ஏன் இப்படியெல்லாம் அட்ச்சிவுடுகிறார்கள்?

January 28, 2019

பாவம் மொத்ஸார்ட். :-(

சரி. இவர் என்ன பாவம் செய்தார்? :-(

ஏனிப்படியாகிறது? ‘கலை விமர்சகர்’ இந்திரன் என்பவரைப் போல ஏன் இப்படிப் பலர் கிளம்பியிருக்கிறார்கள்? எந்தவொரு விஷயத்தையும் நீர்க்கடிக்கச் செய்வதற்கு அப்பாற்பட்டு, ஏன் கண்டமேனிக்கும் அட்ச்சிவுடுகிறார்கள்?

மொஸார்ட்(இந்தப் பதிவில் –  ஆங்கிலத்தில் நாம் எழுதி உச்சரிப்பதுபோல, இவர் பெயரை மொஸார்ட் என்றே எழுதுகிறேன்) பற்றி ஆதாரபூர்வமாக எழுத, அந்த எழவெடுத்த ‘அமேடியஸ்‘ படமும் (இது எனக்குப் பிடித்தமான இயக்குநரான மிலோஸ் ஃபார்மன் ஆக்கம்தான், இருந்தாலும் அதில் இருக்கும் பல விஷயங்கள் நம்பகத்தன்மை கொண்டவையோ ஆதாரபூர்வமானவையோ அல்ல! வெறும் ஜோடிப்புகள்தாம் – ஸேலியரியின் கிளைக்கதை உட்பட) சிலபல விக்கிபீடியா பக்கங்களும் பார்த்ததோடு முடியுமா?

அவருடைய ஸாஹித்யங்களைப் பற்றி பண்டிதத் தன்மையுடன் எழுதினால் அது எழுதுபவரின் தனிப்பட்ட ரசனைசார் விஷயம், ஆக விவரணைகள் அப்படியிப்படி என இருக்கலாம், எனக் கொஞ்சமேனும் ஒப்புக்கொள்ளலாம்;  ஆனால், அவருடைய வாழ்க்கையின் விவரங்கள் பற்றி இப்படி அட்ச்சிவுடுவது, அது மாணவர்களுக்கான ஒரு சிறு அறிமுகமாகவே எழுதினாலும் கூட, எந்த விதத்தில் நியாயம்?

-0-0-0-0-0-

நமக்கு எனக்கு, இது தேவையா?

அதுவும் – ஆந்திரத்தின் கர்னூல், கடப்பா, அனந்தபுரம் என – நானும் என் மகனும் எங்கள் மோட்டர்பைக்கில் சென்ற சில நாட்களாக ஆனந்த அலுப்புடன் அலைந்துகொண்டிருக்கும் இக்காலங்களில்.

கொஞ்சம் நிதானமாக யோசிக்கிறேன்.

…பாரத நிலப்பரப்பு,  அதன் கலாச்சாரக்கூறுகள், அதன் மக்களின் அழகுகள், களையப்படவேண்டிய கசண்டுகள் – என உணர்ந்து அறிந்துகொள்ளவேண்டியவைகள் எங்கு பார்த்தாலும் கொட்டிக்கிடக்கின்றன; என் வாழ்க்கையில் – நிறைய கால் நடையாகவும், அரசுப்பேருந்துகளிலும், பைக்கிலும் (கொஞ்சம் சைக்கிளிலும்) சுற்றியிருக்கிறேன். இருந்தாலும், திகட்டத் திகட்ட அனுபவித்தாலும் பாரதப் பயணங்கள் (நாற்கரச் சாலைவழிகளுக்கு அப்பாற்பட்டு) என்றுமே ஆழமும் வீச்சும் அதிகம் கொண்டவை.

இம்முறையும் அப்படியேதான். அப்படியே விட்டிருக்கலாம். ஏன் பிற விஷயங்களுக்குச் செல்லவேண்டும்? உன்னதங்களைத் துய்ப்பதிலிருந்து, சராசரித்தனங்களுக்கு சரிந்து மடியவேண்டும்?

