பார்ஸேல்! கருணாநிதிக்கு இலக்கியத்துக்கும் அமைதிக்கும்னிட்டு சூடா ரெண்டு நொபெல் பரிசுங்கள பார்ஸேல் பண்ணுங்கடா!
August 9, 2018
கொஞ்சம் வெட்கமாகி விட்டது. மக்களுக்கும் தமிழகத்துக்கும் காத்திரமாக ஒரு திடமான மசுத்தையும் பிடுங்காமல் சுயகாரியப் புலியாகவே வாழ்நாள் முழுதும் காலட்சேபம் செய்தவரை – தராதரம் பார்க்காமல் இப்படியா கொண்டாடுவார்கள்?
-0-0-0-0-
நெடும் காலம் வாழ்ந்து, கனிந்தாரோ இல்லையோ, ஒருவழியாகப் போய்ச் சேர்ந்தார்; அவர் பிள்ளைகள் அவரை முடிந்தவரை சரியாக, அவர் இறக்கும் வரை பார்த்துக்கொண்டார்கள். இதுவும் நல்லதே. சொத்து குடுமிப்பிடிச் சண்டைகள் எல்லாம் கமுக்கமாக நடக்கும் என்றாலுமேகூட.
நெடுங்காலம் தமிழக அரசியலில் இருந்திருக்கிறார். அவருடைய தொடர் சந்தர்ப்பவாத அரசியலும் சுயஆதாயக் குவியமும் அவ்வரசியலின் தன்மைகள் என்பதை விட்டுவிட்டால், இந்த நீடிப்பு, குறிப்பிடத்தக்க விஷயம்தான். ஆனால் எனக்குத் தெரிந்தே காங்கிரஸிலும் பாஜகவிலும் (அக்கால ஜனசங்கத்திலிருந்து) இப்படி நிறையவே பேர் அரசியலில் நேர்மையாக, இரண்டாம்பேருக்குத் தெரியாமல் உழைப்பவர்களாகவும், கீழ்மட்டத் தலைவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஆனால் ஆயிரம் தலைமுறைகளுக்குமேல் சொத்து சேர்த்திவைத்திருக்கிறார். பல சொந்தக் குடும்பங்கள், அண்மைச் சொந்தங்கள், அவற்றின்வழித் தலைமுறைகள் எனப் பார்த்துப் பார்த்து ஆவன செய்திருக்கிறார். ஓடியோடி அமுக்கியிருக்கிறார். இதனைத் தவிர, இரண்டாம் மூன்றாம் வரிசை திமுக தலைவர்களையும் இப்படியே திரவியம் தேட, அவரவருக்கு அவரவர் திராவிடவழியென குறுநில மன்னர்களாக குறுசெங்கோலோச்ச அனுமதித்திருக்கிறார். இம்மாதிரித் திறமை இந்தியாவில் எவரிடம் இந்த அளவுக்கு இருக்கும் என்பது கேள்விக்குறியே!
ஆடுகிற மாட்டை ஆடிக் கற, ஆடாத மாட்டை ஆவணியில் கற – என, கரகரத் தொண்டை அடுக்குமொழி பொறுக்கி நடையை வைத்தே அனைத்து ஆதாயங்களையும் அடைந்திருக்கிறார். இந்தத் திறமையின் பின்னால் கடும் உழைப்பு இருப்பதை எவரால் மறுக்கமுடியும்?
ஆனால் அவருக்கென ஒரு வசீகரம் இருந்திருக்கிறது; இது எப்படி என எனக்குச் சுத்தமாகப் புரியாவிட்டாலும், அவருக்காக உருகும் லட்சக்கணக்கான பாமரர்கள், அவரை ஒரு கடவுள் ரேஞ்சுக்கு மதித்திருக்கிறார்கள். எனக்கு அழுவதா சிரிப்பதா கிலியில் நடுங்குவதா எனத் தெரியவில்லை.
