கருணாநிதி – ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஏழு பகுத்தறிவுக் குறிப்புகள் + கேள்விகள்

July 31, 2018

முன்குறிப்புகள்:

1. சாகக் கிடக்கிறவர்களை எதிர்மறையாக விமர்சனம் செய்யக்கூடாது எனும் போலித்தனமான அறவுணர்ச்சி(!) எனக்கு சர்வ நிச்சயமாக இல்லை. ஏனெனில், நாமெல்லாரும் – ஒருவர்விடாமல் (இதை எழுதும் நானும், வேலைவெட்டியற்று மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கும் நீங்களும் கூடத்தான்!) அமோகமாகச் சாகப் போகிறவர்கள்தாம், நல்லவேளை.

மேலும் காலாகாலத்தில், கடமைகள் முடிந்துவிட்டால், பூமிக்கும் பிறத்தியாருக்கும், முக்கியமான நம் செல்லக் குழந்தைகளுக்கும் பாரமாக இருக்காமல், தொந்திரவு கொடுக்காமல் – முட்டுக்கட்டையாக இருக்காமல் – கட்டுமரமோ கள்ளத்தோணியோ திருட்டுரயிலோ ஏதோ ஒரு எழவில் ஏறிப் போய்ச் சேரவேண்டும் என்பதும் ஒப்புக்கொள்ளக்கூடியதே!

ஆக, இம்மாதிரி அர்த்தமற்ற அறவுணர்ச்சி மனச்சாட்சி மரியாதைநிமித்தம் அரசியல்பண்பு(!) சகிப்புத்தன்மை யாதும்ஊரானே யாவரும்கோளாறு சர்வேஜனோ வகையறா எழவு உச்சாடனங்கள் செய்தால், நாம் ஒரு மசுத்துக்கும் ஒரு அற்பமானுடப்பதரைப் பற்றியுமேகூட எந்தவொரு விமர்சனக் குப்பையையும் செய்யவே முடியாது.

அந்த ஆசாமி பற்றி, அசைக்க முடியாத நிரூபணங்களும் சாட்சிகளும் இருந்தாலுமேகூட, அவற்றைக் கண்டுகொள்ளாமல் பெருந்தன்மையுடன்(!), ஏதோ அந்த ஆசாமி வாழ்ந்தபோது ஒரு வாழும் புத்தரைப்போல புத்தரைமாற்றுத்தங்கமாக – பரிசுத்தமாகவும் பரோபரகாரத்துடன் நடந்துகொண்டமாதிரி கொடூரக் கற்பனைகள் செய்து அதற்கேற்றது போல ‘அரசியல் கலாச்சார’ நடிப்பெழவை வெட்கமில்லாமல் நடிக்க வேண்டும். நல்லவேளை, எனக்கு இம்மாதிரி காரிய ‘நல்ல’ பழக்கங்களோ பண்புகளோ இல்லை. இயற்கைக்கு நன்றி.

2. அஞ்சலி ஆறெலி எழவுகளும் புகழ் பாடுவதாகவே இருக்கவேண்டும் என்கிற அரசியல்சரிகமபதநிச போலியிசைநடன எழவும் எனக்கு ஒத்துவராது.

3. தமிழகம் பூராவும் ஸ்தம்பித்துப் போய், ஏதோ ஒரு மனிதவாழ்க்கை முடிந்துபோவதற்காக மகா சோகத்துடன் காத்துக்கொண்டிருப்பதும், ஒப்பனை ஒப்பாரிகளும், திடீரெக்ஸ் நாடகங்களும் – கேட்கவும் பார்க்கவும் நாராசமாக இருக்கின்றன. ஏதோ தமிழக வரலாற்றெழவே முகமு முகபி எனப் பார்க்கப்படவேண்டிய பகீர் போல அப்படியொரு சும்பத்தனமான பில்ட்அப். பொதுவாகவே, எம் மூளையற்ற தமிழனானவன் ஒரு உணர்ச்சிப்பிழம்பு எருமை என்பதில் எனக்கு ஐயமேயில்லை.

இதில் விரயமாகும் அபரிமிதமான மனித நேரம் என்பது துக்கிக்கத்தக்கது.

ஆக.

