எனக்குப் பிடித்தமான அமெரிக்க நடிகர் ராபர்ட் டௌனி ஜூனியர் அவர்களும், நம்முடைய பல அறிவுஜீவிகளும்…
June 30, 2016
ஹ்ம்ம்… கடந்த சில நாட்களாக, எடுத்துக்கொண்டிருக்கும் கல்வி(!) தொடர்பான பணிகள் (= living the myth of sisypus) தொடர்பாக – பலருடன் சந்தித்து உரையாட (=கேட்டுக்கொள்ள) வேண்டியிருந்தது… இவர்களில் பெரும்பாலோர் கல்வித்துறை சார்ந்தவர்கள், பல்கலைக்கழகங்கள், கஞ்சிக்கலயத் தன்னார்வ(!)அமைப்புகள் சார்ந்தவர்கள் — சிலர் பேராசிரியர்கள், பலர் நடுவாந்தரம், சிலபேர் இளம் மாணவர்கள். பெரும்பாலும் கல்வியியல்/சமூகவியல் தொடர்புடையவர்கள்.
…பெரும்பாலோருக்கு அரசு செலவில் ஓரளவு குஷியான வாழ்க்கை. ஆக, சமூகப் புரட்சி வித்திடல்களுக்குக் கேட்பானேன்!
என்னவோ தெரியவில்லை – நரேந்த்ர மோதி (அல்லது இந்தியாவின் வளர்ச்சி (அல்லது உயர் தொழில் நுட்பம் (அல்லது இந்திய வரலாறு…))) பற்றி ஏதாவது (=எதிர்மறையாகத்தான், கவலையே வேண்டாம்!) எழுதவேண்டும் அல்லது பேசவேண்டும் என்ற திடமான சிந்தனை வந்துவிட்டால், நம் அறிவுஜீவிப் பெருந்தகைகளுக்கு என்னவோ ஆகிவிடுகிறதே, என்ன செய்ய… :-(
கோரமான முன்முடிவுகள். தினசரிச் செய்திகளுக்கும், டெலிவிஷன் பப்பரப்பா வாந்திகளுக்கும் அப்பாற்பட்டு – ஒரு விஷயத்தையும் ஆழமாகத் தெரிந்துகொள்ள விரும்பாத மனப்பாங்கு.
…கண்டமேனிக்கும், தெரியாத விஷயங்களையெல்லாம் தெரிந்ததுபோல் காட்டிக்கொண்டு அட்ச்சுவுட்டுவிடுகிறார்கள். :-) எவர் இதையெல்லாம் சரிபார்க்கப் போகிறார்கள் என்ற விட்டேற்றி மனப்பான்மையும் இதற்கொரு காரணமாக இருக்கலாம். வரவர, எல்லாருக்கும் #எஸ்ரா என நினைப்பு, வேறென்ன சொல்ல…
சொந்த வீட்டை, சுற்றுப்புறத்தையே விடுங்கள் – தங்களுடைய சொந்தக் குடும்பத்தையும்கூட – என் தங்களையே கூட ஓரளவுக்குகூட நிர்வகிக்கும் திறனற்றவர்கள் – பெரிதாக, நாட்டை எப்படி ஆளவேண்டும் என வண்டைவண்டையாக ஏகத்துக்கும் நீட்டிமுழக்கிக்கொண்டு லூஸ்லவுட்ற அறிவுரைகளை அள்ளியள்ளிக் கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள், நம்மவர்கள்! அல்லது நக்கலாக நாலு டிவிட்டர் செய்தி போடுவார்கள். அதனால் தான் சொல்கிறேன்: There should be no free speech; it should be taxed.
-0-0-0-0-0-0-
ஹலோ… ஹலோ… என்ன கேட்டீர்கள்? அப்போது இலவசக் கேளிக்கைகளுக்கு எங்கேபோவது என்றா??சரிதான். தொழில்முறை சரிவுஜீவிகளை விட்டால், நமக்கு நாதியேயில்லையா என்ன? திராவிட இயக்கம்தான் இருக்கவே இருக்கிறதே! அவற்றில் இருக்கும் சொறிவுஜீவியக் குஞ்சாமணிகளின் பேச்சுகளைக் கேட்டாலே போதுமே! :-)) ஹாஹ்ஹா!
எனக்கு இப்பிதாமக்குகளைப் பார்த்தால் சிப்புசிப்பா வர்து! ;-)
-0-0-0-0-0-0-
நேரடி உரையாடல்கள் சிலசமயம் ஹிந்தியிலும் நடந்தன. சில ஸ்கைப் வகையறாவிலும், கேமராவை அணைத்துவிட்டு – ஏனெனில் என் முகத்தைப் பார்த்து அவர்களும், அவர்கள் முகங்களைப் பார்த்து நானும் பேஸ்தடித்துக்கொள்ளவேண்டாம் பாருங்கள்.
பல உரையாடல்கள் இந்த ரீதியில் இருந்தன:
…[நாங்கள்] நீங்கள் எப்படி இவ்விஷயத்தைப் பரிந்துரைக்கிறீர்கள்?
