மதுசூதனா, ஹரே ஜெயமோஹன யுவகிருஷ்ணா…

February 17, 2018

…என் குறை கேளடா, ஹரே மோஹன கிருஷ்ணா

திருவாசகர் ‘protestwallah’ மதுசூதனன் சம்பத் அவர்களே!

பின்புலம்: ஜெயமோகன் தள வதந்தி: ‘ஆர்கைவ் ‘archive.org’ தளம் இந்தியாவில் முடக்கம்’

முதற்கண், என்னை மன்னிக்கவேண்டாம். உங்கள் விலா நோகும்படியான விலாவாரியான விளக்கம், அதாவது கலங்கியவிளக்கம் – ஸ்பேம் வரிசையில் இருந்ததினால், கொஞ்சம் தாமதம் – ஆனால் அதனை மீட்டு அப்படியே பிரசுரிக்கிறேன். வெளக்கத்த எள்திக்கிற வொங்க்ளுக்கு நண்றி ஸொல்லி ஒரு ஸலாம் வெச்சிக்கரேன், ஸர்யா?

ஓண்ணரைக்கண், அதற்கும் கீழே என் என்னுடைய விளக்கத்தை என் மண்டையில் அடித்துக்கொண்டு, ஆகவே சுருக்கமாகக் கொடுக்கிறேன்.

 

சார்- என் பெயர் மதுசூதனன் சம்பத். நான் தான் ஜெயமோகனுக்கு அந்த கடிதத்தை எழுதினேன்.

இந்த கட்டுரையை எழுதும் முன் நீங்களும் கொஞ்சமாவது ஹோம்வர்க் செய்திருக்கலாம், சும்மா உங்களுக்கு தெரிந்த விஷயம் என்பதனால் ‘அட்ச்சுவுட்டு ‘ ஆடுகிறீர்கள். நியாயமே இல்லை !

என் தரப்பு விளக்கம்:

1) வீட்டில் Act Fibernet இணையம் வைத்திருக்கிறேன். சென்ற வாரம் ஆர்கைவ் தளம் திறக்கவில்லை, ‘the site is banned under competent government authority and law’ என்று சொன்னது. ஆனால் ரிலையன்ஸ் மொபைல் போன்றவற்றில் வந்துகொண்டிருந்தது. ஆக்டுக்கு பத்து பதினைந்து தடவை போன் செய்தேன், ட்விட்டர் அனுப்பினேன். TRAI மேல் மீண்டும் மீண்டும் பழியை போட்டார்கள்.

2) ஆக்ட் நிறுவனத்திடம் மீண்டும் போய் ‘மற்ற நிறுவன சேவைகளில் தளம் திறக்கிறதே, உங்களை மட்டும் எப்படி முடக்குகிறார்கள்’ என்று கேட்டேன். TRAI-ல் அதிநவீன தொழில்நுட்பங்கள் இருப்பதாகவும் அவர்களால் குறிப்பாக பிளாக் செய்யமுடியும் என்றார்கள். எனக்கு ஆதாரம் வேண்டும் என்றேன், அரசின் நேரடி உத்தரவின் படியே முடக்கி வைத்திருப்பதாக இமெயில் அனுப்பியுள்ளார்கள். வேண்டுமானால் உங்களுக்கு அனுப்புகிறேன். ஒரு சராசரி கன்ஸ்யூமராக நான் இதை மட்டுமே வைத்துக்கொண்டு அரசை குற்றம் சொல்ல முடியும் அல்லவா ?

3) நான் உங்களைப் போன்ற தொழில்நுட்ப ஆர்வலன் அல்ல. எனக்கு என்னிடம் என் சப்ளையர் போட்ட காண்டிராக்ட் தான் முக்கியம். சப்ளையர் தன் வேலையை செய்ய முடியாமல் அரசு தடுப்பதாக சொன்னால், நான் இதன் தொழில்நுட்ப சாத்தியங்களை ஆராய்ந்து கொண்டிருக்க மாட்டேன். சட்டபூர்வமாக இதில் நான் என்ன செய்ய முடியும் என்று தான் பார்ப்பேன். இதுவே என் உரிமை, என்னால் இயல்வதும் கூட. அதனால் TRAI-க்கும் மத்திய அமைச்சர்களுக்கும் ட்விட்டர் அனுப்பினேன், பதில் இல்லை.

