ஜெயமோகன் + அவருடைய வாசகக் கண்மணிகளின் தொடர்வதந்தி பரப்பலுக்கு அடுத்த ஸாஹித்ய விருது (2019), பார்ஸேல்!

December 11, 2018

வரவர — அன்றிப் பிறிதொன்றில்லாமல், அலக்கியமுண்டா மஜாபாரதமுண்டா, அறிவுரையுண்டா அலப்பரையுண்டா, அலக்கியவிமர்சனமுண்டா வாசகர்கடிதமுண்டா, நுண்கொம்புண்டா நுண்ணுணர்ச்சியுண்டா, படைப்பூக்கம் விரைகிறதா விரைவீக்கம் வளர்கிறதா, ஆன்மிகம் தளர்கிறதா கருத்துதிர்ப்பு இறுகுகிறதா என்று காலைக்கடன்களைத் தவணை முறையில் இணையத்துக்குப் பொழுதன்னிக்கும் தீவிரமாகத் திருப்பித் தந்துகொண்டு — கனகம்பீரமாகவும் படுபீதியளிக்கும் வகையிலும் கற்பனைக் கோவேறுகழுதையை உதைத்தெழுப்பி ஆரோகணித்து, ஒரு கையில் விஷ்ணுபுரத்தையும் இன்னொரு கையில் கருத்துதிர்ப்பு வீச்சரிவாளையும் தூக்கிக்கொண்டு பிற விசிலடிச்சான் வாசகச் சிப்பாய்களின் எக்காள முழக்கங்களுடன் செம்புழுதிப்புயல் புடைசூழ வாயுவேகம் வாய்வுவேகமாய் ஒர்ரே ஜெயமோகன அதிரடி அதகளம்… :-(

அப்படியே அலக்கிய அட்டைக்கத்தியும் அல்லக்கைகளுடனுமாய் டண்டணக்கா டணுக்குடக்காவென ஊர் சுற்றி வந்து பின் தனக்குத் தானே தனித்துவமாகக் கிடாவெட்டிக்கொண்டு சாந்தியடைந்து கொண்டால் பரவாயில்லை.

ஆனால் வீறிட்டெழுந்து கிளம்பி – ஒவ்வொன்றாக, பாவப்பட்ட அறிவியலை அறியவிழையும் பரிதாபத்துக்குரிய குஃபர் மானுடர் வாழும் பிரதேசங்களுக்குச் சென்று மதவெறியுடன் அறிவியற்புலங்களை ஜிஹாதி முறையில் ஹலால்தனமான அஹிம்சாவழி காந்தியராக வெட்டிச் சாய்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

இப்படியே போனால், ஜெயமோகனின் 120, 000மாம் பதிவு வாக்கில் (இப்போதைய எண்ணிக்கை ~~ 116, 500! அம்மாடியோவ்!!) அவருடைய சுற்று துப்புரவாக முடிந்து சலித்துவிடுமோ?

கூறுகெட்ட அறிவிலிகளான, அறிவியலின், சமூகத்தின் எதிரிகளான விடுதலை வீரமணிகளுக்கும் வைகோவால்சாமிகளுக்கும் பூவுலகின்நண்பன்களுக்கும் இவர் போய்க்கொண்டிருக்கும் திசைக்கும் என்ன வித்தியாசம்? கொஞ்சம் ஏமாந்தால் – அறியாமைச் சாக்கடையில் திளைத்து இளிக்கும் கழிசடைகளான யுவகிருஷ்ணா மதிமாறன்களுக்கும், (இப்போதுமேகூட, நான் உண்மையாகவே ஓரளவுக்காவது மதிக்கும்) ஜெயமோகன்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் போய்விடுமோ? :-(

பயமாகவே இருக்கிறது. அல்லது விட்டது இந்த அலக்கியச் சனியென்று, இனிமேல் சமகாலத் தமிழ் எழுத்தாளர்களையே படிக்கக் கூடாதோ? இரத்த அழுத்தமாவது குறையுமே!

-0-0-0-0-0-

ஐயா ஜெயமோகன்!

