மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி எனும் ஹிந்துத்துவரை அவர்காலத்திற்கேற்ற பார்வையுடனும், பரிவுடனும், தற்கால அரசியல் அவசியங்களுடனும் காத்திரமாக அணுகுவது எப்படி

August 11, 2021

பாபுஜி நம்மெல்லாரையும் போல விசித்திரமானவர். Flawed but fantabulous.

ஆகையால், மேலும் மஹாத்மா என நம்மால் அவர் தொடர்ந்து கொண்டாடப்படுவதால், ஆகவே அவர்மேல் பலப்பல அதிகுணாதிசியங்களை ஏற்றிவிடும் தன்மை நம்மிடம் இருப்பதால் – பல வகைகளில் அவரைப் புரிந்துகொள்வது இன்னமும் கடினமே. அவர் எப்படி, பாரதத்துக்குத் திரும்பி வந்தபின் மிகக் குறுகிய காலத்தில், வசீகரம் மிக்க ஒரு தலைமையை காங்க்ரெஸுக்கு அளிக்க முடிந்த சக்தி படைத்தவராக இருந்தார் என்பதற்கு என்ன காரணங்கள் இருந்தாலும், அவரால் பரந்துபட்ட பாரதமக்களுடனும் நேரடியாக உரையாட முடிந்திருக்கிறது. இது ஒரு பெரும் அதிசயம்தான்!

என்னைப் பொறுத்தவரை – குறிப்பாக, அவருடைய சறுக்கல்களும் சால்ஜாப்புகளும் அவர் ஆளுமைக்கு ஒத்துவராத அரசியலும் தெரியவரும்போது கொஞ்சம் சங்கடமாகவே கூட இருந்திருக்கிறது. அதேசமயம், அவரைப் பலப்பல அயோக்கியர்கள் (முக்கியமாக இடதுசாரி-லிபரல்கள், பலப்பல கபடவேடதாரி காங்க்ரெஸ் வகையறா காந்தியர்களும்) சமயத்திற்கேற்றவாறு சந்தர்ப்பவாதமாக உ;பயோகித்து விட்டெறிவதும் இரட்டைவேடமணிவதும் கோபம் தருகிறது.

ஆனால், அவர் குறித்து நான் ஒரு திடத்துக்கு வந்துவிட்டேன் என நினைக்கிறேன். அதாவது அவருடைய ‘பஹுருபி காந்தி’ நிறப்பிரிகையைத் தொடர்ந்து ஆராதிக்கிறேன். என் மூதாதையர்கள் பாபுஜியை ஆராதித்தவர்கள், ஆராதிப்பவர்கள்; நானும் பலகாலம், விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக அவரைக் கருதி ஆராதனை செய்துவந்திருக்கிறேன்கூட. இந்த அக்கால நினைவுகளும், பின்பெற்ற படிப்பினைகளும், அவற்றின் மூலமாக நான் வந்தடைந்துள்ள இடமும் எனக்குப் போதுமானவை..

இருந்தாலும் அவர் கரித்துக்கொட்டப்படவேண்டியவரில்லை; ஏனெனில் அவருடைய ஒருதினுசான பார்வைகள் வரலாற்றறிவினாலோ, மதங்கள்-தரிசனங்கள் குறித்த தெளிவான பார்வையினாலோ இருந்திருக்கவில்லை – அவரிடம் ஹிந்துமதங்கள்/தர்மம் குறித்த ஸ்வதேஷி சட்டகம் இல்லை – நம் பாரம்பரியங்களை அணுக அவர் மேற்கத்தியக் கருவிகளையும் கருதுகோட்களையும் மட்டுமே உபயோகித்தார் – இதனாலேயே பல சறுக்கல்கள்.

கொலைகாரக் கருத்தாக்கங்களை எதிர்கொள்ள அசட்டுப்பிசட்டுச் சகோதரத்துவக் கருத்துகளையும், தங்களுக்கெதிரான கொடூரவன்முறைகளையும் ஹிந்துக்கள் சாத்வீகமாக அணுகவேண்டும் எனும் சுயவெறுப்பு அணுகுமுறைகளையும் அஹிம்ஸை போன்ற ஹிம்ஸைதரும் விசித்திரங்களையும் ஆதரித்தார். ஆனாலும் அவர் தன்னுடைய விசித்திர்வீர்ய வழியில், பாரதத்தை, நம் மக்களை நேசித்தார் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

மேலும். ஜவாஹர்லால் ‘சாச்சா’ நேரு போன்ற மகத்தான அரைகுறைகளையே நம் தலைமேல் வைத்துத் தூக்கிக் கொண்டாடும் நாம், பலப்பல விஷயங்களைச் சாதித்திருந்தாலும் படுஅறிவாளியாக இருந்திருந்தாலும் வெள்ளையர்களோடு ஏகத்துக்கும் இணங்கிவுறவாடிய ஆம்பேட்கரையும் போற்றும் நாம், நம் பாபுஜியையும் ஊக்கபோனஸ்ஸாகப் பொறுத்துக்கொள்ள முடியாதா என்ன?