தொடர்ந்து வெறுப்பியத்தில் – அதுவும் ஹிந்து கடவுட்களை மட்டும் ஹிந்துமதங்களின் கூறுகளை மட்டும் படுமோசமாகக் கிண்டல் செய்திருக்கிறார். இதற்கு அவருக்கு ஏதாவது பிரத்தியேகக் காரணங்கள் இருந்தது போலவும் படவில்லை. இருந்தாலும் ஹிந்துக்கள் அவரை ஆதரித்திருக்கின்றனர். இதன் காரணமாகவே எனக்கு ஹிந்துமதங்களின் படி ஒழுகுவதாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் சுமார் 80% தமிழர்களின் மீதும், அம்மதங்களின் மீதும் வெகு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த மந்திரவாதத்துக்குக் காரணம் – நாம் தமிழர்கள், ஆகவே தர்க்கரீதியாகச் சிந்திக்கத் தெரியாதவர்கள் என்பதா? அல்லது மசுர்க்கூச்செறிந்து இன்புறுவதிலேயே மானங்கெட்ட தமிழன் தற்குறியாக இருப்பதாலா?
தம் கட்சிக்காரர்கள் குங்குமம் வைத்துக்கொண்டபோது அதைக் கேவலப்படுத்திய அதேநேரத்தில் – தன் குடும்பத்தில் ஹிந்து மதச் சடங்குகளை செய்திருக்கிறார், மனைவிகள் மஞ்சளும் குங்குமமும் தாலியும் அணிந்துகொள்வது உட்பட. படுமோசமாக மூடநம்பிக்கைகளிலும் – மஞ்சள் துண்டு உட்பட – ஈடுபட்டிருக்கிறார். திராவிடப் பகுத்தறிவின் இம்மாதிரியான கல்யாணகுணங்கள் காரணமாக, தமிழர்கள் இதனையும் கண்டுகொள்ளாமல், கபட இரட்டைவேடதாரியான இவர் பின்னாலேயே அலைந்திருக்கின்றனர்.
பெண்களைப் பற்றிப் படுமோசமாகப் பேசியவரும் (இவர் ஜெயலலிதாவை மேடையில் ‘பச்சைத் தெவிடியா’ என விளித்துப் பேசியவர்) – ஸ்த்ரீலோலராக விளங்கியவரும்தான் இவர். இவருடைய மனைவிகளும், பெண் குழந்தைகளும் இவரைப் பற்றி எப்படித்தான் உயர்வாக நினைக்கிறார்களோ, தெரியவில்லை; ஊக்கபோனஸாக, இவருடைய மகள் (மன்னிக்கவும், மகளின் தாயாரின் மகள்) ஒரு பெண்ணியவாதி எனத் தன்னைச் சொல்லிக்கொள்கிறார் என்பது ஒரு அவலம். ஆனால் இந்தக் கவிஞர், தஹிந்து தினசொறியில் துணை ஆசிரியராக வேலை செய்து சம்பாதித்த தொகையை வைத்துக்கொண்டு மட்டுமே — ஆனால் ‘கடும் உழைப்பின்’ காரணமாக பல்லாயிரம் கோடி ரூபாய் தேனாம்பேட்டை நிலங்களையும், பலபத்தாயிரம் கோடி ரூபாய் துறைமுக க்வீக்களையும் கன்டெய்னர் டெர்மினல்களையும் கபளீகரம் செய்து வாங்கியிருக்கிறார் என்ற காரணங்களால் தகப்பனாரின் வக்கிரவரலாற்றை சாய்ஸில் விட்டுவிட்டார் போலும்!
