குஜராத் பாஜக-வின் ஆஸிஃபா கான்: ஆஹா! என்ன திறமைவாய்ந்த அரசியல் மேடைப் பேச்சாளர்!
April 19, 2014
(அல்லது) இதுதாண்டா ஸ்த்ரீஷக்தி! :-)
… அத்தனை செய்திகளை நகைச்சுவையுணர்ச்சியுடன், எளிமையான ஹிந்தியில், வசைகள் இல்லாமல் தொடர்ந்து சொல்கிறார்! தெளிவான, ஸ்பஷ்டமான உச்சரிப்புகள். செதுக்கியெடுக்கப் பட்ட கிண்டல்கள். நைச்சியமான நையாண்டிகள். தேவையானபோது சரியான ஆங்கிலப் பதங்கள். கூட்டத் திரள்கள் மயங்கிக் கேட்கின்றன, ஆரவாரம் செய்கின்றன! காங்க்ரெஸ் கட்சிக்கும், தீஸ்தா செதல்வாத் தர அழுகுணி ஆட்டம் ஆடும் புளுகுணி மாங்கொட்டைகளுக்கும், தொழில்முறை கஞ்சிக் கலய மனிதவுரிமைவாதிகளுக்கும் திருப்பித் திருப்பிச் சவுக்கடி.
குஜராத்தின் வளர்ச்சியைப் பற்றிய அங்குள்ள மனிதர்களால் புரிந்து கொள்ளக் கூடிய – எளிதில் சரிபார்த்துவிடக் கூடிய விவரங்களைப் பற்றிப் பேசுகிறார். கொள்கைகளைப் பற்றிப் பேசும்போது எளிமையாக்கி அவற்றைச் சாமானியர்களின் வாழ்க்கைகளோடு பொருத்திச் சரியாகப் புரிந்துகொள்ள வைக்கிறார். நரேந்த்ரமோதிக்காக வாக்குச் சேகரிக்கிறார். குஜராத்திய கிராம/ நகர ஜனங்களிடம் ‘அர்ரே பாயீ ’ என்று இழுத்துப் பேசி (என் மனதையும்) கொள்ளை கொள்கிறார்.
இவர் கூட்டங்களில் பல சமயங்களில் (பைசா கொடுத்து உட்காரவைக்கப் படாத) பெண்களும் அதிகம். அவர்களிடம் மோதி ஆரம்பித்த ‘சக்தி மண்டல்’ (= நம்மூர் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் போன்றது; ஆனால் வீரியமும், வீச்சும் அதிகம்!) பற்றிப் பேசுகிறார். விவசாயிகளுடன் பேசும்போது, மோதியின் அரசின்கீழ் நீர் மேலாண்மை சரியாகப் பணிசெய்வது பற்றியும், பாரம்பரிய விவசாயம் பற்றியும், அதனை மீட்டெடுத்து, தொழில் நுட்பங்களினூடே வளர்த்தி செம்மையாக்க வேண்டிய அவசியம் பற்றியும் பேசுகிறார். முஸ்லீம்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் – பொய் வதந்திகளைப் பற்றியும், ஸெக்யூலரிஸ்ம் என்கிற பெயரில் முஸ்லீம்கள் தனிமைப் படுத்தப் படல் பற்றியும் பேசுகிறார்; மோதியின் ஆட்சியில் முஸ்லீம்கள், குஜராத்தி சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியினூடே, கண்டுள்ள வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறார்.
புத்தி கூர்மையும், நாக்கில் ஸரஸ்வதி நடனமாடும் வரமும் பெற்றுள்ள இவர் – அண்மைக் காலங்களில் நான் கேட்டுள்ள மேடை அரசியல் பேச்சாளர்களில் முதன்மையானவர்; எனக்குத் தெரிந்து, இவர் தான் குஜராத் மேடைப்பேச்சாளர் எவரையும் ஆழத்திலும் வீச்சிலும் விஞ்சியிருக்கிறார்!
