ஏப்ரல் 14ம் தேதி நிகழ்ந்த இரு விஷயங்களும், அடுத்த நாள் ஏப்ரல் 15 அன்று நடந்ததும்…

April 11, 2023

இது ஆரூடம் இல்லை. வரலாறு மட்டுமே. இருந்தாலும்…

சுமார் 1989 முதல் 1995 வரை நடந்த பொறுக்கித் திராவிட (பெரும்பாலும் திமுக உதிரி வகை) அட்டூழியங்களையும் அதன் அயோக்கியத் தனங்களையும் மாபெரும் ஊழல்களையும் ‘ஹிமாலய’ மோசடிகளையும் பாலியல் வக்கிரங்களையும் ஓரளவுக்கு வாடிவாசல் பக்கத்திலேயே இருந்து பார்த்து நொந்த எனக்கு, சிலபல வரலாற்று நிகழ்வுகளின் நீட்டிப்புகள் நினைவுக்கு வருகின்றன.

இவற்றைக் குறித்து ஒரு பெரிய மொத்தையளவு, ஸெராக்ஸ் செய்யப்பட்ட மூலஆவணப் பிரதிகளை, ஸாஸ்திரிபவனில் இருந்த ஸிபிஐ அலுவலகத்துக்கு அளித்தும் ஒன்றும் பெரிதாக நடக்காமல் இருந்தாலும், மாறாக அப்படிக் கொடுத்தவனே ‘தண்டிக்கப் பட்டதும்’ நினைவுக்கு வந்து தொலைக்கின்றன.

…மேலும், சுமார் 8-9 வருடங்கள் போல ஏறக்குறைய வருடம் முழுவதும், பள்ளிகளின் காலை அஸ்ஸெம்ப்ளிகளில் 15 நிமிடங்களுக்கு – ‘இன்றைய தினம் உலக, பாரத வரலாறுகளில் என்ன நடந்தன, அவற்றின் பின்புலங்கள் யாவை, எப்படியாப்பட்ட அறிவியல்/பொறியியல் தொடர்பான விஷயங்கள் பரிணமித்தன++‘ போன்ற விஷயங்களை அசைபோட்டு (அதிகப்)பிரசங்கம் செய்து, சிலபல படிப்பினைகளை அடைந்ததும், ஆச்சரியம் தரக்கூடிய வகையில் அவை பிள்ளைகளுக்கு உற்சாகத்தையும்(!) அளித்து உந்தியமை குறித்த அலறும் நினைவுகளும் உதவிக்கு ஓடி வருகின்றன.

ஆகவே.

1

ஏப்ரல் 14, 1935

அமெரிக்க தெற்குப்பகுதி சமவெளிப் பிரதேசங்களில் ( USA’s Southern Plains) அநியாயத்துக்கு வறட்சி. 1930ல் ஆரம்பித்துச் சில வருடங்கட்கு மழையே இல்லை. விவசாயம் ஸ்தம்பித்துப் போயிருந்தது. ஈரப்பதமே துளிக்கூட இல்லாமையால் வறண்ட நிலத்தில் ஏகப்பட்ட விரிசல்கள். மேற்பகுதிமண்ணை தம் அடர்த்திவேர்களால் அணைத்துப் பிடித்திருந்த பாரம்பரியப் புல்வகைகள் ஏறத்தாழ ஒழிக்கப்பட்டு, அவற்றின் இடத்தில் பலவருடங்களாக கோதுமை பெருவாரியாகப் பயிர் செய்யப் பட்டிருந்தமையால் (வறட்சியின் காரணமாக அவையும் இல்லாமல் போய்) காற்றில் அல்லாடிக் கொண்டிருந்த பெரும்புழுதி. இதன் காரணமாக டஸ்ட் பௌல் (dust bowl) எனப் பெயரே கொடுக்கப்பட்டது அப்பிரதேசம்.

அன்று மதியவேளை.

