“தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் மறுபடி மறுபடி இந்திய ஒன்றியம் எனச் சொல்லிவருகிறாரே! தமிழகம் தனி நாடாகுமா? இந்தியா உடையுமா? பிரிவினை நடக்குமா??”

June 29, 2021

என் பதில்கள்:

(பொறுக்க முடியவில்லை. மறுபடியும் மறுபடியும் சிலபல சககிழங்களும் அப்ரசண்டி இளைஞர்களும் இப்படியே கேட்டுக் கழுத்தறுக்கிறார்கள். என்னவோ என்னிடம் சகலகேள்விகளுக்கும் பதில் இருக்கிறது போன்ற பிரமையில் இருக்கிறார்கள். இருந்தாலும். ஆகவே.)

0. ‘ஒன்றியம்’ என்று இவர்கள் பேசுவது பெரிய பிரச்சினையில்லை. அதனால் என்ன குறிப்பிடப்படுகிறது என்பதுதான் முக்கியம். தொடைநடுக்கம்தான் திராவிடம் என நீங்கள் புரிந்துகொண்டால் இதைப் பெரிதுசெய்ய மாட்டீர்கள்; எப்படியும் இந்த தண்டக் கருமாந்திர  ஒன்றியவாதம் பெருகி அது பிரிவினைவாதமானால் – அடுத்த சிலவருடங்களில் பத்துப் பதினைந்து கூறுகெட்ட கூமுட்டை உடன்பிறப்புகள் உணர்ச்சிவசப்பட்டுத் தீயுட்டிக்கொண்டுச் சாவார்கள். அவர்களுக்கு ‘கனிவுத் தொகை ரூ 1 லட்சம்’ அளிப்பு + ‘குடும்ப அங்கத்தினர் ஒருவருக்கு அரசுவேலை வாய்ப்பு’ என்பதற்கு அப்பாற்பட்டு, அது அதிகபட்சம், தமிழக மக்கள்தொகைக் குறைவுக்குத்தான் இட்டுச் செல்லும். கவலை வேண்டேல்.

1. தமிழக முதலமைச்சரானாலும் சரி, பிற திராவிடர்களானாலும் சரி. அவர்கள் நடுத்தெருவில் நாற்சந்தியில் பகிரங்கமாக ‘ஒன்றியம்’ முட்டிமைதுனம் செய்து சுயஇன்பம் காண்பதில் எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை – உங்களுக்கும் இருக்கக்கூடாது; கொஞ்சம் அசிங்கவுணர்ச்சியிருந்தாலும், நாம் தாமே இவர்களைத் தேர்ந்தெடுத்தோம்?

வடிவேலுவியல் கருத்துப்படம்

(அதிக பட்சம் இவர்களை ‘பப்ளிக் நியூஸன்ஸ்’ எனக் கருதி அகலவும். அவ்ளொதான்!)

2. ஒன்றியம் பன்றியம் என்றெல்லாம் பேத்துவது பேச்சுரிமையின் பாற்பட்டது – அதில் நாம் தவறு காண முடியாது. மேலும் – திராவிடர்களாகிய நாம் வாய்கிழியப் பேசும் பெத்த பேச்சானது, நம் கீழடிக் குண்டிக்கு அப்பாற்பட்டு பிறர் குண்டிகளையும் கிழிக்கும் வல்லமை மிக்கது என்பதைப் புரிந்துகொள்ளவும். ஆகவே, அவற்றை லூஸ்ல வுடவும்.  குண்டிகிழிப்புகள் குறித்து  பயமாக இருந்தால், ஒரு கோமணத்துக்கு இருகோமணங்களைக் கட்டிக்கொள்ளவும், நாமெல்லாம் ரெண்டு மாஸ்க் போட்டுக்கொள்வதில்லையா, அதைப்போலத்தான் இது.

3. மற்றபடி வெத்துவேட்டு திராவிட வீரதீரப் பராக்கிரமத்தைப் பற்றியும், வரலாற்று ரீதியாகவேகூட நம் கொட்டையற்ற தன்மையைக் குறித்தும் நான் நிறையவே எழுதியிருக்கிறேன். மாதிரிக்கு, அண்மையில்: திமுகவின் தமிழகமும் ஒரு ஓன்றியம்தான்! இல்லை, அது ரெண்டியம்… இல்லையில்லை, அது கூறுகெட்ட ரெண்டுங் கெட்டானியமோ… ஐயோ! கடைசியில் அது பல்லியம்! :-( 08/06/2021

3. ரொம்பத் திமிரெடுத்த விடலையாக அலையும் திராவிடத் தமிழகம், தனிநாடாவது பாரதத்துக்கு நல்லது. ஏனெனில் அடுத்த நிமிடம் ஸ்ரீலங்கா படையெடுத்து (வரலாற்று ரீதியாக தமிழகம் அதற்கு இழைத்த கொடுமைகளுக்கு எதிராகவென்று, தமிழகத்தின் செய்நன்றி மறத்தலுக்கு தண்டனையாக என்று…)  வரும்.  கேரளா அரசு தமிழகத்தின் கீழ்ப்பாதியையும், வடக்கையும் வடமேற்கையும் முறையே ஆந்திரா, கர்நாடகா அரசுகளும் மிகநியாயமாகவே கபளீகரம் செய்யும்.