மேடை நாகரிகம் என்பதையே அறியாமல், கடைந்தெடுத்த அயோக்கியக் கண்ணியமின்மையுடன் – காமராஜரைப் பற்றியும் ( அண்டங்காக்கா, எருமைத் தோலன், ரஷ்யாவுக்குப் போன எருமை, தீவட்டிக் கொள்ளைக்காரன், கோமாளிக் கோமகன், ‘கருவாட்டுக்காரி சிவகாமியின் சீமந்த புத்திரன் காமராஜன்,’ கட்டைபீடிக்கார காமராஜன், கரிக்கட்டை, முதுகுத் தோலை உரித்தால் டமாரம் செய்யலாம், அறிவிலி, படிக்காத பன்னாடை, நனச்ச பனை, எரிஞ்ச பனை, மொட்டைப் பனை, மரமேறி சாணான், கிராமத்து நாட்டான், பனையேறி, காண்டாமிருகம், ஆண்மையற்றவன், ஒம்போது, அலி, பல கோடிரூபா ஸ்விஸ் பேங்குல, ஹைதராபாத்தில மாளிகை … ) எம்ஜிஆரைப் பற்றியும் (ஒம்போது, மலையாளி, திக்குவாயன்…) – ஏன் இந்திராகாந்தி (விதவை, ‘பெண் என்றால் சிலசமயம் ரத்தம் வரும்,’ …) ஜெயலலிதாக்கள் பற்றியும் படுமோசமாகப் பேசி கண்ணியம் காத்திருக்கிறார். கருணாநிதி.
- “ஏன், நான் இந்தியப்பிரதமர் ஆகிடக் கூடாதா?”
- திருக்கோஷ்டியூரில் நவீன இராமானுஜன்: ஒரு பின் நவீனத்துவ திராவிட மீளுருவாக்க, மாற்றுப் புராண எழவியல்
மனிதர், வாய்கூசாமல் பலமுறை அண்டப்புளுகுகளைப் புளுகியிருக்கிறார். பலருக்கு (ஈழத் தமிழர்கள் உட்பட) பச்சைத் துரோகம் செய்திருக்கிறார். கண்டமேனிக்கும் தப்புத்தப்பான தமிழில் எழுதிக் குவித்திருக்கிறார். அரசதிகாரத்தில் முதலையமைச்சராக இருந்தபோதே திரைக்கதை வசனங்களை எழுதி – அளவுக்கு மீறிய ஊழல் பணத்தையும் லாட்டரிச்சீட்டு மார்ட்டின்களிடமிருந்து பெற்றிருக்கிறார்.
மத்திய அரசுக்குக் காவடி எடுத்து அமைச்சுப் பதவிகளையும், ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் காலில் விழுந்து ஊழல்களுக்காக மன்னிப்பு கேட்டும், காலைச் சிற்றுண்டிக்கும் மதியவுணவுக்கும் நடுவே பகீரங்க உண்ணாவிரதம் இருந்தும் – ஒரு நவரச நடிகராகவே விளங்கினார்.
இப்படி ஒரு ஊழல்கார, அயோக்கிய, அற்பத் தகப்பனை நான் பெற்றிருந்தால் – ஒன்று, மானஸ்தனாக, அவரை வெட்டித் தள்ளியிருப்பேன் + உடனடியாக காவல்துறையில் சரணடைந்திருப்பேன். அல்லது அவரை விட்டு விலகி, தனியாக, சுயமரியாதையுடன் வாழ்ந்திருப்பேன் + அவருக்கு எதிராக வழக்குகளைப் போட்டிருப்பேன், துப்புரவாக சட்டரீதியில் ஒழித்துக் கட்டியிருப்பேன். ஆனால், எனக்கு இன்னமுமே ஆச்சரியம் தரக்கூடிய வகையில் – அவருடைய பிள்ளைகளில் ஒருவருக்குக்கூட இந்த மோசடித் தகப்பனுக்குப் பிள்ளைகளாகப் பிறந்துவிட்டோமே என்ற ஒரு சுயபச்சாத்தாபமோ, அவ்வூழல் சூழல்களில் இருந்து வெளியே வர முனைப்போ, தன்மானமோ, சுயமரியாதையோ இல்லவேயில்லை. ஆச்சரியம், ஆச்சரியம்… (நல்ல வேளை, என் தகப்பனார் குறித்து நான் பெருமை மட்டுமே படுகிறேன்; ஏனெனில், அவர் ஊழல் செய்யவில்லை + பொது நன்மைக்காக, மூன்றாம் மனிதருக்குத் தெரியாமல் தன் காசைப்போட்டு உழைத்தார். ஏனெனில், அவருக்கு திராவிடச் சுயமரியாதையிலோ அல்லது திராவிடப் பகுத்தறிவிலோ நம்பிக்கை இல்லை)
-0-0-0-0-
ஒரு முதலையமைச்சராக – செய்யவேண்டிய அடிப்படைக் காரியங்களைக் கூடச் சரியாகச் செய்யாமல் அதில் ஒன்றிரண்டு விஷயங்களை மட்டும் செய்து, புறங்கையை நக்கிவிட்டு இவர் அதற்குமேல் என்னதான் சாதித்தார்? சாதிவெறியை ஊதியதைத் தவிர? மதவெறியில் ஈடுபட்டதற்கு அப்பாற்பட்டு??
