோ இல்லையோ – அவை அழகானவை, வாழ்வுக்குச் செறிவூட்டுபவை; நுட்பமும், ஆழமும், வீச்சும் மிக்கவை. அசை போட அசை போட, போதையும், சில சமயம் மாளா துக்கமும் தருபவை…
-0-0-0-0-
ஷங்கர்தா ((1943 – 91) என எங்களில் சிலரால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட ஒரு மகத்தான மனிதநேயவாதி கொலை செய்யப்பட்டு 22 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இன்று உயிருடன் அவர் இருந்திருந்தால் அவருக்கு 70 வயதாகியிருக்கும். ஃபெப்ரவரி 14 பிறந்தவர் அவர்.
ஹ்ம்ம்? அவர் உயிருடன் இருந்திருந்தாலாவா??
Read the rest of this entry »
சென்னை புத்தகச் சந்தை நினைவுகள்…
January 20, 2013
சரியாக நினைவில்லை எந்த வருடம் என்று. 1992 / 3 /4 ஆக இருக்கலாமோ?
ஆனால் அன்று காலை 5:30 மணி போல அகாலமாக அழைப்புமணி அடித்தது எனக்கு மிக நன்றாக நினைவில் இருக்கிறது.
யார்டா இது இவ்வளவு காலையில் என்று முணுமுணுத்துக் கொண்டே திறந்தால், மகாதேவன். (முன்பு ஒரு பதிவில் இவனைப் பற்றி எழுதியிருக்கிறேன்).
முந்தின நாள் இரவு மிகத் தாமதமாகத்தான் புத்தகச் சந்தையை விட்டுக் கிளம்ப முடிந்திருந்தது, எங்களால்… மிகவும் அலுப்பினால் அவதிப்பட்ட காலங்கள் அவை – அவனுக்கும் எனக்கும் புத்தகங்களைத் தவிர, அங்கும் இங்கும் ஓடிஓடி அற்புதமான படங்களைப் பார்ப்பதைத் தவிர, பல ஈடுபாடுகளும் தொழில்களும் இருந்தன அக்காலங்களில்.
Read the rest of this entry »
ஆர்ட்வீனொ, ரொபாடிக்ஸ், இளைஞர்கள்(ஐயோ!), விடுதலை (ஐயய்யோ!)
December 6, 2012
சில நாட்கள் முன்பு ஒரு நெடுநாள் நண்பனொருவன் வந்திருந்தான். சில பழைய விஷயங்கள் பற்றியும், என் பள்ளியில் நாங்கள் அமைத்துக் கொண்டிருக்கும் ஒரு புத்தம்புதிய கணினித் தொழில் நுட்ப மையம் சார்ந்து சில திட்டங்களைப் பற்றியும், எப்படி அதற்குத் தேவையான மூலதனம் கொணர்வது, நிர்வகிப்பது என்பதையும் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு ஆர்ட்வீனொ (arduino) எனும் அழகைப் பற்றி இயற்கையாகத் திரும்பியது – நான் அதனை வைத்து என் மாணவர்களுடன் உரையாட, பயிற்சி கொடுக்க முனைந்து கொண்டிருப்பதால், திட்டமிடுவதால்.
அவன் கேட்டான், ”எனக்கு சில நல்ல ரொபாடிக்ஸ் மேல் காதல் கொண்ட, மின்னணுவியலிலும், கணினியியலிலும் பயிற்சி பெற்ற இளைஞர்களைக் காண்பிக்க முடியுமா? சில திட்டங்கள் வைத்திருக்கிறேன் – பெங்களூரில்? சென்னையில்? புணேயில்? உனக்கு யாரையாவது தெரியுமா?”
நான் சொன்னேன், “நிச்சயம் தெரியும், ஆனால், எனக்கு இரண்டு வருடங்கள் கொடு, என்னால் பொருட்படுத்தத்தக்க அளவு உழைக்க முடிந்தால், எங்கள் கிராமத்துப் பக்கத்திலிருந்து வெறும் பத்தாவது மட்டுமே படித்த, ஆனால் ஞானமும், ஆர்வமும், குடிமை உணர்ச்சியும், விடாமுயற்சியும், சுறுசுறுப்பும் மிக்க, சில சுட்டிப்பையன்களைக் கொடுக்கிறேன், சுட்டிப் பெண்களையும் தான். இந்தப் பொடியன்பொடிச்சிகள், அந்த முட்டாள்-அப்பன்கள் செலவில் மெத்தப் படித்த அந்த அரைகுறை பி.ஈ, பி.டெக் களை விட நல்ல பொறியாளர்களாக இருப்பார்கள். அதற்கு நான் உத்திரவாதம், சரியா?” Read the rest of this entry »