உங்கள் தாளடி பணிந்து நாக்கு தள்ள, குரல் நடுங்க, கால்கள் கனக்க, கைகள் தளர, இதயம் சனிக்க, இமைகள் பனிக்கக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் என்னத்தை வேண்டுமானாலும் உங்கள் மனம்போன போக்கில் ‘அறிவியல்’ புனைவு சாகசம் கற்பனை என கைக்குவந்தபடி எழுதிக்கொள்ளுங்கள். இதையும் நாங்கள், உங்களுடைய மேலான ஜெயமோகவியலின் ஒரு அங்கவியலாக எடுத்துக்கொள்கிறோமியல்.

ஒருவிஷயத்தை, நிறைகுடமான தாங்களே ‘அறிவியல்’ எனச் சொன்னபின், அசால்ட்டாக டபக்கென்று எடுத்தியம்பியபின் — அதற்கு அறிவியல் வகைச் சான்று, சித்தாந்தம் நிர்ணயம், நிரூபணம், பூர்வபக்ஷம் எழவு, பின் உத்தர பக்ஷம் என்றெல்லாம் முழுச்சுற்றுச் சுற்றி, தர்க்கரீதியாக நிறுவவேண்டிய அவசியமோ தேவையோ, உங்களுக்குத் துளிக்கூட இல்லை. எல்லாவற்றையும் லூஸ்ல வுட்றலாம் என்பது தங்களுக்கும் தெரியாததல்ல. உங்கள் சராசரி (அடியேன் உட்பட) வாசகரின் அறிவின்(!) எல்லையும் தமிழனின் பிரசித்தி பெற்ற ஞானசூனியத்தனத்தையும் தேவரீர் அறியமாட்டீரா என்ன?

இருந்தாலும் மேன்மேலும் அறிவியல்மிகைக்கற்பனை அறிவியல்புனைவுசாகசம் என்பவற்றையெல்லாம் உங்களுடைய மேன்மை மிக்க இரண்டு கண்களால் அவதானித்து, மூன்று வகையாகப் பகுத்து நான்கு வகையில் வகுத்து ஐந்துவகையில் உணர்ந்து ஆறுவகையில் தொகுத்து ஏழுவகைகளில் ‘சான்று’களைக் கதறக்கதற இஸ்த்துக்கினு வந்து — அதை எட்டுவகைகளில் எழுதி – அதையெல்லாம் ஒன்பதுவகைகளில் என்னைப் போன்ற அரைகுறை வொம்போது வாசக முட்டாக்கூவான்கள் புரிந்துகொண்டு… ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… புல்லரிப்பு தாங்கமுடியவில்லை. உங்கள் ஆகிருதிக்கு இதெல்லாம் தேவையா ஐயா? :-(

நான் கூச்சமில்லாமல் எழுதுவதுதான் அறிவியல்‘ என்பதிலிருந்து, மஹாராஜா போல ‘நானே அறிவியல்!‘ எனும் தங்க நாற்கர ராஜபாட்டையில் தாங்கள் படுவேகமாக விரைந்துகொண்டிருக்கிறீர்கள் என எனக்குத் தெரியாதா? என்ன இருந்தாலும் தங்களுடைய படைப்புப் படையல்களை, சற்றொப்ப சுமார் முப்பது வருடங்களாக நுண்ணுணர்வுடன் நுணுக்கமாகச் சுயவிலக்கமில்லாமல் படிக்கும் பாக்கியத்தை அமோகமாகப் பெற்றவனல்லவா நான்?

மேலும், தமிழகத்தில் இலுப்பை மரத்தட்டுப்பாடு வந்துகொண்டிருப்பதை அறிந்துகொண்டுள்ள இனிய ஜெயமான தாங்கள், படைப்பூக்கத்துடன் எழுதுவதைப் பலமடங்காக உயர்த்திக்கொண்டு சர்க்கரைக்கு மாற்றாகத் திகழ்வதை அறியாதவனான அடியேன்? (இந்த அச்சந்தர்ப்பத்தில், சன்னிதானத்தின் மேலான பார்வைக்கு இதனைக் கொணர்கிறேன்: கிழக்கில் விரியும் கிளைகள் 12: அணையப் போகும் ஜோதி

சரி.

