எஸ்ராமகிருஷ்ணன் எனும் தண்டக்கருமாந்திரம் சகல துறைகளிலும், ஜனநாயகச் சமதர்மத்துடன் அட்ச்சிவுடுவது எப்படி

June 22, 2019

இப்படித்தான்!

அதிசராசரி எஸ்ராமகிருஷ்ணனின் சராசரிக் காட்டுரை ஃபார்முலா = விக்கீபீடியாவை நக்கீபீடியா + காணாததைக் கண்டதுபோல கண்டமேனிக்கும் மேய்ந்து பகிரங்கமான வெட்டிஒட்டல் + மானேதேனே + தப்பும்தவறுமான தமிழ் + தப்புத்தாள முழிபெயர்ப்பு ​+ நெகிழ்வாலஜி + ங்கொம்மாள எத்கெட்த்தாலும் ‘வொலக’ மஸாலா சேத்துக்குங்டா + சொந்தச் சரக்கான வடிகட்டிய உளறல்.

நன்றி.

இம்மாதிரி அலக்கியக் காரர்களை என்ன செய்தால் தகும், ஹ்ம்ம்??

ஒருமுறை இருமுறை குளறுபடி என்றால் பரவாயில்லை – ஆனால் தோலின் தடிமன் அநியாயத்துக்கு இவ்ளோ அதிகமாகவா இருக்கும், சொல்லுங்கள்? தொடர்ந்து படுமோசமான ரெவலில் இப்படியேதான் வாழ்நாளெல்லாம் இருப்பேன் என இப்படியா ஒரு அலக்கியக்காரன் அழிச்சாட்டியம் செய்வான்?

கொஞ்சமானாச்சிக்கும் சூடுசொரணை வேண்டாமா?

ஆனால், இவர்கள் பின்னாலும் ஒரு அப்பாவி இளைஞ + கூறுகெட்ட முதியோர் காக்காய்க் கூட்டம் இருக்கிறதே!

-0-0-0-0-

இப்போதைய பிரச்சினை என்னவென்றால் இந்தத் தகத்தகாய தக எழுதியிருக்கும் காட்டுரை.

இதில் ஒவியர் (இன்னபிற) பீடர் ப்ரூகெல் அவர்களின் ‘Hunters in the Snow’ சித்திரத்தை முன்வைத்துக் கொடுங்கதையாடல். எனக்கு இது தேவையா?

ஆனால் எனக்கு இது என்ன பெரிய பிரச்சினை? நம் அலக்கியக் காரர்களின் லட்சணம் நமக்குத் தெரியாதா என்ன?

என் சிடுக்கல் என்னவென்றால் 2008-9 வருடத்தில் என் 9-10ஆம் வகுப்புப் பிள்ளைகளுக்கு சிலபல டாக்குமெண்டரிகளை வைத்து மூன்றரை மாதங்கள், எனக்குப் புரிபட்ட வகையில் ‘கலையைத் துய்ப்பது எப்படி’ எனும் வகையில் ஸீரியல் வகுப்பு எழவு ஒன்றை நடத்தியிருக்கிறேன். இது, மொத்தம் சுமார் 30 மணி நேரம் நடந்திருக்கலாம் எனவொரு அனுமானம். குறைந்த பட்சம் 120 மணி நேரங்களாவது இந்த வகுப்புகளுக்கான என் ஹோம்வர்க் எழவாக ஆனந்தமாகவே செலவழித்திருப்பேன்.

அதில் எனக்கு உதவியவை:

இதன் தொடர்பாகவும், முன்னமே சிறிதளவு பரிச்சயம் இருந்தாலும் (மகாமகோ வெங்கட் சாமிநாதன் அவர்களுடைய 1970-80வருடக் கட்டுரைகள் கொடுத்த உந்துதல்களுக்கு நன்றியுடன்) சுமார் 60 உலகளாவிய கலைஞர்களை எனக்கும் என் பிள்ளைகளுக்கும் ஒரளவு சரியாகவும் சுருக்கமாகவும் அறிமுகப் படுத்திக் கொண்டேன் – இதில் இந்த எழவெடுத்த குப்பைமினுக்கலாளரான எம் எஃப் ஹூஸ்ஸைய்ன் உட்பட, மிகமிகைமதிப்பு கொடுக்கப்படும் சிலபல எதிர்மறை  உதாரண இந்தியர்களும் அடக்கம்.

