‘பாரதத்தின் ஜப்பானியப் பேராசிரியர் நிக்குமாநிக்காதா‘ ஜெயமோகன் அவர்களுக்கு மூன்று கோரிக்கைகள்…
June 30, 2019
வரவர ஜெயமோகன், எஸ்ராமகிருஷ்ணன் போலானாராம், என்ன சொல்வது, சொல்லுங்கள்…
ஜப்பானுக்குப் போகிறார் நம் கல்யாணராமன். முன்னமேயே ஜப்பான்குறித்துக் கோனார்நோட்ஸ் கொஞ்சம் படித்திருக்கிறார். அங்கு சிலபல விஷயங்களைப் பார்க்கிறார்.
…அவ்ளோதான்! உடனடியாக, தயாராகக் காத்திருக்கும் கற்பனைக்கோவேறுகழுதை மேல் ஆரோகணித்து, தனக்கு உவப்பான சித்திரங்களை விரிக்கிறார். தம்முடைய இக்கால வழமையேபோல, ஆடித்தள்ளுபடியில் அட்ச்சிவுடுகிறார். ஆச்சரியம். காலத்தின் கோலம்.
-0-0-0-0-0-
ஒரு இடைக்காதை: அண்மையில், மெத்தப்படித்த (இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட், பாரீஸின் ஸர்பான் பல்கலைக்கழகங்களில் படித்திருப்பவர், தற்போது தெற்கத்தி ஃப்ரான்ஸின் லூர்த் Lourdesவாசி) ஒரு 55+ வயது வெள்ளைக்கார மாது, (நம் பெங்களூரின் ஒரு பணக்காரப் பள்ளிக்கூடச்) சிறுவர்களுக்கு ஏதோ சமூக(!)அறிவியல்(!!) தொடர்பாக விசேஷ பாடம் நடத்துகிறேன் என வந்திருக்கிறார்.
அவர் வெள்ளைக்காரர், தங்கநிறத் தலைமசுர்; அதிதீவிர பெண்ணியவாதி + சமூக(!) அறிவியல்(!!) பின்புலம் + லிபரலோதிலிபரல் இடதுசாரிச் சார்புவேறு. ஆக, கேட்கவாவேண்டும், அவருக்குச் சென்ற இடமெலாம் சிறப்பு, விழுந்துவிழுந்து அவருக்கு உபசாரம் செய்துகொண்டிருக்கிறார்கள், என்ன செய்ய!
பாவப்பட்ட பாரதத்துக்கு, அவர் வந்து எழுந்தருளியிருக்கும் பாக்கியம், முதல்முறையாக இந்த வருடம்தான் கிடைத்திருக்கிறது. அவரைச் சில விவகாரங்களுக்காக அழைத்திருக்கும் அன்பர்களுக்குப் புல்லரிப்பு.
லிபரல் தரம்(!) நிறைய்ய்ய்ய்ய்ய. நிறைகுடம்குடமாகப் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. ஆக – ஜெய்பூர் லிட்டரரி ஃபெஸ்டிவல்காரர்கள், தமண்டூ தினசொறிகள் இவரை வருடாவருடம் அவர்களுடைய விழாயெழவுகளுக்குக் கூப்பிடலாம். நல்ல கேளிக்கை.
…அன்பர்கள் இவரை ‘மரியாதை நிமித்தம்’ குடிக்க(!)/சாப்பிட ஒரு விருந்து எழவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால், இந்தமாதிரி விருந்தோம்பல் விருந்தூம்பல் விவகாரங்களை நான் பொதுவாகவே தவிர்ப்பவன் – பூர்வாசிரமங்களில் இம்மாதிரி விஷயங்களின்போது பணிவுடன் இருக்க ஏகத்துக்கும் சிரமப் பட்டிருக்கிறேன். ஆனால் இந்தமுறை என் நண்பர்கள் தொந்திரவு; . ‘…it has been a while, and ram, surely you can provide, meaty & sparkling conversations?’ – முகஸ்துதிக்கு மயங்காதோர் யார்? மேலும் எனக்கும் கொஞ்சம் சாருநிவேதிதா தொத்துவியாதி வந்துவிட்டதுபோல; வ்வோத்தா ஃப்ரான்ஸ்மோகம் பீடித்துவிட்டதோ என்ன எழவோ!
ஆக, மனதறிந்து தவற்றைச் செய்தேன். வூட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு மைக்ரொப்ரூவரி (“என்னுடைய காக்கா ப்ரூஇன்ஸ்டன்ட் காப்பியகம்” ©எஸ்.ராமகிருஷ்ணன், 2019) சென்று அந்தச் சாராயக் கடையில் பெருந்தொந்தியாளர்கள் இன்னமும் தங்கள் பிள்ளைத்தாச்சி நிலையை முன்னேற்றியபடி இருப்பதைப் பார்த்து சங்கடத்துடன்… நெட்டி முறித்துக்கொண்டு… கொண்டு… கொண்டு… விரவியிருக்கும் புளிப்பு நாற்றத்தையும் ஏப்பங்களையும் சகித்துக்கொண்டு…
…உணவின் போது, ஒரேயடியாக வாய் ஓயாமல் எல்லாவற்றைப் பற்றியும் (‘ஹிந்து மதவெறி’ உட்பட! இந்தியாவை மதவாதமற்ற நாடாக மாற்றுவதற்கான ஊக்கபோனஸ் பரிந்துரைகள், சகிப்புத்தன்மைக்கான மகாமகோ அறிவுரைகள்!) அப்படியொரு பேச்சுப் பேசினார் அம்மணி! தன் பேச்சில் சற்றும் மனம்தளராத விக்ரமி அவர்!
