மிடில

April 23, 2021

வய்ஸாய்டிச்சி. மன்ச்சிக்குங்க பா.

“உன் பெரும்பேராசான் ஒரு புது குறுநாவலை எழுதி வெளியிட்டிருக்கிறார், அதுல ‘உனக்குப் பிடித்த’ குமார கம்பண்ணர் பற்றியும் வந்திருக்கிறதுபோல. அவசியம் வாசி…”

எனச் சுட்டிகளுடன் ஒருவர் அனுப்பி, அடுத்த 24 மணி நேரத்தில்,

“படித்து விட்டாயா? எப்படி இருக்கிறது? எக்கச்சக்க பிழைகள் இருக்கின்றனவே! இதைப் பற்றி எழுது!”

-0-0-0-0-

ஆஹா! சரிதான். ஆனால் சில விஷயங்கள்.

1. நான் படிக்க முயன்றேன். எந்த விஷயத்தையும், படித்தால் ஒரு மசுரும் பிடிபடாத விஷயங்களை விட்டேனாபார் எனப் படித்துப் புரிந்துகொள்ளும் முனைப்புடைய எனக்குக் கொஞ்சம் கஷ்டமாகிவிட்டது. தள்ளித் தள்ளிப் படித்தேன். (இது சரியான வழியில்லை என்றாலும்)

மேலும் மதுராவிஜயம், குமார கம்பணர் என, அவருடைய பிரதமசீடரான ஸ்ரீலஸ்ரீ கடலூர் சீனுஸ்வாமிகள், எக்குதப்பாக அட்ச்சிவுட்டதைப் பற்றி நான் ஏற்கனவே எழுதிவிட்டேன். சிஷ்யக்குட்டி பதினாறடி பாய்ந்தால், மஹாசன்னிதானம் 256 அடியாவது பாயவேண்டும் என்பது தமிழலக்கிய நியதியன்றோ?

2. குறுநாவலில் தகவல் பிழைகள் பல இருக்கின்றன. அதனால் என்ன பெரிய பிரச்சினை? அது ஒரு புனைவு. அது முன்னேபின்னே மேலேகீழே என எங்கு வேண்டுமானாலும் போகலாம்.

உண்மைகளுக்கும் வரலாறுகளுக்கும் அதன்மேல் ஏதாவது தாக்கத்து இருந்தேயாகவேண்டிய அவசியமில்லை. மேலும் அது ஒரு தமிழ் ஆக்கம். அதற்கும்மேல்  ஊக்கபோனஸ்ஸாக, அது ஒரு பெரும்பேராசானிய ஆக்கம். ஆகவே.

எடுத்துக்காட்டாக, அவருடைய குறுநாவலில் –  வியாசராஜர் அவர்கள் உடை உடுத்தியதாக சிலகட்டங்களில் குறிப்பிட்டு எழுதப் படவில்லை என்றால், ஜெயமோகன், வியாசராஜர் அம்மணத்தில் அலைந்ததாகச் சித்திரித்துள்ளார் என்றா சொல்வீர்கள்? ஷேக்ஸ்பியரில் இல்லாத தகவல் பிழைகளா?

ஒரு நல்ல ஆக்கம் என்பதில் அசிரத்தை இருக்கக்கூடாது என்பது உண்மைதான். ஆனால், இந்த அசிரத்தை விஷயம் போன்ற கொசுக்கடிகளெல்லாம் எனக்குப் பெரும் பிரச்சினை இல்லை. லூஸ்ல விட்டுவிடுவேன்.

(நாம் கேவலம், நம் தற்காலத் தமிழ் அலக்கியத்தைப் பற்றித்தானே பேசிக்கொண்டிருக்கிறோம்? ஏதோ இவற்றையெல்லாம் ஹிந்தி, ஆங்கில அலக்கியச் செய்நேர்த்தி ரேஞ்சுக்கு எடுத்துக்கொண்டு போக முயற்சிக்கிறீர்களே!)

