அடப் பாவிகளா!
December 10, 2018
இப்டியாடா பொய் சொல்வீங்க? :-( வதந்தி பரப்புவீங்க??
ஒரு குறும்பதிவை வெளியிட்டிருக்கிறார் ஜெயமோகன்: செல்பேசிக் கதிரியக்கம் ,பறவைகளின் இறப்பு- ஒரு செய்தி.
இது அவருடைய சொந்தச் சரக்கா அல்லது ஏதாவது புளகாங்கித வாசக அடிப்பொடியின் அதிவுயர் கருத்தா என்பது எனக்குச் சரியாகப் புரிபடவில்லை (இனிய ஜெயம் அன்னை ஆசான் நுண்கொம்பு அறிதல் முறைமை நினைவெல்லாம் நித்யா என ஒன்றும் அந்தப் பதிவில் இல்லை!). ஆனால், அபத்தக்களஞ்சியமான இதனை ஜெயமோகன் எழுதவில்லை என நம்பவே ஆசை. ஏனெனில் அவர், பொதுவாகவே விஷயங்களைப் பகுத்தாய்ந்து அடிப்படை அறத்துடன் மனச்சாய்வுகளில்லாமல் துல்லியமாக அறிந்துகொள்ள முயற்சிப்பவர் எனவேறு நம்புகிறேன். தேவையா? :-(
செல்பேசிக் கதிரியக்கம் ,பறவைகளின் இறப்பு- ஒரு செய்தி
(மேற்கண்டது சிறிய குறிப்புதான்; இதுவரை சரணடைந்திருக்கவில்லை என்றால் ஓடிப்போய் படியுங்கள். சகல சௌபாக்கியங்களுடன் பரலோக ராஜ்ஜியமும், போர்க்கால ரீதியில் உடனடியாக உங்களை வந்தடைய நான் கியாரண்டீ!)
அலுப்பும் கோபமும் அமோகமாக வருவதால், பின்னர் இதுபற்றி கொஞ்சம் விவரமாக எழுதுகிறேன்.
அதுவரை, கீழ்க்கண்ட என் பரிதாப மெட்ராஸ்பாஷைவழி கீழ்த்தர அங்கலாய்ப்பை நெட்டுரு போடவும்.
பத்திக்கினு வர்தேடா!
பீலாவுட்டே பொளப்ப நடத்ற எரின் எலிஸபெத் பொம்பளயோட ஒளறல யெல்லாமாடா நாம்ப மேற்கோள் காட்டுவோம்?
அறிவியல்ண்றத எப்டீ எள்த்துககூட்டிப் படிக்றதுன்னிட்டாவது அந்த பீதிவாத அம்மணிக்கு தெர்யுமாடா?
அவுங்க்ளயே வுடு, நம்ப்ளுக்கு?
நம்க்கின்னிட்டு தரம் வோணாமாடா? மெட்றாஸ் ரவுடி ராம்பகிஷ்டன்க்கு சாவுத்திய வக்காலொளீ கொட்த்துட்டானுவோன்னிட்டு உள்ளாற கோவப்பட்டுக்கினு, அப்ப நாம்ப வொடனடியா லோக்கல்லா விஞ்ஜானி ஆய்ட்லாம்ண்றது லாஜிக்கு ஒதிக்குதே! அப்பால இப்டியே போனாக்க லத்தீ சாருநிவேதித்தா நாந்தாண்டா இஞ்சிநீரு கஞ்சிநீருண்ற மாறீ அவ்த்து வுட்றுவாரேடா!
ஏதோ கூறுகெட்ட மூதி வெள்ளக்காரி சொல்லிப்புட்டா அக்மார்க்கு பொரளில்லாம் உண்மையாய்டுமா? ஏண்டா இப்டீ வெள்ளைக்காரங்கள நக்கிக்கினே கீறோம்?
இந்தப் பறவே-வேவு-டவ்ரு பத்தீ ஏதாச்சும் யாராச்சும் ஆராய்ச்சி கீராய்ச்சி பண்ணோமாடா? 5ஜிய வுடு, பறவைங்கோ பத்தியாவ்து தெரிஞ்சிக்கினு கீறோமா?
எந்த பேட்டைல எங்க எது ஓஸீல கெடக்குது, வதந்தி எப்டீ அத்த லவ்ட்லாம்ன்னிட்டு பற்ந்துக்கினே இர்ந்தா, நாம பற்வையாய்டுவோமாடா?