பெரியார் ஈவெரா இன்றிருந்தால் இந்த எழவுகளைக் குறித்து அவர் கருத்து எப்படி இருந்திருக்கும் என ஒண்டியா ஒரு 5ஷ்டார் ஓட்டல்ல ரூம்பு போட்டு றொம்ப தாஸ்தியா ரோசிச்சி, ஆனால் – ஒரு முன்னேற்றமும் இல்லாமல் தூங்கிவழிந்ததால் – என் கனவில் (ஏன், என் கனவில் அவர் வரக்கூடாதா? எனக்கு அதற்குக்கூட இடஒதுக்கீடு கிடையாதா??) அவர் வந்து என்னுடன் பண்புடன் பகிர்ந்துகொண்ட கீழ்கண்ட கவலைக் குறிப்புகளையும் கேள்விகளையும் உங்களுடன் பகீர்ந்து கொள்கிறேன், நன்றி.

பெரியார் நாமம் வாழ்க.

-0-0-0-0-0-0-

இப்போது என் பகுத்தறிவு (like, totally) சார்ந்த ஏழு கவலைகளும் (ஆகவே, கேள்விகளும்)

1. அஞ்சலிகள்: கொஞ்சம் பயமாகவே இருக்கிறது. ‘ஓடுபிணம் ஓட உறுபிணம் விழும்வரை’ வாடியிருந்து ஆனால் பிணம் விழுந்த அடுத்த வினாடியே அஞ்சலியை முந்தித் தரும் எழுத்தாளச் சிகாமணிகளும் பிரபலஸ்தர்களும் ஊடகப்பேடிகளும் இப்போது ஓவர்டைம் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள் – என்பதை நினைத்தால் அடிவயிறு ஒரேயடியாகக் கலங்கிக் கொண்டிருக்கிறது. என்னவெல்லாம் எழுதப் போகிறார்களோ! பிணம் நம்மை எழுந்துவந்து கேள்வி கேட்காது என்கிற தைரியத்தில் எப்படியெல்லாம் அட்ச்சிவுடப்போகிறார்களோ! ஒப்பாரி நடைக் கவிதைகளாக கழுதைகளின்மீது ஆரோகணித்து, ஆனால் அவரோகணிக்காமல் இருந்து நெடும்பயணம் செய்து நமக்கு நெடுங்குருதி வர உருட்டித் தட்டப் போகிறார்களோ!

இந்த அஞ்சலிதேவன்களை நினைத்தாலே எனக்குக் கதி கலங்குகிறது. (உலகத்திலேயே படுவேகமாக ஓடுபவன், அஞ்சலியை முந்தித் தரும் தமிழ் எழுத்தாளச் சிகாமணிதான்! 17/04/2015)

இச்சமயம் – கவிஞ்ஜர் மனுஷ்யபுத்திரனுக்கு நேரடியாகவே ஒரு மிகப்பணிவான விண்ணப்பத்தை வைக்கிறேன்: தயவுசெய்து, ப்ளீஸ்! ஒரேயொரு தடவை… இந்தத் தடவை வேண்டாம்… மன்னித்துவிடுங்கள்… இன்னொரு வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும்? நிறைய திராவிடர்கள் வரிசையில் இருக்கிறார்கள். கவலை வேண்டேல்.

…ஆனால், பலப்பல முறை நமக்கு போலிமரியாதை மலர்வளையங்களையும் ஆல்இந்தியாரேடியாவின் அதிகாலை ஷெனாய் வாதன்களையும், ‘யாரோ செத்ட்டாங்க, இன்னிக்கி லீவு, ஹையா’க்களையும் தமிழ் பத்திரிகைகளின் கண்ணீர் மல்கும் அஞ்சலிகளைப் பார்த்தும் கேட்டும் படித்தும் தெரிந்தும் – ஓரளவுக்காவது முன்னனுபவம் இருப்பதால் நம்மால் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியுமோ?

… இவ்வளவு ரோசிச்சும் எள்தியும்…

ஐயய்யோ! எனக்கே கை நம நமவென்கிறதே! ஐயகோ! இயற்கையே!! என்னையும் அஞ்சலிக் கண்ணீர்க்காதையை எழுதவைத்துவிடாதே! சரியா?