மஹாமஹோ புழுதிக் காற்று. வீட்டுக்குள், மூக்கிற்குள் ஏன் உயிருக்குள்ளேகூடப் புகுந்த  பிரளயக் காற்று கிளம்பியது. முன்னெப்போதையும் விட வீரியம் கொண்டு விண்ணைத்தொட்ட  கொடும் கரும்புழுதி. சூரிய வெளிச்சமே போய், இருட்டாகவே ஆகியது…  அதுவரை தாக்குப் பிடிக்கலாம் என இருந்த திடமனதுக்கார விவசாயிகளையும் இது தளரவைத்து கலிஃபோர்னியா பக்கம் புலம்பெயர வைத்தது.

ஏறத்தாழ 2 வருடங்கள் நடந்த இந்தக் கோலாகலத்தில் – சுமார் நூறு மில்லியன் ஏக்கர் (=405,000 சதுர கிலோமீட்டர்) கணக்குக்கு விளை நிலப் பிரதேசம் கடுமையாகப் பாதிக்கப் பட்டது. அதிலிருந்து சுமார் 1.2 பில்லியன் டன் (=1, 200, 000, 000 டன்!) அளவிலான மேற்பகுதி/சத்து நிறைந்த மண் விரயமாக்கப் பட்டது. சுற்றுச் சூழல் பாதிப்பு, மானுடர்களுக்கு உடல்ரீதியான பாதிப்பு என்பதற்கு அப்பாற்பட்டு, இதனால் ஏற்பட்ட மாபெரும் பொருளாதாரச் சறுக்கல்கள் இன்று நினைத்தாலும் பயபீதி தருபவை.

இந்தப் பேரழிவுக்காக, தனிப்பட்ட விவசாயிகளைக் குற்றம் சொல்லமுடியாதென்றாலும், வினை விதைத்தவர்கள் வினை அறுத்தார்கள். தாங்கள் கிளப்பிய கரும்புழுதியில் தாங்களே பாதிக்கப் பட்டு அல்லலுற்றார்கள். ஸ்வயம் க்ருத அனர்த்தம்.

(‘அடுக்குமொழி பொறுக்கி நடை’ பெருந்திருட்டு திமுக திராவிடர்களும் பெரிய அளவில் ஊழல் செய்யாமல், வெறும் பேட்டை ரவுடிகளாகவே, லோக்கல் வழிப்பறியர்களாகவே தங்கள் குடும்பத் தொழிற்களை நடத்திக்கொண்டு இருந்திருக்கலாம், அல்லவா? தமிழகத்தையே ஒரு  திராவிடக் கொள்ளைக்கார நிலமாக, பாரதீயத்துக்கு ஏங்கும் நிலமாக மாற்றியது அவர்கள் லீலைகள்தாமே?)

ஜான் ஸ்டெய்ன்பெக்கின், ‘த க்ரேப்ஸ் ஆஃப் ரேத்’ – இந்தச் சிக்கல்களைப் பின்புலமாகப் கொண்டு எழுதப்பட்ட 1939 நாவல்.

1944ல் வெளிவந்து மிகப் பிரபலமான வூடி கத்ரியின் ‘டோ ரே மி‘ பாடலுக்கும் இதே பின்புலம்தான்.

ஏப்ரல் 14, 2010

ஐஸ்லாண்ட் நாட்டின் ஐயஃப்யல்லயொகுல் Eyjafjallajökull  பனிமலைப் பகுதிக்கடியில் இருக்கும் ஒரு பெரிய எரிமலை பொங்கி ஏகப்பட்ட அளவு புகையையும் சாம்பலையும் வளிக்குத் தள்ளி, ஐரோப்பா பிராந்திய விமானப் போக்குவரத்தையே ஒருவாரத்துக்கு ஸ்தம்பிக்க வைத்தது.

