சாருநிவேதிதாவின் பாரிஸ் வாயு – சில தொடரும் பீலாக்கள்

November 27, 2018

நம் உடலில் ஏதாவது பாகம் (பக்கவாதம், பெராலிஸிஸ், ஸ்ட்ரோக் வகையறா வந்து) அது செயலிழந்தால் அதனைப் பொத்தாம்பொதுவாக ‘பாரிச வாயு’ என்று ‘அக்காலத்தில்’ சொல்வார்கள்.

அதேபோல, எவனோ ஒரு வேலையற்ற வாசகப் பாரிஸ் வள்ளன், சாருவை, நெக்குருகி கண்ணீர் பனிக்க இதயம் இனிக்க, உருவி வழிபாடு செய்பவன் – வெட்டியாக ‘ஸ்பான்ஸர்’ செய்திருக்கக் கூடிய காரணத்தால், நம் செல்லச் சாருநிவேதிதா சார் அவர்கள், எப்போதோ பாரிஸ் போய் அந்த எழவெடுத்த காரணத்தினாலேயே கண்டமேனிக்கும் அதனைப் பற்றி இஷ்டத்துக்கும் பீலா விட்டு வாயு வெளியேற்றத்தை – வாய்வழியாகவும் ப்ளாக் வழியாகவும் காணொலி வழியாகவும் பல்முனை tooth tip தாக்குதல் செய்து ‘என்னுடைய ஃப்ரெஞ்ச்னெஸ்‘ என நமக்கு அருள் பாலிப்பதுதான் – ‘பாரிஸ் வாயு‘ என்றறிக.

முன்குறிப்பு: ஓட்டுவதற்கு ஒரு எழவு லைஸென்ஸும் இல்லாமல் கண்டகண்டபாதைகளில் காணாததைக் கண்டது போல் கண்டமேனிக்கும் கற்பனைக் கழுதையை ஓட்டிச் செல்லுதல் + சுத்தமாகத் தெரியாத, அறிமுகமேயற்ற ஞானப்புலங்களில் ஏகத்துக்கும் ஏர் ஓட்டுதல் எனும் நகைச்சுவைப் பண்புகள் – நம் தமிழ் அலக்கியப் பிதாகமர்கள் அனைவரிடமும் அனேகமாக உண்டு – அவர்கள் குறுதெய்வங்களாக இருந்தாலும் சரி, எப்பேர்க்கொத்த மும்மூர்த்திகளாக இருந்தாலும் சரி, அக்மார்க் முழுமூடர்களாக இருந்தாலும் சரி.

…அவசரத்துக்கு அதிகபட்சம் விக்கிபீடியா பார்த்து ஏதோ தாமே வரலாற்றையும் ஞானப்புலங்களையும் தன்னந்தனியாகக் கடும் உழைப்புக்குப் பின் கண்டுபிடித்ததுபோல பின்நவீனம் முன்முண்டம் ஸார்த்ர் ஃபூக்கோ கவிக்கோ ஃப்ரிட்ஜோஃப் கப்ரா ஃரிட்ஜ்ல பாட்டில்டா மானேதேனே E=mc2 ஜென் டர்புர் விளிம்பம் நடுவம் விளக்குக்கம்பம் தனித்துவம் காப்பியம் டீயம் சங்க இலக்கியம் சங்கூதும் சவத்துவம் அறம் முறம் கரம்மசாலா கருத்துரிமை கருக்கலைப்புரிமை திருநங்கை திருமதிநங்கா டண்டணக்கா என வகைவகையாகக் கூட்டாஞ்சோறு சித்ரான்னங்களைக் கலந்து — இவர்கள் அனைவரும் அவ்வப்போது, அதாவது எப்போதும், எழுதுவதுமுண்டு.

ஆனால் இந்த திக்குதெரியாத கரடுமுரடு அலக்கிய அருள்வாக்குச் சாலையில் படுபேதியளிக்கும் தீவிரவேக  106ஆம்புலன்ஸ் எழவைத் திறமையுடன் அசால்ட்டாக கொம்பூதிக்கொண்டு ஒட்டுவதில் சாருநிவேதிதாவுக்கும் எஸ்ராமகிருஷ்ணனுக்கும்தான் முதற்பரிசு பகிர்ந்துகொடுக்கப்படவேண்டும்.

