ஆ! + ஐயோ!!
July 13, 2018
:-(
ஆ! -> இடக்கை -விமர்சனம்
ஐயோ!! -> ஆங்கிலத்தில் இடக்கை நாவல்
இரண்டுமூன்று மாமாங்கங்கள் முன், ஜப்பானிய ஆசாமி ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர், நம் செல்ல எம்ஜிஆர் தன்னுடைய ‘உலகம் சுற்றும் வாலிபன்’ எழவுக்காக ஒஸாகாவில் எக்ஸ்போ1970 நடந்த வளாகத்தில், ஆடிப்பாடிக்கொண்டிருந்ததை நேரில் பார்த்ததை அன்புடனும் ஆச்சரியத்துடனும், நமட்டுச் சிரிப்புடனும் நினைவு கூர்ந்ததும், நான் கூனிக்குறுகிப் போனதும் நன்றாக நினைவில் இருக்கிறது.
அதன்பிறகு தமிழக அரைகுறைகள் – இசுடாலிர் இங்கிலாந்தில் வாங்கிய மாஞ்சா நூல் ‘கௌரவ’ டாக்டர் பட்டம் முதல், கமலஹாஸ்யன் சிங்கப்பூரில் (நமக்கு வெட்கம் வரும்படிக்கு) ஆடிப்பாடியது, ரஜினிகாந்த் ‘ஓ ப்ரியா ஓ ப்ரியா’வெனச் சிலந்திபோல நடந்தது இன்னபிற வரை நடந்து – வெளிநாடுகளில் நம் புகழ் பட்டொளி வீசப் பரவச் செய்தது, செய்வதெல்லாம் நடந்தேறிக் கொண்டிருப்பது அநியாயத்துக்குத் தொடரும் சோகங்களென்றாலும்…
…என்னுடைய பீதி என்னவென்றால், என்னருமை எஸ்ராவின் ஆங்கிலமொழிமாற்றப் புத்தகம் பற்றி, எதிர்காலத்தில், யாராவது நக்கல் ஆசாமி, என்னிடம் துக்கம் விசாரிக்க வந்துவிடுவாரோ என்பதுதான்…
:-(
…
July 13, 2018 at 16:40
எனது கவலை. ஆகில ஒறெழுதுகளை எரா எபடி சமாளிகபோகிறா?
July 13, 2018 at 16:45
ஐயோ பாவம், வெ.ராமசாமி சாருக்கு வந்த சோதனை! ஐயோ!
July 13, 2018 at 21:27
உங்களை மகிழ்விக்கவே(?!$#@) மற்ற புத்தகங்களும் மறுபதிப்புகளாக வருகின்றன. :).
http://www.sramakrishnan.com/?p=7580
http://www.sramakrishnan.com/?p=7577
http://www.sramakrishnan.com/?p=7574
http://www.sramakrishnan.com/?p=7569
Have fun (நீங்கள் அலறப்போவதை பார்த்து எங்களுக்குத்தான்)