பேராசிரியர் அவினாஷ் காக்: “ரொபாட்களால் எக்காலத்திலும், ஏன் ஸெக்ஸில் ஈடுபடவேமுடியாது?” + மறுபடியும் என் செல்ல டக்ளஸ் ஹொஃப்ஸ்டேட்டர்!

January 20, 2019

சில நாட்கள் முன், சில நண்பர்களுடன் இந்த மகாமகோ சுபாஷ் காக் அவர்களைப் பற்றிக் கொஞ்சம் பேச்சு வந்தது…

நான் மதிக்கும் கணிநியியல் காரரும், பாரதவியலில் ஆர்வம் உள்ளவருமான இவர் குறித்துச் சிலபல சர்ச்சைகள் இருக்கின்றன – ஆனால் அவருடைய மூளையும், பாரதத்தையும் அதன் அமிழ்த்தப்படும் வரலாறுகளைப் பற்றி அவருடைய கரிசனத்தையும், பாண்டித்தியத்தைப் பற்றியும் மறுபேச்சுக்கு இடமில்லை; அவருடைய பல பாரதவியல் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன் – இவற்றில் சில தலைக்குமேல் தட்டாமாலை சுற்றினாலும், என்னால் புரிந்துகொள்ள முடிந்த அளவில், அவருடைய பார்வைகள் காத்திரமானவையாகவும் (பலசமயம் நேர்மறையாகவும் சிலமுறை அப்படியில்லாமலும்) ஆச்சரியம் தரக்கூடியவகையிலும் அமைந்தவை. ​​

சிலபல மின்னஞ்சல் பரிமாற்றங்களுக்குப் பின் இவரைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துக்கொண்டிருந்தேன்.

மனம் ஒரு குரங்கு.

இணையம், தோதுப்பட்டுவரும் மரங்கள் உள்ள ஒரு அடர்காடு.

…ஆகவே எனக்கு உடனடியாக அவருடைய அண்ணாவான அவினாஷ் காக் பற்றி, அவருடைய கணிநியியல் புத்தகங்கள் குறித்து…

+ முக்கியமாக அவருடைய இந்த – பத்துவருடங்களுக்கு முந்தைய – முக்கியமான + கொஞ்சம் ஹாஸ்யம் நிரம்பிய ஆனால் அழகானதுமான பேச்சின் சாராம்சம் குறித்தும்.

​-0-0-0-0-0-

செயற்கை அறிவு (ஆர்ட்டிஃபிஷியல் இண்டெல்லிஜென்ஸ்), யந்திரபூர்வ அறிதல் (மெஷின்லேர்னிங்), ரொபாடிக்ஸ், எதிர்காலவியல் (ஃப்யூச்சராலஜி), நேனோதொழில்நுட்பம், அறிவியல்சாகசப் புனைவு எழவுகள் (முக்கியமாக, 2.0) எனக் கண்டமேனிக்கும் அனைவரும் அமோகமாகவும் ஏகோபித்து எக்களித்தும் அட்ச்சிவுடும் இக்காலகட்டங்களில் – மறுபடியும் மறுபடியும் அறிதலின் அடிப்படைகளுக்குச் செல்லவேண்டியிருக்கிறது.

சான்றோர்களின் கருத்துகளை அணுகவேண்டியிருக்கிறது.

போட்டிபோட்டுக்கொண்டு நியூயார்க்டைம்ஸ் வாஷிங்டன்போஸ்ட் தஹிந்து தஎகனாமிஸ்ட் வகையறாக்கள் ‘ஏஐ’ குறித்த பப்பரப்பாக்களைப் பரப்பும்போது ‘இதே வந்தேவிட்டது,’ ‘90% தற்போதைய வேலைகள் காலி’ என்றெல்லாம் ஹேஷ்யங்களைக் காத்திரமான செய்திகளாக வெளியிடும்போது சிரிப்பாக வருகிறது.

இம்மாதிரி தொழில் நுட்ப அறிவிலிகளுடன் தொடர்பேவேண்டாம் என விலகினாலும் பாவி நண்பர்கள் சிலசமயங்களில் (நல்லெண்ணத்துடன்தான் என நம்ப ஆசை) என்னை மாட்டிவிட்டுவிடுகிறார்கள். சில மாதங்கள்முன் ஒரு பையனை, ஒரு தொலைபேசிவழி இன்டர்வ்யூ செய்யவேண்டி வந்துவிட்டது. என்ன செய்ய. :-(

வேறுவழியேயில்லாமல், ஜல்லிஅடிப்பவர்களுடன் சமனத்துடன் மாரடிக்கவேண்டியிருக்கிறது. சராசரித்தனங்களுடன் பொருத வேண்டியிருக்கிறது.