3. குறுநாவலின் தமிழிலேயே ஏகப்பட்ட குளறுபடிகள். இதனால் நமக்கென்ன பிரச்சினை?

கடந்த சிலபல ஆண்டுகளாகவே, கிட்டத்தட்ட எஸ்ராமகிருஷ்ணா பக்கம் சென்று கொண்டிருக்கிறாரோ என ற்றொம்பவே பயமாக இருக்கிறது. ஆனால் அவருடைய க்ராஃப்ட்/ஸ்கில் அவரைக் காப்பாற்றுகிறது; இருந்தாலும் அவருடைய தேய்வழக்குகள் ரவுண்ட் கட்டிக்கொண்டு அடிக்கின்றனவே! வார்த்தை அலங்கார ஜாலங்களும் வலிந்த விவரிப்புகளும் தொல்லை கொடுக்கின்றனவே.

4. என்னைப் பொறுத்தவரை, இம்மாதிரிப் பிரச்சினைகளையும் தாண்டி, என்னால் ஒரு புனைவை ரசிக்க முடியும்.

சும்மா நொள்ளை சொல்லாமல், ‘அலக்கணரீதியா இதிது சரியில்லை’ ஜாபிதா போடாமல், தகவல்பிழைகளைச் சுட்டிக்காட்டிச் சிரிக்காமல் – ஆக்கங்களின் மையக் கருத்தை நோக்கிக் குவியத்தைச் செலுத்த முடியும், க்ராஃப்ட் வெளிப்படுவதை ரசிக்கமுடியும்  – அதற்கான திராணி இருக்கிறது, அதாவது இருந்திருக்கிறது.

ஆனால், இந்த ப்ரஹ்மாஸ்த்திரத்தை வைத்துக்கொண்டுகூட என்னால் மிடில.

புனைவு  அலக்கணங்களுக்குட்பட்டு நான் படித்த மட்டில், வெறும் உணர்வுரீதியாகக் கூட எனக்கு இக்குறுநாவல் ஒத்துவரவில்லை. மன்னிக்கவும். (20-30 வருடங்களுக்கு முன் அவர் எழுதியுள்ள கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான சொற்றொடர்கள் இருந்திருக்கின்றன, இல்லையெனச் சொல்லவில்லை…)

5. நான் ஒரு தேர்ந்த வாசகன் எனத் தன்னைக் கருதிக்கொள்பவன்; ஆனால் என் தேர்ச்சிக்கு/திறனுக்கு அப்பாற்பட்ட விஷயமாக இது இருக்கலாம் – ஆக, இது என் போதாமை என விட்டுவிடுங்கள்.

அல்லது பழம்பஞ்சாங்கம் எனக் கடாசுங்கள்.

6. மேலும். இக்காலங்களில் பொதுவாகவே, எனக்குப் புனைவுகளைப் படிப்பதில் குவியமில்லை – ஏனெனில், அலக்கியமற்ற பல மஹோன்னத விஷயங்கள் படிப்பதற்குக் கொட்டிக் கிடக்கின்றன; ஆனால் எனக்கு, மீதியிருக்கும் வாழ் நாட்கள் (உங்களைப் போலவேதான்!) குறைந்துகொண்டே வருவதை உணர்ந்திருப்பவன்.

அதேசமயம் – ஒரு நாளுக்குக் குறைந்தபட்சம் இரண்டு-மூன்று புத்தகங்களைக் குவியத்தோடு படிக்க முடிந்த காலகட்டங்களில் இருந்து, வாரத்துக்கு வெறும் ~ஐந்து புத்தகங்கள் மட்டுமே எனும் சோம்பேறி நிலைக்கு வந்திருப்பவன்.

