மிஷெல் பூகொ சரவணனின் ஆதர்சமான சுனில் கில்ஞானி அவர்களின் ‘வைக்கொம் வீரர்(!)’ பெரியார் குறித்த அமோக உளறல்

October 22, 2017

ஆதர்சம் ஓரடி பாய்ந்தால், பின்னாலேயே ஓடும் அதிரசம்பதினாறாயிரம் அடி உருண்டோடிப் பாயவேண்டும் என்பது நியதிதானே?

(கருத்துப் படம்: அதிரசத்தின் வட்ட வடிவம் என்பது, திராவிட அறிவுஜீவியின் – பின்நவீனத்துவக் குறியீடு எனச் சில வருடங்கள் முன்பே #சாரிநிவேதிதா அவர்கள் சொல்லியிருக்கலாம்)

ஆகவே – இந்த அதிரசமுக்கியமான புரிதல் வந்ததன்பின் மிஷெல் பூகொ அவர்களை மேலதிகமாகப் புரிந்துகொள்கிறேன், பாவமாகவே இருக்கிறது. :-(

-0-0-0-0-0-0-

தேவையேயில்லாமல் இந்தத் தமிழ்த் திராவிடச் சகதியில் இந்தக் கில்னானியை இஸ்க்கவேண்டாம் எனப் பார்த்தேன்.

ஆனால் உலகமனைத்திலும் (ஜாதி மத பேதம் பார்க்காமல்) உள்ள மூடர்களும் மூர்க்கர்களும் காரியார்த்தமாக ஒருங்கிணைவதுதானே கொள்ளைக்காரத் திராவிடம்? சுனில் அவர்களும் ஆர்வத்துடனும் கடும் உழைப்புடனும் இந்தத் திராவிட ஜோதியில் கலக்க விழைபவர்தாமே! ஆகவே!

மேலும் – கில்னானி என்பது உண்மையில் கில்+ஞானி என்பதன் மரூவு என என் பேராசான் #எஸ்ரா அவர்கள் வழக்கமேபோல – அண்மையில் சொல்லாததாக நினைவு. ஆக – எந்த அறிவுசார் போக்கையும் ஆழமான புரிதலையும் எதிர்த்து அவற்றை ஒழிக்கும் போக்கில், ஞானிகளை அழித்தொழிக்கும் மும்முரத்தில் இருப்பவர் இந்த மகாமகோ கில் ஞானி என்பவர் அல்லவா?

ஹ்ம்ம்… மேலும் இந்த விஷயங்களைப் பொதுவாக மூன்றுவிதமாக அணுகிப் புரிந்துகொள்ளலாம் – 1) அறிந்து புரிந்துகொள்ளலாம் 2) அறியாமலும் புரிந்துகொள்ளலாம் 3) புரிந்துகொள்ளாமலேயே அறிந்துகொள்ளலாம்; மூன்றாவது கொஞ்சம் ஆன்மிக வகை. புரிய நிலை. உச்சம். இது சாதாரணமானவர்களுக்கு உகந்ததல்ல. விஷயங்களின் அடி நுனி வேர்களை ஆய்ந்தறியும் ஞானிகளுக்கே இது முடியும். இவர்களைத்தான் கேரளத்தில் வேர்க்குரு என்றழைத்தார்கள் என என் தந்தையின் நாயர் நண்பர் என்னிடம் சொன்னார். அப்போது எனக்கு வயது ½. குருகுருப்பு என்பது குருவைத் தேடியலையும் சீடனின் ஆர்வவுணர்ச்சி என்பதாகவும் இருக்கலாம்.

சரி. இந்த வெட்டிக் கிண்டலை இப்போதைக்கு நிப்பாட்டுவோம். சரியா?

-0-0-0-0-0-

கில்னானி அவர்களில் உளறலுக்கு வருவோம்:

(இன்கார்னேஷன்ஸ்)

அதாவது – வைக்கொம் இயக்கத்துக்கு ஒரு உயர்ஜாதியற்ற தலைவர் இருக்கவேண்டிய அவசியத்தை காங்கிரஸ் உணர்ந்ததால் – ஈவெரா அவர்களைக் காங்கிரஸ் நியமித்ததாம்! இதைத் தொடர்ந்து அக்கட்டுரையில் என்னவோ ஈவெரா அவர்களால்தான் இந்த வைக்கம் இயக்கம் வெற்றி பெற்றதுபோல ஒர்ரே புருடா. இந்தக் கில்ஞானிக்கும் ஞானத்துக்கும் வெகு தூரம்.

