இதுதாண்டா தமிழகத்தின் பள்ளிப்பாடத்திட்ட வரைவு (2017)! (+கோரிக்கைகள்)

November 25, 2017

கொடுமை! திராவிடப் பேய் அரசு செய்யும்போது பிணம் தின்னாமல் வேறென்ன செய்யும் பாடப்புத்தகங்களும் திட்டங்களும், சொல்லுங்கள்? :-( #திராவிடப்பேடிகள்

-0-0-0-0-0-0-

பரிசுத்த ஆவி வேதாளங்கள், திராவிட சுயரூபத்தில் படு பயங்கரக் கொள்ளைகளையும் கோரக் கொலைகளையும் அரங்கேற்றி – வாய் கூசாமல் பொய் சொல்லி, வன்முறை ஜாதிமத பேதங்களைத் தூண்டிவிட்டு, மக்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்கி – அவர்களை, இலவசங்களுக்கும் திரைப்படக் கேளிக்கைகளுக்கும் ஆலாகப் பறக்கும் நிலையில் வைத்து ஆட்டும் பொம்மலாட்டக் காரர்களாக இருந்தாலும்…

…அவர்கள் தம் இருப்பை நிலை நாட்டிக்கொள்ள, புதிய கட்டுக் கதைகளைப் பரப்ப, வரலாறுகளை மழுங்கச் செய்ய – அவர்களுக்குக் கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் (= mouth bag yes ©2017, S. Ramakrishnan) நழுவ விடமாட்டார்கள். அயோக்கியர்கள்…

அதுவும் மகத்தான ‘படைப்புலக’ அரைகுறைகளும் தொழில்முறை வெறுப்பியப் பிரச்சாரகர்களும் முற்போக்கு முகவர்களும் இந்த வாய்ப்புகளுக்கு ஊதுகுழல்களாகச் செயல்படும்போது இந்தக் கொள்ளைக்காரத் திராவிடர்களின் ஆட்டத்துக்குக் கேட்கவா வேண்டும்?

-0-0-0-0-0-0-

ஒட்டு மொத்தமாக இந்தப் பாடத்திட்ட வரைவுகளைப் பார்த்தால் (குறிப்பாக இந்த சமூகஅறிவியல்(!) வகையறா – வரலாறு, பொருளாதாரம், புவியியல், அரசியலறிவியல், மானுடவியல், சமூகவியல் +++) ஒருபக்கம் ஏமாற்றமும் இன்னொரு பக்கம் கோபமும் மட்டுமே எஞ்சுகின்றன; சோகம்.

என்னைப் பொறுத்தவரை – இந்த அரைகுறைத்தனத்துக்கும் படுகேவலத்துக்கும் எதிராக ஒரு இயக்கமே நடத்தினால்தான் தமிழகம் உருப்படும்.

இல்லையேல் தொழில்முறைப் போராளிகளும், அரைகுறை வெறுப்பிய அறிவுஜீவிகளும், இந்தியாவையும் அதன் பாரம்பரியங்களையும் வெறுக்கும் மேனாட்டுனோக்கிப் பதர்களும், ஊடகப்பேடிகளும் தான் கோலோச்சுவார்கள்; இந்த ஜந்துக்களின் வாலைப் பிடித்துக்கொண்டு தங்கள் கொள்ளைகளைச் சாஸ்வதமாக்கி தங்கள் இருப்பினை மினுக்கிக்கொண்டு நிலை நாட்டிக்கொள்வார்கள் நம் அயோக்கிய திராவிடர்களும்…

-0-0-0-0-0-

தமிழகத்துப் பாட நூல் திட்ட வரைவுகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்; ஆனால் ஒரு பானை வெறுப்பியப் பிரிவினைவாத அரைவேக்காட்டுச் சமையலுக்கு ஒரு துளி பாதிவெந்த சோற்றினைப் ‘பதமாகக்’ காண்பிக்க – ‘சமூக அறிவியல்’ குறித்த, இந்த எழவெடுத்த ‘அணுகுமுறை ஆவணத்’தைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்கிறேன். :-(

இந்த ஆவணத்தின் ஆரம்பம் ஓரளவுக்குச் சரியாகத்தான் இருக்கிறது – இந்த உணர்ச்சிவசப்பட்ட ‘எதிர்கொள்ளும் அறைகூவல்கள்’ உயர்வு நவிற்சி வகை விடலைத்தனத் ததும்பல்கள் தவிர… (என்ன அறைகூவல்களோ, அரைகுறை ஆவணத்தின் அரைவேக்காட்டு எழுத்தாளர்களைத்தான் கேட்கவேண்டும்!)