7. எனக்கு ‘மிகவும் பிடித்த’ எனும் ரீதியில் ஆயிரக்கணக்கான அழகுகள் இருக்கின்றன – புத்தகங்கள், இசை, திரைப்படங்கள், விஞ்ஞானிகள், அறிவியல், பாரததத்துவம் என மஹாமஹோ அழகுகள்…

சிலபல நண்பர்கள் தொடர்ந்து ‘ஜாபிதா போடலாம்’ என்று வேலைவெட்டியற்று அழுத்தம் கொடுத்தாலும், அவற்றைப் பற்றி எழுதவே எனக்குத் துப்பில்லை – இந்த அழகில் எனக்குப் பிடிக்காத, ஒத்துவராத விஷயங்களைப் பற்றி எழுதச் சக்தியில்லை.

8. மற்றபடி ஜெயமோகன் அவர்கள் என்ன எழுதினாலும் அவற்றைப் படிக்கவேண்டுமென்றோ, கருத்துச் சொல்லவேண்டுமென்றோ எவருக்கும் கட்டாயமோ முடையோ இல்லை – உங்களுக்கும் இல்லை.

மாறாக. அவருக்குக் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது.  எனக்கும் கருத்துசொல்லா சுதந்திரம் இருக்கிறது.

இந்தக் காரணங்களால், விலாவாரியாக அல்லது விலாநோக ஒரு விமர்சனமும் எழுத முடியாத கையறு நிலையில் இருக்கிறேன்.

+ காலம் பொன்னானது. அதனைப் புண்ணாக்குத்தனமாகப் புண்ணாக்கிக்கொள்ள விருப்பமில்லை.

மிடில.

-0-0-0-0-

இவற்றையெல்லாம் மீறி உங்களுக்கு, இந்த எழவுகளைக் குறித்தெல்லாம், நான் எழுதியே ஆகவேண்டுமென்றால், அதனால் இறும்பூதடைவீர்களானால், என் ரேட்கார்ட் கீழே:

அ. ஜெயமோகப் புனைவுகள் (அதாவது, அவருடைய கட்டுரைகள் உட்பட) படிக்க: ஒரு பதிவுக்கு ரூ 500/-

ஆ. + ரத்த அழுத்தம் குறைய மாத்திரைகள்: ரூ 100/- (பதிவுக்கு)

இ. ஜெயமோகப் புனைவுகள் குறித்து 1000 வார்த்தை பதிவு ஒன்றுக்கு: ரூ 5000/-

ஈ. + ஆம்புலன்ஸ் ரெடியாக என் வீட்டுவாசலில் நிறுத்திவைக்க: ரூ 5000/- (பதிவுக்கு)

100% முன்பணம் அனுப்பப் படவேண்டும். இது முக்கியம்+கட்டாயம்.

என் வங்கிக் கணக்குக்கு ரொக்கம் வந்து சேர்ந்த மூன்றாம் நாள், உங்கள் கட்டுரை பதிப்பிக்கப் படும். + வருமானவரி விலக்குக்காக ரசீது கொடுக்கப்படும்.

நன்றி.

பின்குறிப்பு: இதெல்லாம் வேலைக்காவாது என்று –  நீங்களே ஒரு ‘விமர்சனக் கட்டுரை’ ஒன்றைத் தரவுகளுடன் எழுதினாலும் அதனைப் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறேன்.

15 Responses to “மிடில”

 1. Raj Chandra Says:

  >> வாரத்துக்கு வெறும் ~ஐந்து புத்தகங்கள் மட்டுமே எனும் சோம்பேறி நிலைக்கு வந்திருப்பவன்

  – Wow…I am jealous of you…If I put some effort I can finish a book per week. But even then pillow size books like “The Power Broker” tired me out and took me around 2 months. BD’s Mahabharatha translation took 3 years.


  • “The Power Broker” – Haven’t read it, in spite of the sheer gravitational attraction because of its massive mass. But it helped that I am a pint sized guy. And the distance between is looong. I mean, the inverse-square law helped.

   But, um – Sir, there is no need to be jealous, like Abrahamic Gods. I have my own many shortcomings like, to start with, my short height, my short temper, short fuse – short shorts too, but I normally wear Veshti. This short list of short thingies is actually long. In fact, I have no short-supply of ’em; guess you are sharp enough to understand. But. If you experience sharp pains, please consult a doctor immediately.