பீடர் ப்ரூகெல் அவர்களும் அந்த ஜாபிதாவில் இருந்தார். அவருடைய பல ஓவியங்களையும் செதுக்கல்களையும் பார்த்தோம். விவாதித்தோம். இந்த ‘பனியில் வேட்டைக்காரர்கள்’ சித்திரத்தையும் தான்.

இதனால்தான் பிரச்சினை. எனக்குப் பிடித்த ஒரு ஓவியத்தின்மீது இப்படியா சாணிவிட்டெறிவார்கள்?

சுமார் 8எம்பி அளவுள்ள நல்ல/தரமான படம் – விக்கிபீடியாவிலிருந்து

ஏற்கனவெ நமக்கு வாய்த்திருக்கும் இந்திரன் போன்ற கலைக்கொலை விமர்சகர்கள் போதமாட்டார்களா?

இங்கும் என் செல்ல எஸ்ரா வந்து ஏன் ஒட்டுகேஜ் அடிக்கிறார்? சுழன்று சுழன்று ஸிக்ஸர் ஸிக்ஸராக அட்ச்சித் தள்ளுகிறார்? சோகம்!

-0-0-0-0-

// பீட்டர் புரூகல் வரைந்த “தி ஹண்டர்ஸ் இன் தி ஸ்னோ,” உலகப்புகழ் பெற்ற ஓவியம்.

முதலில் சித்திரத்தின் தலைப்பு – இந்த ‘Hunters in the Snow’ என்பதே பீடர் அவர்கள் கொடுத்த தலைப்பல்ல. எஸ்ரா போன்ற மேலான ‘களை விமர்சகர்கள்’ பின்னாட்களில் (சிந்துசமவெளி நாகரீகத்தின் சிலபல கலைப்பொருட்களுக்கு வாய்க்கு வந்ததுபோல நம் அகழ்வாலஜிஸ்ட்கள் ‘ப்ரீஸ்ட் கிங்’ ‘டேன்ஸிங் கேர்ல்’ என்று பெயர் கொடுத்ததுபோலத்தான்!) கொடுத்தது.

// இந்த ஓவியத்தின் தனிச்சிறப்பு வேட்டைக்காரர்கள் வீடு திரும்பும் பனிக்காலக் காட்சியை மிகத்துல்லியமாகப் புரூகல் வரைந்திருப்பதே.

அவர் சித்திரத்தின் குவியம் எஸ்ரா பெனாத்துவது போல, வேட்டைக்காரர்கள் இல்லை. இன்னாங்கடா இது?

பீடர் அவர்கள் அதில் ஜனவரிமாதம் போன்ற சூழலில் இருக்கும் ஒரு நிலப்பரப்பைக் கற்பனை செய்திருக்கிறார் – நிறைய சிறுவிவரணைகளுடன், காலத்துக்கேற்ற நிறங்களுடன். அவ்ளோதான்.  இந்தச் சித்திரவரிசையே விதம்விதமாக நிலப்பரப்புகள்/இயற்கைச் சித்திரங்கள் மாறுவதுகுறித்துத்தான்!

சும்மா, பெரீய்ய கலைவள்ளுவர் போலத் துல்லியம் ஜல்லியம் தனித்துவம் தனிச்சிறப்பு தோற்செருப்பு என்று அட்ச்சிவுடுவது லேசு!

// நிக்கலாஸ் ஜோங்ஷெக் என்ற பிரபுவிற்காகப் புரூகல் பனிரெண்டு மாதங்களையும் பனிரெண்டு ஓவியங்களாக வரைந்து தருவதாக ஒத்துக் கொண்டிருந்தார்.

இல்லை. இது தவறு. ஆறு சித்திரங்களைத் தான் வரைந்தார், அதற்குத்தான் ஒப்புக்கொண்டார் – அதாவது இரு  இருமாதங்களை ஒன்று சேர்த்து வரைந்தார். (ஆனால் சில எஸ்ரா தர விக்கீபீடிய வரைகலைவரலாற்றாளர்கள்(!) 12 வரைந்திருக்கலாம் என இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்! வெள்ளைக்கார தண்டக்கருமாந்திரங்கள்!)