As a PinkFloyd album/title says – it is truly a ‘momentary lapse of reason.’ :-(

என்ன செய்ய

நேற்றிரவு கொஞ்சம் நேரம் கிடைத்து ஜியோவும் ஒத்துழைத்ததால் (அம்பானிகளுக்கு ஜே!), என் வாராந்திர வழக்கமேபோல பத்ரி தளத்திற்குச் சென்று (‘நம் தமிழுடன் நான் தொடர்பில் இருக்கவேண்டும்’) அங்கு கிடைத்த சில சுட்டிகளைப் படித்தேன்.

தமிழின் அடிப்படைகளை அறிய விருப்பமற்ற, அதன்மீது அடிப்படை மரியாதையற்ற – ஆனால் தமிழ் மூலம் காலட்சேபம் செய்துகொண்டிருக்கும் சோம்பேறி தண்டக் கருமாந்திரத்துக்கு… …இன்னொரு அப்படியாப்பட்ட அமைப்பு கால்கோள் விழா எடுக்கிறது! ஆஹா!

ஜெயமோகன், தம் நண்பர்களுடன் கும்ப்மேளா போகிறார். சரி. நல்லவிஷயம். அவரும் கொடுத்துவைத்தவர். வாசகர்களாகிய நாமும்தான். சிலபல அழகான, கருத்துச் செறிவுமிக்க + உணர்ச்சிபூர்வமான கட்டுரைகளை பாரதீயவிரும்பியான அவரிடமிருந்து சர்வ நிச்சயமாக எதிர்பார்க்கலாம். சந்தோஷம்.

சாரு நிவேதிதாவின் தண்டகருமாந்திர தளத்தில் வழக்கம்போல ஏதோ வம்பு; அவருடைய வழக்கமேபோல இதுவும் பீலாவாகவே இருக்கலாம். சரி.

அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாத இன்னொரு நிசப்தப் போராளிக் கொந்தளிப்பு ‘தினமொரு பதிவு போட்டேயாகவேண்டும்!’ நமக்கெதுக்கு வம்பு.

மற்றவைகளை விட்டுவிட்டு…

! இதென்னது – மொஸார்ட் பற்றிய ஒரு பதிவு. பா ராகவன் அவர்கள் எழுதியிருக்கிறார். அடி சக்கை. படிக்கலாமா?

மொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை January 22, 2019 :-(

“ஒரு புத்தகத்தில் ஒரு மேதையின் இசையை உணரச் செய்வது சிரமம். ஆனால் குறிப்பிட்ட இசை மேதையின் வாழ்வு எவ்விதமான சுருதியில் இயங்கியது என்பதைத் தொட்டுக்காட்டி, அதன் மூலம் அவரது படைப்புகளின் ஆதார தொனியைச் சுட்டுவதே இதன் நோக்கம். “

ஒப்புக்கொள்ளக்கூடிய பார்வைதான் இது. ஆனால் அதற்கு விக்கிபீடியாவுக்கு அப்பாற்பட்டு அவருடைய சரிதைகளைப் படிக்கவும், அவருடைய அனைத்து ஆக்கங்களையும் காதும் மனமும் குளிரக் கேட்கவும் வேண்டுமல்லவா?

குறைந்த பட்சம் மிகவும் நுணுக்கமாகவும் ஆதாரபூர்வமாகவும் கரிசனத்துடனும் எழுதப்பட்டிருக்கும், ஸாலமன் மேனார்ட் அவர்களின் மொஸார்ட் சரிதத்தையாவது படித்திருக்கலாமே! :-(

“மொஸார்ட், தனது இளமைப் பருவம் முழுவதும் வருமானமின்றித் தவித்தவர். “

சும்மானாச்சிக்கும் நாமும் நம்முடைய மேலான கருத்தை உதிர்க்கலாமே என்று – poor, struggling, uncared for, unappreciated and betrayed artistic genius — who died really young – எனக் கருத்துருவாக்கம் செய்யப்படவேண்டிய அவசியமேயில்லையே! அவர் ஒரு மேதையாக இருந்தாலும் லௌகீக வாழ்வில் கஷ்டப்பட்டார் என ஒரு அரைவேக்காட்டு கருத்தாக்கத்தைப் பரப்பவேண்டிய அவசியமே இல்லையே!