ஆனால்… அவர்களுக்கு மட்டும் கொடுத்தால்… அலைகடலென ஆர்பரித்து ஆடவர்களும் ஆடாதவர்களும் வந்து ஒரேயடியாக மொய்த்து விடுவார்களே! இலவசப் பரிசில் விருதென்றால் தமிழ்ப்பிணம் செம்பிணம் அழுகல்பிணம் கூட டபக்கென்று புதைகுழியிலிருந்து வீறிட்டெழுந்து ஜொள்ளொழுக ஓடி வருமே… ஐயகோ, ஐயன்மீர்! :-(

…டேய் க்யூல பூராதடா நாயி!  பின்னாடி போடா லவ்டேக் கபால்! பொத்மக்ளே, எள்த்தாளர்களே, அலக்கீவாதீங்க்ளே, தள்ளாதீங்கோ! ங்கொம்மாள, அல்லாருக்கும் முதற்பர்சு உண்டு, கவ்லேயே வோணாம்!

டேய் கவிஞ்சா சும்மா ஸ்ப்ரிங்குமாரீ குதிக்காத, சர்யா? காலேல சுப்புரபாதம் கேட்டுக்கினே ஸர்க்கு ஏத்திக்கினு ஜட்டிய தலக்குமேல கவ்த்திக்கினு வந்த்ட போல,  அத்த உள்ளாற போடுய்யா… குஞ்சாமணி தெரிய்து, அதயும் உள்ளாற வுட்றா…

…ஆடிக்கினே ஸிர்க்றான் பார்டா! மவ்னே, இவந்தாண்டா குடிமவன், த்தா டாய்! ஒயிங்கா பின்னாடி போவியா!  முட்டாக்கூ! ஹைக்கூ ஜம்ப்பு பண்ற எடமில்லடா இது.. இன்னாது, நீ ஆறுகோடி டமிள் கவிஞ்சர்களோட பெரதினிதியா? வ்வோத்தா இன்னாடா, நீ கர்ணானிதியோட சொந்தக்காரனா, கலைஞ்சர் எவ்ளொ சந்த்ல சிந்த் பாடிக்கீறார்டா, அல்லாம் மச்சம் போல…

டேய் ஆட்டுத்தாடி ஜுப்பா, அடீங்… இடைச் செருகலா? ஈற்றடி வெச்சிக்கினே மொள்ளமா போய் கடோசீல நில்லு. இன்னாது, யாப்பா? யப்பா, இன்னா மாரீ செம்மொளீ பேஸ்ரானுங்கோ இந்த கவிஞ்சப் பஸ்ங்கோ… இன்னாது, நீதான் தமிளனோட மனச்சாச்சியா? போடா மசுறு, அப்ப தமிளகத்ல சும்மா 6 கோடி மனச்சாச்சீங்க்ளா கீது? அப்போ எப்டீடா டமிள்கம் உர்ப்படும்?? நாயிங்க்ளா, இன்னாடா காத்ல பூ சுத்றீங்கோ, பேமானீங்க்ளா! இது பெர்யார் பொற்ந்த பூமிடா!

ங்ஙொய்யால… தோ வந்த்ட்டாங்கடா கொடி புட்ச்சிகினு… ஏம்மா தாயீ, வொனக்குன்னிட்டு தனிய்யா சொல்ணுமா? பொம்பளெயுரிமே பேஸ்ர ஆம்பளகம்மினாட்டிங்களுக்குத் தான் எங்ககிட்ட மொதல்ல பர்சு, நீ சும்மா கூவாத, அப்பால வா!  இங்க தனி பொண்ணுரிமை தனிசமத்துவ க்யூ அல்லாம் கெட்யாது. இல்லாக்காட்டி பேசுபுக்குல போய் பேசு… வோண்றமாரீ கூவு! இன்னாது? நீ #மீடூவா?  தாயீ… நான் வொனக்குமேலே.. நானே  #மீத்ரீ தான்…  போம்மே சர்த்தான். புர்ச்சீத்தீயப் பர்ப்ப வந்த்ட்டாளுவ…

வோத்தா டேய்! என்னாடா தாளிக்ற கடுவுமாரீ துள்ற நீயி? என்னாது நீ என்ஆர்ஐயா?  த்தா… வொனக்குன்னிட்டு தனிய்யா சிற்ப்பு சிறிய க்யூ  செவ்ப்புக்கம்பள்ளம் வோணுமா? இன்னாடா இது புத்சாக் கீது? நீ டாலர்ல சம்பாரிச்சி துட்டு கொடுக்கறே, அத்தொட்டா? ஸோம்பேறி இத என்னடா, வொம் பொண்ணோட  அறங்கேட்றம்னிட்டு நென்ச்சிக்கினியா? டேய், இது டமில் எலக்கிய பரிசு செம்பரிசுடா! இப்டியே ஒடிப்போய் பேஸ்புக்குல  யுனைட்டட் ஸ்டேட்டஸ் ஆப்பு அமெரிக்கான்னிட்டு ஸ்டேட்டஸ் போட்றா, போக்கத்தவனே, எட ஒத்க்கீட் கேக்க வந்த்ட்டான்,  ஸோமாறி… புலம் பெயர்ந்தேன் ஜலம் விட்டேன்னிட்டு… ஸாவுகெராக்கீ கேப்மாறீப் பயலுங்க்ளா,  சூத்தாமட்டைய சுர்ட்டிக்கினு திர்ம்பீ  போங்க்டா!

