ஒரு ‘வடக்கன்ஸ்’ உரையாடல் – ‘சங்கி’ அவர்கள் எழுதியது…
March 13, 2023
இதனை வெறும் நகைச்சுவையாக அல்லது நோகவைக்கும், நொந்து கையறு நிலைக்குத் தள்ளும் அறச்சீற்றம் – என மட்டுமே கருதமுடியாது என்பதுதான் பிரச்சினை, என்ன செய்ய… :-(
-0-0-‘சங்கி’-0-0-
இப்படியாகத்தானே…
…டம்மிலனின் எல்லாமறிந்த பராக்கிரமத்ததைக் கண்டு உங்களைப் போன்றோர் கதறுகின்றனர்(ஒரே இன்பம்ஸ்தான்), ஸாம்பிளுக்கு ஒன்று இங்கே.
தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுனராவதைத் தவிர நமது மாணவர்கள் முன்னே உள்ள மற்ற வாய்ப்புகள் யாவை?
…
சரி, நமது வட்டாரத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் யாவை?
…
தம்பி, நம்ம ஊர்ல பவர் லூம்ஸ் இருக்கா?
இருக்கு சார்
ஸ்பின்னிங் மில் இருக்கா?
இருக்கு சார்
திருப்பூர்ல இருந்து நெறய கார்மென்ட்ஸ் எக்ஸ்போர்ட் ஆகுதா?
ஆமா சார்
அந்த கம்பெனில நம்ம பசங்க வேலைக்கு சேரலாமா?
சேரலாம் சார், ஆனா புல்லா வடக்கனுங்க, எங்குளுக்கு வேல இல்ல
சரி தம்பி, சொந்தகாரங்க யாரும் அங்க வேல பாக்கறாங்களா?
இல்ல சார்
தெரிஞ்சவங்க யாராவது?
இல்ல சார்
எந்த மில்லுக்காவது நேரா போயிருக்கியா?
இல்ல சார்
அப்றம் எப்படி இவ்ளோ வெவரமா பேசற?
சார் வாட்ஸாப்பு இன்ஸ்டா ரீல்சு யூடூப்பு பேஸ்புக்குனு எல்லாத்துலயும் இப்ப இதான் வைரலா போய்ட்டு இருக்கு, பாக்கலயா நீங்க?
இல்லயே தம்பி, அப்டி என்னதான் நடக்குது?
சார் வடக்கன் எல்லாரும் வித்தவுட்ல ரயிலேறி இங்க வந்து நம்ம வேலைய புடுங்கறானுங்க சார், எல்லா எடத்துலயும் அவனுங்கதான், கண்ட எடத்துல துப்பி வெக்கறானுங்க சார் பீடா வாயனுங்க, இது பத்தாம கேங் சேத்துட்டு நம்மள அடிக்கறானுங்க சார், இவனுங்கனாலதான் சார் இங்க கிரைம் நடக்குது, வொர்ஸ்டு பிகேவியர் சார்
ரைட்டுதான், நம்ம ஊர்ல இருக்கற சின்ன சின்ன ஹோட்டல் தாபால கூட இருக்காங்க…
அதேதான் சார், நம்ம ஊரு வில்லேஜு, இங்கயே இவ்ளோபேர் இருக்கானுவனா டவுனு பக்கமெல்லாம் சொல்லவே தேவையில்ல சார், ஓவர் அட்ராசிட்டி சார் இவனுங்க, அன்னிக்கி பஸ்ல வர்றப்ப கண்டக்டர்கூட வண்ட வண்டயா திட்டுனாரு சார், உட்டா தமில்நாட்டயே வித்து வாய்ல போட்ருவானுவனு சொன்னாரு சார்
ஏன் அப்படி சொன்னாரு?
பின்ன என்ன சார்? பஸ்ஸே புல்லா ஸ்டேண்டிங்ல வருது, இவனுங்க ஜீன்சு பேன்ட போட்டுகிட்டு ஹெட்போன மாட்டிகிட்டு நோகாம உக்காந்துட்டு வர்றானுவ…
வித்தவுட்டா?
இல்ல சார், நம்ம ஊர் பஸ்ல அப்டி வரமுடியுமா? கொத்துக்கறி போட்ற மாட்டோம்?
அப்றம் ஏன் கண்டக்டர் திட்டுனாரு? ஏதாச்சும் பிரச்சன பண்ணாங்களா?
சார் எங்க வந்து யார்கிட்ட யாரு சார் பிரச்சன பன்றது? பொளந்துருவோம், திமுரா உக்காந்துட்டு வந்தானுவ சார், அந்த கடுப்புலதான் திட்டுனாரு, அவனுங்கள அப்டிதான் சார் வெச்சு செய்யனும்…
உனக்கு ஏன் இவ்ளோ கடுப்பு?
சார், இவ்ளோ நேரமா அதான சொல்லிட்ருக்கேன், தமில்நாடே நாசமாய்ட்டு இருக்கு சார் இவனுங்கனால…
எப்பிடி சொல்ற?
என்ன சார் இப்டி கேக்கறீங்க? எங்க தலைவரு சொல்றாரே, மினிஸ்டருங்களும் சொல்றாங்க, எவ்ளோ வீடியோ மீம்ஸ்லாம் பாக்கறோம்…
நீ யார்கிட்டயாவது பேசியிருக்கியா?
