யுவகிருஷ்ணா அவர்களும், பாவப்பட்ட வௌவால்களும்
October 22, 2012
… இன்னாங்கடா டாய்… ^% $ # @ ! & (அல்லது) இணையத்தில் அ-அறிவியல், அ-சட்டுத்தனம், அ-யோக்கியம், அ-பத்தம், அ-புரிதல் – என்கிற சிறிது ரசக்குறைவான முந்தைய இடுகையைப் படித்தீர்களா?
எல்லாம் என் மாணவர்களால் வந்த வினை – அவர்களை பத்ரி சேஷாத்ரி, அருண் நரசிம்மன் தளங்கள் போன்ற சில வலை முகவரிகளுக்குச் சென்று அங்கு உள்ள, நாங்கள் விலாவாரியாகப் படித்து, அவதானித்திருந்த அறிவியல் பற்றி, தமிழில் இருந்த செய்திகளைப் படித்து (அணுவுலை உட்பட), தமிழில் கட்டுரைகள் எழுதுமாறு பணித்திருந்தேன்.
ஏன்?
எங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கிலவழிக் கல்விதான் லபித்திருக்கிறது – எனக்கோ, தமிழிலும் அறிவியல் பற்றி அழகாக எழுதுபவர்கள் இருக்கின்றனர் – அவர்களைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டுமென்ற ஆவல். தமிழிலும் அறிவியல் பற்றி, வாயோர நுரைதள்ளாத் தமிழில் தெளிவாக எழுதுவது முடியும் என்கிற அபிப்ராயம் / வெறி, எஸ் என் நாகராசனுக்கும், சுஜாதாவுக்கும், கி கஸ்தூரிரங்கனுக்கும் அப்பாலும் அறிவியல் பற்றி ஆழ்ந்த புரிதல்களுடன் எழுதுபவர்கள் இருக்கிறார்கள் என்கிற எண்ணம்… என் செய்வது!
ஹ்ம்ம். எல்லாம் பத்ரி சேஷாத்ரி அவர்களால் வந்த வினை.
அவர் தளத்தில் இருந்த சுட்டி மூலம் சென்று, என் மாணவர்கள் காண்பித்த யுவகிருஷ்ணாவின் ’புதியதலைமுறை’ அறிவியல் + சுயமுன்னேற்றக் கதம்பக் கட்டுரையைப் படித்ததும் என் கண்ணில் ததும்பிப் பொங்கி வழிந்த ஆண்அண்டாக் கண்ணீர் இழவு நிற்கவே மாட்டேன் என்கிறது.
ஏன்?
நீங்களும் அதனைப் படிக்கவும். என் மீது வீணாகக் கோபம் கொள்ள வேண்டாம்.
கீழே உங்களுக்கு உதவியாக அவர் ‘பேட் மேன்’ கட்டுரைக்கு (நான் ஒரு bad man ஆனதால்), ஒரு ‘கோனார் உரை’ போட்டிருக்கிறேன். படித்து இறும்பூதடையவும்.
யுவகிருஷ்ணா அவர்களின் இந்தக் கட்டுரை டேனியல் கிஷ் என்கிற பார்வையற்ற மனிதர் எப்படி எதிரொலியை வைத்து இடம்சுட்டிப்பொருள் விளங்கிக்கொள்கிறார் என்பதைப் பற்றியது. சிறிய பத்தியில் சுமார் 200 வார்த்தைகளில் அழகாகக் கட்டுரை எழுதியிருக்கலாம் – ஆனால் எழுதியது யுவகிருஷ்ணா அவர்கள். அவரே ஈவெராவின் ஒரு பத்தியை மேற்கோள் காட்டியிருக்கிறார்:
எவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் – தந்தை பெரியார்
சரி அய்யா. இதற்கு நாம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை; நம் கோனார் உரைக்குப் போகலாம்,,,
நம் எல்லோருக்குமே தெரிந்த அறிவியல் உண்மை இது.
அய்யய்யோ! எப்படி எனக்குத் தெரியாமலேயே, என்னைக் கேட்காமலேயே எனக்குத் தெரிந்ததைப் பற்றி இவருக்கு எப்படித் தெரிந்தது? [ஆக, இப்படி ‘நம் எல்லோருக்குமே’ என்று பொதுப்படையாக, பொதுச்சிரங்காக, – எதை வேண்டுமென்றாலும் தான்தோன்றித்தனமாக, அடிப்படைகளின்றி மையமாக எழுதினால், யாரும் கேள்வியே கேட்கக் கூடாது என்பதறிக]
வவ்வால்களுக்கு பார்வை இல்லை. ஆனாலும் அவை அடர்த்தியான இரவுகளில் கூட, அனாயசமான வேகத்தில் இரைதேடி பயணிப்பதை கண்டிருக்கிறோம்.