–0-0-0–

பறவைகள் + 5ஜி ‘கதிரியக்கம்’ + ஸெல்ஃபோன் டவர்

+ … தொடர்புள்ள கயமைப் பீலாக்கள்

ஜெயமோகன் ‘வெள்ளை மனதுடன்’ சுயகாரியமாக, 2.0சப்பைக்கட்டாக ஆமோதிக்கும், அடிப்படைகளேயற்ற  பீலா:

“இணையத்தில் இச்செய்தியை வாசித்தேன். நெதர்லாண்ட் நாட்டில் டச்சு ரயில்நிலையத்தின் 5g செல்பேசி சேவைக்கான கோபுரம் நிறுவப்பட்டதை ஒட்டி நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்தன.”

இந்த எரின்எலிஸபெத் குப்பையாளர், இன்னொரு கும்மாளரான ஜான்குலீஸ் பைத்தியத்தின் உளறலை வைத்துப் போட்ட பதிவுகளை வைத்து – நம் அறிவியல் செம்மல் பேராசான், சதித்திட்ட வர்ணனைகளை அறிவிலித்தனமாக விரிக்கிறார். சபரிமலை விஷயத்தில் எஸ்குருமூர்த்தி ஏதோ லூஸ்ல சொன்னதுக்கு, பேராசான் அறச்சீற்றதோடு வீறிட்டது நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

ஜான் குலீஸ் கீழ்கண்டது  போலவெல்லாம் பினாத்தியிருக்கிறார்.   பேராசான் அவருடைய உதவிக்கு விரையவும்…

பேராசான், கவனிக்கவும்!

முதலில் – அது சேவைக்காக இல்லை. பரிசோதனைக்காக.

டச்சு ரயில் நிலையத்தில் நிறுவப்படவில்லை. இன்னொரு இடத்தில். தஹேக் நகரத்தில் ஹுய்கென்ஸ்பார்க் எழவில்.

‘கோபுரம்’ நிறுவப்படவில்லை; மதச்சார்பின்மையுடன் கும்மட்டமும் நிறுவப்படவில்லை. வெறும் சிறு அன்டென்னா தான். மன்னிக்கவும். நம் கற்பனையாசானுக்கு எதுவுமே, சுயபிம்பம் போல, வீங்கல் விவகாரம்தான்!

பரிசோதனை நடந்தது 18 ஜூன் 2018 அன்று –ஒரு நாளுக்கு மட்டும்; அதுவும் ஏகப்பட்ட கெடுபிடிகளுக்குப் பின்னர்!  அதற்குப் பிறகு “கோபுரம் நிறுவப்பட்டதை ஒட்டி”  சுமார் நான்கு மாதங்களுக்குப் பின்னர் உடனடியாக 19 அக்டோபரில் பறவைகள் இறக்க ஆரம்பித்தன – சுமார் 15 நாட்களுக்கு இது தொடர்ந்தது.

அன்டென்னா+உபகரணம் தயாரித்த ஹுவாவே (Huawei), அங்குள்ள ஸெல்ஃபோன்சேவை கம்பெனி (கெபிஎன்), ஹாலந்த் அரசின் தொலைத்தொடர்பு நிறுவனம் – ஆகிய மூன்றும் இது தொடர்பான பீலாக்களைக் குறித்துச் சிரித்திருக்கின்றன. ஆனால் தேர்ந்த மேதாவி அறிவியலாளர்களான எரின் எலிஸபெத், ஜெயமோகன், ஜான் குலீஸ் ஆகிய மூவர் அணியினர் மட்டும் இந்தப் பீலாவை நம்புகிறார்கள்! அவர்கள் வாழ்க!

