பகுத்தறிவு, நாத்திகவாதம், பிணம் – குறிப்புகள்

August 8, 2018

க்றிஸ்தவ மிஷனரிகளால் பிரிவினைவாதமாக விதைக்கப்பட்டு அரைகுறைக் கோமாளிகளாலும் அயோக்கியத் தீவட்டிக் கொள்ளைக்கார்களாலும் வளர்க்கப்பட்ட திராவிட இயக்கம் எனும் அபத்தக் களஞ்சியம் — திருட்டுப் பொறுக்கிகளால், பிற காமாந்தகப் பொறுக்கிகளுக்காகவும் ஏமாந்த சோணகிரிகளுக்காகவும் நடத்தப்படும் பொறுக்கிமுதல்வாத இயக்கம் என்றாலும் – அது மினுக்கிக்கொள்வதென்னவோ, என்னவோ அது பகுத்தறிவுசார்ந்து நாத்திகவாதத்தின்படி கறாராக நடத்தப்படும் கும்பலியம் என்பது போல!

சரி. எட்றா அந்த, பெரியார்கைத்தடிய…

-0-0-0-0-0-0-

ஆனால் அம்மணிகளே, அம்மணர்களே!

இந்தக் கும்பலுக்கு பகுத்தறிவு என்றால் என்ன, நாத்திகவாதம் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்தும் + பிணம் என்றால் என்ன என்பதைச் சுட்டியும் ஒரு பாலபாடம் எடுக்கவேண்டும் காலம் வந்துவிட்டது.

ஆகவே.

பிணம்: ஒரு மானுஷி அல்லது மானுடன் இறந்தபின் அல்லது கூடுவிட்டிங்கு ஆவிதான் போயினபின் (ஆத்மா, முக்தி, ஸ்வர்க்கம், கடவுள், கொதிக்கும் எண்ணைய்க் கப்பரை, சல்லாபிக்க 72 தேவதைகள் (மன்னிக்கவும், இது ஆண்களுக்கு மட்டுமேதான்!),என்ற விஷயத்திலெல்லாம் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ) அவ்வாசாமி ஒரிஜினலாக வெறும் விதம்விதமான ஸெல்களின் திரட்டுதான் என்பது வெளிப்படையாகிவிடும். அத்திரட்டுக்கு மேல் வேறேதோ இருக்கலாம் எனும் வசீகரக் கேள்வியை சாய்ஸில் தற்போதைக்கு விட்டுவிடலாம். (ஆனால் திராவிட பஹூத்தறிவு வாதிகள் ‘வேறேதோ இருக்கக்கூடும்’ என்பதைத் துப்புரவாக ஏகபோகமாக மறுதலிப்பவர்கள், ஆகவே நடைப்பிணங்கள். வெறுமனே காசு காமம் களியாட்டம் என ஏகோபித்து அலையும் பேய்கள் என்பது வெள்ளிடைமயிர்; அதாவது நரைத்த முடியுள்ள எந்தத் தமிழருக்கும் இந்தத் திராவிட உண்மை தெரியும்)

பிணம் + வேறேதோஇருக்கக்கூடும் = மானுடன் என்பதில் -அவள்பிணம் அல்லது அதுபிணம் அல்லது அவன்பிணம் – வெறும் ஜடப்பொருட்களால் உருவாக்கப்பட்ட வஸ்துதான் – ஆனால் மகத்தான வஸ்து என்பது புலப்படும்.

ஆக, அந்த வஸ்து போய்ச்சேர்ந்தபின் – பிணத்தின் ஸெல்களின் ஒரே குறிக்கோள், தங்களை எவ்வளவு சீக்கிரமாக (மகத்தான நுண்ணுயிரிகளின் உதவியுடனும், மற்ற பஞ்சமாபூதங்களின் கருணையுடனும்) மறுசுழற்சி செய்துகொண்டு இதேரீதியில் தொடர்ந்து ஆச்சரியகரமான காலட்சேபம் செய்வதுதான்.

இது உயிர்போன செடியின் பிணமானாலும் சரி. நாயின் பிணமானாலும் சரி. என் பிணமானாலும் சரி. ஏன், கருணாநிதியின் பிணமானாலும் சரி. இதுதான் ஸெல்களின் நியதி.

