ஆட்டுப் பொங்கல்: அண்ணாதுரை(அ7): “ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையா?” == ஈவேரா: “திருட்டுத் திராவிடனுக்கு மூளை தேவையா?”

January 16, 2023

அருஞ்சொற்பொருள்:

அண்ணாதுரை (அ7)  = ‘றிஞர்’ ண்ணாவின் றிவியலறிவு(ம்), க்மார்க் ரைகுறை லப்பறை ற்பமே – என்பதன் சுருக்கம்.

இம்மனிதர் யார் எனத் தெரியாதவர்களுக்கு- இவர், ஒருகாலத்தில் தமிழக முதலையமைச்சராக கன்னக்கோலோச்சியவர் சிஎன்ஏ எனப்பட்ட ‘அறிஞர் அண்ணாத்துரை.’ அதற்கு முன் வெட்கங்கெட்டுப் போய்க் கண்டமேனிக்கும் இவரும் இவருடைய ஆசிரியரான ஈவெரா ‘பெரியாரு’ம் ஒருவரை ஒருவர் படுமோசமாக, கேட்பவர் காது கூசும்படிக்கு வசை பாடிக்கொண்டது வரலாறு. இவர்தான், திராவிடத் திருடர்களின் சமூகஅநீதி அசமத்துவ அயோக்கிய ஊழலாட்சிக்கு அச்சாரமிட்டவர். வெறும் வெட்டி வெறியுணர்ச்சிகளைத் தூண்டிவிட்டாலே, அடுக்குமொழி பொறுக்கிநடையில் உளறிக்கொட்டினாலே, நிரந்தரப் பிரமையில் இருக்கும் தமிழனானவன் நிலைகுலைந்து நெறியற்ற திராவிடனாகிவிடுவான் என்பதைத் தெளிவாகக் கண்டு கொண்டவர்.

ஈவேரா: ஈது வேறு ராமசாமி.  அல்லது இவெரா: இவன் வெறும் ராமசாமி. அடியேன்.

சரி.

ஆனால், கவனிக்கவும். அண்ணாதுரை எனும் தனி மனிதரைப் பற்றிய விமர்சனம் வைக்க (அவர் தமிழகத்துக்கு நேர்ந்த தொடர் கோர அரசியல் விபத்துகளில் ஒன்று, கேடுகெட்ட அயோக்கியர்களுக்குக் காத்திரமாகத் தளமமைத்துக் கொடுத்தவர்,  போன்ற சோகங்களுக்கு அப்பாற்பட்டு), எனக்கு விருப்பமில்லை. (எப்படியும், என் நிரந்தரச் செல்லங்களில் ஒருவரான ஈவெரா ‘பெரியார்’ போன்றவர் அளவுக்குப் படுப்படுமோசமானமானவர் அல்லர் அவர்)

…மாறாக, இப்பதிவு, அறிஞர் எனப் பறை சாற்றப்பட்ட அவரின் அடிப்படை அறிவியல்/மிருகவியல் அறிவை பரிசீலிக்கிறது, அவ்வளவுதான். (இதற்கு முன்பும், அவர் ‘ஹிந்தி’ அல்லது மொழிகள் குறித்த அடிப்படை அறிவின்மையை அறிவிலித்தனமாகப் பறைசாற்றியதைக் குறித்த பதிவு: )

-0-0-0-0-0-0-

ஒருமாதிரி ‘ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை’ என்று எப்போதோ 1960களின் இறுதியில் ‘அறிஞர்’ அண்ணாதுரை ஒருமாதிரி அடுக்குமொழித்தனமாகப் பேசியிருக்கிறார். (எங்கு எதற்கு அப்படிச் சொன்னார் என்பது நினைவிலில்லை – என் கைவசம் இருக்கும் குறிப்புகளிலும் இல்லை; இருந்தாலும் அவர் அப்படி உளறிக் கொட்டினார்தாம்.)

பிரச்சினை என்னவென்றால் – மெத்தப் படித்த  ‘அறிஞர்’ அவர்களுக்கு அரசியல் சட்டம் பற்றிய அடிப்படை அறிவு இருந்திருக்கவில்லை.

பீமராவ் ராம்ஜி ஆம்பேட்கர் அவர்கள் இதே கவர்னர் (‘ஆளுநர்’) பதவியின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் பற்றி முழநீளம் பேசியது மட்டுமல்லாமல், அவர் தலைமையில் இருந்த இந்திய அரசியல் சட்ட வரைவுக் கமிட்டி, திட்டவட்டமாக ஆளுநரின் பொறுப்புகள்+சக்தி குறித்து எழுதியிருப்பதையும், பாவம், இந்த ‘அறிஞர்’ அறியார்… ஆனால் அவர் திராவிடர், ஆகவே அறிதல், புரிதல் உள்ளிட்ட எல்லா உதவாக்கரை விஷயங்களையும் லூஸ்ல வுட்டிருப்பார் என நமக்கு நாமே சால்ஜாப்பு சொல்லிக்கொள்ளலாம்.

