தொல்.திருமாவளவன்: தமிழக அரசே! திமுக குற்றவாளி ‘பேராசிரியர்’ அன்பழகன் மீது கடும் நடவடிக்கை எடு!
April 29, 2015
நம் தமிழகத்தில், நேர்மையாகவும் தர்மாவேசத்துடனும் அரசியலை நடத்திக் கொண்டு செல்வதில் தொல். திருமாளவன் அவர்களுக்கு ஈடு இணையே கிடையாது, பாவம். :-(
அதனால்தான் இப்படியெல்லாம் அறிக்கை விடுகிறார், அவர். :-((
“சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல் [1]
“… மனித தன் மையற்ற இந்தக் கொடுஞ் செயலில் ஈடுபட்ட குற்ற வாளிகளைக் கடுமையா கத் தண்டிக்க வேண்டு மென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத் துகிறோம்.
“… பாதிக்கப்பட்ட சிறு மிக்கு பாதுகாப்பும், சிகிச் சையும் உளவியல் ஆலோ சனைகளும் வழங்கிட வேண்டுமெனவும் கேட் டுக்கொள்கிறோம்.
“… இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு இந்த வன் கொடுமைகளைத் தடுப்ப தற்கு உரிய சிறப்பு நட வடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
-0-0-0-0-0-0-0-
என்னுடைய வருத்தம் என்னவென்றால்: ‘பேராசிரியர்’ அன்பழகன் அவர்களுக்கு 90 வயதுக்குமேலாகிவிட்டது. அவர் நண்பர் கருணாநிதி அவர்களை விடவும் இவர் வயதில் மூத்தவர், பழுத்த பழம் என நினைவு.
இருந்தாலும், தொல்.தி அவர்கள் இப்படிச் சொல்கிறார்! கொஞ்சம் வயதுக்கு மரியாதை கொடுத்தாவது கருணையுடன் கருத்துகளைத் தெரிவிக்கலாம் அல்லவா?
போற்றக்கூட வேண்டாம், தூற்றாமலாவது இருக்கலாமல்லவா? பழங்குப்பைகளைக் கிளறாமல் இருக்கலாமல்லவா? :-(
திமுக-வுடன் கூட்டணி இருக்கும்போதே இப்படி ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ எனப்பேசும் தொல்.தி அவர்கள், வரலாற்றை அறிந்தவரா என்றே தெரியவில்லை…
… அதேசமயம் பாருங்கள் – நன்றி விசுவாசத்துடன் இருக்கும் அன்பழகன் அவர்களின் 2014 ஆண்டுக் கருத்தை:
“இந்தியாவிலே ஏழைகளுக்காக கட்சி நடத்துபவர் கருணாநிதிதான்!”[2]
எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார், பாருங்கள். தயாளுவார், ராசாத்தியார், இசுடாலினார், அழகிரியார், கனிமொழியார், தயாநிதியார், கலாநிதியார் போன்ற – இந்தியாவின் பரம ஏழைகளுக்காகக் கட்சி நடத்தும் பாங்கை, இப்படிப் போற்றிப் புகழ ஏன் தொல்.தி அவர்களால் முடியவில்லை?
ஏன் அவரிடம் பெருந்தன்மை இல்லை?
-0-0-0-0-0-0-
தொல்.தி அவர்களுக்கு, ‘பேராசிரியர்’ மேல் ஏனிந்தக் கொலைவெறி?
இப்படிச் சமன நிலையில்லாமல் கருத்துதிர்த்தால், எப்படித்தான் தம் கட்சியை தொல்.தி அவர்களால் வளர்த்தெடுக்க முடியும்?
எனக்கு வருத்தமாகவே இருக்கிறது. :-(
ஆதாரங்கள், அடிக்குறிப்புகள்:
[2] தினமணி தினசரித்தளத்தில் 14, ஆகஸ்ட் 2014 தேதியிட்ட செய்தி: கருணாநிதி கை காட்டுபவரே பிரதமர்: பேராசிரியர் அன்பழகன்
[3] தமிழ் ஒன் இந்தியா தளத்தில் வந்த ஜனவர் 31, 2005 தேதியிட்ட கட்டுரை: ராமதாஸின் பெயர் “தமிழ்க் குடிதாங்கி”: திருமாவளவன்!