ஏப்ரல் 24 அன்று தேர்தல் நடக்கப்போகும் நம் தமிழகத்தில் – கடந்த ஒரு மாதத்தில் விழுப்புரம்/புதுச்சேரி எனச் சுமார் 15 விதம்விதமான ழ்சிறியபெரிய கட்சிக் கூட்டங்களுக்குப் போயிருக்கிறேன். என் குருவிமூளைக்கு எட்டியவரை நம்மிடையே ஒரு ஆஸிஃபா கான் கூட இல்லை.
நம்மவர்கள், திராவிடத் தமிழ் ஏச்சாளர்கள் – ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி – இவர்கள் அரைகுறைக் கத்தல் வாதிகள்; பேச்சில் நுணுக்கமோ, பிரச்சினைகளை அலசுவதில் திறமையோ இல்லாதவர்கள். ஆபாசமாகப் பேசுவதில், சவால் விடுவதில், வாய்ச்சவடால்களில் மட்டுமே திறமையுள்ளவர்கள். இதில் பெருந்தலைவர்களும் அடக்கம். (தமிழக் கலாச்சாரம் திடம் வாய்ந்ததல்ல, அது வெறும் உரக்கக் கத்தப்படுவதான ஒன்று மட்டுமே!)
-0-0-0-0-0-0-0-
குஜராத்தின் பாரூச் பகுதியில் பிறந்து வளர்ந்த அம்மணி ஆஸிஃபா கான், ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்று, ஒரு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். பத்திரிக்கையாளராகவும் இருந்த இவருக்கு அரசியலில் ஈடுபாடு இளம்வயதில் ஏற்பட்டு, பின்னர் அஹ்மெத் படேல் (இவர் ஸோனியா காந்தியின் ஆஸ்தான நிரந்தர எடுபிடிகளில் ஒருவர்) அவர்களால் கண்டெடுக்கப் பட்டு 2008லிருந்து 2012வரை காங்க்ரெஸ் கட்சியில் இருந்திருக்கிறார்; அஹ்மெத் படேலின் செயலாளர்களில் ஒருவராகவும், ராஹுல் காந்திக்கு குறிப்புகள் எழுதிக் கொடுப்பவராகவும் இருந்திருக்கிறார்.
ஆங்கிலத்திலும் நல்ல புலமை. குஜராத்தி, ஹிந்தி, உர்துவிலும் நல்ல திறம். 2012ல் மோதி அவர்களால் கவரப்பட்டு என பாஜகவில் இணைந்த இவர் – பல தொலைக்காட்சி உரையாடல்களில் பாஜகவின் அதிகாரபூர்வ பிரதிநிதியாகக் கலந்து கொண்டிருக்கிறார். அண்மையில் கூட, ஒரு உரையாடலில் ராஜ்தீப் ஸர்தேசாய் போன்ற பரப்புரை அரைகுறைகளை, தன் வாக்குச் சாதுர்யத்தால் வாயடைக்கச் செய்திருக்கிறார். (எனக்கும் தொலைக்காட்சிக்கும் ரொம்ப தூரம் என்பதால் நண்பர் ஆரிஃப் ஸையத் ஹூஸ்ஸைய்ன் அவர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்ட மேற்கண்ட விஷயங்களை, நானும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.)
-0-0-0-0-0-0-0-0-
இவருடைய பேச்சுகளின் பல வீடியோக்கள் யூட்யூப்-தளத்தில் தரவேற்றப் பட்டுள்ளன. மது பூர்ணிமா கிஷ்வர் அவர்களின் அயரா உழைப்பின் காரணமாகத் தான் இந்த விஷயம் நடைபெற்றிருக்கிறது. அவருக்கு நன்றி.
கீழ்கண்ட வீடியோவின் வலது பக்க சட்டகத்தில் (அதாவது இதனை நீங்கள் யூட்யூப் தளத்திலே சென்று பார்த்தால்) – மது கிஷ்வர் அவர்களின் உபயத்தில், ஆஸிஃபா கான் பேச்சுகள் பல கிடைக்கின்றன. பொறுமையாக அல்ல, சந்தோஷப் பட்டுக்கொண்டே பார்த்தால்கூட பல திறப்புகள் கிடைக்கலாம்.