எப்படியும் – அவர் அரசியல் சாஸனத்தைக் கண்டாரா, ஆடுகளை அவதானிக்கும் பாக்கியம் பெற்றாரா – பாவம், சொல்லுங்கள்?

இன்னொரு பிரச்சினை என்னவென்றால் – தற்காலிக முதலையமைச்சர் இசுடாலிர் உட்பட, திராவிடத் தோன்றல்கள், அக்னிக்குஞ்சாமணிகள் போன்றோர் தங்கள் திருவாயை மூடிக்கொண்டு திராவிடக் கொள்ளை அடிப்பதில் மட்டும் மும்முரம் காட்டாமல், சுயசிந்தனை போன்ற அதிராவிடக் கொடும்பாவங்களிலும் ஈடுபடாமல் – முன்னாள் தலைவர்கள் உளறிக் கொட்டியதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு முழ நீளத்துக்கு அறிக்கைப் புழுக்கைகளை வேறு ரிலீஸ் செய்துவிடுகிறார்கள்…

அதாவது இசுடாலிர் கீழ்கண்டதுபோல் ட்வீட் செய்வதற்கு அப்பாற்பட்டு, ‘அறிஞர்’ வேதவாக்கு பற்றி அப்படி உருகுகிறார்…

…எப்போதெல்லாம் திராவிட தண்டங்களுக்குப் பிணக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் அவர்கள் கவர்னரை வறுத்தெடுப்பார்கள், வீரவஜனம் பேத்துவார்கள் – ஆனால், இந்த எதிர்ப்போக்கினால் பெரும் ஏடாகூடப் பிரச்சினை ஆட்சிக்கே வந்துவிட்டால், நிபந்தனையற்றுக் காலடியில் வீழ்ந்து சரணாகதி அடைந்து பம்முவார்கள்… எவ்வளவோ திராவிடர்கள் (இசுடாலிர் உட்பட, கவர்னர் அலுவலகத்துக்கு மரியாதையுடன் காவடி எடுத்திருப்பதை நாம் மறந்துவிட முடியுமா?)

இச்சமயம், ஒரு பழைய விஷயம் நினைவுக்கு வருகிறது; கோடர்தாஸ் காளிதாஸ் ‘கேகே’ ஷா அவர்கள் தமிழக கவர்னராக வந்தபோது  (1971 என நினைவு) கலைங்கர் கருணாநிதி, ‘சாவே வருக’ என விடலைத்தனமாக அவரைக் கிண்டல் செய்ததை நாம் மறந்து விடுவோமா என்ன? இது நடந்தது, வரைமுறையற்ற ஊழல்களைக் கருணா நிதி அரங்கேற்றிக் கொண்டிருந்த பின்னணியில் என்பதை நினைவில் கொள்ளவும்… ஆகவே, ஏதோ இசுடாலிர்தான் கவர்னரைக் குறித்து ஏகவசனத்தில் விடலைத்தனமாகப் பேசுகிறார் என்பது ஆச்சரியம் தரக்கூடாது.

அவமரியாதை செய்வது, எச்சில் தெறிக்க வீரவஜனம் பேசுவது – ஆனால் வசமாக மாட்டிக்கொண்டால் வெட்கங்கெட்டுப் பம்முவது, இரட்டை வேடம் மட்டுமல்ல, முட்டை வேடமும் போடுவது போன்றவையெல்லாம் கூறுகெட்ட திராவிடர்களுக்குச் சகஜம்தான்.

…மேலும் எப்போதெல்லாம் பெரும் பிரச்சினைகள், கிடுக்கிப் பிடிகள் ஆட்சிக்கும் (=திராவிடக் கொள்ளை, கொலை, வன்புணர்ச்சி++) திராவிடக் கட்சிக்கும் வருமோ – அப்போதெல்லாம் ஏதாவது சிறுபூசலை ஊதியூதிப் பெருக்கி, மக்கள் கவனத்தை ஊடக பலத்துடன் மடைமாற்றுவதும் திராவிட அயோக்கியர்களுக்குக் கைவந்த கலை.

-0-0-0-0-0-

சரி. ஆடு-தாடி ப்ளடி விஷயத்துக்கு வருகிறேன்.

ஆடுகளுக்கு, முக்கியமாக ஆண் ஆடுகளுக்கு தாடி என்பது மிகவும் முக்கியமான விஷயம். அவற்றில் பலவற்றுக்கு, அது அத்தியாவசியம். (சிலபல ஜெனட்டிக் காரணங்களால், சில சமயம் பெண் ஆடுகளுக்கும் இது இருக்கிறது)

ஏனெனில் அது இனக்கவர்ச்சியில், ஆட்டுக்குப் புணரும் வாய்ப்பை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது. அதனை அழகாகவும், நேர்த்தியாகவும் பராமரிக்கும் ஆண் ஆடு, பெண் இணைகளை ஈர்ப்பதில் வெற்றி பெறுகிறது. பலப்பல சமயங்களில் தன் சிறுநீரை (ஏனெனில்அதில் கலவித்தூண்டல் தொடர்பான ஹார்மோன்/ஃபெரொமோன்கள் சுரப்புகள் கலந்து இருக்கின்றன) தன் தாடி மேல் செலுத்தி அதன் மணத்தால் தன்னைப் பராக்கிரமம் வாய்ந்ததாகக் காட்டிக்கொள்ளவும் செய்கின்றன; ஆண் ஆட்டுக்குப் பக்கத்தில் சென்றால், அதிலிருந்து ஒரு கவிச்சை வருவதை முகரமுடியும் – அதற்குக் காரணம், இம்மாதிரி தாடியை நனைத்த ஹார்மோன்களே.