4) மீடியாநாமா என்ற இணைய இதழின் ஆசிரியருக்கு ட்விட்டர் அனுப்பினேன், அவர் சிலரை கோர்த்துவிட்டார். அவர்களும் ஆக்டில் முடக்கம் இருப்பதை உறுதி செய்தார்கள். சென்ற வருடம் இதே போல நடந்ததாக சொன்னார்கள்

5) நீங்கள் மொத்தமாகவே கவனிக்க தவறிய விஷயம் – 2016, 2017 இரு வருடங்களிலும் TRAI இது போல ஆர்கைவ் தளத்தை மொத்தமாக முடக்கியிருக்கிறது. பல பேர் பலவிதமாக போராடி, ஆர்கைவ் தள நிர்வாகிகள் முதற்கொண்டு பலரும் சேர்ந்து அரசை நிர்பந்தித்து மீட்டு வந்தார்கள். (இது தெரிந்தபின் தான் ஜெயமோகனுக்கு அனுப்பினேன்). இதெல்லாம் சென்ற வருட செய்தி, உங்களுக்கு தெரியாது என்றால் அவ்வளவு சோம்பேறித்தனமாக ஒரு தேடலும் செய்யாமல் கட்டுரையை எழுதிஇருக்கிறீர்கள்.

6) ஆக்ட் நிறுவனத்தில் என்ன நிகழ்ந்தது என தெரியவில்லை. திடீரென்று 13-Feb முடக்கம் அகற்றப்படுவதாக தகவல் அனுப்பினார்கள். இரண்டு நாட்களாக தளம் திறக்க முடிகிறது.

ஆக, TRAI செய்தார்களா, ICERT செய்கிறார்களா இல்லை அவர்கள் standing order பேரில் இணைய நிறுவனம் செய்கிறார்களா என்பதெல்லாம் தொழில்நுட்ப மயிர்பிளப்பு. முடக்கம் இருக்கிறது, அவ்வப்போது முடக்கப்படுகிறது என்பதே முக்கியம்.

இதெல்லாம் யாரால், எந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு செய்யப்படுகின்றன? 510 பில்லியன் ஆவணங்கள் இருப்பதாக சொல்லப்படும் தளத்தை மொத்தமாக முடக்கசொல்வது யார் ? ஏன் சார் ஒரு transparency இல்லை ??

உங்கள் அளவுக்கு integrity மற்றவர்களுக்கு இல்லை என்று தீவிரமாக நம்புகிறீர்கள். அதுவே உங்கள் பிரச்சினை.

என் பொறுமையற்ற, சுருக்கமான விளக்கம்:

0. என் நேர்மையைப் பற்றிப் பேசுவதில் விருப்பமில்லை. ஆனால் என்னுடைய சோம்பேறித்தனமின்மை பற்றியும் உழைக்கும் ‘ஹோம்வர்க்’ திறனைப் பற்றியும் எனக்குப் பெருமைதான். வேலைவெட்டியில்லாமல், ஒரு தொடர்புமில்லாமல் – சதாசர்வகாலமும் சும்மா உளறிக்கொட்டாமல் இருப்பதிலும் எனக்குப் பெருமைதான். நன்றி.

1. மறுபடியும் மறுபடியும் மறுபடியும்  சொல்கிறேன். TRAI அமைப்புக்கும் ‘முடக்க’த்துக்கும், ஒரு முடிக்கும் தொடர்பில்லை. ஆர்கைவ் தளம் அரசால் முடக்கப்படவேயில்லை. தற்காலிக இணையச் சிக்கல்களால் வரும் பிரச்சினைகளை, அதுவும் உங்கள் சொந்த இணைய இணைப்புப் பிரச்சினைகளுக்கு- மத்திய ஆட்சி, ஸென்ஸார்ஷிப் காரணம் என்றெல்லாம் நீட்டி முழக்குவது +அமோகமாகப் பொங்குவது – கொஞ்சம் சோகம். நிறைய நகைச்சுவை.

2. மீடியா நாமா தளம் – ஒரு இணைய சுதந்திரம் சார்ந்த பப்பரப்பா புரளித் தளம். அதில் வரும் எதனையுமே கேள்விகேட்க முடியும். அதில் இருப்பவை அவர்களுடைய கருத்துகள். சான்றுகள் இல்லாமலோ அல்லது ‘தொழில்முறையில்’ உருவாக்கியோ அவர்கள் என்ன கருத்தினை வேண்டுமானாலும் உருவாக்கமுடியும்.

3. ஆகவே, இவை பொய்யாக இருப்பதால் – கருத்துக்கலைப்பு என்பது முக்கியம். கருத்துத்தரிப்பும் கருத்துத்திரிப்பும் கூடாது.

4. உங்கள் ACT ஆசாமிகள் பீலா விடுகிறார்கள். நீங்கள் அதனை நம்புகிறீர்கள். உங்கள் விருப்பம்.

5. நான் தரவுகளுடன் விவாதிக்கிறேன். நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்:
சப்ளையர் தன் வேலையை செய்ய முடியாமல் அரசு தடுப்பதாக சொன்னால், நான் இதன் தொழில்நுட்ப சாத்தியங்களை ஆராய்ந்து கொண்டிருக்க மாட்டேன். சட்டபூர்வமாக இதில் நான் என்ன செய்ய முடியும் என்று தான் பார்ப்பேன். இதுவே என் உரிமை, என்னால் இயல்வதும் கூட. அதனால் TRAI-க்கும் மத்திய அமைச்சர்களுக்கும் ட்விட்டர் அனுப்பினேன், பதில் இல்லை
இதுதான் உங்கள் அணுகுமுறை.

