செந்திலும் செல்வியும்

May 19, 2023

கடந்த இரண்டுமூன்று வாரங்களாகப் பலப்பல பழைய நண்பர்களையும், அறிமுகங்களையும் பார்க்கும் + கொஞ்சம் அளவளாவும் வாய்ப்புகள் கிடைத்தன. (இத்தனைக்கும் ஒன்றையும் நான் திட்டமிடவேயில்லை!)

அந்த அனுபவங்களிலிருந்து, சுவையான ஒன்றைப் பகீர்வதில் இறும்பூதடைகிறேன்.

சீன-இந்திய மூதாதையர்களைக் கொண்ட சிலபல எம்பிஏ படுபுத்திசாலிகளால் நிர்வகிக்கப்படும், சிங்கப்பூர் சார்ந்த ஒரு வியாபார நிறுவனத்தின் சில தொடங்கிகளை அறிவேன். இவ்வாசாமிகளைச் சுமார் 25 வருடங்களுக்குப் பின் சென்ற வாரத்தில்தான்  பார்த்தேன்.

ஆதிகாலத்தில் சிறிய அளவில் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்துகொண்டிருந்தார்கள். இப்போது வளர்ந்து விட்டார்கள்.

கடந்த பத்தாண்டுகளாக, மிகப் பெரிய அளவில் அனல் மின் நிலையங்களுக்கும், ஸிமெண்ட் தொழிற்சாலைகளுக்கும் தரமான நிலக்கரியைக் கொள்முதல் செய்து வினியோகிப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள்.

தென்னாஃப்ரிகா, இந்தோனேஷியா, ஆஸ்ட்ரேலியா ப்ரதேச சுரங்கங்களில் இருந்து நிலக்கரியைக் கொள்முதல் செய்து, அங்கேயே கிடங்குகளில் சேகரித்து, தேவையானால் கலந்து/ப்லெண்ட் செய்து பெருஞ்சரக்குக் கப்பல்களில் பல நாடுகளுக்கு அனுப்பும் தொழில். கொஞ்சம் ரிஸ்க் – ஆனால் அதற்கேற்ற லாபமும் கிடைக்கிறது என்கிறார்கள். வியட்நாமில் ஸிமெண்ட் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கப் போகிறார்கள் + ஆஸ்ட்ரேலியாவில் இரும்புக் கனிமச் சுரங்கம் ஒன்றையும் வாங்கப் போகிறார்கள்.

சரி.

அவர்களுடைய வாடிக்கையாளர்களில் பல பாரத மாநிலங்களும், பல பாரத ஸிமென்ட் தொழிற்சாலைகளும் அடக்கம்.

இதில் ஒரு பெரிய விதிவிலக்கு: தமிழ்நாடு.

ஏன்?

சென்ற திராவிட/அஇஅதிமுக ஆட்சியில் பெருமளவில் தொடங்கிய செந்தில் ஆண்டவர் லீலை இன்னமும் திராவிடமாடல் திமுக ஆட்சியிலும் அமோகமாகத் தொடர்கிறது. இந்த அயோக்கியத் திருடனை ஒன்றிரண்டு முறை நேரடியாகச் சந்தித்திருக்கிறார்கள் (இந்த ஆசாமி ஒரு தெரிந்த+தேர்ந்த அயோக்கியன் – அவன் வண்டவாளமும் தண்டவாளத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது)

என் நிலக்கரியாள அறிமுகங்கள் ஒன்றும் நேர்மைப் பிழம்புகள் இல்லை, குறைந்த பட்சக் கையூட்டுக்கும், கமிஷனுக்கும் தயாராகவே இருந்திருக்கிறார்கள் – ஏனெனில் ஊழல் என்பதும் உலகளாவியது – அமெரிக்காவிலிருந்து ஆஸ்த்ரேலியா வரை எல்லாம் ஒரே கதை – சதவீதங்கள்தாம் வெவ்வேறு.

இருந்தாலும் – செந்திலாருடன் அவர்களுக்கு ஒத்து வரவில்லை. ஒர்ரேயடியாக  மெகாக்கமிஷனும் ஊழலும் – மேலும் இந்த அறிமுகங்களுக்கு, நிலக்கரியின் தரத்தில் ஏமாற்றுவதில் பிடித்தமில்லை…. ஆகவே.