அலைவரிசை உபயோகம், மொபைல் சேவை, இன்டெர்நெட் சேவை போன்ற விஷயங்களெல்லாம் மகாமகோ சிடுக்கல்கள் கொண்டவை.  ஒரு காலத்தில் (1998-2001 வாக்கில்) ஹ்யூஸ் நெட்வர்க் ஸிஸ்டெம்ஸ் (இது இப்போது உடைத்து விற்கப்பட்டுவிட்டது) எனும் ஒரு அழகான நிறுவனத்தில் குப்பை கொட்டிக்கொண்டிருந்தபோது இதெல்லாம் கொஞ்சம் அறிமுகம். மேலும் நான் ஒரு ஹேம் ரேடியோ ஆபரேட்டர். இந்தத் தொழில் நுட்பங்களுடனும் அவற்றை வணிகமயமாக்குவது குறித்தும் அனுபவம் இருப்பதால் சொல்கிறேன் – இம்மாதிரி சேவைகளைத் தொடங்குவதற்கு முன்னர் செய்யப்படவேண்டிய பாதுகாப்புகள், துப்புரவாகப் பண்ணப்படவேண்டிய பரிசோதனைகள், தயாரிக்கப்படவேண்டிய ஆவணங்கள், தணிக்கைகள் — ஏராளம், ஏராளம்.

ஆனால், உட்கார்ந்த இடத்திலிருந்து, குசு விட்டுக்கொண்டே மஜாபாரதத்தையும் அலக்கியத்தையும் எழுதுவதும், கண்டமேனிக்கும் கருத்துதிர்ப்பதும், உதாசீனத்துடனும் அனுபவமோ அறிவோ இல்லாமலும் அறிவியலைக் கரித்துக்கொட்டுவதும்  மிகமிகச் சுளுவான விஷயங்கள். விஜயகாந்த் கமலகாசன் ரஜினி படம் போன்று அறிவியலை மசாலா செய்து உதைத்து, மூடர் கூட்டத்துக்குக் கதை புகட்டுவதும் ரொம்ப லேசு. ஒரு முட்டாக்கூ பட்டாளம் சுற்றித் திரண்டுவிட்டால் அந்தப் போராளிப் போதையில் பிரதமர் மோதிக்கும் விலாவாரியாக விலாநோக அறிவுரை தரலாம்! இன்பலாகிரிதான் போங்கள்!!

பறவைகள் திடீரென்று கும்பலாக இறப்பது என்பது அனாதி காலம்தொட்டு நடக்கும் விஷயம். பலவற்றுக்குக் காரணம் சொல்லமுடியும். சிலவற்றுக்குச் சொல்லமுடியாது. அவ்வளவுதான். மேலும் இந்த விஷயத்தில்,  பெரும்பாலும் ஒருவிதமான பறவைகள் (ஸ்டார்லிங்ஸ்) மட்டுமே இறந்திருக்கின்றன. சுமார் 300. பிற இறக்கவில்லை- அவற்றுக்கு ஒருவிதமாக பிரச்சினையும் ஏற்படவில்லை. இம்மாதிரி கூட்டுத் தற்கொலைகள் பலமுறை நடந்திருக்கின்றன.

உண்மையைச் சொல்லப் போனால் – நானே இம்மாதிரி 15-20 ஒரேவகைப் பறவைகள் ஒரே இடத்தில் இறந்துகிடப்பதை என்னுடைய வனாந்திர பைத்தியக்கார நாட்களில் பார்த்திருக்கிறேன். விஷம் வைக்கப்பட்டதா, ஏதாவது குழுச் சண்டையா, (தமிழ் அலக்கியம் போல) தொத்துவியாதியா – இல்லை ஏதோ நாம் அறியாத அவற்றின் உளவியல் விஷயமா, இன்ன காரணம் எனச் சொல்லமுடியாமல்.

தமிழகத்தில் தீர்த்தமலை பகுதியில் இப்படி ஒருமுறை பார்த்திருக்கிறேன். கடைசியாக நான் இம்மாதிரி பார்த்தது செஞ்சி மலை பக்க கள்ளன்மலை(?) என்கிற இடத்தில் – அனைத்தும் ஏழுசகோதரிகள் என அழைக்கப்படும் மஞ்சள்மூக்கு ஜங்க்கிள் பாப்ளர் (Turdoides affinis) வகை. 2013வாக்கில். (அந்த வருடம் ஜெயமோகன் பக்கத்திலுள்ள பாண்டிச்சேரியில் தமிழ்ச்சங்கத்தில் பேசவந்தார் என நினைவு – அந்தக் காரணமாகவும் இருக்கலாம்; அலக்கியவாதிகளின் கதிரியக்கப் படுவீரியத்தை நம்பவே முடியாதன்றோ?)