2. கடற்கரையின் துயரம்: எந்தப் பிரபல திராவிட அரசியல் பிணம் விழுந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை புதைக்க இடமெல்லாம் தேடமாட்டார்கள். உடனடியாக மெரீனா பீச்சாங்கரை போய், போய்ச்சேர்ந்த கால வரிசையாக அடக்கத்துடன் அடக்கத்தைச் செய்தவண்ணம் இருப்பார்கள்.

இனிமேலாவது மெரினாவில் இதனைச் செய்யாமல், ஒவ்வொரு கடற்கரை மாவட்டத்துக்கும் இடஒதுக்கீடு செய்வார்களா? உதாரணமாக, அடுத்தமுறை திருவாரூர் அருகில் நாகப்பட்டினம் நாகூர் வேளாங்கண்ணி என எதற்காவது இந்த கடற்கரை சமாதி பாக்கியம் தரலாமே! அப்பகுதிகளுக்கு சுற்றுலா வசதிகள் மேம்படவாவது இது காரணமாகலாமே?

மேலும் ஜெயலலிதா சமாதிக்கு அடுத்ததாகத் தெற்கே புது சமாதி ஒன்றை அமைக்க கொஞ்சம் அரசியல் பிரச்சினைகள் வரலாம். அண்ணாதுரை சமாதிக்கு வடக்கே இடமும் இல்லை. மெரீனா சாலைக்கு ஒட்டிக்கொண்டு வேறு இது அமையவேண்டும். தனியாக மயிலாப்பூர் கலங்கரை விளக்கம் பக்கத்தில் அமைக்கலாமென்றால், அந்தச் சமாதி பாவம், அனாதையாக இருக்கும். தேவையா?

ராஜ்பவன் வளாகத்தில் இன்னும் கொஞ்சம் நிலத்தைச் சாப்பிட்டு அதில் ஒரு புது இடுகாட்டைக் கட்டலாம் என்றால் – அங்கெல்லாம் ஒர்ரேயடியாக காங்கிரஸ் துர்வாசனை. மேலும் அந்தக் கவர்னர்வேறு – அவருக்கு வீடுவேறு வெகு அருகில் இருக்கும். சவத்துக்கும் தடவிக்கொடுக்கும் ஆசாமியாக திராவிடர்களால் சித்திரிக்கப்படும் அவருடன் புதைக்கப்பட்டதற்கு, ஒத்துவருமா சொல்லுங்கள்? மேலும் சமாதி இன்ஸ்பெக் ஷன் செய்கிறேன் ஆய்வு அறிக்கை தரப்போகிறேன் பேர்வழியென அவர் கிளம்பினால் அச்சமாதியிலிருந்து இன்னும் எத்தனை திராவிட எலும்புக்கூடுகள் கிளம்புமோ, தேவையா?

ஆகவே, மாநில சுயாட்சி மாதிரி, தனியான தனித்துவமான ஒரு இடத்தில், ஒரு சமாதி சுயாட்சி கொடுத்தால்தான் திராவிடர்களின் ஆன்மா பகுத்தறிவுடன் சாந்தி முகூர்த்தத்தை அடையும் என்பதைப் புரிந்து தெளிந்தால், எல்லா பிரச்சினைகளும் சிடுக்கவிழ்க்கப்படுமோ?

அல்லது சுற்றுச்சூழல் பயங்கரவாதிகளான கஞ்சினீயர் சுந்தரராஜன், பியூஷ் ‘மனுஷ்’ ஸேத்தியா, உதயகுமாரரார், வைகோவால்சாமியார் போன்றவர்கள் இதற்கெதிராகவும் சாமியாடி – ‘கடற்கரையை பிணக்கரையாக்காதே’ என புரட்சிகர அக்கறையோடும் போராடினால் – அதற்கும் தமிழ் சினிமாப் பேடிகள் தெகிர்யத்துடன் ஆதரவு கொடுத்து புதுப்புது கருப்புச்சொக்காயும் கால்சராயும் அணிந்து ஒருநாள் (அல்லது ஒரு வேளை?), உம்மென்று மூஞ்சியை வைத்துக்கொண்டு உண்ணாவிரதம் இருப்பார்களோ?