அல்லாம் சரி… சாவுங்க நடத்திச்சா, எங்க, எப்டின்னிட்டெல்லாம் நோண்ட்னோமா, பிர்ஞ்சிக்கினோமா? முன்னக்காட்டி இது நடந்துக்கீதா, எப்போ நடந்திச்சின்னு ரோசிச்சோமா? வொளற்றத தவ்ற, அப்பால எத்தையாவது சாதிச்சிர்க்கமா? ஒண்ணயும் செய்யாம, ஒர் மஸ்த்தயும் புடுங்காம ஏண்டா இப்டீ வொக்காந்த எட்த்லேர்ந்து குஸ் வுட்டுக்கினே கூகிள்செஞ்சி கண்ட சோம்பேறி சுட்டிய பட்ச்சிட்டு மன்ஸு வர்த்தப்பட்டு பொங்கீ, மொட்டத்தலக்கும் மொளங்காலுக்கும் கார்ப்பரேட்டு சதி முட்ச்சி போட்டு நம்பொ வவுத்தெரிச்சல நாம்பளே கொட்டிக்றோம்?
ஏண்டா நாம்ப இப்டீ கொள்த்து தவ்க்களே மாறீ கொர்க்குகொர்க்குன்னிட்டு ஸவுண்டு வுட்டுக்கினேகீறோம்?
இதே ரேட்ல போனாக்க, வெவஸ்த கெட்ட பேடிங்கோ எள்தற மாய்மால பசுமேவெகடனுக்கும் நம்ப்ளுக்கும் இன்னாதாண்டா வித்யாசம்? :-(
இப்டீயே பீலா ஒட்டிக்கினே இர்ந்திட்டு, ஹீலரு பாஸ்கர எப்டீடா, நாமபோயி கிண்டல் பண்ன முடியும்? இத்துக்கெல்லாம் நம்ம நித்தியும் வுடுதலே வீறமணியும் ஜீமானுமே பெட்டரேடா! வோத்தா, நம்ப குண்டீல கீறத லூஸ்ல வுட்டுட்டு பெற்த்தியான் குண்டிக்குள்ளாறகீத பலானத மோந்து பாத்துக்கினே கீறோமேடா!
கொஞ்சம்னாச்சியும் வெக்கமா இல்லையாடா நம்ப்ளுக்கு? போக்கத்தவனுங்களாக் கீறோமேடா… டமிள்னாட்ல கீற கொஞ்ச நஞ்ச அற்வியலயும் சுத்தமா ஒள்ச்சிடுவோம் போலக்கீதேடா!
அளுவாச்சியா வர்தே, இப்ப இன்னாடா செய்றது…
:-(
பின்குறிப்பு: இதனை ஒரு அன்பர் கடிதமாக எனக்கு நானே ‘தொழில் முறையில்’ உற்பத்தி செய்துகொள்ளலாமா என நினைத்தேன், நப்பாசைப்பட்டேன். ஆனால் சகஏழரையார்-ஏந்தல் முத்துராமகிருஷ்ணன் இதனை உடனடியாகத் துப்பறிந்து கண்டுபிடித்து என் குட்டை உடைத்து விடுவார் (pond break leaver) என்பதால், பயந்துபோய்ப் பின்வாங்கி, என் பெயரிலேயே நடுக்கத்துடன் வெளியிட்டுவிட்டேன். நன்றி.
பின்பின்குறிப்பு: அநியாயப் பூனைகளின் ஆகாத்தியம் அதிகமானால் அவற்றுக்கு அவ்வப்போது மணி கட்டுவதில் எனக்கொரு பிரச்சினையும் இல்லை. எப்படியும், இப்படியெல்லாம் எழுதுவதில், அற்ப சாதா வாசகனாகிய எனக்கு ஒரு மசுத்துக்கும் இழப்பு இல்லை என்பது உண்மையென்றாலும், இம்மாதிரி சராசரித்தனமாக கேவல விஷயங்களைக் குறித்த நம் தமிழ் அறிவுஜீவியவுலகத்தின் காத்திரமான காரியமௌனம் (=’நமக்கெதுக்கு வம்பு’) என்பது அமோக வருத்தத்தைத் தருவதைத் தவிரப் பிறிதொன்றில்லை.
—
December 10, 2018 at 09:23
Sir
Seems to be a complete hoax . Moreover, at the time of 2.0 release, we have not got 5G as yet (should we at all give the conjecture(2.0 supposition a benefit of doubt ).
Master is smart by giving a neat caveat in the same article.