…என்பது நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

-0-0-0-0-

எது எப்படியோ.

நம் அவினாஷ்காக் அவர்களின் அழகான பேச்சுக்கு வருவோம்.

இதில் சுமார் 50 ஸ்லைட்கள் இருக்கின்றன. கவனமாகப் படிக்கவும்/பார்க்கவும்.

பலவிஷயங்கள், கேள்விகள் இதில் அலசப் படுகின்றன: (கணிநி / ஆட்டொமேஷன் / ரொபாட் வகையறாக்களுடன் உங்களுக்குக் கொஞ்சம் பரிச்சயம் இருந்தால் நல்லது – ஆனால் இல்லாவிட்டாலும் சர்வநிச்சயமாகப் பரவாயில்லை; அவினாஷ் மிகவும் கோர்வையாகவும் சுருக்கமாகவும் தம் கருதுகோளை அலசுகிறார்!)

புத்தி (இண்டெல்லிஜென்ஸ்) என்றால் என்ன? அதனைப் பற்றிய கருத்துகள் யாவை? எப்படி அது குறித்த கருத்தாக்கங்கள் காலம்தோறும், துறைக்குத் துறை மாறிவருகின்றன?

மற்றபடி புத்திசாலிகளாகவும், படிப்பறிவுபெற்றவர்களாகவும், தத்தம் துறைகளில் விற்பன்னர்களாக இருந்தாலும் – ஏன் சில பிரபலஸ்தர்கள், கண்டமேனிக்கும் தங்களுக்குத் தொடர்பற்ற துறைகள் குறித்து கருத்துதிர்க்கிறார்கள் அல்லது அட்ச்சிவுடுகிறார்கள்? (பதில்/​காரணங்கள்: அவர்களுடைய பாதுகாப்பின்மை உணர்ச்சியும், தாம் எப்போதும் உரையாடல்களின் மையங்களில் இருக்கவேண்டும் எனும் மாளா அவாவும்… ++ தாம், தாம், தரிகிட தீம்… எனும் சுயத்தைச் சுற்றி நடனமும்… இவர்கள் நடனங்களைப் பார்த்து நெக்குருகி கழுத்தே இல்லாமல் நடமாடும் விசிறிகளும்…)

…ரொபாட்டுகள் குறித்த கதையாடல்கள் எந்த அளவுக்குச் சரி? ரொபாட்டிக் அறிவு என்றால் என்ன? எந்த விஷயங்களை ரொபாட்டுகள் செய்ய நிறைய தூரம் போகவேண்டியிருக்கும்? … …

பயப்படாதீர்கள்! ஸெக்ஸ் / உடலுறவு பற்றி ஒரு பெரிய எழவும் இந்தத் தொகுப்பில் இல்லை. கடைசியில் ஒரேயொரு ஸ்லைடில் – ஏன் இந்த ரொபாட்டுகளால் அதனைச் செய்ய முடியாது எனக் கோடி காண்பித்திருக்கிறார். அவ்ளோதான்.

ஆனால்… நம் ஜல்லியடிக்கும் தமிழ் திரைப்பட எழவாளர்களும் கதாசிரியர்களும் தொடர்ந்து கண்டமேனிக்கும் ஜல்லியடிப்பதற்கு எப்படி ரொபாட்டுகளும் அவினாஷ்காக் அவர்களும் பொறுப்பாக முடியும், சொல்லுங்கள்?

​சரி.​

என் செல்லமும் உள்ளம்கவர் கணிநிவனுமான டக்ளஸ் ஹொஃப்ஸ்டேட்டர்  அவர்களுடைய இந்த நேர்காணலும்  பார்வைகளும் – இந்த ஏஐ விஷயத்தில் மிக முக்கியமானவைகளாக நான் கருதுகிறேன்.

ஏன் ஏஐ – செயற்கை அறிவென்பது, அறிவிலிருந்து வெகுதூரத்தில் இருக்கிறது?

