தள்ளாத வயதில் தயாளு அம்மாளுக்குப் பாவம், அவர் தன் கைச்செலவுக்கு எனக் கேட்டாலும்கூட, அறுநூறு கோடி ரூபாய் மட்டும்தானா கொடுப்பார்கள்?
December 17, 2017
படு கேவலமாக இருக்கிறதே! :-(
ஏனிப்படிக் கஞ்சப்பிசினாறிகளாக இருக்கிறார்கள் இந்த நன்றிகெட்ட திராவிட இளவல்கள்?
இந்தப் பிசாத்துப் பணத்தை வைத்துக்கொண்டு தயாளுஅம்மையார் என்னதான் செய்யமுடியும், சொல்லுங்கள்?
எப்படியோ அமோகமாக வாழ்ந்த குடும்பம் இப்படித்தானா, ஏழ்மையில் கேட்பாரற்றுச் சீரழிக்கப்படவேண்டும்? எனக்கு மெய்யாலுமே மிகவும் பரிதாபமாக இருக்கிறது. வாழ்ந்து கெட்ட குடும்பங்கள், எனக்கு மிகுந்த விசனம் தருபவை. கொடுமை.
வயதான காலத்தில் திமுக குடும்பத்துப் பெரியவர்களை, அவர்களின் செல்லக் கொடுக்குகள் (தெலுங்கு மொழியில் குழந்தைகளை அப்படித்தான் குறிப்பிடுவார்கள் – திராவிடத் தலைவர்களில் பெரும்பாலோர் அப்படித்தானே?) கவனித்துக் கொள்ளும் விதம் இப்படித்தானா? எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. சோகம் மனத்தைப் பிசைகிறது.
பாலூட்டி வளர்த்த செல்லக் கொடுக்குகள், ஆலகால விஷக் கொடுக்குகளாக மாறிவிடும் காலமைய்யா இது! :-(
-0-0-0-0-0-
…2009 மே மாதத்தில் தயாநிதி மாறனுக்குப் பாவம், அவர் மறுபடியும் மத்திய அமைச்சராகி, அமோகமாக அறுவடை செய்யவேண்டும் என ஒரு நியாயமான எதிர்பார்ப்பு. அதாவது anti-brahminism. கையில் ஊடக பலமும், ஊழல் பணமும் ஏகத்துக்கு இருந்தாலும் – அல்லும் பகலும் அயராமல், தொடர்ந்து திரைகடலோடியும் திருட்டுத் திரவியம் தேடிக்கொண்டே இருப்பவன் தானே அய்யா திராவிடன்?
அடுத்த ஒரு கோடி பரம்பரைகளுக்குச் சொத்து சேர்க்கவேண்டாமா?
ஆக, இதற்காக – எந்த திறந்த வாயிலும் வாய்க்கரிசி போடத் தயங்காத, தம் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிறவரான தயாநிதிமாறனார் – கருணையுள்ளம் கொண்ட தன் பாட்டியை தயாள குணத்துடன் கவனித்துக்கொள்ளத் தயாரானார் போலும்!
ஆனாலும் – சுற்றிச் சுற்றி வியூகம் அமைத்த பாலுக்களையும் ராசா(கைய வெச்சா)க்களையும் அழகிரிகளையும் கனிமொழிகளையும் மீறித்தானே, கூடியிருந்தே குழிபறிக்கும் குள்ள நரிக்கூட்டத்தைத் தாண்டித்தானே அய்யா, தன் காரியத்தை அவர் சாதித்துக்கொள்ளவேண்டும்?
-0-0-0-0-0-0-
…எது எப்படியோ, இந்தப் பின்புலத்தில்தான் தயாநிதியார் அப்படியும் இப்படியும் பணத்தைப் புரட்டி, மனைவியின் தாலித் தங்கத்தை விற்று, மார்வாரியிடம் தன் அடியில் கண்ட சொத்து உட்பட அனைத்தையும் அடமானம் வைத்து இனமானம் காக்க முயன்று – எப்படியோ சிறிய அளவில் பணத்தைப் பைசாபைசாவாகப் பைசாசம் போலச் சேர்த்துச் சேமித்து அல்லாடி மல்லாடி – இப்படியாப்பட்ட கொடுங்கஷ்டங்களுக்கிடையில் – ஒரு வழியாகக் கைமாற்றுக்காகப் பணம் என்பதுபோல ஏதோ சுமார் ரூ600 கோடி பிசாத்துப் பணத்தை அம்மணியார் தயாளுவார் அவர்களுக்குக் கொடுத்தார் போல!
உடனடியாக (முன்னரும் பின்னரும் பலமுறை ஆகியுள்ளது போல) குடும்பத்தில் அனைவருக்கும் இதயங்கள் இனித்தன. கண்கள் பனித்தன,
சுபம்.