சரி. ஜெயமோகனின் பிரச்சினை என்னவென்றால், குட்டு வெளிப்பட்டு இது வதந்தி என்று நிறுவப்பட்டவுடன் – இந்த ஜான் குலீஸ், தான் 5ஜிக்கும் பறவை இறப்புக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகச் சொல்லவில்லை என ‘மாத்தி ரோசிச்சி’  அறிக்கை விட்டார். பாவம் – இப்போது ஜெயமோகனும் எரின் எலிஸ்பெத்தும்தான் மூவர் அணியில் இருவராக இருக்கிறார்கள். ஆழ்ந்த அனுதாபம்.

“இத்தகைய செய்திகள் முன்னரும் வந்துள்ளன. பறவைகளின் கூட்டம் கூட்டமான இறப்பை ஆய்வாளர்களோ செய்தியாளர்களோ வெளிப்படுத்துவார்கள். உடனடியாக அது ‘நிரூபிக்கப்படவில்லை’ என்ற செய்தி பரப்பப்படும். அதற்குப்பின் எவர் என்பது ரகசியம் அல்ல. இன்றைய அறிவியலை பெருந்தொழில்நிறுவனங்கள் ஆள்கின்றன என்று அறிந்தவர்களுக்கு அது வியப்பூட்டுவதும் அல்ல.”

இப்படி அறிவிலித்தனமாக  சதித்திட்டம் கிதித்திட்டம் என்றெல்லாம் அட்ச்சிவுடுவற்கு கல் நெஞ்சு வேண்டும். அல்லது முற்றும் துறந்த (அதாவது அறிவு உட்பட) ஞானியாக இருக்கவேண்டும்.

ஜெயமோகன் குறித்த என் சந்தேகங்கள் இப்போது நிவர்த்தியாகி விட்டன. அவர் முற்றும் துறந்த ஞானிதான். அவர் வாழ்க! அதனால் தான் அவரைச் சுற்றி அவ்வளவு கும்பல்!

கும்பலும் வாழ்க!

மேற்கண்ட பீலாவைக் குறித்த பல செய்திகள் (எல்லாம் அல்ல) இந்த சுட்டியில் இருக்கின்றன. படித்துவிட்டு ஜெயமோகனுக்கு வாசகர் கடிதம் எழுதவும்.

கண்டிப்பாக, “கதிரியக்க ஜெயம்,” என ஆரம்பித்து எழுதவேண்டும், சரியா?

-0-0-0-0-0-

அவர்கள் பிலுக்கிக் கொள்வதைப் போல உண்மையாகவே அறச்சீற்றமுடையவர்களாகவும் நியாயவான்களாகவும் இருந்தால், குறைந்தபட்சம் இனிமேலிருந்தாவது கீழ்கண்டவற்றை ஜெயமோகனாதிகள் செய்வார்கள்:

1. பறவைகளுக்கு கைபேசி தொடர்பான ‘கதிரியக்கத்தினால்’ மகாமகோ வாழ்வாதாரப் பிரச்சினைகள் இருப்பதால் – இனிமேல் எந்தவிதமான கைபேசிகளையோ அது தொடர்புள்ள தொழில் நுட்பங்களையோ அவர்கள் துளிக்கூட உபயோகிக்கப் போவதில்லை.

2. ஸெல்ஃபோன் அலைவரிசை மைக்ரொவேவ் ‘கதிரியக்கம்’ போன்ற ‘விஷப்பரீட்சை’களில் ஈடுபடும் எந்த நிறுவனத்துடனும் / அமைப்புடனும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளமாட்டார்கள். அவர்களுடைய இழிபணத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். தாங்களும் அவற்றிலிருந்து ஒன்றையும் வாங்க மாட்டார்கள், அவை தயாரிக்கும் விஷயங்களையும் உபயோகிக்க மாட்டார்கள்.

