திமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்

May 20, 2018

பதினைந்து வருடங்கள். திராவிடத்தனமான அறிவியல்பூர்வ அயோக்கியத்தனங்கள். ஆக, தா.கி குடும்பத்துக்கு இழைக்கப்பட்டது கருணாஅநீதி மட்டுமே…

-0-0-0-0-0-0-

முன்குறிப்பு: சர்வ நிச்சயமாக, நான் தாகி அனுதாபி அல்லன். இந்த மனிதரும் ஊழல் முடை நாற்றம் மிக்க ஆசாமிதான். ஏனெனில், பாவம் அவர் திராவிடர் – ஆகவே புறங்கையை நக்குவதில் மும்முரமாக இருந்தவர்.

…இருந்தாலும் அவர் பலிகொடுக்கப்பட்டதற்குக் காரணம் அதன் உதிரித்தலைவர்கள் என்பதைச் சுட்டவும், தமிழர்கள் அசாத்தியமான ஞாபகமறதிக் கூவான்கள் என்பதாலும், திருடர்கள் முன்னேற்றக் கழகங்கள் மறுபடியும் அடுத்த தேர்தலில் அரசமைக்க நம் மக்கள் உதவக்கூடாது என்பதாலும் இந்தப் பதிவு. நன்றி.

பின்புலம்: முன்னாள் (நெடுஞ்சாலைத்துறை) திமுக அமைச்சர் பசும்பொன் தா.கி, 20 மே 2003 அன்று அவருடைய காலை உடற்பயிற்சி நடைப்பயணத்தின்போது அவர் வீட்டின் அருகிலேயே ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்படுகிறார். திமுக உதிரித் தலைவர்களின் (இசுடாலிர், அழகிரிகளைத்தான் இங்கு குறிப்பிடுகிறேன்) பொச்சரிப்புகளால் அரங்கேற்றப்பட்ட கொடூரக்கொலைகளில் ஒன்று இது.

தா.கி இசுடாலிர்கள் அணியைச் சார்ந்தவர். மேலும் மதுரைப்பக்கத்தவர். ஆகவே, தென் தமிழ்நாட்டின் முடிசூடா மன்னர்களாக பவனிவந்த மதுரை அழகிரிகளுக்கு இவர் ஒத்துவராதவர்.

பிரச்சினை என்னவென்றால் இசுடாலிர்களுக்கும் தா.கி ஒரு வெறும் பகடைக்காய்தான். இறக்கும்வரை + இறந்தபின் கொஞ்சநாள் தாகி இந்த உதிரிகளுக்குப் பயன்பட்டார். அவ்வளவுதான். தாகி வகையறாக்கள், திராவிட உபயோகத்தின்பின் தூக்கியெறியப்படும் ப்ளாஸ்டிக் குப்பைத் துணுக்குகள் மட்டுமே.

ஆகவே – பின்னர் இரண்டு அணியினரும் வெகு சுளுவாக, இந்தக் கொலையை மறந்துவிட்டனர். சுபம்.

…இக்காலங்களில் மேலெழும்பி அழகிரிகளை ஒதுக்கிவைக்கும் பராக்கிரமம் மிக்க ‘செயல் தலைவ’ இசுடாலிருக்கு – தா.கி பற்றி கொஞ்சமாவது கரிசனமோ அல்லது அடிப்படை அறச்(!)சீற்றமோ இருந்தால் ‘என் ஆளை என் அண்ணா அழகிரி தீர்த்துக்கட்டிவிட்டான்‘ என்றோ ‘பொதுமக்களுக்காக, நீதியை நிலை நாட்டவேண்டும்‘ என்றோ ‘தாகி குடும்பத்துக்கு நீதி கிடைக்கவேண்டும்‘ என்றோ போராடலாம், அறிக்கை விடலாம், குறைந்தபட்சம் பேடித்தனமாக டிவிட்டர் ஸ்டேட்டஸாவது போடலாம் அல்லவா?

ஆனால் அவர் அப்படிச் செய்யமாட்டார். ஏனெனில் உதிரிகள். குறிப்பாக, திராவிட உதிரிகள் திருந்த வாய்ப்பே இல்லை. நன்றி.

-0-0-0-0-0-

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட காவல்துறைத் தரப்பின் குற்றச்சாட்டு விவரணைகளின் படி:

18 மே, 2003 அன்று அழகிரி தா.கியைத் துப்புரவாக அகற்றத் திட்டமிடுகிறார்.

அழகிரியின் ஜிகிரி தோஸ்த் ‘எஸ்ஸார்’ கோபி என்பவரிடம் (பின்னாட்களில் மதுரை நகராட்சியின் கவுன்ஸிலரான இந்தத் திராவிட ஆசாமியின் லீலைகளைப் பற்றி ஒரு ராமாயணமே எழுதலாம், ஆனால் எனக்கு அலுப்பாக இருக்கிறது + நேரமில்லை) இந்தப் ‘பணி’ ஒப்படைக்கப்படுகிறது.

