டௌவ்னீஸ்டர் அலெக்ஸா: பில்லி ஜோயல் இசைத் தாலாட்டு + some blasts from the past…

April 7, 2023

…சுமார் பதினைந்து வருடங்களுக்குப் பின் இன்று இதனைக் கேட்டேன் – இன்று முழுவதும் முடிந்தபோதெல்லாம் இதனை ‘லூப்’ல் கேட்கப் போகிறேன்.

…சோகம், மயக்கம், ‘அக்காலங்களில் அப்படி இயல்பாக இருந்தோம், காலச்சுழற்சியில் அவை பொய்யாய் பழங்கனவாய், போயினவே’  வகை நிகழ்காலங்கள் குறித்த wistful, angsty சஞ்சலங்களும், எதிர்காலத்தைக் குறித்த ஒருமாதிரி நிராசைகளும் கொட்டி இசையுடன் ஆழியில் கலந்த இன்ப லாஹிரி.

-0-0-0-0-

1980களின் இறுதியில் (என நினைவு) வெளிவந்த இப்பாட்டினை(யும்) மிருதுவான(!) குரலில் முனகிக்கொண்டே பாடியபடிதான் ~2009 வரை என் குழந்தைகளைத் தூங்கச் செய்திருக்கிறேன். (அல்லது அவர்களைப் படுபீதியளிக்கும் படிக்கு பயமுறுத்தித் தூங்க வைத்திருக்கிறேன் எனவும் கொள்ளலாம்)

இவ்வகைத் தாலாட்டு(!)களில், சில பாரதி பாடல்கள், அழ. வள்ளியப்பாவின் சில ஆக்கங்கள், சம்பூர்ண ராமாயணம் லவகுசா படத்தின் ‘ஜகம் புகழும் புண்யகதை ராமனின் கதையே’ + தஞ்சாவூர் சங்கரைய்யரின் ‘மனதிற்குகந்தது முருகன் ரூபம்’ ஊடாக பாக்ஹின் டொக்காடா & ஃபூக், பெட்டோஃபனின் ஏழாம் ஸிம்ஃபனி ‘ஆலாபனை’ இரண்டாம் அசைவு/துக்கடா இன்னபிற வரை, ஓங்கார் ப்ரஸாத் நய்யாரின் பாடல்கள் (பாபுஜி தீரே சல்னாயே ஹை ரேஷ்மி, ஸுல்ஃபோன் கா அந்தேரா…++), சில ப்பிங்க் ஃலாய்ட் பாடல்கள், யுரையா ஹீப் குழுவின் ஜிப்ஸி, ஜூலை மார்னிங் உட்பட அடங்கும். (எல்லாவற்றிலும் டெம்பொவையும் ஆக்டேவ் ஸ்கேலையும் தேவைப்படும்போது கொஞ்சம் குறைத்துதான், அதுவும் உச்ச ஸ்தாயியில் இல்லாமல்… சில சமயங்களில் சீழ்க்கையிலும்…)

…ஐயய்யோ, தற்போது எனக்குத் துளிக்கூட ஒத்தே வராத ஹான்ஸ் ஸிம்மரின் ‘தின் ரெட் லைன்’ படப் பின்னணி இசையின் சில பகுதிகளையும்தான், என்ன செய்ய… :-)

இக்காலங்களில் இந்தப் பாவி ஹான்ஸ் ஸிம்மர், அநியாயத்துக்கு உரக்க டமால்டுமீலென்றும் திடீரென்று திபெத்திய காங்க் சப்தங்களை வலுக்கட்டாயமாக உட்புகுத்தியும் சோகத்தை வரவழைத்து விடுகிறார். திரைப்படத்திற்கான பின்னணி இசையென்றால் அது பின்னணியில் தான் இருக்கவேண்டும் என்கிற அடிப்படை இலக்கணத்தை மறந்து அப்படியொரு ‘டேய், இது என் இசைடா, ப்ளடி’ உரத்த சப்தக் கலவை… மோசமாகத் துருத்திக் கொண்டு… என்னமோடாப்பா….

சரி.

பில்லி ஜோயல் எனக்கு மிகவும் பிடித்தமான பாடகர்களில் ஒருவர்.

(முடிந்தால் நீங்களும் கேட்டு – மேலும் முடிந்தால் அர்த்தத்தையும் புரிந்துகொண்டு – மகிழுங்கள்; நன்றி!)

-0-0-0-0-0-

-0-0-0-

-0-

பின்குறிப்பு: இன்று தோன்றுகிறது; அப்பாடல்களைக் குழந்தைகளுக்காக மட்டுமே பாடினேன் அல்லது ‘ஹம்’ செய்தேன் என அப்போது நினைத்துக் கொண்டிருந்திருக்கிறேன். ஹ்ம்ம்.

யாம் பெற்ற பேறு, பெருக இவ்வையகம்?

6 Responses to “டௌவ்னீஸ்டர் அலெக்ஸா: பில்லி ஜோயல் இசைத் தாலாட்டு + some blasts from the past…”

  1. Vijayaraghavan Says:

    ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே பாடல் ” லவகுசா ” படத்தில் இடம் பெற்றது என நினைவு .

  2. RC Says:

    Thanks for the morning song.. ‘Hands on the wheel’ 🙏

  3. Ramesh Narayanan Says:

    /யாம் பெற்ற பேறு, பெருக இவ்வையகம்?/
    பெறுக, ஆனாலும், ‘பெருக’-வும் மிகப் பொருத்தமே¡


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s