// மரக்கிளையில் அமர்ந்துள்ள காகம்.

‘காகம்’ என்று எப்படித் தைரியமாகச் சொல்கிறார்? :-) ஏனெனில் ஐயா, அவருக்கு பறப்பதுவெல்லாம் காகம் தான். அதுதான் நம் எஸ்ராவின் காகத்தனித்துவம். காகத்வைதம். ஆதலினால் காகம் செய்வீர். எவ்வளவு காகங்களை எஸ்ரா பார்த்திருப்பார்! எவ்ளோ காகங்கள் எஸ்ராவைப் பார்த்து என்னைப் பற்றியும் எழுது என மௌனமாகக் கெஞ்சி காக்கா பிடித்திருக்கும், சொல்லுங்கள்?

காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டுவா. குர்வீ குர்வீ காதுக்கு பூ கொண்டுவா… …

சரி. மரக்கிளைகளில் மொத்தம் எட்டு பறவைகள் – எண்ணிப்பார்த்துக்கொள்ளுங்கள். ஒன்று பறந்து செல்கிறது. இதில் ஒன்று கூட காகம் இல்லை. அவை, குறைந்த பட்சம், மூன்று பிறவகைப் பறவைகள்.

இதைத் தவிர அவர் எந்தக் கிளையைக் குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. அது கைக்கிளையோ? அல்லது சைக்கிளையா? தேவுடா!

‘ஹவுஸ்’ காக்கைகளும், ரேவன்களும் எப்படி எங்கு எப்போது ஹாலந்திற்கு வந்தன, எங்கு வசிக்கின்றன அவைகளை இந்த ப்ரூகெல் வரைந்திருக்கக்கூடுமா, சித்திரத்தில் உள்ள பறவைகள் யாவை… … என ஒரு மசுரு கேள்வியும் இல்லை!

மாறாக, தன் சுவற்றில் மாட்டிருக்கும் சித்திரத்தைப் பார்த்துவிட்டு வெளியேவந்து அண்ணாந்து பார்த்தால்,

“ஒரு அலுமினியக் காக்கா மல்லாக்கப் பறந்துகொண்டு மீனம்பாக்கத்தில் தனித்துவத்துடன் சிறகடிக்காமல் கவித்துவமாகக் கவிந்து இறங்குகிறது!”

போங்கடா போங்காட்டக்காரனுங்களா!

// இன்று புரூகல் வரைந்த எல்லா ஓவியங்களும் கிடைக்கவில்லை. ஐந்து ஓவியங்கள் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளன.

உளறல். அவர் வரைந்த ~நாற்பது சித்திரங்கள் இப்போது அருங்காட்சியகங்களில் காணக் கிடைக்கின்றன. ஸீஸன்ஸ்/பருவகாலங்கள் வரிசையில் வரைந்த ஆறு சித்திரங்களில், ஐந்து மட்டும்தான் கிடைத்திருக்கின்றன.  கீழுள்ள (முழுமையற்ற விக்கீபீடிய) ஜாபிதாவில் குறைந்த பட்சம் முப்பது உள்ளன.

// நெதர்லாந்தின் புகழ்பெற்ற நிலக்காட்சி ஓவியராகக் கொண்டாடப்பட்டவர் புரூகல். இந்த ஓவியம் அதற்கான சாட்சியம் என்றே சொல்வேன்.

இவர் பெரீய்ய ஜட்ஜ் ஐயா! பெருஸ்ஸா சாட்சியம் கொடுக்றாரு!

என்ன உளறல். இந்தச் சித்திரத்துக்கும் நெதர்லாண்ட்/ஹாலண்டுக்கும் தொடர்பில்லை; சித்திரத்திலுள்ளவை போன்ற பனிபடர்ந்த கோணாமாணா மலைகள் அங்குச் சுத்தமாகவே இல்லை – கணிசமான நிலப்பரப்பு கடலுயரத்தை விடத் தாழ்ந்த பிரதேசம்வேறு. ஜெயமோகனுக்குப் பிடித்தது போலத் தட்டையான நிலப்பாங்கு.