   Also. I have next to nothing with respect to social-life(!) so to say. This helps.

   Also, it is easy-peasy to pretend to have read books and say things that nobody can really verify. How do you know, what you are reading is the truth, nothing but the truth?

   So. Please run along to the market get a sack of NaCl. Preferably IIOdized.

   Also, most of our ‘history’ of a ‘pure’ Tamil and Sangam literature, their ‘ancient nature’ etc are all built significantly on falsehoods; believe me, or not. NaCl notwithstanding. How can one, whose basics are falsehoods, run very far from the base?

   Also. Never trust Tamil bloggers and their random chest-thumping whether about Cholas or Baturas or Books. Please.

   Caveat emptor.

 2. dagalti Says:

  கொந்தகைத் தாழி உறைந்திடும் மூத்தவன்
  அந்தகன் ஆனானே ஆரியர்க்கு – குந்தகம்
  செய்து சழக்கர்கள் சாய்த்த மரபணு
  உய்த வருகுது பார்

  https://www.hindutamil.in/news/tamilnadu/662608-human-skeleton.html


  • //கொந்தகையில் நேற்று ஒரு முதுமக்கள்தாழி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மனித எலும்புக்கூடு சிதைந்து காணப்பட்டது. இதையடுத்து எலும்புக்கூடு ஆணா? பெண்ணா? என்பதை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

   எலும்புக்கூடுகளில் ஆண் பெண்? என்ன டமிள் இது?

   அது ஒரு புறமிருக்க பொதுயுகத்திற்குப் பின்பும் தமிழகத்தின் பலபாகங்களில் பெரும்கற்காலம் தொடர்ந்திருக்கிறது.

   ஆனால் மரபுணு கிரபணு எனக் கொஞ்சகாலம், இந்தச் சழக்கர்கள் உருட்டலாம் என்பது உண்மைதான்.

 3. RC Says:

  அன்பு ஐயா,
  ‘குமரித்துறைவி’ படித்தேன்.ஒரு நல்ல நாவலாக கைகூடி வந்திருப்பதாகத்தான் நினைக்கிறேன்.
  நீங்கள் மேலே சொன்னபடியான தகுதிகளும்,இதிலும்+ முன்னர் பல பதிவுகளிலும் உணர்த்தப்பட்ட தரக்கட்டுப்பாடுகளும் என்னிடம் இல்லாததும் எனக்கு பிடித்ததற்கு காரணமாக இருக்கலாம்.

  நான் திறனாய்வாளன் அல்ல, இருந்தும் தங்கள் ரேட்கார்ட் பார்த்த தருமியானதால் ..(வங்கி எண்/UPIID பின்னர் தெரிவிக்கிறேன் :-)

  இன்று மதுரை மீனாட்சி -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்.
  பன்னெடுங்காலமாக நடக்கும் சடங்கு, ஒரு நாவலாக விரிக்க ஜெயமோகனால் முடித்திருக்கிறது.
  ஒரு சடங்கு உருவாகி வருவதை இன்றைய நவீன மனம் (மார்க்சிய சாய்வுள்ள) எப்படி கதையாக எழுத முடியும் என்பதாகவே நான் பார்க்கிறேன்.நாஞ்சில்-நெல்லை பகுதியை அறிந்தவர்களுக்கு அவரின் பகுதி சார்ந்த விவரணைகள் அணுக்கமாகவே இருந்தன.பல்வேறு குலங்கள் கோவில் சார்ந்த இந்நிகழ்வில் பங்குபெறுவதை இணைத்துள்ள விதமும் எனக்கு பிடித்தது (இதற்காகவே அவர் கரித்துக்கொட்டப்படவும் கூடும்) . அப்பகுதி கோவில்களில் விட்டுப்போனது ‘குமரக்கோவில் முருகன்’ தான்.