படித்து இன்புறவும்…

–0-0-0-0–

பின்குறிப்பு: இந்த அவினாஷ் அவர்கள் நமது ‘அந்தக்கால’ கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்தாராம்! (விக்கிபீடியாவில் அப்படித்தான் போட்டிருக்கிறார்கள்) – யோசித்துப்பார்த்தால், அது எப்போதோ ஒரு தம்பி கல்லூரியாக இருந்தபோது நடந்திருக்கவேண்டும்; ஏனெனில், அதுதான் பிற்காலத்தில் அண்ணாவாகி, பல்கலைக்கழகமாகிப் பின் காலாகாலத்தில் தாத்தாவாகி (தாத்தா பல்கலைக் கழகம் என்றால் – gerontological dental arts institute எனவறிக)  சிலகாலம் முன் ரத்தம்கக்கிச் செத்தே போய்விட்டதாமே! பாவம்!

பின்பின்குறிப்பு: தமிழகத்தின் சொந்த டக்ளஸ் ஹோஃப்ஸ்டேட்டர் எனும் பெருமைக்கு உரியவர் மேதகு மதன் கார்க்கீ என்பதை நீங்கள் அறிவீர்கள் என நான் அறிவேன்.

அப்படிப்பட்ட பேரும் புகழும் பெற்ற ‘தல’​ இப்படியெல்லாம் மொழியியல், உடல் இயங்குவியல், பெரியாரியல், புளகாங்கிதமியல், தமிழியல், ஸம்ஸ்க்ருதவெறுப்பியல் என்றெல்லாம் சகலதுறைகளிலும் புகுந்துவிளையாடுவதைக் குறித்த ஒரு அற்புதத்தை நண்பர் ஒருவர் அனுப்பினார்.

நீங்களும் அந்த எழவைப் பார்த்து மகிழவும். நன்றி.

 

 

21 Responses to “பேராசிரியர் அவினாஷ் காக்: “ரொபாட்களால் எக்காலத்திலும், ஏன் ஸெக்ஸில் ஈடுபடவேமுடியாது?” + மறுபடியும் என் செல்ல டக்ளஸ் ஹொஃப்ஸ்டேட்டர்!”

 1. nparamasivam1951 Says:

  அப்படி இப்படி என்று எழுதி கடைசியில் தமிழக டக்ளஸ் ஹோப்ஸ்டேட்டரின் உளறலை கேட்க வைத்து விட்டீர்களே சார். வாசகர்கள் மேல் அப்படி என்ன சார் உங்களின் கோபம்? (உளறல் எழவை பாதியிலே நிறுத்தியதலேயே இவ்வளவு கோபம், முழுதும் கேட்கும் வாசகர்கள், ஐயோ பாவம்)


  • ஐயா, நானே தன்னிச்சையாக ;-) இச்சுட்டியைக் கொடுக்கவில்லை; என் நீண்ட ஆயுளில் விருப்பமில்லாத அன்பர் ஒருவர் அனுப்பியதை இங்கு பதிவு செய்தேன். அவ்ளோதான்!

   ஆகவே, ஆளை விடும்! ​

 2. anon Says:

  //நெக்குருகி கழுத்தே இல்லாமல் நடமாடும் விசிறிகளும்

  🤣😂😅🤪


  • ​இம்மாதிரி மொக்கைகளை யாராவது கண்டுபிடித்தால் கிடைக்கும் திருப்தியிருக்கிறதே… ;-)​

   யார் நீங்கள்?

 3. Swami Says:

  யோவ் ராமசாமி! இந்த மாதிரி வீடியோ பதிவேற்றம் பண்ணி ரத்த கொதிப்ப ஏத்தாதப்பா! நானே இப்போ தான் மூணு மாசமா அர்ஜூனாகஷாயம் குடிச்சு ரத்த கொதிப்பை இறக்கியிருக்கேன்!

  ஆமா, யாரு இந்த மதன் கார்க்கி ? இவன் பெற்றோரை எண்ணி வருந்துகிறேன்


  • அன்பரே!

   ஏடாகூடமாகக் கேட்கிறீர்கள்.

   மதன் கார்கீ அவர்களின் அம்மா நேனோ கார்கீ. அப்பா மாருதி கார்கீ. அவருடைய பையன் பெயர் ஜேஸிபி ட்ரக்கீ.

