ழேலேந்தி ழடனமாடும் ழமிழணங்கு – ழில ழுறிப்புகள்

April 13, 2022

ஆம். ழேலைத் தூக்கிக்கொண்டு தத்தக்காபித்தக்காவென நடனமாடும், ஷாம்பூ விளம்பரத்தலைமசுரைடைத்த ழமிழணங்கைத்தான் குறிப்பிடுகிறேன்.

இதில் ஒரு பெரிய பிரச்சினையும் இல்லை; ஆஸ்கர் விருதாவே வாங்கிவிட்ட. ஏஆர் ரஹ்மான் காப்பிக்கடையில் இதுவும் சூடாகப் பரிமாறப்பட்டது;

அதனை உண்டு, கிண்டல் ஃபீட்பேக் கொடுத்தவுடன் நானும் நீங்களும் அதனை மறந்து அடுத்த விஷயத்துக்குச் செல்வதுதான் முறை.

‘ழ’ வேல் என்ன மசுத்தைச் செய்யும், அதனை வைத்துத் தொரட்டி போல ஒரு தேங்காய் பறிக்கவாவது முடியுமா எனக் கேட்கக் கூடாது.

சும்மாசும்மா, தமிழ் ழ பம்மாத்துத் தற்பெருமை பேசி ‘தமிழ்மொழிதான் உலகத்துக்கே ஆதிமொழி’ என்றலையும்  தற்குறித் தமிழ்வெறி கும்பல்களிடம், “டேய், மொதல்ல ழ உச்சரிப்பை ஒழுங்கா செய்யுங்கடா, “பழைய வாழைப்பழத்தை உண்டு கொழுத்த மழவராயக் கிழவன் அதன் தோலில் வழுக்கி விழுந்தான்” வரிய பத்துவாட்டி தப்பில்லாம சொல்லுங்கடா எனக் கோபப் படமுடியாது…

ஆனால், இந்தத் தமிழணங்குக்காக (இத்தனைக்கும் அது நிச்சயம் கேலிச்சித்திரம் தான்) ஆதரவு எனக் குதித்து சிலபலர் பொங்கினார்கள். தேவையா? தமிழ்த்தாய் என ஒரு பிம்பம் எப்போது, எதற்காக உருவாக்கப்பட்டது என்றெல்லாம் ஒரு மசுத்தையும் புரிந்துகொள்ளாமல் அப்படியொரு புல்லரிப்பு, ப்ளடி.

(https://www.ucpress.edu/book/9780520208056/passions-of-the-tongue)

இந்த அழகில் தமிழணங்கு வேறு தமிழ்த்தாய் வேறு என இன்னுமொரு கும்பல்!

தமிழ்ச்சக்களத்தி செஞ்சக்களத்திகள் என இன்னொரு கும்பல் கிளம்பி வரவில்லை, நல்லவேளை; இதற்குக் காரணம் – நம் தமிழ்அக்கா கனிமொழி அவர்கள் இதுகுறித்து ஏதும் சொன்னதுபோலத் தெரியவில்லை என்பதாக இருக்குமோ? தற்காலத் தமிழ் எழுத்தாளர் பா.ராகவன் இதனைக் குறித்து ஒரு இமோஷனல் டீவி ஸீரியல் எழுதவில்லை என்பதாகவும் இருக்கலாம்.

…அதேசமயம், இந்த ழமிழணங்கு வெள்ளுடை உடுத்தி + கறுப்பு நிறத்தில் தலைவிரிகோலமாக இருப்பதால்… அதற்கு எதிராக இன்னொரு கும்பல் கிளம்புகிறது…

…இல்லை, தமிழணங்கு அப்படியில்லை, சங்ககாலத்தில்(!)  அணங்குன்னாக்க இதுதான் மீனிங்கின்னிட்டு…

… ஒரே மட்டையடி அடிக்கிறீங்க்ளேடா!  அந்த மீனிங்கெல்லாம் மாறிக்கினேதாண்டே இர்க்கு – அந்தக்காலத்துல என்ன மீனிங்க்ல சொன்னாங்கன்னிட்டு கொஞ்சமாச்சும் புர்ஞ்சிக்க மாட்டீங்க்ளாடே? ஒரு வார்த்தைக்கு அத்தோட சூழலை வெச்சிக்கினு விதம்விதமா அர்த்தம் செஞ்சிக்கலாம்னிட்டு தெர்யாதாடே வொங்க்ளுக்கு?

-0-0-0-0-

(அடேய்ங்க்ளா – சங்க இலக்கியம்னு சொல்லுங்கடா, ஒத்துக்கறேன்… சங்ககாலம் அப்டீன்னிட்டு ஏண்டா சொல்றீங்க? சங்க இலக்கியத்துல சொன்ன விஷயம்லாம் சங்ககாலத்துல நடந்துதுன்னிட்டு ஒரு ரெவல் டகீல் அடிக்கிறீங்க… ஆனாக்க றொம்ப ஓவரா, அதுக்கும் மேலபோயி, சங்ககாலத்துலதான் சங்க எலக்கியம் படையல் வெச்சாங்கன்னிட்டு எப்டிடா சொல்றீங்க? சங்க எலக்கியம் சமகால பண்பாட்டின் பிரதிபலிப்புன்னிட்டு எங்கேடா கண்டுபுட்ச்சீங்க?