3. பறவைஉயிர் பறவைஉரிமை… என, பாவம், அநியாயத்துக்கு உருகுவதால் – எந்த விதமான பறவையையும் (கோழியிலிருந்து ஆரம்பித்து…) கொல்ல மாட்டார்கள், அவற்றின் மாமிசத்தையும் உண்ணவே மாட்டார்கள்; அது மட்டுமல்ல, மாமிசம் விற்கும் கடைகளின் முன் மறியல் செய்வார்கள்; சூப்பர்மார்க்கெட்டுகளைச் சுற்றி மனிதவளையம் அமைப்பார்கள்.

4. “இன்றைய அறிவியலை பெருந்தொழில்நிறுவனங்கள் ஆள்கின்றன என்று அறிந்தவர்களுக்கு அது வியப்பூட்டுவதும் அல்ல!” எனும் பிரமிக்கவைக்கும் கைவல்யநிலைப் பார்வையினால் – பெருந்தொழில்நிறுவனங்களையும், ஊக்கபோனஸாக அறிவியலையும் முழுவதும் புறக்கணித்து மணலில் மண்டையைப் புதைத்துக்கொள்வார்கள். ஏனெனில், வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளுக்கு செவ்விலக்கியம் போதுமே!

ஒழிக அறிவியல்…
…ஆகவே அதனை இகழ்
வாழ்க ஜெயமோகிஸம்…
…ஆகவே அவரை மட்டும் புகழ்.

ஆமென்.

பின்கேள்விகள்: ஜெயமோகனாதிகள் நியாயவான்களாக, நேர்மையானவர்களாக இருப்பார்கள், தங்கள் அறிதலை(!) செப்பனிட்டுக்கொள்வார்கள் என்றெல்லாம் நினைக்கிறீர்களா? அவர்கள் தம் தவறுகளை உணர்ந்து – தாங்கள், தேவைமெனக்கெட்டுச் சொல்லிவரும் பொய்களுக்காக மன்னிப்புக் கேட்பார்களா?

15 Responses to “ஜெயமோகன் + அவருடைய வாசகக் கண்மணிகளின் தொடர்வதந்தி பரப்பலுக்கு அடுத்த ஸாஹித்ய விருது (2019), பார்ஸேல்!”

  1. பெயரிலி Says:

    சார், அவருடைய கருத்துக்களை ஒரு எளிய மனிதனின் பொதுப்புத்தி சார்ந்த அரசியலற்ற பார்வை என எடுத்துக் கொள்ளலாமே


    • சரி. நீங்கள் இதனைக் கிண்டலாகச் சொல்கிறீர்கள் என எடுத்துக் கொள்கிறேன்.

      ‘கருத்துக்களை’ எனச் சொல்கிறீர்கள். ஒப்புக்கொள்கிறேன். (ஆனால் க் தேவையேயில்லை. கொஞ்சம் தமிழை கவனிக்கமுடியுமா?)

      பேராசானுடைய கருத்துகள் களையெடுத்து மடக்கி உழப்படவேண்டியவையே! வரவர இந்த கருத்துதிர்த்தல் அளவுக்கு மீறிய பீலாவாதமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

      அவருக்கு அறிவியல், தொழில்நுட்பம், மஹாபாரதம் பற்றியெல்லாம் ஆலோசனை வழங்க ஆட்களே இல்லை போலும்.

      வெறும் ஜிங்சக்குகளை வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியும் – அலக்கியம்தான் அதிகபட்சம் ‘பண்ண’ முடியும்.

      ஆனால், இலுப்பைப்பூமுதல்வாதம் இருக்கவே இருக்கிறது. இப்படியே பொதுப்புத்தியுடன் அழிச்சாட்டியம் செய்துகொண்டிருக்கலாம். நன்றி!