…பக்கவாத்தியமாக, என் கூறுகெட்ட நண்பர்களின் ஆமோதிப்பும் புளகாங்கிதச் சிலாகிப்பும் – கேட்கிறார்களோ இல்லையோ புரிந்ததோ குழம்பியதோ, நம் பழுப்புத் தோலிய ஆசாமிகள் கொஞ்சம் ஓவராகவே விருந்தூம்பல் செய்பவர்கள்… இத்தனைக்கும் (என்னையும் அம்மணியையும் தவிர) பிறருக்கெல்லாம் மூளையின் ஐக்யூ அளவு 200க்கும் மேலிருக்கும். புத்திசாலிகள்தாம்.
ஆனால், எனக்குத்தான் பொறுக்கவேமுடியவில்லை, மேலும், வயதுக்கேற்ற விவேகமும் நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்து அகன்று பிரச்சினைகளைக் கடந்துவிடும் மனப்பாங்கும் இல்லை என்பதையெல்லாம் நான் சொல்லித்தான் உங்களுக்குப் புரியவேண்டும் என்பதுமில்லை. ஆக, ரத்த அழுத்தம்வேறு.
அவர் உதிர்த்த மணிகளில் ஒன்று: “உங்கள் இந்திய உணவும் இத்தாலிய உணவு போலவேதான் இருக்கிறது!”
உடனடியாக எனக்கு ரத்தவோட்டத்தில் அட்ரினலின் சுமார் ஒரு லிட்டர் சுரந்துகலந்து, அற்பமுட்டாளியமான இதையாவது எதிர்கொள்ளவேண்டும் எனப் பரபரத்தேன். ஆனால் அருகில் அமர்ந்திருந்த என்னருமை நண்பன், தன் ஷூ காலால், என் பாதத்தை ஒரு மிதிமிதித்தானே பார்க்கலாம்! :-(
சர்வ நாடியும் ஒடுங்கிவிட்டது எனக்கு, பாவி.
ஆகவே, “நீங்கள், எப்படி இதைச் சொல்கிறீர்கள்?’ என மட்டுமே நம் தெராவிட இசுடாலிர் போலவொரு மலச்சிக்கல் புன்னகையைப் பூத்துக்கொண்டே, அம்மணியாரிடம் கேட்டேன். (பின்னர், பதிலுக்கு நானும் அவன் காலை மிதித்தேன், ஆனால் வெறும் செருப்புக்காலால், அந்தப் பாவி போட்டுக்கொண்டிருந்தது ஹஷ்பப்பி ஷூ! விளைவு திருப்திகரமாக இல்லை.)
அம்மணியின் விடை: “நான் தங்கியிருக்கும் ஹோட்டலில் சென்ற மூன்று நாட்களாக காலையும் மாலையும் பாஸ்தா, ப்ரெட், நூட்ல்ஸ், பீட்ஸா. பள்ளியில் மதியவுணவும் ரிஸோத்தோ, பாஸ்தா. ஆகவேதான்! நான் சொல்வது சரிதானே?”
இன்னா குண்டுதெகிர்யம்!
இப்படிக் கேட்டுவிட்டு, இப்படி இந்தியாவின்மீதான இத்தாலியப்பண்பாட்டுத் தாக்கத்தைப் பற்றிய ‘வரலாற்றுக் காரணிகளை’ (‘மார்க்கோபோலோ!’ ‘பண்டைய ரோமானியர்களுடன் வர்த்தகம்!!’) முஸுரிஸ் மசுரிஸ் என எட்த்துவுட்டார். (குடித்துக்கொண்டே அவர் வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என நான் நினைத்த நேரத்தில், அவர் விக்கிபீடியா பார்த்திருக்கிறார்! என்ன ஞானம்!!)
மேலதிகப் புல்லரிப்பு. நல்லவேளை, அவருக்கு நம் ஸோனியாகாந்திய இத்தாலியத் தாக்கத்து பற்றித் தெரிந்திருக்கவில்லை! இல்லையேல், ஹிந்துத்துவா வளர்ச்சிக்கும், இந்தியப் பொருளாதாரத்துக்கும், ஏன் நம் கூறுகெட்ட திராவிடத்துக்குமேகூட ஒரு இத்தாலியக் காரணத்தைக் காட்டி, என் மனைவியின் தாலியை அறுத்திருப்பார்!
மண்டையில் அடித்துக்கொண்டு எதற்கு இதனைச் சொல்கிறேன் என்றால், வெள்ளைசமூகஅவியல் அம்மணி பாரதத்தின் விதம்விதமான உணவுப்பாரம்பரியங்களுக்குச் செய்ததை, ஜெயமோகன் அவர்கள் ஜப்பானுக்குச் செய்திருக்கிறார்! அவ்ளோதான்!