  இடறிய இடங்கள் ..
  #விவரணைகள் சில இடங்களில் திரும்ப வருகின்றன.
  #கதையில் நடக்கும் அரசியல் சம்பாஷணைகள் இன்றைய நவீன மனநிலைக்கு ஒத்து இருக்கின்றன.
  #தகவல் பிழைகள் + மேல்மட்டத்திலேயே கதை நகர்வது போல் தெரிகிறது. குலங்களின் விவரணைகள் இன்னும் சேர்க்கப்பட்டு இருக்கலாமே என்ற கருத்துண்டு.
  #புனைவுகளை ஒப்புநோக்குதல் சரியான வாசிப்பு அல்ல என்றும் படித்திருக்கிறேன், இருந்தும் மனதில் தோன்றியதை எழுதுகிறேன். இந்நாவல் படிக்கும் பொழுதே, சில இடங்கள் ஜெயமோகனின் முந்தைய சிறுகதைகளை நினைவுப்படுத்தியது. (இவை வேவேறு காலங்களில் வந்தவை)
  1) கதைசொல்லி சிறமடம் நம்பூதிரியை சந்திக்கும் இடம் அவரின் ‘திரை’ சிறுகதையையும் (தாயுமானஸ்வாமியை சந்திக்க ஒற்றன் செல்லும் இடம் https://www.jeyamohan.in/144838/)
  2) பிரதமனை ருசிக்கும் இடம் அவரின் ‘பிரதமன்’ சிறுகதையையும் (https://www.jeyamohan.in/113424/)
  3) பந்தல் நாடார் விவரணைகள் அவரின் ‘ஏழுநிலைப்பந்தல்’ சிறுகதையையும் (https://www.jeyamohan.in/29485/)

  மிகச்சிறந்த படைப்பாக வரவேண்டியது, ஒரு எடிட்டர் இல்லாததால் சோடையானது என்று சொல்லும் வாசகன் இல்லை நான். நீங்கள் அப்படி சொல்வதாகவும் எண்ணவில்லை. இது பொதுவாக தகவல் பிழைகள் ++ சார்ந்து ஜெயமோகன் படைப்புகள் மேல் சொல்லப்படும் எதிர்வினை, அதனால் குறிப்பிட நேர்ந்தது.
  அவருடைய அள்ளித்தெளிக்கும் வேகமே ஆச்சரியம் அளிப்பது. பலசமயங்களில் எனக்கு கோலமாகவே தெரிகிறது.
  புனைவு என்ற வகையில் என்னை ஏமாற்றவில்லை, அதுவே நான் சொல்ல வந்தது :-)


  • ஐயா, கோர்வையாகவும் ஆத்மார்த்தமாகவும் கருத்துகளைக் குறிப்பிட்டதற்கு நன்றி. நான் பதிவில் சொன்னதுபோலத் ‘தள்ளித் தள்ளித்’தான் அவர் குறு நாவலைப் படித்து(!) முடிக்க முடிந்தது. ஆகவே, அவர் மேலோட்டமாக ஒரு கதையை ஓட்டிக் கொண்டு போவதைப் போலத்தான் என்னால் அதிகபட்சம் அந்தக் கதையைக் குறித்து எழுதமுடியும் – ஆனால் அது தேவையுமில்லை, அலுப்பாகவும் இருக்கிறது.

   ஆனால் ஐயன்மீர்! நீங்கள், ஒழுங்குமரியாதையாக முழுகுறு நாவலையும் படித்தது மட்டுமல்லாமல், சிலபல முந்தைய ஆக்கங்கள் ‘ஞாபகம் வருதே’ என்ற அளவிலும் பகுத்தாய்வு பண்ணியிருக்கிறீர்கள்!  (ஆகவே உங்களுக்குத் தான் நான் பணம் அனுப்பவேண்டும் – ஆனால் மாட்டேன்!)