அந்தச் சித்திரத்தில் ப்ரூகெல், பிற நாடுகளில் தான் பார்த்த பல நிலப்பரப்புகளையும் இயற்கைச் சூழல்களையும் கலந்துகட்டி வரைந்திருக்கிறார்.

முன்னமே சொன்னதுபோல – அவருடைய சித்திரவரிசையின் குவியம் ஹாலண்ட் அல்ல.

// ஓவியத்தைக் காணும் போது குளிரின் அடர்த்தியை நாம் உணருகிறோம். காகங்களின் சிறகடிப்பையும், அதன் சிறகடிக்கும் ஓசையும் கூடக் கேட்கிறோம்.

அடேங்கப்பா! ஒரேயொரு பறவைதான் பறந்துகொண்டிருக்கிறது. (ஆனால், என் செல்ல எஸ்ராவுக்கு அது ‘பல‘ காகங்கள், சிறகடிப்பு விகசிப்புகள்!)

படத்தைப் பாருங்கள் அது காக்காவா?

ஸாஹித்ய விருது வாங்க அவர் பிடித்திருக்கக்கூடுவது போலவா இது இருக்கிறது??

அதற்குமேல் ‘குளிரின் அடர்த்தி‘ தொடர்ந்து – திடுதிப்பென்று பன்மையாகிவிட்ட ‘காகங்களின் சிறகடிப்பையும், அதன் சிறகடிக்கும் ஓசை‘… …

ஐயய்யோ!

என் ஜட்டி நெகிழ்ந்து கீழே வீழ்ந்துவிட்டதே, நான் என்ன செய்வேன்!

// தூரத்து மனிதர்களின் காலடிச்சப்தம் உறைந்து போயுள்ளது. நாய்களின் முகம் துல்லியமாக வரையப்படவில்லை. ஆனால் நாய்களின் உடல் அவை வேட்டையாடி திரும்பிய களைப்பில் இருப்பதை உணர்த்துகின்றன.

இனம்புரியாத நெகிழ்வாலஜிக்கு அளவேயில்லை, போங்கள்!

// நாய்களின் வால்களைப் பாருங்கள். அவை தாழ்ந்திருக்கின்றன.

ஆ! மொத்தம் சுமார் 13 போல இருக்கும் நாய்களில் 7 நாய்களுக்கு வால் நிமிர்ந்திருக்கிறதே!

டேய் நாய்களா! எஸ்ரா பேச்சைக் கொட்டுக்கொண்டு சமர்த்தாக அனைவரும் வாலைத் தாழ்த்தவும், சரியா? இல்லாக்காட்டி, பிஸ்கெட்டு கிடைக்காது!

// நெதர்லாந்தின் பனிக்காலக்காட்சியை ஒவியம் முழுமையாகச் சித்தரிக்கிறது.

எஸ்ரா ஐயா, நெகிழ்வாலஜிக்கு அப்பாற்பட்டு நெதர்லாந்து விற்பன்னரும்கூட!

ஆனால் வருத்ததுக்குரிய வகையில், ப்ரூகெல்லோ கலைவிமர்சகர்களோ அப்படிச் சொல்லாமல் – அது பல நாட்டுக் குளிர்கால நிலப்பரப்புகளின் ஒரு கலவை என்கிறார்கள்/குறிப்பிடுகிறார்கள். ஆனால் தமிழலக்கிய ஸாஹித்ய அகாடம்மி எஸ்ரா இதனை ஒப்புக்கொள்ளமாட்டேனென்கிறார். என்ன செய்வது சொல்லுங்கள்! அவர் கோனார் நோட்ஸ் அளிக்கும் விதமே தனி!

// மரங்களில் இலைகளே இல்லை.

இத்தனைக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில் அது பனிக்காலம். இலைகளெல்லாம் அபூர்வமாக உதிர்ந்துவிடும் பருவம். ஆச்சரியமோ ஆச்சரியம்!

ஆனால், நாய்களுக்கு வால்கள் இருக்கின்றன. இது இன்னொரு ஆச்சரியம் அன்றோ!

இதைவிட ஆச்சரியப்படத்தக்க வகையில் நாய்களுக்குக் கொம்புகளே இல்லை!