இந்தவுலகமே சாம்பல் நிறமப்பா, வேறேன்ன சொல்ல…

இன்னொருவிஷயம்; எனக்குத் தெரிந்து, பாபுஜி – ஒரு மதமாற்றிக் க்றிஸ்தவரோ, ஜிஹாதி முஸ்லீமோ, கம்மீனிஸ்ட்ஸோஷலிஸ்டோ, லிபரல் தண்டக்கருமாந்திர அறிவுஜீவியோ அல்லது கேடுடிகெட்ட திராவிடரோ, நியொஆம்பேட்கரியர்களோ அல்லர்; தம் காலத்தில் இவ்வுதிரிச்சமூகத் திரள்களைச்* சார்ந்த பெரும்பான்மையினரால் அவர் படுமோசமாக வசைபாடப்பட்டார் + இன்றுவரை ஆழ்மனதிலிருந்து வெறுக்கப்படுகிறார் என்பவைதாம் உண்மை;  இந்த அழகில் இதே கும்பல்களும் அவர் ஆளுமை மீது ஏகபோக உரிமை கொண்டாடுவதும், ‘காந்தி கண்ட இந்தியா இப்படியாகிவிட்டதே, ஐயகோ’ என மருகுவதும் பிரலாபிப்பதும் நகைமுரணும் மகத்தான நகைச்சுவையும்கூட)

மேலும் – ஏன் பிற தர்ம மார்க்கங்களைச் சார்ந்த சமணரோ, பௌத்தரோ ஆஜீவிகரோ கூட அல்லர், அவர். கடவுள் நம்பிக்கையற்ற லோகாயத/சார்வாகக் காரருமல்லர். ஆகவே அவர் ஒரு  தார்மீக ஹிந்து என்பதிலோ, ஹிந்து மக்கள் அவரை (FWIW?) ஆட்கொண்டு ஆராதித்துப் போற்றுவதிலோ ஒரு பிரச்சினையுமில்லை – மாறாக அது அவர்களுடைய/நம் ஏகோபித்த உரிமையும் கூட.

மேலும் ஹிந்து என்பதற்கும் ஹிந்துத்துவம் என்பதற்கும் எனக்குக் கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுக் கொண்டு தேடினாலும், ஒரு திருமுடிக்கும் வித்தியாசமும் தெரியவில்லை.

(ஹிந்துக்களையும் ஹிந்துமதங்களையும் நேரடியாகத் திட்டமுடியாததால், இந்த ‘ஹிந்துத்துவா’ எனப் பெயரிட்டு வசைபாடுவது என்பது நம் அறிவுஜீவிகளின் (+முன்குறிப்பிட்ட உதிரிகளின்) போர்த்திட்டம்; ‘ஹிந்துத்துவா’ என இனங்காணப்பட்டவர்கள்(!) இந்த உதிரிகளால் ஒழிக்க அல்லது ‘அமைதி’ப்படுத்தப் பட்டதும் பிற ஹிந்துக்களும் ஒழிக்கப் படுவார்கள் என்பதில் எனக்கு ஐயமேயில்லை.)

ஆகவே.

–0-12345678987654321–0-

நிலைமை இப்படி இருக்கையிலே – ஒரு அண்மைய உரையாடலில் ‘வேல்’ அவர்கள் ஏறத்தாழ இதே கண்ணோட்டம் உள்ள ஒரு சுட்டியை அனுப்பினார். அதனை எழுதியவர் ஓப் இந்தியா (~ஒபீனியன் இந்தியா) தளத்தை நடத்தும் ராஹுல் ரௌஷன் அவர்கள்.

உரையாடற் திரி. வேல்முருகன் தளம். (எதையாவது எழுதுங்கள் ‘வேல்’ ஐயன்மீர்! வெறுமனே துண்டு போட்டுவிட்டுச் சென்றுவிட்டீர்களே!)

இதனைத் தொடர்ந்து ஸ்ரீதர் திருச்செந்துறை அவர்கள் அந்த ஆங்கிலக் கட்டுரையின் கணிசமான பாகங்களி ன் தமிழாக்கத்தை சஞ்சிகை108 இணையப் பத்திரிகையில் பதிப்பித்திருக்கிறார்.

காந்தி: வலதுசாரிகளின் எதிரியல்லர்

ஸ்ரீதர் அவர்கள் மொழிபெயர்த்திருக்கும் மிக முக்கியமான கட்டுரையை. நாம் அனைவரும் படித்து அசைபோடவேண்டியது அவசியம்.

அதன் ஆங்கில மூலம்: Strategically, the RW, rather the Hindus, don’t have much to gain by attacking Mahatma Gandhi

ஏனெனில் – பாபுஜி அவர்களின் உள்மனக்கிடக்கைகள், அவரது அரசியலற்ற செயல்பாடுகளை நாம் உணரும் அதே சமயத்தில், அவருடைய ஹிந்துத்துவ ஆகிருதியையும் மேதமையும் பாரத மக்கள் உபயோகித்துக் கொள்ளவேண்டும். அதே சமயம் அவரைக் காத்திரமான விமர்சனம் செய்வதில் தடையேதும் இல்லை. (அவரே அவற்றுக்கு ஏகத்துக்கும் ஏது செய்திருக்கிறார்கூட!)