(Eyjafjallajökull volcano emitting ash into the air over southern Iceland, April 16, 2010 – Encyclopaedia Britannica)

இதனால் விளை நிலங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் எனப் பிராந்திய விவசாயிகள் கருதினாலும் – மாறாக, அந்தச் சாம்பலில் இருந்த சத்துகளால், பயிர்கள் நன்றாகவே வளர்ந்து மஹஸூல் தந்தன.

(ஆகவே, ஜாதிவெறி பிடித்த திருட்டுத் திமுக திராவிடர்கள் தயவுதாட்சண்யமின்றிப் பொசுக்கப் பட்டால், தமிழகத்துக்கும் நலனே விளையும்…)

2

சரி. ஏப்ரல் 14 அன்று மேற்கண்டவை நடந்தன. அடுத்த நாள்?

ஏப்ரல் 15, 1912

ஒரு பெரும் பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் எனும் சொகுசுச் சுற்றுலாக் கப்பல் மூழ்கியது.

ஏனெனில் கடலில் மிதக்கும் பனிமலை/பனிப்பாறைகளின் ஒரு சிறு சதவீதமே கண்ணுக்குப் புலப்படும்படிக்கு நீர்ப்பரப்புக்கு மேலே தெரியும்.

அவற்றின் சக்தியும் பராக்கிரமும் வேற லெவல், அவ்ளோதான்.

(இனி வரப்போகும் காலங்களில் திமுகவினருக்கு (+இன்னபிற பாரத எதிர்ப்புக் கட்சிகளுக்கும் பொறுக்கிக் கும்பல்களுக்கும்) இம்மாதிரி நடந்தால் மகிழ்வேன்; அதற்கு பனிமலை நிகர் பாரதீய ஜனதா கட்சி காரணமாக அமைந்தால் இன்னமும் சிரேஷ்டம். ஜாஜ்வல்யம்.)

3

மற்றபடி + எது எப்படியோ.

வரும் ஏப்ரல் 14, 2023 அன்றும், அதற்குப் பின்னும், நம் தமிழகத்தைப் பொறுத்தவரை என்ன நடக்கலாம் என்பதைப் பார்க்க நானும் மிக ஆவலாக உள்ளேன்.

பார்க்கலாம், எதிர்காலம் எப்படித் தமிழகத்துக்கும் பாரதத்துக்கும் சாதகமாக அமைகிறது என்று…

3 Responses to “ஏப்ரல் 14ம் தேதி நிகழ்ந்த இரு விஷயங்களும், அடுத்த நாள் ஏப்ரல் 15 அன்று நடந்ததும்…”


  1. கொமாரு Says:

    ஹெஹ்ஹெஹ்ஹெஹ்ஹே ஒர்ரே தமாஸ்தான் வாத்யாரே ஒங்ளோட. லிஸ்ட் ரிலீஸ் பன்னீங்கோ இன்னாய்ட்ச்சி இப்போ? தலயா பூட்ச்சி? அத்த வச்சி எங்காளுங்கோ இன்னாமேரி ஃபன் பன்னிட்ருக்கானுவனு பாத்தீங்ளா வாத்யாரே? பால்டாயில் ஸ்டாரே சொல்டாப்ல காமெடி டைம்னு, எலிபன்ட் வால்ல இருக்ற ஒத்த முடிய பாத்துட்டு இத்தான் ஆனைனு நென்ச்ச கததான்.

    லிஸ்டு வர்துக்கு மின்ன பலானபேரு கய்ஞ்சிட்டுதான் இர்ந்தானுவ. ஐபிஎஸ் ஆபிஸரு அக்யூஸ்டெல்லாம் ஓட உட்ருக்காப்ல, கைசுத்தம்னு மண்டகெர்வம் வேற, எங்க அல்லாத்தையும் நோண்டி நொங்கெடுத்ருவாப்லயோனு நானுங்கூட லைட்டா ஜெர்க்கானேன். ஆனாக்க லிஸ்டு வந்தோனேயே அல்லாமே புஸ்ஸுனு பூட்ச்சி. எங்காளுங்ள இவ்ளோ சீப்பா நென்ச்சிட்டீங்ளேபா.

