எஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ!) – குறிப்புகள்
May 22, 2018
ஒரு அன்பர் கடிதம் எழுதியிருக்கிறார்….
ஒத்திசைவு ராமசாமி அவர்களுக்கு,
என்ன சார், பா.ஜ.கா வின் தூம இந்தியா ஐயோ மன்னிச்சுடுங்க தூய்மை இந்தியா திட்டத்துக்கும் காற்று மாசுக்கும் வித்தியாசம் தெரியாத திராவிடத் தறுதலைகல போட்டு வறுத்தெடுத்த உங்க கட்டுரை உண்மையில் அற்புதம்.
அதில் உள்ள சில கருத்துகளை எடுத்து நம் தமிழ் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் வேறு ஒரு செய்தியோடு கீழ்க்காணும் படி இணைத்துப் பார்க்கிறேன்.
தவறு இருப்பின் மன்னித்துக் (கொல்லுங்கள்)!செய்தி: பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்திய வழக்கில் எஸ் வி சேகர் ஜாமீன் மனு ரத்து; கைது செய்ய உயர்நீதி மன்றம் வலியுறுத்தல்
இனி உங்கள் கட்டுரையில் இருந்து சில வரிகள் மேற்கண்ட செய்திக்கு பொருந்தும்படி,
// நான் ஆதாரங்களோடு அவர்கள் அயோக்கிய அற்பத்தனங்களையும் பொய்களையும் அம்பலப் படுத்துகிறேன் //
// பொதுவாகவே மானங்கெட்டதனமும், அடிப்படை ஒழுக்கமின்மையும், கொள்ளையில் குவியமும் – அவர்களைக் கீழ்மையான, படுமோசமான நீச நிலையில் தான் வைத்திருக்கின்றன //// …வோத்தா இந்த எஸ் வி சேகர் தெனாவட்டு சொங்கிப் பயல வெச்சிக்கினு வொங்கம்மாள, இன்னாதான் ஸெய்றதூன்னிட்டு என்க்கி பிர்யவேயேயில்ல பா.//பின்குறிப்பு: எஸ் வி சேகர் என்பதற்கு பதில் வுடுதல தெராவிட என்றிருந்தது.
எனது சந்தேகங்கள்,
1. உயர்நீதி மன்றம் வலியுறுத்தியும் ஏன் இன்னும் அவரைக் கைது செய்ய தமிழக போலீசாரால் இயலவில்லை?2. மத்திய அமைச்சருடன் விழாவில் சர்வ சாதாரணமாக பங்கேற்கும் அவரை உண்மையில் கைது செய்ய இயலாதா?3. முடிந்தால் கைது செய்து பார்க்கட்டும் என்று சொன்ன பின்னரும் ஏன் கைது செய்ய முடியவில்லை?4. சட்டம் அனைவருக்கும் சமமானது இல்லையா?ஏன் சார், எஸ் வி சேகர் என்ன அவ்ளோ பெரிய ஆளா? அவரை பற்றியும் நீங்க ஒரு கட்டுரை எழுதினா உங்களின் நடுநிலைத்தன்மை எல்லோர்க்கும் தெரியவரும். அல்லது உங்களைப் படிக்கும் என்போன்ற வாசகர்களுக்கு இந்த சம்பவம் தொடர்பாக உங்களின் பொன்னான கருத்துக்களை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
எழுதுவீர்களா?
என்றும் நன்றியுடன்,லெனி
அய்யா லெனி,
உங்கள் மின்னஞ்சல் கிடைத்தது, நன்றி.
திடுதிப்பென்று, பலப்பல நாட்களுக்குப் பின் ஒரு புத்தம்புதிதான செய்தி வந்துவிட்டபடியால் திகைப்பில், எழவு கொஞ்சம் பேரானந்தமாகிவிட்டது. (=grandson happiness made left © எஸ்ரா, 2018)
எது எப்படியோ – நானும் ஒரு தமிழ் எழுத்தாளனாகி ‘மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜாட் சப்ஜெக்ட்ஸ்’ தர உலகப் புகழ்வாய்ந்தவனாக ஆகிக்கொண்டிருக்கிறேனோ என்ற சந்தேகம் எனக்குக் கொஞ்ச நாட்களாகவே இருந்துகொண்டிருந்தாலும் – உங்கள் கடிதத்தால் அது ஊர்ஜிதம் செய்யப்பட்டுவிட்டது. நன்றி! நன்றி!! நன்றி!!!
ஆகவே, அஹோ கேளும் பிள்ளாய்.
0. மாட்டேன். நீங்கள் சொன்ன விஷயத்தை எழுத மாட்டேன். (நன்றி: மணிரத்னம்)
1. நான் நடு நிலைமைக்காரன் கிடையாது.
2. ஞானக்கண்ணால் அனைவற்றையும் பார்த்து, எல்லாவற்றுக்கும் என் மேலான கருத்து தெரிவிக்கும் அவதூதத் திறனை வளர்த்துக்கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. எனக்கு அந்தத் திறமை வாய்க்கவில்லை. என்ன செய்வது, சொல்லுங்கள்.
3. எனக்கு, இந்த எஸ்வி சேகர் என்ன சொன்னார் எனத் தெரிந்துதெளிந்து ஆராய்ந்துகொண்டிருக்க அவகாசமில்லை. பொதுவாகவே, நான், எனக்கு ஆர்வமற்ற துறைகளில்/விஷயங்களில் மூழ்கி முக்குளிப்பதை விரும்பாதவன். ஆகவே, நீங்கள் சொல்வதைச் சரியென்று எடுத்துக்கொள்கிறேன்.
4. மேலும் அவர் என்ன சொன்னார் என்பதைப் பற்றி நீங்கள் விலாவாரியாக எழுதினால் அதனையும் பிரசுரிக்கிறேன். ஏனெனில் நடிகர்களையும் பிற சினிமாக் கோமாளிகளையும் உன்னிப்பாகக் கவனித்து, நாம் சுயமுன்னேற்ற எழவைத் தொடர்ந்து அடைந்துகொண்டிருக்கிறோம் என்பதை நான் சர்வ நிச்சயமாக உணர்ந்திருக்கிறேன்.
5. ‘பெண் பத்திரிகையாளர்களை அவர் இழிவு படுத்தினார்’ என்று எழுதுகிறீர்கள். நான் ஆண் பத்திரிகையாளர்களை இழிவு படுத்தி வருபவன். ஆக, என்னைப்போன்ற பித்தளைக்கு ஈயத்தைப் பார்த்து இளிக்கமுடியாது.
6. பொங்கல் வைப்பதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்குப் பயத்தம்பருப்பு. கிலோ ரூ 98 மட்டுமே. அடுத்த காட்டுரை இதைப் பற்றிதான்.
7. என் வாழ்நாளும் கம்மியாகிக்கொண்டே வருகிறது. உங்களுடையதும்தான். ஆகவே பிறவழிகளில் நம் சக்தியை அழிவுபூர்வமாகச் செலவழிப்பதே சாலச் சிறந்தது.
May 23, 2018 at 10:49
அவர் எழுதச் சொன்னார். நீங்கள் எழுதி விட்டீர்கள்.( கட்டுரையில் சேகர் பெயர் வந்து விட்டது). நாங்களும் படித்து விட்டோம்.
May 23, 2018 at 11:55
;-p
May 23, 2018 at 21:09
Dear sir, the usual your 7-1/2s missing for comments..they jump into fray only for anything related to Esra or Jemo.. apolitical 7-1/2s it seems..