ஆனால் அவர் செய்யவேண்டிய காரியங்களை, அதிலும் சிலவற்றை அவருடைய துர்ப்புத்தியையும் மீறிச் செய்துவிட்டால் என்னவோ அவர் ஒரு அவதார புருஷன் போல இல்பொருள் உவமையணிப் பொய்களில் ஈடுபட்டுவிடுகிறார்கள், நம் முட்டாக்கூ பேடித் தமிழர்கள், வேறென்ன சொல்ல.
தமிழகத்துக்கு அவர் செய்தது இதுஅது எனப் பொய்பொய்யாக எழுதுகிறார்கள். ஹோம்வர்க் செய்யாமல் அடித்துவிடுகிறார்கள்.
உலக வரலாற்றிலேயே முதன்முதலாக – தமிழகத்தின் கருணாநிதிதான் முதலையமைச்சராக மஞ்சள் துண்டு அணிந்து கொண்டு தமிழகத்தை முன்னேற்றினார், ஏழ்மையை விரட்டினார் என்கிற ரேஞ்சில் பரணி பாடுகிறார்கள்.
ஆனால், திடமாக – அறிவியல் பூர்வமான தகவல்களுடன் சொல்வேன்: ஏதாவது ஒரு விஷயத்தையாவது – பதவியின் மாண்புக்கும் ஊழலுக்கும் அப்பாற்பட்டு அவர் செய்திருக்கிறாரா என்றால் – இல்லவேயில்லை. சுமார் 45 ஆண்டுகளாக இந்த ஆசாமியின் கயமை நாடகங்களைப் பார்த்துவிட்டு மனம் நொந்துபோய்தான் இதனை எழுதுகிறேன்.
மாறாக – இது குறித்து உங்களிடம் காத்திரமான, சரிபார்க்கும் படியான தகவல்கள் இருந்தால் (ஒரேயொரு விஷயத்தில் இருந்தால்கூட) நான் தாராளமாக என்னைத் திருத்திக்கொள்கிறேன்.
ஹ்ம்ம்.
ஆகவே, கருணாநிதியைப் போற்றுவோம். கொண்டாடுவோம். அவர் உலகைக் காக்க வந்த உத்தமர். பண்பாளர். ஏழைப் பங்காளர். புரட்சிகர நேர்மையாளர். லஞ்சம் என்றால் அவருக்கு நெருப்பு.
முதலில் பாரத ரத்னா. வேகமய்யா வேகம்…
பின்னர், உடனடியாக நொபெல் பரிசுகள். சரியா?
ஊக்கபோனஸாக – இலக்கியத்துக்கான மேன் புக்கர் விருதும், கணிதத்துக்கான ஃபீல்ட்ஸ் மெடலும் எப்படியாவது திராவிடத்தனமாக அட்ஜஸ்ட் செய்து வாங்கிக்கொடுத்துவிடுவோம், நமக்கெதுக்கு வம்பு?