   ஸீரியஸாக – இவர் மேதகு டயமண்டூ முத்தரசர் அவர்களின் திரு மந்தபுத்திரன் போலிருக்கிறது, பாவம். இவர் அண்ணா பொரியியல் பல்கலைக்கழகத்தின் ஆகச் சிறந்த கிண்டி பொரியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் பொரி பட்டாணி துணைப்பேராசிரியராக விற்றுக்கொண்டிருந்தார்.

   மற்றபடி ரத்த அழுத்தத்துக்கு எனக்கு வரும் சிலபல வாசதுப்பாக்கிக் கடிதங்களை உங்களுக்கு அனுப்பினால், அது உடனடியாகக் காணாமல் போய்விடும். கவலை வேண்டேல்!

   ஆனால் பித்தம் தலைக்கேறிவிடும். அதற்கு வெண்முரசு படித்தால் வாய்மேல் பலன். நன்றி.

   • Swami Says:

    அய்யய்யோ !
    நான் பெரிய எடத்துல கை வெச்சுட்டேன் போலிருக்கே. (ஏதோ சின்ன பையன் மாதிரி இருக்கான்னு பெற்றோர் பற்றி கேட்டுவிட்டேன் )
    நான் அம்பேல்


   • பிரகாசிக்கும் நமது இளைஞர்களை ஊக்குவிக்காமல் (hook selling without) இப்படியெல்லாம் ஜகா வாங்குவது முறையோ? :-(

 4. SB Says:

  Sir
  Thanks for the article.
  quote :
  பாதுகாப்பின்மை உணர்ச்சியும், தாம் எப்போதும் உரையாடல்களின் மையங்களில் இருக்கவேண்டும் எனும் மாளா அவாவும்… ++ தாம், தாம், தரிகிட தீம்… எனும் சுயத்தைச் சுற்றி நடனமும்…

  Unquote:
  Love towards (Madhan Karky) Father also stands relevant .
  Join the melee to give boost to his Father’s cause view several medias such as Dinamalar taken a liking to beat him blue and back.
  Well, Karky – His name, so far this speech goes, is an aptronym.
  Also ringing of nemesis of your life is unavoidable.

  Having invented a language for the film Bahubali, Mr.Karky has become an authority on the given matter!!

  Sir, Where does Mr.Deepak Chopra fit in your book ? Referred to as quacks/Charlatans by several Scientists of repute despite being a professional ?
  Science and Religion could ever meet when palpable proofs warranted by Science ..

  CERN’s Large Hadron Collider ….Higgs Boson/God’s particle…we have no latest news on the happenings therein.

  ‘ Revenge is in God’s hands’ …when it comes to wanting to be irreverently relevant .

  Regards
  SB


  • Hmm. That was like an LSD trip. Thanks! :-)

   Mr Chopra, well, has a right to his opinion, yeah? Of course, it is another thingie altogether that it need not be ‘an informed’ one at all! Anyway, I cannot relate to this selfhelp nonsense content-free philosophizing world with all the pretentious faffing.

   But, Deepak is anyday, better than JKrishnamurti, I would think.

 5. Kannan Says:

  அப்ப ரோபோட் குட்டி போடாதா ?, 

  என்ன கொடுமை சார் இது?


  • ஏன் ஐயா, சர்வ நிச்சயமாக பெருசே போடும்.

   எடுத்துக்காட்டாக, ரோபோட் கட்டுமரத்தைப் பெற்றெடுக்கும்.

   ஏனெனில் ரோபோட்டே, கத்திக்கப்பலின் மகள்தான் என்றறிவீர்!


 6. Hi Ram,
  I watched his video last week ( Shared and commented by Ananthakrishnan Pakshirajan)

  I really worried about his students.

  He has Phd in Computer science.

  http://karky.in/about.html
  https://www.researchgate.net/scientific-contributions/19715792_Madhan_Karky_Vairamuthu

  Thanks
  Navin


  • ஐயா, உங்களுக்கு உங்கள் சுட்டிக்காக நன்றி சொல்லப்போவதில்லை.