முபாரக் மந்திரி (இந்தத் திராவிடர் மேற்படி சம்பவத்தின்போது மதுரை நகராட்சியின் கவுன்ஸிலர்) + பிஎம் மன்னன் (இந்த திராவிட ஆசாமி, பிற்காலத்தில் மதுரை நகராட்சியின் துணை மேயரானார்) + வி சிவகுமார் ‘கராத்தே சிவா’ (இவர் ஒரு சாதா திராவிட உதிரி) – மூவர் அணி, மதுரை டவுன்ஹால் பகுதி உணவகம் ஒன்றில் உட்கார்ந்து திராவிடச் செயல்திட்டம் ஒன்றை வகுக்கிறது.

திராவிடச் செயல்வீரர்களான இப்ரஹீம் ஸுலைமான் ஸேட் + முபாரக் மந்திரி – எனும் இருவரைக் கொண்ட அணியிடம் இந்த பணியைச் செயல்படுத்த ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

திராவிடப் பணியைச் செவ்வனே நிறைவேற்ற கருவிகள் (கத்திகள் + வீச்சறிவாள்கள்) இந்த இருவர் அணிக்கு, ‘எஸ்ஸார்’ கோபியால் கொடுக்கப்படுகிறது.

20 மே, 2003 அன்று இப்ரஹீமும் முபாரக்கும் தா.கியை, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கருவிகளின் உதவியுடன் துப்புரவாக அகற்றுகிறார்கள். ரத்தக் களறி.

ஸ்வச்ச மதுரா.

சுபம்.

-0-0-0-0-0-0-

மே 2003. அப்போது நடந்துகொண்டிருந்தது ஜெயலலிதா ஆட்சி.

21 மே, 2003 – கொலை செய்யச் சதி செய்ததற்காக அழகிரி கைது.

23 மே, 2003 – மன்னன் + முபாரக் + சிவா + கோபி கைது.

27 மே, 2003 – இப்ரஹீம் ஸுலைமான் ஸேட் காவல்துறையிடம் சரண்.

காவல்துறையும் தமிழக அரசும், சுறுசுறுப்புடன் பணி செய்து, தடயங்களைத் திரட்டி, விசாரணைகளை நடத்தி குற்றச்சாட்டுகளை முறையாக வடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல்செய்த பின் – மதுரை ஸெஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்குகிறது.

வழக்கு …தொ… ட… ர்… கி…. ற… து… (= வாய்தாக்கள் + விசாரணைகள் + அலைக்கழிப்புகள் + ஒத்திவைப்புகள் + சாட்சிகள் கலைக்கப்படல் _+ ஊடகப் பேடித்தனங்கள்… …)

2006. திராவிடக் கருணாநிதிகள் மறுபடியும் அரசமைக்கின்றனர்.

உடனடியாக (இது அவர்களுடைய திராவிட வாக்குறுதிகளில் ஒன்றாக இல்லாவிட்டாலும்) தங்கள் கொலைகார உடன்பிறப்புகளை விடுவிக்க ‘ஆவன’ செய்கின்றனர்.

வெறுத்து வெகுண்டெழுத்த எம் முத்துராமலிங்கம் (அஇஅதிமுக காரர், கொலைக்கான முக்கியமான சாட்சியங்களில் ஒருவர்) – திமுக + காவல்துறையின் மெத்தனங்கள் மிரட்டல்கள் அழிச்சாட்டியங்களுக்கெதிராக தில்லி உச்ச நீதிமன்றத்தில் முறையிடுகிறார்; தமிழகத்தின் இந்த வழக்கு, நேர்மையாக நடத்தப்பட சாத்தியக்கூறே இல்லை என்கிறார். வேறெங்காவது இதனைத் தொடரவேண்டுமென்கிறார். ஏனெனில் அவர் வாக்குமூலத்தைத் தலைகீழாக மாற்ற அவர்மேல் கொடுக்கப்பட்ட அயோக்கிய திமுக அழுத்தம் அப்படி!

உச்ச நீதி மன்றம், இதனைப் பரிசீலித்து, ஆந்திரப்பிரதேசத்துக்கு வழக்கினை மாற்றுகிறது. திமுக ஆசாமிகள் இதனை சென்னைக்கு அருகில் ஆனால் ஆந்திராவில் உள்ள சித்தூர் ஸெஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றிக்கொடுக்கும்படி விண்ணப்பம் வைக்கின்றனர் – காரணம்: குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அடிக்கடி போய்வர இது வசதியாம். உச்ச நீதிமன்றம் இதனை ஒப்புக்கொள்கிறது.

உச்ச நீதிமன்றம், மேலும், இவ்வழக்கு குறித்த அனைத்து (=தமிழில் இருந்த) ஆவணங்களையும் ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் மொழிபெயர்த்து சித்தூர் கோர்ட்டுக்குக் கொடுக்கும்படி தமிழக அரசுக்கு ஆணையிடுகிறது.

தமிழக திமுக அரசு – இந்த ஆவணங்களை அம்மொழிகளுக்கு மொழி மாற்றம் செய்ய ஒரு தொழில்முறை மொழிபெயர்ப்பாளருக்கு பணியைக் கொடுக்காமல் – மொஹம்மத் ஜின்னா (அப்போதைய திமுக இளைஞர் அணியின் மாநிலச் செயலாளர்களில் ஒரு உதிரி) எனும் ஒரு திராவிட அரைகுறை ஜால்ராவுக்குக் கொடுத்து – குப்பைத்தர, முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் ஆவணக் கட்டுகளை சித்தூர் கோர்ட்டுக்குக் கொடுத்தது.