// வேட்டைக்காரர்களின் அருகில் நெருப்பில் சோளம் சுடுகிறவர்கள் வேட்டைக்காரர்களைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

ஆனால் ஐயா எஸ்ரா! அவர்கள் ஏதோ கொத்துப்புரோட்டா செய்வது போலல்லவா தெரிகிறது?

உண்மையில், அவர்கள் பன்றியை ரோஸ்ட்/ஸிஞ்ச் செய்து வாட்டத் தேவையான தணலை/நெருப்பைத் தயார் செய்துகொண்டிருக்கிறார்கள். அந்தக் காலங்களில், டிஸெம்பர் மாதவாக்கில் ஐரோப்பியக் குளிர்ப்பிரதேசங்களில் வழமையான ஒரு சடங்கு போல நடந்தது அது.

எங்கிருந்துதான் அந்தச் சோளம் விஷயத்தைப் பிடித்தாரோ!

சென்னை மரீனா கடற்கரை சோளம்வறுப்பாளர்கள் செய்த விஷயதானமோ இது?

// அவர்கள் கையிலுள்ள குத்தீட்டி பெரிய வேட்டையைத் தேடி அவர்கள் போனதை அடையாளப்படுத்துகிறது.

அதேபோல அவர்கள் கால்சராய் போட்டுக்கொண்டிருப்பது உள்ளே கோமணமும் இருக்கலாம் என்பதை அடையாளப்படுத்தி எடுக்கிறது. நன்றி!

// இந்த ஓவியத்தின் நகல் பிரதி ஒன்றை என் வீட்டின் ஹாலில் மாட்டி வைத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இந்த ஓவியத்தை பத்து நிமிடமாவது பார்ப்பேன். பனிக்காட்சியின் மீதான வியப்பு மாறவேயில்லை.

தோ பார்றா!

ஒவ்வொரு நாளும் பத்து நிமிடம் வீதம் (ஒருவருடத்தில் 3650 நிமிடங்கள், முப்பது வருடங்கள் இதனை வெறித்தனமாக வெறித்துப் பார்த்திருந்தால் 109,500 நிமிடங்கள், அதாவது  1825 மணி நேரங்கள்!) பார்த்தே எவ்வளவு ‘காகங்கள்’ இருக்கின்றன, பறக்கின்றன எனத் தெரியாத அனுபூதி நிலை நம்மாளுக்கு! என்ன உழைப்போதியுழைப்பு! வியப்போதி வியப்பு!

என்ன எழவோ!!

ஆனால், எஸ்ரா அண்ணன்தம்பீ, பீலா விடுவதில் எந்தக் குறைவுமே வைக்கவில்லை! வைக்கப்போவதுமில்லை! சோம்பேறித்தனமும் டகீல் பொய்களும் அசட்டைத்தனமான குண்டுதைரியமும்தான் அவருடைய மூலதனங்கள்! நன்றி!

ஒரு சிறு கட்டுரையை நேர்மையாக எழுதத் தெரியவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கில் தொடர்ந்து நெகிழ்வாலஜிக் காட்டுரைகள்! கார்கீ டால்டாடப்பா என அட்ச்சுவுடல் பொய்மைகள். தேவையா?

அவர் இருக்கும் திக்கில் காறித்துப்பக்கூடத் தகுதியை அவர் வளர்த்திக்கொள்ளவில்லை.  இந்த அழகில், இந்த அரெகொறே ஆசாமியெல்லாம் அலக்கியம் பண்ணி அதற்கு ஒரு சக்களத்திய டம்மி விருதுவேறு!

சோகம்!

-0-0-0-0-0-

என்னுடைய மண்டையையும் அதற்கு ஒத்தியைபாக ஒலிக்கும் இன்னொரு உடற்பாகத்தையும் குடையும் அடிப்படைக் கேள்விகள்:

ஒர்ரு மசுரும் தெரியாத, தெரிந்துகொள்ள முடியாத, அடிப்படைத் தகுதியற்றவர்களாக இருந்தாலும் தமக்கு ஸ்னானப் ப்ராப்தியற்ற விஷயங்கள் அனைத்திலும் உள்ளீடற்று அட்ச்சுவுடும் பண்புள்ளவர்களாக மட்டுமே, நம் தமிழின் அனைத்து அலக்கியவாதிகளும் இருக்கிறார்களே? இது ஏன்??