அங்கிட்டு சீப்பு ப்ளேன் டிய்ட்டு ஆஃபரு கெடைக்குதாம்… ஓடுங்க்டா க்ரெடிட்கார்ட தூக்கிக்கினு, பரதேசீங்க்ளா…

…ஐயய்யோ கோமணத்தயும் முண்டாசையும் கட்டிக்கினு செவத்த புள்ள டீஎம்கிஷ்டா வந்துக்கினே கீறாரு, ஏமாந்தா டபக்னு பாய விர்ச்சி குந்திக்கினு பாட் பாடிட்வாரு. ‘மம்முத லீலய வெண்றார் உண்டோ?‘ ஓட்ங்க்டா தலெதெறிக்க… வோத்தா  நோபெல்க்கு பரிசம் போட்டு நம்பள நாஸ்தீயாக்கிறுவாரு… இங்க்லீஸ் தஸ்புஸ்னிட்டு, வோத்தா பெனாத்றத்ல இவ்ரு நம்ப்ளுக்கே வாத்யார்டா… அவ்ருக்கு மொதல்ல பரிசு கொட்த்தா அப்பால ஜனநாயிகமா மிச்சம்கீற ஜனநாயிங்க்ளுக்கு கொட்க்க கொடி பிட்ப்பாராம்! நல்லாக் கீதுடா இந்த புர்ச்சிக் கடை!  அல்லாம் வெவெரம் தெர்ஞ்ச வியாவாரீங்கடா… நம்பள மாரி அன்னாடங்கஞ்சியாடா அவ்ரு? பெரிய்ய பணக்கார் வூட்டுப் பையர்டா! அத்தொட்டுதாண்டா ஏளைபாளைங்களோட கஸ்டத்த புர்ஞ்சிக்கினு, கஸ்டப்பட்டு சம்பாரிச்ச சொத்த வெச்சிக்கினு அப்பப்போ சமூகஸேவை பண்றாரு… கோமணத்த எவ்ளோ அளகுணற்சியோட கட்டிக்கீராரு பாரு…

எல்லாஞ் சரி, ஆனாக்க, டமிளன்ஸ் அல்லாரும் பிச்சைக்காரனுவோடா, அத்தொட்டுதாண்டா எனக்குப் பெரச்சின, படா பேஜார்! ஆனாக்க, அத்தவுட பெரிய்யபெரச்சின – அல்லார்க்கும் இலக்கியமாமணி வூடு தேடிவரும்னிட்டு சொன்னாக்க, மத்தியரசுக்கு எள்தி மானியம் கீனியம் வாங்க்ணுமேடா! மோதீ மாற்றாந்தாய் இந்துத்துவா ஒளிக அப்டீஇப்டீன்னிட்டு பிலிம் காமிச்சாத்தானடா அவ்னுங்கோ நம்பள திர்ம்பி பாப்பானுவோ? இந்தப் பாப்பானுங்களயே ஒளிச்சாதாண்டா நாட் முன்னேறும்… இன்னா நெனக்கிற நீயி..

… …

…டேய் பொறம்போக்குங்க்ளா! எலவசம்னா இப்டீ அலே மோத்றீங்களே!! இதே ரேட்ல போனாக்க நம்ப் டங்கட் டமிள் நாட்ல இருவ்துகோடி எள்த்தானுவ இர்ப்பானுங்க போலக்கீதே! ஐயய்யோ!

ஆனாக்க அல்லாம் நல்லதற்கே, என்ன நாண் ஸொல்றது… எதிர்கால தலெமொறெங்கோ இவ்னுங்க்ள பட்ச்சே மூச்முட்டி செத்துப் பூட்வாங்கோ!  பிர்ச்சன கம்ப்ளீட்டா க்ளோஸ்.

…யோவ்! தள்ளுமுள்ளு இல்லாம நேரா க்யூவ்ல வாங்கபா, இங்க யாரும் அவ்த்துப்போட்டுட்டு ஆட்ல, எலக்கியவாதியா ஒய்ங்கா சோவமா, இர்ப்பின் அவெஸ்தெயோட வெவெஸ்தேயில்லாம பொலம்பிக்கினே இர்ப்பீங்க்ளா?