நீங்கள் எதையும் ஆராய மாட்டீர்கள்.

சட்டபூர்வமான நடவடிக்கை என்றால், உங்களைப் பொறுத்தவரை – கண்டகண்ட விஷயங்களுக்கெல்லாம் தொடர்பில்லாதவர்களுக்கு ட்விட்டர் செய்தி அனுப்பிவிட்டுக் கையைப் பிசைந்து கொண்டிருப்பது. வாழ்க!

உங்களால் தாங்கமுடியவில்லை என்றால், மேலதிகார மத்தியஸ்தத்திற்கும் விளம்பரத்துக்கும் ஜெயமோகன் அவர்களின் மண்டையை உருட்டுவீர்கள். பாவம், அவர்.

6. நீங்கள், TRAI  உட்பட பல அலுவலகங்களுக்கும் (RTI மூலமாக ஒன்றையும் செய்யாமல்) உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு ட்விட்டர் செய்தியைத் தட்டி அனுப்பியிருக்கிறீர்கள். பேஷ் பேஷ்! றொம்ப நல்லாக்கீதுபா!

7. என் வருத்தமெல்லாம் – நீங்கள் ஏன் இதற்காக ஐநா சபை, ஜெனிவா உலக நீதிமன்றம், எஸ்ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, சுப வீரபாண்டியன் போன்றவர்களை / போன்றவைகளை அணுகவில்லை என்பதுதான்.

அடுத்தமுறை – முதலில் எஸ்ரா அவர்களைத் தொடர்பு கொள்ளவும். அவர் அணுக்கருசக்தி, ஜென், சார்லிசாப்ளின் என அனைத்து விஷயங்களையும் கரைத்துக்குடித்தவர்.

உங்கள் இணையவுரிமைப் போராளித்தனத்தை மெச்சுகிறேன்.

உங்கள் protestwallah சேவை, பொங்கலுக்குத் தேவை.

எங்கெங்கு காணினும் யுவகிருஷ்ணாவடா. நீங்கள் சராசரித்தனத்தை விட்டு விடுதலையாகி சிட்டுக்குருவியைப்போல மேலெழும்ப என் வாழ்த்துகள்.

நன்றி.

 

4 Responses to “மதுசூதனா, ஹரே ஜெயமோஹன யுவகிருஷ்ணா…”

 1. mekaviraj Says:

  உண்மையில் இதில் என்ன சராசரித்தனம் இருக்குனு புரியவில்லை..
  Quick google of “archive.org” “banned” shows it is of course banned but revoked by GOI.

  இப்படிக்கு ,
  மற்றுமொரு சராசரி ;-)


  • Sir Mekaviraj,

   1. This is a message from the service provider – and not from DoT – but another thing – it says DoT and not TRAI.

   2. Many service providers use this ‘general announcement’ to coverup their hiccups. (take it from a guy who does his homework)

   3. You should note that – other private and public Internet service providers do not have this hiccup. There IS a continuous availability of the website.

   4. In anycase DoT or CERT-in send the block advisories to ALL the service providers and NOT to select ones. This is a dead giveaway – running opposite the notions of that young man, madhusudhan.

   5. Sometimes for security reasons, https websites are allowed but not normal http sites. (am simplifying here) – this could be another reason. Again, in many cases http to https redirect is provided in manysites, but sometimes this breaks. This should not be confused with BANNING. There is NO connection at all.

   6. Also Ma’am Anwesha Das desultorily writes silly stuff, masquarading as “internet rights” and lefts. Thiruvasagar Madhusudan has obviously taken a few bits of text and ideas from there.

   Everyone should grow up.

   I understand your angst. You may or may not be mediocre – it is upto you to gauge that yourself.

   I didn’t point an accusing finger at you. Relax.

   Best:

   __r.

 2. Prabhu Deva Says:

  கொஞ்சம் நாட்களுக்கு முன் ஒரு பதிவில், நண்பர் ஒருவர் சுட்டி இருந்த ஆர்கைவ் தள லிங்க் திறக்கவில்லை என ஒருவர் சொல்லி இருந்தார். அதற்கு வேறொரு நண்பரின் பதில்.
  // First link shared in original post is opening for me without any issue in BSNL Broadband and Jio network. Vvbala Bala and Prabhu Deva please open the original link from jio or any network other than your ஆCT..//

  பிறகு தளம் திறப்பதா நண்பர் நன்றி கூறி இருந்தார்.


  • நன்றி, பிரபுதேவா. :-)

   ஆர்கைவ்.ஆர்கின் தளவுயிர்ப்பை மதுசூது கவ்வும்,
   இணையம் மறுபடியும் துள்ளும்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s