கனிமொழியின் புத்தம்புது செல்லக் கழுதையைப் புரிந்துகொள்வது எப்படி?

June 30, 2018

வரவர கனிமொழி அவர்கள், தன்னை ஒரு மகாமகோ ராக்கதபுத்திரி (இவரை நினைவிருக்கிறதா? இவர்தான் தமிழ்க் கவிஞர் எனக் குற்றம் சாட்டப்படும் மனுஷ்யபுத்திரன் எனும் அன்பரின் முறைப்பெண்) என என நினைத்துக்கொண்டுவிடுகிறார் எனத்தான் படுகிறது. :-(

கலிகாலம்தான். அல்லது இது கிலி காலமோ? :-((
-0-0-0-0-0-0-

கனிமொழி அவர்கள் அவ்வப்போது பொடி வைத்து கவிதை(!) போல ஒரு ஜந்துவை எழுதி – மறைமுகமாக, தன் குடும்பச் சொத்தை (=திமுக) தன்னுடன் சரியாக பாகப்பிரிவினை செய்துகொள்ளாத சகோதர இசுடாலிருக்கு இடிக்கும்படி உரக்கப் பம்முவது வழக்கமே.

ஆக, இம்மாதிரி திமுக கவிதைகளின் நெடிய பாரம்பரியத்தில் ஒன்றாக, இப்படி ஒரு ஜந்துவை, தன் தந்தையை நோக்கி கனிமொழிகலங்கி எழுதியிருக்கிறார். படித்து இன்புறவும்.

https://twitter.com/KanimozhiDMK/status/1003071264561422338

இதனைச் சரியாக இடம் தேசம் காலம் வர்த்தகம் தெரியாமல் படிக்கக் கூடுபவர்களுக்கு வசதியாக 1-7 எண்ணிட்டு ஒரு சிறு பழிப்புரையைக் கொடுத்திருக்கிறேன். ஏதோ என்னாலான உபகாரம்.

படித்துவிட்டு, உருப்படியாக வேறு வேலை எத்தையாவது செய்யவும். நன்றி.

-0-0-0-0-0-

1. ஆக, நீ இருக்கும் தெருக்களில் உடன்பிறப்புகளே பாவம், ஒடுகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு இன்னொரு திரைக்கதை வசனம் பண்ணப்பட்ட நகைச்சுவைத் திரைப்படத்தையோ, அல்லது ‘அடிக்கறாங்க அடிக்கறாங்க!’  திகில் படத்தையோ பார்க்க திராணியில்லை.

2. கழுகுகள் எனக் குறிப்பிடுவது ‘என் மகளின் தாயாருடைய’ மூத்தவரின் குடும்பம். எனக்கு சேரவேண்டிய சொத்துகள் ஒன்றுமே சரியாக வந்து சேரவில்லை.

3. ஓநாய்கள் – இசுடாலிரையும் அவர் குடும்பத்தினரையும் குறிக்கும். மேலும் எந்தப் பிணம் எங்கு விழுந்தாலும் ஓடோடிச் சென்று அது எரிவதில் குளிர்காய்வதுதான் கட்சியின் மக்கள் தொடர்பு திட்டமாகிவிட்டது.

4. ஆனால் பிறராகிய நாங்கள்தாம் கடவுள் பக்தர்களாகித் தேர் இழுக்கிறோம். ஆனால் தேரின் சக்கரங்களை திமுக உடன்பிறப்புகள், அவர்களுடைய தொட்டில் பழக்கம்போலவே திருடிக்கொண்டு கட்சிப்பணியாற்றிவிட்டதால் அது நகரவில்லை.

5. இசுடாலிருக்குத் தலைமைத் தகுதி இல்லை, எனக்கு நம்பிக்கை போய்விட்டது. நான் வீழ்வதற்குள் வந்துவிடு!

6. வாள் கேடயம் என ஒரு புல்லரிப்பாவது இல்லாமல் ஒரு திராவிடக் கழுதையை எழுதத்தான் முடியுமோ?

7. கருணாநிதி யேஸு க்றிஸ்து, அவர் ரட்சகர். அவர் திரும்பிவருவார். அவர் திரும்பி வந்தால்தான் நான் வட்டமிடும் கழுகுகளையும் ஓநாய்களையும் எதிர்கொள்ளமுடியும். என்னைக் காப்பாற்ற வா!

-0-0-0-0-0-

ஹ்ம்ம்… கனிமொழி அவர்களுடைய நிலை பாவம்தான். என்ன செய்வது சொல்லுங்கள். :-(

தொடர்புள்ள பதிவுகள்:

 

 

3 Responses to “கனிமொழியின் புத்தம்புது செல்லக் கழுதையைப் புரிந்துகொள்வது எப்படி?”

  1. vijay Says:

    அந்தோ பரிதாபம் தான்.ஆனால் வைப்பாட்டி பிள்ளைகளுக்கெல்லாம் அரசுரிமை கிடையாது.

  2. A.Seshagiri Says:

    முன்பெல்லாம் தினத்தந்தியில் ஒரு கருத்துப்படத்தை போட்டு “இந்த படத்திற்கு வசனம் தேவையில்லை” என்று போடுவார்கள்.அது போல் இந்தக் கழுதையை(கவிதையை) விடாமல் அதற்கும் வேலை மெனக்கிட்டு ஒரு பொழிப்புரை எழுதிய உம்மை என்ன செய்தால் தகும்?


    • எஸ்ரா அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ என்பதுபோல் எனக்கு ‘வாழ்நாள் வேதனையாளர்?’


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s