எள் என்றால் sesame, அது mustard அல்ல…
October 25, 2022
- எள் என்றால் sesame, அது mustard அல்ல.
- எள் என்றால் sesame, அது mustard அல்ல.
- எள் என்றால் sesame, அது mustard அல்ல.
- …
- …
போதுமா?
எப்படா இவன் ப்ளடி பிழை/தவறு செய்வான், எப்படா குத்தம் சொல்லிக் குத்திக் காட்டலாம் எனத் தவியோதவி என்று தவித்துக் காத்துக்கொண்டிருப்பார்கள் போல, கண்ணில் கடலெண்ணெய் விட்டுக்கொண்டு…
வோக்கே, ரெண்டு பேர் இங்கு பகிரங்கமாக மானபங்கப் படுத்தினார்கள், சரி – ஆனால் ‘தனிப்பட்ட முறையில்’ இன்னும் சிலர், இப்படித் தொல்லை – வேலைவெட்டியற்ற, போக்கற்ற பாவிகள்.
இதில் உள் இடஒதுக்கீடு வேறு – ஒரு அம்மணி, “கொஞ்சம் பாத்து எழுதக் கூடாதா? இப்படி ஸில்லி மிஸ்டேக் செஞ்சா நம்பகத் தன்மையே போய்டுமே?”
எள் என்றால் sesame, mustard அல்ல என்பதை நான் அறியாதவனா? கோதுமை என்றால் rice என்பதை அறியாதவனா?? பெர்ஸ்ஸா கரெட் பண்ண வந்த்ட்டானுவோ. ப்ளடி பேஸ்கெட்ஸ். மேலும், பேஸ்கெட்ரினாஸ்…
எஸ்ராமகிருஷ்ண தண்டத்தைக் கிண்டல் செய்து கொஞ்சகாலமாகி விட்டது, பயிற்சி விட்டுப்போனதால் வந்த பிழை என ப்ளடி இதனை லூஸ்ல வுடாமல்…
…எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு பெருங்கதை இருக்கிறது, என் செல்ல ‘பிறத்தியாரைக் குற்றம்சொல்லியே நாட்களைக்கடத்தும்’ நண்பர்களே!
-0-0-0-0-
நேற்று காலை ஒரு சிங்கப்பூர் வாசி தொடர்புகொண்டு தீபாவளிவாழ்த்து(!) தெரிவித்தார். “வாட்ஸ் அப் அனுப்பினேனே, பார்க்கவில்லையா?”
இல்லை ஐயன்மீர், நான் அந்த எழவை அதிக பட்சம், ஒருமாதிரி ஒரு நாளுக்கு ஒருமுறை போலத்தான் பார்ப்பேன்.
அடப்பாவி…
இந்தக் குசலம் விசாரிப்புக்குப் பிறகு, “ஐயோ, ஜெயமோகன் இத்தை இப்டீ எழ்திட்டாரே, அது சரியா” க்களுக்குப் பிறகு, வழக்கம் போலவே (இந்த அற்பக் குசும்ப என்ஆர்ஐ ஜீவன்களே ஒருமாதிரி சோகம், அதிலும் இந்த ப்ளடி சிங்கப்பூர் வாசிகள் என்றாலே அது வேற ரெவெல்…) சிங்கப்பூரின் தூய்மை, வாழ்க்கை வசதிகள், லஞ்சம் இல்லாமை(!), சிறுகுற்றத்துக்கும் பெரும்தண்டனை, நீதி பரிபாலனம், நேரம் தவறாமை, தகுதிக்கேற்ற சம்பளம், இடஒதுக்கீடு மாய்மாலம் இல்லாமை, அனைவரும் சரிசமம் +++++++++++++++++++ என அவர் சிங்கப்பூர் பெருமையைப் பறை சாற்றப் போய்… …