அல்லாக்காட்டீ மருவாதியா டோக்கன் வாங்கிக்கினு போய்க்கினே இரு மாமே! நாளைக்கி ஷ்டாக் இர்ந்தா கொட்ப்போம்.

ஆனாக்க கண்டிப்பா ஒரு கண்டிஷன்: இன்றுபோய் நாளைவான்னிட்டு ஓட்டைச்சூத்தர் வூட்டுக் கம்பும் கவி பாடிச்சின்னு அட்ச்சிவுடாதீங்க.

இந்தக் கதையின் நீதி: ஃப்ரீ என்றால் ஃபினாயிலும் குடிப்பான் தமிழன் என்பதை அறிந்து இன்புறுக.

-0-0-0-0-0-

சரி.

சாரு என்றாலே பொதுவாகவே கையாலாகப் பெட்டைப் புலம்பலுளறல் என விட்டுவிடலாம் என்றாலும் – இத்தனை நாள் இந்த ஆசாமியின் ஃப்ரீரேஞ்ச் ஆகாத்தியங்களைப் பொறுத்துக்கொண்டிருந்த கூறுகெட்ட சராசரி வாசகனாகிய எனக்கு இப்போது எங்கே திடுதிப்பென்று பாரிச வாயு பாதிக்கிறது என்றால்…

…பொதுவாக இணையத்திலும் புத்தகத்திலும் இந்த ஆசாமி உளறிக்கொட்டுவது என்பது ஒரு வகை. ஆனால் இந்த நபர், தேவைமெனெக்கெட்டு கல்லூரி ஒன்றுக்குச் சென்று அங்கு இருக்கும் பிள்ளைகளிடம் (ஏற்கனவே இவர்கள் அமோக விசிலடிச்சான் குஞ்சுகள் வேறு; தனியார் கல்லூரியின் அசிங்கத்தனங்கள் இன்னொரு பக்கம்!) 1) பாரதத்தைப் பற்றி இல்லாத குறைகளைக் கயமையுடன் சொல்வது 2) நேரடியாகப் பொய்களைப் புகட்டுவது 3) தப்பும்தவறுமாக உளறிக்கொட்டுவது எனும் அற்ப உதாசீன விஷயங்கள் – காத்திரமாக எதிர்கொள்ளத் தக்கவை.

ஏனெனில் நாம் எம்மாதிரி காத்திரமான உபயோககரமான விஷயங்களைச் செய்யமுடிந்தாலும் முடியாவிட்டாலும் – above all, do no damage – எனக் குறைந்தபட்சம் இருக்கவேண்டும். குறிப்பாக, நம் பிள்ளைகளிடம் இப்படி இருக்கவேண்டும். நமக்குத் தெரியாத விஷயங்களைத் தெரிந்ததாகக் காட்டிக்கொண்டு மினுக்கக் கூடாது.

மான்டிஸொரி கல்வி வகையில் – ‘இன்டைரக்ட் ப்ரெஸென்டேஷன்’ என ஒரு பதம் – indirect presentation – இருக்கிறது. இதன் ஒருமாதிரி விளக்கம் – அதாவது கல்வி என்பது நேரடியாகக் கற்பிக்கப்படுவது என்பதற்கு அப்பாற்பட்டு, ஆசிரியர்கள் (அல்லது நம்மைப் போன்ற பிறர் – வயதானவர்கள்) எப்படி நடைமுறையில் நடந்துகொள்கிறார்கள் என்பது மிகமுக்கியம் என்பது. அது ஒரு புத்தகத்தை எப்படிப் பிடித்துக்கொண்டு படிப்பது என்பதிலிருந்து, எடுத்த பொருளை எடுத்த இடத்திலேயே வைப்பது, டீவி/இணையம் பக்கம் போகாமல் புத்தகம் படிப்பது, வீட்டில் ஆண் தினமும் சமையல் செய்வது… … போன்றவற்றுக்கெல்லாம் விரியும்.

