[பில் வாட்டர்ஸன்] கால்வின் & ஹாப்ஸ்
December 31, 2012
எனக்கு மிகவும் பிடித்த காமிக் – கால்வின் அண்ட் ஹாப்ஸ் (Calvin and Hobbes). சமூக விமர்சனம் என்கிற போர்வையில் ஆனால், பல தளங்களில் சஞ்சரித்த, சஞ்சரிக்கும் மகத்தான இலக்கியம் – பில் வாட்டர்ஸன் (Bill Watterson) என்கிற கலைஞன் (டாக்டர் அல்ல) வாழ்க்கையைக் குழைத்து அழகாகச் செதுக்கி நமக்கு அளித்தது… (இதெல்லாம் நம் தமிழில் வெளிவர முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!)
டிஸெம்பர் 31, 1989-ல் வெளிவந்த ஞாயிற்றுக்கிழமை பெரிய கார்ட்டூன் இது. வசதிக்காக பிய்த்துப் பிய்த்துக் கொடுத்திருக்கிறேன். தமிழ்ப் படுத்தியும் இருக்கிறேன்.
Oh well, yet another year…
:-)
January 1, 2013 at 00:29
நாம நிறையப்பேர் எதிர்காலத்தை நிகழ்காலத்திலேயே வாழ்ந்துவிடுவதால் நமக்கு எதிர்காலம் இல்லாமலேயே போய்விடுகிறது.
இதை தமிழில் கிராமப்புற மொழியில் கூறுவதானால் “ அவனைப் பத்திப் பேசாமலே இருக்கிறது நல்லது. அவன் வித்து முதலை வித்து சாப்பிடரவன்ப்பா
January 1, 2013 at 10:59
‘நயம்பட உரை’ -க்கும் கேலிச் சித்திரம். தமிழில் தந்தமைக்கு நன்றி. உண்மைகளை உரத்துச் சொல்லுகிறது மறைக்காமல்.
January 8, 2013 at 19:05
அன்புள்ள ராமசாமி அவர்களுக்கு,
நான் கால்வின் & ஹாப்ஸ் – இன் ரசிகன், உங்கள் பதிவு தளத்தின் வாசகன். உங்கள் மின்னஞ்சல் அனுப்ப இயலுமா?
AR