Indeed he made the article on 7th Dec’18 giving the link of the article alongwith caution ( it will take years for Scientists to prove the fact of birds dying out of radiation …how many years ? who would be doing that all ?? Leaving that to readers to explore ).
https://www.snopes.com/fact-check/5g-cellular-test-birds/
En passant, on a lighter note (with no radiation-expectation from your end ) … wish to inform you that you would be giving a tough fight to Lyricist Vivek (toast of the town) and Rakhesh as your knowledge of ‘ Madras Bashai’ excels these simpletons.
It is unfortunate that Tamil Cinema not spotted you as yet.
Charu can release his secret recipe of removing blocks in heart subject to our buying of his books in bulk which he stated in one of his murmurings ..He can reveal that secret of that concoction which is a panacea for all of heart diseases (he got one unfortunately and thereafter found that remedy) . Ready folks to buy his books to have that heart-ache before going for finding the remedy for same ?
எள்தற மாய்மால….Gommala or pure tamil word Maimala ?
Your angst fully understood and where are intellectuals of your caliber to beat the hatched-up stories ?
Regards
SB
December 10, 2018 at 09:36
ஐயா, அஃது மாய்மாலம் என்பதென்றறிக.
மற்றபடி இந்த விவேக் ராகேஷ் பற்றியெல்லாம் அவைகள் கழுதைகளா கவிஞ்ஜர்களா என்றுகூட அறியேனென்றும்… (நல்லவேளை!)
December 10, 2018 at 09:57
சொல்லொண்ணா தொழிலை செய்து விட்ட வெட்கம் ,கூச்சமின்றி எப்படி இவர்களால் மினுக்கி கொண்டு வெளியே திரிய முடிகிறது?செய்த அயோக்கிய தனத்தை மறைக்க எழுத்து ,வீடியோ என்றெல்லாம் கதைவிட எந்த எல்லைக்கும் துணிந்து விட்டார்களே?இத்தனைக்கும் மூல காரணம் ,தயாரிப்பாளர் என்ற அந்த ஈழத்து சுள்ளான்!கொழும்பு கொசுக்களை விட,இந்த ஈழத்து சுள்ளான்களுக்கு கொடுக்கின் கூர்மையும் ,விஷமும் அதிகம்!தமிழக தமிழர்களை தங்களின் ‘பலான’தொழிற்குவெகு காலமாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.அன்று, பேசா மடந்தைகளாம் பெண்களின் முந்தானை மறைவில் ஒரு’ பச்சைபடுகொலை’ செய்து தமிழர்கள் தங்கள் விருந்தாளியை கொல்பவர்கள் என்ற பழியை போட்டார்கள் ,இன்று,தமிழ் குளுவான்கள் இந்த பஞ்சம் பிழைக்க பரதேச கழுதைகள் மெல்லும் குப்பைகளை மெச்சிக்கொள்ளும் ,லுச்சா பயல்கள் என்ற கெட்டபேரை கூட்டிகொடுத்து விட்டானே?தங்கள் வாழ ,தமிழ் நாட்டில்,பட்டு கொலையும் செய்வார்கள்,படமும்,எடுப்பார்கள் ,இந்த சுள்ளான்கள்!
December 10, 2018 at 10:32
ஐயா, கருத்துகளுக்கும் கடுமைக்கும் நன்றி.
என்னைப் பொறுத்தவரை தொழில் தர்மம், பரப்புரை என்பதெல்லாம் – பிரச்சினை பெரிய அளவில் இல்லை. கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது என்றாலும்.
ஆனால், வடிகட்டிய புளுகுணிகளாக இருந்துகொண்டு – அறம் கிறம் மனச்சாட்சி என்றெல்லாம் பேசுவது கொஞ்சம் ஓவராக இருக்கிறது எனப் படுகிறது.
இரட்டை வேடம் பரவாயில்லை – ஆனால் இரண்டுக்கு மேல் தயவுசெய்து வேண்டாமே எனத் தோன்றுகிறது.
என்ன சொல்கிறீர்கள்?
December 10, 2018 at 11:19
ஆசான் ஏன் இப்படி கசந்து போகிறியர்கள்?அன்று நடந்த சொற்பொழிவுக்கு வந்து தங்களை பார்த்தது என் புண்ணியம் ,கூடவே அண்ணியாரோடு நீங்கள் தர்ம தரிசனம் கொடுத்ததில் என் ஜென்ம சாபல்யம் மெல்ல மெல்ல ,செல்லமாக சிணுங்கிக்கொண்டே செத்துப்போனது!அப்புறம் தம்பிக்கும் காலை ஆர்வம் உண்டோ?எப்போது பொது வாழ்க்கைக்கு வந்து எங்களை உய்விக்கப்போகிறார்?”……..என்னடா இது பழைய பிஎஸ்ன்ள் குமாஸ்தா வாழ்வில் கேப்டன் விஜகாந்த் காட்சிகள்?மகாபாரதத்தில் ராமாயணம் வந்து தொலைப்பதை ஏதாவது மாய மஜாவா?இது போல வயசுக்கு வராத டவுசர் பயல்களோடு கிளுகிளுப்பு காண்பது பிறவி பிச்சைக்கார பிழைப்பாளிகளுக்கு தேவைதான் ,இதையெல்லாம் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இந்த பரதேசிகளல்லவா தமிழக பிரதிநிதிகள் என்று நினைக்கும் அபாய சூழல் உருவாகுமே?