அதாவது ‘walking the talk, talking the walk’ மேலும் ‘be the change you wish to see’ போன்றவற்றுடன் தொடர்புடையது. நான் வாய்கிழிய ‘நீ ஒரு நல்ல குடிமகனான இருக’ எனப் பிறத்தியாருக்கு அறிவுரை கொடுப்பதற்கு முன்,  நான் அப்படியா எனப் பார்த்துக்கொள்ளவேண்டும். பிறத்தியாருக்குக் கல்வியின் அவசியம் பற்றிப் போதனை செய்யும்போது, நான் அம்மாதிரி கல்வி கற்கிறேனா எனச் சரிபார்க்கவேண்டும். பிறருக்கு ‘ப்ளாஸ்டிக் உபயோகிக்காதே’ எனச் சான்றோருரை கூறும்போது தாம் ரெய்ன்ஹோல்ட்ஸ் பேனாவை உபயோகிக்காமல் எழுத்தாணிகளிடம் தஞ்சமடையவேண்டும்.

மாறாக – பிறர் பொய்யர்களாகவும், புனைசுருட்டாளர்களாகவும் இருக்க விரும்பினால் – சாரு போல, தாம் பெற்ற விடலைத்தனம், பெருக இவ்வையகம் என இயங்க வேண்டும்.

அவர் அதில் மன்னன். ஆனால் நேரடியாகப் பார்த்தால் அவர் எவ்வளவோ அபூர்வமான விஷயங்களைச் சொல்கிறார் எனத் தோன்றும் (இன்னமும் பலர் பேசுவதும் இப்படித்தான் – சிந்தனைக்கும் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசங்கள், பெருங்கிலியூட்டும் மகா கிடுகிடு பள்ளங்கள்!) – கொஞ்சம் நம் மூளையை உபயோகித்தால்தான் தெரியும் – சாரு நிவேதிதா போன்றவர்களின் அடிப்படைக் கயமை பற்றி…

ஆகவே.

-0-0-0-0-0-

இப்போது விடலையாரின் இன்னொரு பதிவை எடுத்துக் கொல்வோம்.

வாழ்வை இனிதாக்கும் விஷயங்கள் – என்பதுதான் அதன் தலைப்பு.

ஆனால் இது, உண்மையில் ‘வாழ்வை இனி தாக்கும் விஷயங்கள்’ எனத்தான் இருந்திருக்கவேண்டும். ஏனெனில் – இது முழுவதும் வடிகட்டிய, ஒண்ணேமுக்கால் மணிநேர அக்மார்க் சாரு ப்ராண்ட் குப்பை.

யாரோ ஆசிரிய மகானுபாவன் (அந்த பங்காரு கல்லூரியில் பணிபுரிபவர் போல, பாவப்பட்ட ஜீவன்) சாருவை தம் ஆதர்சமாகக் கொண்டு, அந்த ஆசாமியைப் போய்த் தன் கல்லூரியின் பிள்ளைகளுக்கு போதனை கொடுக்க அழைத்திருக்கிறார். நம் விடலையும் அங்கு சென்று பொழிந்திருக்கிறார். அதன் காணொலிதான் இது. காணொலி எழவு.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் பொய்ப்பொருள் காண்பதும் அறிவு.

பொதுப்படையாக – பாரதத்தில் உட்கார்ந்துகொண்டு புனைசுருட்டுகளில் ஆழ்ந்து, ஆனந்தமாக அலக்கியச் சாணி போட்டுக்கொண்டு, ஆனால் ‘இந்தியாவில் எதுவும் சரியில்லை, எல்லாம் குப்பை‘ என்கிற ரீதியில் ஏகத்துக்கும் ஒப்பாரி வைக்கும் இந்தப் பேடிய-சாருவிய ஓக்காள வாந்தியிலிருந்து மூன்று பகுதிகளை மட்டும் எடுத்து, கொஞ்சம் பொழிப்புரை. (அதற்குமேல், எனக்கு இருக்கும் சுயவெறுப்பில், நம் தமிழ் அலக்கியத்தின் கவலைக்கிடமான சூழ்நிலையில், சக்தியில்லை; மன்னிக்கவும் – அல்லது நிம்மதிப் பெருமூச்சொன்றை விடவும். நன்றி!)

(அதனைப் போய் தேவைமெனெக்கெட்டுப் பார்த்துவிட்டு, நான் கொஞ்சம் கதிகலங்கிய நிலையில் இருப்பதால் – அடுத்த பதிவில் அந்த எழவுகளைச் சுருக்கமாக அவதானித்து ;-) ஆவன செய்யலாம் என்றிருக்கிறேன்; நன்றி. ஆனால் உங்களுக்கு நேரமும் தெனாவட்டும் இருந்தால் முழுவதும் பார்த்து பேதியில் போகவும். மீண்டும் நன்றி!)