இந்த மாசுபடலுக்கு எதிராகவும் நம் கூமுட்டைப் புரட்சிகரப் போராளி மாணவர்கள் – மெரீனா கடற்கரைக்கே வந்து டேரா அடித்துப் போராடிவிடுவார்களோ?

சவாலே, சமாதி??

கொஞ்சம் குழப்பமாகவே இருக்கிறது இல்லையா? :-(

3. ஆராய்ச்சி: யாராவது பிரபலஸ்தர், பிணஸ்தர் ஆனால் – ஒடோடி வந்து அஞ்சலி செலுத்துபவர்கள், பொதுவாகவே கடுமையாக ஆராய்ச்சி செய்து – எப்படி தாங்களும் அந்தப் பிரபலஸ்தரும் நெருக்கமாக இருந்து என்னவெல்லாம் நாட்டுக்கு நன்மை செய்தோம் என நீட்டி முழக்கி எழுதுவார்கள்.

இதில் ஒரு பிரச்சினை என்னவென்றால் – கடந்த 45 ஆண்டுகளாக இந்தத் திராவிட அலங்கோலத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கு, சிரத்தையுடன் தேடோதேடென்று தேடினாலும் – இந்தக் கலைஞரார், நம் தமிழகத்துக்கு ஒரு எழவையும் அபரிமிதமாகவோ, குறிப்பிடத் தக்கதாகவோ செய்யவில்லை – ஆனால், அவருடைய பலப் பல குடும்பங்களின் இனிவரும் தலைமுறைகளையும்கூட இனிதாக வாழ ஆவன செய்து, ஓடியோடித் திரவியம் சேர்த்திருக்கிறார் என்பது 100% உண்மை. கேட்டால் ‘புறங்கையைத் தான் நக்கினேன்’ என்பார், பாவம். ஆக – நான் என்னதான் அகழ்வாராய்ச்சி செய்தாலும் – நம் தமிழகத்துக்காக ஒரு பெரிய/குறிப்பிடத்தக்க விஷயத்தைக் கூட அவர், தன் மதிகூர்மையாலோ உழைப்பினாலோ சாதித்ததாகத் தெரியவில்லை – இந்தத் திருவள்ளுவர் சிலை அசிங்கங்களைத் தவிர…

…என்பதெல்லாம் ஒரு பக்கமிருக்க…

…இன்னொரு பக்கத்தில் தமிழ் பல்கொலைக்கழகங்களில் தமிழ், சமூகவியல், ஊழலியல் என மானாவாரியாக ஸெட்டப் செய்யப்பட்டிருக்கும் துறைகளில் — ‘பிரபலஸ்தரும்-ஐன்ஷ்டீனும்,’ ‘பிரபலஸ்தர் வாழ்க்கையில் செவ்வியல் பாதிப்பு‘ எனக் கலைச்சொற்கள் நிரம்பித் ததும்பும் ஆராய்ச்சியகளைவேறு அகழோஅகழ் என அகழ்வார்கள்.

ஆக, நானும் ஏட்டிக்குப் போட்டியாக – ‘ஆதிச்சநல்லூரும் ஆதிக்கசாதிகளும்: ஒரு ஃபூக்கோவிய பின் நவீனத்துவப் பார்வை,’ ‘கீழடி திராவிடனும், காலடி சங்கரனும்: ஒரு இந்துத்துவ சதி‘ என்றெல்லாம் நான் தயாராகத் தட்டச்சிட்டு வைத்திருக்கும் ஆராய்ச்சித் தலைப்புகளை ஏறக்கட்டிவிட்டாலுமேகூட, பிரபலஸ்தப் பிணப் பிரச்சினையை மிகவும் ஆய்ந்தால், ஆயாசமே மிகும் என்பதால் ‘பிரபலஸ்தரும் அவர்தாயார் வயிற்றில் கட்டிக்கொண்ட பிரண்டையும்‘ என்கிற தலைப்பில் ஆழ்ந்து ஆராய நான் முயலக்கூடுமா?

அல்லது, ‘கருணாநிதியின் குறளோவியம்: புறங்கையை நக்கினார்க்கினியர் உரை‘ எழுத முந்திரிக்கொட்டைபோல முந்திக்கொள்ளவேண்டுமா?