ஏனெனில் மொஸார்ட் வறுமையில் உழலவில்லை; அவர் கால கட்டத்தில் அவர் தன்னுடைய வாழ்வில் மிகப்பெரும்பகுதியை மிக வசதியாகவும், ஏன் பிரபுக்கள் போல டாம்பீகமாகவுமே வாழ்ந்தார். தன் பிள்ளைகளை தனவந்தர்களின் குழந்தைகள் படித்த தனியார்பள்ளிகளில் மட்டுமே படிக்கவைத்தார். அவருடைய ஊதாரித்தனங்களினால் பணப் பிரச்சினைகள் ஏற்பட்டபோது கடன் வாங்கினார், கொஞ்சம் சிரமத்தில் இருந்தார். ஆனால் வறுமை உதாசீனம் என்றெல்லாம் இல்லை! (பயாஸ்கோப் அமேடியஸ் பார்த்துவிட்டு உருகுவது லேசு!)

ஆனால் அவரிடம் இருந்த இசைமேதமைக்கும் அவருடைய வாழ்க்கைக்கும் நான் முடிச்சுப் போடவில்லை.

” எட்டயபுர மன்னருக்கு பாரதி சீட்டுக்கவி எழுதியது போல மொஸார்ட் தனது மகாராஜாவுக்கு எழுதிய ராஜினாமா கடிதம் மிகவும் பிரபலம். ஆனால் அவரது ராஜினாமாவை நிராகரித்துவிட்டு, ‘டிஸ்மிஸ்’ நோட்டீஸ் அனுப்பினார் அந்த மன்னர். கலைஞர்கள் வாழும் காலத்தில் அவமதிக்கப்படுவது உலகெங்கும் காலந்தோறும் உள்ள வழக்கமே அல்லவா? “

மொஸார்ட்டின் வாழ் நாளில் அவர் ஏகோபித்துக் கொண்டாடப்பட்டிருக்கிறார். பரிசில்களும் கொடைகளும் அமோகமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறார். ஸாலமன் மேனார்ட் அவர்களின் புத்தகத்தில் ஒரு பலபக்க பின்னிணைப்பே இருக்கிறது – இந்த மொஸார்ட் தம் வாழ் நாளில் மட்டுமில்லாமல் – அதன் பிறகும் (தம் குடும்பத்திற்காக) எவ்வளவு சம்பாதிக்க முடிந்தது என்று!

அந்த ராஜினாமா கடிதத்திற்கும் ஒரு பின்புலம் (=மொஸார்ட்டின் கர்வம் – அதை வித்யாகர்வம் எனவும் எடுத்துக்கொள்ளலாம்; ஆனால் அளவுக்கு மீறிக் கடன்வாங்கி படாடோபத்தில் அதனைக் கரைத்து, அதனையும் தமக்கு வேலைகொடுத்த குறு நில அரசர்தாம் நிரவவேண்டும் என்பது நியாயமில்லை) இருந்தது.

பாரதியையும் மொஸார்டையும் (அவர்களுடைய வியத்தற்குரிய மேதமைக்கு அப்பாற்பட்டு) பொருத்திப் பார்க்கவேண்டிய அவசியமே இல்லை. பாரதி தம் வாழ் நாளைப் பெரும்பாலும் வறுமையில்தான் கழித்தார். மொஸார்ட் அப்படியல்லர்.

கலைஞர்கள் தம் வாழ் நாளில் புறக்கணிக்கப்படுவது உலகெங்கும் காலம்தோறும் உள்ள வழக்கம் அல்ல. ஆனால் அப்படி நினைத்து பிரமையில் உருகுவதற்கு நமக்கு உரிமை இருக்கிறது.

” அவரது மேதைமை கண்டு மயங்கி நெருங்கிக் காதலிக்கத் தொடங்கியவளே அவரது ஏழைமை கண்டு விட்டு விலகி ஓடியிருக்கிறாள்.”

இதற்கு ஒரு சான்று (ஒரேயொரு சான்றாவது!) கொடுக்கமுடியுமா? யார் அவரை விட்டு விலகி ஓடினார்கள்? என்ன கதையாடல் இது!

அவர் மனைவி கான்ஸ்டன்ஸ் (காதலித்துக் கைபிடித்தவர்), மொஸார்ட் வாழ்நாளிலும் அதற்குப் பின்னரும் சௌகர்யமாக வாழ்ந்ததும் – மொஸார்ட் இறப்புக்குப் பின்னரும் படாடோபம் மிக்க பள்ளிகளில் தம் பிள்ளைகளைத் தொடர்ந்து பயில வைக்க முடிந்ததும் எதனைக் காட்டுகின்றன?