அடடா, அப்படியா என்ன?? வவ்வாலா வௌவாலா? என்னது இந்த அடர்த்தியான இரவு? ஏதாவது பருப்பொருள் / கொள்ளளவு டென்ஸிடி போலவா? அல்லது கவித்துவமா? சரி, இந்த இழவெடுத்த ‘அடர்த்தியான இரவில்’ நம்மால் எப்படி அய்யா அவை ‘அனாயசமான வேகத்தில் இரைதேடி பயணிப்பதைப் பார்க்கமுடியும்? [ஆனால், ‘நாமெல்லாம் கண்டிருக்கிறோம்’ இல்லையா?]
இவைகளுக்கு பார்வை இல்லை என்று யார் இந்தப் பேராசிரியப் பெருந்தகைக்குச் சொன்னது? [ஆனால் ‘நம் எல்லோருக்குமே’ இது தெரியுமல்லவா?]
ஒரு நிமிடம் வௌவால் என்றால் என்ன என்று இணையத்தில் அல்லது ஏதாவது கலைக்களஞ்சியத்தில் படித்தால் தெரிந்துவிடுமே! இதற்குப் பயந்து கொண்டு, ஏன் வௌவால்களைக் குருட்டாம்போக்கில் குருடாக்க வேண்டும்? இது மிகவும் crudeஆக யுவகிருஷ்ணருக்குப் படவில்லையா?
எந்த ஒரு வௌவாலாவது குருடு என்று இவரால் காட்ட / தெளிவுபடுத்த முடியுமா?
பயணிப்பது என்றால் பறப்பதா? அல்லது வழக்கம் போல‘நம் எல்லோருக்குமே’ தெரியும் வௌவால்கள் இடம் விட்டு இடம் அமெரிக்கன் டூரிஸ்டர் ஸாம்ஸனைட் இத்யாதி பயணப்பெட்டிகள் எடுத்துக் கொண்டு பயணம் போகும் என நாம் புரிந்து கொள்ள வேண்டுமா?
ஒலி அலைகளை எதிரொலித்து தன்னுடைய புவியியல் சவாலை அவை எதிர்கொள்கின்றன.
அய்யா! அய்யோ!! இதில் என்னைய்யா புவியியல் சவால் இருக்கிறது, அவை எதிர்கொள்வதற்கு? புவியியல் என்றால் புரட்சிகரவிடுதலையியல் எனப் புரிந்து கொண்டிருக்கிறீர்களோ?
மேலும் அவை எதிரொலித்த ஒலிஅலைகளை அல்லவா உணர்கின்றன?
இதை ஆங்கிலத்தில் echolocation என்கிறார்கள்.
ஸ்ஸ், அப்பாடா! நான் என்னவோ தமிழில் echolocation என்று சொல்கிறார்களோ என நினைத்து மனப் பேதலித்து விட்டேன்! விளக்கியமைக்கு நன்றி!!
எக்கோலொகேஷன் முறையில் பார்வையுள்ளவர்களுக்கு இணையாக அன்றாட வாழ்வியலை மேற்கொள்கிறார்.
வாழ்வியலா வாழ்வா? வாழ்வியல் மனிதர்களுக்கு என்றால், புவியியல் வவ்வ்வால்களுக்கு என்கிற புரிதலோ??
யாருடைய உதவியுமின்றி டேனியல் தனியாகதான் தங்கியிருக்கிறார். துணைக்கு யாரையும் ஊரில் இருந்து அழைத்து வரவில்லை.