இவனுங்கட்ட எவன் சார் பேசுவான், கிய்யா பையானுட்டு இருப்பானுவ…
நீ பிரைவேட் ஸ்கூல்தானே? ஹிந்தி படிச்சியா?
ஆமா சார், கம்பல்சரி அதனால படிச்சேன், நமக்கு ஹிந்தியும் வேணாம் ஹிந்திகாரனும் வேணாம், தெரிஞ்சாலும் பேசமாட்டேன்
நான் பேசினேன் தம்பி
ஏன் சார் அவனுங்கட்ட பேசறீங்க? உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?
நான்தான் கவர்மென்ட் ஸ்கூல்ல தமிழ் மீடியம் ஆச்சே, அவங்களுக்கு தமிழ் புரியுது, தட்டுதடுமாறி பதில் சொல்றாங்க. உள்ளூர் தாபா போயிருந்தேன், அங்க ஒரு வெளியூர் பையன் இருந்தான். தோப்புக்குள்ள இருக்கற சின்ன தாபா அது, அங்க அவன நான் எதிர்பார்க்கல, அதனால பேசினேன்
அப்டி என்ன சார் சொன்னான் அவன்?
அவன் நம்ம நாடே இல்ல, நேபாள். பத்தாவது படிச்சிருக்கான், ஒரு வருஷமா இங்க வேலை செய்யறான். தாபாலயே தங்கிக்கறதால செலவு ஒன்னும் பெருசா இல்லனு சொல்றான். இங்க எப்படி வேலைக்கு வந்தனு கேட்டப்போ ஏற்கனவே இங்க வேலைல இருக்கற எங்க ஆளுங்க சொல்லிதான் வந்தேனு சொல்றான். என் பேரு தினேஷ்னு சொன்னா இங்க யாரும் நம்பறதில்ல, சைனாகாரனாட்டம் இருக்கற, இங்க வந்து பேர மாத்திகிட்டு கத விட்றயானு கேக்கறாங்க. இந்த ஊர் ஆளுங்க ஒருநாள் வேலைக்கு வந்து காசு வாங்கினதும் குடிச்சிட்டு வாரக்கணக்கா வேலைக்கு வர்றதில்ல, அதனாலதான் முதலாளி என்னை பொறுப்பா பாத்துக்க சொல்றாரு, என்னோட சம்பளத்தை வீட்டுக்கு அனுப்பறேன், அது போதும்னு சொல்றான். அவனைப்போல வேலை செய்ய நீங்க தயாரா?
…
இன்னொரு பையன் பீகார்ல இருந்து இங்க சித்தாள் வேலைக்கு வந்திருக்கான். +2 மேத்ஸ்-பயாலஜி ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிருக்கான். காலேஜ் போறதுக்கு பணம் சேர்க்கறான். தூங்கற நேரம் போக மீதி எல்லா நேரமும் இந்த பசங்க வேலை செய்யறாங்க, அதுவும் பாதி சம்பளத்துக்கு, நம்ம பசங்க செய்வீங்களா?
…
தமிழன் வேலையை மத்தவங்க தட்டி பறிக்கறாங்க, அவங்கள விரட்டனும்னு உசுப்பேத்தற உங்க தலைவர்கள் பேச்சை கேக்கற நீ அந்த வேலையை ஏன் அவங்களைத் தேடிப்போய் கொடுக்கிறோம்னு நம்ம ஊர் முதலாளிகள் சொல்றதை ஏன் கேக்கறதில்லை?
…
இதுவரைக்கும் எத்தனை மாநிலத்துக்கு ரயில்ல போயிருக்க?
…
தமிழ்நாட்டுக்குள்ளயாவது போயிருக்கியா?
…
தமிழ்தாட்டைத் தாண்டாத நீ, ஒருதடவைகூட ரயில்ல போகாத நீ வடக்கனுங்கதான் வித்தவுட்ல வர்றானுங்கனு எதை வச்சு சொல்ற?
…
எங்கயோ எவனோ அவனோட ஆதாயத்துக்காக எதையோ அடிச்சுவிட்டான்னா அதை அப்படியே பிடிச்சு தொங்கறதை நிறுத்திட்டு அதுல எவ்வளவு உண்மை இருக்குனு யோசிக்க முடியலனா நீ எவ்வளவு படிச்சும் தற்குறிதான், திருட்டு ரயில் கும்பலை இப்போ எங்க வெச்சிருக்கோம் அது எப்படி நடந்துச்சுனு மொதல்ல யோசி, மத்த உலக விஷயமெல்லாம் அப்புறம் அலசலாம்.
…
(டேய் நான் அப்பவே சொல்லல, இந்தாளு சரியில்லனு, வடக்கனுக்கு எப்டி சப்போர்ட் பண்றான் பாரு, இந்தாளு பூமர் ராமானுஜம் மட்டுமில்லடா, பக்கா சங்கி)
-0-0-‘சங்கி’-0-0-
அயோக்கிய திராவிடப் பதர்கள் சதா வெறுப்பியத்தைப் பரப்பிவிட்டு, இப்போது சௌகரியமாக, திராவிட வழித்தோன்றல் குஞ்சாமணியான பரமபீலா சீமானை நோகிறார்கள்…
எப்படியிருக்கு கதை!