உங்களில் பலருக்கு ஹிந்தி தெரியாது என்பது உங்களுக்கு நஷ்டம்தான்! :-(
ஆனாலும் இவற்றை அவசியம் பார்க்கலாம். :-) பேச்சுகளின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளலாம். கடைந்தேறலாம்.
மோதியைப் பற்றிய அற்ப எதிர்மறைப் ப்ரொபகன்டாக்களை, பரப்புரைகளை இனம் கண்டுகொள்ளக் கற்றுக் கொண்டு நம் தேசத்துக்கு எது நன்மை பயக்கும் எனச் சிந்திக்கலாம்.
மதுகிஷ்வர், ஆஸிஃபா கான் அவர்களை எடுத்த ஆங்கில பேட்டியின் வடிவம் ஒன்று இங்கே இருக்கிறது; இதில் ஆஸிஃபா அவர்கள், ஏன் அதிக அளவில் முஸ்லீம்கள் மோதி-யின் மீது நம்பிக்கை வைத்து அவருடைய ஆதரவாளர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்குகிறார்.
-0-0-0-0-0-0-0-0-0-
நரேந்த்ர மோதி! பதிவுகள்
April 19, 2014 at 21:07
Click to access A_Comparison_of_Developmental_Outcomes_in_Gujarat_and_Tamil_Nadu.pdf
——>>> அய்யா ‘டமில்’ – நீங்கள் வேறு டமிலா அல்லது அதே உளறிக் கொட்டும் டுமீலா??
இந்த ஜேஎன்யு ஆட்கள், எம்எஸ்எஸ் பாண்டியன் போன்றவர்களையெல்லாம், சொகுசு நாற்காலியில் உட்கார்ந்து ஆராய்ச்சி பலூன்களை இந்த அரசியல்பொருளாதாரவாராந்தரியில் விடுபவர்களையெல்லாம் நீங்கள் மதிக்கிறீர்கள்! நல்லது. நீர் தன் படுமட்டத்தை அடையும்.
ஆனால், இந்த வாராந்தரியைப் படிப்பதை நிறுத்தி 23 வருடங்களாகிவிட்டன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.
கவலை வேண்டேல் – நீங்களும் வளர்ந்துவிடுவீர்கள், சரியா??
__ரா.
April 19, 2014 at 21:32
I think I hate you than anybody, because you always hate Tamils and their culture life style. Second thing you think knowing English is first talent for a person.
I am not against Brahmins and don’t like Dravidian parties, but after I started reading your articles I am started admiring Dravidian parties.
can you reply for this article. http://www.epw.in/system/files/pdf/2014_49/15/A_Comparison_of_Developmental_Outcomes_in_Gujarat_and_Tamil_Nadu.pdf
Dravidian parties may be politically corrupted but not a butcher like Modi. Two things are disadvantage for Tamils, admiring casteism and admiring movies.
April 19, 2014 at 21:37
Dear ‘tamil,’
Thanks for venting your feelings. You are of course, free to draw your own conclusions. One worrisome thought though – why don’t you to comment in our dear Tamil?
But, I do not hate you. I only pity you.
And, I do not want to waste my time responding to noise, sorry.
__r.
April 20, 2014 at 11:34
அன்பின் டமில்
*அரைகுறை* ……….. வெறுப்புமுதல்வாத ……….. டமில் என்ற அன்பரின் ஹாஸ்யபூர்வமான கருத்துக்களை ஸ்ரீ ராம் ban செய்ய வேண்டாமே என்று விக்ஞாபனம் செய்தவன் சிறியேன்.