கொஞ்சம் மண்டையில் அடித்துக்கொண்டு மேலே படித்தால்தான் (பின்னர் அதே தளத்திலுள்ள, பிற வரலாறு குறித்த ஆவணங்களை செரித்தால்தான்) தெளிவு கிடைக்கிறது – கீழ்கண்ட அயோக்கிய, கந்தறகோள அடிப்படைகளும் உள்ளுறை சிந்தனைகளும் புரிபடுகின்றன:

1. தமிழகத்தில் இந்து மதங்களோ அதன் பகுதிகளான சைவம் வைணவம் என எதுவுமே இருந்ததில்லை – ஆக இந்தியாவிலும், அதன் ஒரு பகுதியான தமிழகத்துக்கும் அவற்றின் பங்களிப்புகள் எனப் பேச எப்படியய்யா முடியும்?

2. லெமூரியாவிலிருந்து டபக்கென்று நேரடியாகக் குதித்து – உடனடியாக சிந்து சமவெளி வரை டமாலென்று அலைபாய்ந்த திராவிடப்பூதம் மட்டும்தான் இருந்திருக்கிறது, பாவம் தன்னந்தனியாக முழித்துக்கொண்டுவேறு! #எங்களுக்கு அட்டைக்கத்திகள் போதுண்டா.

3. இஸ்லாம் க்றிஸ்தவம் எனப் பிற மதங்கள் கொடைகளை மட்டும் வழங்கியிருக்கின்றன. ஏன் அம்மதங்கள் மட்டும்தான் வழங்கியிருக்கின்றன. அவை ஒருவிதமான கலாச்சார அழிவுகளையும் ஏற்படுத்தவில்லை. சுபிட்சம்.

4. ஸம்ஸ்க்ருதம் அப்படியென்றால் என்ன? கிலோ எவ்வளவு லிட்டர்?? தமிழகத்தில் வெறும் தமிழ் மட்டுமே! ஏன், வடமொழி என்பதே வடைமொழி என்பதன் மரூவு மட்டுமே! #வடைபோகவில்லை, நன்றி என்பது நம் சொலவடை.

5. நாயன்மார்களா, ஆழ்வார்களா? கோவில்களா குளங்களா ஏரிகளா? எதுவும் இருந்திருக்கவில்லை – ஆக அவை பங்கும் அளிக்கவில்லை. அதனால் அவை பாடத்திட்டத்திலும் இல்லை. லெமூரியாவுக்குப் பிறகு ஏதாவது உருப்படியாக ஏற்பட்டதற்கு – வந்த சமண பௌத்த சமயங்கள்தாம் காரணம்! பின்னர் அப்ரஹாமிய மதங்கள்…

6. தமிழகம் என்றாலே சமயச் சார்பின்மைதான்! ஸெக்யூலரிஸ்ம் என்பதையே கண்டுபிடித்தவர்கள் திராவிடர்கள். சமயச்சார்பின்மை என்பது திராவிடம் உலகத்துக்கு அளித்துள்ள கொடை. அதனால்தால் – சமயம் கிடைத்தபோதெல்லாம் சமயச்சார்பின்மை பற்றி நீட்டி முழக்குவோம்; அதனால்தான் ஹிந்துமதங்கள் குறித்த வரலாறுகளைக் குழிதோண்டிப் புதைப்போம். பிற மதங்களை மட்டும் தூக்கிப் பிடிப்போம்… அழகான திராவிடப்பேடித்தனம், வேறென்ன சொல்ல.

7. …

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்; ஆனால் இந்தப் பாடத்திட்டமே – மஞ்சள் காமாலைப் பார்வைகளாலும், கூசாமல் கூறும் பொய்களாலும் நிறைந்திருக்கிறது.