மேலும் – அப்போதைய கருணாநிதிய திராவிட அரசு இந்த வழக்கு தொடர்பாக அழகிரிக்கு எதிராக (அதாவது உண்மை சார்பாக) இருந்த பலப்பல திராவிடர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பணம்கொழிக்கும் அரசுப்பதவிகளை அளித்து – அவர்கள் வாய்களை மூடவைத்தது. பேடிகளின் பேடித்தனமான நடவடிக்கைகள் புரிந்துகொள்ளக் கூடியவையே!

2008: அழகிரிக்கு அரசுப்பதவி வேண்டும். பணம் அமோகமாகக் கொழிக்கும் மத்திய அரசுப் பதவி வேண்டும். ஆனால் அந்த ஆசாமியின் மீது கொலைவழக்கு நிலுவையில் இருக்கிறது. ஆகவே அயோக்கியத்தனங்களின் சூத்திரதாரியும் அறிவியல்பூர்வ ஊழலாளருமான கருணாநிதி அப்பனார் – மேற்கண்ட தில்லாலங்கடிகளைச் செய்து, மேற்படியும் உழைத்து இதனையும் முடிச்சவிழ்த்தார்.

சித்தூர் கோர்ட்டுக்கு ஒரு ‘தகுதி வாய்ந்த’ நீதிபதி வந்தார். திராவிடர்களுக்கு அருள்பாலிக்கவே அவதரித்தவர் அவர். மேலும், அவரிடம் வந்த அவ்வழக்கு ஏற்கனவே நீர்க்கடிக்கப்பட்டுவிட்டிருந்தது. ஆந்திர அரசு வழக்குரைஞர்களுக்கு இதனை வெல்வதில் ‘ஆர்வம்’ இல்லை; குற்றம் சாட்டப்பட்டவர்களின் வக்கீல்கள் சாமர்த்திய சாலிகள். மொழிமாற்றம் செய்யப்பட்ட ஆவணங்களும் மகத்தான பொய்களையும் புனைசுருட்டுகளையும் கொண்டிருந்தன.

மே 2008: அழகிரியும் பிற பனிரெண்டு கொலையாளர்களும் விடுதலை செய்யப்பட்டனர். ஏனெனில், இந்த வழக்கு சார்ந்த மொத்தம் 82 அரசு சார்பு சாட்சிகளில் 81 சாட்சிகள் பல்டியடித்தனர். இந்த 81 பேரில் கிருட்டிணனின் சகோதரர் ராமையாவும் அடக்கம். (இவர் பின் அஇஅதிமுகவில் இணைந்து – தான் திமுகவால் மிரட்டப்பட்டதாக அறிக்கை கிறிக்கையெல்லாம் விட்டார். பேடித்தனம்!)

ஒரேயொரு சாட்சிதான் திடமாக இருந்தார். அவர் முத்துராமலிங்கம். ஆனால் அவருடைய சாட்சியமும் வாக்குமூலமும் ஒரு பொருட்டாகவே கருதப் படவில்லை. 1/82 பெரிதா, 81/82 பெரிதா, சொல்லுங்கள்?

வீச்சரிவாளால் கொலை செய்துவிட்டு – தாங்கள் கொலைசெய்தோம் என ஒப்புக்கொண்டு சரணடைந்து சத்தியப் பிரமாணம் செய்த இப்ரஹீமும் முபாரக்கும் கூட, சாட்சிகள் இல்லை என விடுதலை செய்யப்பட்டனர். சுபம்.

விடுதலை விடுதலை விடுதலை!

தமிழக அரசும், மேல்முறையீடு செய்திருக்கவேண்டிய ஆந்திர அரசும், தமிழகக் காவல்துறையும் ஒன்றும் செய்யாமல் வழக்கை ஊற்றி மூடி விட்டனர்.

மே 2009: அழகிரி மத்திய உர அமைச்சரானார். வேண்டுமளவு உரங்களைப் போட்டுக்கொண்டு வாழையடிவாழையாக தம் திராவிடக் குடும்பம் வளர ஆவன செய்துகொண்டார்.

செப்டெம்பர் 2013: மறுபடியும் பதவிக்கு வந்த ஜெயலலிதாவின் அரசு இவ்வழக்கை தூசிதட்டி, உச்சநீதிமன்றத்தில் ஒரு லீவ் பெட்டிஷன் (சித்தூர் கோர்ட் கொடுத்த ‘நீதியை’ எதிர்த்துப்) போட்டது.

ஆனால் உச்ச நீதிமன்றமானது – தமிழக அரசுக்கு இவ்விஷயத்தில் செய்ய ஒன்றுமில்லை (“no locus standi in the case as it had been transferred to another state”)என்றும் ஆந்திர அரசுதான் இவ்விஷயத்தி;ல் முனையவேண்டும் என்றும் சொல்லி அந்தப் பெட்டிஷனைத் தள்ளுபடி செய்தது.