இப்படியே… … ஏதாவது பேராசிரியர் நிக்குமாநிக்காதா என யாராவது ஜப்பானிய சமூகவியல் மானுடவியல் வகையறா சொறியியல் ஆராய்ச்சியாளர், ஃப்ரான்ஸுக்குப் போய் இம்மாதிரி ஃப்ரான்ஸ் பற்றி அட்ச்சிவுட்டால், சரித்திரச் சுழற்சி, சனியன், ஒரு சுற்றுச் சுற்றி முடிவுக்கு வரும். தண்டம்.

இடைக்காதை குறித்த பிலாக்கணம்: …ஏண்டா பாவிகளா, ஸ்பார்க்லிங் கான்வர்ஸேஷன் என்று கூப்பிட்டு, அந்த அம்மணியைக் டார்டாராகக் கிழிக்கக்கூடவேண்டாம், வெறுமனே, அவருடைய சமூகவியல் அதிஉளறல்களைக் குறித்த நியாயமான கேள்விகளைக் கூட என்னைக் கேட்கவிடவில்லையே என்றேன். அவர்கள் பதில்: நீதான் யாருடமும் பேசாமல் தொடர்பும் கொள்ளாமல் முனிவர்(!) போலிருக்கிறாய், நாங்களாவது உனக்கும் கொஞ்சம் கேளிக்கைக்குரிய வாய்ப்புத் தரலாமே என்றுதான்!
சரிதான். பொய்யென்று பிரத்தியட்சமாகத் தெரிந்தாலும், புளுகுப் புகழ்ச்சியெழவில் கிடைக்கும் இன்பம்ஸ்ஸே தனிதான்!
-0-0-0-0-0-
எஸ்ராமகிருஷ்ணன்/சாரு நிவேதிதா போன்றவர்கள் எழுதுவதில் வரிக்கு வரி நகைச்சுவை – பிரத்யட்சமாகத் தெரியும், அவர்கள்தம் அறியாமையும் அமோகமாக வெளிப்படும். ஏனெனில் இவர்கள் தொழில்முறையில் பீலாவுடுபவர்கள்.
மாறாக, ஜெயமோகன் எழுத்துகளில் வரிக்குவரி அப்படியே நகைக்கத் தக்கவகையில் இருந்தாலும் – அவரிடம் ஒருவிதமான ஸோஃபிஸ்டிகேஷன் போன்ற ஒருவகை ஜோடனைநுட்பத்தன்மையும் இருக்கிறது – இது தொடர்பாக அவர் தொடர்ந்து அயராமல் எழுதி வளர்த்துக்கொண்டுள்ள கலைத்திறமை (+அவருடைய நகைச்சுவை உணர்ச்சியும்) தான் அவருடைய மூலதனம். ஆகவே, ஒரு பிரமையிலேயே அவரைத் தொடர்ந்து படித்து ஏதோ அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது என நம்மை நாமே ஏமாற்றிப் புளகாங்கிதம் அடையும் வாய்ப்புகள் அதிகம்.
இந்த ஜப்பானியக் கட்டுரை (இந்த வரிசையில் பல கட்டுரைகள் வந்திருக்கின்றன – ஆனால் நான் இதுவொன்றைத்தான் படித்தேன்; ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற அளவில்!) என்பதும் அப்படித்தான்; இதையும் எஸ்ரா சாரு கட்டுரைகள் போல வரிக்குவரி எடுத்துப் பொழிப்புரை கொடுக்கமுடியும்.
ஆனால், ஓரிரு மிகவும் அதிசயிக்கத்தக்க எடுத்துக்காட்டுகளுடன் நிறுத்திக் கொள்கிறேன்; அவை போதும். ஒரு பானை பயணக்கட்டுரைச் சோற்றுக்கு ஒரு சோற்றுப் பத்தி பதம்.
ஸாமுராய் வாட்களை, இவர் ‘நிஞ்சா’ என்கிறார். வாட்கள் வேறு, வாளாவிருக்காமல் ஒற்றுவேலை செய்யும் தொழில்முறை வீரர்கள் வேறு. நிஞ்சா குஞ்சா என இப்படியா அட்ச்சிவுடுவது? வாட் ஈஸ் திஸ், ஜெயமோகன்!
ஜெயமோகனின் குண்டுதெகிர்யம் வியக்கவைக்கிறது. தற்போது பெரும்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கோட்பாடுகளின் படி, ஜப்பானியர்களின் ஆதிகாலம் என்பது – பலபத்தாயிரங்களாண்டு முன்பே அங்கே போயமர்ந்த ‘ஐனு’ நாடோடிகளும், பின்னர் ‘ஜொமொன்’ நாகரீகத்தவர்களும் பின்னர் அங்கு சேர்ந்த கொரியப்பகுதியின் யயொய்களும் கலந்து உருவானது.
ஒருவிதத்திலும்கூட, சீனாவின் மைய நிலப்பகுதியில் இருந்து, தற்கால ஜப்பானியர்களின் மூதாதைகள் குடிபெயர்ந்ததாக ஜெயமோகன் உருவாக்கும் கதையாடல்கள், சரியேயில்லை; மாறாக அவரிடம் பிரத்யேகமான அகழ்வாராய்ச்சித் தகவல்கள் இருந்தால், தாராளமாகவே துறைவல்லுநர்கள் அவர்கள் கருத்தை மாற்றிக்கொள்ளத் தயாராகவே இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் கதையடிப்பவர்கள் அல்லர், அறிவியல்பூர்வமாகச் சிந்திப்பவர்கள்.