[அவர்கள்] அமெரிக்கா – ஜான் டூயி – அந்த இஸம் இந்த இஸம் -… அப்படித்தானே… ஸோவியத் யூனியன் 1930களில்… நமக்குத் தேவை மாற்று…
[நான்] அய்யன்மீர், மாற்று நிச்சயம்தேவைதான். ஆனால் நம் நாட்டு விஷயங்களைப் பற்றி நம்மவர்கள் காத்திரமாகவே எழுதியிருக்கிறார்களே! நம்மூர் மகாமகோ கே க்ருஷ்ணகுமார் அவர்கள் எவ்வளவோ இவைபற்றி (= கல்வியின் வரலாறு) எழுதியிருக்கிறாரே? அரவிந்த் குப்தாவைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஷிக்ஷாந்தர்? ஏகலவ்யா குழுவினர்களின் ஹோஷங்காபாத் ஆராய்ச்சிகள்?
[அவர்கள்] க்ருஷ்ணகுமார் உலகளாவி அறியப்படவில்லையே! அவர் வெளி நாட்டு சஞ்சிகைகளில் பதிப்பித்திருக்கிறாரா?
[நான்] ஆ!
ஒட்டை குண்டுசட்டியில் கழுதையைச் சுற்றிச்சுற்றி ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்…
…மூச்சுமுட்டுமளவுக்கு அரைவேக்காட்டு முன்முடிவுகள், வேறென்ன சொல்ல.
-0-0-0-0-0-0-0-0-
… …[நான்] ஹமாரா பாரத் மே பீ வைஸா காம் சல் ரஹா ஹைன… (=நம்முடைய பாரதத்திலும் அப்படிப்பட்ட விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றனதானே?)
[அவர்] இந்தியா என்று சொல்லுங்கள். பாரதம் என்று சொல்லாதீர்கள்!
[நான்] சரி. அய்யா, எனக்குச் சரியாகப் புரியவில்லை. ஆனால் நாம் ஹிந்தியில் பேசும்போது பாரத் என்றும் ஆங்கிலத்தில் பேசும்போது இந்தியா என்றும் சொல்லிக்கொள்ளலாமே? ஹிந்தி பேசப்படும் பிரதேசங்களில் பாரத் என்று நம் தேசத்தைக் குறிப்பிடுவதுதானே வழக்கம்?
[அவர்] எனக்குப் பிடிக்காது. பாரதம் என்றால் ஹிந்துத்துவா. அது வெறுப்புவாதம். ஐ ஆம் ஃபார் ஸெக்யூலரிஸ்ம்.
[நான்] சரி, என்னை மன்னித்துவிடுங்கள். நாம் பிற விஷயங்களுக்குப் போகலாமா?
…பிரச்சினையென்னவென்றால் இவர்களுடைய பெயர்களில் ஹிந்து, இஸ்லாம் கடவுளர்களின் குறிப்புகள் இருக்கின்றன. அவர்கள் சிந்தனைவழியில் – கடவுள் என்றால் மதம். மதம் என்றால் அசிங்கம். ஆனால் — ஏன் உங்கள் பெயரை நீங்கள் குறிப்பிடுவதில் நீங்கள் வெறுப்படையவேண்டும் எனவெல்லாம் நான் இடக்காகக் கேள்வி கேட்கவில்லை. ஏனெனில், என் குவியம் அவர்களுடைய முகமூடிகளை அவிழ்ப்பதில் இல்லை. அதற்கு இன்னொரு சமயம் வாய்க்கலாம்.
எலியே, எலிக் கடவுளே, லாமாவாகிய என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறீர். ;-)

எனக்குக் குறிப்பு: மகாமகோ ஜார்ஜ் லேகஃப் அவர்களின் ‘Metaphors We Live By‘ புத்தகத்தை மறுபடியும் நெட்டுரு போடவேண்டும்.
ஆனால் ஒன்று சொல்லவேண்டும்: ஒன்று.
மன்னிக்கவும். இந்தச் சராசரிக் கும்பலிலும் ஓரிரு விடிவெள்ளிகள் இருந்தார்கள். இவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகத்தான் எண்ணம். எலிக்கு நன்றி.
-0-0-0-0-0-0-0-
…மேற்கண்ட கண்ட விஷயங்களுக்கும் அமெரிக்க நடிகருக்கும் என்ன தொடர்பு என்று கேட்காமலா, இத்தளத்தை விட்டு ஓடப்போகிறீர்கள்?
உங்கள் தாங்குதிறன் அவ்வளவுதானா? :-(
சரி.
“Listen, smile, agree, and then do whatever the fuck you were gonna do anyway”
— Robert Downey Jr. on Inside The Actors Studio, quoting Judd Nelson, (2006-07-09)
அதாவது: போங்கடா போக்கத்த அரெகொறெங்களா! நீங்க வாந்தியெடுக்கறதெ வாந்தியெடுத்துக்கிட்டே இருங்க. நாம்பாட்டுக்கு என் வேலயப் பாத்துக்கினே போறேன்…
“I have a really interesting political point of view, and it’s not always something I say too loud at dinner tables here, but you can’t go from a $2,000-a-night suite at La Mirage to a penitentiary and really understand it and come out a liberal. You can’t. I wouldn’t wish that experience on anyone else, but it was very, very, very educational for me and has informed my proclivities and politics ever since.”
— Robert Downey Jr. quoted in David Carr, “Been Up, Been Down. Now? Super.”, New York Times (2008-04-20)
நன்றி, ராபர்ட்.
June 30, 2016 at 12:44
Best is the closing one © எஸ்.ராமகிருஷ்ணன் ..hahaha