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். ஸ்ரீ ராமசாமி அவர்கள் தமிழையும் தமிழகத்தையும் உங்களையும் என்னையும் மற்ற தமிழர்கள் எவரையும் போல மிகவும் நேசிப்பவர். ஸ்ரீ ராமசாமி எதிர்ப்பது என்பது…………. *தமிழ்* என்ற பெயரில் நாடகமாடும் தொழில்முறை விசிலடிச்சான் குஞ்சப்பனார்களின் செயல்பாடுகளை. டாஸ்மாக்காலும் ஜாதிவெறியாலும் சீரழிந்து வரும் தமிழர்களின் வாழ்க்கை முறைகளை…… சாராயத்திலும் திரைப்படத்திலும் த்ராவிட மாயையிலும் அமிழ்ந்து போய்க்கொண்டிருக்கும் இன்றைய தமிழ்ச்சஹோதரர்களின் வாழ்க்கைமுறைமைகளை………….
ஸ்ரீ ராமசாமி அவர்களது எழுத்துக்களிலிருந்து அவர் எங்கே தமிழை……….தமிழர்களது கலாசாரத்தை……….தமிழர்களது வாழ்க்கை முறைகளை……… எதிர்மறையாக விமர்சித்துள்ளார் என்று மிகக் குறிப்பாக நீங்கள் பதிவு செய்து ………… காரண காரியங்களை தெளிவாக ……….. உங்களது ஆங்க்லத்திலோ தமிங்கிலத்திலோ டங்க்ளீஷிலோ பகிர்வது நேர்மையான செயல். அது உங்களால் முடியாது. நிற்க.
புள்ளியியல் விபரங்களை literal interpretation என்ற படிக்கு வெள்ளந்தித் தனமாக கடாசுவது வெறுப்புமுதல்வாத டம்பாச்சாரி பப்பரப்பா இணையக்குளுவான்கள் மற்றும் டொண்டணக்கா ஊடகவாதிகள். நேர்மையாளர்கள்….. புள்ளியியல் விபரங்களை …..ஆழ்ந்து முறையாக விசாரிக்க விழைவது……… சார்புடைய பலப்பல புள்ளிவிபரங்களையும் முழுமையாக அலசி ஆராய்ந்து ………..அவை தெரிவிக்கும் தகவல் என்ன…….. என judicial interpretation செய்ய விழைவது.
உளறலைத் தவிர வெறுப்பைத் தவிர வேறு எதுவும் பகிர முயற்சியாவது செய்ய முயலலாமே.
Else Ram may take action deemed fit. Exchange of ideas shall be meaningful ……….. enhancing knowledge of self and others………..atleast jovial and relaxing………
April 19, 2014 at 22:50
Hi Ram,
I have absolutely no problem with BJP except one issue.
Do you think we still need Ram mandir ?
So much of blood lost due to this and do you think it is essential ?
I am not denying that in Gujrat development happened and Modi is a good administrator …but the fact that BJP still mentioned that Ram mandir as their election manifesto is disturbing ?
Do you think Modi cannot object to this ?
April 20, 2014 at 06:20
தமிழில் எழுதகூட வழி தெரியாதவர்கள் தமிழர்கள்
April 20, 2014 at 10:35
<<தமிழில் எழுதகூட வழி தெரியாதவர்கள் தமிழர்கள்
:) Huh…dravidian way of reply
April 20, 2014 at 11:00
அன்புள்ள ‘ராஜ்’ – அவர் எழுதுவதில் தவறொன்றுமில்லை. ஆனால், அவர் உங்களைக் குறித்து எழுதவில்லை என நினைக்கிறேன். காலவரிசைப் படி ‘டமில்’ அவர்கள் எழுதியதற்கு அளிக்கப்பட்ட பதில் பின்னூட்டம்தான் அது.
என் தமிழையும், அரசியல் பார்வையையும் திட்டி வரும் கடிதங்களில் சுமார் 80% ’ஒரு மாதிரியான’ ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. இவைகள் என் தமிழையும் பார்வையையும் ஆங்கிலத்தில் திருத்த முயல்கின்றன! :-) சமயத்தில் அலுப்பில், இவர்களின் இரட்டைவேடத்தைப் பொறுக்கமுடியாமல் நானும் இப்படியே எதிர்வினையாற்றியிருக்கிறேன். இந்த ‘நாலடியார் நல்லவர்’ என்பவரை எனக்குத் தெரியாது – ஆனால் எனக்குத் தோன்றுகிறது – அவருக்கும் அலுப்பாகத்தான் இருக்குமென்று. சரியா?