என்னப்பா ஜெயமோகன், ஏனப்பா இப்டீ அட்ச்சிவுடுகிறீர்?
ஜெயமோகன் சொல்வதற்கு மாறாக, ஜப்பானில் மூச்சுமுட்டவைக்கும் அளவில் பலப்பல பௌராணிகக் கதைகள் இருந்திருக்கின்றன. இதற்கு, பலப்பல எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கமுடியும். ஆனால் ஒரேயொரு பரவலாக அறியப்படும் எடுத்துக்காட்டைக் கொடுக்கிறேன்: ஹெய்கெ மொனொடகரி (ஹெய்கெயின் புராணம்/கதை/இதிஹாஸம் என முழிபெயர்த்துப் புரிந்துகொள்ளலாம்) – இதை வைத்து நம் திருவிளையாடல் என்டிராமராவ் சின்னப்பதேவர் போல ஏகப்பட்ட ஜப்பானியத் திரைப்படங்கள் வந்திருக்கின்றன வேறு!
Please read the Othisaivu post on the Legend of Matajuro.
ஜப்பான் குருதி கொந்தளிக்கும் நாடாம். கடானா நிஞ்சாக்களால் உருவாக்கப்பட்டதாம்! கடவுளே! இதனைக் கேட்பாரில்லையா! குரசாவா காராசேவு எனக் கொறித்துக்கொண்டே ரெண்டு படம் பார்த்து அருங்காட்சியகம் சென்று நாலு வாட்களைப் பார்த்தால்… இதுதாண்டா உளறாறு!
குங்க்பூ/கங்க்-ஃபு சுத்த சுயம்பு சீனாக்கார விஷயம். கராத்தே எழவும் ஒரு கங்க்-ஃபு பிரிவு எழவிலிருந்து விரிந்ததுதான். (ஜப்பானின் சொந்த மறவர்கலை என்றால், ஜூடொ. சிலபல வகை வாட்போர்முறைகளும் அப்படித்தான்)
-0-0-0-0-0-
ஏனிப்படிச் செய்கிறார் இவர்? அவருடைய பலநாள் வாசகர்களை இப்படியா கூனிக்குறுக வைப்பார்? :-(
நான் சொன்னால் நம்பவேண்டாம் – ஆனால் இவர் கொடுத்திருக்கும் ஒவ்வொரு தகவலும், கருத்தும் – மகாசோகம், அதிகபட்சம் அரைகுறைத்தனம். :-) நீங்களே அவற்றைச் சரிதவறுபார்த்துக்கொள்ளலாம். ஆனால், நான், இத்தோடு இதனை விடுகிறேன்
=0=0=0=0=0=
அவர், கணையாழிக்கும் முன், கண்டகண்ட புனைபெயர்களில் 1980களில் இருந்து ‘ஜனரஞ்சக ரீதியில்’ கமர்ஷியல் குமுதவிகடன்களிலெல்லாம் வெள்ளோட்டமாக எழுத ஆரம்பித்ததிலிருந்து – ஜெயமோகன் அவர்களின் நெடுநாள் வாசகனாக, அவருடைய சில ஆக்கங்கள் குறித்து மகிழ்ச்சியும், திருப்தியும், ஏன், பெருமிதமும் கொண்டிருப்பவனாக (மட்டுமே!) அவர் சன்னிதானத்துக்கு, மூன்று கோரிக்கைகளை வைக்கிறேன்.
1. தயவுசெய்து, தொடர்பற்ற மூன்றாம்மனிதனும் தடிமன்தோலும் உடையவனான எனக்கே, படிக்கும்போது கூச்சம் தருமளவுக்கு எழுதப்படும் புளகாங்கித வாசகர் கடிதங்களைப் பதிப்பிப்பதை முடிந்தால் தவிர்க்கவும். அவை எழுதப்படும் தன்மையும், அவற்றை எழுதும் வாசகர்களின் மனோநிலையும், அவர்கள் படிப்பறிவும், நுகரும் தன்மையும் அசமனமும் அசமஞ்சமும் நிறைந்தவை என, மேலோட்டமாகப் பார்த்தாலே தங்களுக்குத் தெரிய வரவில்லையா? :-( ஒருவேளை அவர்களைக் கிண்டல் செய்வதற்காக அவற்றையும் பதிவு செய்கிறீர்களோ?
2. இந்த மானாவாரி ஜப்பான் பெட்பான் வகை அட்ச்சிவுடல் விஷயங்களில், எஸ்ராமகிருஷ்ணனாதிகள் அளவுக்கு உங்களைத் தாழ்த்திக் கொள்ளக்கூடாது. பெரிய சன்னிதானத்துக்கு அட்ச்சிவுடல் என்பதும் அடிப்படை உரிமை என்றாலும், தாங்கள் சஞ்சாரம் செய்யவேண்டிய பகுதிகள் சிறிதாவது மேட்டுப் பிரதேசத்தில் இருக்கவேண்டாமா? :-( :-(
3. எஸ்ராமகிருஷ்ணன், ‘இதயம் பேத்துகிறது’ மணியன் போன்றவர்களும் ஜப்பான் சென்று இம்மாதிரியே எழுதினார்கள். ஜப்பான் என்ன பாவம் செய்தது? அது ஸாமுராயே நிஞ்சாவே டொஷிபாவே மாங்காவே மாம்பழமே தெய்வமே என அதுபாட்டுக்கு, இருப்பின் ஜென் அவஸ்தையில், ஹைக்கூவாக இருக்கிறது – ஆகவே அதனை விட்டுவிடவும். பாவம், பிழைத்துப் போகட்டும். :-( :-( :-(
பின்குறிப்பு:
…ஆகவே — — இனிமேலிருந்து ஜெயமோகன் எழுதுவது ஒன்றுவிடாமல் அனைத்தும், நிஜத்துக்கே துளிக்கூடத் தொடர்பில்லாத, ஜோடனைநுட்பம் மிகுந்த புனைவுகளே என எடுத்துக்கொள்ளப் போகிறேன்.