அவன் நல்லவனா அயோக்கியனா, வாத்தியா கொள்ளைக் காரனா, கற்புள்ளவனா ஏகத்துக்கும் கற்பழித்தவனா,  நன்றியுள்ள ஜந்துவா நன்றிகெட்ட அற்பப்பதரா, ஒருதலைமுறைக்குக்குக் கூடச் சொத்து சேர்க்காதவனா தலைமுறைதலைமுறைதலைமுறை என 1000 தலைமுறைகளுக்குத் திரைகடலோடாமலேயே திருட்டுச் சொத்துசேர்த்தவனா – எதுவுமே பிரச்சினையில்லை.

வாழ்வின் முடிவில், ஸெல்களின் மறுசுழற்சி ஒன்றே சாஸ்வதம்.

ஆகவே, பிணங்களுக்குத் தேவைக்கு அதிகமாக மரியாதை கொடுத்து – நம் காலத்தையும், பொருட்களையும் விரயம் செய்யவேண்டியதில்லை. ஒப்பாரியும் வைக்கவேண்டிய அவசியமில்லை. அதன் மறுசுழற்சிக்காக ஏதுவாக என்ன செய்யவேண்டுமோ அதுமட்டும் செய்தால் போதுமானது.

சரி. சாதாரண, நேர்மையான ஆன்மிக வாதியாக இருந்தால் இப்படி ஒருமாதிரி சங்கடமான பார்வையை வைத்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் சடங்குகள் நம்பிக்கை பாற்பட்ட விஷயங்கள். பிறத்தியாருக்குத் தொந்திரவு கொடுக்காமல் – நம் பாட்டினைப் பார்த்துக்கொண்டு தாராளமாக வாழலாம்.

ஆனால் – ஒரு திராவிடனாக இருந்தால், அவனுக்கு அவனுடைய அடிப்படைத் தலைவிதிகளின் படி – எந்தவித ‘மூட’நம்பிக்கையும் இருக்கக்கூடாது. அவன் – பிணத்துக்கு மரியாதை கொடுக்கவேண்டிய அவசியமேயில்லை. ஏனெனில் அவனே சொல்லி மினுக்கிக்கொள்வது போல அவன் பகுத்தறிவுத் திராவிடன். ஆகவே அவன் பிணத்துக்கு மரியாதை கொடுத்தால் அதைவிட படுஅசிங்கமான அதிதிராவிட விஷயம் வேறு எதுவுமே இருக்கமுடியாது.

ஆக – தற்போது கேள்விகளில் மாட்டிக்கொண்டு முழிக்கும் அந்தப் பிணத்துக்கு உயிர் இருந்தபோது அமோகமாகச் சொன்னதைப் போல – அதனைக் கடலில் வீசிப் பார்க்கலாம். ஒருவேளை அது கட்டுமரம் போலத் திரும்பி வந்தால் பகுத்தறிவை வருத்தத்துடன் கடாசலாம். (இப்படி நடந்தால், ஏன், நானே விக்கித்துப்போய் உடனடியாக திமுக இளைஞர் அணியில் சேர்ந்துவிடுவேன்! ஏனெனில், எனக்கு ஐம்பத்திச் சொச்சம் வயதுதானே ஆகிறது?)

அப்படித் திரும்பி வரவில்லையானால் – என்ன பிரச்சினை? அது கூடியவிரைவில் கடல்ஜீவராசிகளால் உண்ணப்பட்டு, நுண்ணுயிரிகளால் காதலிக்கப்பட்டு – செவ்வனே மறுசுழற்சி செய்யப்படும், அல்லவா? அப்போது, பகுத்தறிவுக்கு ஜே! நன்றி.

ஆனால் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து இம்மாதிரி திராவிடமாசுக்கெதிராகப் பிரச்சினை வரலாமோ எனக் கேள்வி எழலாம் – ஆனால் வராது. #திராவிட மாஸ்!

‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தரராஜன், இலக்கியவாந்திகள் போன்ற சுற்றுச்சூழல் சந்தர்ப்பவாதப் பேடிகள் “ஐயோ, கடல் மாசடைகிறதே” என தங்கள் பங்குக்கு வாலை ஆட்டுவார்களா என்ன? தங்கள் முன்வால் பின்வால் அனைத்தையும் சுருட்டிக் கட்கத்தில் வைத்துக்கொள்வார்கள். #திராவிட மாஸ்!