ஆந்திர அரசு மௌனம். அவர்களுக்கு வேறு வேலையில்லையா, தமிழகத் திராவிட அயோக்கியர்களை எவ்வளவு நாள் தங்கள் செலவில் எதிர்ப்பது என்பதை மீறி – திமுக கொள்ளையர்களின் திருட்டுப்பணம் ஆந்திராவின் அதலபாதாளங்களிலும் பாயும் என்பது மறுபடியும் நிரூபிக்கப்பட்டது.

சுபம்.

-0-0-0-0-0-

ஹ்ம்ம்… பின் யார்தான் தா.கியைக் கொன்றார்கள்??

நான் என்ன நினைக்கிறேன் என்றால் – தா கிருட்டிணன் தன்னைத்தானே வீச்சரிவாளால் வெட்டிக்கொண்டு செத்துப்போய் அழகிரிகளுக்கு மாளாப்பழியை உண்டு பண்ணிவிட்டார்.

சுபம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தாகி குடும்பத்தினர் என்ன நினைக்கின்றார்கள்?

திருடர்களும் கொலைகாரர்களுமான திராவிடர்கள் தமிழகத்தை விட்டு ஒழிவது எப்போது?

பின்குறிப்பு: இந்தப் பதிவில், ஒரு (பெயர் சொல்லவிரும்பாத) பதவிமூப்பு பெற்ற ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதியின் (தனிப்பட்ட பேச்சு) குறிப்புகளையும், கேபி ஸுனில் அவர்களின் கட்டுரைகளையும் (குறிப்பாக இந்தக் கட்டுரை), என் சொந்தக் குறிப்புகளையும் உபயோகித்திருக்கிறேன்.

13 Responses to “திமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்”

  1. sivaa Says:

    அதாங்க சங்கரராமனும் தன்னைத் தானே வெட்டிக் கொண்டு செத்துட்டாரு.. அதையும் ஊத்தி மூடிட்டாங்கல்ல… பார்ப்பனீயமா கொக்கா

    • அய்யா சிவாஆஆ,

      பின்புல விவரங்கள் ஒன்றும் தெரியாமல் வெறுமனே பரப்புரைகளைக் கரைத்துக் குடித்துவிட்டு போதையில் உளற உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது.

      நன்றி.

      • suresh kumar Says:

        sivaji,, is the article related to sankarraman murder case..which is handled by antibrahmins from the beginning.?

  2. அனானி Says:

    போன பின்னூட்டத்தில் கடைசி சில வரிகள் உங்களை கிண்டல் செய்ய மட்டுமே எழுதினேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு பிடிக்காதவற்றை நீக்கி விடவும்.

    • ? அய்யா, எனக்குப் புரியவில்லை – சிவா என்பவர் நீங்களா?

      எப்படியிருந்தாலும் ஒரு பிரச்சினையுமில்லை. தாராளமாகக் கிண்டல் செய்யலாம், சரியா?

      • அனானி Says:

        மேலே பின்னூட்டம் போட்டவர் நான் இல்லை. நான் போட்ட பின்னூட்டம் வரவே இல்லை. மீண்டும் நான் இட்ட பின்னூட்டம் கீழே. சில பகுதிகளாக பிரித்து போட்டுளேன் தற்போது.

        தா கி வகையறாக்கள் மட்டுமல்ல. குடும்பத்தை சாராத யாராக இருந்தாலும் கட்சிகளைப் பொறுத்தவரை குப்பைகளே. நான் கல்லூரியில் படித்த போது என் ஆசிரியர் கூறிய சம்பவம் ஒன்று. அவர் அதே கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த போது ஹிந்தி போராட்டம் உச்சத்தில் இருந்த நேரமாம். சில மாணவர்கள் போராட்டம் என்ற பேரில் அரசு பேருந்தை தானே ஓட்டி வந்து சேதமும் படுத்தி விட்டனராம். போலீஸ் அவர்களை ஜெயிலில் போட்டு வெளியில் வர முடியாத படி செய்து விட்டார்களாம். இதைப் போன்ற சம்பவங்களினால் ஆட்சிக்கு வந்த திமுக இதைப் போன்று அவர்களுக்காக போராடியவர்களை கண்டு கொள்ளவில்லையாம். அத்துடன் அந்த மாணவர்களின் எதிர் காலம் மொத்தமும் பாழ். தமிழகத்தில் நடக்கும் போராட்டத்தில் ஏன் எப்போதும் தொண்டர்கள் மட்டும் பலி ஆகின்றார்கள் என்று அனைவரும் யோசித்தால் நலம்.

        திமுக ஆட்சிக்கு வந்த போது என் அப்பாவும் கல்லூரியில் படித்து கொண்டு இருந்தாராம். அவர் விடுமுறை முடிந்து மெட்ராஸ் கிறித்துவ கல்லூரிக்கு ரயிலில் செல்வது வழக்கமாம். (குறிப்பு:நான் கிருத்துவன் அல்ல, பிராமண சாதியும் அல்ல) முதன் முறையாக திமுக ஆட்சிக்கு வந்த பொது ரயிலில் திமுக தொண்டர்கள் டிக்கெட் எடுக்காமல் ஏறி கொண்டு இரவில் எல்லோரும் தூங்க சென்ற பிறகு பெர்த்தின் அடியில் உள்ள பெட்டிகளை திறந்து பார்த்ததை இவர் பார்த்துள்ளார். முதன் முறையாக ரயிலில் பாதுகாப்பு இல்லாமல் உணர்ந்ததாக சொல்வார். திமுகவில் தலைவர்கள் மட்டுமில்லாமல் தொண்டர்களும் அப்போது இருந்தே அப்படித்தான்.