(இவற்றைப் பற்றியும் முன்சுட்டிய பதிவில் விலாவாரியாக அல்லது விலாநோக எழுதியிருக்கிறேன் என நினைவு)

மேற்கண்ட காரணங்களால் – வரலாற்று ரீதியாக நாம் முன்னமே பலமுறை செய்திருப்பது போலவே, குய்யோமுறையோ என அலறிக்கொண்டு, நிபந்தனையற்று ‘ஒன்றியத்தை’ மறுபடியும், அடுத்த நிமிடமே போர்க்காலரீதியில் சரணடைந்துவிடுவோம். சுபம்.

4. இந்தியா உடையலாம், பிரிவினை கோரல்களும் அமர்க்களமாக நடக்கலாம். (நன்றி: இஸ்லாம் + இவாஞ்செலிக்கல்கள் பக்கவாத்தியம்: மாவோயிஸ்ட்கள்)

ஆனால் – நமக்குக் கொஞ்சமேனும் விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பதால், எனக்குக் கொஞ்சமாக ஓரத்தில், ‘அப்படி நடக்காதோ’ எனும் நம்பிக்கை துளிர்விட்டிருக்கிறது. பிரமையாகவும் இருக்கலாம்.

இருந்தாலும் நாம் செல்லவேண்டிய தூரம் அநியாயத்துக்கு அதிகம்.

-0-0-0-0-0-

கோரிக்கை: இப்படிக் கேள்விகளாகக் கேட்பதற்குப் பதிலாக, கலவரத்துக்கு மாற்றாக – களத்தில் இறங்கிக் காத்திரமாகவும் சுயநம்பிக்கையுடனும் வேலைசெய்யப் பழகுங்கள். இல்லாவிடில் நமக்கும், அற்ப சவடால் திராவிடர்களுக்கும் என்ன வித்தியாசம், சொல்லுங்கள்?

மின்னஞ்சல் போக்குவரத்தில் எனக்குப் பிரச்சினை இல்லை, நீளநீள உரையாடல்களையும், இளைஞர்களையும் புத்திசாலிகளையும் விரும்புபவன் தான் – இருந்தாலும், எனக்கு இருக்கும் அவகாசத்தில், ஒருசுற்றுச் சுற்றிவிட்டு வருவதற்குள் மூச்சுமுட்டி விடுகிறது, என்ன செய்ய. புரிந்து கொள்வீர்களா?

மேலும், நான் தொழில்முறை தமிழ் எழுத்தாளனோ அறிவுஜீவியோ அரசியல்நோக்கனோ அல்லன் – வெறும் சராசரி ஆசாமிதான். எனக்கும் எக்கச் சக்கமாக, ஏகப்பட்ட வேறுபல வேலைகள் இருக்கின்றன, சொல்லப்போனால் குவிந்து கிடக்கின்றன… ஊக்கபோனஸ்ஸாகக் கொஞ்சம் ஒன்றரைக்கண்வேறு, ஆக பார்வையே கொஞ்சம் கோளாறுதான்; ஆகவே, என்னையும் தயைகூர்ந்து லூஸ்லவுடவும்.

7 Responses to ““தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் மறுபடி மறுபடி இந்திய ஒன்றியம் எனச் சொல்லிவருகிறாரே! தமிழகம் தனி நாடாகுமா? இந்தியா உடையுமா? பிரிவினை நடக்குமா??””


 1. பத்ரிசேஷாத்ரியுடன் இந்த ‘ஒன்றியம்’ இழவு உட்படச் சிலவற்றைக் குறித்த சமனம் மிகுந்த ஒரு உரையாடல்.

  எதிர்காலத்தை, அவர் நம்பிக்கையுடன் அணுகுவதாகப் படுகிறது; அவசியம் பார்க்கவும்;


  • Thanks a lot for Badri’s interview

   Regards,
   Venkatramanan

  • dagalti Says:

   Hmm… Badri is asserting a few points about NEET that are instructive
   – that the poor/ govt school children haven’t made the medical cut pre NEET and this group is being significantly improved (duh!) by the 7.5% reservation for govt school children.

   I couldn’t find that information (pre-NEET) in the public domain.
   Especially nothing about poor/non-poor.
   Perhaps I didn’t search hard enough.
   This is very crucial.


   • //I couldn’t find that information (pre-NEET) in the public domain.

    I had seen actually seen it in some context, in some document – not hearsay. (raking my pigeonbrain to get the context – where when etc)


 2. Yes. That’s what I meant – The link for that interview only I meant. Clarified many things – Proves once again Dravidians are just வாய்ச்சொல்லில் வீரரடி


  • 🙏🏿நம் பிரச்சினை அதுவல்ல; அந்தப் பேச்சைக்கூட இத் தரித்திரங்கள் சரியாகச் செய்யமுடிவதில்லை எனும் அவல நிலைதான் இன்னமும் சோகம். 😩


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s