நாம்பதான் பிளினி பெரிப்ளஸ்ஸு தஸ்ஸுபுஸ்ஸூன்னிட்டு கூவிட்டு கெடக்கோம்… அதிலயும் எக்கச்சக்க மானேதேனே…. அத்தொட்டு அத வுடு… நாம்பதான் வொலகத்துலயே பெரிய்ய கப்பல் ‘மரக்கலம்’ கட்னோம், வணிகர்கள அனுப்பினோம், நெறய்ய வெதம்வெதமா ஏத்துமதி செஞ்சோம் — அப்டீன்னிட்டே ஒரு பேச்சுக்கு வெச்சிக்கலாம்…

… ஆனாக்க, வொலகத்துல வேற எவனாவது அதாட்டு எந்த நாகரிகமாச்சும் நம்ப, அவ்ளோ அப்பேர்க்கொத்த ஃபேமஸ்ஸான, அவ்ளோ வர்ஷத்துக்கு முந்திவந்த சங்க எலக்கியத்தப் பத்தி, ஆயிரத்தைன்னூறு வருடம் மின்னாடிண்றதயே வுடு… ஆயிரம் வ்ர்ஷத்துக்கு முன்னாடியாச்சும் எள்தியிருக்காங்களாடா? அட வெள்ளக்காரனுங்களயே வுடுங்க… வம்ப மோரியனுங்களயும் குசும்ப ஆரியனுங்களயுமே கூட லூஸ்ல வுடுங்க… ஆனாக்க, ஏதாச்சும் நம்பொ பக்கத்லயே கீற கன்னட, தெலுங்கு காரனுவோ (ஆயிரொம் வர்ஷத்துக்குமேல அவ்னுங்களும்தான் எள்தியிருக்கானுவ) நம்பளோட ஆதீகால சங்க எலக்கியம் பத்தி ஒரு வார்த்தயாவது எள்திக்கீறானாடா? அப்டீன்னாக்க, யாருக்குமே தெர்யாம பொத்திப்பொத்தி வெச்சிக்கினு  இடுக்கண் வந்தாக்க நக்குகன்னிட்டு இருந்தோமாடா?

சங்க எலக்கியத்துக்கே நாம்ப ஸ்டிக்கர் ஒட்டிக்கினுதாண்டே கீறொம்? கொஞ்சமாச்சும் மண்டேல மசாலா இர்ந்தாக்க ரோசிப்பீங்க…

– ஆனாக்க மடீல வெச்சிக்கினா அநியாயத்துக்கு மறைக்கறீங்க.. எனக்கும் பிர்யாம இல்ல…)

-0-0-0-0-

தமிழச் சூழலைப் பொறுத்தவரை, தமிழ் எழுதபேசத்தெரிந்து, தொடர்ந்து தமிழில் எழுத, எழவப் படும் கட்டுரைகளைப் படிப்பது, அதிமேதாவிக் கருத்துகளைத் தெரிந்துகொள்வது போன்ற பைத்தியக்காரத்தனமான கொடுமையைத் தவிர வேறொரு கொடுமையை – இப்பூவலகில் வேறெங்கும் காணோம்.

நம் அசராசரி தமிழ் வாசகனானவன், அதாவது கொஞ்சமாகவேனும் மேன்மையை வேண்டுபவன் – பாவப்பட்ட துரதிர்ஷ்டசாலிதான், என்ன செய்ய…

தமிழாவது ஆழ்ந்த ஆராய்ச்சியாவது கறாரான வரலாறாவது மசுராவது, ப்ளடி. சங்ககால(!)த்திலிருந்து தடியெடுத்தவன் தான் தண்டல்காரன், இங்கு. புல்லரிப்பு ஒன்றுதான் இலக்கு.

ஆக.

இந்த எழவும் கடக்கப்படும்.

:-(

2 Responses to “ழேலேந்தி ழடனமாடும் ழமிழணங்கு – ழில ழுறிப்புகள்”

  1. dagalti Says:

    கோபாவேச அன்னை உருவம் பாரதீய மரபிலுண்டு தானே ஸஹ்ருதயரே.

    நற்றாய் போல இது ஒரு கொற்றாய்.

    கோபம் நியாயமா, பம்மாத்தா என்பது பத்தி உங்களுக்கு மாற்றுக்கருத்து போன்று ஏதோ இருக்கலாம்.

    ஆனால் இப்படி ஒரு உருவில் என்ன பிரச்சனை.

    பிழைதருகீழ் மரப்பட்டைக்கிறீர்கள்
    (Barking up the wrong tree)


    • சரிசரி. ‘பேயவள் காணெங்கள் அன்னை’ எல்லாம் ஏதோ படித்திருக்கிறேன். (குறுந்தொகை? விஷ்ணுபுரம்??)

      ழமிழணங்கின் உருவில் – வடிவத்தில் எனக்கொரு பிரச்சினையுமில்லை; அந்தத் தொரட்டியை வைத்துக்கொண்டு என்ன உபயோககரமாகச் செய்யமுடியும் என்கிற கருவி-வடிவமைப்புச் சிந்தனை ஆற்றாமைகளும் (riverine turtles) – அந்த ஷாம்புகண்டிஷனர் தலைமசுர் குறித்த பொறாமையும் (pogeon-turtle) தான் என் பிரச்சினைகள்.

      நீங்கள் சின்னப் பையர், இளரத்தம்; டோப்பாலஜி படித்திருக்கிறீர்களா எனத் தெரியவில்லை.

      ஆதலால்.

      உங்களுடைய நெடுமுடி இன்னமும் கிள்ளப்படாமல் இருக்கலாம் – அதுகுறித்த பெருமிதத்தில், என்னை ஒரு நாயாகச் சித்திரித்து இப்படியா மரத்தின்மேல் குரைப்பவன் என்று பட்டென்று போட்டு உடைப்பது?

      குரையொன்றுமில்லை கோவிந்தோ!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s