December 10, 2018 at 11:23
அப்புறம் தம்பிக்கும் கலை ஆர்வம் உண்டோ?a correction.sorry.
December 10, 2018 at 13:07
ஆசான் என்னடா வென்றால் நான் அவரை முட்டாள் என்று கூரிவிட்டதாக பாவனை செய்கிறார்.இங்கே நீங்கள் எனக்குப் பயந்தது போல பாவலா காட்டுகிறீர்கள். மொத்தத்தில் என்னை ஏன் அனாவசியமா இருவரும் வம்புக்கு இழுக்கிறீகள்? நீங்கள் என்ன கரடியாக க்கத்தினாலும் ஆசானின் மேல் பக்திப்பரவசம் அதிகமாகிக்கொண்டுதான் வருகிறது. பெரியார் பிள்ளையார் சிலையை உடைத்தவுடன் மக்களுக்கு பக்தி முத்திப்போய் அதிக எண்ணிக்கையில் கோயிலுக்குச் செல்ல ஆரம்பித்தனர்.அது போல உம்முடைய ஆசான் கடிப்பு(கரிப்பு?) அவருக்கு இன்னும் நிறைய வாசகர்களை ஏற்படுத்தும். உங்களுக்குள் குட்டுவதுபோல குட்டுகிறேன், என்று ஏதாவது கூட்டணியோ??!!
December 10, 2018 at 13:42
யோவ்! ஈதென்ன படுகோர சுவாரசிய கார்ப்பொரேட் சதியாக இருக்கிறதே!
December 10, 2018 at 16:55
மழ பெஞ்சு சாயம் வெளுத்திடிச்சி, இத்தோட அவர உட்டுட்டு ஆவற கார்யத்த பாப்போம்
December 10, 2018 at 16:59
ஐயன்மீர், அறிவுரைக்கு நன்றி.
ஆனால் வே தாளம் எனக்கு ஆதியிலிருந்தே பிடிக்கும். ஆகவே.
December 10, 2018 at 19:36
எஸ்றா முதலான பரிணாமத்தில் மிக முன்னேறியவர்களின் எழுத்துக்களை வாசித்ததன் பயன் இந்தப் பதிவில் தெரிகிறது. முன்னெல்லாம் கொஞ்சம் சிரமப்பட்டுப் படித்தால் புரியும். பாவம். கொஞ்சம் கஷ்டம் தான். ஆனாலும் சரிப்படுத்திவிடலாம். எதற்கும் குணசீலம் ஒருமுறை போய்வரப் பலன் தெரியும். ஏர்வாடிக்கும் முடிந்து வைத்துக் கொள்ளவும். செக்யூலர் வைத்தியமாக இருக்கும். 3.0 வரும் வரை இந்தப் பாதிப்பு இருக்கும் என்று கிரகசார பஞ்சாங்கம் சொல்கிறது. என்ன செய்வது? ப்ராரப்தம். வரக்கூடாதது வந்துவிட்டது. பொறுத்தார் பூமியாள்வார். ஜெயமோகக் கடாக்ஷ யந்திரம் மந்திரித்துக் கட்டிக் கொள்ளவும். ஏஸ்றா கறுப்பு அண்டாமல் இருக்க உதவும். ஈஸ்வரோ ரக்ஷது.
December 11, 2018 at 04:16
ஐயா, இது முற்றிவிட்டது. எதற்கு முடிந்துகொண்டாலும் பலன் இருக்காது.
உறவினர்களுக்குச் சொல்லியனுப்பியாகிவிட்டது.
பத்தாம் நாளுக்காவது வரவும்.
துக்கத்துடன்:
ரா.
December 11, 2018 at 09:04
Sir
https://timesofindia.indiatimes.com/blogs/jugglebandhi/spanish-citys-pigeon-whole-plan-to-get-rid-of-winged-menace/
Hope Jeymo or his fans not seeing above parody.
Else you will be flogging the dead-horse more (2.0).
Regards
SB