நேரம் அவ்வளவாக இல்லை என்றாலும், நீங்கள் உதவுவீர்களா?

4. பொதுச்சொத்து நாசம்: நம் தமிழகத்தின் வீரதீரப் பெருமைகளில் ஒன்று, எந்த அரசியல்வாதி மண்டையைப் போட்டாலும், அவனுடைய (அல்லது அவளுடைய) உதிரிக் குண்டர்கள் – உடனே சோகத்துடன் கிளம்பி, சரக்கடித்துவிட்டு பேருந்துகளின் மீது கல்லெறிவது, கடைகளை அடைப்பது/எரிப்பது, மரங்களை வெட்டிச் சாய்ப்பது, சோகத்தில் குஞ்சாமணி தெரிய குத்தாட்டம் போடுவது, ரயில்வண்டிமுன்னால் படுப்பது போன்ற பரோபகார லீலைகளில் ஈடுபடுவது. இந்த எழவுகளை ஆரம்பித்து வைத்ததில் கருணாநிதிக்கு முக்கியப் பங்கு இருப்பதால்…

…இந்த முறை – பின்விளைவுகளினால் ஏற்படும் பொதுச் சொத்து நாசங்களுக்கும், பொது மக்களின் கால விரயத்துக்கும் – திமுக கட்சியே நஷ்டஈடும் கஷ்டஈடும் வழங்குமா?

சந்த் கிடைத்தால் அதில் புகுந்து ‘கண்ணீர் அஞ்சலி’ பந்த் செய்து – அன்றாடக் கூலி குப்பன் சுப்பன் வயிறுகளில் அடிக்கும் திராவிட வழமை இந்தமுறை நடக்காது என அறுதியிட்டுக் கூற முடியுமா? அப்படி நடந்தாலும், திராவிடர்கள் நஷ்டஈடு தருவார்கள் என்று நம்பலாமா?

நேர்மைக்கும், நாணயத்துக்கும் பேர்போன திராவிடக் கட்சிகள் எல்லாம் இம்மாதிரிப் பொதுச்சொத்து நாசலீலைகளில் அவ்வப்போது ஈடுபடுபவைதான் என்பதால் – அக்கட்சிகளெல்லாம் நாட்டு மக்களுக்கும் நாட்டின் அரசுக்கும் நஷ்டஈடு வழங்குவார்களா?

5. எரியூட்டிக்கொள்ளும் தற்கொலை முட்டாள்தனங்கள்: எந்த ஒரு பெருந்தலை மண்டையைப் போட்டாலும், அதற்காகவே காத்திருக்கும் போக்கத்த குளுவான்கள் தற்கொலைகளில், தன்னை எரியூட்டிக்கொண்டு எரிபொருட்களை விரயம் செய்தவதைத் தமிழர்களாகிய நாம் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.

முதுகெலும்போ சுயசிந்தனையோ தம் குடும்பத்தின்மீது பற்றோ/மரியாதையோ அற்ற இந்த தற்கொலைப் பேடிபேமானிகள் செத்தவுடன், பிணத்துக்கு மலர்வளையம் வைத்து, அதனுடன் ஒரு ஸெல்ஃபி எடுத்துக்கொண்டு – கொஞ்சம் கருணைப்பணத்தைப் பிணத்தின் பக்கம் விட்டெறிவது என்பது திராவிட வழக்கம். சில சமயங்களில் திராவிட அரசியல்வாதிகள் கொடுப்பார்கள் (எல்லாம் நம்மிடமிருந்து திருடியதுதான்!), பிற சமயங்களில், திராவிட அரசியல்வாதிகள் மக்கள் வரிப்பணைத்தையும் இப்படி வாரி வழங்குவார்கள்…

ஆனால் இந்தமுறை, திராவிடக் கட்சியானது – இளமையும் துடிப்பும் நேர்மையும் செயலூக்கமும் மூளையும் நிறைந்த தலைவரால் வழி நடத்தப் படுவதால் – இம்மாதிரித் தற்கொலைக் கூவான்ககளின் பிணத்தை மருத்துவமனை படிப்புக்குக் கொடுத்து, அவர்களின் திராவிடசெயல்வீரத்தனமான ஐந்து சகவுடன்பிறப்பு நண்பர்களை நையப்புடைத்து, அவர்களின் மீது கேஸ் போட்டு, அவர்கள் சொத்துகளை ஜப்தி செய்ய ஆவன செய்து – நம் தமிழர்களை நல்வழி, நேர்மைவழி, மூளையுள்ள வழிக்கு அவர் கொண்டு செல்வார் என நம்பலாமா?