ஆங்கிலத்தில் எதிர்வினையாற்றுவதில் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால், தமிழில் எழுதவும் முயற்சிக்கலாமே என்பது என் கோரிக்கை.
உங்களுடைய (சரியான) சந்தேகக் கேள்விக்கு, ஒரு நீண்ட பதிவாக பதில் வருகிறது! ஜாக்கிரதை! 8-)
April 20, 2014 at 11:58
அன்பின் ராம்……….
டமில் அக்கப்போரில் முக்ய விஷயத்தையே விட்டு விட்டேன்.
zulmi…… filmi ———–Shazia ilmi ——–ஐப் பற்றி நொந்திருந்த போது அந்த அம்மணியின் பாய்ஜான் ஜெனாப் அய்ஜஸ் இல்மி பற்றி விரிவாக எழுதி தெம்பளித்துள்ளீர்கள்.
மோ(ஹ்)தர்மா அஸீஃபா கான் அவர்கள் அசத்துகிறார்கள்.
உத்தரபாரதத்தில் இருக்கும் எனக்கு அடல் ஜீ அவர்களது உபயத்தால் பாஜக மற்றும் சங்க பரிவாரத்தைச் சார்ந்தவர்களது பேச்சுத் திறமை பற்றி நன்றாகப் பரிச்சயம் உண்டு.
மோதர்மா அஸீஃபா அவர்கள் சுத்த ஹிந்தியுடன் நளினமுடனான உர்தூ கலந்து பேசும் காணொலி அசத்தல்.
ஜெனாப் ஷா நவாஸ் ஹுஸைன் சாஹேப் அவர்களது பேச்சுக்கள் முற்று முழுதாக அடல் ஜீ அவர்களின் ஸ்டைலில் விரைந்தோடும் கங்கையைப் போல கம்பீரமாகக் கேழ்ப்பவர்களை கட்டிப்போட வல்லது.
ஸ்ரீ நரேந்த்ரபாய் மோடி அவர்களை நான் எந்த விஷயத்திற்காகவாவது மிக அதிகமாகப் போற்றுவேன் என்றால் …………..
தொழில்முறை டொண்டணக்கா மதசார்பின்மை வ்யாதிகள்………… வஹாபி உக்ரவாத இஸ்லாம்……… போன்ற சமாசாரங்களிலிருந்து …………..நமது முஸல்மாணிய சஹோதரர்களைப் பிரித்து ஹிந்துக்களுடன் கரம் கோர்க்க வைத்து………. முஸல்மாணிய சஹோதரர்களின் பாரம்பர்யமான tehzeeb (வினம்ரதை)ஐ அவர்களில் பெரும்பாலோருக்கு மீட்டளித்தமை.
April 20, 2014 at 12:09
அய்யா க்ருஷ்ணகுமார், தங்களுடைய கருத்துகளுக்கும் ‘ஓடி வந்து காப்பாற்றும்’ தன்மைக்கும் நன்றிகள் பல!
உங்களுடைய திருத்தல்களுக்கும் (ஆஸிஃபா = அஸிஃபா, நயீ தலீம் = நயீ தாலிம் போன்றவைகள்) நன்றி. என்னுடன் பேசுபவர்கள் நான் எழுதுகிறபடிதான் உச்சரிக்கிறார்கள். ஆனால், உங்கள் தெளிவித்தல் முறையில் தான் எழுதுகிறார்கள். நான் முழிக்கிறேன்.
ஆணாள், தவறுகலைத் தொடற்ந்து திறுத்தவும்.
னண்ரி.