- திருமாவளவன் ‘பேராசிரியர்’ அன்பழகனைப் படு கேவலமாகத் திட்டினார்! 01/07/2011
- ‘வெறும்’ க அன்பழகன் கூட ஒரு குற்றவாளிதான்! 25/06/2011
- ‘வெற்று’ அன்பழகனும் தமிழ் அலக்கணமும்… 18/07/2011
- திராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/04/2015 வரை!)
April 30, 2015 at 02:03
தலீவர் மற்றும் பேரா-சிறியர் அவர்களை ஒப்பிடுகையில் தொ.தி வெறும் கத்து குட்டி. அரசியல் லாபத்திற்க்கு கூடார்ம் தேடி திரியும் இவர் நம்து கேப்-டன் குடி மக்களின் பிரதினிதி, அவர்களிடம் இருந்தாவது கிளாஸ் பயில வேண்டும். ஊழல் சொத்து குவிப்பு வழக்கில் பே-சீ இன் பொறுப்பு அவர் தமிழர் பால் கொண்ட “அன்பை” விள்க்குகிற்து.எனவே தொ.தி யின் பொற்ப்பற்ற அநாகரிக செயலை வன்மயாக கண்டிக்கிறேன்
May 2, 2015 at 08:42
/// “சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல் [1] ///
இதற்கும் அன்பழகனுக்கும் என்ன சம்பந்தம்? என்னதான் சொல்ல வருகிறீர்கள்?
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெய தப்பித்தவறித் தப்பித்துவிடும் வாய்ப்பு துளியூண்டு இருந்ததை, அன்பழகன் பவானி சிங் நியமனத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு கெடுத்துவிட்டது (அன்பழகனும், பாழாய்ப்போன அந்த ஆச்சார்யா அளித்திருக்கும் எழுத்துபூர்வமான வாதங்கள் உயர்நீதி மன்றம் அளிக்கவிருக்கும் தீர்ப்பில் பிரதிபலிக்க வேண்டுமாமே) என்பதால் உங்களுக்கு அன்பழகன்மீது தலைகால் தெரியாத, சொல்லத்தெரியாத அல்லது முடியாத கோபம்; அதை இப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்றுதான்.
May 2, 2015 at 11:27
அய்யா சரவணன் – நான் அன்பழகன் அவர்களின் லீலைகள் பற்றி எழுதியது – 25-6-2011 தேதியிட்ட பதிவு ஒன்றில் – https://othisaivu.wordpress.com/2011/06/25/post-54/ – அதைத்தான் இந்தப் பதிவில் கோடிகாட்டியிருக்கிறேன். அதாவது அன்பழகன் ஒரு குற்றவாளி. அவர் பிற்காலத்தில் அச்சிறுமியை மணந்தார் என்பதெல்லாம் வேறு கதை. இது ஒரு சிறுமித் திருமண மேலதிகக் குற்றம்.
மற்றபடி, ஜெயலலிதா, பவானிசிங் (இவர் யார்?), வழக்கு, எங்கு இருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரிந்து கொள்ளவில்லை. இனிமேல், தேவையிருந்தால் தெரிந்து கொள்கிறேன். எனக்கு இம்மாதிரி சலசலப்புகளில் ஆர்வம் இல்லை.
திராவிட இயக்க உதிரிகளில் ஜெயலலிதாவும் ஒரு அங்கம்தான். போதுமா? திராவிட இயக்கங்கள் அனைத்தும் – கூண்டோடு கைலாசம் போனால்தான், ஒழிந்தால்தான் தமிழகத்துக்கு விமோசனம் என நினைப்பவன் நான்.
இவ்வளவு நாட்களாகப் படிக்கிறீர்கள் – இப்படியா ஒரு கருத்தை விட்டெறிவீர்கள்?? இப்படி ஒரு கருத்தை ஏற்படுத்தும் என்னை நினைத்தால் கேவலமாக இருக்கிறது.
March 6, 2021 at 09:57
[…] தொல்.திருமாவளவன்: தமிழக அரசே! திமுக கு… 29/04/2015 […]