அய்யா யுவகிருஷ்ணரே, நீங்கள் பார்வையில்லாதவர்களை முன்பின் பார்த்ததே, கவனித்ததே இல்லையா? எனக்குத் தெரிந்து அவர்கள் அனைவரும், பொதுவாக மற்றவர்களின் உதவியை எதிர்பார்ப்பதே இல்லை. சுய பச்சாத்தாபமே இல்லாமல், தங்கள் வாழ்க்கையை நன்றாகவும் சந்தோஷமாகவும் நடத்திக் கொண்டிருக்கின்றனர் கூட! [ஆனால் மன்னிக்கவும். ஒரு வேளை உங்கள் பார்வையில், ’அவர் தானாகவே ஜட்டி போட்டுக் கொள்கிறார்’ என்று ’நம் எல்லோருக்குமே’ தெரிந்து புளகாங்கிதம் அடையவும் வேண்டுமல்லவா?]
பார்வையற்றவர்கள் வழக்கமாக குளிர்கண்ணாடி அணிவார்கள். அவர்கள் மற்றவர்களை பார்த்து பேசும்போது விழி வேறு திக்கை நோக்கும் என்பதால் உரையாடல் சிரமமாக இருக்கும் என்பதற்காக இந்த ஏற்பாடு.
யார் அப்படிச் சொன்னார்கள்? ராஜபார்வையில் கமலஹாசன் அப்படி நெட்டுக் குத்தலாக பார்ப்பது போலக் காண்பித்ததைப் பார்த்து அப்படி புரிந்து கொண்டுவிட்டீர்களா? விழி வேறு திக்கை நோக்குமா என்ன? உங்களுக்கு ஒரு பார்வையில்லாத மனிதரையும் பார்க்கும், கவனிக்கும் வாய்ப்பு அறவே இருந்ததில்லையா? உங்கள் பார்வையில்(!) கருணாநிதி ஒரு பார்வையில்லாதவரா என்ன? அதனால் தான் கருணானிதி வழக்கமாகக் குளிர்க்கண்ணாடி அணிகிறாரோ என்னமோ!
புகைப்படங்களுக்கு இயல்பாகவே ‘போஸ்’ கொடுக்கிறார்.
ஆக, சமீபகாலம் வரை, உங்களுக்கு பார்வையில்லாதவர்கள் இயல்பாக ‘போஸ்’ கொடுக்கமுடியாது என எண்ணம்!
“இடது பக்கம் திரும்புங்கள், லேசாக வலது பக்கம்” என்று நம் புகைப்படக்காரரின் கோரிக்கைகளுக்கு மிகச்சரியாக செவிசாய்க்கிறார்.
அச்சச்சோ! அவருக்கு பார்வையில்தான் அய்யா பிரச்சினை, கேட்பதில் அல்ல! கண்களும் காதுகளும் வெவ்வேறு உடலுறுப்புகள் என்பதை நீங்கள் அறிவீராக!
பேசிக்கொண்டே லேப்டாப்பை திறந்து வேகமாக ஏதோ பணிகளை கவனிக்க ஆரம்பித்தார்.
“லேப்டாப்பெல்லாம் பயன்படுத்துகிறீர்களா?”
அட, அட – என்னே உங்கள் கவனம்! என்னே உங்கள் கேள்வி கேட்கும் சாதுர்யம்!!
அவர் பேசுவதைப் பார்த்து நீங்கள் “வாயாலெல்லாம் பேசுவீர்களா?” எனக் கேட்கலாம்.
அல்லது அவர் ஜட்டி போட்டிருப்பதை நீங்கள் பார்த்து “ஜட்டியெல்லாம் போடுவீர்களா” எனவும் ஆச்சரியத்துடன் கேட்கலாம்.
அவர் வாயுவை வெளியேற்றினால், அதனை உங்களால் உணரமுடிந்தால் ”அடடே, உங்களால் பின்புறம் வழியாகக் கூட நாயனம் வாசிக்க முடியுமா?” எனக் கேட்கலாம்.
உங்கள் நகைச்சுவை உணர்ச்சி சிறிது அதிகம்தான் போங்கள்!
இன்னொரு வகை லேப்டாப் பார்வையற்றவர்களுக்கானது. இது எப்படி இயங்குகிறது என்று உங்களுக்கு சொல்லி புரியவைக்க முடியுமா என்று எனக்கு l தெரியவில்லை”
என்ன புத்திசாதுர்யம், என்ன தைரியம் இந்த டேனியல் கிஷ் அவர்களுக்கு – இப்படிப் பேசுவதற்கு? அவர் எவ்வளவு சீக்கிரமாக புரிந்துகொண்டு விட்டார், உங்களுக்குச் சில விஷயங்களைச் சொல்லிப் புரியவைக்கமுடியாது என்பதை!