ஆனால் ஆமாம் – பாரதியாரின் மறைவுக்குப் பின்னர், அவருடைய பாவப்பட்ட மனைவியார், தம் குழந்தைகளைச் சகல சௌபாக்கியங்களுடன், இளவரசர்கள் படிக்கும் தேஹ்ராதூன் பள்ளியில் படிக்கவைத்தார் அல்லவா?

“ஓயாத நோய்த் தொல்லை, தீராத ஏமாற்றங்கள், நிற்காத பெரும் அலைச்சல். வாழ்நாள் முழுதும் இப்படியே இருந்துவிட்டுப் போய்விட்ட கலைஞனின் இசை, இன்று ஓர் அடையாளச் சின்னம். மொஸார்ட்டைத் தொட்டுப் பேசாமல் இசை இல்லை. “

:-( இப்படியெல்லாம்  இதயமேயில்லாமல் கண்டமேனிக்கும் நெகிழ்வாலஜித்தனமாக அட்ச்சிவுட பிதாமகர்களான சாருநிவேதிதா எஸ்ராமகிருஷ்ணன்கள் இருக்கும்போது, இவரெதற்கு இப்படியெல்லாம்…

அலுப்பு.

“காலத்தால் அழியாத உன்னதமான இசைக்கோலங்களை விட்டுச் சென்றவரின் வாழ்வை சுருக்கமாக விவரிக்கிறது இந்நூல். “

அப்படியா என்ன!

இப்படித்தான் சுருக்கமாக விவரணை இருக்கும் என்பது சுருக்கென்று தைக்கிறதே, என்ன செய்ய.

பின்குறிப்பு: முதலில், இவருடைய புத்தகத்தைப் படிக்கவேண்டும் எனத்தான் நினைத்தேன். ஆனால் அடுத்த ஒரு நிமிடத்தில் அவருடைய கட்டுரையைப் படித்துமுடித்தபின், அதை வாங்காமல் ரூ50/- செலவை மிச்சம் பிடித்து, இரண்டு மசாலாதோசைகளைச் சாப்பிடலாம் என முடிவுசெய்தேன்.

மொஸார்ட் மசாலா சுகமில்லாமல் இருக்கலாம், ஆனால்… மசாலாதோசைகளின் மசாலா அருமை.

ணண்ரீ.

 

 

 

22 Responses to “ஏன் இப்படியெல்லாம் அட்ச்சிவுடுகிறார்கள்?”

  1. anon Says:

    //ரூ50/- செலவை மிச்சம் பிடித்து, இரண்டு மசாலாதோசைகளைச் சாப்பிடலாம்

    ????? is this possible?


    • ஐயா! நீங்கள் சரவணபவன் / ஸப்வே அடாவடி விலைகளுடன் இதனைப் பொருத்திப் பார்க்கக்கூடாது.

      ரூ20/-க்கே நல்ல பெரிய விட்டமுள்ள (>40 செமீ) தோசை மசாலுடன் அட்டகாசமான சாம்பார் சட்னியுடன் கிடைக்கிறது. அதுவும் வாழையிலைச் சருகில் வைத்து, ப்லாஸ்டிக் ஷீட் போட்ட தட்டில் அல்ல!

      ரூ 35/-க்கு நான்கு பூரித்த பூரிகள் + இரண்டு வடைகள் + டீ.

      உங்கள் சுகமான ஐடி குமாஸ்தாவிய வளைப்பொந்தில் இருந்தபடி மேதாவித்தனமான கிண்டல்செய்வதை, நொள்ளை சொல்வதை விட்டுவிட்டு அவ்வப்போது வெளியே வந்து சுதந்திரமாக காற்றைச் சுவாசித்து வளையவரப் பழகவும்.

      நன்றி.

  2. விஜயராகவன் Says:

    மொஸார்ட் பற்றியெல்லாம் உமக்கு தெரியும் என்று அவருக்கு எப்படி ஐயா தெரியும். மேலும் அட்சு விட்டே “ஒருவர் ” விருது வாங்கியிருக்கும் போது அடுத்த வருக்கும் ஆசையிருக்காதா ?


    • யோவ், சரிதான்! ஆனால், ஒரு கிழக்கோட்டானுக்கு சிலபல விஷயங்கள் அறிமுகமாகியிருப்பது பெரிய விஷயமில்லையே!