இதன் ஊற்றுக்கண் என்ன? நாம் ஏன் இப்படியாகிவிட்டோம்? குறுந்தொகை, கம்பராமாயணம் போன்ற உன்னதங்களையெல்லாம் ஒருகாலத்தில் உருவாக்கியிருக்கும் நம் தமிழகத்திலா இப்படியொரு சராசரித்தனமான மௌடீக காப்பிக்கடை அராஜகம்?

இம்மாதிரிக் கழிசடைக் கோமாளிகள்தாம் நம் போற்றத்தக்க இலக்கியவாதிகள் எனும் சோகநிலையை ஆனந்தமாக ஒப்புக்கொண்டு, புளகாங்கிதத்துடன் அவர்களை நம் மண்டைகளில் தூக்கிவைத்து நடனமாடும் அளவுக்கு, பாவப்பட்ட வாசகர்களாகிய நாம் ஏன் காயடிக்கப் பட்டுவிட்டோம்?

மெய்யாலுமே கேட்கிறேன். :-(

நம், தற்கால நக்கீரர்கள் எங்கே?

-0-0-0-0-

பின்குறிப்பு: அடுத்தது தகத்தகாய தக சாருநிவேதிதா; அத்துடன் இச்சுற்று, எனக்கு முற்றிவிட்டதால் முற்றும். :-(

17 Responses to “எஸ்ராமகிருஷ்ணன் எனும் தண்டக்கருமாந்திரம் சகல துறைகளிலும், ஜனநாயகச் சமதர்மத்துடன் அட்ச்சிவுடுவது எப்படி”

  1. RANGANATHAN's avatar RANGANATHAN Says:

    SIR

    Tamizh moovarudan naalamavar endra pattathai ungalukku
    alikkiren.
    Ranganathan, VIZAG.


    • ஏன்? நால்வரும் சேர்ந்து தமிழ் அலக்கியப்பிணம் செம்பிணத்தைத் தூக்கிப் போகவா??

      நான் அந்தக் கும்பலில் இல்லை. மன்னிக்கவும். அடியேன் – வெறும், தரத்தை நாடும் வாசகன் மட்டுமே.

      மேலும் – பொய்பொய்யாகக் கண்டதைப் பற்றியும், முக்கியமாக எனக்குத் தெரியாத விஷயங்களையும் தெரிந்ததாகக் காட்டிக்கொண்டு மினுக்கவேண்டிய அவசியமேயில்லை எனக்கு!

      நன்றி!

  2. :-)'s avatar :-) Says:

    ஜெயகாந்தன் இன்றும் இருக்கிறார். என்றும் இருப்பார். அவர் மலை. மலைக்குத் திணிவும், பொருண்மையும், சாரமும், இடமும்,இருப்பும்,வரலாறும் உண்டு, காலப் புழுதி கரைத்தழித்த அந்த பரிதாபதுக்குரியவர்களின் முகவரி யாருக்கு இங்கே தெரியும்? ஜெயகாந்தன் எனும் பெயருக்கு பதில் இன்று அந்த பத்திக்குக் கீழே ஜெயமோகன் என்று போட்டுக் கொள்ளலாம். ஜெயகாந்தன் அன்று எந்தச் சிகரமாக நின்று எதை சொல்லிக் கொண்டிருந்தாரோ, அதையே இன்று அதே சிகரமாக நின்று ஜெயமோகனும் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அரை நூற்றாண்டு கடந்த பின்னாலும், காலத்தின் முன்னால் ‘நான்’ என்ற படைப்பாளியின் தன்னிலை நிமிர்வு, காலம் கடந்தபின்னும் வாழும் அத்தகு எழுத்தாளனின் சொல், இதற்கு எதிராக எழும் ஓலம், அந்த ஓலத்தைக் கரைத்தழிக்கக் காத்திருக்கும் காலப்புழுதி,…. எதுவுமே மாறவில்லை . :)