 

 

9 Responses to “சாருநிவேதிதாவின் பாரிஸ் வாயு – சில தொடரும் பீலாக்கள்”

  1. K.Muthuramakrishnan Says:

    பெண் புனைப்பெயர் சூட்டிக்கொள்ளும் ஆண் எழுத்தாளர்களை ஜெயகாந்தன் நபும்சக எழுத்தாளர்கள் என்று விளிப்பார்.

    ‘விக்கிபேடியா’ அறிவாளிகளின் கூட்டம் அதிகமாகிவிட்டது.காந்திஜி பற்றிய கட்டுரைப் போட்டியை சேவாலயா சார்பாக நடத்தினோம்.12 பள்ளிகளில் இருந்து 64 கட்டுரைகள் வந்தன.ஒன்றுகூட புத்தகத்தைபார்த்து ,படித்து எழுதியவை அல்ல். வலை தளத்திலிருந்து ஈ அடிச்சான் காப்பி. யாரோ ஒரு “அறிவுஜீவி?” காந்திஜி ஒரு வன் முறையாளர் என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளான். அதனை அப்ப்டியே காப்பி செய்து எழுதியுள்ளாள் ஒரு பெண்.

    சாரு போன்றவர்கள் மாணவர்களுக்கு வழி காட்டினால்….! நினைக்கவே பயமாக இருக்கிறது.


    • ஆனால் ஐயா முத்துகிருஷ்ணன்,

      ஜெயகாந்தன் போன்றவர்களை நினைத்துப் பெருமூச்சுதான் விடமுடியும். அவர் ஒரு சகாப்தம். இப்போதெல்லாம் கருத்துலக நபும்சகர்கள்தான் அதிகம்.

      யாராவது ஒருஆசாமியாவது இளிக்காமல் இருக்கிறார்களா? சோகம். தன் ஆழம் என்ன எனத் தெரியாமல் பிற ஆழங்களில் கால்களை(யும்) விடுகிறார்கள்.

      ஆகவே ஐயா, சாரு ஆசாமியைப் போன்றவர்கள் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். விக்கிபீடித்த பேடிகளும் தொடர்கிறார்கள்.

      சரி. இது ‘நீர் தன் மட்டத்தை அடையும்’ என்பதைப் போல ‘கூவான் தன் படுமட்டத்தை அடைவான்’ எனப் புரிந்து கொள்ளமுடியுமோ?

      …நான் ஜக்கிவாசுதேவ் அவர்களின் ரசிகன் கிடையாது. சிலபல பிரச்சினைகள்.

      இருந்தாலும், அவர் கீழ் கண்ட காணொளிகளில் அரைகுறைகளுடன் எவ்வளவு அழகாக உரையாடுகிறார், தன் வாதங்களை அடுக்குகிறார் எனப் பாருங்கள்… (உங்களுக்கு ஒத்துவரவைல்லையானால் – இவற்றில் உள்ள பேக்கேஜிங் விஷயங்கள், வசீகரத் தன்மைகள் போன்றவற்றை விட்டுவிடுங்கள்; ஆனால் பாருங்கள், சரியா?)

      எதற்குமே, எந்தவொரு விஷயத்துக்குமே – சாரு போகவேண்டிய தூரம் அதிகம். கச்சாப்பொருளும் சுகமில்லை.

      ஆகவே அவர் ஒரு ஸாரி ஃபிகர் என்ற அளவில் தான் காலட்சேபம் செய்யமுடியும், அவ்ளோதான்.

      இருந்தாலும் அவரிடமும் சரணடைய, விடலைகள் இருப்பார்கள். அழுகும் பிணத்தை மொய்க்கும் ஈக்கள்போல. ஆனால் மகிழ்ச்சிக்குரிய விதத்தில், அனைவரும் கலாச்சார வளர்ச்சிக்கு, வரும் காலங்களில் இயற்கை உரமாக மடித்து உழப்படுவார்கள்.

      ஆகவே, பயம் வேண்டேல்.

      நன்றி.

  2. SB Says:

    Sir
    1.Are we to blame sub-standard Teachers for this sort of decline in quality of education ?
    Leave English …Even knowing ‘ Tamil’ fully (like how Jeymo learned from his Teachers of repute(Das and others) or Mr.Ram from his mentors) is doubtful.
    Times changing and when the very living has become difficult (save for Govt Employees) , it is natural that stomach takes over the place and entertainment in any form ( including Charu’s blithe spirit on writing anything and everything under the Sun )is welcomed by the commoners.
    Can we give some immunity view Charu’s history of having been self-taught on these subjects ? Seems you can subject to his acknowledging his short-falls, right ?
    Like somebody Modi-gushing , Mr.Charu is onto Modi-bashing for various reasons including his pedigree (guess I could).