ஆகவே, வீட்டிலும் வெளியிலும் முடிந்தவரை மினுக்கிக் கொள்ளாமல் தமிழில் பேசும், எழுதும் – ஓரளவு வரலாறுகளையும் (திராவிட உளறாறுகளையும்தான்!) அறிந்து தெரிந்துகொண்டுள்ள எனக்கு – இந்தப் பாடத் திட்டமே அசிங்கமாகவும், கபடமாகவும் படுகிறது. நேர்மை என்கிற ஊரிலேயே பிறக்கவில்லை – இந்தத் திராவிடர்கள். பேடிகள், வேறென்ன சொல்ல…

இப்படிப்பட்ட காமாலைக் கண் பாடத்திட்டத்திற்காக வகுக்கப்படும் பாடப்புத்தகங்களை மட்டும் உருப்போட்டுப் படித்து – மிச்ச நேரத்தில் விஜய்குஜய் கமல்டுமீல் படங்களைப் பார்த்து வளர்ந்து உளறப்போகும் அடுத்த தலைமுறைகளைப் பற்றி நினைத்தால், வயிறு எரிகிறது. :-(

எது எப்படியோ! இனி, இத்திட்டத்தின் சிலபல பகுதிகளைப் பார்த்து – துணுக்குற்று ஓக்காள வாந்தி எடுக்கலாம். நன்றி.

-0-0-0-0-0-0-

இப்படி நல்லபடியாகவே ஆரம்பிக்கும் திட்டம் பின்னர் – எப்படி நாங்கள் வரலாறுகளைக் கற்றுக்கொள்ளவே மாட்டோம், பொய்மை வதந்திகளைப் பரப்புவோம், இருட்டடிப்பு செய்வோம், தொடர் கலாச்சாரக் கொள்ளைகளையும் தொடர்ந்து நடத்துவோம் என விரிவது, சோகம்!

திராவிடர்களின் கொலைகொள்ளைகளுக்குப் பயன்படாமலா இருந்திருக்கின்றன – இவர்களுடைய திரிக்கப்பட்ட பொய்மை நிறைந்த கபடவரலாறுகள்? ஆக, திராவிடர்களின் அமோக வாழ்க்கைக்கு தொழில்முறையில் பாதிரிகளால் உருவாக்கப்பட்ட வரலாற்று உளறாறுகள் காரணம்தானே! அதாவது, இந்தியாவின் பிற பாகங்களில் ஒத்துவரும் மேற்கண்ட கூற்று – திராவிடர்களுக்கு ஒத்துவராது. நன்றி.

திட்டத்தின் ‘அரை’கூவல்களில் – இப்படியொரு தேய்ந்த உளுத்துப்போன வரி – இப்படிப்பட்ட க்லீஷேக்கள் ((cliches) தேவையா?

தமிழகத்தின் அடிப்படைகளைக் கயமையுடன் விட்டுவிட்டார்கள். ஆனால் விளிம்பு நிலை களிம்பு நிலை எனவொரு பினாத்தல். அய்யோ! இந்த ஸபால்டெர்ன் ஸ்டடீஸ் பூதம் நம் புறக்கடை வழியாக நுழைந்துவிட்டதே! அடுத்தது இன்னொரு பூதமான க்ரிட்டிகல் தியரியும் வந்து சதிராட ஆரம்பித்துவிடுமோ! :-(

அடப்பாவிகளா! இப்படியாடா அநியாயத்துக்குப் புளுகுவீர்கள்? சமயசமரசம் மிளகு ரசம் பூண்டுரசம் என ஏகத்துக்கும் வாளிவாளியாக அட்ச்சுவுடுகிறீர்களே!

அவ்ளோதானாடா? முன்னேபின்னே வேறொன்றும் இல்லையா? ஹிந்துமதங்களின் ‘மதச் சார்பின்மை’யால்தானேடா பிற மதங்களும் அணுக்கமாக முடிந்தது? இப்படியா முழுப்பூசணிக்காய்களை ஒரு பாடத்திட்டத்தில் மறைப்பீர்கள்? கூசாமல் பொய் சொல்வதற்கும் ஒரு அளவு வேண்டாமா?