      நீங்கள் பாராவுடைய பாரா உஷார் வகை கொபசெவா என்ன? பயம்மா கீதே! ;-)


    • /* சாமானிய மனிதனின் அப்பட்டமான இந்த அனுபவங்களை வாசிக்கும் போது */

      இதைப் படிக்கும்போது வேறேதோ சாமானியம் நினைவுக்கு வரவில்லை? அதுவும் அப்பட்டமாக!

      ஏனய்யா இப்படி என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறீர்கள்! :-(

  3. Raj Chandra Says:

    என்ன இப்படி என் மனதை ஒடித்துவிட்டீர்கள் ?!!!! பாரா இன்று சகல சப்ஜெக்டிலும் (பேலியோ முதற்கொண்டு, தத்துவம் வரையில்) புத்தகம் போட்டு மகிழ்பவர் (படுத்துபவர் என்றும் பாடம்). அதுவும் வீட்டிலேயே அமர்ந்து மத்தியக் கிழக்கு பகுதிகளை எல்லாம் தன் மனக்கண்ணால் பார்த்து சரித்திரம் எழுதியவரை நீங்கள் இப்படி குற்றம் சொல்வது தவறு :)). மொசார்ட் பற்றி தமிழனுக்கு அவர் எழுதாமல் யார் எழுதுவார்? எதைக் கொடுத்தாலும் சீரணிக்கும் தமிழன் இதையும் தங்குவான்.

    வாழ்நாளில் பாதியை செவ்வியல் இசை கேட்டு, உணர்ந்து புத்தகம் எழுதும் பைத்தியக்கார எழுத்தாளர்களை நீங்கள் கொண்டாடுவதைத் தண்டிக்க எஸ்ரா எழுதிய அனைத்துப் படைப்புகளையும் அனுப்ப ஆவல்…முகவரி ப்ளீஸ்.


    • ஐயய்யோ! இவர் பேலியோ எழவு பற்றியெல்லாம் வேறு எழுதியிருக்கிறாரா? எல்லாம் நம் தலைவிதிதான், வேறென்ன சொல்ல! :-(

      எஸ்ரா புத்தகக்கூழ்களுடன் என் வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவது குறித்து: யோவ்! கொமட்ல குத்தட்டா?

      • Raj Chandra Says:

        என்ஜாய் :) : https://www.amazon.com/Pa-Raghavan/e/B00J0X3SCU/ref=sr_tc_2_0?qid=1548810451&sr=1-2-ent

        இவரைப் போல தமிழில் ஒரு கூட்டமே இருக்கிறது. பத்து புத்தகங்களைப் படித்துவிட்டு அவைகளின் சுருக்கத்தை அப்படியே வாந்தி எடுத்துப் புத்தகமாகப் போடுவது. ஒசாமா பக்கத்தில் உடகார்ந்து அவனை கண்காணித்தது போல புத்தகத்தில் தகவல் இருக்கும். பத்து, பதினைந்து வருடங்கள் அந்த நிலத்திலேயே வாழ்ந்து, ஆராய்ந்து எழுதிய Steve Coll, Tom Friedman போன்றவர்களெல்லாம் முட்டாள்கள். நம் சமூகமும் அதைப் படித்துவிட்டு இவர்கள்தான் இதில் Subject Matter Expert என்று நினைக்கிறது.

        வழக்கமாக இவர்கள் கையில் சிக்குவது பிரபலமானவர்களின் குடுமி. அவர்களை பற்றி மாலைமுரசு பாணியில் ஒரு புத்தகத்தை அடித்து விடுவார்கள். அந்த ஆட்கள் செத்தால் இன்னும் சோகம். உடலைப் புதைப்பதற்கு/ எரிப்பதற்கு முன் அவரைப் பற்றி தமிழில் புத்தகம் வந்துவிடும்.


      • ஐயா நன்றி. நான் இவருடைய புத்தகங்களைப் படித்ததில்லை. இன்னொரு அன்பர், இவர் டீவிதொடர்களில் ஈடுபட்டிருக்கிறார் எனத் தெரிவிக்கிறார். ஆனால் மாமாங்கங்களாக நான் டீவி கிட்டவே போகாதவன்; ஆகவே அறிமுகமில்லை – உடல்/மன நல பாதிப்பும் இல்லை.

