மகாமகோ பூகொ சரவணன் அவர்களின் மேதமையும் – அவர் வாயில் விழுந்து புறப்படும் அஞ்ஞானிகளான ஆஸ்டின் க்ரன்வில், பிஏ கிருஷ்ணன் போன்றவர்களும்…
October 20, 2017
மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கவேண்டிய முதல் பகுதி. *இது* அக்கப்போரின் இரண்டாம் விகுதி. இப்போது — நன்றாக மூச்சை உள்ளிழுத்துகொண்டு தீர்க்கமாக யோசித்து, உங்களையே கேள்வி கேட்டுக்கொள்ளவும்: எனக்கு இந்த திராபைத் திராவிட அக்கப்போர் எழவெல்லாம் தேவையா?
-0-0-0-0-
சரி. கருணாநிதி அவர்கள், தோல்விவரும்போதெல்லாம் ஒப்பாரி வைப்பது போல, உங்களுக்கும் ஜாதகம் சரியில்லையோ என்ன எழவோ. உங்களையே அறியாமல் என்னுடைய மாயவலையில் வந்து விழுந்துவிட்டீர்கள். பாவம், நீங்கள். :-(
திராவிட (+) அறிவுஜீவி (Dravidian Intellectual) என்பது ஒரு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத சுயமுரண்மிக்க ஒரு கேளிக்கைச் சொற்றொடர் oxymoron என்பதும், அதிகபட்சம் அச்சொற்றொடர் தமிழகத்துக்கு ஒரு பேரிடர் என்பதும் தமிழைக் கூறுபோடும் நம்மைப் போன்ற சான்றோர்கள்(!) அறியாததல்ல.
இருந்தாலும் இந்த (ஆக்ஸி) மொரான்களின் டெங்கி கொசுக்கடிகள் ஙொய்ங்கொய் ரீங்காரங்கள் சிலசமயம் தாங்கமுடியாமல் போய்விடுதற்குக் காரணம் – நான் சிலசமயம் கொசுவலைக்குப் பதிலாக இணையவலையே சரணம் என கதிகலங்கி மோட்சமடைவதுதானோ என்ன எழவோ!
(‘மிஷெல் பூகொ’ சரவணன் அவர்களின் பராக்கிரமத்தைப் பார்த்த பிரமிப்பில் மண்டை காய்ந்து வாய்பிளந்து இறும்பூதடைந்து நடுங்கிக்கொண்டிருப்பது, அடியேன்!)
ஆக, நம் இளைஞப் படிப்பாளி, அய்யா மிஷெல் பூகொ (திராவிட எடிஷன்) பகர்கிறார்:
இவருடைய ஆதங்கம் புரிகிறது. ஆனால், இந்த பிஏகிருஷ்ணன் செய்ததும் நியாயமானதா, சொல்லுங்கள்? இப்படியா ஒரு உண்மையை – ஒரு இங்கிதமோ பண்போ பணிவோ, ஏன், கருணையோ துளிக்கூட இல்லாமல்லாமல் நடுத்தெருவில் போட்டு டமாலென்று உடைப்பார்கள்? படு கேவலமாக இருக்கிறது. என்ன வயதாகி என்ன படிப்பு படித்து என்ன ஆங்கிலப் புலமையும் இருந்து என்ன புண்ணியம். அடிப்படை மானுடப் பண்பு இல்லையே. :-(
மானுடம் மனிதம் புனிதம் வகையறா ஜிகுஜிகா வார்த்தைளையே விடுங்கள் – திராவிடர்களுடைய அளவு இவ்வளவுதான் என நன்றாகவே பட்டவர்த்தனமாகத் தெரியும்போது, திரும்பத் திரும்ப அதனைக் குத்திக்குத்திக் காட்டவேண்டிய அவசியம்தான் என்ன? ஏனிந்தத் தேவையேயற்ற திராவிடாபிமானமற்ற குரூரம்? எனக்கு – இந்த பிஏகிருஷ்ணன்களைப் பிடிக்காமல் போனதற்கு இதுதான் உண்மையான காரணம். இம்மாதிரி ஆசாமிகளுடைய தயவுதாட்சணியமின்மை. :-(
…சரி. நாளைக்கே, இப்படியெல்லாம் ‘பிஏகிருஷ்ணன்களுக்கு இது தகுமா’ எனப் பிலாக்கணமிடுவதை விட்டுவிட்டு மிஷெல் பூகொ அவர்கள், ஒரு ஆயிரம் திராவிட(!) அறிவு(!!)ஜீவி(!!!)களின் பெயர்களை, சல்லீசாக எடுத்துவிடமாட்டாரென்றா நினைத்துவிட்டார்கள், இந்த பிஏகிருஷ்ண அரவிந்தன் கண்ணைய கல்யாணராமன்கள்? மிஷெல் பூகொவுக்கு இல்லாத பராக்கிரமமா? பெரியாருக்கு முன் 100, 000 திராவிட அறிவுஜீவிகள் இருந்தார்கள், பெரியார் சமயம் பிற அறிவுஜீவிகள் = 0 (இது கொஞ்சம் கம்மியாகி விட்டது; ஏனெனில் பகுத்தறிவுப் பகலவனின் ஏகபோக அடாவடி பளிச்பளிச் அறிவுஜீவியத்தால், அனைத்துத் திராவிடர்களுக்கும், பாவம் கண் குருடாகிவிட்டது என்பது வெள்ளிடை களை), ஆனால் பெரியாருக்குப் பின் அவர்வழியிலேயே நெடுக 100, 000, 000 இணையத் திராவிட அறிவுஜீவிகள் எனவும் வெகு சுளுவாக அட்ச்சுவிடமுடியாதா என்ன? ஹ்ஹ!