April 21, 2014 at 16:39
பொதுவாகவே பல வார்த்தைகளை, பல காலம் முன்பு தமிழாக்கப்பட்டு ஸ்பெல்லிங் தரப்படுத்தப்பட்ட வார்த்தைகளைக் கூட நீங்கள் வேறு மாதிரி எழுதி கஷ்டப்படு(த்துகி)றீர்கள்! உதாரணமாக, சுதந்திரப் போராட்ட காலத்திலேயே Congress காங்கிரஸ் (காங்ரெஸ் அல்ல!) எனத் தமிழ்ப்படுத்தப்பட்டுவிட்டது. இதே போல Africa = ஆப்பிரிக்கா (ஆஃப்ரிகா அல்ல) Ahimsa = அகிம்சை (அஹிம்சை அல்ல) Rahul = ராகுல் (ராஹுல் அல்ல) tsunami = சுனாமி (ஸுனாமி அல்ல). சரியா?
April 21, 2014 at 16:50
ஸர்தான்! னன்ரி ஸரவணன், யென்ன ஸெய்வது, ஸொல்லுங்கள். :-)
தமிழில் உச்சரிப்புகளொடு சரியாகப் பொருந்தி வரக் கூடிய வரிவடிவ / எழுத்துருக்களில்லாமையும் அதன் மொனோஸில்லபரியும் என்னை இப்படி எழுத வைக்கின்றன. உபயோகத்தில் இருக்கும் விஷயங்களையும் ஏன் தேவை மெனெக்கெட்டு ஒதுக்கவேண்டும் என்ற எண்ணமும்…
என் குழந்தைகளில் ஒன்றின் பெயர் ராஹுல் காந்தியாக இருக்கவேண்டும்; ஆனால், பள்ளிப் பதிவேடுகளில் ragul kandhi என இருக்கிறது. எனக்கு இது என்னவோ செய்கிறது. இன்னொரு குழந்தையின் பெயர் janagi. இன்னொன்றின் பெயர் kogila.
ஆனால் உண்மைதான். A rose by any other name is still a rose! :-)
April 21, 2014 at 17:14
Ragul Kandhi, Janagi, Kogila மாதிரிப் பெயர்களை, முடிந்தால் தயவுசெய்து பதிவேட்டில் சரி செய்யவும்! பத்தாம் வகுப்பு முடியும் முன் இதைச் செய்வது சுலபம் என்றே நினைக்கிறேன். (Bathma இல்லையா?). (முதலில் ‘காந்தி’யே தேவையில்லை, தலைவர் பெயராக ராகுல் + குழந்தையின் குடும்பப்பெயர் பெயர் அல்லது தந்தை பெயர் போதுமே என்பதைக்கூட விட்டுவிடலாம்)
தமிழில் எழுதுவது பற்றிக் கேட்டால் ஆங்கிலத்தில் தப்பாக ஸ்பெல்லிங் போடுகிறார்கள் என்கிறீர்கள். இதற்கு அதுதான் காரணம் என்று நான் நினைக்கவில்லை. தமிழ் ‘க’ தேவைக்கேற்ப ka, ha, ga, gha, kha என எந்த உச்சரிப்பையும் ஏற்கும் திறன் கொண்டது என்று நமக்குத் தெரியும். கடுகு-வில் வரும் க வும் சிங்கம்- என்பதில் வரும் க-வும் உதாரணங்கள். இந்த வழக்கத்தைப் பின்பற்றியே ராகுல் என எழுதுகிறோம். அதை Ragul என்று படித்தால் அது படித்தவரின் தவறு.
பள்ளியில் பெயரை எழுதிய எழுத்தருக்குக் (ஆசிரியரேவா?) கொஞ்சமாவது படிப்பு வாசனை இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது.
April 21, 2014 at 17:46
அய்யா, என்னிடமும் பல கோட்பாடுகள் இருந்தன. சில இன்னமும் இருக்கின்றன. சரியா?
இரண்டுவருடம் முன்னர். இந்த ragul kandhi விஷயம் பதிவேற்றும்போது, என் தலைமையாசிரியருடன் நானும் இருந்தேன்.