(சில சமயங்களில் தங்கள் தாடிகளைப் பாறைகளிலும் மரப்பட்டைகளிலும் தேய்த்து வாரிச் செப்பனிட்டுக்கொள்ளும் ஆடுகளும் ஆராய்ச்சியாளர்களால் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன)

…இந்த அழகில், நம் ‘அறிஞர்’ பெருமகனார் ‘ஆட்டுக்குத் தாடி தேவையா’ எனப் பகிரங்கமாகத் தன் அறியாமையைப் பறை சாற்றுகிறார்…

அதே அழகில், இன்றுவரை – ஒரு திராவிடனோ ஊடகப் பேடியோ ‘டேய், இது உண்மையா எனப் பரிசீலித்துப் பார்க்கலாம்’ என கடந்த 50+ ஆண்டுகளில் ஒரு மசுத்துக்கும் யோசித்துப் பார்க்கவேயில்லை…

ஒரு விவசாயம் சார் பல்கலைக்கழகமோ, பேராசிரியரோ இதைப் பற்றிக் கவலையே படவில்லை… இத்தனைக்கும் அவர்களில் பலர் திராவிட தண்டங்கள்வேறு!

ஏனெனில், நம்முடைய மாநிலம்: “கல்வியில் சிறந்த தமிழகம்…” சரிதானே?

எது எப்படியோ…

அடிப்படைகளைக் கூட அறியா ஞானமலட்டுக் கும்பலை (அண்ணாதுரையிலிருந்து ஆரம்பித்து… இசுடாலிர்-உதயநிதிகள் வரை) ஆட்சி பீடத்தில் அமர்த்தியிருக்கும் நம்மைத்தான் ஜோட்டால் அடித்துக் கொள்ளவேண்டும்…

-0-0-0-0-0-

இக்காட்டுரையின் நீதிகள் யாவை?

ஆடுகளுக்குக் கண்டிப்பாக, தாடி தேவை. (அவற்றில் திருமதியாடெனத் தம்மை வரித்துக்கொள்ளும் திருவாடுகள் போன்ற அடையாளச் சிக்கல் இருக்கும் ஆடுகளுக்கு வேண்டுமானால், விதிவிலக்குகள் இருக்கலாமோ என்ன எழவோ!)

திராவிடர்கள் பேயாட்சி நடத்தும் மாநிலங்களுக்கு மிகக் கண்டிப்பாக, கறார் கவர்னர்களின் மட்டுறுத்தல் தேவை. (பொதுவாகவே, எந்த ஆட்சியில் என்ன திராவிடமோ என்ற நிலை இருப்பதால், பாரதமெங்கும் கவர்னர்கள் அவசியமே!)

திராவிடர்களுக்கு மூளை இருக்கவேண்டிய அவசியமே துளிக்கூட இல்லை! (வெறும் ஓயாமல் உளறும் வாயும், திருடும் கையும் இருந்தால் போதும், அவ்ளோதான்)

பின்குறிப்பு: ஐய்யயோ! ‘அறிஞர்’  மேதகு அண்ணாவின் புகழ்பாடி ஆட்டுப் பொங்கல் வைக்கும் மும்முரத்தில், மறந்தேபோய் விட்டேன். :-)

அனைவருக்கும் தாமத மகரசங்கராந்தி/பொங்கல் வாழ்த்துகள்.

3 Responses to “ஆட்டுப் பொங்கல்: அண்ணாதுரை(அ7): “ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையா?” == ஈவேரா: “திருட்டுத் திராவிடனுக்கு மூளை தேவையா?””

  1. Sesha a.seshagiri Says:

    தங்களின் பதிவின் மூலம் அந்த திராவிஷங்களுக்கு ஆட்டுத்தாடியின் நாற்றத்தின் மகிமை தெரியவந்தால் அதற்காகவே மட்டும் ஆட்டுத்தாடியை மட்டுமாவது இனி மிகவும் போற்றுவார்கள் என்று கூறிக் கொண்டு …
    🤣🤣

  2. Em Says:

    Thanks for the info about goats and their beards. Nature doesn’t make mistakes. Or may be sometimes it does… How else would these dravidiots come into existence and rule us for so long ?
    Also, I strongly condemn the inclusion of pictures of the formerly RaGa person and the razakar in a post about goats. (Insert puking emoji here).

  3. Vijay Vanbakkam Says:

    தாடியை விடுங்கள். விக் இல்லைன்னா இசுடாலிர் யாரென்ன புரிந்துவிடும். ஆட்டுக்கு தாடியும் இசுட்டாலிருக்கு விக்கும் எதற்கு?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s