பின்குறிப்பு: சாரு நிவேதிதாவுக்கு அடுத்தவருடம் இந்த விருதுகளைக் கொடுத்துக்கொள்ளலாம், வோக்கேவா?
August 9, 2018 at 23:15
Wine shop opening, scentific corruption in public life,, veeraval,Gredam on head shows, etc;
August 10, 2018 at 14:06
All of our target should be to give good education to masses free of cost …we have been waiting for that good samaritan ..who that could be ?
https://contrarianworld.blogspot.com/2018/08/blog-post_9.html
Voices in the wilderness (ironic to say the least) to become voices of enlightenment ..yours and Mr.AK’s articles should figure in main journals to be read by millions. When would that day come ?
Mr.Jeyamohan has been keeping silence for sometime ..silence is golden !
When Mr.Kamarajar left, he got few pennies as his wealth ..When do we get to see such people ?
Thanks for your patient rendering of several good articles…we understand your angst
August 11, 2018 at 14:31
Thanks, for your views and the link to Aravindan Kanniyan’s post. I read it.
This is a proof that – when he chooses to, he can write with balance & scholarship – and also with dharmic angst.
Dunno about jeyamohan though. He has a right to be silent and is exercising it. Anyway, he has written enough against mediocrity, and our main stream journalism is nothing but that.
__r.
August 11, 2018 at 00:51
உண்மையிலேயே இந்த மீடியாக்கள் ஊதிப் பெருக்கிய அவர் பிம்பத்தை பார்த்து, நான் கூட வேற யாரையோ புதைக்கிறார்கள் என நினைத்து விட்டேன்! சகிக்கவில்லை! நல்ல வேளை. உங்களைப் போன்ற ஒரு சிலர் இந்த விஷயத்தை sanity -யோடு எழுதுகிறீர்கள்!
August 11, 2018 at 14:34
அய்யா நன்றி, இந்த பற்றித் தெரியவில்லை. இந்த மனிதரைப் பற்றி எதிர்மறையாக மட்டுமே எழுதுவதற்குப் பலப்பல விஷயங்கள் இருக்கின்றன. ஆதாரங்களோடு புட்டுப்புட்டு வைக்கலாம்.
ஆனால் அயர்வு. என்ன செய்வது. இப்போது இசுடாலிர் மேல் குவியம் கொள்ளவேண்டும் வேறு…
__ரா.
August 11, 2018 at 14:34
*sanity
August 11, 2018 at 09:30
கருநாநிதி வயதில் பெரியவர் அதனால் அனைவரும் நாகரீகமாக பேசவேண்டும்
இதோ… அவர் நாகரீகமாக புளுத்திய பொன்னேட்டில் பொறிக்கப்படவேண்டிய வசன்ங்கள்
1. பருவப் பெண்களின் தோள்களில், கைபோட்டு பவனி வரும் காந்தி..
2. நேருவோ, மனைவியை இழந்தவர், சிரிமாவோ பண்டாரநாயகாவோ கணவரை இழந்தவர். இருவரும், இரண்டு மணி நேரம் அப்படி என்ன பேசினர்?
3. காஷ்மீரத்து பாப் வெட்டிய பாப்பாத்தி, விதவை இந்திரா.
4. வெளிநாட்டுக்காரியை மணந்த போபர்ஸ் புகழ் ராஜிவ்.
5. சாணான், மரமேறி, பனைஏறி, எருமைத் தோலன், காண்டாமிருகத் தோலன், அண்டங்காக்கா, கட்டைப்பீடி காமராஜன்.