  2. K.Muthuramakrishnan Says:

    நல்ல வேளையாக இந்தக்கட்டுரையை உங்கள் மட்ராஸ் கொச்சை மொழியில் எழுதவில்லை.அல்லது ஜெயமோகிகளின் வெண்டைக்காய்+விளக்கெண்ணாய்+கற்றாழை மொழி நடையில் எழுதாமல் விட்டீர்கள்.
    //அந்த வருடம் ஜெயமோகன் பக்கத்திலுள்ள பாண்டிச்சேரியில் தமிழ்ச்சங்கத்தில் பேசவந்தார் என நினைவு – அந்தக் காரணமாகவும் இருக்கலாம்; அலக்கியவாதிகளின் கதிரியக்கப் படுவீரியத்தை நம்பவே முடியாதன்றோ?)//
    இந்த நகைச்சுவை ஒன்றுக்காகவே உங்களை நான் என் “ஆ!ஆசான்!!”ஆக வரித்துக் கொண்டுவிட்டேன் அவர் ஆசான் என்றால் நீங்கள் ஆஆசான்!அதாவது ராஜ ராஜன் என்பது போல வைத்துக்கொள்ள்லாம்.

    இந்த கணினி வழித் தகவல்களை மிகவும் ஜாக்கிரதை உணர்வுடன் அணுகவேண்டும் என்று நான் சந்திக்கும் மாணவ மாண்விகளுக்கு அறிவுறுத்தி வருகிறேன்.

    ஸ்ரீராமகிருஷ்ண‌ர் அந்தக்கால அறிவு ஜீவிகளைப்பற்றி‍(படித்த முட்டாள்களைப் பற்றி) இப்படிக் கூறுவார்.”மழை கண்ணுக்கு நேராகக் கொட்டிக்கொண்டிருந்தாலும்,நாளிதழில் செய்தியாக வரவில்லை;நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்பார்களாம். அதுபோல இன்று கணினியில் யார் எதை எழுதினாலும் கேள்வி கேட்கக்காமல் ஏற்றுக்கொள்ளும் ஒரு கூட்டம் கிளம்பியிருப்பது மனதை வருத்துகிறது.

    அதுவும் இப்படி ‘ஜிங்சா’ கூட்டம் ஒருவரை சுற்றி நின்றால் போதை தலக்கேறிவிடுகிறது. நல்லதைச் சொன்னாலும் என்னை முட்டாள் என்கிறானே என்று தானே புனைந்துகொண்டு பிலாக்கணம் வேறு.அதற்க‌டுத்தாற் போல் ‘ஜாதி மேட்டிமை’ என்று அவதூறு.

    அற்ச்சீற்றத்துடன் ஜெயமோகிகள் செல் போன்களைத் தூக்கி எறிய வேண்டும்.
    செய்வீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா?


  3. ஐயா, நான் ஆஆசான் அல்லன். வெறும் அஆசான் மட்டுமே.

    இதுவும் போசான் எனும் அணுத்துகள் பிரிவின் அங்கம் என நினைவெல்லாம்நித்யாவுக்கு நான் சொன்னேன் என நானே சொல்கிறேன்.

    மற்றபடி நம் அலக்கிய நாட்டில் — மாதமென்ன, அனுதினம் மும்மாரி வதந்திமழை பெய்கிறதா, நமைச்சரே?

  4. Kannan Says:

    Newbies are overawed by his articles, though I found them to be verbose by a factor of 10. He has a raw material forever and can write a chapter or two in a ziffy.

    Two or three ‘voi pollanthan’ meetings in a month with all expenses paid. What else you could ask for ?

    Life is good :)


    • Sir, my factor can be 100000x. I not only have Raw material – but lots more of YESraw (im)material too!

      What’s more – my rates are cheaper.

      So, can you organize a meeting? 50% profits can be shared.

      Thanks in advance.

      __r.

      • Kannan Says:

        Sure, 3 hrs of non stop gibberish with no full stop in sight.

        We’ll lock the doors first, let them piss them in their pant.


      • Lovely. Good suggestions.

        When needed, we can use colons. Some (in)digestion has to happen, no?

        We will also collect the flow and later publish it in a major series. We will call it Fool Flow.