ஏனெனில்:

1. இந்த வைக்கொம் இயக்கம் என்பது 1800களில் ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து நடந்துகொண்டு வந்ததொன்று. பல முற்போக்குச் சிந்தனையுடையவர்களால் முன்னெடுக்கப்பட்டதொன்று

2. இந்த இயக்கம் வீரியம் பெற்றது ஸ்ரீ நாராயணகுருவாலும், அவருடை.ய இயக்கத்தில் பணிபுரிந்த டிகேமாதவன் போன்றவர்களாலும் தான். 1905 வாக்கில் ஆரம்பித்து சாத்வீகமான முறையில் தொடர்ந்து நடந்துகொண்டிருந்த விஷயம். காங்கிரஸ் காரர்களும் வெகுவாக இதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

3. 1921லிருந்து பாபுஜியின் நேரடிப் பங்களிப்பும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வமான செயல்திட்டமும் ஆரம்பித்தது. தொடர்ந்த போராட்டங்கள், அறச்சீற்ற நிகழ்வுகள் – அனைத்து ஜாதி மக்கள்திரள்களாலும் சிரமேற்கொண்டு நடந்தன/நடத்தப் பெற்றன.

4. 1924ல் ஏப்ரல் வாக்கிலிருந்துதான் ஈவெரா வந்து தன்னுடைய அடாவடிப் பேச்சுகளின் மூலம் குட்டையைக் குழப்ப ஆரம்பித்தார்.

5.  ஈவெரா பெரிதாக முனைப்புடன், நீண்டகால உழைப்புடன், புரிதலுடன், மக்களின்மீது கரிசனத்துடன் இதில் ஈடுபடவில்லை. ஒரு பயணத்தின் போது சில காங்கிரஸ் காரர்களைப் பார்த்து அளவளாவியதில் வைக்கொம் பற்றிக் கேள்விப்பட்டு அங்கே சென்றார்; இது வெறும் அக்கப்போராளித்தனம் தான். பின்னர் அங்கு நெடுங்காலமாக ஆத்மார்த்தமாகப் பணிசெய்துவந்தவர்களில் ஒரு குழுவான சத்தியாக்கிரகிகளுக்குத் திடீரெக்ஸ் தலைவரானார். நம் செல்ல தீபா அம்மணி (ஜெயலலிதா அவர்களின் சகோதரனின் மகள்) போலத்தான் இது. திராவிடத்தில் இதெல்லாம் சகஜமப்பா…

6. தீபா = ஈவெரா. அவ்வளவுதான். பிரச்சினையென்னவென்றால், தமிழர்களுடைய அலாதியான முட்டாள்தனத்தாலும், உணர்ச்சிவசப்படுதலினாலும், ஆழ்ந்த அறிவின்மையினாலும் – ஈவெரா அவர்கள் ‘பெரியார்’ என உருமாற்றமடைந்துவிட்டார். அஇஅதிமுக காரர்களுக்கு இருக்கும் மூளையும், புரிதலும் – திராவிடர்களுக்கு இருந்திருக்கவில்லை – இப்போதும் இல்லை. ஆக – தீபா புறக்கணிக்கப்பட்டுக் கடந்துசெல்லப்பட்டார். திராவிடர்கள் இன்னமும் பெரியாரைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். பரிதாபம்.

7. அக்கப்போராளித்தனத்துக்குத் திரும்பி வந்தோமானால் –  அவர் சிலமாதங்கள் ஒருவிதமான போராளிச் சுற்றுலா (நம் ஜல்லிக்கட்டு நீட் வகையறா ஆதரவாளர்கள் செய்ததுபோல) வலம் வந்தார். அவ்வளவுதான். இதற்குப்போய் எவ்வளவு ‘பில்ட் அப்’ கொடுக்கிறார்கள் நம் கொள்ளைக்காரத் திராவிடர்கள்!

8. வைக்கொம் சத்தியாக்கிரகத்தில் ஈவெரா-வின் பங்கு என்னவென்று அவர் (ஏறத்தாழ, இப்படித்தான் – என் நினைவிலிருந்து எழுதுகிறேன் – குறிப்பேடுகள் கைவசம் இல்லை. :-( மன்னிக்கவும்!) சொல்கிறார்: வைக்கொம் சத்தியாக்கிரகத்தில் அனுதினமும் 200 பேர்போலப் பங்கேற்றனர். நாங்கள் தினமும் ஒரு பெரிய பந்தலில் சாப்பிட்டோம். காய்கறிகளும் தேங்காய்களும் ஏகத்துக்குக் குவித்து வைக்கப் பட்டிருந்தன. ஒரு கல்யாண விருந்துக்குச் சமைப்பது போன்ற அளவில் சமையல்!” ஹ்ம்ம்ம்… இதுதாண்டா #வைக்கொம்வீரர். இதுதாண்டா #சாப்பாட்டுக்கெரகம். இது சத்தியாக்கிரகலில்லடா. நன்றி.