ஆனால், அவருடைய பிரமைபிடித்த வாசகர்கள் நிலைமையை நினைத்தால் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது; என்ன செய்வது, சொல்லுங்கள்?
Of course, this too shall pass, truly and verily… :-)
—
June 30, 2019 at 14:59
// ஸாமுராய் வாட்களை, இவர் ‘நிஞ்சா’ என்கிறார். வாட்கள் வேறு, வாளாவிருக்காமல் ஒற்றுவேலை செய்யும் தொழில்முறை வீரர்கள் வேறு. நிஞ்சா குஞ்சா என இப்படியா அட்ச்சிவுடுவது? வாட் ஈஸ் திஸ், ஜெயமோகன்!
No. Jemo is very correct. These swords are called Ninja. Don’t blame for the sake of blaming.
June 30, 2019 at 16:04
ஐயா, றொம்ப ஸரி.
எனக்கும் சாதா ஸாமுராய் வாட்கள் சிறிது வளைந்திருப்பதும் நிஞ்சாக்கள் உபயோகித்த வாட்களில் சில (சில மட்டுமே – ஏனெனில் அவை மறைக்கப்படத் தோதாக இருக்கவேண்டும்!) நேராக இருப்பதும் தெரியும்.
நிஞ்சாக்கள் அடிப்படையில் ஸாமுராய்களே. ஆனால் மேலதிகமாக ஒற்றுவேலை உள்ளிட்ட நிழலான சாகஸங்களையும் செய்தவர்கள். தேர்ந்த புகைஷாக்கள்.
இந்தச் சிறிய வாட்கள், ஷினொபிகடனா / நிஞ்சாகென் / நிஞ்சாடொ எனப் பலபெயர்களில் வழங்கப் பட்டன. வெறுமனே ‘நிஞ்சா’ என்று சர்வ நிச்சயமாக அல்ல.
மேலும் பாருங்கள்! ‘ராமர் வில்’ என ஸ்ரீராமரின் வில்லைக் குறிப்பிடுகிறோம். வெறுமனே ‘ராமர்’ என்று குறிப்பிட்டால் அது ராமர் வில்லைக் குறிக்காது – சாட்சாத் அந்த ஸ்ரீராமனே என் கனவில் வந்து அல்லது எனக்கு நேரடியாகத் தரிசனம் கொடுத்து – “இப்படித்தான் ஜெயமோகன் அட்ச்சிவுடுவார், நீ ஒத்துக்கொண்டே தீரவேண்டும்” என ஒரு வில்/உயில் எழுதித்தந்தால்கூட அது பொருட்படுத்தக்கதல்ல.
ஆகவே ‘நிஞ்சாவின் வாள்’ என்பதைக் குறிக்கக் குறைந்தபட்சம் நிஞ்சாகென் எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக அவர் ‘நிஞ்சா’ என்று வெறுமனே குறிப்பிட்டால் அது ஆட்டோமெடிக்காக வில்லாகிவிடாது. மன்னிக்கவும், வாளாகி வள்ளென்று விழாது!
அவர் இப்படியெல்லாம் அட்ச்சிவுடுவதற்கு உதாசீனம்+அவசரப் பிழை போன்றவை காரணங்களல்ல. மாறாக, ‘நான் எழுதுவதுதான் சரி! நான் தான் பண்பாட்டின் மனச்சாட்சி’ எனும் பிரமையும் மிகைச்சுயமதிப்பீடும் தான்.
ஏன் இப்படி, உங்களுக்குத் துளிக்கூட அறிமுகமில்லாத விஷயங்களில் விக்கிபீடியா பார்த்துவிட்டு அசிங்கமாக வக்காலத்து வாங்குகிறீர்கள்?
உங்களுக்கோ உங்கள் ஆசானுக்கோ இதெல்லாம் தேவையா?
பின்குறிப்பு: சரி. அப்போது பிறவிஷயங்களில் பெரும்பேராசான் அட்ச்சிவுட்டிருக்கிறார் ஒப்புக்கொள்கிறீர்களா?
June 30, 2019 at 21:16
அன்புள்ள ராமசாமி அவர்களுக்கு,
Types of Japanese Swords An Exclusive Guide என்று தலைப்பிடப்பட்ட, பின்வரும் லிங்கில் உள்ள கட்டுரையில்
Ninja or ninjaken is a Japanese sword used by the Shinobi class of feudal Japan என்று குறிப்பிடப்பட்டுள்ளதைப் பார்த்தேன் ஒருவேளை சிறிய வட்டத்தில் அவ்வாறு நிஞ்சா வாட்களையே நிஞ்சா எனக் குறிப்பிட்டிருப்பார்களோ?
https://www.katanasale.com/blogs/katanasale/types-of-japanese-swords-an-exclusive-guide
அன்புடன்,
கணேஷ் பெரியசாமி.