   எனக்குத் தகவல் பிழைகள் பெரிய விஷயமில்லை. அவை உறுத்தும் என்றாலும்கூட. (தருமு சிவராமு – நான் மிகமிகமிக மதிக்கும் கவிஞர் – உங்களுக்கும் சர்வ நிச்சயமாகத் தெரிந்திருக்கும் – அவருடைய சிலகவிதைகளில் தகவல் பிழைகள், ஐயகோ – ஆனால் அவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு அழகும் கவித்துவமும் அவருடைய கல்விச் செறுக்கு/இறுமாப்பும் மிளிரும்)

   ஆனாலும் நான் ஒரு ஸ்கூல்மாஸ்டர் அல்லன் என உணர்ந்திருக்கிறேன் – ஆகவே ‘பிள்ளைகளை மைண்ட்’ செய்யும் உத்தியோகத்தில் இல்லை என்பதையும்; புனைவுகள் என ஏகத்துக்கும் இறங்காதது என்னுடைய அட்வான்டெஜ். சும்மா சும்மா நொள்ளை சொல்வது எனக்குப் பிடிக்காது எனச் சொல்வது எனக்குப் பிடிக்கும்.

   தமிழ் எழுத்தாளர்களுக்குத் தலைவீக்கம் – அவர்கள் பொதுவாகவே எடிட்டிங் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என நேரடி அனுபவத்திலேயே அறிவேன் – ஆகவே அப்படியான கோரிக்கைகளை நான் வைக்கமாட்டேன். மேலும் நான் இந்த ஆக்கத்தைச் சரியாக, முழுமையாகப் படிக்கவுமில்லை.

   மற்றபடி, அவருடைய அசாத்தியமான எழுதித் தள்ளும்திறமை – இதனை நான் கிண்டலுக்காகச் சொல்லவில்லை – அதைக் கண்டு எனக்குப் பிரமிப்புத்தான். இருந்தாலும். ஜிபிடி-3 அல்லது இனிவரக்கூடும் ஜிபிடி இத்தியாதிகள் மூலம், ஒரு கணிநி நிரல் வழியாக, ஜெயமோகன் தரத்தில் மெஷின்கள் எழுதித் தள்ளும் காலம் வரும் என நினைக்கிறேன். (https://www.nytimes.com/2020/07/29/opinion/gpt-3-ai-automation.html?)

   நான் கிளினிகலாகப் படித்தது என் தவறாக/போதாமையாக இருக்கலாம். ஆனால், அதாவது ஆகவே – எனக்கு அது திருப்தி தரவில்லை. இதனை ஒருவருடத்திற்குப் பின், கொஞ்சம் குளிர்ந்தபின், மறுபடியும் படிக்க முயற்சிக்கவேண்டுமோ என்ன எழவோ.

   எது எப்படியோ.

   வரவர எனக்கு இந்தத் தற்காலத் தமிழ் அலக்கியமே  அதன் தரமின்மையும் அசிரத்தையும் பல மாமாங்கங்களாகப் பார்த்துக் கொண்டிருப்பதாலோ என்னவோ, மிக அலுப்பாக இருக்கிறது. பிற கலாச்சாரங்கள் சிலவற்றின் அற்புதமான எழுத்துகள் குறித்த, கொஞ்சம் பரவலான பரிச்சயம் (பாண்டித்தியம் அல்ல) இருப்பது, எனக்கு நிம்மதி தருவதாக இல்லை. அதனால்தாம் எனக்கு இலுப்பைப்பூமுதல்வாதம் அவ்வளவு உவப்பில்லை.

   குழந்தைத் தனம்தான், பொருத்திப் பார்க்கக்கூடாதுதான், ஒப்புக் கொள்கிறேன்.

   ஆனால், இவ்வளவுதான் நான். என்ன செய்ய.

   • bittercoffee Says:

    Sir,

    As amazing as GPT-3 is, this article from Douglas Hofstadter makes much more sense to me.

    https://www.theatlantic.com/technology/archive/2018/01/the-shallowness-of-google-translate/551570/

    (A different AI Engine, but still relevant, I hope)

    Our understanding of language is still not robust enough (?) to imitate a craftsman like Jeyamohan. Maybe it is just my naivete, but just wanted to add this to the conversation here.