‘பகுத்தறிவேஷு திராவிடம்‘ என்று அன்றே சொன்னாரல்லவா ‘தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை‘ புகழ் பெரியார்?
ஆக -ஆரிய ஓநாய்களின் ஓலங்களுக்கும் மார்க்சியக் குள்ள நரிகளின் குயுக்திகளுக்கும் தகுந்த பகுத்தறிவுப் பகலவ பதிலடி கொடுக்கப்படும் போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. இன்ஷாஅல்லாஹ். நன்றி.
-0-0-0-0-0-
சரி. மிஷெல் பூகொ (திராவிட எடிஷன்) அவர்கள் – பிஏகிருஷ்ணனிடம் பலமுறை ஆதாரங்களைக் கொணர்ந்தேன், ஆனால் அவற்றைப் பின்னவர் கண்டுகொள்ளவில்லை என்கிறார். சரிதான். ஆனால் பூகொ அவர்கள் எப்படிப்பட்ட ஆதாரங்களை எப்படிச் சுட்டுகிறார் என்பதைப் பார்த்துவிட்டு, அவருக்கு இப்படியெல்லாம் புலம்பத் தகுதி இருக்கிறதா எனப் பார்த்துவிட்டு (+முன்னமேயே அவர் காமராஜர் ராஜாஜி பற்றித் தரவுகளேயில்லாமல் அட்ச்சுவுட்டிருப்பதையும் நினைவு கூர்ந்து) அவர் பிலாக்கணத்துக்குப் போகலாமா?
ஆனால் மிஷெல்பூகொ அய்யாவின் சன்னிதானத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, நான் சமர்ப்பித்துக்கொள்வது என்னவென்றால்:
உலமெல்லாம் திராவிட அறிவுஜீவிகளால் சூழப்பட்டுள்ளதென்றால், தெய்வமே, நீங்கள் ஏன் அவர்களை மேற்கோள் காட்டாமல் விக்ரம் ராகவன், ஸுனில் கில்னானி போன்ற ஆரியர்களை மேற்கோள் காட்டுகிறீர்கள்? ஏன் ஆஸ்டின் க்ரன்வில் தரத்தில் திராவிட அறிவுஜீவிகள் ஒருவர்கூட இல்லை என — உங்கள் ஞானதிருஷ்டியால் உணர்ந்து, அதை எனக்குச் செப்பி எனை உய்விக்கமுடியுமா?
மகாசன்னிதானமே! மேலும் – ‘தரவு’களின் தரம் என்று ஒன்று இருக்கிறதே! அவை நம்பகத்தன்மை மிக்கவையாகவும் உண்மையானதாகவும் சரிபார்க்கத் தக்கதாகவும் இருக்கவேண்டுமே!
உதாரணத்துக்குப் பேராசானே, நீங்கள் மேற்கண்ட பத்தியில் அட்ச்சுவுட்டிருக்கும் விஷயங்களில் இருக்கும் தரவுகளின் லட்சணத்தைப் பார்க்கவேண்டும் இல்லையா?
இப்படிக்கு,
ஈவெரா
ஈது வெறும் ராமசாமி, கொசுரோடு
-0-0-0-0-0-
பிரச்சினை என்னவென்றால் – சகட்டுமேனிக்கும் விக்ரம் ராகவன், தந்தை பெரியார், ஸுனில் கில்னானி என, இளைஞப் படிப்பாளி மிஷெல்பூகொ அய்யா அட்ச்சு வுட்டுருக்கிறார். இதிலிருந்து தெளிவாகக் காணக்கிடைப்பது என்னவென்றால் – 1) அய்யா, இவர்களுடைய புத்தகங்களைப் படிக்கவில்லை 2) அதிகபட்சம் இப்புத்தகங்கள் குறித்த மதிப்புரைகளை அல்லது இணையக் குறிப்புகளைப் படித்துவிட்டு மானேதேனே என கலந்துகட்டி யுவகிருஷ்ணாதரத்தில், போங்காட்ட அறச்சீற்றத்துடன் எழுதிவிட்டார். அவ்வளவுதான். (யுவகிருஷ்ணாவுக்கே இதுகுறித்து வெட்கம் வந்து அவர் கன்னம் சிவப்பானால், அதற்கு நான் ஜவாப்தாரியல்லன், மன்னிக்கவும்!)