July 1, 2019 at 06:43
அன்புள்ள கணேஷ், வணக்கம். தேவை மெனெக்கட்டுத் தேடிக்கொடுத்த தகவலுக்கு நன்றி. (தாங்கள் ஜெயமோகன் அவர்களின் வாசகராக இருந்தால், என்னைத் திட்டாமல் பின்னூட்டம் இட்டதற்கு மேலதிக, என் ஆச்சரியம் கலந்த நன்றி!)
சிலவிஷயங்களை விஸ்தரிக்க விருப்பம்.
1. ஷினொபிகடனா / நிஞ்சாகென் வாட்கள் பற்றி முழ நீளத்துக்குப் பேச்சுக்கள் இருந்தாலும், கடைகளில் ‘பழமை வாய்ந்தவை’ எனக் கிடைப்பவை 20ஆம் நூற்றாண்டில் சந்தைக்காகத் தயாரிக்கப் பட்டிருப்பவையே.
2. இந்த நிஞ்சா வாட்கள் குறித்துப் பெரிய அளவில் மானேதேனே கலந்து பரப்புரை செய்தவர்களான மஸாகி ஹட்ஸுமி, ஸ்டீஃபன் ஹேய்ஸ் போன்றவர்களின் புத்தகங்கள்+ பின் வந்த நிஞ்சாகுஞ்சா வகைத் திரைப்படங்களுக்குப் பின்னர்தான் இந்த நிஞ்சாகென் வாள் பற்றி வெளியில் தெரியவந்தது. அதுவும் 19ஆம் நூற்றாண்டு வரை, இந்த வாள் இருந்ததற்கு ஒரு வரலாற்றுபூர்வமான, காத்திரமான சான்றுகூட இல்லை. (ஜப்பானியர்கள் நிறைய்ய்ய்ய கை ஓயாமல் எழுதியிருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளவும்)
3. இந்த மஸாகி ஹட்ஸுமி, நிஞ்சா பரம்பரையில் வந்தவர் என முழ நீளத்துக்கு வம்சாவளியை வெளியிட்டிருக்கிறார். ஏறத்தாழ இவரால்தான் பலப்பல கதையாடல்கள், நிஞ்சாகஞ்சா ‘தொன்மங்கள்’ எனப் பல வெளிவந்தன. உலகத்துக்கு அதிமனிதர்கள், வீரசாகஸங்கள் என்றாலே வெல்லம் வேறு!
அதுவும் ஜப்பான் ஜென் டர்புர் நள்ளிரவு கும்மிருட்டு கறுப்பு உடை கூர்வாள் எம்ஜிஆர் (1::n) வகைச் சண்டை, என்றெல்லாம் இருந்தால் கேட்கவாவேண்டும். பொன்னியின்செல்வன் தொடர்நாவலில் வரும் வீரபாண்டியனின் ஆபத்துதவிகள், உண்மையிலேயே நிஞ்சாகுஞ்சாகஞ்சாக்கள் என நம் பேராசான் அட்ச்சிவுடாமல் இருப்பதற்கு நாமெல்லாம் கொடுத்து வைத்திருக்கவேண்டும்
4. அளவெடுத்துத் தைத்த கனகச்சித உடை, கண்மட்டும் இடுக்கில் தெரியும் கறுப்பு அங்கி, தீவிரக்கொடூரக் கண், டுப்பாக்கி, கத்தி, சுத்தி என விரிந்த ஹாலிவுட் புல்லரிப்பு (ஆகவே தமிழ் சினிமா, அலக்கியம்) வகைப் பார்வைக்கு, மஸாகி ஹட்ஸுமி காரணம் என்றே சொல்லலாம்.
5. இதே மஸாகி எழுதிய Ninjutsu, history and tradition எனும் 1981 புத்தகத்தில், 13ஆம் பக்கத்தில் சொல்லியிருப்பதைப் பாருங்கள். இந்த ஆசாமியும் நிஞ்சாவாள் அல்லது நிஞ்சாகென் எனத்தான் குறிப்பிட்டிருக்கிறார்.

6. தாங்கள் கொடுத்திருக்கும் சுட்டி ஒரு இணையக் கடைவிரிப்பாளப் பின்புலம் கொண்டது. அதன் நம்பகத் தன்மை குறைவு. உங்கள் ஹேஷ்யத்தை ஹேஷ்யமாக எடுத்துக்கொள்கிறேன். வாய்ப்பேச்சில் அப்படி இருக்கலாம் எனப் பொதுவாகச் சொல்லலாம் – ஆனால், ஐயா அதுவும் இல்லை.
7. ஜோடிக்கப்பட்ட வாய்ப்பேச்சு ஒருபோதும் (தமிழ் அலக்கியப் புலம் தவிர) தரவாக ஒப்புக்கொள்ளப் படமாட்டாது. ‘மூத்தோர்’ சொல் வார்த்தை எப்போதுமே அமிர்தம் அல்ல. ஏனெனில் அது பெரும்பாலும் டகீல் அட்ச்சிவுடலாகத்தான் இருக்கிறது. என்ன செய்வது சொல்லுங்கள்!
