நாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (1/3)
April 17, 2019
கடந்த பத்து நாட்களாக, தேர்தல் தொடர்பாக வாக்குசேகரம் செய்கிறேனென்ற பெயரில், சமயம் வாய்க்கும்போதெல்லாம் கொஞ்சம் (=முட்டாக்கூ தன்னார்வலத்தனமாக) அலைந்துகொண்டிருக்கிறேன். பெரிதாகச் சொல்லிப் பெருமைப் பட்டுக்கொள்ள, விகசிக்க ஒன்றுமில்லை – ஆனால், சில கள-அனுபவங்கள் குறித்த சிலபல ரணகளச் சிந்தனைகளும் பாரதத்தின் காத்திரமான எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கைகளும், தற்காலத்தின் கோலத்தை நினைத்து வருத்தங்களும் – என் மண்டையை ஏகத்துக்கும் குடைந்துகொண்டிருக்கின்றன. நாளை என்பகுதியில் வாக்குப்பதிவுவேறு – அதனால் கொஞ்சம் அவகாசம் கிட்டியிருக்கிறது.
…எனக்குப் பிடித்தமான கேப்டன் ஃபன்டாஸ்டிக் திரைப்பட வசனத்தில் வருவதைப் போல:
“If you assume that there is no hope, you guarantee that there will be no hope. If you assume that there is an instinct for freedom, that there are opportunities to change things, then there is a possibility that you can contribute to making a better world.”
ஆகவே.
…லோக்சபா/நாடாளுமன்றத் தேர்தல் வகையில் – கடந்த நான்கு முறைகளாக மும்முரமாகக் கொஞ்சம் தீவிரத்துடன் ‘தேர்தல் பணி’ செய்துள்ள எனக்கு – இரண்டு போக்குகள் தென்படுகின்றன:
அ) இந்தத் தேர்தல் ஒருமாதிரி, கலாச்சாரங்களினிடையே போர் என்கிற அளவில் விரிந்திருக்கிறது.
“Early in life I had noticed that no event is ever correctly reported in a newspaper, but in Spain, for the first time, I saw newspaper reports which did not bear any relation to the facts, not even the relationship which is implied in an ordinary lie…. This kind of thing is frightening to me, because it often gives me the feeling that the very concept of objective truth is fading out of the world.”
–George Orwell (1936)
பாஜக கூட்டணி/நரேந்த்ரமோதிக்கு எதிராகத் திரண்டிருக்கும் பேடிகளின் கூட்டம் அதலபாதாளத்தில் இறங்கி என்னவெல்லாம் பொய்மைப் பரப்புரைகளில் ஈடுபடமுடியுமா, புளுகுமூட்டைகளை அவிழ்த்துவிடமுடியுமோ, எந்த பேய்களுக்கு எந்தவிதமான ரத்தப்பலி தந்தால் அவை அகமகிழ்ந்து ஏவல்வேலை செய்யுமோ, பணமூட்டைகளை ஊடகப் பரப்புரை ஞமலிகளுக்கு வாரிவழங்கமுடியுமோ – அவற்றிலெல்லாம் மூழ்கி முக்குளித்து பசப்பி வருவதை, நேரடியாகப் பார்த்தால் (டீவி, இணையம் போன்றவற்றில் மட்டுமல்ல!) அசிங்கமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.
…ஆக, பலப்பல முனைகளில் யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது.