என்ன சொல்லவருகிறேன் என்றால்: மேற்சொன்ன *உதிரி தண்டக்கருமாந்திரங்கள் அவர் பெயரை ஏகபோகமாகவும் அயோக்கியத்தனத்துடனும் அறுவடை செய்வதைப் பார்த்துக்கொண்டு, முகாந்திரமே அற்று காந்தியை வெறுத்து, அதே தண்டக் கருமாந்திரங்களுக்கு ஆதரவாக ஊக்கபோனஸ் தரக்கூடாது.

ஏனெனில், பாபுஜியையும் ஒரு ஹிந்துத்துவராக உணரவேண்டும்.

He was flawed (like us), operated in an ~imperfect world (like we do), but he was fabulous (unlike most of us) and was a practicing Hindu – yearning for reforms & changes when/where he perceived the need for them, within his limited understanding (like we all have) of what constitutes bharatiyata, dharma, swaraj & rta.

As bharatiyas, we have every right to claim him in matters that are positive. And own him in toto.

OTOH, we have NOTHING to gain by needlessly castigating him, and thusly directly playing in to the hands of left-liberal-dravidian scum or aforesaid ChrIslamics.

YMMV.

8 Responses to “மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி எனும் ஹிந்துத்துவரை அவர்காலத்திற்கேற்ற பார்வையுடனும், பரிவுடனும், தற்கால அரசியல் அவசியங்களுடனும் காத்திரமாக அணுகுவது எப்படி”

 1. Sridhar Says:

  காந்தி வழியில் ஹிமந்த பிஸ்வ ஷர்மா.

  On Wed, Aug 11, 2021 at 10:05 AM ஒத்திசைவு… प्रत्याह्वय… resonance… wrote:

  > வெ. ராமசாமி posted: ” பாபுஜி நம்மெல்லாரையும் போல விசித்திரமானவர். Flawed > but fantabulous. ஆகையால், மேலும் மஹாத்மா என நம்மால் அவர் தொடர்ந்து > கொண்டாடப்படுவதால், ஆகவே அவர்மேல் பலப்பல அதிகுணாதிசியங்களை ஏற்றிவிடும் தன்மை > நம்மிடம் இருப்பதால் – பல வகைகளில் அவரைப் புரிந்துகொள்வது ” >

 2. Rajan Says:

  Ofcourse!! Bapuji professed his faith and did not mindlessly discredit it unlike his infamous successors; that he promoted such illeiberals, even subverting democratic processes is another matter.

  I was Flabbergasted at the stellar role he played in Vaikom with direct action. Initially like all Tamils I thought it was all credit to the ‘Vaikom Veerar’ and later the leaders from Kerala only. He led the movement from the front and sidelined the likes of Periyar, and even politely refused the help of Sikhs and Muslims. He said it should be a Hindu’s repentance and Hindus’ correction. In a subtle way he manifested his Hindutva here
  .
  He is the Father of the nation, and like all children with their fathers, we have our differences with Bapuji as well. Don’t we?


  • 🙏🏿

   Thanks. A balanced approach is required to understand, interpret & leverage him & his founts.

   There, I said it.

   In these days of postmodernist criticaltheoryism nonsense, everything needs to be leveraged & powered.

   It is verily a civilizational battle.

   {

   Again; it is important to figure out if there is at all a difference between hindutva and hinduism.

   In the lexicon of the enemies of the Civilization:

   Hindutva followers: To be immediately discredited, slandered if it is not possible to slaughter them outright.

   Hinduism followers: Patiently waiting to be peacefully slaughtered at a later date – even as they pitifully bleat their protests. Good for them.

   END
   }


 3. Another exhibit to prove my everlasting admiration for some aspects & points-of-view of Bapuji, His Awesomeness:

 4. Vel Says:

  ஸ்ரீதர் மிக அருமையாக மொழிபெயர்த்துள்ளார். அதில் ஒரு பத்து சதம் கூட என்னால் செய்து இருக்க முடியாது. என்னுடைய நண்பர்கள் அனைவருக்கும் ஸ்ரீதரின் பத்தியை பகிர்ந்து உள்ளேன்.

  என்னை மாதிரி கமெண்ட் எழுதுவது வேறு, உங்களை போல ஒரு முழு பத்தி எழுதுவது வேறு, அதற்கு நிறைய படிக்க வேண்டும் + மொழி அறிவும் வேண்டும். உங்களுடைய rebuttal கட்டுரைகளில் கூட நீங்கள் பல மூல நூல்களை மேற்கோள் காட்டி எழுதுவீர்கள். ஒரு வேலையை செய்தால் உங்களை போல திருந்த செய்ய வேண்டும். நான் உண்மையாகவே நுனி புல் மேய்ப்பவன், அதனால்தான் எதையும் எழுதுவது இல்லை.


 5. […] காந்தியும், இந்தக் கட்டுரையின் (=மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி எனும் ஹிந… 11/08/2021) சாரமும் […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s