அவர் சொன்ன ஒவ்வொன்றுக்கும் ‘டேய்! நீங்க குப்பெ கொட்டி இன்ஸினரேட்டர் வெச்சி எரிக்கற்த்துக்கே ஒரு தனி தீவு வெச்சிர்க்கீங்க்டே’ என ஆரம்பித்து, பதிலுக்கு அவரையும் சிங்கப்பூரையும் கரித்துக் கொட்டி…. கொட்டி… ‘டேய்! இதே நேர்மைப் பிழம்பு நீயி, இங்க வந்தானாக்க லஞ்சம் கொடுத்துதானடா திராவிடனுங்ககிட்ட காரியத்த முட்ச்சிக்கிற – கோயில்கள்ல ஸ்பெஷல் துட்டு குட்த்து ஸ்பெஷல் ஸ்பீட் வரிசேல போறியா இல்லியா…” என்றெல்லாம் சென்று,
கடோசியில் என் ப்ரஹ்மாஸ்த்ரத்தையும் பிரயோகித்தேன்…
“டேய்! வொங்க சிங்கப்பூரு என்னடா, தம்மாத்தூண்டு கடுகு மாரீ…. அங்க என்ன வோணா சர்வாதிகாரமா செஞ்சிக்கலாண்டா, இந்தியா எவ்ளோ பெரிய்ய நாடூ? எவ்ளோ காம்ப்ளெக்ஸிட்டீஸ் இங்க கீது? வொங்க சிங்கப்பூரு கடுகுதேசம்டா! அத்தொட்டுதாண்டே நீங்க வாணலில வற்த்த கடுகு போல பிற்த்தியார தாளிக்கறீங்க… ஏதாவது ஒர் சின்ன, அதாவது உங்க அப்பார்ட்மெண்ட் அமைப்புன்றதையாவது முன்னேபின்னே மேனேஜ் செஞ்சிர்க்கியாடா நீ ராஸ்கோல்? பெர்ஸ்ஸா சிங்கப்பூர் கடுக வெச்சி தாளிச்சி புடுங்கினத சொல்ல வந்த்ட்டான் சோமாறி…”
(அடுத்த சில வாரங்களுக்கு அவர் தொடர்பு கொள்ளமாட்டார் என நினைக்கிறேன்)
கடுகுதேசம் ஒழிக. கடுகன்களைக் கழுவேற்றுவோம்.
என நேற்றுகாலை கடுகடுவென கடிந்துகொண்டே இனிதான காலை கடுப்பாக விடிந்தது….
யாதும் சிங்கப்பூரே, யாவரும் கடுகரே. ப்ளடி.
இந்தக் கடுகு தாளிப்பினால், பின்னணி இசையாக, ‘கடுகா, கடுகா…’ ஓடிக்கொண்டிருந்தது, என் பிழைக்கு ஒரு காரணம் என்பதற்கு அப்பாற்பட்டு – என் அசிரத்தையும் ஒரு காரணம் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
நம்பகத் தன்மை குறித்து:
எள்ளைக் கடுகாகத் திரித்தது ஒரு பெரிய கொடும் அறப் பிரச்சினை அல்ல – அது பிழைதான் என்றாலும்.
திருவள்ளுவ ஐயங்கார் எழுதியதைக் குறித்து அயோத்திதாச வடுகரே சொல்லியிருக்கிறார்: “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் திரித்த குறெள்.” இதில் mustard peanut sesame எல்லாம் வருகிறது. பான்பராக் தேவநேயப்பாவாண யாதவ் சொல்லிவிட்ட படி, இது ஒரு அத்வைத நிலை – கடுகும் எள்ளும் ஒண்ணு, அறியாதவன் வாய்ல மண்ணு. ஊக்க போனஸாக பூர்வபௌத்த கடலைக்காயும் இதில் இருக்கிறது என்பதை கவனிக்கவும்.
எல்லோரும் என்னை நம்ப வேண்டிய அவசியமில்லை. பிறர் என்னை நம்பவைத்துத்தான் என் தொழிலை நடத்தமுடியும் என்ற நிலையில் நான் இல்லை.
ஏனெனில் நான் ஒரு புறம்போக்குத் தமிழ் மாடர்ன் எழுத்தாளன் அல்லன். வெறுமனே ஒரு ஆரோக்கியமான(!) பொழுதுபோக்கு + தமிழ்(!) பயிற்சிக்காகத்தான் எழுதுகிறேன்.