இப்படியாடா அயோக்கிய இருட்டடிப்பு செய்வீர்கள்? வேறு யாருமே இக்கலைகளுக்குப் பங்களிக்கவில்லையா? எச்சக் கலைகளா! அவர்களால் உங்களுக்கு ‘பொட்டி’ கிடைக்கும் சாத்தியக்கூறு இல்லாததால், அவர்களுக்குப் பொட்டிச் செய்தி இல்லையா? பாவிகளா!

இது சரியே. திராவிடர்களின் வரலாறே, பேடிகளின் வரலாறுதான். இந்த விளிம்பு நிலையாளர்களின் பெட்டிச்செய்தி மிகவும் அவசியமே! All hail Subaltern studies! Hail Critical theory!

ஏண்டா பாவிகளா! கோவில்களும் சிற்பங்களும் ஏரிகளும் (வீராணம்!) கால்வாய்களும் அணைகளும் உங்களுக்கு பங்களிப்பாகத் தெரியவில்லையா? வட நாட்டை சோழன் வென்றால் அதற்காகப் பிலுக்கிக் கொள்கிறீர்களே!

இப்படி திக்விஜயம் சென்றது ராஜராஜசோழனா – அவர் மகன் ராஜேந்திர சோழனா? சொதப்புகிறீர்களே! (நல்லவேளை – சந்தடி சாக்கில் கருணாநிதிச் சோழனைத் தூக்கிப் பிடிக்கவில்லையாதலால், நன்றி நன்றி நன்றீ!)

தமிழர்களின் அடிப்படைப் பங்களிப்புகள் அனைத்தையும் இருட்டடிப்புச் செய்துவிட்டு – இப்படிச் சுரண்டல்வாதிகளாலும் ஆதிக்கவாதிகளாலும் பிச்சையிடப்பட்டவைகளை மட்டும் கயமையுடன் தூக்கிப் பிடிக்கிறீர்களே! காலனிய சக்திகளுக்கு ‘நன்றி நன்றி நன்றி’ சுவரொட்டிகளை மட்டும் தான் ஒட்டவில்லை நீங்கள்! அயோக்கியர்களா!

ஆம். வரலாற்றைத் திரிக்கவேண்டியது, தரவுகளை ஒதுக்கிப் பொய்மைகளைப் பட்டொளி வீசிப் பறக்கவைப்பது – ஆரியம்-திராவிடம் போன்ற செல்லாக்காசான பொய்களை உணர்ச்சியுச்சாடனம் செய்வது மிகவும் முக்கியம். நன்றி.

வைணவ மதமுறைமைகளைக் குறித்து ஒரு வார்த்தையில்லை. அதனை ஒருமுறை கூட சொல்லவில்லை – ராமானுஜர் பற்றிய குறிப்பு ஒன்றுமட்டும் வேண்டாவெறுப்பாக வருகிறது! (அப்போது ராமானுஜருக்கும் ஹிந்துஆன்மிகத்துக்கும் ஒரு தொடர்புமில்லையா?)


ஆ! யாரது இந்த விமலா பெக்கெட்? புது வேதாளீ?? ஓ, விமலா பெக்லி அவர்களைப் பற்றிச் சொல்லவருகிறீர்களா அரைகுறைகளே! ஒரு ஆய்வாளர் பெயரைச் சுத்தமாக எழுதத் தெரியவில்லை – பாடப்புத்தகத் திட்டம் எழுதி அறிவுரை கொடுக்கிறீர்கள்!

ஏதோ பெயரை எங்கோ கேட்டுவிட்டு இப்படி #எஸ்ரா தனமாகவா அட்ச்சுவுடுவது? அல்லது இந்த ஆவணக்கோமணத்தில் யுவகிருஷ்ணா அவர்களின் பங்களிப்பும் இருக்கிறதா என்ன?

-0-0-0-0-0-

கொள்ளைக்கார விடலைத் திராவிடர்களின் தலைமை பெரும்பாலும் தெலுங்குமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள்திரளின் உச்சாணிக் கிளையினரிடம் தான் இருக்கிறது. (பெருவாரியான சாதா தெலுங்கர்கள் தமிழகத்தில் வசிக்கிறார்கள், அவர்கள் திராவிடர்களல்லாததால் சுயமரியாதையுடனும் நேர்மையாகவும்தான் இருக்கிறார்கள்! எனக்குப் பிணக்கு திராவிடர்களுடன் தான் – இதில் எல்லா ஜாதியில் மதங்களில் இருக்கும் அயோக்கியர்களும் ஒருங்கிணைந்து கொலைகொள்ளை கற்பழிப்பு கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறார்கள். இந்தக் கும்பல் அகற்றப்படவேண்டுமென்பதுதான் என் அவா!)