        இவ்வளவு சொல்கிறீர்களே – நீங்கள் ‘மருதன்’ என்பவர் எழுதியுள்ள காகிதக்கூழ்கள் பக்கம் சென்றிருக்கிறீர்களா? அசந்து போய்விடுவீர்கள். தலைப்புகளே நகைச்சுவை.

        மாதிரிக்கு:

        துப்பாக்கி மொழி (இந்தியத் தீவிரவாத இயக்கங்கள் குறித்த ஆய்வு.)
        திபெத்: அசுரப்பிடியில் அழகுக் கொடி
        பிடல் காஸ்டிரோ: சிம்ம சொப்பனம்
        ஹ்யூகோ சாவேஸ்: மோதிப்பார்!
        சர்வம் ஸ்டாலின் மயம்
        மும்பை: குற்றத் தலைநகரம்
        நேதாஜி: மர்மங்களின் பரமபிதா
        சே குவேரா: வேண்டும் விடுதலை!
        லெனின்: முதல் காம்ரேட்!
        திப்பு சுல்தான் – முதல் விடுதலைப் புலி
        விடுதலைப் புலிகள்

        இந்த ஜாபிதாவை https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D) பக்கத்திலிருந்து எடுத்தேன். கவிழ்த்தேன்.

        மேற்கண்டவற்றில் மூன்றினைப் படித்திருக்கிறேன். இன்னொரு புத்தகமும் (ரொஹிங்க்யா பற்றியென நினைவு).

        ஆனால் ரொஹிங்க்யாவானாலும் சரி சின்னச்சாம்பார் வெங்காயமானாலும் சரி; ஆனானப்பட்ட பெருங்காயமாக இருந்தாலுமேகூட – இவர் ஒரு ஃபார்மேட் வைத்திருக்கிறார். அதன்படி ஒர்ரே கருத்துலக ட்ரபீஸ் கழைக்கூத்தாடியாட்டம்.

        எனக்குத் தெரிந்தவரை, இளைஞர்களில் டாப் க்ளாஸ் நகைச்சுவை எழுத்தாளர் இவர்தாம்!

        இதுவரை இந்த ஆசாமியைப் படிக்கவில்லையெனில் இனிமேலாவது படித்து உய்யும் வழியைப் பார்க்கவும்.

        நன்றி.

      • SB Says:

        Sir

        To add to the melee..

        Somebody has to enlighten the Tamils!

        பேயோன் • پایون

        @ThePayon
        Jan 21
        More
        நான்: Objectificationஐ எப்படிய்யா மொழிபெயர்க்குறது?

        லபக்குதாஸ்: “பொருட்படுத்துதல்”தான், வேறென்ன?

        Regards
        SB


      • :-)))

        யார் இந்தப் பேயோன்?

        ஆனால் இந்த யுவகிருஷ்ணாவெல்லாம் கிடுகிடு அதலபாதாளம். தமிழின் சாபக்கேடுகளைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர் இவர். கேவலமான காப்பிக்கடைவேறு.

        இந்த ராகவனையும் மருதனையும் அப்படிச் சொல்லமுடியாது அல்லவா!
        (நல்லவேளை!)

      • Raj Chandra Says:

        பாரா தொலைக்காட்சித் தொடரும் எழுதுகிறார். பார்த்ததில்லை. தொலைக்காட்சி காவியங்களைப் பார்ப்பதில்லை என்று 20 வருடங்களுக்கு முன்பு காந்திக்கு வாக்குக் கொடுத்தேன் :).

        ஆஹா…மருதன் அவர்களைப் பற்றி தனி வியாசமே எழுதலாம். ஆரம்பகால எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். வழக்கமான ‘புர்ச்சி இன்ரே வந்துவிடும்’ கம்யூனிச jehova’s witnesses கூவல். அன்று எடுத்த ஓட்டம்…

        அவரைப் படித்து உய்ய ஆசைதான். வீட்டில் இருக்கும் புத்தகங்களை, கிண்டிலில் உள்ள அனைத்தையும், தவிர நகர நூலகத்தில் அவசியம் படிக்கவேண்டியவைகளை முடிக்கும் முன்பே போய்விடுவேன். அடுத்த ஜென்மத்தில் இவரைப் படிக்கவேண்டியதுதான் :).