ஊக்கபோனஸாக – தற்கொலைப் போராளிகளின் வட்டார திமுக செயலாளருக்கு, ஒன்றியச் செயலாளருக்கு, மாவட்டச் செயலாளருக்கு – ஒரு பொதுக்கூட்டம் வைத்து முறையே 100 கசையடி, பிரம்படி, புளியவிளாறால் அடி என அவர்களுடைய பெருங்குண்டிகளில் அன்புடன் தானம் செய்தால் – அது மிகவும் நன்றாக இருக்குமே!

இம்மாதிரி ஒருதடவை செய்தாலே, தமிழகமே திராவிடத் தற்கொலைக் கூமுட்டைத் தனத்தைக் கண்டால் அலறுமே! என்ன சொல்கிறீர்கள்?

6. பகுத்தறிவும் சுயமரியாதையும்: பெரியார் வந்து என் காதில் பிரத்தியேகமாகச் சொன்னது போல, கீழ்கண்ட கேள்விகளுக்கு எம் திராவிடர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்…

பகுத்தறிவு எழவின் படி – எந்தவொரு எழவுமே ஒரு சாதாரண, இயல்பான நிகழ்வுதான். இதைப் பற்றி சோகப்படவோ, பிலாக்கணம் வைக்கவோ, சந்தோஷப்படவோ – ஒரு எழவு முகாந்திரமும் இல்லை. இது பெரியாரிய வழிதானே?

திராவிடர்கள் புடம்போட்ட பகுத்தறிவு வாதிகள் தாமே! சடங்குகள், கற்பு, தாலி இவையெல்லாம் அவர்கள் நோக்கில் பைத்தியக்காரத் தனங்கள் தாமே?

ஆக – பகுத்தறிவுடன் பிணத்தைக் கும்பிடுவது எப்படி – ஒரு மரியாதை நிமித்த எழவாகவேகூட!

பகுத்தறிவுடன், உயிரற்ற சதைப் பிண்டத் திரளின்மீது பயபக்தியுடன் மாலை போடுவது எப்படி?

பகுத்தறிவு சார் மூடநம்பிக்கையுடன் தாலி அணிவதை ஒப்புக்கொண்டாலுமேகூட, நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டுக்கொண்டாலுமேகூட — பகுத்தறிவுடன் தாலியை அறுப்பது எப்படி? இது தேவையா?

அண்ணா போய்ச்சேர்ந்தவுடன் ‘அண்ணா நாமம் வாழ்க’ – சரி. இந்த நாமம் என்பது என்ன. அவர் பெயர் வாழுமா? இதென்னடா பகுத்தறிவு? ஒரு அற்பப் பெயருக்கு எப்படி வாழ்க்கை மண்ணாங்கட்டி தெருப்புழுதி எல்லாம் இருக்கும்?

இப்போது என்ன சொல்லப் போகிறார்கள் எனக் கற்பனை செய்தாலே கொடூரமாக இருக்கிறது.

7. சொத்து சண்டை: கருணாநிதி அவர்கள் மிகுந்த பகுத்தறிவுடன் உழைத்து, தம் குடும்பங்களுக்காக மட்டுமே சேர்த்த சொத்து, தன் வழியாகப் பிறருக்குச் சேர்த்த சொத்துகள் பாவம், கொஞ்சம் அதிகப்படியாக இருப்பதால் – அவருக்குப் பின் பாகப் பிரிவினைக்காக – சர்வ நிச்சயமாகச் சண்டை என்பது வந்தே தீரும். ஆனால் அச்சண்டைகள் வீடுகளுக்குள்ளேயே போட்டுக்கொள்ளப்பட்டால், தமிழகத்தின் பொதுச் சொத்து காப்பாற்றப்படும் அல்லவா?