9. முதல்முறை ஒருவாரம் சிறை – திருவிதாங்கூர் மஹாராஜாவின் கைங்கரியத்தில் (சில நாட்கள் முன் கனிமொழி, இப்போது சசிகலா போன்றவர்கள் மிகவசதியாக இருந்தது/இருப்பது போன்ற சுகங்களுடன் தான் – அது வெள்ளைக்காரச் சிறையின் மாட்டுக்கொட்டடியோ வஉசிகளின் ​செக்கிழுத்தலோ ஸாவர்க்கர்களின் கொடுஞ்சிறை தண்டனையோ அல்ல!) சுகமாக இருந்தார். பின்னர் அவருடைய தீரா அடாவடித்தனங்களால், பொறுப்பற்ற வெறுப்பினால் மறுமுறை கைதுசெய்யப்பட்டு மறுபடியும் (மன்னர் இறப்புக்குப் பின்) வெகு சீக்கிரமாகவே விடுதலை செய்யப்பட்டார்.

10. ஈவெரா அவர்களின் தற்காலிகமான அடாவடிச் சவடால்கள், தினமும் ‘திருமண விருந்தில்’ சாப்பிடல்கள் வீரமாகக் கருதப்பட்டு – அவரைப் போய் ‘வைக்கொம் வீரர்’ என அழைத்தது இன்னொரு சோகக் கதை. ஈவெரா அவர்கள் நியாயவானாகவும் அறச்சீற்றம் மிக்கவராகவும் உண்மையிலேயே இருந்திருந்தால் – அவர் தன்னைப் பொய்பொய்யாகப் புகழ்பவர்களை வெறுத்திருப்பார். ஆனால்…

11. இப்போது நம் கூறுகெட்ட வரலாற்றாளர்களால் – அவர் மட்டும்தான் பாவம், மாமாங்கக் கணக்கில் போராடி ‘வைக்கொம்’ புரட்சியை நடத்தியதாகவும், ஏமாந்தால் தன்னந்தனியாகப் புரட்சிசெய்து போரை வென்றாதாகவும் – ஏகப்பட்ட புரளிகள் கிளப்பப்பட்டு – அவை இப்போது உண்மையெனவே நம்பப் படுகின்றன. சோகம்!

12. அவர் அதிகபட்சம் ஒருவருடம் கூட இந்த ‘வைக்கொம் வீர’தீரச் செயல்களில் ஈடுபடவில்லை.

13. வைக்கொம் பிரச்சினை/சத்தியாக்கிரகம் ஒருவழியாக நல்லபடியாகவே முடிந்ததற்கு முக்கிய காரணங்கள் – ஸ்ரீநாராயணகுருவும் + அவர் அமைப்பும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களும் (முக்கியமாக, அதன் தொண்டர்களும்,) திருவிதாங்கூர் சமஸ்தானமும்; சர்வ நிச்சயமாக இவர்கள்/இவைகள்தாம் காரணங்களே ஒழிய/தவிர – ஈவெரா காரணமல்லர்.

14. ஆக – சும்மா சும்மா அவர்பேரில் இம்மாதிரியான ‘வைக்கொம் வீரர்’ பழிசுமத்துதல் தகாது. பாவம், அவர். :-(

நன்றி. பிரச்சினையென்னவென்றால்:

ஆஇரா வேங்கடாசலபதி போன்ற அரைகுறைகளை மேற்கோள் காட்டி சுனில்கில்னானி போன்ற கருத்துலகச் சோம்பேறிகள் எழுதுவார்கள். பின்னர் இதுவே உண்மையாகிவிடும். பின்னர் பூகொ சரவணன் போன்ற அப்பாவி (+கொஞ்சம் சோம்பேறி?) இளைஞர்கள் இந்த உளறல்களையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு மேலதிகமாக உளறுவார்கள். பின் இவர்கள் உளறல்களை வைத்துக்கொண்டு மேலும் சோம்பேறி இளைஞர்கள் ‘உண்மை’களை உணர்ந்து பொங்குவார்கள்.

