பகீர்! தமிழக நீராதாரங்களில் முதன்மையான மேட்டூர் அணைத்தேக்கத்தில் ப்ளாஸ்டிக் குப்பை போட்டு மாசுபடுத்திய மர்மநபருக்கு வலைவீச்சு!
May 28, 2022
தமிழக முதலையமைச்சர் முக இசுடாலிர்: “அவன் எவனாக இருந்தாலும் சரி, குண்டாஸ் சட்டம் பாயும்! இந்திய ஒன்றியத்தின் உச்சமான திராவிடமாடல் படி அவனுக்கு முட்டிக்கு முட்டி தட்டப் படும்!!“
முன்னதாக:
மாபெரும் தமிழ் எழுத்தாளரும் பசுமைப் போராளியுமான எஸ்ராமகிருஷ்ணன் அவர்கள் விடுத்த அறிக்கையில் கூறியது:
“சில தினங்களுக்கு முன்பு துபாய் அங்குயிங்கு எனச் சுற்றுலா சென்றிருந்த ஒரு கும்பல் இரட்டைக் கழிப்பறை முறையை அங்கு கண்டு விதிர்விதிர்த்ததை நாம் அறிவோம். அங்குமா சாதிப் பிரச்சினை? ஆகவே உடனடியாக, உலகப் புகழ் மிக்க திராவிட மாடல் படி, அதனையும் தமிழகத்துக்கு இறக்குமதி செய்துகொள்ள வேண்டும் என எண்ணியிருக்கிறார்கள். ஏனெனில் முதலில் சமூக அநீதியை உருவாக்கினால் தானே சமூக நீதிக்காக தனித்துவமாக அறைகூவ முடியும்?
ஆகவே, சமூக நீதியை மனதில் கொண்டு, தளராமல் தமிழகத்தை முன்னேற்றும் முனைப்பில், அந்த முறைக்கான பேடண்ட்/காப்புரிமை வைத்திருக்கும் லூலூ நிர்வாகத்தினரிடம் ஒரு ஒப்பந்தம் புரிந்துணர்வு எனப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்; இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்துப் பலசரக்குக் கடையதிபர்களும் பணிமூப்பு கொடுக்கப் படுவர் என எதிர்பார்க்கப் படுகிறது… அடுத்தமுறை ரஷ்யக் கலாச்சார மையத்தில் இதுகுறித்துப் பேசவேண்டும்.
ஆகவே – டாஸ்டாவ்ஸ்கி சொன்னதுபோல நல்லார் ஒருவர் உளறேல் என இதனைத் தொடர்ந்து பொய்யெனப் பொய்யும் மழையானது பொய்க்காமல் பொழிந்து பெங்களூர் நகரே நீரில் முழுகியது என்பது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது… டால்ஸ்டாய்க்கு இது பிடித்திருக்கும் என்பது எனக்குத் தெரியும்.
மேட்டூர் விஷயம் பற்றி எனக்குத் தெரியாது, அதுவும் அதே கும்பலுடன் தொடர்புள்ளதாக இருக்கலாம், எனக்குத் தெரியாது.”
இன்னொரு, மாபெரும் லத்தீனமெரிக்க ஸ்பெஷலிஸ்ட் தமிழ் எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களும் மேற்கண்ட அறிக்கையைத் தொடர்ந்து விடுத்த வாழ்த்துச் செய்தியில்:
“தமிழ்நாடு உருப்படாது. எதுவும் விளங்காது. கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து உழைப்பைத் தரும் மாபெரும் லத்தீனமெரிக்க ஸ்பெஷலிஸ்ட் தமிழ் எழுத்தாளருக்கு ஒரு ஆதரவையும் நல்காத, கொண்டாடாத தமிழன் இருந்தால் என்ன செத்தால் என்ன? தமிழர்கள் ஃபிலிஸ்டைன்கள்.
ஆகவே, கீழ்கண்ட வங்கிக் கணக்கில் மறக்காமல் படியளக்கவும்.”
பெரும்பேராசான் உவ்வாச:
“இதனை நான் இப்படி மூன்று வகையில் பிரிக்கிறேன். நான்கு வகைகளில் தொகுக்கிறேன். ஹாப்ஸ்பாம் அப்படித்தான் பெர்ட்ரண்ட் ரஸ்ஸலுக்குச் சொன்னார் என என் குரு நித்யாவுக்கு நான் சொன்னது நினைவுக்கு வருகிறது. அடுத்த இரண்டு நாட்களில் என் சொந்த விக்கீபீடியாவில் இதற்கான தரவுகளைத் தரவேற்றி விடுகிறோம்.
நம் ஆன்மீக மரபு என்பது என்ன? இந்த நோக்கில் நீராதாரங்களைப் பார்க்கலாம் என்றால், இரவு உணவுக்கு நீராகாரம்தான். முதலில் சமையல் செய்யவேண்டும்.