    2.Parties in queue for the coveted award …?
    Was Abdul Hameed(Manushya puthiran) referred to as Kavignar ?
    NRI – Not sure who you were referring to (there too the list is relatively long).
    Yes the list is simply long .

    3. No idea why Sadhguru was browsed upon .
    For society to do self-introspection, we have to promulgate ideas of Sri Ramakrishna, Swami Vivekananda, Sri Aurobindo and
    Nisargadatta Maharaj ( I Am that ..available in PDF ).

    Regards
    SB


    • ஐயா எஸ்பி,

      கருத்துகளுக்கு நன்றி.

      1. சராசரியாக, ஆசிரியர்களின் தரம் கண்டிப்பாக வீழ்ந்திருக்கிறது. ஆனால் பொதுவான அலக்கியக்காரனின் தரவீழ்ச்சிக்கு இது அவ்வளவு மோசமில்லை. நீங்கள் சாருவை ஒரு சுயம்பு எனக் கருதுகிறீர்கள் போல. பொறுக்கிகளில் பலர் சுயம்புக்கள்தாம். மேலும் – அவர் நிறைய எழுதுகிறார் எனும் கொடுமையைத் தவிர, சுவாரசியமான பத்திகளை சுளுக்கெழுத்தில்லாமல் எழுதுகிறாரே தவிர – ஆழ்ந்த சிந்தனையோ வேறெந்த எழவோ அவரிடம் கிடையாது,அமர்க்களமான பீலாக்கள் வேறு.. தற்காலச் சாருக்களில் ஒருவர் ஸமஸ் எனப்படும் ஸமோஸ்ஸா.

      ஆனால் – எஸ்ரா ஜெயமோகன் போன்றவர்களுடன் பொருத்திப்பார்த்தால், அவர் ஒரு வெகுளி. அடி முட்டாள். அதுதான் பாவமாக இருக்கிறது. ஒற்றைக்காதில் வளையத்தை மாட்டிக்கொண்டு தெகிர்யத்துடன் கூச்சமில்லாமல் உளறிக்கொட்டுவதைப் பார்த்தால் பாவம் – கோபம்தான் வருகிறது.

      மற்றபடி – ஜெயமோகனின் ஆசிரியர்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது/படிக்கவில்லை; என்னுடைய தமிழாசிரியர் ஒருவர் என்னிடம் ஆதூரமாக இருந்தார் என்பதற்கு அப்பால், எந்தவொரு தமிழாசிரியரையும் குரு எனும் ஸ்தானத்தில் வைக்குமளவுக்கு எனக்குக் கொடுத்துவைக்கவில்லை; இது என் இயலாமைதான்.

      இன்னொருவிஷயம்: நாம் இனிமேலும் ஆசிரியர்கள் அல்லது பிறர்/பெற்றோர் குடும்பப் பொருளாதாரச் சூழ்நிலை ஜாதி இடஒதுக்கீடு இத்யாதிகளின் மேல், நம் சராசரிச் சோம்பேறித்தனத்துக்கான பழியைப் போடமுடியாது என நினைக்கிறேன். ஏனெனில், வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன இக்காலங்களில். முனைபவர்களுக்கு எதுவுமேசாத்தியம் – வெட்டிப் பிலாக்கணம் உட்பட

      2. கவிஞ்சர் என்பது குறிப்பிட்ட எவரைப் பற்றியும் இல்லை – ஆனால் பொதுவாகவே நம் கவிதைக்கழுதைக் காரர்களைப் பற்றித்தான். என்ஆர்ஐ எழவாளர்களையும் பொதுஜனமாகத்தான் குறிப்பிட்டேன்- என் குடும்பத்திலேயே சிலபலர் இப்படி – வெள்ளைக்காரன் நாட்டில் பிரதேசத்தில் வேலை செய்வதாலேயே தாம் ஏதோ அதிஅற்புத தகுதியுடையவர்களாக பாவித்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். (ஆனால் – எனக்குத் தெரிந்தே சிலர் ஜலம்பெயர்ந்த வெளிநாட்டுக்காரர்களாக, என்ஆர்ஐகளாக இருந்தாலுமே – சமனத்துடனும், ஜொலிக்கும் அறிவுடனும் இருக்கிறார்கள் – இதுதான் எப்படி என்பது எனக்குப் புரிபடமாட்டேனென்கிறது!)

      3. ஐயா, மூவரையும் முடிந்தவரை படித்திருக்கிறேன்.