இதை வைத்துக்கொண்டு வெள்ளைக்காரர்கள் எழுதுவார்கள், அந்த வெள்ளைக்காரர்களை மேற்கோள் காட்டி பிற பூகொ சரவணன்கள் தங்கள் முட்டாள்தனத்தையும் கருத்துலகக் கந்தறகோளங்களையும் பவனி வர விடுவார்கள்.

இவை தனிச்சுற்றுக்கும் பொதுச்சுற்றுக்கும் விடப்பட்டு சுற்றிச் சுற்றி வரும். ஊதிப் பெருக்கப்படும்…

நம்மூரில் திராவிடக் கேளிக்கைகளுக்குப் பஞ்சமேயில்லை! என்ன செய்வது சொல்லுங்கள்…

நல்ல சுனில்கில்னானி குரு, நல்ல பூகொசரவண சிஷ்யன்.

தமிழ்நாடு நல்லா வெளெங்கிரும்டா. :-(

-0-0-0-0-0-

ஒருசமயம் ‘பெரியார்’ ஈவெரா சொன்னார் – தன்னுடைய அம்மணக்குண்டிப் படத்தைத் தன் சுயசரிதையில் வெளியிடவேண்டுமென்று. ஆனால் அவருடைய சிஷ்யகேடிகளும் கேடுகளும் ஏனோ இந்த பெரியாரியத்துக்குச் செவிசாய்க்கவில்லை.

யோசிக்கிறேன்… ஒருவேளை – இப்போது – இம்மாதிரி கார்ட்போர்ட் கட்-அவுட்டுகள் நிர்வாணமாக்கப்படவேண்டிய காலம் வந்துகொண்டிருக்கிறதோ?

#எங்கேடா என் கஞ்சா?

 

8 Responses to “மிஷெல் பூகொ சரவணனின் ஆதர்சமான சுனில் கில்ஞானி அவர்களின் ‘வைக்கொம் வீரர்(!)’ பெரியார் குறித்த அமோக உளறல்”

  1. nparamasivam1951 Says:

    வைக்கோம் வரலாறு நன்றாக உள்ளது.

  2. RC Says:

    அய்யா,
    வரலாற்றாய்வில் /Accuracy is a duty, not a virtue/ என்றோ படித்தது..
    திராவிட குஞ்சுகளிடம் அதை எதிர்பார்ப்பது நியாயமா? [ ஒரு டவுட்டூ அய்யா ..திராவிடத்துக்கும் குஞ்சுக்கும் நடுவே ”க்” வருமா?] :-)

    ஆய்வுன்னு சொன்னாத்தானே ன்னு ..யுவகிருஷ்ண சரவண பூவண்ண எதிரொலி கேட்குது
    :-)
    அய்யா,
    வரலாற்றாய்வில் /Accuracy is a duty, not a virtue/ என்றோ படித்தது..
    திராவிட குஞ்சுகளிடம் அதை எதிர்பார்ப்பது நியாயமா? [ ஒரு டவுட்டூ அய்யா ..திராவிடத்துக்கும் குஞ்சுக்கும் நடுவே ”க்” வருமா?]

    ஆய்வுன்னு சொன்னாத்தானே ன்னு ..யுவகிருஷ்ண சரவண பூவண்ண எதிரொலி கேட்குது

    முறுகிப்போன வெல்லப் பாகுல பண்ணின அதிரசம் தான் “திராவிடம்”. OVEN ல வச்சி defrost பண்ணினாலும் திருப்பியும் முறுகிடும் அதிரசம்.

    அதிரசம் ஒரு குறியீடு தானே அய்யா ..
    :-)

  3. RC Says:

    அய்யா,
    ஆசானின் ‘வைக்கம்- காந்தியார்’பதிவு.ஊடே ஈ.வெ.ரா அவர்களின் பங்களிப்பு பற்றிய அவரின் பார்வை.
    http://www.jeyamohan.in/5792#.WeyOyUFRXYU
    ஆசான் தொடாத தலைப்பே இல்லை..


    • அய்யா, நீங்கள் சொல்வது உண்மைதான்.

      ஜெயமோகன் அவர்கள் இதுகுறித்து மாய்ந்துமாய்ந்து எழுதியிருப்பது ஒரு பெரிய விஷயம். பொதுவாகவே பாபுஜி குறித்த அவருடைய கட்டுரைகளை தமிழுக்கு அவருடைய மிகமிக முக்கியமான பங்களிப்பாக நான் கருதுவேன். சுட்டிக்கு மிக்க நன்றி.