தமிழ்த் திரையுலகக் கோமாளிகள் இதற்கு ப்ரொட்டெஸ்ட் செய்வார்களா? ஸ்டூடெண்ட் குஞ்சாமணிகள் மெரீனா வருவார்களா? #திராவிட மாஸ்!

அல்லது மகாமகோ ஜார்ஜ் ஆர்வெல் ஏறத்தாழக் கூறியிருப்பதுபோல:

எல்லா பிணங்களும் சமம் தான். ஆனால் சிலபல பிணங்கள் மற்ற பல பிணங்களைவிட மேலதிகச் சமம். கேட்டீயளா?

…யோவ்! ங்கொம்மாள, ஆவுர ஜோலியப் பாருய்யா! சும்மா பொணத்துமேல போட்டுக்கீற மால மேல பறந்துகினு கீற ஈய பாத்து சொக்கிக் கெறங்கிக்கிட்டே தெர்ராவிட கைமுட்டியடிக்க வந்த்ட்டான், சூப்பர் சொங்கிப்பய… வ்வோத்தா.

-0-0-0-0-0-0-

இப்போது இந்தப் பாவப்பட்ட பகுத்தறிவுக்கும் நாத்திகவாதத்துக்கும் வரலாம்.

ஹ்ம்ம்…இவை இரண்டும் முன்ஜென்மத்தில் படுமோசமான பாவங்களைச் செய்துள்ளதால்தான், இந்தக் கலிகாலத்தில், போயும்போயும் இந்தத் திராவிடர்கள் வாயில் புகுந்து புறப்படவேண்டியிருக்கிறது என ‘திராவிடப் பகுத்தறிவு’ முறைமையில் என்னை நானே தேற்றிக்கொள்கிறேன்!

இவற்றை எப்படி திராவிடர்கள் (இவர்களில் சுமார் 99.999% படிப்பறிவோ, நுண்ணுணர்வோ, சிரத்தையோ அற்ற சதைப் பிண்டங்கள், உதிரி விசிலடிச்சான் குஞ்சுகள்) தங்களுடைய ஆதாரசுருதிக் கொள்கைகளாகக் கருதி தங்களை ஆகவே சுயமரியாதை மிக்கவர்களாக வரித்துக்கொள்கிறார்கள் என்பது, எனக்கு மாளா ஆச்சரியம்தான்.

சரி.

பகுத்தறிவு நாத்திகவாதப் பார்வையில், கொஞ்சம் கெடுபிடியாகப் பார்க்கவேண்டுமென்றால்,

1. மானுடனின் சாஸ்வதத் தன்மை என்பது அரைகுறைத்தனம். அவன் கருத்துகள் வாழலாம். ஆனால் அவன் சாகவேண்டியவனே. ஆகவே, அவனைத் தூக்கி வைத்து அலங்கரித்து புதைத்து மாலையிட்டு சிலை வைத்து தெவசத்திற்கு தெவசம் மாலை போட்டு… இதெல்லாம் கடைந்தெடுத்த முட்டாள் தனம்.

ஆனால் பேடித்தனம்தாண்டா திராவிடம்.

2. வெட்கமே இல்லாமல், ‘சாகும் சமயத்தில் சங்கரா சங்கரா’ எனப் புலம்புவதும், கோயில்கோயிலாக அலைந்து அவற்றையும் மாசுபடுத்திப் புளகாங்கிதமடையும் வேளையில் – உங்கள் உடன்பிறப்புகள் குங்குமமும் விபூதியும் இட்டுக்கொண்டால் அதைக் கேவலமாகப் பேசுவதும் – அதே சமயம், ‘குல்லா போட்ட நவாபு’களாக ரம்ஸான் கஞ்சி குடிப்பதும்… இதெல்லாம் பேடித்தனங்கள் என்பதைத் தவிர, இவை திராவிடப் பகுத்தறிவின் கூறுகெட்ட கூறுகள் என்பதில் எனக்கு ஐயமேயில்லை.

3. பிணம் எனும், அதிதீவிரமாக மறுசுழற்சி செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் ஸெல் திரட்டினை, தூக்கிக் போட்டுக் கடாசாமல், அதனை வைத்துக்கொண்டு பஜனை செய்வதும் (சோகமில்லாமல் கனிமொழிகளும் இசுடாலிர்களும் அதனைச் சுற்றிச் சுற்றி வளையவந்து புன்னகை பூப்பதும்) – இதெல்லாமா நாத்திகம்? பகுத்தறிவு?