        பாரா இவருக்கு மேல்….நல்ல இலக்கியங்களைப் படிப்பவர், தேடுபவர். எழுதும்போதுதான் வெறுப்பேற்றிவிடுகிறார்.

      • RC Says:

        அன்பு ஐயா,
        நீங்கள் சொல்ல வருவது புரிகிறது.STEVE COLL பற்றி குறிப்பிட்டதால் இந்தப் பின்னூட்டம்.தமிழிலும் திரு.காட்சன் சாமுவேல் எழுதிய பனைமரச்சாலை என்ற புத்தகம் இந்த ஆண்டு வந்துள்ளது.பயண எழுத்து வகை.அவர் வலைப்பதிவுகளாக எழுதிய காலத்தில் படித்தேன்.பயணத்திலும் பனையிலும் ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம்.மற்றபடி பரப்புரை செய்யும் நோக்கம் எதுவுமில்லை.


      • எனக்கு இந்த காட்சன் அவர்களைப் பற்றி அறிமுகமில்லை. நன்றி. முடிந்தபோது படிக்கிறேன். யாரிவர் எனத்தேடியபோது, ஜெயமோகன்​ தளத்தில் https://jeyamohan.in/117293

        சரி. படிப்பதற்கு விவரங்கள் வந்துகுவிந்தவண்ணம் இருக்கின்றன. ‘ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில்’ என்று மட்டுமல்ல. எல்லா நாட்களிலும்தான்! :-)

        பயணம் என்றால் தெருச்சபை. அதிலிருந்து ஒருவர் (அதிகம் பேசாமல்) கற்றுக்கொள்வது முடியும். ஆனால் திருச்சபை அப்படியல்ல; ஓயாமல் போதனை. பாவிகளைக் கடைத்தேற்ற அல்லாடல். ஆக – இந்த இரண்டு சபைகளிலும் வாழவிழையும் நபர் கொஞ்சம் சுவாரசியமானவராக இருக்கலாம். பார்க்கிறேன்.

      • RC Says:

        பனைமரச்சாலை பதிவுகளில் மிகச் சில இடங்களில் நெகிழ்ச்சி வலைகள் உண்டுதான்.ஆனால் ஒட்டுமொத்தமாக பதிவில் சமனமும் நேர்மையும் காணக்கிடைத்தது என்பது என் வாசிப்பனுபவம்.
        (மத)நிறுவனத்திற்குள் இருந்துகொண்டு தனிப்பட்ட வேட்கையையும் ஒருங்கே வைத்து ஆடுவது கழைக்கூத்தாடி ஆட்டம்.பரந்துபட்ட பார்வையை நான் இவரிடம் எதிர்பார்க்கவில்லை.அவர் பனை வேட்கையில் காணக்கிடைக்கும் நுண்மை எனை ஈர்த்தது.என் வெள்ளியில் மகிமை உண்டாக்கினீர் என் ஆசானே.நன்றி. :-)

  4. A.Seshagiri Says:

    இந்த என் கருத்து இந்தமுழு பதிவிற்கு சம்மந்தமில்லை என்றாலும் இந்த பதிவின் தலைப்புக்கு ஒரளவு தொடர்பியிருக்கிறது..

    சார்,ராகுல் காந்திஇந்த அளவிற்கு கீழேஇறங்குவார் என்று எதிர்பார்க்கவேயில்லை.இதற்கு தங்களின் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்
    https://rightlog.in/2019/01/rahul-gandhi-parrikar-01/


    • ஐயா!

      உங்கள் பிரச்சினையே உங்களுடைய antibrahminismதான்.

      எதிர்பார்ப்புகளை வளர்த்திக்கொண்டு கஷ்டப் படாதீர்கள்.

      அவர் பாவம், பங்க் அடித்துக்கொண்டு லாகிரியில் சொல்வதையெல்லாம் ஸீரியஸாக எடுத்துக்கொண்டு…

  5. asaisol Says:

    அவரது யானி பற்றிய புத்தகமும் இப்படிப்பட்டதுதான்

    https://beyondwords.typepad.com/beyond-words/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/

  6. RC Says:

    அன்பு அய்யா, AK’s காணொளி தங்கள் பார்வைக்கு.

    ஒரு நல்ல முயற்சியாக எனக்குப் பிடித்தது.. என்ன உரையாடல் தமிழில் இருந்திருக்கலாம் :-(


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s