- பாரதமக்களின் ஒருங்கிணைப்புக்கும் ஒற்றுமைக்கும் எதிராக — பிரிவினைவாதமும் உசுப்பேற்றலும் அந்தத் தீக்களில் குளிர்காய்தலும்
- சமனத்துடனான பொருளாதார வளர்ச்சிக்கெதிரான — தேவையேயற்ற பிச்சைக்காசாக விட்டெறியப்படும் இலவசங்கள்
- தேர்ந்த, அசலான, நேர்மையான அரச பரிபாலனத்துக்கெதிராக — ஏகோபித்த ஊழல்கள்
- பொருட்படுத்தத்தக்க, கொண்டாடப்படவேண்டிய சாதனைகளைச் செய்துகாட்டியிருக்கும் தலைமைக்கு எதிராக — அற்ப விடலைத்தனங்கள் – அதுவும் கடுகளவுகூட ஒரு ஆக்கபூர்வமான செயலையும் செய்யாமல், வெட்டிப் போராளித்தனங்கள்
- சுயசார்பு, தன்னிறைவு சுயசிந்தனை சுயமரியாதைக்கு எதிராக — கயமைச் சுய நலங்கள்
- பாரதீயப் பாரம்பரியங்களை உயர்த்திப்பிடிப்பதற்கும் அவற்றிலுள்ள சிடுக்கல்களைப் பட்டி பார்த்து டிங்கரிங் செய்வதற்கும் மாறாக — ஏகோபித்த ‘எக்கனாமிஸ்ட் ந்யூயார்க் டைம்ஸ் வெள்ளக்காரனே சொல்லிப்புட்டான்! நாம்ப உருப்படவேமாட்டோம்! ‘ எனும் மேற்கத்திய அடிவருடி உளறல்வாத மேனாட்டு மோகம்
- வீரியமிக்க அறவெழுச்சிகளுக்கு. செயல்பாடுகளுக்கு எதிராக — பேடித்தனமான முதுகெலும்பின்மையும் குள்ளநரித்தனமும்
- கடும் உழைப்புக்குப் பதிலாக — நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு
- தேசபக்திக்கெதிராக — நாசபக்தி
- செயல்பாடுகளின் மீதான பிரச்சாரத்துக்கு எதிராக — தொடர்ந்த புளுகுணி மாங்கொட்டைத்தனம்
- படித்தவன் சூதும்வாதும் பண்ணாமல் நேர்மையின் பக்கம் இருப்பதற்குப் பதிலாக — ஐயோவென்று போக ஆவலுடன் இருக்கும் அறிவுஜீவிகள், ‘இலக்கிய மனச்சாட்சிகள்’
…
…
…அதாவது – பாஜக/மோதிக்கு எதிராக அட்டைவாட்களைச் சுற்றிக் கொண்டிருக்கும் அற்ப விடலைகளின் அணிவகுப்பு இந்த அளவில் தான் இருக்கிறது.
+இவர்களுக்கு ஜால்ரா போட்டுக்கொண்டு வேறு பேயாட்டம் ஆடிப் புனைசுருட்டுகளில் ஈடுபடும் நம் லிபரல் திரித்தல்வாத திரிசமக்கார அறிவுஜீவிகள், கலாச்சாரக் காப்பாளர்கள், கருத்துதிர்ப்பாளர்கள், ஊடகப் பேடிகள்.
+இந்த அற்பர்கள் பேசுவதையும் விடுவதையும் ஆனந்தமாகக் கேட்டுக்கொண்டும் முகர்ந்துகொண்டும் அலையும் நடுத்தரவர்க்க நபும்ஸகர்கள் + விசிலடிச்சான் குஞ்சப்பர்கள்.
மகிழ்ச்சியாகவே இருக்கிறது. (இவற்றிலெல்லாம் என்னுடைய பிரத்யேக ஊக்கபோனஸ் என்னவென்றால், கடந்த சிலவருடங்களில், என்னுடன் நீண்ட நெடு நாட்களாகப் பரிச்சயமும், ‘நட்பும்’ கொண்டு வளையவந்த பலரை என்னால் இனம்கண்டுகொள்ள முடிந்திருக்கிறது; அவர்கள் உண்மைஸ்வருபங்களையும் சொகுசுப்போலித்தனத்தையும் பேச்சொன்றுசெயலொன்று என விரியும் கேனைத்தனமான இரட்டைவேடமுதல்வாதத்தையும் அறிந்துகொள்ள முடிந்திருக்கிறது. இதுவும் நல்லதுதான். மிச்சமிருக்கும் என் வாழ்நாள், இவர்கள்மேல் வீணடிக்கப்படுவதாக இல்லை., ஹைய்யா!)