இல்லையேல் – உயிரின் உயிரான (இதற்கு என்ன எழவு குப்பை அர்த்தம் என்பது கடந்த 40 ஆண்டுகளாக எனக்குப் புரியவில்லை, உதவ முடியுமா?) கழக மறவ உடன்பிறப்புகள், திராவிடத் தலைவர்களின் சொத்துகளைக் காக்க, அவர்கள் சிறைக்குப் போவதைத் தடுக்க – அமோகமான சந்தோஷத்துடனும் சுய அர்ப்பணிப்புடனும் (அண்ணா நகர் ரமேஷ் போல) குடும்பத்துடன் விஷம் குடித்துத் தற்கொலைகளில் ஈடுபடுவதையும், அற்புதமான டைமிங்குடன் (சாதிக் பாட்சா போல) தூக்கில் தொங்குவதையும் தவிர்க்க முடியாதே?

ஆனால் அவர்கள் அப்படித் தியாகம் செய்தால்தானே நாங்கள் வெளியே குற்றவுணர்ச்சியோ பயமோ அற்று பகுத்தறிவுடன் உலா வரமுடியும் என்று திராவிட குல திலகங்கள் பதில் கேள்வி கேட்டால், என்னால் என்ன பதில் சொல்லமுடியும், சொல்லுங்கள்?

-0-0-0-0-

தந்தை பெரியார் கேட்கிறார்!

தமிழர் தலைவர் என் கனவில் தொடர்ந்து வந்து துளைக்கிறார்!

பகுத்தறிவுப் பகலவன் பளிச்சென அருள் பாலிக்கிறார் என நினைக்கும்போதே படுத்தி எடுக்கிறார்!!

பக்கா சுயமரியாதையும் பகுத்தறிவும் மிக்க திராவிடர்கள் இக்கேள்விகளுக்குப் பண்புடன் பதிலிட முடியுமா?

நன்றி.

===

12 Responses to “கருணாநிதி – ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் ஏழு பகுத்தறிவுக் குறிப்புகள் + கேள்விகள்”

  1. Unknown's avatar Anonymous Says:

    [அகற்றப்பட்டது]

  2. jay673's avatar jay673 Says:

    ‘கீழடி திராவிடனும், காலடி சங்கரனும்: ஒரு இந்துத்துவ சதி‘ :D :D :D wont be surprised if i see an article in this name


  3. அடேய் அனாமத்து அரைகுறைக் கூவான்களே,

    முட்டாள்களே! ஏதாவது பகுத்தறிவுடன் சொல்லமுடிந்தால் சொல்லவும், நான் கேட்டுக்கொள்கிறேன், அசை போடுகிறேன்.

    உதிரிகளே! நான் சொல்வதில் தவறிருந்தால் சுட்டிக்காட்டவும், திருத்திக்கொள்கிறேன்.

    நான் சொல்லும் விதத்தில் தவறு(!) கண்டால் – அதற்கு உங்கள் அயோக்கியத் திராவிடத் தலைவர்களின் அசிங்க, அநாகரிக, பேடித்தன உதிரிப் பேச்சுகளை நீங்கள் கேட்டிருக்கும் துர்பாக்கிய நிலை உங்களுக்கு ஏற்படவில்லை – அல்லது நீங்கள் மாற்றுக் காதாளர், மாற்றுக் கண்ணாளர் போன்றவை மட்டுமே காரணங்கள்.

    என் சட்டையைத் தூக்கிப் பார்ப்பதற்கு முன்னால் – முதலில் உங்கள் திராவிடக் குதங்களை நோண்டிப் பார்க்கவும். உங்கள் மேடை நாகரிகம் நன்றாகவே புரியும். நன்றி.

    இல்லையேல், உங்கள் அனைத்து ஓட்டைகளையும், முடிந்தால் உங்கள் தலீவர்களுடைய மகத்தான துவாரங்களையும் மூடிக்கொண்டு அகலவும்.