உருவவழிபாடு முட்டாள்தனம், காட்டுமிராண்டித்தனம் எனப் பகீரங்கமாக போதித்த ‘பெரியாரி’ன் வழித் தோன்றல்களா இப்படிச் சிலைகளையும் பிணங்களையும் ஆராதிக்கின்றனர்? வெட்கக்கேடு.

4. பகுத்தறிவு என்பது அடிப்படையிலேயே அதிமானுட ஹீரோ வொர்ஷிப் வகையறா பஜனை ஜிங்ஜாங்குகளுக்கு எதிரானது. மக்கள் ஜனநாயகத்துக்குக்குத் தோதான, ஸ்வராஜ்ஜியப் போக்குடையது.

ஆனால் இந்தத் தலைவத்தலைவிகளின் காலில் புரண்டுருளும் வழி மட்டும்தான், தலைமுறையாக ப்ரிட்டிஷ்காரனுடையதை +ஆண்டைகளுடையதைப் பிடித்துக்கொண்டு தொங்கி, பக்தி பொங்க சரக்கு அடித்துவிட்டுக் கொள்ளையடிப்பதுதான் திராவிட இயக்கங்களுக்குத் தெரியும். இதுவா பகுத்தறிவு?

5. சரி. அறியாமையிலும் சரக்கிலும் வாடும் உடன்பிறப்புகள் ஆராதிக்கிறார்கள், சரி புதையுங்கள் அல்லது எரியுங்கள். ஆனால் அதன்மேல் ஒரு நினைவிடம் கட்டுவது, கல் வழிபாடு செய்வது மாலை போட்டு மாலை மாலையாக நீலிக்கண்ணீர் வடிப்பது என்பது பகுத்தறிவா?

எதற்கு இந்த மூட நம்பிக்கைக்கான கவைக்குதவாத நினைவிடம்? இந்த எழவெடுத்த, ஜமக்காளத்தில் வடிகட்டிய முட்டாள்தனத்துக்கா போராடுவார்கள் பேடித் திராவிடர்கள்? வெட்கக்கேடு.

இதற்குப் பதிலாக, கிராமத்துக்கு ஒரு நூலகம் (அதுவும் அழகான, வாழ்ந்துகொண்டிருக்கும் அமைப்புகள்) அமைக்கலாமே? எப்படியும் திராவிடர்கள் கொள்ளையடித்த பணத்தில் ஒரு 0.06% செலவழித்தாலே (ஆம். நான் இதற்கு ஒரு கணக்கு போட்டிருக்கிறேன்) இதைச் சாத்தியமாக்கலாமே!

ஆனால், இப்படியெல்லாம் ஆக்கபூர்வமாகப் பணி செய்தால் உண்மையான பகுத்தறிவு வந்துவிடுமே! என்ன செய்வது!! நம் தமிழகப் பிள்ளைகளுக்கும் மக்களுக்கும் முன்னேற்றத்தில் ஈடுபாடு வந்துவிடுமே! அப்போது எப்படித்தான் இன்னும் 2000 தலைமுறைகளுக்குச் சொத்து சேர்ப்பதாம், சொல்லுங்கள்?

6. பகுத்தறிவு என்றால் காரணகாரியங்களை அறிந்து தன்னளவிலும் (பொதுவாழ்க்கையில் இருந்தால், கண்டிப்பாக அதனிலும்) நேர்மையாகவும் கருணையுடனும் பண்புடனும் வெளிப்படைத் தன்மையுடனும் இருப்பதும்கூட. இவை நேர்மையான வாழ்வின் (பகுத்தறிவோ பகுக்காதறிவோ) அடிப்படை ஆதார சுருதிகள். (எனக்குத் தெரிந்து பலப்பல ஆத்திகர்கள் பல விஷயங்களில் இம்மாதிரி பகுத்தறிவு மிக்கவர்கள். ஆனால் எனக்கு மிக நன்றாகவே அறிமுகமான பலப்பல நாத்திகர்கள், அயோக்கியர்கள். கேடுகேட்டவர்கள் மட்டுமல்லாமல் கேடு நினைப்பவர்களும்கூட. இவர்களில் பலருக்கு படிப்பறிவே இல்லை, வெறும் உச்சாடன வாதிகள்!)