        Dunno what I can do, without cheerful help from you fella.

        __r.
        Deal?

  5. Ravi Says:

    “அதுவும் இப்படி ‘ஜிங்சா’ கூட்டம் ஒருவரை சுற்றி நின்றால் போதை தலக்கேறிவிடுகிறது. நல்லதைச் சொன்னாலும் என்னை முட்டாள் என்கிறானே என்று தானே புனைந்துகொண்டு பிலாக்கணம் வேறு.அதற்க‌டுத்தாற் போல் ‘ஜாதி மேட்டிமை’ என்று அவதூறு” – I endorse this. I am expecting an article shortly from Jeyamohan with this allegation. I am also appalled to note the level he is stooping nowadays. May be he is affected by hubris syndrome!


  6. ‘ஜாதி மேட்டிமை’?? அப்படியா என்ன? தமாஷ்தான்!​

  7. Velmurugan Kuberan Says:

    இப்பொழுது அவருடைய கிறுக்குத்தனம் மிக உச்சியில் இருக்கிறது. இந்த மாதிரி அறிவியலுக்கு எதிராக அவர் பேசுவதும் இது முதல் முறை அல்ல. இப்பொழுது A Marxசுக்கு வேறு நல்லவர் என்று பட்டம் அளித்து உள்ளார். ஜெயமோகன் ஒரு முழுமையான பிழைப்புவாதி என்று நினைக்கிறேன்.


    • என்ன செய்வது சொல்லுங்கள், அவரவருக்கு அவரவர் கிறுக்குத்தனம்.

      அமார்க்ஸ் பற்றி என்ன எழுதினார்/பேசினார் என்பது எனக்குத் தெரியாது. நடுக்கமாக இருக்கிறது.

      • Velmurugan Kuberan Says:

        https://www.jeyamohan.in/116850#.XD4xN1wzaUk

        விட்டால் அ மார்க்ஸ்ஸுக்கு Nobel peace prize தர வேண்டும் என்று சொல்லிவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது.

      • Velmurugan Kuberan Says:

        Suresh Venkatadri [ https://ibb.co/w7np6jL (அ) https://www.facebook.com/venkatadri.suresh/posts/2122282887835057 ] என்பவர் ஜெயமோகனின் இந்த இரட்டை நிலைபாட்டிற்கு எதிராக முகநூலில் எழுதி இருந்தார். அதற்குத்தான் வாசக(பெரும்பாலும் போலியாக இருக்க வாய்ப்பு உண்டு) கடிதம் வழியாக இப்படி கரித்து கொட்டி இருக்கிறார் ஜெயமோகனார். ஜெயமோகன் எழுதும் எதையும் இனிமேல் நம்பவே முடியாது போல இருக்கிறது.


      • ஐயா, குறிப்புகளுக்கு நன்றி.

        எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் (நிறைய பட்டவுடன் தான் தெரிந்தது, இதுவும்) – நம் சூழலில் இருக்கும் பலப்பலருக்கு ஆராதனை செய்யப்படும் தகுதியில்லை. அனைவரும் சகமனிதர்கள்தாம். தங்களை ஆசான் என அழைப்பதை விரும்பினாலும் (எவருக்குத் தான் இந்த விருப்பமில்லை, சொல்லுங்கள்?) சாதாரணர்களாகிய அவர்கள் சாதாதோசைதான். சிலசமயம் உப்பி ஊத்தப்பமாகிவிடுவார்கள். அவ்ளோதான்.

        என்ன சொல்லவருகிறேன் என்றால் – பிரச்சினை என்பது வாசகர்களாகிய நம் பக்கம்தான். நாம் தான் எதிர்பார்ப்புகளை வளர்த்திக்கொள்கிறோம்.

        நாம் தான் அன்னப்பறவைகளாக இருக்கப் பயிற்சி பெறவேண்டும். அதுவும் விழுந்துவிழுந்து சுற்றிச்சுற்றிக் குதித்துக்குதித்துக் கும்மாளமிட்டுச் சிரிக்கப் பழகவேண்டும்.

        நன்றி.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s