   • Hey, you are a DH level bloke. I had read it, very nicely articulated and it was fascinating to see where DH and DCD converge and diverge.

    I adore DH more though.

    In a CUG, we had talked about this essay. Thanks for sharing it though. :-)

    OTOH, you seem to making an assumption about the ‘level of craft’ of our common target of admiration. I have some pratiloma views on that.

    Many moons back, I wrote a simple text generator (LISP, specifically MIT-Scheme) script to write like (no AI – simply feeding a stock of some words (in terms of adjectives, nouns etc etc – all in Tamil), word-sequences and some rules – nothing more nothing less) him to a reasonable success. It was a paragraph generator for a given context. I used a subset of the same rules, and some nonsense to physically write this: https://othisaivu.wordpress.com/2018/10/04/post-896/ – there are a few more in that genre on the blog)

    So, let us not please overestimate the capabilities of our target, at the same time, not underestimate either the capabilities of DH or a GPT-x, for that matter.

    bfn.

    “If my Coffee could talk to me, then ANYTHING is possible, Siree! It is just a question of Time, Kala or Yama if you will…”

   • bittercoffee Says:

    I understand your stance on Jeyamohan’s prowess. FWIW, I think he has written some amazing short stories, ( probably when he does not take himself too seriously) and for just those he will have my respect. He can also be very funny and I like that in authors. YMMV, of course.

    GPT-3 can definitely mimic the prose, but I am curious to know your thoughts on whether it can replicate creativity/bouts of randomness that arises from living minds. From what I understand of the literature, it doesn’t seem to be the case. I am just a student and of course there might be abysses in my understanding of the literature on this. Borge’s short story ‘Library of Babel’ comes to mind.

    Also, I am sure you might have seen this already, but putting this here in case anyone else is interested; a link to an online Library of Babel based on Borges’ short story.

    https://libraryofbabel.info/

    Your link was hilarious. Sounds like a fun project.

 4. Kannan Says:

  Never heard of GPT, really fascinating, thanks to Aasaan…grr you for the info.

  I’ll throw in some கேட்டியளா,கேக்குதியளா, வாம்லே, போம்லே and create my magnum opus.

  Wish me luck.


  • Sir, you are well on your way. 🙏🏿

   Actually, to ‘Write like Jeyamohan’ – or for that matter some other bloke – one needs no freakin’ GPT.

   However. I have no hesitation in admitting that he is THE best among the lot, but to suffer them all, is our lot.

   First you need to look for the basic cliched terms (build up a vocab) and then the patterns of them strung together and then target them for a context – with a bunch of simple rules.

   Good luck and “May a zillion Tamil avant-garde litterateurs grow like Fungi!” 💪🏿

   In the meantime, we shall also create, ‘Machine reading Vasagar’ 🐃 types and write ‘Letters to Agony-uncle’ in the same mechanical way.

   Ha. 🙆🏾‍♂️

 5. Kannan Says:

  No problem, I will add மாஸ்டர், தகவல் பொறுக்கிகள், நான் விஞ்ஞானி அல்ல to the mix and crank the settings to ‘Extra Mandai Vali’ and see what happens.


  • ஆ! 🙏🏿👌🏿

   பெரும்பேராசானின் மூத்தபெரும்பேராசானே!

   வாழ்த்த வயதிருக்கிறது, வாழ்த்தியும் தொலைக்கிறேன்!

   ணந்ரீ.

 6. KMuthuramakrishnan Says:

  குமரித்துறைவி -திருத்தங்கள்
  ஆசானே சில திருத்தங்கள் செய்துள்ளார், இன்று


  • என்னமோடாப்பா! கலிகாலத்துல விபரீதத்துக்கு மேல விபரீதம்தான்!!

   (ஆனால், இந்தத் தூண்டிலுக்கு நான் சிக்குவதாக இல்லை, நன்றி>


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s