ஆனால் திராவிடப் பகுத்தறிவுக்கு இருப்பது ஆதார சுருட்டுதல் மட்டுமே. எதையும் எவற்றையும் லவட்டிக்கொண்டு போவது ஒன்றுதான் அவர்கள் நாத்திகம்.

தமக்கு ஒரு விதி, பிறருக்கு அவர்கள் தலைவிதி என – ஹிந்தியிலும், ஆங்கில வழிக் கல்வியிலும், அரச குடும்பத்தினருக்கும் — தம் திமுக குறு நில மன்னர்களுக்கும், கொள்ளையிலும், அராஜகங்களிலும் ஈடுபடுவதுதான் பகுத்தறிவா?

ஹிந்து மதங்களைப் பற்றி மட்டும் கீழ்த்தரமாகப் பேசி (அதே சமயத்தில் கமுக்கமாக நானாவித ரகசியச் சடங்கு நாட்டிய நாடகங்களில் ஈடுபட்டு) பிற மதங்களை ஓட்டு அரசியலுக்காக பேடித்தனமாக அரவணைப்பதா பகுத்தறிவு?

நாயும் பிழைக்கும் இந்தத் திராவிட நாத்திகப் பகுத்தறிவுப் பிழைப்பு.  இவன்களுக்கெல்லாம் ஒரு சுயமரியாதை ஒன்றுதான் கேடு!  கடமை கண்ணியம் கட்டுப்பாடாமே! என்ன முடைநாற்றம்!!

-0-0-0-0-0-

தமிழகமும் பாரதமும் இந்த அயோக்கியர்களின் பிடியிலிருந்து விடுபடுவது எப்போது?


 

 

7 Responses to “பகுத்தறிவு, நாத்திகவாதம், பிணம் – குறிப்புகள்”

 1. Swami Says:

  Powerful post!
  I admire your courage to say things as you see it


 2. Sir, I do not know whether I am courageous.

  But am merely sick and tired of these scumbags and their dastardly dravidianism. And nobody seems to be talking about these important matters. (oh, may be some do, but I do not know of many of them; today, a friend sent me a link to my beloved & sensible Aravindan Neelakandan’s fine essay – https://swarajyamag.com/obit/muthuvel-karunanidhi-the-last-dravidianist – it is a polite, some to the point, some nuanced text oriented obit. But by the very nature of it – does not talk about the sleaze, massive corruption and political murders of the karunanidhis)

  And I find it impossible that even, otherwise reasonably well read, right thinking lads (in 20s – some of them are readers of this blog) – have little knowledge about these scum. Their knowledge of even recent pasts is pathetic, leave alone the longish multi-splendoured indic histories or the dastardly dravidian histories.

  …They also want me to write ‘thiraippada vimarsanam’ and about their favorite books written by the up & coming dreaded young brigade of tamil litterateurs literally littering TN.

  Facebook must be destroyed.

  O what to do, pray ask.

  • Swami Says:

   Bravo, Sir!
   I read yesterday Jeyakanthan’s speech at the time of C N Annadurai’s death (whatasapp forwards are rarely useful, but was an exception this time)
   What you have written is on similar lines and is equally powerful and true
   Many of us who grew up in the late 70s and 80s cannot forget the evil influence that MK and his clan exerted on the Tamil society

 3. Suresh kumar Says:

  With the end of Karuna i see a ray of hope of end of Dravidian culture. In your words- let us see how the future unfolds.. Hope for best and prepare for worst.

 4. gopalasamy Says:

  Already marina became a grave yard. As per DMK argument this place is only for the people holding Dravidian principles. the easiest way is to sell this area to Dravidian people by tender method. by this way government and middle man can get money. no need for spending money in court. Mavatta and Vatta secretaries can use the nearest beechankarai .

 5. RC Says:

  அன்பு அய்யா,
  இன்றைய தினமலர் (நெல்லை பதிப்பு) 12ஆம் பக்கம் தங்கள் பார்வைக்கு.
  http://paper.dinamalarnellai.com/
  பகுத்தறிவு (!) ஒளிவட்ட படச்செய்தி :-(


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s