தி. ஜானகிராமன் குறித்து ஜெயமோகன் பேசியது – சில சுயமோகக் குறிப்புகள்
April 17, 2018
பொதுவாகவே, நான் கழுதைகளை வெறுப்பவன் அல்லன் என்றாலும் கழுதைகள் ஜல்லிக்கட்டு விளையாடி ஜல்லியடிக்கும்போது அந்த எழவையும் பொருட்படுத்தவேண்டியிருக்கிறது. (மன்னிக்கவும், இது நம் ஜல்லிக்கட்டுப் போராளிக் கோமகன்களைக் குறித்த கட்டுரையல்ல)
ஒரு நபர் (அல்லது நபி?) இப்படி ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறார்:
//ஒரேயொரு எடுத்துக்காட்டு: ஒரு சமயம் (2011 அல்லது 2012 என நினைவு + இது குறித்து ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்கூட) அவருடைய ஊட்டி நித்யாகுருகுல வருடாந்திர வாசகர் வட்ட அமர்வுகளுக்குச் சென்றிருந்தேன். அப்போது அவர் தி. ஜானகிராமன் அவர்களின் குடும்பத்தைப் பற்றிப் சிலபல விஷயங்களைச் சொன்னது எனக்கு ஆச்சரியம் கொடுத்தது. ஏனெனில் திஜா குடும்பத்தில் நடந்ததாக ஜெயமோகன் குறிப்பிட்டு சில எதிர்மறை விஷயங்களைச் சொன்னார். அதுவும் திஜா அவர்களே ஜெயமோகனிடம் இவ்விஷயங்களைப் பற்றி வருத்தப்பட்டுச் சொன்னதாகச் சொன்னார்.
You are a liar pappan full of jealousy. Nothing like this happened. I was personally there on both years. You want cheap publicity more readers. But dont cookup lies. JeMO sir oru palam thangum maram. He has so much knowledge. Donth throw stones.”
இது ‘ஜெயமோகன், ஒரு அன்பரின் கோபம் – சில குறிப்புகள் 13/04/2018′ பதிவுக்கான ஒரு பின்னூட்டம்.
எனக்கு ஜெயமோகன் அவர்களைக் கீழ்மைப்படுத்தவேண்டும் என்கிற எண்ணமோ, அவரை வம்புக்கிழுக்கவோ ஆசையில்லை. தமிழிலக்கியத்துக்கும் மற்றபடியும் அவர் அளித்துள்ள பங்களிப்புகளை என்னால் முடிந்தவரை நான் மதிக்கிறேன். அவற்றைப் பற்றி எனக்கு எழுதவேண்டும் எனப்பட்டபோதெல்லாம் எழுதியிருக்கிறேன். ஆனால் – என்னுடைய 13/04/2018 தேதியிட்ட கருத்துகள் சிலபல பிற விஷயங்களைப் பற்றியவை. தரவுகள் மேற்பட்டவை. நான் சும்மனாச்சிக்கும் அட்ச்சுவுடவில்லை.
ஆகவே, எனக்கு – நான் இந்த மேற்கோள் காட்டிய விவகாரத்தில் பொய் சொல்லவில்லை, இந்த அனாமதேயம்தான் அண்டப் புளுகர் – என்று நிறுவ வேண்டிய அவசியம் இருக்கிறது. அவ்வளவுதான்.
1. நான் சர்வ நிச்சயமாக, அந்த நிகழ்வுக்குப் போனேன். 2012 மே. இதோ நான் அதனைப் பற்றி எழுதிய நீளமான பதிவு: சுழன்றும் கதைப் பின்னது அண்டம்… (11/06/2012)
இப்பதிவைச் சுட்டி, ஜெயமோகன் அவர்களும் ஒரு சிறுபதிவை வெளியிட்டார். பார்க்க: ஊட்டி – சுழன்றும் கதைப் பின்னது அண்டம் (ஜூன் 12, 2012)
ஆக – இந்தப் பின்னூட்டத்தை எழுதியது யாரென்று தெரியவில்லை – ஆனால் இவர் ஒரு சென்னை நபர் என்பதை மட்டும் சொல்லமுடியும் – எப்படி நான் அங்கு செல்லவேயில்லை என்று சொல்கிறார் என்பது புரியவில்லை.
ஆனால் ஒன்று: அந்த ஊட்டி அனுபவம் எனக்கு பிடித்தமானதாகவே இருந்தது. ‘நிர்மால்யா’ என்பவரும் அரங்கசாமி அவர்களும் ஒரு குறையுமில்லாமல் பார்த்துக்கொண்டனர். பிற பலர் ஒருங்கிணைத்திருக்கலாம் – ஆனால் எனக்குப் பெயர்கள் நினைவில் இல்லை. ஜெயமோகன் அவர்களும் ஜொலித்தார்.
நான் யாருடனும் தேவையேயில்லாமல் சண்டை போடுபவனல்லன்; எடுத்துக் காட்டாக – ஒரு நிகழ்வின்போது, ரொமிளா தாபர் அவர்கள் வாய்கூசாமல் பொய் சொல்லி பாரதத்தின்வேர்களையும் அதன் பண்பாட்டு நினைவுகளையும் கரித்துக்கொட்டினபோதும் கூட – அவருடன் சூடான வாக்குவாதம் செய்யவில்லை. (அவருடைய ஸோமனாதா எனும் அவரலாற்று உளறல் பரப்புரை பற்றிய) என் மாற்றுக் கருத்துகளைத் தரவுகளுடன் எடுத்துவைத்தேன். பதிலாக – அவர் என்னை முகாந்திரமே இல்லாமல், விவாதத்துக்குத் தொடர்பேயில்லாமல் ‘நீ பிராம்மணனா?’ எனக் கேட்டபோதுகூட அதனை விட்டுவிட்டேன். சர்வ நிச்சயமாக அப்படி நடந்துகொண்டதற்குக் காரணங்கள் 1) மூளைச் சலவை செய்யப்பட்டுள்ள பலர் + மார்க்ஸிஸ்ட் குண்டர்கள் அந்தக் கூட்டத்தில் இருந்த பயமோ 2) அவைக் கூச்சமோ 3) என் கருத்துகளைக் குறித்த நிச்சயமின்மையோ அல்ல.
மாறாக – நான், என் இயல்பான வெகுவிரைவில் கொதிக்க ஆரம்பிப்பதையும் மீறி, பொதுச் சபையில் அதற்குரிய மதிப்பைக் கொடுப்பேன் – அது மஸூதியாக இருந்தாலும் சரி, மார்க்ஸிஸ்ட் கூடாரமாக இருந்தாலும் சரி. என்னை இப்படி காத்திரமாக மட்டுமே எதிர்வினை கொடுப்பதற்கு/புரிவதற்கு – எனக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டே இருக்கிறேன்; ஏனெனில், வீணாக வம்பு செய்வதோ கலவரப்படுத்துவதோ எனக்கு ஒத்துவராது. அவை பெரும்பாலும் காரியங்களைச் சாதிப்பதில்லை.
+குடித்துவிட்டுக் கூத்தடிப்பது – விருந்தாளியாகப் போன இடத்தில் அபத்தமாக உளறுவதும் எனக்குப் பிடிக்காத விஷயங்கள்.
ஆக – நான் அமைதியாகத்தான் இருந்தேன். ஒரு துய்ப்பாளனாகத்தான் நிகழ்ச்சிகளை கவனித்துக்கொண்டிருந்தேன்.
2. இரண்டாம் அல்லது மூன்றாம் நாள் அமர்வில் – பொதுவாகப் பேச்சுச்சுற்று (=இலக்கிய அரட்டை) வந்தபோது – ஜெயமோகன், தி. ஜானகிராமன் அவர்களைக் குறித்து சில கருத்துகளை – அவரே தன்னிடம் சொன்னதாகச் சொன்னார்.
ஆனால் – அதன் விவரங்களைப் பற்றி இப்போது பேச எனக்கு மனதில்லை; ஏனெனில் – கொஞ்சம் அசிங்க உணர்ச்சியைக் கொடுத்தது + கொடுக்கிறது, அது. அதாவது – போகிறபோக்கில் பொதுவாகவே ‘தி. ஜானகிராமன் ஒரு ஜாதி வெறியர்,’ ‘அவர் மகளுடன், மருமகனுடன் மனஸ்தாபம்’ என்று அவர் விரித்த விஷயம் – இதற்கு ஒரு இலக்கியத் தொடர்பும் இல்லை.
… தி.ஜா அவர்களின் மகளையும் (உமாமஹேஸ்வரி உமாஷங்கரி – நீராதாரங்கள் + அவற்றின் மேலாண்மையைப் பற்றிய ஒரு முக்கியமான வரலாற்றுப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்) மருமகனையும் (நரேந்திரநாத் நாயுடு – சொக்கத் தங்கம்) நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். அவர்களுடைய சித்தூர் வீட்டிற்குக் குடும்பத்துடன் போயிருக்கிறேன். அவர்களும் என் வீட்டிற்கு வந்து தங்கியிருக்கிறார்கள். உமா அவர்கள் என் தாயாருக்கு ஒரு புடவைகூட வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள். நான் அவர்கள் பெண்ணுக்கு ஒரு இன்டேர்ன்ஷிப் வாய்ப்பு ஏதோ ஒன்றுக்காக பத்திருபது வருடங்களுக்கு முன் ஏதோ அலைந்து கொண்டிருந்தேன் என்றும் நினைவு. நரேன் அவர்கள் எழுதிய ஆங்கிலப் புத்தகம் ஒன்றின் தட்டச்சுப்பிரதியை எடிட்/செப்பனிடல் செய்திருக்கிறேன் என்றும் மங்கல் நினைவு.
அற்புதமான மனிதர்கள். நிஜமான காந்தியர்கள். எனக்கு அறவே பிடிக்காத எழவெடுத்த தில்லி ஜேஎன்யு எழவில் அவர்கள் படித்திருந்த போதிலும் இப்படி.
ஏன் இவ்வளவு விலாவாரியாகச் சொல்கிறேன் என்றால் – அக்குடும்பத்தை, சூழலை மிக நன்றாகவே அறிவேன். ஜெயமோகன் இந்த இருவரையும் பற்றிச் சொன்னது 100% சரியில்லை. திஜா அவர்கள் அப்படிச் சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை – அப்படிச் சொல்லியிருக்கக்கூடுவதற்கு முகாந்திரமே இல்லை. அவ்வளவுதான். அது அபாண்டம். வருத்தத்துக்குரிய விஷயம். அதிக பட்சம் – அது ஜெயமோகனின் அவர்களின் வளமான கற்பனை.
ஆகவே – நான் ஜெயமோகன் பேசி முடித்தபின், பணிவாகவே சொன்னேன் – விஷயங்கள் அவர் விரித்ததுபோல சர்வ நிச்சயமாக இல்லை என நிறுவினேன். ஆனால் அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை, பிறரும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. (நானாக இருந்திருந்தால் உடனடியாக மன்னிப்புக் கேட்டிருப்பேன் – ஆனால்…)
இதற்காக நான் தொடர்சண்டை போடவில்லை. ஆனால் கொஞ்சம் அயர்வாகவே உணர்ந்தேன்.
3. அனாமதேயம் என்னைப் பொய்சொல்லிப் பாப்பான் என்றழைத்துள்ளதை – நான் ஜெயமோகனின் வாசகர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக எண்ணவில்லை. ஆனால் பொதுவாகவே உணர்ந்திருக்கிறேன் – காத்திரமாக விமர்சனம் செய்ய எதுவும் கொழுகோல் இல்லாதபோது, இம்மாதிரி அற்பர்கள் நிபந்தனையற்றுச் சரணடைவது இந்த நிந்தனைகளில்தான்.
சரி. இருந்தாலும் என்னை அவர் ‘திராவிடன்’ என்று அசிங்கமாகத் திட்டி எனக்கு மாளாவுளைச்சலை ஏற்படுத்தவில்லையே என உண்மையாகவே மகிழ்ச்சியடைகிறேன். நன்றி. ;-)
4. எனக்கு இருக்கும் விளம்பரம்(!) போதும். மேலதிக விளம்பரத்துக்கு அவசியமில்லை. நான் எழுதுவதை(!) 5 ½ யிலிருந்து 7 ½ வரை ஆட்கள் படித்தால் போதுமானது. அனாமதேயம், ஒரங்கட்டிக்கொள்ளலாம். பழமரத்தினடியில் வாசம் செய்யலாம்.
எழுத்து என் தொழிலல்ல. வெறும் எழுத்துப் பயிற்சிக்கு மட்டுமே இவற்றை எழுதுகிறேன். நீங்களும் உங்கள் கொடும் படிப்புப் பயிற்சிக்காக இந்த எழவுகளைப் படிக்கலாம். கொஞ்சம் கஷ்டம்தான். சிடுக்கு + தவளைத்தத்தல்தான் – ஆனால் ஷ்வல்ப அட்ஜஸ்ட் மாடி, that is, if you must.
+ நான் எழுதியவைகளே நானே படித்துக்கொள்வதில் எனக்குப் புளகாங்கிதம் அதிகம். அதில் இருக்கும் இன்பம்ஸ், அற்புத சுயஇன்பம்ஸ்.
மேலும் எனக்கு, (என் கருத்தில்) பிற முக்கியமான அடையாளங்கள் இருக்கின்றன. நன்றி.
5. அனாமதேயம் சொல்லியிருக்கும் பிற விஷயங்களைக் கடாசி விடுகிறேன் – பழம் தொங்கும் அறம், ஆங்கிலப் புலமை, நான்கு வார்த்தைகளைத் தவறில்லாமல் எழுதமுடியாமை போன்ற விஷயங்களைத்தான் குறிப்பிடுகிறேன். அவர் கருத்து. அவர் சொல்கிறார். நான் கேட்டுக்கொள்கிறேன். அவ்வளவுதான்.
1. அந்தக் கூட்டத்தில் (நாஞ்சில் நாடன் உட்பட) பலர் இருந்தனர். சில பெயர்கள் நினைவில் இருக்கின்றன. சுரேஷ் (சேஷாத்ரி அல்லது வெங்கடாத்ரி அல்லது வெங்கடாசலம்) – இவர் மிமிக்ரி செய்து காட்டினார், சினிமாப்பாடல்களையும் பாடினார் – சென்னை அல்லது கோவைக்காரர்; ‘ஜடாயு’ என்பவர், இயற்பெயர் தெரியாது, பெங்களூர்காரர்; வெங்கடரமணன் – இந்த இளைஞர் சென்னைக்காரர், ஐடி ஆசாமி; ராஜகோபாலன் (? சென்னைக்காரர்); அரங்கசாமி – ஒருங்கிணைப்பாளரும் . இவர்களில் பலருக்கும் இந்த விஷயம் மங்கலாகவாவது நினைவிலிருக்கும். கேட்கலாம் – இவர்களிடம் முன்னறிமுகம் இருக்கும் பட்சத்தில்.
2. ‘சொல் புதிது’ என்று ஒரு கூக்ல்க்ரூப் இருக்கிறது. ஜெயமோகன் உட்பட, ஜெயமோகன் வாசர்களுக்காக++ நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. நானும் அதில் உறுப்பினன் – ஆனால் சிலபல வருடங்களாக அங்கு செல்ல வாய்ப்பில்லை.
இந்தக் குழுமத்திலும் அந்த ஆசாமி இந்த நிகழ்வின் உண்மையைப் பற்றிக் கேட்டுக்கொள்ளலாம்.
3. ஜெயமோகன் அவர்களிடமே ஒரு வாசகர் கடிதம் எழுதிக் கேட்கலாம்.
-0-0-0-0-0-0-
இந்த விஷயத்தை இத்துடன் விட்டேன். ஏனெனில் இது வளர்ந்து வளர்ந்து தேவையற்ற கசப்புகளில் முடியும். தேவையேயில்லாமல் பழைய நினைவுகளைக் கிளறி, மேலதிகமாகக் குப்பை மூட்டத்தில் உருள வேண்டி வரும். Some memories are best forgotten. I am stopping now, therefore.
இன்னொன்று: நாமெல்லாரும் தவறு செய்பவர்கள்தாம். ஏனெனில் நாம் மகத்தான சாம்பல் ஜந்துக்கள். இதற்கு ஒரு விதிவிலக்குகூட இல்லை. நாமெல்லாரும் கறுப்புக்கும் வெளுப்புக்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருக்கும் சாம்பல் நிற அலைகள். ஆனால் ஆதாரசுருதிகளானவை, அதாவது – அடிப்படை தர்மங்களானவை மாறமாட்டா.
எது எப்படியோ – ஆக, முடிந்தவரை (நான்) அவசியமேயில்லாமல், மனதாறப் பொய் சொல்லமாட்டேன்.
ஏனெனில் — நாளெல்லாம் கருத்துகளாலும்(!) கரங்களாலும்(!!) வேலை செய்துவிட்டபின், எனக்கு, இரவில் படுத்தவுடன் மனவுளைச்சலில்லாமல் உடனடியாகத் தூங்கமுடிவது முக்கியம்.
சுயமோகம்தான். :-(
—
- பேடிப்போராளித் தமிழனுக்கு அனுதினமும் பொங்கல்! வாழ்த்துகள்! 14/04/2018
- ஜெயமோகன், ஒரு அன்பரின் கோபம் – சில குறிப்புகள் 13/04/2018
- ஜெயமோகன்: ‘நானும் போராளிதேன்!’ 12/04/2018
April 17, 2018 at 08:44
Sir,
I am truly fascinated by your memory – Yes! All your facts about dates & names are right – Sruesh Venkatadri is the name in which you had confusion. And it was 2012 May only. And although I could not vividly remember the entire discussion about Thi.ja, I remember the following:
1. It was mentioned that Thi.ja’s Son-in-law was a naxal (again I couldn’t remember who mentioned this). I believe you opposed it.
2. You started your comment by narrating your experiences on reading Thi.ja’s Moga Mul at that time – அந்த வயதில் எங்கெங்கு திரும்பினும் ஜமுனாக்கள்.
3. You emphasised that Thi.ja’s daughter & his son-in-law did live a peaceful life.
But I am sorry that I couldn’t remember whether you and Jeyamohan had an argument.
Regards,
Venkatramanan.
April 17, 2018 at 08:54
அய்யா, நன்றி.
1. ஜெயமோகன் அவர்கள், நரேந்திரனாத் அவர்களையோ உமாவையோ நக்ஸல் எனச் சொல்லவில்லை. அது வேறு விஷயம்.
2. அவர் சிலவற்றைச் சொன்னார். நான் அதனுடன் உடன்படாமல் எனக்குத் தெரிந்த அனுபவபூர்வமான உண்மையைச் சொன்னேன். அவர் அதற்கு மறுமொழி கூறவில்லை. கடந்து விட்டார். நானும் அதனைத் தொடர்ந்து விவாதத்தை நீட்டித்து அவரை இக்கட்டில் மாட்ட விரும்பவில்லை.
3. வேறு யாரும் அந்த அவதூறை உள்வாங்கியமாதிரிப் படவில்லை. ஆகவே ஒருவரும் அது குறித்துப் பேசவில்லை போலும். அவ்வளவுதான்.
மீண்டும் நன்றி.
April 17, 2018 at 08:44
Sorry – it is *Suresh
April 17, 2018 at 08:57
அந்தக் கூட்டத்தில் ஜெயமோகன் அவர்கள் சொன்னது குறித்து திரு.ராமசாமி அவர்கள் சொல்வது உண்மைதான். நான்தான் ராமசாமி குறிப்பிடும், சுரேஷ் வெங்கடாத்திரி அவ்வப்போது சென்னையில் இருக்கும் கோவைக்காரன்.அங்கே அருணா வெங்கடாசலம் என்பவர், தி.ஜா வின் படைப்புகளை பெண்ணிய நோக்கில் விமர்சனம் செய்யும்போது, இந்த பேச்சு வந்தது.அப்போதுதான், ஜெ ஜானகிராமனின் மகள், ஒரு தலித்தை திருமணம் செயது கொண்டார் என்றும்,அதற்கு ஜானகிராமன் .தனது மனப்பூர்வமான சம்மதத்தை தரவில்லை என்றும் கூறினார்.. அவர் பேசிக்கொண்டிருக்கும்போது, ராமசாமி, அவர்கள், அதை மறுத்து, தி.ஜாவின் மகள் மணந்து கண்டது ஒரு பிராமணரல்லாதவர்தான் தலித் அல்ல என்றும், தி.ஜா வின் மனப்பூர்வமான சம்மதத்தன் பேரிலேயே அந்தத் திருமணம் நடந்தது என்றும், அவர்கள் இருவரும், ஆந்திரத்தில்,சமுகப்பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், திரு.நரேந்திரநாத் நாயுடு அண்மையில், காலமாகிவிட்டார் என்ற தகவலையும் சொன்னார். ஜெ உடனே அப்படியா எப்போது எனக்குத் தெரியாதே என்று சொல்ல, பேச்சு அப்படித் திரும்பிவிட்டது. ஜெவும்,தான் சொன்னதே சரி என்று வாதிடவில்லை. ராமசாமியும்,அல்லது வேறு யாருமோ அதை மீண்டும் விவாதிக்கவுமில்லை. ஆனால், அன்று ராமசாமி, இடை மறித்தது, இந்தத் தகவல்களை சொல்லியிராவிட்டால், அங்கிருத அனைவருமே, ஜெ. சொன்னதே உண்மை என்று நம்பியிருப்போம். அதில் சந்தேகமில்லை.ஜெவும், வேண்டுமென்றே அவதூறு செய்யும் நோக்கத்திற்காக கூறவில்லை,தனக்கு கிடைத்த தகவல்களை அப்படியே சரிபார்க்காமல் கூறினார் என்றே நன் நினைக்கிறேன். அந்த அவரது வழக்கம், இப்போது மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்து விட்டிருக்கிறது..
April 17, 2018 at 09:39
ஆ! மிக்க நன்றி சுரேஷ் அவர்களே!
நான் எழுதவேண்டாம் என நினைத்த விவரங்களைக் கொடுத்திருக்கிறீர்கள், உங்கள் நினைவு ‘சுத்திகரிப்பு’ செய்யப்படாதது. :-)
உங்களுடைய மிமிக்ரியும் சொற்சிக்கனமும் நகைச்சுவை உணர்ச்சியும் அபாரம்.
நம்பியார் போல நீங்கள் நடித்துக் காண்பித்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. அந்தப் பையன் – ராமச்சந்திர ஷர்மா என்னமாப் பாடினான்! ஸ்ரீநிவாஸனும்தான்! இவர்களெல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்?
இவ்வளவு விரைவாக நீங்களும் வெங்கடரமணன் அவர்களும் எதிர்வினையாற்றுவீர்கள் என நினைக்கவில்லை. (ஏனெனில் அந்த பாவப்பட்ட 7 ½ பேர்களில் நீங்களிருவரும் இல்லை; ஆக, வரலாறு காணாத வகையில் மொத்தம் 9 ½ பேர்கள் ஒத்திசைவைப் படிக்கிறார்கள் (குறைந்தபட்சம் அவ்வப்போதாவது) என்பதால் எனக்குப் பொறுப்புணர்ச்சி அதிகமாகிவிடுமோ எனப் பயமாக இருக்கிறது)
உங்கள் முழுப்பெயர் சுரேஷ் வெங்கடாத்திரி என்பதை இனி மறக்கமாட்டேன்.
நீங்கள் சொல்கிறீர்கள் – ஜெயமோகன், வேறு யாரோ அவருக்குச் சொன்னதைச் சரிபார்க்காமல் சொல்லியிருக்கலாம் என்று; ஆனால் அவர், திஜாவே நேரடியாகத் தன்னிடம் சொல்லி வருத்தப்பட்டதாகத்தான் சொன்னார். ஆக செய்யப்பட்டது ‘manufactured incident’ – ஆகவே சோகம்.
இந்த தொழில்முறை ‘உருவாக்கமும்’ உருவாக்கங்களின் ‘புத்துருவாக்கங்களும்’ தாம் அடிப்படை + தொடரும் பிரச்சினைகள். நான் முன்னொரு பதிவில் எழுதிய போல, என்னிடம் அப்படிப்பட்ட 14 (குறைந்த பட்சம்) பிற நிகழ்வுகள் இருக்கின்றன. அவை சோகமும் ஆச்சரியமும் தருபவை. மனுஷன், ஏன்தான் இப்படித் தெகிர்யமாக அட்ச்சுவுடுகிறாரோ என மண்டையில் ஓங்கி அடித்துக்கொள்ளத் தூண்டுபவை. அவற்றுக்கான அவசியமும் பிடிபடவில்லை.
இந்த நிகழ்ச்சிகள் – ராஜநாயஹம் தொடர்பானவையோ அசோகமித்திரன் தொடர்பானவையோ அல்ல. (தொழில்முறை ‘புத்துருவாக்கங்களுக்கு’ அப்பாற்பட்ட பல பிரச்சினைகள் இவரிடம் இருக்கின்றன – ஆனால் அவற்றைப் பற்றி நான் பேச/எழுத விருப்பமில்லை; ஏனெனில் நம் தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து வீரியத்துடன் இயங்கிவரும் ஓரளவுக்கு உருப்படியாக ஒருவரைக் காண்பிக்க வேண்டுமென்றால், தற்போது ஜெயமோகன் அவர்களை விட்டால் வேறு மனிதர் அருகில் இல்லை. ஆகவே.)
என் கருத்து என்னவென்றால் – அவர் ஆகிருதிக்கு இம்மாதிரி விஷயங்களில் தொடர்ந்து ஈடுபடுவது ஒரு பெரிய அவசியமேயில்லை.
இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
மீண்டும் நன்றி. அந்த ‘மிமிக்ரி’ நாளும் வந்திடாதோ? :-)
April 17, 2018 at 11:44
you are welcome to treat yourself to Suresh’s ventriloquism and Ram Sarma’s and others’ singing at Thiagu book center in Coimbatore on Saturdays and Sundays
April 17, 2018 at 14:50
Sir, thanks for the info. :-)
April 17, 2018 at 12:45
தல, ஒரு சிறு சந்தேகம் தி.ஜா மகள் பெயர் உமா சங்கரி தானே ? இணையத்தை துழாவிக்கொண்டிருந்தேன் நீங்கள் குறிப்பிட்ட அவரின் நீர் மேலாண்மை பற்றிய புஸ்தகம் கிடைக்குமா என்று. Out of Print போலிருக்கிறது. அதன் பெயர் “Water management traditions in India” . சரிதானே ?
(இவ்வலைப்பக்கங்கள் கண்ணில் பட்டன பயண்படக்கூடும்)
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-sundaymagazine/What-I-learnt-from-Naren/article15941777.ece
http://tamil.thehindu.com/opinion/columns/கிராமங்கள்-ஏன்-வெறிச்சோடுகின்றன/article5411823.ece
https://www.thehindubusinessline.com/profile/author/Uma-Shankari/
April 17, 2018 at 13:38
நன்றி. என் தவறு. கவனக்குறைவு. அவர் பெயர் உமாஷங்கரிதான். திருத்திவிடுகிறேன். :-(
April 18, 2018 at 21:23
Sir, was that name told by Thi.Ja or you heard it from a different source.
April 19, 2018 at 05:26
? Sir, I have NEVER individually/personally met Thi Janakiraman. I never said I have. (I have listened to him a couple of times of course, but as part of a gathering)
April 17, 2018 at 13:33
6 ஆண்டுகளுக்கு முன்னால நடந்தது இன்னும் நல்லா நினைவுல வெச்சிருக்கறது ஆச்சரியமா இருக்கு சார்.நன்றி. ராமச்சந்திர ஷர்மா,மற்ற நண்பர்கள் யாவரும் நலம். Ram is in Bengaluru. We are all are there in FB.சொல்புதிது குழுமத்திலயும் இருந்தோம். இப்ப இல்ல.உங்களுக்குத் புரிஞ்சுருக்கும். வெங்கட்ரமணனும், கோவைக் காரர்.சென்னையில் settled. நம்ம மரபுப்படி, வெ,சுரேஷ் தான் என் பெயர்.முகநூல், ஈமெயில் இதுக்கெல்லாம் வேண்டி சுரேஷ் வெங்கடாத்திரி .// என் கருத்து என்னவென்றால் – அவர் ஆகிருதிக்கு இம்மாதிரி விஷயங்களில் தொடர்ந்து ஈடுபடுவது ஒரு பெரிய அவசியமேயில்லை.// மிகச்சரியான வரிகள்.என்ன செய்வது.ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி இருக்கத்தான் செய்றாங்க.
April 17, 2018 at 14:50
அய்யா சுரேஷ், இப்படிச் சொன்னால் எப்படி?
வேறு வழியேயில்லாமல் ஃபேஸ்புக் எழவில் ஐக்கியமாகி நிபந்தனையற்றுச் சரணடைந்துவிடச் செய்துவிடுவீர்கள் போலிருக்கிறதே! இது நியாயமா? அல்லது ஸாம்க்யமா? அல்லது ஃபேஸ்புக் ஞானயிஞ்சிமரபா?
எது எப்படியோ உங்களைப் போன்றவர்களிடம் மறுஇணைப்பு செய்து கொள்ள லபித்ததற்கு…
அண்ணன் ஜெயமோகன் அவர்களுக்கு – னன்ரீ! நண்றீ!! ணன்ரீ!!!
April 18, 2018 at 19:43
சார், நான் அந்தக் கூட்டத்துக்கு வந்தது, உங்களை முதன்றையாக சந்தித்தது தி.ஜா. படைப்புகள் பற்றி விவாதித்து எல்லாம் சுமாராக நினைவில் இருக்கிறது ((இரண்டாம் முறையாக சமீபத்தில் போன டிசம்பரில் சுவதேசி இண்டாலஜி மாநாட்டில் சந்தித்தோம்). ஆனால் இந்தக் குறிப்பிட்ட விவகாரம் மிகவும் மங்கலாகவே மனதில் படிந்திருக்கிறது, ஞாபகம் வரவில்லை. நீங்களும் சுரேஷும் எழுதிய விவரணம் சரியாகவே உள்ளது என்று கருதுகிறேன். நீங்கள் அதே கூட்டத்தில் லா.ச.ரா, அவர் குடும்பம், அவரை சந்தித்தது பற்றியும் ஏதோ கூறினீர்கள். அதுவும் மறந்து விட்டது :)
April 21, 2018 at 21:08
நான் மிக மிகப் புதிய வாசகன் அந்த 7 1/2 ல் 1/2 அவ்வளோ தான். நானும் ஜெயமோகன் இப்படி சொல்வதை வேறு சில இடங்களில் கவனித்திருக்கிறேன். அசோகமித்தரன் மனைவி அப்பளம் விற்று ஆற்றிய இலக்கியப் பணி அது போல் வேறொரு கதை. அவர் ஒரு நாளைக்கு ஏன் மூன்று கட்டுரைகள் எழுதுகிறார் என்று நானும் யோசிக்கிறேன். இளையராஜா மாதிரி அயராத படைப்பூக்கம் ஆனால் இளையராஜா வெறும் 500படங்களே பண்ணியிருந்தால் அதன் தரமே வேறு. கிட்டத்தட்ட 40% கழிவுகள் தான் ஆனால் 60% வேறு எவனும் அருகில் நெருங்க முடியாத உச்சம். இவரையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன். அவர் தளத்தைப் படித்தாலே பெரும் பகுதி தமிழிலக்கியம் அறிமுகமாகி விடுகிறது. இருந்தாலும் மிகைப்படுத்தும் பொழுது ஒரு ஒவ்வாமை.பெரும்பாலான விஷயங்களில் பெரும்பான்மையான கருத்துக்களையே அடியொற்றும் confirmation bias இது தான் எனக்கு அவரிடம் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவரை புறக்கணிக்கவும் முடியாது முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அகலாது அணுகாது தீக் காயலாம்.
April 22, 2018 at 05:33
அய்யா, நன்றி. ஒரு திடத்துக்குச் சென்றிருக்கிறீர்கள். நல்லதுதான்.
April 22, 2018 at 10:12
ithu nakkala?
April 23, 2018 at 06:23
இல்லையப்பா, இல்லை.
April 30, 2018 at 07:01
[…] […]