    • இது என்ன மசுர்? முன்னேபின்னேயில்லாத உளறிக்கொட்டல். ஏன் ஜெயகாந்தன் பற்றி இங்கே குறிப்பிடுகிறீர்கள்? அவருக்கும் இந்தப் பதிவின் நாயகனான தண்டக்கருமாந்திர எஸ்ராவுக்கும் எட்டு ஏணி வைத்தால்கூட எட்டுமா? ங்கொம்மாள

      அந்தத் தண்டத்தையே விடுங்கள் – வேறு எந்த தற்கால அலக்கியக்காரனும் ஜெயகாந்தன் கிட்டவே வரமுடியாது, எதற்கு இங்குபோய் வந்து தேவையேயில்லாமல் ஜெயமோகன் புகழ் பாடுகிறீர்கள்? யார் ஓலம் இடுகிறார்கள்? நானா? இன்னாங்கடா சொல்ல வர்ரீங்க?

      அதுவும் திணிவு பொருண்மை என ஒரே உளறலையே வேறுவார்த்தைகளில் உளறல்! என்ன குப்பை! அது என்ன ‘பத்தி?’

      முதலில் நாலுவார்த்தைகளைக் கோர்த்து ஜால்ராவில்லாமல் அர்த்தமுள்ளதாய் எழுதப் பழகிக்கொள்ளுங்கள்.

  3. Kannan's avatar Kannan Says:

    Cut ‘N’ pasted from Aasan’s blog, written by ‘iniya bayam’.

    Piece.

  4. Swami's avatar Swami Says:

    மத்தவற்றை எல்லாம் விடுங்கள்
    முதலில் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லவும்

    புளித்த மாவு ஜெயகாந்தனுக்கு விற்க பட்டிருந்தால் அவர் என்ன செய்திருப்பார்?

    இதற்க்கு ஜென் தத்துவம் என்ன சொல்கிறது?
    இது இந்திய ஞான மரபின் எந்த தரிசனத்தில் அடங்கும்?
    அத்தனை தரிசனங்களும் அறிந்த ஆசான் புளித்த மாவு பற்றிய தரிசனத்தை எங்கு கோட்டை விட்டார்?


    • முதலாவதாக: https://www.amazon.in/What-If-Randall-Munroe/dp/1848549563

      இரண்டாவதாக: ‘நான் அந்தப் புளித்தமாவை என்றோ நதியோரத்தில் இறக்கியாகிவிட்டது.’

      மூன்றாவதாக: சீச்சீ! அந்த மாவு புளிக்கும். அந்த மாவ சேது(க்காதீ)ங் கோ!

      இப்படிக்கு,

      மரமேறி மாங்கா பறிக்கும் மருவாதிக்குரிய மண்ணாங்கட்டி மாஜி-கம்யூனிஸ்ட் மாவோ

      “ஸூடா ஒரு ப்ளேட் எஸ்ரா சைனீஸ் ஜென் நூட்ல்ஸ் கொண்ட்வாபா! அப்பால மாங்கா சாறு நிவேதித்தா, ஸர்யா?”

  5. A.Seshagiri's avatar A.Seshagiri Says:

    பாவம் ! அவர் இந்தமாதிரி ஒரு இலக்கிய (அலக்கிய அல்ல)வாசகர் தன்னுடைய கட்டுரையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்வார் என்று கனவிலும் நினைத்து பார்த்திருக்கமாட்டார்!.ஒரு ‘Flow’ ல் அந்த ஓவியத்தை தினமும் பத்து நிமிடம் பார்ப்பேன் என்று எழுதினதற்காக இப்படியா “கணக்குப் பண்ணி” ஈவு இரக்கமில்லாமல் அடித்து துவைப்பது!!!


    • இப்படியா எஸ்ராமகிருஷ்ண சோளனுக்கு வக்காலத்து வாங்குவது?

      யோவ் சேஷூ! இதெல்லாம் நல்லாவேயில்லே, சொல்லிப்புட்டேன்!

      • A. Seshagiri's avatar A. Seshagiri Says:

        ஐய்யய்யோ! இராமகிருஷ்ண சோளனா? நான் இந்த ஆட்டத்துக்கு வரலை!

  6. dagalti's avatar dagalti Says:

    சிரமகிருஷ்ணன் என்றும் பாடம்


Leave a Reply to Swami Cancel reply

Your email address will not be published. Required fields are marked *