மாசுபடுத்துதல் என்பது தமிழ் சினிமாவுடன் தொடர்புடையது அன்று. மாஸ் என்பது வேறு, மாசு என்பது வேறு. மாசுக் என்பது இவற்றுடன் தொடர்புடைய இன்னொன்று. மேலே எழுதினால் கழுத்தை, சமூக ஆர்வலர்கள் அறுத்துவிடுவார்கள்.
ஆகவே, பொதுவாகவே மாசிலாமணி என்றால் என்னவாக இருக்கலாம் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன். மாசி மாதத்தில் சட்டம் இயற்றினால் அது அற்புதமாகவும் வைரத்தை ஒத்த திடத்துடனும் இருக்கும் என உதைப்பார்க்குக்கெட்டார் உரையில் இருக்கிறது என்பதுதான் உண்மை ஆனால் மாசு படுத்துபவர் எவராக இருந்தாலும் சட்டம் அவர்பேரில் பாயவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதனை வெண்மாசு என 5000 பக்கக் கட்டுரையாக எழுதிவிடுகிறேன்…”
-0-0-0-0-0-
வல்லூறார் ஜிவ்வெனப் பறந்து அருகே அமர்ந்து என்னை முறைத்து, “இஞ்சி முறைப்பா கொடப்பா” என்றார். “ஐயோ! அடப்போப்பா, டகால்ட்டிட்ட சொல்ட்டு ஒரு ஆசிரியப்பாவை வோணா அன்ப்ப சொல்றேன்’ என்றேன்…
பரவாயில்லை எனச் சொல்லி ஒரு ஆலூ-பன் அமுக்கியவர், “கிட்ட வா, ஒண்ட்ட ஒரு ரகசியம் சொல்லணும்…”
காதைத் தீட்டிக்கொண்டு, நான் கேட்டது.
“லூலூ இரட்டைக் கழிப்பறைக் கம்பெனியிடம் அவர்கள் டீல் போட்டார்களா? அந்த ஸ்கெட்சில் தான் தான் மீட்டர் போட்டார்கள். வெறும் மீட்டர் இல்ல, கிலோ மீட்டர்!”
ஆ என்றேன்.
என் வாயில் ஒரு கமர்கட்டை அமுக்கிய வல்லூறார் தொடர்ந்தார்…
“அந்த கும்பலில் இருந்த ஒரு ஆசாமிதான் மேட்டூர் நீர்த் தேக்கத்தை மாசுபடுத்திய நபர். அவ்ளோதான் மேட்டர்.”
எனக்கு வியர்த்து விட்டது.
“அப்ப, எப்ப அவரைக் கைது செய்யப் போறாங்க?”
பதில் சொல்ல மறுத்த வல்லூறார், திடுதிப்பென்று சொல்லிக்கொள்ளாமல் ஜிவ்வெனக் கிளம்பி விட்டார்.
-0-0-0-0-
விஷயம் சூடேறியதால், மேலும் அது, சட்டம் ஒழுங்கு மாசுகட்டுப்பாடு தொடர்பானதால், முதலையமைச்சர் இசுடாலிர் மக்களுக்கு விடுத்த அறிக்கையில்:
“கடந்த ஒருவருடமாக எங்கள் கழக ஆட்சி திராவிடமாடலில் நடத்தும் மிக சிறப்பான அரசின் பொறுமையைச் சோதிக்க சில குல்லுக பட்டர்கள், ஆரியர்களின் வேட்டை நாய்கள், காவிகள் முயல்கிறார்கள். ஆனால் எங்களிடம் வேண்டுமளவு திராவிட ஸ்டாக் இருக்கிறது, வேண்டுமானால் மேலதிகமாகக் கொள்முதல் செய்து கொள்ளவும் சமூகநீதி இடமளிக்கிறது.
அதிகபட்சம் ரூ200/- + பிரியாணி + ஒரு குவாட்டர் கொடுத்தாலே ஒரு நாள் முழுதும் குரைக்க எங்களுக்கு களப்பணியாளர்கள் இருக்கிறார்கள். இப்படை தோற்கின் எச்சிரங்கு வெல்லும் என நெஞ்சுக்கு நீதியில் என் தலைவர் கலைஞர் எழுதியிருப்பதை நான் மறக்கவில்லை.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், எங்கள் டப்ளிவாட்ச்ஃபுல் இருகண்காணிப்பாள நிதியமைச்சரின் சீரிய வழிகாட்டுதலில் இந்திய ஒன்றியத்தின் பொருளாதாரத்தை விட அதிகமான அளவை எட்டிவிடுவோம் என்பதை அறிந்த சங்கிகள் சட்டம்-ஒழுங்கைக் சிதைக்கத் தொடர்ந்து முனைகின்றனர் எனவும் அறிவோம்.
ஓன்றியத்து சங்கிகளின் சதிவலையில் ஒன்றுதான் இந்த மேட்டூர் மாசுபடல் விவகாரமும்.
எங்கள் காவல்துறை, திராவிட மாடலின் எதிரிகளை வெகு தீவிரமாகக் கண்காணிக்கிறது, புலன் விசாரணையும் தொடங்கி விட்டது.
