தமிழக முதலையமைச்சர் இசுடாலிர்: “கும்மிடிப்பூண்டிக்கு வடக்கேயுள்ள தமிழகப் பகுதிகளை, ஆந்திரப் பிரதேசத்திற்குத் தாரை வார்த்துக் கொடுக்கத் தயார்!”
September 10, 2022
…இது கிண்டலோ வதந்தியோ பொய்யோ அல்ல!
ஏனெனில், ‘கச்சத் தீவு’ விஷயத்தைக் கண்டுகொள்ளாமல், ஸ்ரீலங்காவுக்கு ‘விட்டுக் கொடுத்தது’ அவருடைய அப்பா மு கருணாநிதிதானே? இப்படி ஒரு பிரச்சினையை உருவாக்கிவிட்டுவிட்டு, பின்னர் பிலாக்கணம் வைத்து, ‘கச்சத் தீவை மீட்டே தீருவோம்!’ என உரக்க முழக்கம் வைத்து தமிழ்மான/வெறியினை, ஓட்டுகளாக அறுவடை செய்ய அப்போதுதானே முடியும், சொல்லுங்கள்?
-0-0-0-0-
சரி, இப்போது கும்மிடிப்பூண்டி குண்டு வீச்சுக்கு வருவோம்…
இசுடாலிர் அண்மையில் ஏதோ ஒரு கூட்டத்தில், அவர் வழமையே போல வாய்க்கு வந்ததை எதுகைமோனை மொகரக் கட்டையுடன் பேசியிருக்கிறார். அதனைப் பற்றி ஒரு அருமையான கீச்சையும் கூச்சமேயில்லாமல் பகிர்ந்திருக்கிறார்.
“குமரி – நெல்லை மக்கள் அன்புப் பொங்க வரவேற்று பாச மழையில் நனைத்துவிட்டார்கள்! பொருநை நாகரிகத்தைப் போற்றும் அருங்காட்சியகம் உள்ளிட்ட அறிவிப்புகளோடு, பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தினேன்.
குமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை செம்மையாக்கி தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவோம்!”
அப்பருக்கும் சரி, மகருக்கும் சரி – தமிழகத்தின் எல்லைகள், அதன் பகுதிகள் பற்றி ஒரு விதமான – பொதுஅறிவும் இல்லை. (என்ன, அவர்கள் சொந்த திராவிடச் சொத்தா போகிறது? எல்லாம் மக்கள் சொத்துதானே, எக்கேடோ கெட்டுப் போகட்டும் எனும் திராவிடமாடல் சிந்தனையாக இருக்கலாமோ என்ன எழவோ…)
இந்த அழகில் இவர்களுக்கு ‘மாநிலங்களுக்கு இன்னமும் அதிகாரம் வேண்டும்!” இருப்பதையே புரிந்து கொள்ளவில்லை – உளறிக் கொட்டியாகிறது, ஆனால், மூப்பில் செத்துப்போன இங்கிலாந்து ராணி குறித்த கரிசனம் தான் ற்றொம்ப முக்கியம்… ப்ளடி, சிரிப்பாக வரவில்லை?
முதலையமைச்சர் என்ன சொல்லவருகிறார் என்றால் – அவர் தமிழகத்துள் வடக்கேயிருக்கும் கும்மிடிப்பூண்டி வரை ‘செம்மை’யாக்குவாராம்! அப்போது அதற்கு வடக்கேயுள்ள தமிழகப் பகுதிகளை ஆந்திராவுக்கா கொடுக்கப் போகிறார்?
ஆம்.
ஆக, ஆக, ஆக… பச்சைக் கோடிட்ட பாகங்களை, நாம் ஆந்திராவுக்கு இலவசமாக… ஏற்றுமதி செய்யப் போகிறோம் போல!
…என்ன எழவோ, அடிப்படைப் பொதுஅறிவோ அல்லது பூகோள ஞானமோ – ஏன், தமிழக நலன் குறித்தோ கூட ஒரு கரிசனமும் இல்லாதவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கும் நம் தமிழகத்துக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.
—உடையும் செய்தி—
“மெட்றாஸ் மனதே” எனத் தெலுங்கு சமுதாயத்தினர் மிக நியாயமாகவே அப்போதைய 1950களில் எழுப்பிய கோரிக்கையை, பண்டமாற்று முறையில் இப்போது நிறைவேற்றப் போவதே, எங்கள் திராவிட மாடல் திமுக அரசாங்கம்தான்!
இதற்குப் பதிலாக, திராவிடமாடல் மிகவுயர் படிப்புப் படித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் பரிந்துரைக்கு இணங்க, விஜயவாடா துறைமுகத்தைப் பெற்றுக் கொள்வதாகவும் இருக்கிறோம்…
லெமூரிய கண்டத்தையே கடலடியில் புதைத்த நம் தமிழர்களுக்கு, இந்த வடுக நகரை, யானை கட்டி இழுத்துவர எவ்வளவு சங்ககாலமாகும், ஹ்ஹ…”
என, முதலையமைச்சர் இசுடாலிர், நலத்திட்டங்களை, எதிர்கால தமிழகத்தின் தலை நகராக விளங்கப்போகும் கரூர் நகரத்தில் அறிவிக்கும் போது சொன்னார்.
நன்றி.
—
—