எனக்கு ஜாதி பெயர் இருப்பதில் பிரச்சினையில்லை என்றாலும் சரி செய்வதற்கு முயன்றேன். காந்தி என்பது இங்கில்லாத ஜாதிப் பெயர் அதுவும் நீங்கள் நாயக்கர்கள் அல்லவா? ராகுல் நாயக்கர் என்றாவது வைக்கலாமல்லவா என்றெல்லாம் குழந்தையின் தந்தையுடன் மன்றாடினேன்.
ஆனால் அவர் ஒரு குடிகாரத் தகப்பன் (இவர் பாமக உறுப்பினர்!) கூட! சேலத்துப் பெண்மணி ஒருவர் (லெட்டராலஜிஸ்ட்?) இப்படிப் பெயர் வைத்தால் சரிஎன்றாராம்!
அய்யா சரவணன், உங்கள் நல்லெண்ண ஆலோசனைகளுக்கு நன்றி. நீங்கள் இம்மாதிரி ஆசாமிகளுடன் பேசிப் பார்த்தால்தான் தெரியும். கடைசியில் உங் கள் பெயரையே மாற்றி விடுவார் கள்! ஊக்க போனஸாக உங்கள் மேல் பச்சை நிற வாந்தியும் எடுத்து விடுவார் கள். கள். கள்.
எங்களுக்கு எங்கள் குழந்தைக்குப் பெயர் வைக்கத் தெரியும், வாயை மூடுங்கள் என்று என் அம்மாவின் தொழில் பற்றிய ஒரு சிறு விளக்கம் அளித்தார். நன்றி.
ஆனாலும் நாமினல் ரோல் என்பது இப்போதைக்கு பத்தாவது முதல்தான் சரியாக்கப் படுகிறது என்று இப்போதைக்கு விட்டுவிட்டேன்.
சென்னை தரமணியில் அரசுத் துவக்கப் பள்ளியில் (32 ஆண்டுகளுக்கு முன்!) ஒரு குழந்தையின் பெயர் குமார்/கிஷோர் ராஜ்வன்ஷ்! அய்யகோ! (இது அப்போது தொலைக்காட்சியில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்த ஒரு ஸீரியலில் இருந்த ஒரு பாத்திரம்!)
.. தொடரத் தொடர வேதனை மிகும். :-)
April 20, 2014 at 16:11
ம்…………… அன்பின் ராம் (மிகக் கவனமுடன்) எழுதும் ஸ்பஷ்டமான உச்சரிப்புக்களை மட்டிலுமா இந்த தளத்தில் பார்க்க நேருகிறது.
அப்பப்போ குசுர் பீ, சொர்ரபுட்டின் — இப்படியெல்லாமும் மதசார்பற்ற உச்சரிப்புக்களையும் கூடவே படிக்க நேருகிறதே.
\\ உங்களுடைய திருத்தல்களுக்கும் (ஆஸிஃபா = அஸிஃபா )
ராம் சாஹேப், ஆஸிஃபா யா அஸிஃபா — எது சரி — எனக்குத் தெரியவில்லை. நான் எழுதியது தவறாக(வும்) இருக்கலாம். கூகுள் கழுத்தறுக்கிறது. கான் மட்டும் ஹிந்தியில் Asifa ஆங்க்லத்தில்.