என்ன இருந்தாலும் வெள்ளைக்காரனென்றால் வெள்ளைக்காரன் தான்!
வெட்னா ஒண்ணு துண்டு ரெண்டு எனப் பேசிப்டுவான், அல்லவா?
“ஒரு வடிவத்தை நீங்கள் உணர்வதற்கும், நான் உணர்வதற்கும் நிச்சயமாக வித்தியாசமிருக்கிறது. நீங்கள் சொல்வதைப் போல செவ்வகம், சதுரம், வட்டம் என்றெல்லாம் நான் உணர்ந்துக் கொள்வதில்லை. என் மனதுக்குள் ஒவ்வொரு பொருளுக்கும் நான் ஏற்படுத்தி வைத்திருக்கும் ‘இமேஜ்’ வேறானது. தனித்துவமானது. ஆனால் செயற்கையாகவோ, இயற்கையாகவோ உலகில் அமைந்திருக்கும் எல்லாவற்றையுமே நான் உங்களுக்கு இணையாக புரிந்துகொள்கிறேன் என்பதுதான் மேட்டர்”
நாம் கண்களால் பார்க்கிறோம் என்று சொல்வதே சரியான புரிதலில்லை – ஏனெனில், கண்ணால் பெறப்பட்ட நரம்புமுனைகளால் உணரப்பட்ட பல்நிறக்கோவை சார் மின்னணு பிரதிபிம்பத்தை அவதானிப்பது, பின் அதன் மீதான ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக் கொள்வது என்பது நம் மூளையே தவிர, நம் கண் அல்ல.
எடுத்துக் காட்டாக, நாம் வாயால் பேசுகிறோம் – ஆனால் அதற்கான மசாலா மூளையில் தான் இருக்கிறது.
மேலும் நாம் நமது ந்யூரான்களை, மூளையின் இன்னபிற பல்வேறு பாகங்களை, ஒத்துழைத்து வேலை செய்யும்படி பணிக்கமுடியும். அதாவது, நமது மூளையின் செயல்பாட்டினை நம்மால் குறிப்பிடத்தக்க அளவு மாற்ற முடியும். உரிய பயிற்சிகளால் முடியாதது ஒன்றும் இல்லை.
டேனியல் செய்திருப்பது, கடும் சாதனையால் ந்யூரான்களை அவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும் பாதைகளை அமைத்து, எதிர் ஒலி அலைகளின் மூலம் பெறப்பட்ட செய்தித் துணுக்குகளை மூளையின் பிம்ப உருவாக்கப் பகுதிக்கு அனுப்ப முடிந்தமை தான்.
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, இவரது மூளை எக்கோலொகேஷன் க்கு ஏற்றவாறாக மாற்றம் கண்டிருப்பதை அறிவியலாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.
இதில் என்ன பெரிய விஷயம் எனப் புரியவில்லை. மூளையில் ஒரு பிம்பம் உருவாகும் போது, அதற்கேற்ற பகுதிகள் அதற்காக வேலை செய்ய வேண்டும்.
ஒரு குருடர் கனவு காணும்போது கூட, அவருடைய மூளையின் பிம்ப உருவாக்கப் பகுதிகள் வேலை செய்யும். இதனையும் எம் ஆர் ஐ ஸ்கேன் எடுத்துப் பார்க்கலாம்.
இதற்கு ஒரு வெள்ளைக்காரன் ஆராய்ச்சி, ஒரு படம் – இதெல்லாம் தேவையா?
நாற்பத்தியாறு வயது டேனியல் கிஷ் அமெரிக்கர். இவர் பிறந்து பதிமூன்றே மாதங்கள் ஆனபோது கேன்சர் நோயால் முற்றிலும் பார்வை இழந்தார். எக்கோலொகேஷன் முறையில் பார்வையுள்ளவர்களுக்கு இணையாக அன்றாட வாழ்வியலை மேற்கொள்கிறார். இவரே தன்னிச்சையாக, யாருடைய ஆலோசனையுமின்றி பார்வை சவாலை எதிர்கொண்ட முறை இது. இவரது இந்த தன்மையை ஒரு சினிமா ஹீரோவுக்கு சித்தரித்து, தமிழில் ‘தாண்டவம்’ என்கிற படம் வெளியாக இருக்கிறது. அப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னைக்கு வந்திருக்கிறார் டேனியல்.
சரி. ’தாண்டவம்’ படத்தின் கிட்டே கூடப் போகக் கூடாது.