6. பாவாடை நாடா அனந்தநாயகி;
7.கறுப்பன், கருத்திருமன்; ஐஸ் புரூட் சம்பத்;
8. வழிப்போக்கன் வாழப்பாடி;
9. மூப்பனார் மூளையில் கோளாறு;
10.செவிடன் ஜீவா;
11.நொண்டி ராமமூர்த்தி;
12.காவடி கல்யாணசுந்தரம்
13. மலையாளி, கோமாளி, கூத்தாடி, எம்.ஜி.ஆர்.,
14. இதயத்தில் ஈரமில்லா இத்தாலிக்காரி சோனியா;
15. பண்டாரம் வாஜ்பாய்;
16. பரதேசி அத்வானி;
17. ஆக்டோபஸ் மோடி;
18. காந்தாரி, கவுதாரி, சூர்ப்பனகை, ஜெயலலிதா.
19. செல்லாக்காசு ஓ.பன்னீர் செல்வம்;
20. அவசரக்குடுக்கை, வாய்க்கொழுப்பு, மரம் வெட்டி ராமதாஸ்;
21.போதை நடிகர் விஜயகாந்த்;
22. தரகர், தா.பாண்டியன்;
23.கம்யூனிஸ்ட் வேடதாரி, ஜி.ராமகிருஷ்ணன்;
24. மந்தபுத்தி திருமாவளவன்.
25. வேலி தாண்டிய வெள்ளாடு குஷ்பு;
26. ஓடுகாலி திருநாவுக்கரசு.
27. ஈ.வெ.ரா.,வை ஏமாற்றிய புறம்போக்கு, கி.வீரமணி;
28 .கள்ளத் தோணி, வைகோ.
29. இந்து என்றால் திருடன்;
30. ராமன் ஒரு குடிகாரன்;
31.கன்னியாஸ்திரிகள் எல்லாரும் கற்புக்கரசிகள் அல்ல;
32.தாடியுள்ள இஸ்லாமியர்கள் எல்லாரும் பயங்கரவாதிகள் தான்.
33. சொரணை கெட்ட தமிழன், மரமண்டைகள், வாழை மட்டைகள்,
34. கலாம் என்றாலே கலகம்
35.சோற்றால் அடித்த பிண்டங்கள்.
August 11, 2018 at 14:41
அய்யா, நன்றி.
இந்தத் திருமாவளவன் பற்றி, ராமதாஸ் பற்றி, ஹெச் வி ஹண்டே பற்றி – இந்த ஆசாமி பேசியிருப்பது பற்றி எழுத (எனக்கே கூட) கூசும். நீங்கள் சொல்லியிருப்பதைவிடப் படுமோசம்!
இந்த ஆள் (+ கருப்பையா மூப்பனார், துரைமுருகன், ஸ்டாலின் + பிற உதிரிகள்) அண்ணா அறிவாலய ஹால் ஒன்றில் படுமோசமாகக் காங்கிரஸையும், அஇஅதிமுகவினரையும் விமர்சித்தத்தை – நேரில் பார்த்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன். (மேற்கண்ட நால்வரும் இப்படி மோசமாகப் பேசினர்)
தெருவோர ரவுடி உதிரிகள் பேசுவதையும் விடக் கேவலமான பேச்சுகள் அந்தத் திராவிடப் பேச்சுகள்.
நம் தமிழர்களின் தரம் அப்படி.
மக்கள் எப்படி, தலைவர் அப்படி. அசிங்கம்.
__ரா.
பின்குறிப்பு: கொஞ்சம் மேலதிகச் சிரத்தையுடன், உங்கள் பின்னூட்டத்தை எழுதக்கூடாதா?
August 15, 2018 at 14:06
https://www.thequint.com/amp/story/news%2Findia%2Fvedic-chants-at-atheist-karunanidhis-home
செலவு பண்ணி, ஆரியர்களிக்கு, தலைவர் ஆசி பண்ணியபோது
August 15, 2018 at 16:08
அப்பப்போ கொஞ்சம் ரிலாக்ஸ் ப்ரோ
July 10, 2019 at 07:53
[…] + https://othisaivu.wordpress.com/2018/08/09/post-874/ + […]