மறுபடியும், தாங்கள் தகவல் கொடுத்துப் பின்னர் கேள்வி கேட்டதற்கு நன்றி. இதற்கு மேற்பட்டு இதுகுறித்து விவாதிக்கவேண்டுமென்றால், மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும்.
அன்புடன்,
ரா.
July 5, 2019 at 16:20
“நிஞ்சா என்றால்சாதாரணப் போர்வீரன்.தற்கொலைப்படைக்கும் இப்பெயர் உண்டு. அவன் வாள் நிஞ்சாட்டா எனப்படுகிறது. பேச்சுவழக்கில் அதுவும் நிஞ்சா என்று சொல்லப்படுகிறது.”
https://m.jeyamohan.in/123464#.XR84qqhN1ax
July 5, 2019 at 16:59
hmm. Now, I see light. There is NO way that asaan is going to learn his lessons.
No Lessons, therefore Morons; there are a ZILLION goofups in this article too! There is no redemption.
So my dear rodent of an unusual size, I understand who you are, greetings, but please please please spare me from the pontifications of the faffer. :-(
July 1, 2019 at 11:47
ஆசான் எழுதுவதயெல்லாம் கருத்தூன்றிப் படிப்பவர் பட்டியலில் முதல் வரிசை ஆள் தாங்கள்தான்.
யாராவது இறந்துவிட்டால் அஞ்சலியுடன் அவர்களைப் பற்றிய கராரான விமர்சனம் செய்பவர் ஆசான்.
ஆகவே அவர் எழுத்து பற்றிய கண்ணியமான , தரவுகளுடன் கூடிய விமர்சனங்களை ஆக்கபூர்வமாகவே எதிர் கொள்வார் என்றே நினைக்கிறேன்.”நான் தமிழகத்தின் உண்மையான சமூகசேவகர்களில் ஒருவராக, அறிஞராகக் கருதும் மனிதர்களில் ஒருவர் ஒத்திசைவு ராமசாமி. “27 பிப்ரவரி 2013 அன்று எழுதியவர் ஆசான்.இப்போது என்ன எழுதுவாரோ?
July 1, 2019 at 12:05
ஐயா! அவர் எழுதுவது எல்லாவற்றையும் படிக்க முடிவதில்லை. ஒருவிதத்தில் இருவருக்கும் அது நல்லதுதான்.
ஆனால் அவ்வப்போது சிறிதளவு சபலம் வந்து அங்கு போகும்போதெல்லாம் சம்மட்டியால் தாக்கிவிடுகிறார், நம் பெரும்பேராசான். என்ன செய்ய.
மேலும், மற்றபடி நான் சமூகசேவகனுமல்லன், அறிஞனுமல்லன். என்னைப் பற்றிய மிகைமதிப்பீடுகள் எனக்கு இல்லை. ஆனால் கொஞ்சம் புல்லரிக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
நன்றி. அதேசமயத்தில் அவரே, தாங்களும் சம்பந்தப்பட்ட ‘ஜெயமோகன் குடம் ஷேகர் மஹாபாரதம்’ விவகாரத்தில் – வெண்முரசை நான் நிப்பாட்ட முயல்கிறேன் எனவொரு அபாண்டத்தை 2018ல் சொன்னார்: “வெண்முரசு தடுத்து நிறுத்தப்படவேண்டும் என ராமசாமி சொல்கிறார். ” (பார்க்க: http://venmurasudiscussions.blogspot.com/2018/09/blog-post_503.html?m=1)
ஆக 2013விஷயம் வாபஸ் பெறப்பட்டுவிட்டது, சரியா?
மற்றபடி யாரங்கே! இணையத்தில் நாளுக்கு மும்முறை ஜெயமோகப் பதிவுகள் பெய்து கொண்டிருக்கின்றனவா?
July 1, 2019 at 14:25
கத்திச்சண்டை சுவாரசியமாக உள்ளது, ஆனால் அதற்க்குள் ஆசான் ஆறு அத்தியாயம் முன்னால் போய்விட்டார்.
இன்னும் வேகம் வேண்டும்.
மேலும் அறிஞர் பட்டத்தை முகனூல் சல்லியென்று சொல்லி ரத்து செய்துவிட்டதாக ஞாபகம்.
July 1, 2019 at 15:20
யோவ் கண்ணன்!
எவ்ளோ தொண்டை கிழியக் கத்திச் சண்டைபோட்டாலும், ஒரு சுக்குக்கும் உபயோகமில்லை. எல்லாமே வெறும் கேளிக்கைதான்.
ஏனெனில் வேகாதவற்றை வேகம்வேகமாகச் சமைத்துக் கவிழ்த்துப் பரிமாறினால்தான் ஒத்துவரும் போல!
அத்தொட்டு, இந்த ஆட்டத்துக்கு இனிமேக்காட்டீ நான் போவப்போர்தில்ல! (நாளை முதல் குடிக்கமாட்டேன் சத்தியமடா கண்ணா!)