      • அன்பரே, உங்கள் பின்னூட்டம் ‘ஸ்பேம்’ வரிசையில் போயிருந்திருக்கிறது – இப்போதுதான் பார்த்தேன்.

        கிண்டல், சுயகிண்டல் – எல்லாம் எனக்கு ஒத்துவரும். ‘கெட்ட’வார்த்தைகளும் அப்படியே.

        பொறுப்புணர்ச்சியும் சரி, புணர்ச்சியும் சரி. எல்லாம் ஒத்தும் அதன் நெடிலுடனும் வரும்.

        ஆக, கவலையேயில்லாமல் எதை வேண்டுமானாலும் எழுதலாம். சரியா? (எனக்கும் வரைமுறைகள் இருக்கின்றன, இருந்தாலும்…)

        ;-)

  3. அனானி Says:

    ஒரு காலத்தில் திரை அரங்குகளில் சினிமா ஆரம்பிக்கும் முன்பு நியூஸ் ரீல் போடுவது வழக்கம். கருணாநிதி முதல்வராக இருக்கும் போது பல தடவை காவேரிக்காக அவர் ஏதோ செய்து கொண்டு இருப்பதாக செய்திகள் போடுவது உண்டாம். ஆனால் காவேரி பிரச்சனை இன்னும் பிரச்சனைதான். வழக்கம் போல் விளம்பரம் மட்டும் செய்து விட்டு செயல் புரியாமல் இருப்பது இந்த மனிதருக்கு பழக்கம். அமைதியாக உட்கார்ந்து பேசி சரி செய்ய வேண்டிய விஷயத்தை விளம்பரம் செய்தால் எப்படி பிரச்சினை தீரும்? இது கண்டிப்பாக முகவிற்க்கு தெரியும். ஆனால் அப்படி செய்து விட்டால் இவருக்கு எப்படி பெயர் வரும்? இதே போன்று இன்றும் பிரச்சனையை விளம்பரப் படுத்தி பெரிதாக்கி பெயர் வாங்குவதில் மட்டுமே அனைவரும் குறியாக உள்ளனர். இதை பற்றி மக்கள் இன்னும் கண்டு கொள்ளாதது பெரிய ஆச்சர்யமே! இதை போன்ற சம்பவங்கள்/விஷயங்கள் மக்களுக்கு கொஞ்சம் கூட புரியாமலா இருக்கும்?

    சரி சாராய விஷயத்திற்கு வருவோம். என் பெரியப்பா ஒருவர் தமிழக அரசில் நிலம்/கனிம வளத்துறையில் மிகப் பெரிய பதவியில் இருந்தவர். முதன் முதலாக பாலாற்று தண்ணிரை கொண்டு சாராயம் காய்ச்சி அதை நிறுவனப் படுத்திய சிறுமை எம்ஜியார் மற்றும் உடையாரை மட்டுமே சாரும் என்று சொல்வார். இது எப்படி என் பெரியப்பாவுக்கு தெரியும்? இதற்க்கு பல வேலைகள் செய்து பல பல ‘பரிசு’ பெற்றவர் அவர். அவரை பொறுத்தவரை ஏதோ ‘நம்மால்’ ஆன சிறு உதவி. உடையார் இவரை எப்போது பார்த்தாலும் எங்கு பார்த்தாலும் பேசாமல் போக மாட்டாராம். செய்த உதவி அப்படி :( இன்னும் சில விஷயங்கள் உண்டு. ஆனால் மகா கேவலம். அதற்குள் போக வேண்டாம்.

  4. அனானி Says:

    என் நண்பனின் அப்பா ஒருவர் மத்திய வருவாய் துறையில் மிக பெரிய பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். அவர் சொன்னவற்றில் ஒன்றை மட்டும் இங்கே சொல்கிறேன். ysr ரெட்டியின் மகனின் பினாமியாக இருக்க ஒரு வாய்ப்பு இவர்க்கு வந்ததாம். டீல் என்னவென்றால் சில கோடி + வீடு + கார் + டிரைவர் இவர் பேருக்கு தரப்படுமாம். இவர் அனுபவித்துக் கொள்ளலாமாம். ஆனால் கேஸ் வந்தால் அதையும் இவரேதான் பார்த்துக் கொள்ள வேண்டுமாம். இவர் பெரிய கும்பிடு போட்டு அனுப்பி விட்டாராம். அந்த ‘வாய்ப்பு’ வேறு ஒருவருக்கு சென்று விட்டதாம். பணத்தை பதுக்க பல மாநிலங்களில் இதை போன்று ஆட்கள் உண்டாம். என்னத்த சொல்றது :(