    அன்புடனும் கரிசனத்துடனும்,

    __ரா.

  4. Unknown's avatar Anonymous Says:

    Sir, missing in this article is the bard of TN ..His writings are golden embellished with pearls and diamonds . Your composed writing is to be lauded-much appreciated. Regards

  5. A.Seshagiri's avatar A.Seshagiri Says:

    கடந்த நான்கு நாட்களாக அலப்பறை தாங்க முடியவில்லை.யாரிடம் சொல்லி புலம்புவது என்று தங்கள் பக்கம் வந்தால் நீரோ ராம்கியை பிடித்து தொங்கி கொண்டிருந்தீர்.நமது கொடுப்பினை அவ்வளவுதான் என்று நினைத்தபோது………. :->


    • என்ன செய்வது சொல்லுங்கள், வாழ்க்கையின் முடிவு என்பதே தொங்கல்தான்…

      முடிவை முன்னமே நிர்ணயம் செய்யமுடியாமல் இருக்கும் நியதிதான், வாழ்க்கையை சுவாரசியமாக்குகிறதோ என்ன எழவோ!


  6. […] கருணாநிதி – ஈவெரா ‘பெரியார்’ அவர்களி… 31/07/2018 […]

  7. செந்தில்'s avatar செந்தில் Says:

    நீங்க என்ன சொல்ல வாறீங்க என்ன சொல்றீங்க ஒன்னும் புரியல.பெரியாரை பின்பற்றுபவர்களை விடுங்க,
    பெரியார் பற்றிய உங்கள் கருத்துதான் என்ன சொவல்லுங்கள் ஐயா…


    • ஐயா செந்தில்,

      இது உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினை அல்ல. எனக்குமே நான் என்ன சொல்லவருகிறேன் என்று பலசமயங்களில் புரிவதில்லை. கவலை வேண்டேல். ஆனால், ஏற்றம் அடைக!

      இது ஒருபுறமிருக்க, என் கருத்துகள்:

      1. என்னால் எதிர்மறைக் கருத்து சொல்லப்படுவதற்கும் ஒருவருக்கு அடிப்படைத் தகுதிவேண்டும். அது ஈவெரா விடம் இல்லை. அவரிடம் இருந்தது விடம் மட்டுமே.

      2. அவர் ஒரு மூர்க்கமான மூடர். படிப்பறிவற்றவர். ஜாதிவெறியர். வெள்ளையனின் அடிவருடி.  தீவிரஇஸ்லாம்வாதப் பொறுக்கிகளுக்குத் துணைபோனவர். பொய்யர் – தன்னைப் பற்றி உலாவும் மிகைக் கதையாடல்களைக் கண்டிக்காதவர். (இளம் பிராயத்தில் பொம்பளைப் பொறுக்கி கூட)

      3. இவர் தமிழகத்துக்கு ஏற்பட்ட விபத்து. இந்த ஆசாமிக்குப் பின்னால் அணிதிரளும் ஆசாமி பேமானிகள், மூளையற்ற பேடிகள் இருப்பது நம் துரதிர்ஷ்டம்.

      4. இவரது, ஒருமாதிரி ஒப்புக்கொள்ளக்கூடிய இரு நல்ல பங்களிப்புகள்:

      4.1 தமிழ் எழுத்துகளைச் சீர்திருத்தம் செய்ய எடுத்த முயற்சி.

      4.2 ‘திராவிடன்’ எனும் பொறுக்கி, கொள்ளைய, (கலாச்சார, மகளிர் ரீதிகளில்) கற்பழிக்கும் அயோக்கிய கும்பல்களை ஒரு ஒட்டுமொத்த லும்பன் திரளாக நம்மால் கண்டுகொள்ளப்படுவதற்கு முஸ்தீபு போட்டது. (இந்த மாதிரி சகலஜாதி, மதங்களைச் சார்ந்த அனைத்துப் பொறுக்கிகளும் ஒரே பெயரில் அணிதிரள்வது, எனக்குத் தெரிந்து தமிழகத்தில் மட்டுமேதான் நடந்திருக்கிறது! ஈவெரா வாழ்க!)

      போதுமா?

      (சமைக்கச் செல்லவேண்டும், நன்றி!)


  8. […] பின்புலம். தப்பித்தவறி ஏதாவது பூகம்பம் (=flower pole) வந்து அல்லது கடற்கோள் (=sea planet) வந்து கோள் மூட்டினால் ஒழிய, ஏறத்தாழ இவைதான் ஈவெரா குறித்த என் முடிவான ‘கருத்துகள்.’ […]


Leave a Reply to வெ. ராமசாமி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *