Breaking News! தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்காக, ஜெயமோகனின் இன்னொரு அரைகூவல்!

April 18, 2018

உடைக்கும் செய்திகள் (©2018, எஸ்ரா)

…முன்னதாக, முக்கியத் தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், அலாஸ்காவில் உள்ள எண்ணைய் வளத்தைக் காக்க, தமிழகத்தின் ‘இதயம்’ நல்லெண்ணெய் நிர்வாகத்தினால் மட்டுமே முடியும் என மங்கோலியாவில் அவர் வாசக சதுர அமர்வொன்றில் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர் ஒருவர், நெடுவாசல் திட்டத்தைப் பற்றி நன்றாகத் திட்டிக் கொடுத்த பதில் ஒன்றுக்காக கேள்வி கேட்கையில் #எஸ்ரா இப்படிச் சொன்னார்: “சமுதாய நெகிழ்ச்சிகு இதயம் முகியம். இதை பற்றி நான் உலக்கை நாவலில் எழுதி இருகிறேன். தாஸ்திஅவஸ்தைகி அன்றே சொன்னார், நல்லெண்ணங்களுக்கு நல்லெண்ணெய் முகியம். உலக திரைபட ஒன்றை மேற்கோள் காட்டலாம் என்றால் விகிபிடீயா பகம் லோட் ஆகவிலை. அதனால் அலாஸ்காவில் வெண்கரடிகளை காக்க தமிழர்களால் தான் முடியும் என்பது மறைக்க படும் வரலாறு. ஜென் கவிஞர்களால் எதிர்க்க பட்ட நியூட்ரினோவுக்கு எதிராக தேசாந்திர போராட்டம் நடத்த நான் ஆதரவு. துணையெழுதுகு நீங்கள் ஆதரவு அளிகவும்.  ஆயுதத்துகு எதிரான போராடதுகு என் நன்றியுடன்கூடிய ஆதரவினை கொடுகிறேன். என் வாசகர்களையும் கேட்டு கொள்கிறேன்.”

கடைசியாக ஒரு வார்த்தை சொல்லப்போகிறேன் என்று சொன்ன அவர் – “எவ்வளவு ஆயுதங்கள், கொலைவாட்கள் கொலையாளியை மவுனத்தோடு பார்து கொண்டிருகும். எவ்வளவு பன்மைகள் ஒருமைகளாக மயங்கி நேரத்தில் கரையும். எவ்வளவு நெகிழ்வுகள் மவுனத்தின் நீட்சியில் உரக்க உண்மைகளைப் பேசும். உடனடியாக ஒரு உலக்கை திரைபடதை பார்கவேண்டும்” என்றார். சுபம்.

-0-0-0-0-0-

அதற்கும் முன்னதாக சாருநிவேதிதா, தமிழ் சமூகத்தைப் பற்றி ஒரு திடுக்கிடும் விமர்சனம் வைத்தார்.   திருநெல்வேலி ஹல்வா விற்பனையாள philistineகள் சிலருக்கு தருண் தேஜ்பாலையோ, நிக்கோஸ் கஸட்ன்ஸாகிஸ்ஸையோ அறிமுகமே இல்லையென்று அவர் நண்பர் அராத்துமுழாத்து கண்டுபிடித்துச் சொன்னதால் – தமிழகத்தையே  ‘ஃபிலிஸ்டைன்’ சமூகம் என்று அவர் விளித்தார்.

‘ஃபிலிஸ்டைன்கள் ஐன்ஸ்டைனுக்கு உறவினர்கள் எனச் சொல்கிறார்களே’ என புதிய தலைவலி நிருபர் கேட்டதற்குப் பதிலாக #சாநி, “உண்மைதான், ஒரே குடும்பத்தில் ஆண்களும் பெண்களும் இருப்பதில்லையா, அதைப்போல்தான் இதைப் புரிந்துகொள்ளவேண்டும். என் மகாஅவதார்பாபா அப்படித்தான் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். மேலும் ஃபன்டமென்டலிஸம் என்பதற்கும் ஃபன்டமென்டல் பார்ட்டிகிள் என்பதற்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொண்டால் – உங்களுக்குச் சட்டென்று தெரியும்: பாஜக நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த ஏன் துடிக்கிறது என்று… நியூட்ரினோ ஒரு ஃபன்டமென்டல் பார்ட்டிகிள். பாஜக ஒரு ஃபன்டமென்டலிஸம் பார்ட்டி. புரிந்ததா?” என்றார்.

தொடர்ந்து பேசுகையில் “விளிம்பு நிலைக்கு களிம்பு கொடுக்காத சமூகத்துக்குக்குப்போய், நான் ஏன் தமிழில் எழுதவேண்டும்? கையிலிருக்கும் 20, 000 பக்க எதிர்-நாவலை முடித்து அதை மங்கோலிய மொழிக்கும் எதிர்க்கட்டுடைப்பிய பின்நவீணத்துவ மாற்றம் செய்துவிட்டு தென்னமெரிக்காவும் வடஐரோப்பாவுக்கும் நடுசென்டரில் என் நாயுடன் ஸெட்டில் ஆகிவிடவேண்டும். என்னுடைய பார்வை எதிர்க்கலாச்சார ஏதேச்சாதிகாரத்துக்கு எதிரானது என்கிற போது, எனக்கு லத்தி அமெரிக்க எழுத்தாளர் ஹார்ஸோ டெய்லோ டங் (Horso Dung Tailo) நினைவு வருகிறது. நேற்று என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவர், போர்ஹெஸ் எழுத்துகளில் என் பாதிப்பு மட்டும் அல்ல, முழுப்பும் இருக்கிறது என்று சொன்னார். எனக்குக் கூச்சமாக இருந்தது. ஆனால், தமிழனுக்கு ஒரு சகதமிழனின் மதிப்பு தெரியாது. காட்டுமிராண்டி சமூகம்” என்றார் #சாநி.

தொடர்ந்து மங்கோலிய மொழியில் பேசும்போது, “மோதி இருக்கும் வரை என் மோதல் தொடரும். இந்தியாவே இந்துத்துவ வெறியால் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது என என் வாசகரான ஐஸக் போல்ஷிவிக் அஸிமோவுடன் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னேன்” என்றார். தொடர்ந்து, “என் தலைவிதிதான் இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இலக்கிய வாதிகளை முட்டாள் தமிழர்களுக்கு அறிமுகம் செய்யும் நிலையில் வைத்திருக்கிறது. என் பேங்க் அக்கவுண்டில் நான் எழுதுவதற்குக் காகிதம் வாங்கக்கூடப் பணம் இல்லை. இந்த அழகில் மோதி ஆயுதம் என்கிறார். இது இன ஒழிப்புக்குதான் இட்டுச் செல்லும்.”

“செல்வி பியான்ஸேயின் பரத நாட்டியம் அட்டகாசம். அதகளம். என் காலடியில் பரதம் பயின்றதால் தான் Beyoncé இதனைச் சாதிக்க முடிந்தது. யான்னியின் இசை அற்புதம். தற்போதைக்கு கஸக்ஸ்தான் போய் செட்டில் ஆகவேண்டும் என நினைக்கிறேன். ஆனால் வன்முறை ஆயுதத்துக்குத்தான் கூட்டிச் செல்லும்” என்றார்.

 -0-0-0-0-0-

ஜெயமோகன் காந்திய தாக்கம் கொண்டவர் என்பது நாடறிந்த உண்மை. ஆகவே, தன்னைத்தானே பெருந்தன்மையுடன் மெச்சிக் கொண்டு, பணிவுடனும் அவருக்கே உரித்தான தன்னடக்கத்துடனும் தொடர்ந்து பேசும்போது அவர் சொன்னார்: “இங்கு பெரும்பாலானவர்கள் துறை வள்ளுநர்கள் – சாதாரணமானவர்கள் எதைப் பற்றியும் கருத்து சொல்லக்கூடாது என்கிறார்கள். வள்ளென்று விழுந்து அடக்கு முறைக்கிறார்கள். இங்கு எல்லாமே வன்முறைதான். ‘ஆயுதம் செய்வோம்’ என்று பாரதி சொன்னது ‘ஆயுளுக்கும் தம் அடிப்போம்’ என கஞ்சா புகைப்பவரான அவர் மறைமுகமாகச் சொன்னதுதான் என்பது நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும்? இதைப் புரிந்துகொள்ளாமல், ஆயுதங்களைச் செய்யச்சொல்லி பொதுமக்களை வன்முறையில் ஈடுபட பாரதி உந்தியதாக அல்லவா திரிக்கிறார்கள்?”

#ஜெமோ மேலும் தொடர்கையில் “பாரதியின் மனைவி செல்லம்மாளே இது குறித்து எனக்கு நேரடியாக அனுப்பிய குறிப்பு இருக்கிறது; அதனை ஒளிவருடி, இணையத்தில் பதிக்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன். நான் வசனம் எழுதும் தமிழ்த் திரைப்படங்களில் வன்முறையே துளிக்கூடக் கிடையாது – கருத்துகளாலும் சரி, கரங்களாலும் சரி அவை முழுவதுமாகவே சாத்வீகமானவை, அஹிம்சையைப் பரப்புரை செய்பவை – என என் மங்கோலிய வாசகர்கள் சான்று கூறுகின்றனர். எனக்கு இங்குள்ள காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களின் உணர்ச்சி தேவையில்லை. வெறுப்புணர்ச்சியால் உந்தப்பட்டு தவளை நடைபயின்று பொறாமையில் உழலும் சராசரிகளுக்கு என் வாழ்க்கையில் இடமில்லை. எனக்கு எங்குபோகவும் கடவுச்சீட்டு தேவையில்லை – ஏனெனில் நான் கடவுள் சீட்டு போட்டிருக்கிறேன், தமிழ்த் திரைப்படவுலகத்துக்கு நன்றி” என்றார்.

‘அப்போது, நீங்கள் கதைவசனம் எழுதிய ‘நான் கடவுள்’ படத்தில் சூப்பர் சுப்பராயனுக்கு என்னவேலை’ என்று ஒரு எதிர்வாசகர் கேட்டபோது அவர் சொல்லிய பின்நவீனத்துவ பதில் பின்வருமாறு: “மோதி தலைமையில் உள்ள இந்திய அரசு ஆயுதக் குவிப்பில் ஈடுபடுவதை, எந்தவிதத்திலும் வன்முறையில் ஈடுபடாத நான் கண்டிக்கிறேன். ” (ஆதாரம்: ஆயுதம் செய்தல்)

“சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இலங்கைக்கும் நேபாளத்துக்கும்  கேட்பதைக் கொடுத்து நேரு கண்ட பஞ்சசீலக் கனவை நிறைவேற்றாமல் –  சுபிட்சத்தை நிலவச் செய்யாமல் நாம் என்னதான் செய்துகொண்டிருக்கிறோம்? டீமானடைசேஷன் ஒரு இந்துத்துவ கருத்தியல் பொருளியல் வன்முறையியல் வன்முறையே! இதை அரங்கேற்றிய மோதியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்! இதுதான் நித்ய யைதன்ய சதியும், என் ஆன்மீக ஞானமரபும் எனக்குச் சொல்லிக்கொடுத்திருக்கும் அறம்.”

தொடர்ந்து பேசுகையில், “தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் முக்கியம். அதைவிட முக்கியம் அதிலுள்ள உள்ளார்ந்த இந்துத்துவ வன்முறையை அகற்றுவது. ஆகவே, காந்திய ரீதியில் நான் ஆயுத எழுத்தை நீக்கப் போராடப் போகிறேன். என் வாசகர்வட்டம் அதற்காகக் களம் கண்டு, என்னைத் தமிழக முதலையமைச்சர் ஆக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை, எனக்கு வேண்டாவெறுப்பாகத்தான் இருக்கிறது, ஆனால் இதனை நீங்கள் மூன்று விதமாகப் பகுத்து நான்கு வழிகளில் புரிந்து ஐந்து வகைகளில் உள்வாங்கிக்கொண்டு ஆறுவழிகளில் ஆறுதல் அடையவேண்டும், கேட்டீயளா” என்றார்.

அவருடைய வாசகர் வட்டத் தளபதிகளில் ஒருவரோடு பேசியபோது அவர், “ஃ ஒழிக எனும் கோஷம் வானதிர வெண்முரசு கொட்ட முழங்குகிறது. வன்முறையே கூடாது என வாசகர்கள் அறத்துடன் அணிதிரண்டு, பேருந்துகளை எரிக்கும் நாள் வந்துகொண்டிருக்கிறது” என்று அஹிம்சையை வாழ்க்கைநெறியாக போதித்த காந்திக் கிழவனுக்கு நன்றி நவின்றார்.

புதியதலைவலி நிருபர் ‘இப்போராட்டத்தில் வெற்றிதான் காணப்போகிறீர்கள்; அதன் பிறகு உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன’ எனக் கேட்டதற்குத் தளபதி தொடர்ந்தார்: “அஹிம்சைக் கிழவன் பல்லில்லாமலேயே பலகாலம் தள்ளினான். ஆகவே செயற்கைப் பற்களுக்கெதிரான போராட்டத்தை கையிலெடுக்கலாம் என இருக்கிறோம். இந்த பன்னாட்டு நிறுவனங்கள்தாம் பற்பசை வியாபாரத்திலும் பல்துலக்கி விற்பனைகளிலும் முன்னணியில் இருக்கின்றன. இவற்றின் சுரண்டலை எதிர்த்து இயற்கைப் பல்லை உயரப் பிடிக்கும் சத்தியாகிரகத்தை நடத்தலாம் என திட்டம் வைத்திருக்கிறோம். ஏனெனில் தமிழ் நாட்டின் பல்ஸ் மட்டுமல்ல, அதன் பல் பற்றியும் எங்கள் ஆசானுக்குத் தெரியும்” என்றார்.

… … …

…இதைத் தொடர்ந்து ‘நாம் ஃ இயக்கம்‘ களத்தில் குதித்து வெற்றிவாகை சூட இருக்கிறது… …

**ஓழிக ஃ! **

… மேலதிகச் செய்திகள் – ‘கமர்ஷியல் ப்ரேக்’ குக்குப் பின்…

உங்கள் ஓத்திசைவு டீவியில்…

ணன்ரீ! வனக்கம்!!

31 Responses to “Breaking News! தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்காக, ஜெயமோகனின் இன்னொரு அரைகூவல்!”

  1. Kannan Says:

    :)

  2. Anonymous Says:

    //அரைகூவல் ?
    You cant spell even the title correctly. It should be அறைகூவல். றை. How can you correct S. Ramakrishnan sir when your Thamizh is so bad?

  3. Kannan Says:

    இதுவும் தப்பு, 

    அய்யா, நான் தவராக எழுதவில்லை என்று இருக்கணும்.


    • சறிதான். ;-)

      அரைக்கும் அறைக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல், ஆக நகைச்சுவை உணர்ச்சியில்லாமல் இருக்கும் அரைகளுக்கு, கன்னத்தில் செல்லமாக ஓங்கி ஒறு அரைவிடலாமோ என வெரியாக வறுகிரதே!

      • sundar Says:

        ஐயா,
        உங்களுடைய ஏழே ஏழரை வாசகர்களில் இது எந்த அரை(குறை) என்று தெரியவில்லை.

        ஏற்கனவே, இந்த தமிழ் அரைகுறை கூவான்களோடு மாரடித்தும், போரடித்தும் உங்களுக்கு ரத்த கொதிப்பு வந்து விட்டதாக கேள்வி.

        நமக்கென்ரூ சறியாகத்தான் வந்து சேறுகிராற்கள் .

        தவறாக தட்டச்சு செய்யவே நிறைய கஷ்டப்படவேண்டியிருக்கிறது.

        இவர்களெல்லாம் எப்படித்தான் தட்டச்சு செய்திருப்பார்களோ ??


      • ஹ்ம்ம்… இந்த ஆசாமி புதியவர் என நினைக்கிறேன். என்ன செய்வது சொல்லுங்கள்.

        இவர்களுக்கெல்லாம் புரியவேமாட்டேனென்கிறது – நான்தான் பிறரிடம் குற்றம் காணலாமேதவிர, இவர்களெல்லாம் என்னிடம் ஒறு குர்ரத்தையும் கானவே முடியாத் என்பத்.

        இணிமேள் முளுவதுமாக னள்ல டமிலிளேயே எளுதி விடவேன்டியதுதாண்.

        ஜெயமோகன் அவர்களைக் கிண்டல் செய்ய அரை என்றால், ஒர்ரேயடியாகக் கூவுகிறாரே இந்த அனாமதேயம்!

        சிலசமயங்களில் என் ப்ரேண்ட் நகைச்சுவையைப் புரிந்துகொள்ளாத ஜன்மங்கள், எந்த மசுத்துக்குத்தான் இங்கு வந்து விழுந்து படித்து, பின்னூட்டம் வேறு இடுகிறார்களோ.

        எண்னைக் காப்பார்ர அனி திரல்வீற்கலா, டோளறே?


    • அய்யா கண்ணன், நான் மேற்படி எழுதியது அந்த அனாமதேயத்தின் பின்னூட்டத்தைக் குறித்து – உங்களுக்கு அல்ல! சரியா?


  4. அய்யா.. உங்களை வாசிக்கும் 7.5 (ஏழரை)பேர் என்று சொல்வீர்களே அது சறி தான்..


    • அய்யோ, றொம்ப சளிப்பாக இறுக்கிரது.

      டமிளை சறியாக எளுத கர்ருக் கொல்லுங்கல், சறியா? கீளே பாற்க்கவும்.

      “அய்யோ.. உங்கலை வாசிக்கும் 7.5 (ஏளறை)பேற் எண்ரு சொல்வீற்கலே அது சறி தாண்..”

      மேர்கண்டதை மூண்ரு முரை எளுதிப் பளகவும், சறியா?

      ணன்ரீ.


  5. Mr.Sundar reply இப்போது தான் பார்த்தேன் முன்னரே பார்த்திருந்தால் என்னுடைய பதிலை தவிர்திருப்பேன்…நானும் அரை தான்.


    • அய்யா சத்சிதானந்தம், கணக்கு எழவு உதைக்கிறதே.

      அடியேன் உட்பட, உங்களையும் சேர்த்தினால் மொத்தம் 7 ஸர்ட்டிஃபைய்ட் அரைகள் – ஆக மொத்தம் மூன்றரை தானே?

      கணக்குக் கேட்டு இன்னொரு கச்சி ஆரம்பிக்கவேண்டுமோ?

      • ஹரீ்ஷ் Says:

        சார் வணக்கம், அரைகளின் கணக்கில் என்னையும் சேர்க்கலாம். அரைகளுக்கு ஸ்பிலிட் பெர்சனாலிட்டி இருந்தால் ஒரே அரை பல அரையாக மாறி கணக்கு சரியாக வரும்.


      • வா தம்பீ, வா!

        உம்முடன் சேர்ந்து ஏழரையானோம்.

        ​​— ராம்போசாமி.


      • Dear Ram,
        I am in that 7.5 (ஏழரை)

        Thanks
        Navin


      • Dear Ram ,
        Am I in that 7.5 (ஏழரை)

        Thanks
        Navin


      • அய்யா, சந்தேகமே வேண்டாம்.

        வேண்டுமென்றால் அண்ணன் எஸ்ராவின் தேகம் நாவலைப் படித்து நொந்துபோகவும்.

        –சந்தேகாந்திரி.

  6. nparamasivam1951 Says:

    ஐயா, என் தமிழ் ஆசான் எனக்கு சறியா தமிழ் கர்ரு தரவில்லை என்பது இப்போது புறிகிரது

  7. Ramesh Narayanan, Nanganallur Says:

    பிண்னூட்தங்கலை பதித்டு வயரு புன்னாகியது


    • புன்னாகவராளியைக் கேட்டால் புன்னுக்குத் தீர்வு நிச்சயம் என எம்டி முத்துகுமாரசாமி சொல்வார்.

      — வள்புன் வொர்ரி.

  8. ஆனந்தம் Says:

    ‘எஸ்ரா’வின் தேகம் நாவல். தேகம் சாருவின் நாவல் இல்லையா? நான் மேல்பேரீச்சம்பழம் செய்துகொள்ளத் தவறிவிட்டேனா?


    • என் தேகம்! என் உரிமை!

      இதில் உட்புக நீங்கள் யார்??

      மன்னிக்கவும். தவறு. கவறு செய்துகொள்கிறேன்.

      அசிரத்தை + சாருவுக்கும் எஸ்ராவுக்கும் வித்தியாசம் காணமுடியாத விளிம்புத் தனித்துவம். வேறென்ன சொல்ல.

      //மேல்பேரீச்சம்பழம் :-)))

    • Kannan Says:

      அப்டேட் என்றே எழுதவும், மேல் கீழ்னு கன்பிஸ் ஆகுது.


      • சரிதேன்!

        ஆனாக்காட்டி அதென்னபா துப்பாக்கிச் சிறுநீரு?

        இன்னா ஸொல்ல வர்ற நீயி? பிர்ய மாட்டேங்குதே! :-(

      • பொன்.முத்துக்குமார் Says:

        என்னது பிர்ய மாட்டேங்குதா ? அச்சச்சோஓஓ …

        புளியங்கொட்டையை (ஒரே கொட்டையவா இல்ல பல கொட்டைகளையா ? ((அட நா புளியங்கொட்டை/கொட்டைகளை சொன்னேம்மா, நீ வேற)) ஊறவைத்து நாற்பத்தெட்டு நாள் (நாற்பத்தெட்டு நாளா, பத்தெட்டு நாளா இல்ல எட்டு நாளா ? என்னமோ கணக்கு சொன்னாங்களே … அட போங்கப்பா, ஏதோ சாப்ட்டா சரி, இன்னா மாமே ஸொல்ற நீயி ?) சாப்பிட்டு தண்ணீர் குடித்துவர நன்றாக பிர்யும்.

  9. Anonymous Says:

    ஒர்ரே உயர்நகைச்சுவைத்துவம் தான் போங்கள்.
    உங்கல் நகச்சுவை ஒர்ரே பிராமதம் தன் போங்கல்.
    சிரிப்புடன்
    மொஹம்மத்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s