…ஆனால் – இவர்கள் அட்டைக்கத்தியாளர்கள் என்றாலும் – இவர்களுடைய விஷப் பிரச்சாரமும் இலவசங்களை விட்டெறிதலும் எதிர்மறை விஷயங்களில் ஆனந்தத்துடன் ஈடுபடும் விடலைகளை வசீகரம் செய்கிறது, இவர்களால் ஊதிப்பெருக்கப்படுவது. அறியாப் பொதுமக்களை அலைக்கழிப்பது, முட்டியடி எதிரிவினைகளுக்கு ஆட்படுத்துவது – ஆகவே எதிர்க்கத்தக்கது.
ஆ) அதேசமயம் – முன்னெப்போதும் இல்லாத அளவில், தன்னார்வக் கோளாறுடைய பலர் (பெரும்பாலும் பாஜக கூட்டணிக்காக) வாக்குசேகரத்தில் ஈடுபடுவதையும் (இணையத்திற்கு அப்பாற்பட்டுமேகூட) பார்க்கிறேன். காங்கிரஸ்-திமுக வகையறாக்களின் கூட்டணியில் பிரியாணிக்கும் சாராயத்துக்கும் தினக்கூலிக்கும் ‘பணி’செய்பவர்கள் போலல்லாமல் – இவர்களில் ஒரு தன்னார்வக்காரர்கூட கூலிக்கு மாரடிப்பவர்கள் அல்லர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கோப்பைத் தேநீர் கூட எதிர்பார்க்காமல் குறிக்கோள்களுக்காக மட்டுமே தம் உழைப்பைக் கொடுப்பவர்கள் இவர்கள். இதைக் குறித்து இன்னமும் விலாவாரியாக எழுதலாம் என்றாலும் இப்போதைக்கு இதுபோதும்.
மேற்கண்ட இரண்டுவிஷயங்களும் தற்போதைய 2019 தேர்தல்களில் தூக்கலாகத் தெரிகின்றன. (சரி, இவை எல்லாமே ‘என்னைப் பொறுத்தவரை’தான்! என் கருத்துகள் தவறானவை என்று நிரூபிக்கப்பட்டால், சர்வ நிச்சயமாகத் திருத்திக் கொள்கிறேன்)
என்ன சொல்கிறேன் என்றால் – இந்த 2019 தேர்தல் குருக்ஷேத்திரப்போர். வெறுமனே ஒரு அரசியல்கொள்கைக்கும் இன்னொன்றுக்கும் இடையே நடப்பது அல்லாமல், தர்மத்துக்கும் அதர்மத்துக்குமிடையே நடத்தப்படவேண்டிய நிலையில் உள்ளது.
-0-0-0-0-
ஹ்ம்ம்… மேஜர் சுந்தரராஜன் சொல்வது போல, இதுவும் கடந்துவிடும். This too shall pass. என்னருமை ஸாஹித்ய அகடம்மியார் எஸ்ரா சொல்லக்கூடுவது போல – ‘இந்த இரண்டும் பெறும், தேர்வுகளில் தேர்ச்சி.’ நன்றி.
ஆனால் – இதனை இப்படியே தாமஸத்தனத்துடன் விட்டுவிடமுடியுமா?
சரி. என்னைப் பொறுத்தவரை நான் ஒரு ‘உலகக் குடிமகன்’ எனக் கருதிக்கொள்ள ஆசைப்படுபவன் என்றாலும், ‘ஸர்வேஜனோ ஸுகினோ பவந்து’ என்றெல்லாம் ஆத்மார்த்தமாக அறிகிறேன் என்றாலும், அடிப்படை மனிதவுரிமைகளை விழைகிறேன் என்றாலும் இம்மாதிரி நல்லெண்ணங்களெல்லாம் வெறும் பொழுதுபோக்கு பஜனைதான் என அறிந்திருக்கிறேன். இவற்றால் ஓரளவுக்குமேல் பயனில்லை என்பதை உணர்ந்திருக்கிறேன்.
‘நமக்கு முன்னாலும் உலகம் இருந்தது, நமக்குப் பின்னாலும் உலகம் இருக்கும்’ ஆகவே ‘சித்த சும்மா இரு, ரொம்ப அலட்டிக்காத’ எனும் படுசாத்வீக எண்ணங்கள் வறட்டுத்தனமாக மேற்கோள் காட்டத் தோதுப்பட்டாலும் – நேரடி வாழ்க்கை என்பது உணர்ச்சிவசப்படுதல்களினால் நிறைந்துள்ளது என்பதை அறிகிறேன். ஆகவே, தர்க்கரீதியாக நம் கொள்கை வலுவாக இருந்தாலுமேகூட, அதைப்பற்றி முழ நீள தரவுகளுடன் பேசி/எழுதி வெகுசுளுவாக நிறுவிவிடமுடியும் என்றாலுமேகூட அதற்கும்மேலாக உணர்ச்சிபூர்வமான செயல்பாடுகள் முக்கியம் என அனுபவபூர்வமாக உணர்கிறேன்.
எனக்குப் பிடித்தமான கேப்டன் ஃபன்டாஸ்டிக் திரைப்பட வசனத்தில் வருவதைப் போல: We’re defined by our actions, not our words.
…ஏனெனில், நமக்கு எட்டியதூரத்தில் நமக்கு முடிந்த அளவில், நம்மாலான விஷயங்களைக் காத்திரமாகச் செய்தேயாக வேண்டும் என விரும்புகிறேன். எடுத்துக்காட்டாக – பள்ளிக்கல்வி பற்றித் தீவிரமாகவும் பொருட்படுத்தத்தக்கதாகவும் பேசவேண்டுமென்றால், ஒருவர், குறைந்தபட்சம் ஐந்துபத்துவருடங்களாவது தொடர்ச்சியாக எங்காவது அதுகுறித்துத் திடமாகப் பணிபுரிந்திருக்கவேண்டும் என்பதுபோல. அச்சமய வாழ்க்கையையே முழுவதுமாக அதில் செலவழித்திருக்கவேண்டும் என்பதுபோல. அதாவது: இண்டர்னேஷனல் ரெவல் ஜல்லியடித்தலுக்கு முன்பாக, வீட்டுப் பக்கத்துச் சேற்றில் இறங்கி உழலவேண்டும் என. அதாவது, முதலில், கூரை ஏறிக் கோழி பிடித்தால், பின்னர் சாவகாசமாக வானமேறி வைகுந்தம் போகலாமென. (ஆனால் நம்மில் பலர் அப்படியில்லை என்பதும் புரிகிறது; சிலர் அப்படியில்லாவிட்டாலும் தன்னலம் விரும்பா சான்றோர்கள், பரோபகாரிகள் அல்லது அவர்கள் களம்வேறு என்றும் தெரிகிறது.)
“Throughout history, it has been the inaction of those who could have acted; the indifference of those who should have known better; the silence of the voice of justice when it mattered most; that has made it possible for evil to triumph.”
— Haile Selassie
…கருத்துகளாலோ கரங்களாலோ பணிசெய்யவேண்டும் என, சொகுசுக் கருத்துதிர்ப்புப் போராளி மார்க்ஸிஸ்டாகச் சொல்லாமல் – இரண்டின் வழியாகவும் முடிந்தவரை செய்யவேண்டும் என விழைகிறேன். ஏனெனில் லிபரலாக அறிவுஜீவியக் கருத்தடித்து விடுவது மிகவும் லேசுப்பட்டவிஷயம். ஆனால் களத்தில் செயல்படுவது, அதுவும் தொடர்ந்து, தளராமல் செயல்படுவது கொஞ்சம் ஏகத்துக்கும் கடினம். (ஆம். ஆகவேதான், நான் ஒத்திசைவில் சொகுசாகக் கருத்துதிர்க்கிறேன். நன்றி!)
“Do or do not. There is no try” எனும் ஒரு வசனம் ஸ்டார்வார்ஸ் படவரிசையில் யொடா சொல்வதாகவரும் – இது எனக்கு அணுக்கமானது.
அதாவது ‘முயற்சி’ செய்கிறேன், ‘ஐ வில் ட்ரை’ என்பதெல்லாம் நமக்குநாமே அல்லது ‘உடனடித் தப்பித்தல்களுக்காக’ நாம் சொல்வது. ஆனால், நம் செயல்பாடுகளானவை – செய்வது/செய்யாமலிருப்பது என்ற வகையில் பிரித்துப் புரிந்து கொள்ளப்படவேண்டியவை என்பதென் எண்ணம்.
இன்னொரு விஷயம் என்னவென்றால் – நம் கடமைகளைக் கொஞ்சமானாச்சுமாவது செய்துவிட்டபின்னர்தான் (மன்னிக்கவும் – கருத்துதிர்ப்புக் குசு என்பது இந்த வகையில் வராது!) உரிமைகளைப் பற்றி ஓரமாக நின்றுகொண்டு தயங்கித்தயங்கிப் பேசலாமாவென யோசிக்க ஆரம்பிக்க வேண்டும் என விருப்பப்படுகிறேன். ஆகவே, நம் தொழில்முறை மனிதவுரிமை வியாபாரிகளை ஆழ்மனதிலிருந்து வெறுக்கிறேன். இவர்களால் மூளைச்சலவை செய்யப்படும் இளைஞர்களைக் குறித்துப் பரிதாபப்படுகிறேன். (நானும் ஒருகாலத்தில் – சுமார் 21-22 குட்டிச்சுவர் வயதுவரைகூட – அப்படி இருந்த ஒரு இளைஞ அரைகுறைதான் என்கிற அசிங்கவுணர்ச்சியுடன் இதனை எழுதுகிறேன்…)
எனக்கும் சேர்த்தே சொல்லிக்கொள்கிறேன்: முதலில் கடமைகள். காத்திரமான பங்களிப்புகள். பின்னர் என் தனிப்பட்ட உரிமை + மனிதவுரிமைகளுக்கான கொடிதூக்கல். ஏதாவது, நேர்மையான சாதனை செய்துவிட்டுப் பின்னர் சமூகத்தின்மீதான மேலான விமர்சனம் செய்யலாம். அப்படியெல்லாம் முடியாது ‘நாங்களெல்லாம் படுபிஸீ!’ என்றால், நேரடியாகவே ராஜபாட்டையில் இலக்கியவிமர்சனவகை மயிர்பிளத்தல் பக்கம் போகலாம் – அங்கே வேண்டுமளவு வேலையிருக்கும், பகுத்துப் புரிந்துகொண்டே தொடர்குறுக்குசால் ஓட்டலாம். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது அண்டப்புளுகன் வகை – ஆங்கே வேண்டுமளவு அகடவிகடம் செய்யலாம். ‘பிரபல வலைப்பதிவர்’ ஆகலாம். ஃபேஸ்புக் போராளித்தனமும் செய்யலாம். நன்றி. ∴ நோ வேலையில்லாத் திண்டாட்டம்.
பிறர் அவர்கள் கடமையைத் துப்புரவாகச் செய்யவேண்டும். அதற்குப் ப்ரொட்டெஸ்ட் செய்வேன்; ஆனால் ‘நான் என் உரிமைகளை மட்டும் பேசி உரிமையடி உற்சவம் நடத்தி போராளியாவேன், கடமைகளை லூஸ்ல வுடுவேன்’ என்பது, என்னைப் பொறுத்தவரை நியாயமல்ல.
பிறத்தியார் செய்வார்கள், நான் ஏன் மெனக்கிடவேண்டும், அல்லது, நான் மட்டும் செய்தால் போதுமா என்றெல்லாம் காலட்சேபம் செய்துகொண்டிருந்தால் – ஒரு வேலையும் நடக்காது என்பதை உணர்ந்திருக்கிறேன். be the change you wish to see என இல்லாமல் be the shortchange you wish to avoid என்றிருப்பதுதான் புரட்சிகர, லிபரல், இடதுசாரிவாத, அறிவுஜீவிய நேர்மை என்பதையும்…
சாலைப்போக்குவரத்து விதிகளை மீறி ட்ராஃபிக் பொலீஸ்காரரிடமிருந்து தப்பிக்கமுயன்றும் மாட்டியவுடன் ‘அவங்கள வுட்டுட்டு என்னப் புட்க்கிறீங்க்ளே!’ என அலறாமல், ‘நான் யார் தெர்யுமாடா? டீஎம்கே ஸ்டாலின் வீட்டு தெராவிட நாயோட கேர்ல்ஃப்ரெண்டோட ஒனரோட கார்ட்ரைவரோட மச்சான் என்னோட சகலை!‘ என்று மிரட்டாமல் – அல்லது பிறத்தியாரோடு பொருத்திப்பார்த்தே என் சராசரித்தனத்தை வளர்த்திக்கொள்ளாமல், முதலில் என் கடமையைச் செய்துவிட்டுப் பின்னால், உரிமைகளுக்காகப் பினாத்துவதையே சரியென்பேன். பிறரின் குதத்திலிருக்கும் மலத்தைச் சுட்டுவதற்குமுன், என்குதத்தில் அதேவகை மலம் இருக்கிறதா என்பதைப் பரிசீலித்துக்கொள்வேன்.
ஜேஜே-சிலகுறிப்புகளில் வருவதைப் போல – ‘செய்துமுடித்துவிடக்கூடிய காரியங்களையும் செய்யாமல் செய்துவிடும் இந்த அசட்டை என்னைப் பாதிக்காமல் இருக்க’ செயல்படுகிறேன். ஓரளவு படிப்பறிவு, ஓரளவு உலக அனுபவம் இருக்கிறது. இருந்தாலும், போகவேண்டிய தூரம் மிகமிக அதிகம்தான்.
ஆனாலும் – களத்தில் உழன்று, சிலபல விஷயங்களைப் புரிந்துகொள்வது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.
-0-0-0-0-
…இன்னமும் இரண்டுபகுதிகளுக்கு இது நீளும். பொறுமை இருந்தால் தொடர்ந்து படிக்கவும். இல்லையேல் ஓடவும். நன்றி.
April 17, 2019 at 14:08
Hi, Can I have your e-mail id and mobile number? I am one of your 7.5 fans for a couple of years and I have a lot to discuss with a sensible person like you. Of course I agree with some of your postings and disagree with few. I am 70 yrs old retired Army Officer and hopefully I will not do any such thing that will make you to regret it.
April 17, 2019 at 14:15
Sir, I always admire and respect faujis. Thanks for your eagerness, though am sure that I am not very sensible. Please do write to me at (othisaivu)(.)(ramasami)(@)(gmail)(.)(com) – please remove ALL the parantheses.
Jai Hind.
April 17, 2019 at 15:37
Happy you did some field work for the party you openly support. One such individual volunteer aged 75 was killed at Salem by the opponents. So take care.
April 17, 2019 at 15:50
Sir, thanks for your concern.
I am not risk averse, but do take necessary precautions (I still have a 14 yr young dependent at home!) and do what I meaningfully can.
Also, I am done with this campaigning champagneing at my locality. I am still alive. Tomo is our polling date.
Let us wish ourselves and our Bharat, good luck.
Thanks and hugs:
__r.
Sad to hear of the Salem oldman.
April 17, 2019 at 17:45
[…] முதல்பாகத்தைப் படித்துவிட்டு இதனைப் படிக்க […]
April 18, 2019 at 13:09
[…] நாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், ந… 17/04/2019 […]