      ஒருவிஷயம்: வைக்கொம் தொடர்பாக ஸ்ரீ நாராயணகுருவுக்கும் பாபுஜிக்கும் நடந்த அழகான உரையாடல்களைக் கொஞ்சம் ஜெயமோகன் அவர்கள் கோடிகாட்டியிருந்தால் – இந்தக் கட்டுரைக்கு இன்னமும் அழகான முழுமை வந்திருக்கும் என நினைக்கிறேன். ஹ்ம்ம்… என் ஆசைகளுக்கு எல்லையே இல்லை! :-(

      இந்தப் போராட்டத்தின் ஆயிரம் சிடுக்கல்களில் – குறிப்பாக மதமாற்ற நடவடிக்கைகள், ஊரான் பிரச்சினைத் தீக்களில் குளிர்காய்வது, மேலும் பெட்ரோல் விடுவது எனப் பலப்பல அயோக்கியத்தனங்கள் நடந்துகொண்டிருந்தபோது – சாத்வீகமாகவும் அரசியல் அறங்களின் பேரிலும் அவற்றை அணுகிச் சுமுகமாகப் பிரச்சினைகளைஹ் தீர்த்த – பாபுஜி தான் விடிவெள்ளி. இந்த மனிதரைப் போய்க் கரித்துக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள் நம்மவர்கள்!

      அது மட்டுமல்லாமல் – கண்டகண்ட அக்கப்போராளிகளைச் சிறப்பிக்கிறார்கள், நம் கூறுகெட்டவர்கள்.

      __ரா.


      • ஏன் நீங்கள் காந்தியார் என எழுதுகிறீர்கள்? திராவிடவீச்சம். தேவையா, சொல்லுங்கள்?

      • RC Says:

        அய்யா,
        திராவிட வீச்சத்துக்கு மன்னிக்க.
        என் பின்னூட்டத்தில் ‘பெரியார்’ என்று குறிப்பிடவே மனதில் சொற்கள் ஓடிக்கொண்டிருந்தன.எனவே ‘காந்தியார்’ என்று முன்னே எழுத்து விழுந்துவிட்டது இயல்பான திராவிடத்தனத்துடன். பின்னர் எழுதும் போது பெரியார் அகன்று ஆசானின் ‘ஈ.வே.ரா’ வா உங்களின் ‘ஈ.வெ.ரா’ வா என்ற “வே”,”வெ” குழப்பம் வந்துவிட்டது.
        ஆசான் அதற்கும் பதிவு எழுதியதாக ஞாபகம்.
        இப்போது ‘வைக்கம்’, வைக்கொம்’ குழப்பமும் சேர்ந்து கொண்டது.எங்களை விட்டுவிடுங்கள் அய்யா :-(
        சராசரிகளை நீங்கள் இருவரும் படுத்தும் பாடு இருக்கிறதே .ஸ்.. மிடில. .அதிகாரி ஸ்ரவனிடம் சொல்லி ஒரு பதிவு எழுதச் சொல்ல வேண்டும் :-)

        அதற்கு முன்பாக நீங்கள் முன்னர் ஒருதடவை குறிப்பிட்ட E.H.Carr பற்றி இணையத்தில் படித்த ஒரு கட்டுரையிலிருந்து ஒரு சிறு பகுதியை அவரை படிக்கச் சொல்வேன்.

        //Even as a historian is influenced by their personal prejudices, preconceptions and social context, he is constrained by his profession to provide a rational and justified explanation that concurs as much as possible with most available evidences…Historical synthesis is also not simply a matter of selection and interpretation according to the way a historian desire, for he is restricted by a code of conduct to produce a fair and comprehensive presentation of the subject…As Carr rightly said, “History is a continuous dialogue with the past”. We should continue to engage in such a dialogue with the past, revisiting and revising accepted historical facts by accepting there is no such a thing as absolute truth; and ultimately, achieve greater relative objectivity, aiding us to understand the past better for the purpose of the present..//

        https://www.ukessays.com/essays/history/an-overview-of-eh-carr-history-essay.php

        Click to access HISTORY-What-is-history-E.H-Carr.pdf

        நன்றிகள் அனைத்திற்கும்..

  4. பிரபுதேவா Says:

    தீபா = ஈவெரா ஒப்பீடு. தமிழர்கள் காலங்காலமாக கூவான்களாகவே இருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடு.


    • அன்புள்ள பிரபுதேவா, உண்மைதான். ஆகவே உங்களைப் போன்ற துடிப்பு மிக்க இளைஞர்கள் களத்தில் இறங்கினால்தாம் முடியும். ஜெயமோகன் அவர்களுக்குக் கடிதம் எழுதுவதிலிருந்தாவது ஆரம்பிக்கலாமே அய்யா!

      ரா.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s