    demonetization தோற்று போனதற்கு யார் காரணம்? அதில் சம்மந்த பட்ட அதிகாரிகளே காரணம். பணத்தை மாற்ற எவ்வளவு கமிஷன் என்பதில் தோற்று போன திட்டம் அது. இதை போன்ற சம்பவங்கள் மக்களுக்கு தெரியாமலா இருக்கும்? ஒவ்வொரு தேர்தலிலும் ஒட்டு போட காசு கொடுக்காவிட்டால் கட்சிகாரரை நிறுத்தி கேட்ட சம்பவங்கள் பல உண்டு. எவ்வளவு கேவலம் இது. இன்னும் ஒரே ஒரு அனுபவம் மட்டும். 2000வாக்கில் என் கூட படித்து கொண்டு இருந்த ஒருவனிடம் வந்து விழுந்த முத்துக்கள் சில. அவன் அழகிரியை பற்றி பலவாறாக சிலாகிப்பது உண்டு. அதாவது அழகிரியும் அவர் மகனும் பார்ப்பதற்கு மிகவும் கொழு கொழுவென்று பார்ப்பதற்கே அழகாக இருப்பார்களாம். அளவாக மது அருந்தி வளமாக வாழ்வதால் அப்படியாம். அவர்கள் வைத்து உள்ள கேம் கஃபேக்கு போகும் போது இவர் பார்த்த அனுபவமாம் அது .தொப்பையும் தொந்தியும் உள்ள ஒரு மனிதரை இப்படி யாரும் தமிழ் நாட்டுக்கு வெளியே யாரும் சொல்லி நான் கேட்டது இல்லை. இத்தனைக்கும் அந்த நண்பரோ அவர் குடும்பத்தினரோ திமுக அல்ல. அதாவது முறையற்ற முறையில் சேர்த்த காசில் கட்டிய கேம் கஃபே தவறு இல்லை. தண்ணி அடிப்பது தவறு இல்லை. இப்படி பல இல்லைகள். எப்படியாவது காசு சேர்த்து நாமும் இப்படி ஆனால் போதும் என்ற மனநிலை :( இப்படி பட்ட மாந்தர்கள் வாழும் நாட்டில் கழகங்கள்தான் ஆட்சி செய்யும். காமராஜரா செய்ய முடியும்?

  5. அனானி Says:

    இன்னும் இப்படி பல நேரடி அனுபவப் பட்டு வெறுத்து போனது உண்டு. இதைப் போன்று அனுபவங்கள் கண்டிப்பாக பலருக்கும் இருக்கும். இருந்தும் காசு வாங்கி கொண்டு பொய் பேசி, பரப்பி அதை வைத்து பல இளைஞர்களை மூளை சலவை செய்யும் கும்பல்தான் இங்கு உண்டு. அதற்க்கு உங்களுக்கு வந்த சில பின்னூட்டங்களே சாட்சி. நான் சொல்ல வந்த விஷயங்கள் உங்களை போல கோர்வையாக சொல்ல படவில்லை. இதை படிக்கும் யாராவது ஏதாவது செய்தி கேள்விப்பட்டால் அதன் பின்புலம் என்ன? தவறு எங்கே ஆரம்பித்தது? அனலைஸ் செய்து அதன் பின்னால் பொங்கல் வைக்க வேண்டும் என்பதே என் ஆசை. என்றாவது ஒரு நாள் இது சரி ஆகும் என்று நம்பிக்கை உண்டு. பார்ப்போம்.

    உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள். தயவு செய்து நான் எங்கிருந்து பின்னூட்டம் இடுகின்றேன் என்பதை மட்டும் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டாம். நான் உங்களுக்கு அரிசோனாவில் இருந்து, லண்டன் ஒண்டாரியோவில் பின்னூட்டம் இட்டு இருக்கிறேன். நீங்கள் தான் அய்யா சொல்லி இருக்கின்றீர்கள். இப்போது எங்கு இருந்து இதை எழுதுகிறேன் என்றும் ‘சரியாக’ கண்டுபிடித்து விடுவீர்கள். ஆனால் அதை அம்பலப்படுத்தாமல் இருக்கும்படி வேண்டுகோள் விடுக்கிறேன் :)

    • அய்யா, உங்கள் நீளநீள பின்னூட்டங்களுக்கும், மனவெதும்பல்களுக்கும் நன்றி. கோர்வையாகவே எழுதியிருக்கிறீர்கள், தொடர்ந்து உங்களுக்கு முடிந்தபோதெல்லாம் பதிக்கலாமே?

      ஏனெனில் – நம் தமிழர்களுக்கு ஞாபகசக்தி என்பது அதிகபட்சம் ‘ டேய், இந்த பாட்டு அந்தத் திரைப்படத்தில் வந்தது, எளையராஜா இசை, கமல் டான்ஸ் அமர்க்களம்’ என்கிற ரீதியில் மட்டுமே இருக்கும் அசிங்கத்தில் – உங்களைப் போன்றவர்கள் உங்கள் கருத்துகளை அவசியம் பதிவிடுவது – உங்கள் கடமை என்றுதான் நினைக்கிறேன். (இது கோரிக்கை)

      ஆக – உங்கள் பூந்தோட்ட ஃப்ரெய்ட்ரிக்ஷாஃபென் காபெல் காரன் நன்றாகவே பார்த்துக்கொள்கிறானாமே?