=-=-=-=
இந்த யுவகிருஷ்ணா அவர்கள் டேனியல் கிஷ்-ஐ கேட்ட கேள்விகளிலேயே எனக்கு மிகமிகமிகவும் பிடித்தது:
“எங்கள் ஊர் எப்படியிருக்கிறது?”
=-=-=-=
மகத்தான உழைப்பு உழைத்து அறிவியல் அடிப்படைகளை ஆழப் புரிந்துகொண்டு, பேட்டி எடுக்கப்படுபவரின் பின்புலத்தை உள்வாங்கி, வௌவால்களுடன் பறந்து இப்படிப்பட்டக் கூர்மையாகக் கறார் கேள்விகள் பல கேட்டு, நம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான நுண்ணிய பதில்கள் பெற்று, அற்புதத் தமிழில் அதனைப் பற்றி அழகாக எழுதி, முட்டாள் தமிழ்மக்களாகிய நம்மை உய்விக்க வந்த யுவகிருஷ்ணா அவர்களை நான் நாக்கின் மீது பல்லைப் போட்டு இழிசொல் பேசுவதால், நிச்சயம் நான் பேதியில் தான் போவேன். [‘நம் எல்லோருக்குமே’ இது தெரியுமல்லவா?]
October 22, 2012 at 21:38
அறிவியல் விளக்கம் எழுதுபவர்கள் மேலோட்டமாக இல்லை தான்தோன்றித்தனமாக எழுதக்கூடாது என்பதை நியாயமான கோபத்தோடு சொல்லியிருக்கிறீர்கள். பிறவிக் குருடர்கள் நிற வேற்றுமை உணர முடியுமா? என்பது குறித்து அடியேனுக்குக் கூடஐயம். மனித மூளையின் அற்புதம் விரிந்து கொண்டே செல்கிறது.
October 23, 2012 at 19:13
oops! poor students :(
October 25, 2012 at 16:38
“எழுத்து என்பது தவம், இரத்தத்தில் ஊறியிருக்க வேண்டும் என்றெல்லாம் யாராவது கதை சொன்னால் நம்பாதீர்கள். அது மற்ற பணிகளைப் போலவே தொழில்நுட்பம்தான். தொழில் கற்றுக் கொண்டால் யார் வேண்டுமானாலும் சிறப்பாக எழுதலாம். ஏற்கனவே நீங்கள் சிறப்பாகதான் எழுதுகிறீர்கள். தொடருங்கள். வாழ்த்துகள்!”
என்று வலைப்பதிவுக் காட்டில் மோனத் தவம் நிகழ்த்தி தனியாளாக சாதனை படைத்து வரும் எங்கள் தமிழ் வலையுலகத் தலைவர் “பக்கிலுக்”கிடம் போட்டியிட்டு வெற்றி பெற முடியாத ஆயாசத்தில் ஏன் இப்படியெல்லாம் எழுதி நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள்?
October 25, 2012 at 20:00
Good one sir
October 25, 2012 at 22:45
இவர்களுக்கு முன்னோடியே சுஜாதாதான்.அவர்தான் எளிய தமிழில் விறுவிறுப்பான நடையில் எழுதுகிறேன் என்று அபத்தமாக ஏராளமாக எழுதிக் குவித்தவர்.அதன் மோசமான பாதிப்பினை இவர்களின் எழுத்தில் காணலாம்.
March 18, 2013 at 13:55
அட அட அட. இந்த பக்கிபுக்கின் மாற்றான் கேரளாவுக்கு போய் நம்பி நாராயணனை சந்திச்சு பேட்டி (?) காணப் போன கதை தெரியுமோ?
April 18, 2013 at 09:49
இந்த லூசு வாய்க்கு வந்ததை பேசி தன்னை ஒரு அறிவு ஜீவி என காட்டிக் கொள்ள ட்ரை பண்ணும். ஆனா ஒரு கூமுட்டை தான் யுவகிருஷ்ணா..
August 4, 2013 at 14:50
kindly see ariviyal.in web page which gives science mainly astronomy in simple tamil
June 26, 2017 at 12:59
Occasionally one needs the Yuvakrishnas of this world to lighten our gloomy hours. Apart from being semi-literate (a common problem with many writers n the internet) he provides a lot of unintended humour too.
July 3, 2018 at 20:04
[…] […]