-0-0-0-0-0-0-
இந்தத் திராவிடப் பண்டமாற்ற பணமாற்ற முறையைப் பற்றி – அம்மணி நீரா ராடியா அவர்களுக்குச் சொன்னது மேதகு முக அழகிரி அவர்கள். (அழகிரியின் பிரச்சினை என்னவென்றால் அவர் பல சமயங்களில் எசகுபிசகாக இம்மாதிரி உண்மைகளைச் சொல்லிவிடுவார்; இதன் காரணமாகவும், மற்ற பிற காரணங்களினாலும், என்னைப் பொறுத்தவரை இந்த அஞ்சாநெஞ்சனார்தான் இருக்கும் திமுக திராவிடர்களிலேயே கொஞ்சமாவது ஒப்புக் கொள்ளும்படிக்கு இருப்பவர்! மற்றவர்கள் – இசுடாலிர் உட்பட – வெறும் தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் மட்டுமே!)
நீரா ராடியா (அடிப்படையில் இவரொரு தரகர், மக்கள்தொடர்பு வகை அதிகாரியாக இருந்தவர்; தற்போது மருத்துவமனைச் சங்கிலி ஒன்றை நடத்திக்கொண்டிருக்கிறார்) – வீர் ஸங்க்வி (இவர் ஒரு ஊடகப்பேடி, காங்கிரஸ் அடிவருடி) அவர்களிடையே 23 மே, 2009 அன்று நடந்த உரையாடலின் ஒரு பகுதி கீழே – இதில்தான் இந்த அறுநூறு கோடிக் குடும்ப லஞ்சம் பற்றிய குறிப்பு வருகிறது.
இந்திய அரசின் வருமான வரித் துறையால் (2008-2009 ஆண்டுகளில்) ஆதாரபூர்வமாகப் பதிக்கப்பட்டு, பின் ஸிபிஐ அமைப்பால் குரல்கள் ஒப்பிடப்பட்டு படி சரிபார்க்கப்பட்டு நீதிமன்றத்துக்குச் சமர்ப்பித்த 540 பேச்சுக் குறிப்புகளில் – 34ஆம் குறிப்பில் மேற்கண்டது இருக்கிறது (Transcript of Niira Radia Tapes 34/540; 23rd May, 2009))
கீழே மேற்குறிப்பிட்ட ஒலிப்பதிவு + உரையாடலின் எழுத்துவடிவம் இருக்கிறது.
http://pad.ma/grid/title/niira
-0-0-0-0-
ஸிபிஐ ஒரு பாவப்பட்ட, மிகுந்த வேலை அழுத்தத்தில் இருக்கும் அமைப்பு என்பதை நான் நன்றாகவே உணர்ந்துள்ளேன்.
ஆனாலும் – இந்த அறுநூறு கோடி ஊழலை அவர்கள் தீர விசாரிக்காமல் விட்டுவிட்டது எனக்குச் சோகமாகவே இருக்கிறது.
ஆவணப்படுத்தப்பட்ட உரையாடல்களின் இப்பகுதியை, இந்த அசிங்கக் குற்றத்தை ஏன் தமிழகக் காவல் துறை முறையாக விசாரிக்கக் கூடாது?
இந்திய வருமானவரித் துறைகூட – இந்த ஊழல்பரிவர்த்தனைகள் – அவற்றின் ஊற்றுக்கண், பெறப்பட்ட விதம், அமுக்கபட்ட முறைகள் குறித்து விசாரிக்கலாமே? ஏன், அமலாக்கப்பிரிவு கூட இதனைத் துருவலாமே! ஹ்ம்ம்… ஏதோ என் ஆற்றாமை – River Tortoise. :-(
…எது எப்படியோ, சட்டபூர்வமாக இத்திருடர்கள் ஒழிக்கப்படுகிறார்களோ இல்லையோ – இம்மாதிரி திமுக குடும்ப ஊழல்களும், திராவிடத் திருடர்களின் தீவட்டிக் கொள்ளைகளும் பரவலாக வெளிவந்தால் – நம் தமிழக மக்கள், இந்த அயோக்கியர்களை இனம் கண்டுகொண்டால் – தேசியகட்சிகள் (காங்கிரஸ், பாரதீயஜனதா போன்றவை) தமிழ்நாட்டில் வளரச் சாத்தியக்கூறுகள் அதிகமாகும் என எனக்கு ஒரு அதீதமான நம்பிக்கை.
பார்க்கலாம், நம் உலகம் எப்படி விரிகிறது, உருமாற்றம் கொள்கிறதென்று…
December 18, 2017 at 17:33
In a state where the people are so delusional about their greatness yet cringe before authority nor hesitate to sell their votes to the highest bidder do you expect anyone to take one bit of notice?
December 18, 2017 at 19:27
Sir, I do not have any illusions about the number of people who would notice this.
But, generally on the Internet, relevant data should be available for anyone who is interested in knowing about such things – and I am just doing my bit to preserve and point out ‘memories of things past’ – that’s all.
__r, who is okay with just a few, discerning people reading these blogs.
December 21, 2017 at 10:14
சார்,
2G தீர்ப்பை பார்த்தீர்களா இதற்கு மேல் தயாளு அம்மாளுக்கும் தி.மு.க.விற்கும் என்னவேண்டும் ? :-C
December 22, 2017 at 14:13
ஐயா,
மன்னிக்கவும்,உங்களை சீண்டுகிறேன் என்று நினைக்காதீர்கள்.என் வயிற்றெரிச்சலை பகிர்ந்து கொள்கிறேன் – :-C
இதோ ராஜாவின் ‘நெஞ்சுக்கு நீதி’ (நிதி?)
https://www.minnambalam.com/k/2017/12/22/1513946179