    எங்கு ஏரியா கவுன்சலரே இத்தோட மிச்சமா சொத்து வெச்சிருக்கான், போயும்போயும் பிச்சகாசு 2000 கோடிதான் சொத்திர்க்குனு சொன்னா சின்னது சிரிக்காம இன்னா பன்னும்? ஒத்த வர்ஸத்துல 30000 கோடி அடிக்றானுவனு எங்கு அம்ரிக்கா ரிட்டனு காண்டுல சுத்தினிர்க்காப்ல. இதுல இத்தினியூன்ட தூக்கினு வந்த்டு பெர்ஸா பேசினிர்க்கீங்கோ? இத்தோட மிச்சமா நம்ம பொதுஐன்த்துக்கே தெர்யுமே? பக்காவா ப்ரூஃப் இர்க்கத மட்டுந்தான் அண்ணாமலையாரு சொல்லிர்க்காப்ல. ஆனாக்க பினாமி பேர்ல இர்க்றது, ஃபாரின்ல இர்க்றதுனு எத்தையும் இன்னும் டச்சே பன்லயே, இதுக்கா இம்மாம் பில்டப்பு குட்தீங்கோ?

    எங்காளு எவனாவ்து அந்த சொத்தெல்லாம் என்தில்லேனு சொன்னானா? ஒன்க்கு தெர்ஞ்சது அவ்ளதானு கைகொட்டி சிர்ச்சினிர்க்கானுவோ. டாஸ்மாக் கம்ஷனே டெய்லி கோடில வந்துனிர்க்கு. இதுமேரி எத்ன டிபார்ட்மெண்ட் இர்க்கு இன்னா சமாச்சாரம்? ஒன்னுந் தெர்யாத பச்ச புள்ளிங்களா இர்கீங்களேபா?

    அப்டியே நீங்கோ அல்லாத்தயும் தோண்டி எட்த்தாலும் எங்கு மவுசுதான் ஏறும். எவ்ளோகெவ்ளோ நம்பர் பெர்ஸாகீதோ அவ்ளோகவ்ளோ ஐனங்கோ பவ்யமா ஓட்டு போடுங்கோ, ரீஜன்டா ஈரோட்ல இன்னாமேரி சம்பவம் பன்னோம் பாத்தீங்களா இல்லியா?

    பப்ளிக்கா பட்டில அட்ச்சு வச்சு கறிசோறும் காசும் குட்க்கறோம்னு செலபேரு கதறுனீங்கோ ஆனாக்க இன்னாச்சி? காச வாங்கினு ஜனங்கோ குத்துச்சா இல்லியா? அத்னால ஒங்களபோல நீதி நேர்ம நாயம் பேசறவங்கோ கத்தினே இர்க்க வேண்டிதான். நெக்ஸ்ட் நாப்பதும் நாங்கதான் எங்கள ஒன்னியும் ஆட்ட மிட்யாது, வர்ட்டா வாத்யாரே?


    • 🙏🏿😩

      …இந்திய நேரம் காலை 1.30 மணி வாக்கில் நீங்கள் பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள்.  நீங்களும் உங்கள் பங்குக்கு முட்டிமோதிக் கொண்டிருக்கிறீர்கள்.

      உங்கள் கரிசனமும் வருத்தமும் புரிகின்றன.

      ஆனாலும் நமக்கு இப்போது வாய்த்துள்ளவை:  “பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்… கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்…” வகை அண்ணாமலைகள் – வெறும் பேச்சில் மட்டுமல்ல, செயலிலும் காண்பிக்கும் வகையினர்.

      + உங்களைப் போன்ற செயலூக்கம் கொண்ட (ஆனால் அறியப்படாத) இளரத்தங்கள், வரப் பிரசாதங்கள்.

      எதிர்காலம் உருப்படியாகத் தான் உருமாறவேண்டும், வேறு வழியில்லை எனத்தான் படுகிறது.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s