கன்னடர்களும் அப்படியே; ஆனால் அம்மக்கள் திரளில் ஒருவரான ஈவெரா ‘பெரியார்’ திராவிடர் தலைவர் ஆனதால் – அதுவும் ‘தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை’ என அவர் செப்பியிருந்தாலும் விசித்திர திராவிடத்தனமாக – தமிழ் மொழிக்குச் சார்பாக அவர் இருந்தாற்போன்ற பிம்பத்தை உருவாக்கியே ஆக வேண்டுமே!

ஆக… கொள்ளைக்காரத் திராவிடர்களுக்கு இம்மாதிரியெல்லாம் பணி செய்து, தங்கள் தலைமையைப் பாதுகாத்துக்கொள்ள ‘ஆவன’ செய்யவேண்டியிருப்பதால் – இப்படியொரு கல்வித்திட்டக்கூறு!

‘தாய்மொழியான தெலுங்கை மறந்து தமிழையே தாய்மொழியாகக்கொண்டு வாழ்ந்து’ வீட்டில் நைய்னா எனப் பாசமுடன் திராவிடத் தறுதலைகள் தங்கள் கொள்ளைக்கார அப்பன்களைக் கூப்பிடும்போது இன்பத் தமிழ்த் தேன்வந்து பாயுது காதினிலே! (இம்மாதிரிச் சிலபல திராவிடர்கள் வீட்டுக்குச் சென்று – அவர்கள் பூஜையறையில் வேங்கடாசலபதி ஏடுகொண்டலவாடா படத்துக்குப் பகுத்தறிவுடன் பூஜை செய்வதையும் பார்த்திருக்கிறேன் – கபடவேடதாரித் திராவிடர்கள்!)

இன்னொரு விஷயம்: தாய்மொழியை மறப்பது போற்றுதற்குரிய செயலா என்ன? என்ன பினாத்துகிறார்கள் இந்தத் தமிழ் நாட்டுப் பாட நூல் நிறுவனக் காரர்கள்? :-(

சைவ மதம் பற்றி ஒரேயொரு இடத்தில் வருகிறது – அதுவும் வீரசைவ (கன்னட பசவ) முறைமை பற்றியது! நன்றி நன்றி நன்றி!

சரிதான். அப்போது 1) மூட நம்பிக்கையுடன் பிறை பார்த்து ரம்ஸான் வகை பண்டிகைகளைக் கொண்டாடுவதையும் மேற்கு நோக்கி ஒரு கற்கட்டிடத்ததைத் தொழுவதையும் கண்ணுக்குத் தெரியாத இல்லாத கடவுளை அல்லாவெனத் தொழுவதை அகற்றவும் 2) ‘புனித’ தாமஸ் இந்தியாவுக்கு வந்தார் வகைக் கட்டுக்கதை மூட நம்பிக்கைகளை அகற்றவும் — பாடத்திட்டத்தை வகுக்கலாமே! நன்றி.

இது என்னடா ‘கனடாவின் கெபக்? ‘ :-(

இலங்கை அண்டார்டிகா போன்றவற்றின் மகாமகோ புவியரசியல் முக்கியத்துவங்கள் யாவை? அவற்றைப் பற்றி, ஏன் பள்ளிப் பிள்ளைகள் அறிந்துகொள்ளவேண்டும்?

இதெல்லாம் ரொம்ப ரொம்ப முக்கியண்டா, பெனாத்தல் வாதிகளா!

நல்லது. இவற்றுக்கு நான் ‘மதி’ + துக்ளக் ‘சத்யா’ போன்றவர்களின் ஆக்கங்களைப் பரிந்துரை செய்கிறேன்.

அய்யாமார்களே! மைக்ரொஃபில்ம் ஒரு நவீனத் தொழில் நுட்பம். நீங்கள் சொல்கிறீர்கள், நான் கேட்டுக்கொள்கிறேன். நன்றி!