      நன்றி.

      • அனானி Says:

        கண்டிப்பாக எழுதுகிறேன் ராம். ஆனால் என்னிடம் இருந்து மிக எதிர்பார்க்க வேண்டாம். நான் ஒரு சாதாரண தட்டச்சு குமாஸ்தா :) உலக அறிவு மட்டும் கொஞ்சம் உண்டு என்று நம்புகிறேன். மற்றபடி மிக மிக சாதாரணன். நான் எழுதாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்ல பொறுமை இல்லாமையே. கண்டிப்பாக பார்ப்பன அடிவருடி போன்ற பட்டங்கள் வரும். பிறகு எழுதிய விஷயங்களை பற்றி ஆராயாமல்/யோசிக்காமல் பின்புல ஆதாரம் மட்டும் கேட்டு திசை திருப்பும் ஒரு கும்பல் வரும். எல்லாத்துக்கும் கருணாநிதி காரணம்னு எழுதுறியே அப்படின்னு கேட்டு ஒரு கும்பல் வரும். அதற்கு என் பதிலாக அண்ணாதுரை மற்றும் பெரியார் போன்ற விஷச் செடிகள் வழியே வந்த இன்னொரு விஷச் செடியே கருணாநிதி என்று சொல்ல வேண்டி வரும். அப்புறம் இனத் துரோகி பட்டம் வரும். இப்படி பல வரும்கள். ஆனாலும் எழுத கண்டிப்பாக முயல்வேன்.

        யோவ் நான் என்ன சொன்னேன்? இருக்குற இடத்தை சொல்லாதனுதான சொன்னேன்? :)

  6. அனானி Says:

    தா கி வகையறாக்கள் மட்டுமல்ல. குடும்பத்தை சாராத யாராக இருந்தாலும் கட்சிகளைப் பொறுத்தவரை குப்பைகளே. நான் கல்லூரியில் படித்த போது என் ஆசிரியர் கூறிய சம்பவம் ஒன்று. அவர் அதே கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த போது ஹிந்தி போராட்டம் உச்சத்தில் இருந்த நேரமாம். சில மாணவர்கள் போராட்டம் என்ற பேரில் அரசு பேருந்தை தானே ஓட்டி வந்து சேதமும் படுத்தி விட்டனராம். போலீஸ் அவர்களை ஜெயிலில் போட்டு வெளியில் வர முடியாத படி செய்து விட்டார்களாம். இதைப் போன்ற சம்பவங்களினால் ஆட்சிக்கு வந்த திமுக இதைப் போன்று அவர்களுக்காக போராடியவர்களை கண்டு கொள்ளவில்லையாம். அத்துடன் அந்த மாணவர்களின் எதிர் காலம் மொத்தமும் பாழ். தமிழகத்தில் நடக்கும் போராட்டத்தில் ஏன் எப்போதும் தொண்டர்கள் மட்டும் பலி ஆகின்றார்கள் என்று அனைவரும் யோசித்தால் நலம்.

    திமுக ஆட்சிக்கு வந்த போது என் அப்பாவும் கல்லூரியில் படித்து கொண்டு இருந்தாராம். அவர் விடுமுறை முடிந்து மெட்ராஸ் கிறித்துவ கல்லூரிக்கு ரயிலில் செல்வது வழக்கமாம். (குறிப்பு:நான் கிருத்துவன் அல்ல, பிராமண சாதியும் அல்ல) முதன் முறையாக திமுக ஆட்சிக்கு வந்த பொது ரயிலில் திமுக தொண்டர்கள் டிக்கெட் எடுக்காமல் ஏறி கொண்டு இரவில் எல்லோரும் தூங்க சென்ற பிறகு பெர்த்தின் அடியில் உள்ள பெட்டிகளை திறந்து பார்த்ததை இவர் பார்த்துள்ளார். முதன் முறையாக ரயிலில் பாதுகாப்பு இல்லாமல் உணர்ந்ததாக சொல்வார். திமுகவில் தலைவர்கள் மட்டுமில்லாமல் தொண்டர்களும் அப்போது இருந்தே அப்படித்தான்.

    ஒரு காலத்தில் திரை அரங்குகளில் சினிமா ஆரம்பிக்கும் முன்பு நியூஸ் ரீல் போடுவது வழக்கம். கருணாநிதி முதல்வராக இருக்கும் போது பல தடவை காவேரிக்காக அவர் ஏதோ செய்து கொண்டு இருப்பதாக செய்திகள் போடுவது உண்டாம். ஆனால் காவேரி பிரச்சனை இன்னும் பிரச்சனைதான். வழக்கம் போல் விளம்பரம் மட்டும் செய்து விட்டு செயல் புரியாமல் இருப்பது இந்த மனிதருக்கு பழக்கம். அமைதியாக உட்கார்ந்து பேசி சரி செய்ய வேண்டிய விஷயத்தை விளம்பரம் செய்தால் எப்படி பிரச்சினை தீரும்? இது கண்டிப்பாக முகவிற்க்கு தெரியும். ஆனால் அப்படி செய்து விட்டால் இவருக்கு எப்படி பெயர் வரும்? இதே போன்று இன்றும் பிரச்சனையை விளம்பரப் படுத்தி பெரிதாக்கி பெயர் வாங்குவதில் மட்டுமே அனைவரும் குறியாக உள்ளனர். இதை பற்றி மக்கள் இன்னும் கண்டு கொள்ளாதது பெரிய ஆச்சர்யமே! இதை போன்ற சம்பவங்கள்/விஷயங்கள் மக்களுக்கு கொஞ்சம் கூட புரியாமலா இருக்கும்?