இருந்தாலும் முடிந்தவரை எழுதுவதை ஒருமுறைக்கு இருமுறை நான் எழுதியதைச் சரி பார்ப்பவன்தான் – ஆனாலும் இப்படிப் பிழைகள் நேர்ந்து விடுகின்றன (ஆ, இப்படி எழுதுவது சரியில்லை: மாறாக, ‘ஆனாலும் பிழைகளைச் செய்துவிடுகிறேன்‘ என்பதுதான் சரி)
…எது எப்படியோ… பிழைகள், தவறுகள் இருந்தால் அவற்றைத் தாராளமாகத் திருத்திக் கொள்ளத் தயார்.
அம்மணர்களே, அம்மணியே! ஒரு ப்ளடி கடுகு பெறாத எள் சமாச்சாரத்துக்கே இப்படிக் கழுவி ஊற்றுகிறீர்களே, நீங்கள் எப்படி ‘சங்ககாலம் குறித்த ஆதிமாய்மால’ங்களையும் ‘தமிழின் தொன்மை’ பீலாக்களையும் பொறுத்துக் கொள்கிறீர்கள்?
“ஆரிய ஆண்கள் படையெடுத்து கைபர்போலன் வழியாக வந்தார்கள், அதிலிருந்து தொடர்ந்து 5000 ஆண்டுகளாக திராவிடர்களை இம்சிக்கிறார்கள்’ எனும் பெரும்பீலாவை இன்னமும் நம்புகிறீர்களே! ‘சிந்து-ஸரஸ்வதி நாகரிகம் திராவிடர்களுடையது’ என ஸைக்கிள்கேப் கிடைக்காவிட்டால்கூட இஷ்டத்துக்கும் ஓட்டுகிறீர்களே? படுகேவலமாக இல்லை?
சரி.
தொடர்ந்து திருத்தவும்.
-0-0-0-0-0-0-
எவன் என்னைப் பொதுவில் எழுதச் சொன்னான், சொல்லுங்கள்?
For me, this want & even more also want.
:-(
October 25, 2022 at 18:48
ஐயா, இப்படி “கடுகு ” பெறாத விஷயத்துக்கெல்லாம் கோபித்துக் கொள்வதை பார்த்தால் நீர் தமிழ் மண்ணிற்கு வெளியே வசிக்கிறீர் என நினைக்கிறேன். எங்களைப்
பாருங்கள் , “ஊசி மகன் , ஓசி மகன்” என்று ராசாக்களும் , மந்திரிகளும் சொன்னாலும் முதுகை சிலிர்த்துக்கொண்டு எப்படி சீரியல் “மேய்ந்து ” கொண்டு போகிறோம் பாருங்கள்.
குறிப்பு – கண்ணுக்கு “கடுகு ” எண்ணை தான் விட்டுக் கொள்கிறேன்.
October 25, 2022 at 20:40
யோவ்! கோபமெல்லாம் இல்லை. அந்த கடுகுப்பூரார் அவர்களுடன் தான் எனக்குப் பெரும் பிரச்சினை.
(ஆனால் ற்றொம்ப அறிவுரை கேட்டுக்கொள்கிற வயதைத் தாண்டியாகிவிட்டது என நினைக்கிறேன் – எல்லாம் நல்லமனதுடனே செய்கிறீர்கள் என ஒப்புக்கு வைத்துக் கொண்டாலும்…)
அந்தத் திராவிடக் கூவான்கள் உங்களை(!) ஊசி மகன் , ஓசி மகன் என்றுதானே சொல்கிறார்கள்.
ஆனால் பாருங்கள் ஈவெரா ‘பெரியார்’ அவர்களைச் செல்லமாக ‘வேசி மகன்’ என்றே அழைத்திருக்கிறாரே! (ஒரு தடவை ரெண்டு தடவை அல்ல – பலப்பல தடவை)
ஆகவே திமுக திராவிடர்கள் பாடுதான் அசிங்கம், படு கேவலம்.
//கண்ணுக்கு “கடுகு ” எண்ணை தான் விட்டுக் கொள்கிறேன்.
ப்ளடி நானென்ன விளக்கெண்ணையையா ஊற்றிக்கொண்டு விளக்கச் சொன்னேன்?
உங்கள் மண்டையில் சுடச்சுடக் கடலையெண்ணையைக் காய்ச்சி ஊற்ற…
ஆசிகள்.