ஆனால், இவ்வாசாமிக்கு அப்பாற்பட்டு – சிலபல சக்தி மையங்கள் திராவிடமாடலில் இருக்கின்றன; அதில் ஒன்றுதான் இந்தச் செல்வம் கொழிக்கும் ‘செல்வி.’

இவ்வாசாமியினியின் தரகர்கள், 25% முன்பணம் கொடுத்தால்தான் ஆயிற்று எனப் பிடிவாதம் பிடித்ததோடல்லாமல், ‘எங்களுக்கு, நிலக்கரியின் தரம் முக்கியமில்லை’ எனப் பிரகடனம் செய்தது + பத்துப் பதினைந்து ஷெல் (லெட்டர்பேட்) நிறுவனங்கள் வழி, தொடர்/சங்கிலிப் பிணைப்புகள் மூலம் அந்நியச் செலாவணிக் கையூட்டுப் பணத்தைக் கொடு என்றதுதான் அறிமுகங்களுக்கு ஒத்துவரவில்லை. ஆகவே நேரடியாக, ‘செல்வி’யைப் பார்க்கச் செல்லவில்லை.

சரி, விளைவு:

இந்த எழவையும் தொடர்பேரங்களையும், அதில் இருந்த உள்ளார்ந்த அபாயங்களையும் பொறுக்க முடியாமல், அறிமுகங்களானவர்கள் தமிழகத்தையே சாய்ஸில் விட்டு விட்டார்கள்.

அவர்களில் ஒருவர் மாய்ந்துமாய்ந்து ஆச்சரியப் பட்டுக்கொண்டு சொன்னது – “அவர்களுக்குத் துளிக்கூட வெட்கமோ, பயமோ இல்லை – இரண்டு சார்ட்டர்ட் அக்கௌண்டண்ட்கள் + ஒரு அரசதிகாரியுடன் வந்தார்கள்… அவர்களுடைய மொத்த முன்னெடுப்பும் அறிவியல் பூர்வமாகவும் தன்னம்பிக்கை மிக்கதாகவும் இருந்தது… இம்மாதிரிப் பேரம்பேசும் அரசியல்வாதி-அதிகாரிகளை நாங்கள் கண்டதேயில்லை!”

…இந்த ‘அம்மணி’ யாராக இருக்கக் கூடும்? இல்லை இது ஏதாவது ப்ளடி கோட்வர்டா? சங்கேத சங்கதியா?? ;-)

கொசுறுச் செய்திகள்:

அ. திமுக எம்பி ஒருவர், தரக்குறைவு நிலக்கரியை ஏற்றுமதி செய்ய, கீழை நாடுகளொன்றில் ஒரு துறைமுகத்தையே வாங்கி நிர்வகிக்கிறார்.

ஆ. திமுக அமைச்சர் ஒருவரும், அவரது உறவினர்களும் இந்தோனேஷியாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றின் பெருமுதலாளிகள்.

இ. தமிழ் நாட்டின் திராவிடமாடல் மின்சாரத்துறை (பிற நிறுவனங்களிடம் இருந்து) இறக்குமதி செய்யும் நிலக்கரி, தரம் வாய்ந்ததல்ல. ஏன், படுமோசமானதேகூட – அதனை உபயோகித்தால் நிலக்கரி வழி மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையங்களின் உபகரணங்கள் பழுதுபடும்வேறு; ஆனால், இந்தப் படுமோசக் கரிக்கு கொடுக்கப் படும் விலையானது, மிகவுயர்தர நிலக்கரியைவிட அதிகம்!

ஈ. திருட்டுத் திராவிடமாடலில் இதெல்லாம் சகஜமப்பா.

…திராவிடமென்றாலே அகொதீக (அழிவு கொலைகொள்ளை தீமை கழகம்) என்பதை அறிவோம். +அயோக்கியக் கற்பழிப்பாளர்கள் என்பதையும்.

இருந்தாலும்

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s