    சரி சாராய விஷயத்திற்கு வருவோம். என் பெரியப்பா ஒருவர் தமிழக அரசில் நிலம்/கனிம வளத்துறையில் மிகப் பெரிய பதவியில் இருந்தவர். முதன் முதலாக பாலாற்று தண்ணிரை கொண்டு சாராயம் காய்ச்சி அதை நிறுவனப் படுத்திய சிறுமை எம்ஜியார் மற்றும் உடையாரை மட்டுமே சாரும் என்று சொல்வார். இது எப்படி என் பெரியப்பாவுக்கு தெரியும்? இதற்க்கு பல வேலைகள் செய்து பல பல ‘பரிசு’ பெற்றவர் அவர். அவரை பொறுத்தவரை ஏதோ ‘நம்மால்’ ஆன சிறு உதவி. உடையார் இவரை எப்போது பார்த்தாலும் எங்கு பார்த்தாலும் பேசாமல் போக மாட்டாராம். செய்த உதவி அப்படி :( இன்னும் சில விஷயங்கள் உண்டு. ஆனால் மகா கேவலம். அதற்குள் போக வேண்டாம்.

    என் நண்பனின் அப்பா ஒருவர் மத்திய வருவாய் துறையில் மிக பெரிய பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். அவர் சொன்னவற்றில் ஒன்றை மட்டும் இங்கே சொல்கிறேன். ysr ரெட்டியின் மகனின் பினாமியாக இருக்க ஒரு வாய்ப்பு இவர்க்கு வந்ததாம். டீல் என்னவென்றால் சில கோடி + வீடு + கார் + டிரைவர் இவர் பேருக்கு தரப்படுமாம். இவர் அனுபவித்துக் கொள்ளலாமாம். ஆனால் கேஸ் வந்தால் அதையும் இவரேதான் பார்த்துக் கொள்ள வேண்டுமாம். இவர் பெரிய கும்பிடு போட்டு அனுப்பி விட்டாராம். அந்த ‘வாய்ப்பு’ வேறு ஒருவருக்கு சென்று விட்டதாம். பணத்தை பதுக்க பல மாநிலங்களில் இதை போன்று ஆட்கள் உண்டாம். என்னத்த சொல்றது :(

    demonetization தோற்று போனதற்கு யார் காரணம்? அதில் சம்மந்த பட்ட அதிகாரிகளே காரணம். பணத்தை மாற்ற எவ்வளவு கமிஷன் என்பதில் தோற்று போன திட்டம் அது. இதை போன்ற சம்பவங்கள் மக்களுக்கு தெரியாமலா இருக்கும்? ஒவ்வொரு தேர்தலிலும் ஒட்டு போட காசு கொடுக்காவிட்டால் கட்சிகாரரை நிறுத்தி கேட்ட சம்பவங்கள் பல உண்டு. எவ்வளவு கேவலம் இது. இன்னும் ஒரே ஒரு அனுபவம் மட்டும். 2000வாக்கில் என் கூட படித்து கொண்டு இருந்த ஒருவனிடம் வந்து விழுந்த முத்துக்கள் சில. அவன் அழகிரியை பற்றி பலவாறாக சிலாகிப்பது உண்டு. அதாவது அழகிரியும் அவர் மகனும் பார்ப்பதற்கு மிகவும் கொழு கொழுவென்று பார்ப்பதற்கே அழகாக இருப்பார்களாம். அளவாக மது அருந்தி வளமாக வாழ்வதால் அப்படியாம். அவர்கள் வைத்து உள்ள கேம் கஃபேக்கு போகும் போது இவர் பார்த்த அனுபவமாம் அது .தொப்பையும் தொந்தியும் உள்ள ஒரு மனிதரை இப்படி யாரும் தமிழ் நாட்டுக்கு வெளியே யாரும் சொல்லி நான் கேட்டது இல்லை. இத்தனைக்கும் அந்த நண்பரோ அவர் குடும்பத்தினரோ திமுக அல்ல. அதாவது முறையற்ற முறையில் சேர்த்த காசில் கட்டிய கேம் கஃபே தவறு இல்லை. தண்ணி அடிப்பது தவறு இல்லை. இப்படி பல இல்லைகள். எப்படியாவது காசு சேர்த்து நாமும் இப்படி ஆனால் போதும் என்ற மனநிலை :( இப்படி பட்ட மாந்தர்கள் வாழும் நாட்டில் கழகங்கள்தான் ஆட்சி செய்யும். காமராஜரா செய்ய முடியும்?

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s