-0-0-0-0-0-

…ஒரு விஷயத்தில் இந்தக் கந்தறகோளப் பாடத்திட்டத்தைக் குறித்து நான் ஒத்திசைவுடன் இருக்கிறேன்.

அதாவது – தமிழ்நாடு ‘கலைத்திட்ட‘ பாடத்திட்டம் தான் இது என்பதைப் பற்றித்தான்! நல்ல தமிழ், நல்ல கலைத்திட்டம். வாழ்க! திட்டப்படவேண்டியதுதான் இந்தப் பாடத் திட்டமிடல்.

நகைக்கத்தக்க, வெறுத்தொதுக்கப்படவேண்டிய அரைகுறைகள் இந்தத் திராவிடர்கள்!

-0-0-0-0-0-

…அய்யோபாவம், இந்த அரைவேக்காட்டு திராவிடர்களையும் கட்டிக்கொண்டு அழுது கொண்டிருக்கும் பாரதம்… பாவப்பட்ட சாதா தமிழர்கள், வேறென்ன சொல்ல!

கோரிக்கைகள்:

  1. தயவுசெய்து – இந்தப் பதிவைப் படிக்கும் அத்தனை (=7.5 பேர்) மாக்களும் – இந்தக் கல்வித்திட்ட ஆவணங்களுக்கெதிராக உங்கள் கருத்துகளை – அமைப்பாளர்களுக்கு அனுப்ப (கடைசி நாள்: நவம்பர் 28, 2017) முடியுமா?  http://tnscert.org/webapp2/syllabusfb.aspx 
  2. திராவிடர்களின் அயோக்கியத்தனத்தையும் அராஜகத்தையும் எதிர்த்து – இம்மாதிரி விஷயங்களைப் பரவலாக்க முடியுமா? (இப்பதிவை விளம்பரப்படுத்தவேண்டும் என்பதில்லை – நீங்களும் உங்கள் கருத்துகளை எழுத முடியுமா? சிந்திக்கக்கூடுமா? ஏனெனில் நம் பிள்ளைகளின் எதிர்காலமே இம்மாதிரி அயோக்கியத் திராவிடப் பரப்புரைகளால் தடுத்தாட்கொள்ளப்படக்கூடாது அல்லவா?) :-(

நன்றி. :-(

 

9 Responses to “இதுதாண்டா தமிழகத்தின் பள்ளிப்பாடத்திட்ட வரைவு (2017)! (+கோரிக்கைகள்)”

  1. A.Seshagiri Says:

    ஐயா,
    ஒரு சந்தேகம் விவரம் தெரிந்தவர்கள் யாரும் உருப்படியான கருத்தை தெரிவித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் ‘ஒரு வார கால அவகாசம் மட்டும் கொடுத்திருக்கிறார்களா அல்லது இந்த கால அவகாசம் போதுமானதுதானா?


    • அப்படியெல்லாம் இருக்காது என நம்புகிறேன்.

      வழக்கமான அசிரத்தையாகவும், அவர்களுடைய காலதாமதங்களினாலும், அதனால் அவர்களுக்கு இருக்கக்கூடிய நேரகெடுபிடிகளினாலும்தான் இருக்கும்…

      இருந்தாலும் இதனை நீட்டிப்பார்கள் என நம்புகிறேன். கோரிக்கை வைத்திருக்கிறேன். பார்க்கலாம்.

      • RC Says:

        அய்யா,
        தங்கள் பதிவு கண்டேன். என்னிடம் உள்ளது ஆர்வம் மட்டுமே.கண்டிப்பாக கருத்து சொல்லுமளவுக்கு பாண்டித்தியம் இல்லை.(பொறுப்பு துறப்பு :-( .அதை கணக்கில் கொண்டு கீழ் எழுதியவற்றை நோக்கவும்.