தாலீம் என்று தான் கேட்டிருக்கிறேன். யதி விகி சஹீ ஹை தோ – ஆகே தேகியே
http://hi.wikipedia.org/wiki/%E0%A4%B5%E0%A4%B0%E0%A5%8D%E0%A4%A7%E0%A4%BE_%E0%A4%B6%E0%A4%BF%E0%A4%95%E0%A5%8D%E0%A4%B7%E0%A4%BE_%E0%A4%AF%E0%A5%8B%E0%A4%9C%E0%A4%A8%E0%A4%BE
महात्मा गांधी की भारत को जो देन है उसमें बुनियादी शिक्षा अत्यंत महत्वपूर्ण एवं बहुमूल्य है। इसे वर्धा योजना, नयी तालीम, ‘बुनियादी तालीम’ तथा ‘बेसिक शिक्षा’ के नामों से भी जाना जाता है।
April 20, 2014 at 18:03
பஹூத் தன்யவாத், க்ருஷ்ணகுமார் பாய்ஸாஹேப்! :-)
பஹுத் தின் கே பாத் மைனே ஹமாரே ஸுந்தர் ராஷ்ட்ரபாஷா மே தோடாஸா பாத்சீத் கர் ரஹா ஹும்…
யதா விகி ததா ஸ்பெல்லிங்? :-(
மொகாம்போ பஹூத் குஷ் ஹோகயா! ;-)
April 20, 2014 at 19:40
மாநில முன்னேற்றம் என்பது பல வகைப் பட்ட புள்ளி விவரங்களைக் கொண்டது. JNU பேராசிரியர் கையாண்டது ஒரு வகை புள்ளி விவரங்கள். நாம் நமது வாழ்க்கையில், தடையற்ற மின்சாரம், நல்ல சாலை போக்குவரத்துகள், தொழில் முன்னேற்றம், அனைவருக்கும் வேலை வாய்ப்பு இவைகள் முதலில் முக்கியம் என எண்ணுகிறோம். இதில் முதலில் என்பது அடிக் கொடிடவும். நமது பேராசிரியர் கொடுத்த சுட்டியில் உள்ளவையும் முக்கியம் தான், ஆனால் அது அடுத்த நிலை. முழு இந்தியா இப்போது வேண்டுவது, குஜராத் ஏற்ப்படுத்திய முன்னேற்றம். உடனே இது தேவை. நண்பர்கள் இது குறித்து உண்மை நிலையை உணர வேண்டும். வெறும் வெறுப்புணர்ச்சி நன்மை தராது.
April 20, 2014 at 19:48
கிழக்கு பதிப்பகம் விளியிட்ட திரு.சரவணன் அவர்களின் “குஜராத் வளர்ச்சி–இந்தியாவுக்கு ஒரு முன் மாதிரி ” எனும் நூலை படிக்க பரிந்துரைக்கிறேன். இது குறித்து திரு காவேரி மைந்தன் எழுதிய புள்ளி விவரங்களையும் படிக்க நண்பர் “தமில்” அவர்களை வேண்டுகிறேன்.
April 21, 2014 at 16:22
/// 2012ல் மோதி அவர்களால் கவரப்பட்டு என பாஜகவில் இணைந்த இவர் –///
அது சரி!
April 21, 2014 at 19:34
கூடுமான வரை ஸ்பஷ்டமான உச்சரிப்பினை பொதுவிலே வாசிப்பவர் துல்யமாக அறிய ஸ்,ஜ,ஹ,ஷ – போன்ற அதிகப்படி எழுத்துக்கள் உதவுகின்றன. அதாவது வாசிப்பவர் சரியான உச்சரிப்பைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பது இலக்காக இருந்தால். I find meticulous efforts of Sri Ram in presenting — as far as possible — words properly spelled in this way
(I always have trouble as to whether it should be spelled or spelt)
தமிழ்ப்பற்றுள்ளவர்கள் முறையான தமிழிலக்கணப்படி வடசொற்களை தமிழ்ப்படுத்துதல் என்பது எனக்கு முற்றிலும் உடன்பாடான விஷயம்.
ஆயினும் உள்ளபடி தமிழ்க்காதலுடன் தமிழ்ப்பற்றுடன் தமிழிலக்கணப்படி வடசொற்களை தமிழ் எழுத்துக்கள் வழி எழுதுபவர்களுக்கு (இரட்டை அலகீடுகள் இல்லாது ) என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
ஆனால் த்ராவிட விசிலடிச்சான் கும்பல்கள் ராஜாஜியை இராசாசி என்றும் தக்ஷிணாமூர்த்திகாருவின் புத்ரரத்னத்தை இசுடாலின் என்னாது ஸ்டாலின் என்று தொடர்ந்து எழுதி வருவதை யாரும் கேழ்விக்கு உட்படுத்தியுள்ளார்களா என்றால் —- இல்லே