சரி, முதலில் ஆஸ்டின் க்ரன்வில் பக்கம் போகலாம்.
ஆஸ்டின் க்ரன்வில்
இன்னொரு பிரச்சினை என்னவென்றால் – நானும் ஒருகாலத்தில் இதே ஐஏஎஸ் அதிகாரியாக ஆகவேண்டுமென ஒரு முனைப்பில் இருந்தேன். ஆனால் நான் கெலிக்கவில்லை, பாரதம் தப்பித்தது. :-) இந்தத் தோல்விக்கான என்னுடைய தீராத சால்ஜாப்பு என்னவென்றால், நான் அப்போதும் மிகவும் திமிர் பிடித்தவனாகவும் அகங்காரம் உடையனாகவும் இருந்திருக்கிறேன். ஆனால் அது கிடக்கட்டும் கழுதை. :-)
அச்சமயம் – ~1987-88? – என நினைவு. ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டுமானால் பாரதத்தைப் பற்றிய அடிப்படை புரிதல்கள் வேண்டும் என ஆத்மார்த்தமாக நம்பினேன் – ஏனெனில் எனக்கு மிஷெல் பூகொ போல இருந்தாலும் ஒரு அரசதிகாரியாக முடியும் போன்ற எடுத்துக்காட்டுகள் லபிக்கவில்லை. என்ன செய்வது சொல்லுங்கள்! :-(
இது தவிர, தீவிர இடதுசாரி (+கொஞ்சம் தொட்டுக்கொள்ள விபரீத ஊறுகாயாக, திராவிடம்) மார்க்கத்தில் இருந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து நகர்ந்துகொண்டிருந்த காலம். பாரதம் எனும் கருத்தாக்கத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் அக்குவேராணிவேராகப் பிரித்துப் பகுத்து அறிய முயன்றுகொண்டிருந்த காலம். ஆக, இந்திய சட்டங்கள் உருவாக்கம் அரசமைப்பு உருவாகியது குறித்தெல்லாம்அறிந்துகொள்ள ஆர்வம் மேலிட்டபோது, அலையோஅலையென அலைந்து கண்டகண்ட புத்தகங்களைப் படித்து வெறுத்துக் கடைசியாக நான் நிபந்தனையற்றுச் சரணடைந்தது மகாமகோ ஆஸ்டின் க்ரன்வில் எழுதிய 1966வாக்கில வெளிவந்த இப்புத்தகத்தினிடம்…
அழகு. நுணுக்கம். அசாத்தியமான, ஆழமான உழைப்பு. incredible work of scholarship. INCREDIBLE; oozes authority and unbiasedness. இதிலிருந்து நான் கற்றுக்கொண்டது ஏராளம். தவிரவும் – இது, ஏறத்தாழ நான் மதிக்கும், சட்ட நுணுக்கம் அறிந்த அனைவராலும் மிகவும் மதிக்கப்படும் புத்தகம். இப்புத்தகத்தை நான் ஆங்கிலத்தில் படிக்கும் வசதியுள்ள அனைவருக்கும் பரிந்துரைப்பேன். வெறும் ரூ 342/-க்குக் கிடைக்கிறது என அமேஸான்காரன் கூவிக்கூவி விற்கிறான் வேறு.
பின்னர் 2000 வாக்கில் என நினைக்கிறேன் – இந்த க்ரன்வில் ஆஸ்டின், கார்னர்ஸ்டோனின் அடுத்த பகுதியாக நடைமுறையில் எப்படி இந்த அரசமைப்புச் சட்டம் இருக்கிறது என ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார் என்பதை அறிந்தவுடன் (அந்த எழவெடுத்த ஈபிடபிள்யு வழியாக என நினைக்கிறேன்) – ஓடோடிப்போய் அதனையும் வாங்கி ஜெரித்தேன்.
கிரன்வில் என்னை ஏமாற்றவேயில்லை. அழகு. ரூ 530/- மட்டுமேதான் விலை!
…எதற்கு இந்தப் பழங்கதைகளைச் சொல்லவருகிறேன் என்றால், (எனக்கு ஒருகாலத்தில் ஒவ்வாத, எளிதில் ஜீரணிக்கமுடியாத சில கருத்துகளையும் ஆஸ்டின் க்ரன்வில் சொல்லியிருக்கிறார் என்றாலும்) – இவருடைய ஆய்வில் இடைவெளிகள் இருக்கின்றன என எந்த முகாந்திரத்தில் சொல்கிறார் மிஷெல் பூகொ?
சரி. ஏதாவது ஒரு அசைக்கமுடியாத தரவின் மூலம் – ஈவெரா அவர்களால் தான் இடஒதுக்கீடு ஏற்பட்டது, காங்கிரெஸ் கட்சியால் அல்ல – என ஐயம் (+மிகமுக்கியமாகத் திரிபு) இல்லாமல் மிஷெல் பூகொ அவர்களால் நிரூபிக்கமுடியுமா? யாராவது அப்படி எதிர்மறை நிரூபணம் செய்திருக்கிறார்களா? உண்மை என்னவென்றால் – பாரதத்தின் வளர்ச்சியில், அரசமைப்புச் சட்டங்கள் உருவாக்கப்படலில் ஈவெரா அவர்களின் பங்கு ஒரு பெரிய சுழி என்பதுதான். நன்றி.
உணர்ச்சி வசப்பட்டு உளறிக்கொட்டுவது, நம் ஆழ்ந்த நம்பிக்கைகள் சிதைக்கப்படும்போது அய்யோஅய்யோவெனப் பிலாக்கணம் வைப்பது எல்லாம் மிகச் சுளுவான விஷயங்கள். ஆனால் அய்யா, தரவுகளும் அவற்றின் நம்பகத்தன்மையும் முக்கியம். மேலும், அய்யா அவர்கள் ராஜாஜி பற்றிப் பரப்பிய அவதூறுகளுக்கே இன்னமும் நியாயமான தரவுகளைக் கொடுக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவும்…
இப்போது விக்ரம் ராகவன் அவர்கள் பக்கம் போகலாம்.
-0-0-0-0-0-0-
விக்ரம் ராகவன்
விக்ரம் ராகவன் அவர்கள் போன்ற சான்றோர்கள் ‘பலமுறை, மறுபடியும் மறுபடியும் ஆஸ்டின் க்ரன்வில் அவர்களின் ஆராய்ச்சிகளில் உள்ள இடைவெளிகளைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்‘ எனக் கூசாமல் சொல்கிறார் மிஷெல் பூகொ. இதற்கு ஒரு ஆதாரத்தையாவது கொடுக்கமுடியுமா? நான் எல்லா ஆதாரங்களையும் கூடக் கேட்கவில்லை. ஒன்றேயொன்று?
எனக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ – கருத்துகளின் பலவடிவங்களையும் ஊற்றுக்கண்களையும் புரிந்துகொள்ள முனையும் என் ஏடாகூட மனப்பான்மை காரணமாக, நான் விக்ரம் ராகவன் அவர்களையும் கில்னானி அவர்களையும் – ஏன், அருந்ததி ‘அரைகுறை’ ராய் அவர்கள் எழுத்துகளையுமேகூடத் தொடர்ந்து படித்துவருகிறேன். விக்ரம் ராகவன் அவர்களையும் தான். ஆனால் அய்யா மிஷெல்பூகொ, உங்கள் தரவுகள் எங்கே?
சரி. அய்யா மிஷெல்பூகொ இருந்தால்தானே கொடுப்பார், பாவம்? ஓளித்து வைத்துக்கொண்டு ஓரவஞ்சனையா செய்கிறார்?
ஆனால் – நான் கொடுக்கிறேன். ஆஸ்டின் க்ரன்வில் அவர்களைப் பற்றி, அவருடைய புத்தகங்களைப் பற்றி – அவரை நேரில் அறிந்த விக்ரம் ராகவன் அவர்களின் ஒன்றரை மணி நேரப் பேச்சுக்கச்சேரி. மிகவும் அழகாகவும் விஸ்தாரமாகவும் பேசியிருக்கிறார். (ஜூலை, 2015)
இதில் ஏதாவது, ஆஸ்டிக் க்ரன்வில் அவர்கள் குறித்த எதிர்மறை விமர்சனம், அவர் ஆராய்ச்சியில் உள்ள ‘இடைவெளிகள்’ குறித்த தரவுகள் இருந்தால் தயவுசெய்து மிஷெல்பூகொ அவர்களுக்குத் தெரியப்படுத்தவும். பாவம், அவர் தரவுகளுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறார்.
இன்னொன்று: க்ரன்வில் அவர்கள் போய்ச் சேர்ந்தபின் ஒரு முழ நீள ‘அஞ்சலி’ ஒன்றை ஈபிடபிள்யு எழவில், விக்ரம் ராகவன் எழுதினார். (ஸெப்டெம்பர் 13, 2014 இதழ், பக்கங்கள் 40-43)
நான்கு பக்கங்களுக்கு மிகுந்த பணிவுடனும் அன்புடனும் எழுதப்பட்டுள்ள இதிலும், ‘இடைவெளிகள்’ குறித்த ஒரு குறிப்பும் இல்லை. (யாருக்காவது இந்த ஆழமான அஞ்சலிக் கட்டுரையைப் படிக்கவேண்டுமென்றால், எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும். என்னுடைய சொந்தச் சந்தாகணக்கு மூலம் இதனைத் தரவிரக்கம் செய்திருக்கிறேன், அதனால்தான்)
விக்ரம் ராகவன் அவர்களுக்கும் எனக்கும் பொதுவான நண்பர்கள் உண்டு. அவர்களில் ஒருவனுடன் (தற்போது நியூயார்க்கில் குப்பை கொட்டிக்கொண்டிருக்கும் உச்சாணிக்கிளை வங்கி மேலதிகாரி) தொடர்புகொண்டு இந்த மிஷெல் பூகொ அட்ச்சுவுட்ட விவகாரத்தைப் பற்றிக் கேட்டேன். அவன் சொன்னதன் சாராம்சம் 1) பூகொ ஏதாவது சொன்னால், அதைப் பற்றி அவரிடம்தானே கேட்கவேண்டும் 2) ஃபேஸ்புக் தர உளறல்களுக்கெல்லாம் படுபிஸியான விக்ரம் பதில் சொல்வான் என எதிர்பார்ப்பது சரியா?
நான் சொன்னேன் – உங்களூரில் அரவிந்தன் கண்ணையன் எனவொரு இளைஞர் இருக்கிறார். ஆங்கிலத்திலும் அவ்வப்போது எழுதுகிறார். அவர் பலமுறை இந்த மிஷெல் பூகொவிடம் தரவு கேட்டிருக்கிறார். ஆனால் பூகொ கண்டுகொள்ளவே மாட்டேனென்கிறார். இத்தனைக்கும் இந்த பூகொஇளைஞர் அதிகாரத்தில் இருக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி! கொஞ்சம் கூடப் பதவிக்கு இருக்கவேண்டிய பொறுப்புணர்ச்சியே இல்லைபோலும்… …
அவன் சிரித்துவிட்டான் – உன் வயதில் உனக்கு எதற்கு இந்தச் சிறுபிள்ளைத்தனமான அக்கப்போர்? நீ ரொம்ப பிஸி என்றல்லவா நம்பிக்கொண்டிருக்கிறேன். ஏதோ சின்னப்பையன் எதையோ சொல்லிவிட்டான், சொல்லிக்கொண்டு போகட்டுமே! அதுவும் ஃபேஸ்புக்கில்! எவன் இந்தமாதிரி ஆசாமிகளை ஸீரியஸ்ஸாக எடுத்துக்கொள்ளப்போகிறான், சொல்லேன்?
நான்: ஆஹா!
என் பிரச்சினை என்னவென்றால் – இந்த நண்பன் ஒரு ஸிந்தி ‘ஆரியன்.’ ;-) திரும்பத் திரும்பப் பொய் சொல்லி, திராவிட நாட்டில் கருத்தாக்கங்களை தொழில்முறையில் உருவாக்கும் திராவிடப் போக்கைப் பற்றி ஒரு எழவும் அறியாதவன். பொய்களைச் சொல்லி மாற்றி மாற்றி மேற்கோள் காண்பித்தே அண்டப் புளுகுகளை சாஸ்வதமான உண்மைகளாக ரசவாத மாற்றம் செய்துவிடுவார்கள் என்ற அடிப்படைப் புரிதல் இல்லாதவன்… ஆகவே!
இப்போது ஸுனில் கில்னானி அவர்களிடம்…
-0-0-0-0-
ஸுனில் கில்னானி
அரசமைப்புச் சட்டகத்தின் முதலாம் திருத்தத்தில் ஈவெரா-வின் பங்கு முக்கியமானது எனக் குறிப்பிட்டு ஸுனில் கில்னானி சொல்லியிருக்கிறார் எனப் பகர்கிறார் மிஷெல் பூகொ.
சில வருடங்கள் முன்பே விக்ரம் ராகவன் அவர்களுடன் இந்த கில்னானி சேர்ந்தெழுதிய “Comparative Constitutionalism in South Asia” படித்திருக்கிறேன் என்றாலும்பிரச்சினை என்னவென்றால் – இந்த ஸுனில் கில்னானி அவர்கள் கொஞ்சம் அரைவேக்காடு என்பது என் கருத்து.
இருந்தாலும் மிஷெல் பூகொ அவர்களே சொல்லிவிட்டார் என்பதால் – மண்டையில் அடித்துக்கொண்டு இவருடைய ‘இன்கார்னேஷன்ஸ்‘ எனும் புதிய புத்தகத்தையும் படித்து முடித்தேன்.
ஏனெனில் – இப்புத்தகத்தில் இந்திய உருவாக்கத்தில் முக்கியமான 50 ஆசாமிகளைப் பற்றிய ‘வரலாறு’களை எழுதியிருக்கிறார் என்பதும் – அதில் ஈவெரா ஒருவர் என்பதும் எனக்குத் தெரியும். இக்கதையாடல்களை வைத்துக்கொண்டு ஊடகப்பேடிகளில் ஒன்றான பிபிஸி மூலம். ஸீரியலெழவு ஒன்று வந்திருக்கிறது என்பதும் தெரியும். சரி.
1. ஏறக்குறைய இப்புத்தகத்தின் அனைத்துக் கதைகளுடனும் எனக்கு மகாமகோ பிரச்சினைகள். சில அப்பட்டமான பிழைகள். பல கருத்துக் கந்தறகோளங்கள்!
2. இந்த 50பேர் ஜாபிதாவில் – அக்பர் வில்லியம்ஜோன்ஸ் டாக்குர் மாண்டோ க்ருஷ்ணமேனன் எம்எஃப் ஹுஸ்ஸைய்ன் சரண்சிங் ராஜ்கபூர் என பலப்பலர் இருக்கிறார்கள் – ஆனால் ஜவாஹர்லால் நேரு இல்லை! எனக்கு இது பெரிய ஆச்சரியம்! ஏனெனில் – எனக்கு நேரு அவர்கள் மீது ஒரு பெரிய மதிப்பு இல்லாவிட்டாலும், இந்திய வரலாறு, அதன் முக்கிய கதா நாயகர்கள் என்றால் அதின் நேரு அவர்களுக்கு மிக முக்கியமான இடம் கொடுப்பேன். எனக்கு அவர் பேரில் கடுமையான விமர்சனம் இருக்கிறது என்றாலும் தற்கால இந்திய நிலவரங்களுக்கு அவருடைய பங்கு என்பது மகத்தானது. ஆனால் நான் முன்னமே சொன்னது போல இந்த ஸுனில் கில்னானி கொஞ்சம் அரைகுறை.
3. அதனால் தான் – சரண்சிங், மொஹெம்மத் இக்பால், ராஜ்கபூர், எம் எஃப் ஹுஸ்ஸைய்ன் போன்ற கோமாளிகளே இருக்கும்போது – ஏன் நம் பெரியாருக்கு ஒரவஞ்சனை என – இந்த புத்தகஎழவையும் முழுவதும் படித்தேன்.4. இந்தப் புத்தகத்திலும் சரி முந்தைய புத்தகத்திலும் சரி – இந்த ஸுனில் கில்னானி – நம் செல்ல ஈவெரா அவர்களைப் பற்றியும் முதலாம் சட்ட திருத்தத்தைப் பற்றியும் ஒரு சுக்கையும் எழுதிவிடவில்லை.
ஆனால் – இந்த பெரியார் குறித்த கட்டுரையில் ஏகப்பட்ட நகைச்சுவைகள் இருக்கின்றன. சில எடுத்துக்காட்டுகள், விடலைத் தனமான கட்டுரைத் தலைப்பிலிருந்து தொடங்குகின்றன:
விடலைத்தனமான ‘திராவிட நாடு’ இதழ்த் தலையங்கம்:
இப்படியொரு கதையாடல் – பிராமணர்களுக்கு நாய்களைப் அவற்றின் சுத்தமின்மையின் காரணத்தால் பிடிக்காதாம்! பயமாம்! அதனால்தான் ஒரு ‘பிராமணர்களை விலக்கும்’ நாய்க்குட்டியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு மேடைப் பிரசங்கங்களைச் செய்தாராம்! …ஏன் இவர் ஒரு பன்றியைப் பக்கத்தில் வைத்துக்கொண்ட ஒரு ஃபோட்டோவைப் போட்டு – முஸ்லீம்களுக்கும் இதேமாதிரி, ஆனால் ருசுப்படுத்தப்பட்ட அருவருப்புப் பயத்தை ஏற்படுத்தவில்லை எனக் கேட்க இந்தக் கில்னானிகளுக்குத் துப்பில்லை! இந்த அற்பப் பப்பரப்பா விஷயத்துக்கு ஒரு பக்கம் முழுவதும் படம்!
மற்ற கட்டுரைகளும் குப்பைகளாக இருந்தாலும் – என்னடா இப்படிப் படுமோசமானஅரைகுறையாக இருக்கிறதே இந்தக் கட்டுரை எழவு என யோசித்துக்கொண்டிருக்கும்போதே… அதன் காரணம் எனக்குப் பிடிபட்டுவிட்டது. பெரியார் குறித்த இக்காட்டுரையில் என் செல்ல அதிபுத்திசாலிப் பேராசிரியரான ஆஇரா வேங்கடாசலபதி அவர்களின் கைங்கரியமும் இருந்திருக்கிறது.
வேங்கிட்டு எப்போது முன்னோடி ‘தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றாளர்’ ஆனார்! பயபீதியாக இருக்கிறதே!! ஐயகோ! ஆகவே, கில்னானி அவர்களைக் குற்றம் சொல்லி ஒரு சுக்குக்கும் பயனில்லை, பாவம் அவர்!
என்னுடைய வருத்தம் என்னவென்றால் ஈவெரா அவர்களுடைய வறட்டு அஅறிவியல் ‘நாத்திக’த்துக்கு கொடுத்த முனைப்பை – அவர் முனைந்து நடத்திக் காட்டிய, அவருடைய நல்ல பங்களிப்பான – தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்பதைக் கில்னானி கோடிகூடக் காட்டவில்லை. இதற்கும் என் செல்ல வரலாற்றாளர்தாம் காரணமாக இருக்கவேண்டும்.
-0-0-0-0-0-
இவ்வளவு வார்த்தைகள் (~1500!) எழுதியபின் தோன்றுகிறது. என் நியூயார்க் நண்பன் சொல்வதுபோல – இந்த இளைஞ உளறல்களுக்கும் அபத்தக் களஞ்சியங்களுக்கும் இப்படி ஒரு நீஈஈஈஈளமான பதில் தேவையா என்று? ஃபேஸ்புக் தர அற்பப் பொங்கல்களுக்கு மதிப்புத் தரத்தான் வேண்டுமா என்று… சின்னப் பையன்களுக்கு – அவர்கள் வளர்வதற்கு அவகாசம் தரவேண்டுமென்று…
ஆனால்… பொறுப்புணர்ச்சியும், அசைக்கமுடியாத தரவுகளைக்கொண்டு விவாதிக்கவும் அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டுமல்லவா? என்ன சொல்கிறீர்கள்?
அல்லது அட்ச்சுவுடுவதைப் பார்த்துக்கொண்டே நமட்டுச் சிரிப்புடன் அவற்றைக் கடந்துபோய் விடவேண்டும் என்கிறீர்களா?
ஹ்ம்ம்ம்… … :-(
October 20, 2017 at 21:46
‘மிஷெல் பூகொ’ சரவணன் அவர்களை அக்கு வேறு ஆணி வேறாக பிய்த்து போட்டுவிட்டீர்கள்!.இப்படி உம்மைப் போல் குடைந்து எடுப்பவர் தேவைதான்.இல்லாவிட்டால் இவரைப் போன்றவர்கள் எல்லாரையும் எளிதாக ‘காயடித்து’ விடுவார்கள்!.
October 20, 2017 at 23:02
Reply is a must and must because truth should prevail. !!
October 21, 2017 at 04:53
தம் பெயரைக் குறிப்பிட விரும்பாத நண்பர்(!) ஒருவர் எழுதியிருப்பதன் சாராம்சம்: 1) ஆஸ்டின் அவர்களின் எழுத்துகளை விமர்சனம் செய்யவேகூடாதா 2) வெள்ளைக்காரன் என்றாலே உனக்கு வெறுப்புதானே 3) அப்படி விமர்சனம் செய்தவர்களே இல்லையா? 4) என் பெயரைக் குறிப்பிடாதே, என்னையும் பார்ப்பானின் அடிவருடி என முத்திரை குத்தி விடுவார்கள்.
அய்யா வெள்ளக்கார தொர, உன் பெயரைக் குறிப்பிடவில்லை. பயப்படவேண்டாம்.
1) நிச்சயம் செய்யலாம். தரவுகளுடன் அதனைச் செய்யவேண்டும். அவ்வளவுதான். எனக்குமேகூட – அவர் இன்னமும் உழைத்துக் கொஞ்சம் நம் நாட்டில் பலமொழிப் பிராந்தியங்களுக்கும் அவற்றின் விழைவுகளுக்கும் அவற்றின் ஒருங்கிணைப்புக்கும் என்னென்ன எப்படியெப்படி உருவாகி வந்திருக்கின்றன என எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே எனத்தான் தோன்றுகிறது. நல்ல ஆசை.
2) இல்லை. எனக்கு அரைகுறைகளைப் பிடிக்காது அவ்வளவுதான். இந்தக் காரணத்தால் என்னையும் சிலசமயம் பிடிக்காது. ஒரு வெள்ளைக்கார அமெரிக்கன் மாமாங்களைச் செலவழித்து நம்பவேமுடியாதவகையில் கடும் உழைப்பையும் நேர்மையையும் கொடுத்து எழுதியிருப்பதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கின்றன. நான் ஒன்றும் ஆஸ்டின் அவர்களைப் பற்றித் தரக்குறைவாக எழுதி விடவில்லையே! (இன்னொரு முறை இதனைச் சரிபார்த்தேன்)
3) இருக்கிறார்கள். உபேந்திர பக்ஷி போன்றவர்கள். உண்மையைச் சொல்லப்போனால், எனக்கு இவர்பேரில் மதிப்பு இல்லை. ஆஸ்டின் க்ரன்வில் எனும் ஸெய்ன்ட் எனும் தலைப்பில் கிண்டலாக ஒரு காட்டுரையை இவர் எழுதியதாக நினைவு. ஈபிடபிள்யூ? :-(
டேய், நீங்களும் (ஆங்கிலத்திலேயோ, தமிழிலேயோ) எழுதித் தொலையுங்களேண்டா! எவ்வளவு படிக்கிறீர்கள்?
முழ நீளத்துக்கு மின்னஞ்சல் அனுப்பத் தெரிகிறது. க்ளிப்தமாக ஒரு கட்டுரையை எழுத முனைப்பில்லை. தமிழ் அஸோஸியேஷனில் தூரத் தள்ளி வைத்துவிடுவார்கள் என்ற பயம்!
கை நிறையச் சம்பளம், வங்கியிலும் பணம். பிரமாதமான வாழ்க்கைத் துணை. பிள்ளைகளும் படித்து அமெரிக்கக் குடிமக்களில் ஐக்கியமாகி விட்டார்கள். பெற்றோர்களும் – நீ திரும்பிவாவா எனச் சொல்லிக்கொண்டே பாவம், மண்டையைப் போட்டுவிட்டனர். பின்னென்ன தயக்கம்?
தைரியமாகக் களப்பணியை (குறைந்த பட்சம் ட்விட்டர் மூலமாவது) ஆற்று ஆற்று என ஆற்றலாமே!
வருடத்துக்கு மூன்று மாதம் தமிழகம் வந்து – ரவுண்டு கட்டிக்கொண்டு அரைகுறைகளைக் கதிகலங்க அடிக்கலாமே? ஹ்ம்ம்??
மாறாக அமெரிக்கன் பேஸ்பாலும் கிரிக்கெட்டும் பார்த்துக்கொண்டு, பொழுதன்னிக்கும் ட்ரம்ப் கரித்துக்கொட்டலில் ஈடுபடுவது சுளுவாக இருக்கிறதல்லவா?
நன்றி, அவ்வப்போது தொடர்பில் இருந்தால்போதும். அடிக்கடி எழுதி தொல்லை தரவேண்டாம்.
கோபத்துடன்,
__ரா.
—
—
https://othisaivu.wordpress.com/
“கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடு வயதினனுக்குள்ள மனத் திடனும், இளைஞனுடைய உத்ஸாகமும், குழந்தையின் ஹ்ருதயமும், தேவர்களே, எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்க…”
– – சுப்ரமண்ய பாரதி
October 21, 2017 at 18:28
Is Saravanan really a serving IAS officer? Can an IAS officer write like this? If he is really “serving” where does he find the time to write all these?
October 21, 2017 at 18:50
Sir Giri, that’s what I am told by my reliable friends. He is an IAS officer, but then I don’t really know whether he is a normal serving officer or a self-serving one. Juzz kiddin’
I suppose he is very young and may be he needs time to mature – as another pal of mine tells me.
October 22, 2017 at 12:18
[…] மகாமகோ பூகொ சரவணன் அவர்களின் மேதமையு… 20/10/2017 […]
October 23, 2017 at 09:30
“எம் எஃப் ஹுஸ்ஸைய்ன் போன்ற கோமாளிகளே இருக்கும்போது …”
என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்!.எந்தவகையில் என்பதை தெரிவிக்கமுடியுமா?
October 23, 2017 at 09:36
அய்யா, he is overrated!
இன்றல்ல நேற்றல்ல – இந்த மனிதர் சுமார் 30 வருடங்களுக்கு முன்னரே இவரைப் பற்றிய இப்படிப்பட்ட முடிவுக்கு வந்து விட்டேன்.
ஏனெனில் – இந்த அய்யா நடத்திய அதி நவீன ஷ்வேதாம்பர் கலை நிகழ்வுக்குப் போய் அவருடைய மகத்தான அரைகுறைத்தனத்தைப் பார்த்து துணுக்குற்றிருக்கிறேன். நம் ஆதிமூலம் (ஏன், வீர சந்தானமும் கூட) போன்றவர்களையெல்லாம் பார்த்தால் – இந்த மினுக்காலஜி கலையாசாமிகள் இடக்கையால் புறந்தள்ளப்படவேண்டியவர்கள்…
இவரிடம் கலை இல்லை. இருப்பது எஸ்ராமகிருஷ்ணமும் முட்டாக்கூ ‘கலை’ ரசிகர்களும்.
நன்றி.
November 17, 2019 at 15:08
Please send that letter sir
November 17, 2019 at 16:01
?