        அரசு நியமித்த குழுக்கள், இது வரை நடந்த கூட்டங்கள் குறித்த விவரங்களும் கீழ் உள்ள இணைப்பில்.
        கடந்த ஜூன்-2017 இறுதியில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டன. 1.பாடத் திட்டம் உருவாக்கக் குழு (தலைமை: திரு Dr அனந்தகிருஷ்ணன் ) 2.பள்ளிக்கல்வி சீரமைப்பு மேல்மட்டக் குழு (தலைமை:அமைச்சர் திரு செங்கோட்டையன்).
        மண்டல வாரியான கூட்டங்கள் நடந்த பிறகு, பாடத்திட்ட மதிப்பாய்வுக் கூட்டத்தில் கல்வித்துறை செயலர் அவர்களும் சமூகவியல் பாடத்திட்ட மேம்படுத்துதலுக்கு துறை சார் விற்பன்னர்கள் அதிகரிக்கப்படவேண்டும் என்றே குறிப்பிட்டுள்ளார்.
        [திரு. உதயச்சந்திரன் இ.ஆ.ப அவர்கள் தான் அப்போதய செயலர் என்று நினைக்கிறேன் பார்க்க பக்கம்-11
        http://tnscert.org/webapp2/files/The%20Path%20Travelled.pdf%5D

        நிற்க..

        CBSE பாடத்திட்டத்தில் பயிலும் என் மகளின் வரலாறு (6th) புத்தகத்தையும், பரிந்துரைக்கப்பட்ட வரைவு பாடத்திட்டத்தையும் ஒப்பு நோக்கின் முன்னதில் இல்லாத ஒன்று நீங்கள் குறிப்பிட்ட லெமூரியா குறித்தானது பண்டைய தமிழகம் என்ற தலைப்பில். அதை தவிர்த்துவிட்டு பார்த்தால் கிட்டத்தட்ட இரண்டும் ஒன்றாகத்தான் தெரிகிறது.பாடத் தலைப்புகளில் சிற்சில வேறுபாடுகள் உண்டெனினும் உள்ளடக்கம் தோராயமாக ஒன்றுதான்.

        சு.கி.ஜெயகரன் எழுதிய குமரி நில நீட்சி என்ற புத்தகம் ஞாபகம் வருகிறது.அதற்கு திரு.ஜெயமோகன் எழுதிய குறிப்பும் கூடவே.
        http://www.jeyamohan.in/63#.WhkkQEqWbIU
        http://www.jeyamohan.in/36541#.Whki_0qWbIU
        //குமரிக்கண்டம் என்ற கருத்து அறிவியல் அடிப்படை இல்லாத ஒன்றாகவே இன்றுவரை உள்ளது என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் நம் மொழியின் சொற்கள், எராளமான தொன்மங்கள் ஆகியவற்றை குமரிக்கண்டம் கடல்கொண்டது என்ற மையக்கருத்து இன்றி இணைக்கவோ புரிந்துகொள்ளவோ இயலாது என்று எனக்குப் படுகிறது.[உதாரணம் தென்புலத்தோர் என்றால் மூதாதையர்] ….. ஒரு கருதுகோளாக, விவாதத் தரப்பாக குமரிக்கண்டம் இருந்தபடியேதான் இருக்கவேண்டும். அதை முழுக்க நிராகரித்துவிட இயலாது.//

        என் பார்வையிலும்,அறிவியல் அடிப்படை இல்லாதததொன்று வரலாற்று புத்தகத்தில் இடம்பெறக்கூடாது என்பதே.
        ஆனால் லெமூரியா இல்லையென்றால் சமகால வரலாற்றை (தனித்தமிழ் இயக்கத்தையும்,திராவிடத்தையும்) எப்படி விளக்குவது புரியும் படி என் மகளுக்கு? ஒன்றை மறுக்க அதை ஏற்க வேண்டுமோ முதலில் :-(

        என் குறைவுப்பட்ட புரிதலில், சில குறைபாடுகளோடு வரைவானது நடுநிலை பள்ளிகளுக்கு (6-8) தற்போதைய CBSE பாடத்திட்டத்தை ஒத்து இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

        நீங்கள் மறுப்பீர்கள்.ஆனால் எதிர்த்து சொல்ல தற்போதைக்கு கருத்து ஒன்றுமில்லை அய்யா என்னிடம். நன்றிகள் பதிவுக்கு.


      • அய்யா நன்றி. இவர்கள் நடத்திய ‘ஆலோசனை’ கூட்டங்களைப் பற்றி அறிவேன். அவற்றில் ஒன்றுக்கு அழைப்பும் வந்தது.