July 1, 2019 at 16:37
அன்பு ஐயா, Jared Diamondன் சுட்டி எப்படி தங்களிடமிருந்து? தங்கள் பழைய பதிவுகளிலிருந்து நான் சரியாய் பெற்றுக்கொண்டேனா? :-)
July 1, 2019 at 19:37
ஐயா! நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. ஜேரட் டையமண்டின் டிஸ்கவர் கட்டுரையை, இந்தப் பதிவில் ஏன் நான் குறிப்பிடுகிறேன் என்கிறீர்கள். அந்தக் கட்டுரை 1998ல் வந்தது. அதேவருடம் வெளிவந்த அவருடைய உளறல் புத்தகமான guns germs and steel எனும் அபத்தக் களஞ்சியத்தை, நான் படித்தது 2001 வாக்கில்தான் என நினைவு.
ஆனால் டிஸ்கவர் பத்திரிகைக் கட்டுரையில் – அவர் அட்ச்சுவுட்டதாக எனக்குப் படவில்லை. அதில் – டுப்பாக்கி கிருமி என்றெல்லாம் விலாவாரியாக விரித்து அட்ச்சிவுட்டு எழுதவில்லை அவர். ஆகவேதான், ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து, அதற்கான சுட்டியைக் கொடுத்தேன். (எப்பொருள் யார்யார் வாயில் விழுந்து புறப்படினும், அப்பொருள் பொய்ப்பொருள் காண்பது என்பது என் அறிவின் ரெவல், என்னச் செய்வது சொல்லுங்கள்)
2001க்குப் பிறகு, எனக்கு அவர் எழுத்துகளின்மேல் (கட்டுரைகளும் சரி, புத்தகங்களும் சரி) நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை எனத்தான் நினைக்கிறேன் – உதாரணத்துக்கு, மால்கம் க்லேட்வெல் குறித்த 2014 பதிவில் சில வரிகள் இருக்கின்றன. https://othisaivu.wordpress.com/2014/02/28/post-331/
ஜெயமோகன் எழுதிய சில நகைச்சுவைக் கட்டுரைக்கதைகளை இன்றும் நான் படிக்கும்போது ‘ஆஹா, எப்படி எழுதறான்யா இந்த மனுஷன்!’ எனச் சொல்லும்போது, அவருடைய காட்டுரைகளைக் கண்டுகொள்ளக்கூடாது எனச் சொல்லமுடியுமா. இதன் எதிர்மறைதான் டயமண்டூகம். (ஸ்ஸ்ஸ்ஸ்! அப்பாடா! எப்படியோ சமாளித்துவிட்டேன் எனப் பேர்பண்ணிவிட்டேன். இனிமேல், ஜேரட் டையமண்டைச் சுட்டவில்லை, போதுமா?)
இதேபோல அண்மையில், அந்த ஆனானப்பட்ட பில் கேட்ஸ் அவர்களாலேயே தொடர்ந்து புகழப்படும் நோவா யுவால் ஹராரி என்பவரின் ஸேபியன்ஸ் எனவொரு திகில் திருப்பங்கள் நிறைந்த டகீல் ‘நாவல்’ பற்றி (சில பொறுக்கியெடுத்த சகபொறுக்கி நண்பர்கள் மத்தியில் – கடந்த ஒரு வருடமாக, மாதாமாதம் இந்த புக்க்ளப் எனவொரு பொழுதுபோக்கு நடந்துகொண்டிருக்கிறது) விமர்சன எழவு ஒன்றைச் செய்தேன். ஜேரட்டுக்கும் நோவாவுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பதுதான் என் துணிபு.
நினைவு வைத்துக்கொண்டு கேட்டதற்கு நன்றி. கொஞ்சம் நடுக்கமாகவே இருக்கிறது. (இனிமேல் ஒரே, மாறாத பார்வையில், முன்னால் என்ன எள்திக்கீறேன்னிட்டு பாத்திட்டு பொலிடிக்கல்லி கர்ரீட்டாக எள்தறேன், நைய்னா!)
July 1, 2019 at 21:12
பதிலுக்கு நன்றி.யூகமும் செய்திருந்தேன் :-)
கைல கிடைச்சத எடுத்து அடிக்கிறாருன்னு வரலாறு சொல்லக்கூடாதுல்லா சார்.
அரசியல் சரி வேண்டாம், நீங்க நேராவே எழுதுங்க ..ஏழரை என்றும் உண்டு இங்கு.
July 11, 2019 at 14:50
[…] ஓஸாகா பல்கலைக்கழகப் பேராசிரியருமான நிக்குமா நிக்காதா அவர்கள் இதனைப் பற்றி ஆய்வறிக்கை […]
July 26, 2019 at 19:21
http://manavelipayanam.blogspot.com/2019/07/blog-post.html
July 26, 2019 at 21:27
ஐயா செந்தில், நம் பெரும்பேராசானை விடவும் உங்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி அதிகம். வாய்விட்டுச் சிரித்தேன்.
அவர் எழுதியதையும் சரி, நான் எழுதியதையும் சரி உங்களுக்குப் புரிந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் கஷ்டப்பட்டுப் படித்து நீங்கள் எழுதியதைப் புரிந்துகொண்டேன்.
முதலில் ஜப்பான் என்பதை எழுத்துக்கூட்டிப் படிக்க ஆரம்பிக்கவும். பின்னர் பார்க்கலாம். கூடிய விரைவில் கடலூரார் போலப் பயணக்கட்டுரை எழுத வாழ்த்துகள்.
ஓ! மறந்துவிட்டேனே!! உறங்குவதற்கு முன் பற்களைத் துலக்கிக்கொள்வது அவசியம், சரியா?
நன்றி.