      இன்னமும் சிலரையும். இருந்தாலும், ஜக்கிவாஸுதேவ் போன்றவர்களின் பங்கும் காத்திரமானது. அவரையும் கணக்கில் கொள்வதில் எனக்குப் பிரச்சினையில்லை. இக்காலங்களில் நெகிழ்வுத் தன்மைவாய்ந்த பேக்கேஜிங் வேண்டும். அதை அவர், கடும் முயற்சி எடுத்துச் செய்கிறார். இதுவும் போற்றத்தக்கது – அவருடைய ஸம்ஸ்க்ருத அறிவில் சிலபல தாந்த்ரீக விஷயங்களில் என்னைப்போன்ற கிழங்கட்டைகளுக்குப் பிரச்சினை இருந்தாலுமே கூட. அவர் சர்வ நிச்சயமாக ஒரு புத்திசாலி. நான் புத்திசாலிகளை மதிப்பவன்.

      நன்றி.

  3. SB Says:

    Sir,
    Firstly many thanks for your kind response.

    Quote:
    Mr.Pichaikaran’s

    எனக்கு உங்கள் எழுத்து அறிமுகமானது விஷ்ணுபுரத்தில் இருந்துதான்.. தற்செயலாக அந்த நூலை வாங்கினேன்.. வாங்கி வைப்போம் என்றாவது படிக்கலாம் என நினைத்தபடி பேருந்தில் லேசாக புரட்டினேன்.. இதை எப்படி இத்தனை நாள் படிக்க தவறினேன் என்ற எண்ணம் முதல் சில பக்கங்களிலேயே தோன்றியது… அப்போது தொடர் விடுமுறை இருந்ததால் நான் ஸ்டாப்பாக ஒரே மூச்சில் படித்தேன்… அதுவும் (கூட்டமற்ற ) மாநகர பேருந்துகளில் பயணித்தபடியே படித்த நூல் அது.. படிப்பதற்காகவே வெவ்வேறு பேருந்துகளில் பயணித்தேன்..அந்த அளவுக்கு நான் படித்த உங்கள் முதல் நூலே என்னை ஈர்த்தது

    Unquote-
    Bouts of laughter guaranteed reading the following parts from your response :-
    1.தற்காலச் சாருக்களில் ஒருவர் ஸமஸ் எனப்படும் ஸமோஸ்ஸா.
    2முனைபவர்களுக்கு எதுவுமேசாத்தியம் – வெட்டிப் பிலாக்கணம் உட்பட
    3. ஒற்றைக்காதில் வளையத்தை மாட்டிக்கொண்டு தெகிர்யத்துடன் கூச்சமில்லாமல் உளறிக்கொட்டுவதைப் பார்த்தால் பாவம் – கோபம்தான் வருகிறது.

    4.இக்காலங்களில் நெகிழ்வுத் தன்மைவாய்ந்த பேக்கேஜிங் வேண்டும்

    My response –

    ”Travelling in a bus simply for the reading purpose” is the height of
    singing paeans.

    (Charu’s Bali-type ear-ring ….it’s good that he’s CONSISTENT in maintaining the same pattern and not going for Diamond version of ear-rings !! )

    As luck would have it, the commoners are yet to know about SAMAS of Hindu Fame ( good that he’s not a novelist .Else could have been a competitor for Jeymo).

    Sri Nishargadatta Maharaj’s teachings (I AM THAT especially) not reaching out to many is surprising ..Anyway everything has its timing.

    Anticipating ES RA to be the Sadhguru of Tamil Nadu view Neghizvolgy ? He is not as proficient as Sadhguru in English oratory but for the rest (including Mythologies/Russian Lit,etc), he is top-notch. God Save TN!

    Thank you Sir.

    Regards
    SB

  4. சேஷகிரி Says:

    “படுபேதியளிக்கும் தீவிரவேக 106ஆம்புலன்ஸ் எழவைத் திறமையுடன் அசால்ட்டாக கொம்பூதிக்கொண்டு ஒட்டுவதில்”

    106ஆ(அல்லது) 108ஆ?


    • ஒட்டும் வேகத்தில் 2 கீழே விழுந்துவிட்டன என்று அட்ஜஸ்ட் செய்துகொள்வீர்களா, நக்கீரரே?

      • சேஷகிரி Says:

        நானும் உங்கள் ஏழரையில் ஒருவராக இருக்கிறேன் என்பதை உங்களுக்கு அடிக்கடி நினைவு “படுத்த” வேண்டும் சாரே!


      • சரி. ஜிஎஸ்டி ரசீது வேண்டுமா?

        க்ரெடிட் கார்ட் பேமெண்டா? அப்போ 2% எக்ஸ்ட்ரா.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s