        நான் போகவில்லை – ஏனெனில் 1) அதே புத்தக/கல்வித்திட்ட விஷயத்துக்கு முன்னமே ஒருமுறை வேலை செய்து நொந்துபோயிருக்கிறேன். சமச்சீரழிவுக் கல்வியை தங்கம் தென்னரசுகள் முன்னெடுத்ததற்கு முன் நடந்த விஷயம் என நினைவு (இயற்பியல்+கணித புத்தக விவகாரம் தொடர்பாகக் குறைந்தது 300-320 மணி நேரம் இலவசமாக உழைத்திருக்கிறேன், எல்லாம் வியர்த்தம்) – ஆக அலுப்பு 2) வ கீதா, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களும் இந்த அமர்வுகளுக்கு வருவார்கள் எனக் கேள்விப்பட்டேன். அரைகுறைகள். நிலை ரசாபாசமாகிவிடும் – அதனாலும்.

        ஸிபிஎஸ் இ புத்தகச் சட்டகங்கள் வேறு. அவர்களுடையது இடதுசாரிப் பார்வை அலங்கோலம் – ஆனால் திராவிடத்துக்கு அது சர்வ நிச்சயமாகப் பரவாயில்லை.

        உதயசந்திரன் அவர்களுடனும் (என் நண்பர் ஒருவர் என்னை அழைத்துச் சென்றார்) ஒரு தடவை இன்னொரு விஷயம் தொடர்பாகப் பேசியிருக்கிறேன். நல்ல மனிதராகத் தான் பட்டார். இருந்தாலும் பக்கா திராவிடர் அவர் (சிந்தனை அளவில்) – இப்போதைக்கு மீட்சி இல்லை.

        நமக்கான வரலாறுகளை நாமே (இணையத்தின் துணையுடன்) வளர்த்தெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.

        நன்றி.


  2. நண்பர் ஒருவர் டெலிஃபோனில் தொணதொணப்பு: ‘சந்திர கிரஹணம் சூரிய கிரஹணம் பற்றியெல்லாம் புவியியல் பேசுமா? ஆனால், அப்படி தமிழ்ச்சான்றோர்கள், சமூக அறிவியல் விற்பன்னர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள் – இதை நான் ஏன் விமர்சிக்கவில்லை?’ என ஒரே கூவல்.

    நான் இந்த பாடத்திட்ட எழவைப் பற்றி 1000 வார்த்தைகளுக்கு மேல் எழுத விருப்பமில்லாத காரணத்தால் பலப்பல பிதற்றல்களைச் சுட்டிக்காட்டவில்லை. அலுப்பாக இருக்கிறது. ஆனால் நீங்கள் காட்டலாமே! விலாவாரியாக எழுதலாமே!

    புவி இருப்பதால்தானே நமக்கு கிரஹணம். ஆகவே அது புவியியல். #திராவிடவியல்

    ஏன், கண்ணிருப்பதால்தானே இந்த கிரஹணத்தைப் பார்க்கமுடிகிறது? ஆகவே கிரஹணம் குறித்துப் படிக்க கண்ணியல் எழவையும் நம் பிள்ளைகளுக்குக் கற்பித்து மூட நம்பிக்கைகளைத் தகர்க்கலாமே!

    இன்னொரு பக்கம் பார்த்தால்… நம் செல்ல திராவிட அறிவுஜீவிகள் இந்த கிரஹணத்துக்குக் காரணம் லெமூரியாவிலிருந்து குத்தாட்டம் போட்டுக்கொண்டே வந்த லீமர்கள் என ஒரு விலங்கியல் வியாக்கியானம் கொடுத்துவிடுவார்கள். பாவி அறிவிலிகள்!

    எல்லாம் நம்ம நேரம்டா! :-(


  3. தமிழ் மட்டும் தெரிந்தவன் செத்தான்..

  4. K.Muthuramakrishnan Says:

    https://www.facebook.com/muthuramakrishnan.krishnan
    I have sent a mail to them. Also posted in my FB time line.

  5. bmniac Says:

    It is well known that history books in Pakistan completely black out the period between the Harappan civilisation and the arrival of the Arabs in Sind. The period after that is also not quite credible. This is the view of Pakistani experts(easily accessed in youtube and specialist books). Clearly TN is not far behind in creative history making,


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s