   அவருடைய ‘ஆராய்ச்சி’ ஆவணங்கள் படுகோரமான எளிமைப்படுத்தப்பட்டவையாக, தொழில்முறையில் உருவாக்கப்பட்டவையாக உள்ளன; ஒன்று இப்படிப் போகிறது: “In this paper, the determination of such a route is formulated and defined as an optimisation problem. We show that the problem belongs to the class of Travelling Salesperson Problems. The complexity of the problem is identified to be NP-hard. It is solved by reducing it to an instance of the well known Travelling Salesperson Problem with Neighbourhoods.”

   இப்படிச் சுருக்கிவிட்டு அற்பத்தனமாக ஊருக்குவூர் செல்லும் விற்பனைக்காரத்தனம் செய்து செய்வதற்கு – அதையும் நான் படிப்பதற்கு, உருப்படியாகஷ் ஷவரம் செய்துகொள்ளலாம். (செய்துகொண்டேன்; நெடுநாட்களாகச் செய்யவேண்டுமென நினைத்துக்கொண்டிருந்த விஷயமது; இதற்காக உங்களுக்கு நன்றி!)

   ஆம் – அவருடைய மாணவர்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது. ஆணால், ணம் டமிள் நாட்டை நிணைத்தாள்… :-(

 7. சேஷகிரி Says:

  அந்த ஆளின் பேச்சின் கானொளியை போட்டு எங்களை பாடாபடுத்தியாச்சு!.சிம்பு பாடின அந்த பாட்டையும் போட்டு தொலைக்க வேண்டியது தானே!


  • சரி. ரொம்பப் புலம்பவேண்டாம். சிம்பு பாடியுள்ள அழகான பாடல்; அவசியம் பார்க்கவும்.

   ணன்ரீ.

 8. சேஷகிரி Says:

  ரொம்பக் கொழுப்பு சார் உங்களுக்கு! குரங்கு மனுஷன் பாட்டுக்கு பதில் மனுஷக்குரங்கு பாட்டை போட்டிருக்கீரே!!

 9. இறை அடிமை Says:

  அஸ்ஸலாமு அலைக்கும்
  இஸ்லாம் குறித்தும் இஸ்லாமியர்கள் குறித்தும் அதுவும் சமீப காவி மோடி ஆட்சி வந்தபிறகான கதையாடல்கள் போலியான பிம்பங்கள் விஷமத்தனமான எண்ணங்கள் அதிகரித்துள்ளதை காண முடிகிறது.இதற்கு ஒரே மருந்து மனித இனத்திற்கே வழிகாட்டியாக இறங்கிய திருக்குர்ஆன் மட்டுமே.அதையும் சிலர் விஷமத்தனமாக வெட்டி ஒட்டி பொய்யான அர்த்தம் கூறி திரிக்கும் வேலைகளை காண முடிகிறது.வேறு என்ன செய்யலாம்?இஸ்லாமியர்கள் அல்லாதோருக்கு மட்டும் இலவசமாக திருக்குர்ஆன் வழங்குவதே அந்த வழி.நண்பரே நீங்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.நீங்கள செய்ய வேண்டியதெல்லாம் 1800-2000-787 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் பெயர் முகவரியை தெரிவிப்பது மட்டுமே.திருக்குர்ஆன் உங்களை தேடி வரும்.நன்றி.


  • அலைக்கும் அஸ்ஸலாம்.

   உங்கள் கரிசனத்துக்கு நன்றி.

   ஆனால், நீங்கள் உங்கள் கொர்-ஆனைச் சரியாகப் படிக்கவில்லை, அதிகபட்சம் அர்த்தம் புரிந்துகொள்ளாமல் நெட்டுருபோட்டிருக்கீறீர்கள் எனத் தெரிகிறது. ஒழுங்காகப் படித்திருந்தால் எப்போதோ உண்மைகள் வேறெங்கோ எனக் கண்டுகொண்டிருப்பீர்கள், பாவம்.

   ‘காவி’ மோதி ஆட்சியில் நாங்கள் சுபிட்சமாக இருக்கிறோம். சரியா?

   எது எப்படியோ – கொர்-ஆன் மட்டும் வருமா அல்லது வீச்சரிவாளுடன் கொள்கைக்கூட்டணி வைத்துகொண்டு வருமா எனத் தெரிவித்தால் நலம்.

 10. mekaviraj Says:

  Thanks for the share! இதில் உள்ளதை படிக்கவே ஒரு மாதம் ஆகும் :)

  I think AI “flight” is about the take off –
  https://www.oreilly.com/ideas/gradually-then-suddenly


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s