இந்தச் சதியில் அந்த மூன்று சதவீதத்தினர் இருக்கிறார்களா என்ற கோணமும் ஆராயப் படும்.
தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகளும் மேட்டூர் நீர்த்தேக்கத்துக்கு விரைந்திருக்கின்றனர்.
அங்குள்ள கண்காணிப்புக் கேமராக்களின் வீடியோக்கள் பதிவு செய்திருக்கும் காணொளிகளும் இந்தக் கொடுங்குற்றத்தைக் கூடிய விரைவில் புலன்விசாரணை செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவும்.
என் உடன்பிறப்புகளுக்கும் எங்களை வாழ்வாங்கு வாழவைக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களுக்கும் ஒரு உறுதி மொழியைக் கொடுக்கிறேன்: குற்றவாளி எவனாக இருந்தாலும் சரி, அவன் மீது இரவு ஒன்பது மணிக்கு குண்டாஸ் சட்டம் பாயும்! இந்திய ஒன்றியத்தின் உச்சமான திராவிடமாடல் படி அவனுக்கு முட்டிக்கு முட்டி தட்டப் படும்!
திராவிட மாடல் வாழ்க! ஒன்றியம் பல்லியமாக மாறும் நாள் வந்தே தீரும்!!”
-0-0-0-0-0-
தமிழ்ச் சமூகம் உட்பட ஒன்றிய சமூகம் ஈடாக, ஏன் உலகம் முழுவதற்கும் மானுடம் வாழ, தழைக்க – நம் வாழ்வாதாரங்கள் முக்கியம். இவற்றில் மிகமிக முக்கியமானதொன்று நீராதாரம்.
அதனை ஒருவர், கண்டகண்ட ப்ளாஸ்டிக் குப்பையையும் விட்டெறிந்து, தேவை மெனக்கெட்டு மாசுபடுத்துகிறார் என்பதற்கு அப்பாற்பட்டு, தன் தவற்றுக்கு வருந்தாமல், உடனடியாக அதனைச் சரிசெய்யாமல் இருப்பது, அதுவும் அதுவொரு நகைச்சுவை போலச் சிரிப்பது துயரத்துக்கு உரியது.
இதனுடைய மூலம்: https://twitter.com/DMKkills/status/1529008892570574850
மனு நீதி (ஐய்யய்யோ மன்னிக்கவும், ‘சம நீதி’ என்பதே சரி!) சோழனின் வம்சம் வந்தவர்களாகக் காட்டிக்கொள்ளும் திராவிடர்கள் இந்தக் குற்றம் செய்தவரைக் கண்டுபிடித்து, தண்டனை கொடுத்து ஆவன செய்வார்கள் என்பது திண்ணம்…
எது எப்படியோ.
இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இக்குற்றம் நடக்கநடக்க எடுக்கப் பட்டிருக்கும் காணொளிகள் பகீரப் பட்டுள்ளன எனும் பகீர் செய்திகள் வந்தபடி இருக்கின்றன. இவை சரியானவை, அல்லது மார்ஃப் செய்யப் பட்டவையா எனத் தெரியவில்லை.
இதனை நம் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ட்கள் அரசு/காவல்துறை அதிகாரிகளிடம் காண்பித்தபோது… அவர்கள் சொன்னது,
“மாண்புமிகு குற்றவாளியைச் சரியாகப் பார்க்கமுடியவில்லை; படம் தெளிவாக இல்லை, பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாரும் வடக்கத்தியாட்கள் போலவும் ஆரியர்கள் போலவும் தெரிகிறார்கள். தீவிரமாகப் புலன்விசாரணை செய்கிறோம். கூடிய விரைவில் நல்ல செய்தியை உங்களுக்கு அளிக்கிறோம்…”
திமுக திராவிட உடன்பிறப்பும் ஒரு மூத்த தலைவருமான ஒரு மாண்புமிகு அமைச்சர் சொன்னது:
“மாண்புமிகு குற்றவாளி ஒரு பிஹாரி போலத் தெரிகிறது. பிடித்து மாநிலம் கடத்திவிடுவோம், அல்லது என்கவுண்டர் இருக்கவே இருக்கிறது…”
நாம்தமிழர் அமைப்பின் தலைவர் சீமான்:
“இதற்காகத் தான் நாங்கள், இம்மாதிரி வடவர்களின் தமிழக ஆதிக்கத்தை மட்டுறுத்த ஒரு ‘இன்னர் லைன் பர்மிட்’ தேவை என்கிறோம்.”
-0-0-0-0-0-
இதைத் தொடர்ந்து தமிழகக் கழக திராவிட உடன்பிறப்புகள் ‘கோ பேக் பான்பராக் வாய பானீபூரி நார்த்தீஸ்’ எனச் சமூக வலைத்தளத்தில் ட்ரென்ட் செய்தனர்.
#GoBackPaanparaagMouthPaanipuriSellerNorthies
சுபம்.
—