[இன்றைய நகைச்சுவை]  ஆன்மிக மெய்யியல் துன்பியல் ‘இனிய ஜெயம்,’ பெரிய மனதுடன் இன்று கொடுத்திருக்கும் அருள்வாக்கு

April 14, 2022

//இப்படி இமயத்தின் எல்லா இடங்களும் சென்று பக்தி கொண்டு வணங்கி அவ்வனுபவதை இந்நூல்வழி பகிர்ந்திருக்கும் ஷெளக்கத் அவர்கள் பிறப்பால் ஒரு முஸ்லீம்.

தூயதமிழில்(!)  ஷௌக்கத் என்பது சவுக்கத்து எனத்தான் எழுதப்பட முடியும்.

அதாவது, சவுக்கத்துகள் எனப்பட்டவர்கள் சங்ககாலத்தில் சவுக்குத் திணையிலுறை சவுக்குக் காட்டில் அமர்ந்து தொழில்முறையில் கத்தும், பாணர் எனப்பட்டவர்களின் பூர்வகுடிகளாக, இனக் குழுக்களாகவும் இருந்திருக்கலாம் எனப் பெரும்பேராசானின் மானுடவியல் வரலாற்றுப் புரிதல்களின் வழி, நவஸூஃபி கடலூர்சீனுவார் சொல்ல வருகிறார் – என நினைத்தால்…

அல்லது… மணிமேகலையிலும் சிலப்பதிகாப்பியத்திலும் வரும் சவத்துச் சவுக்கப்பூதம் போன்ற சிறுசவுக்கத்துகள் பெருஞ்சவுக்கத்துகளில் ஐக்கியமாகி ஆன்மிக அர மார்க்கம் ஒன்றைத் தோற்றுவித்து – ஏதாவது மர அறுப்புத் தொழிற்சாலை ஒன்றை ஆதிகாலத்தில் ஆரம்பித்தாகச் சொல்லவருகிறார் என நினைத்துத் துணுக்குற்றால்…

…என்னே கடலூராரின் அவதானிப்பு! ஷௌக்கத் என்றால் இஸ்லாமியப் பெயர் எனப் பொதுவாகவே ஜெயமோகனின் வாசகர்களுக்குப் புரியவே புரியாத நிலையில், இதனைக் குறிப்பாகச் சொல்லியே தீரவேண்டும் என நினைக்கிறார்.

“…ஷெளக்கத் அவர்கள் பிறப்பால் ஒரு முஸ்லீம்…”

!

அது மட்டுமல்ல – ஷௌக்கத் என்பது ‘பிறப்பால்’ ஒரு ஹிந்து அல்லது (பூர்வ) பௌத்தரின் (அல்லது இக்காலப் புளுகுவரலாற்றுநோண்டி வியாதிக்கு ஏற்ப – ஆசீவகரின்) பெயராக இருக்கக்கூடும் என நம்மைப்போன்ற போக்கற்ற வாசகர்கள் நினைத்து விடுவார்களோ எனப் பரிதவித்து, ‘இதை நம்மில்  எவ்வளவு பேருக்குத் தெரியும்’ என்கிற தொனியில் அவருக்கு உரித்தான மெய்ஞானத்துடன் எழுதுகிறார்!

என்னே அவருடைய கரிசனம்! (நல்லவேளை, ஷௌக்கத் என்றால் அரபி மொழியில் ~பராக்கிரமம் எனப் பொருள் என மேலதிக வியாக்கியானம் கொடுக்கவில்லை என்பதற்கு நாம் அவருக்கு மேலதிக நன்றிக்கடன் பட்டுள்ளோமன்றோ?)

மேலதிக பாப்புலர் ஆன்மிகமாஜி கண்ணீர்மல்காலஜிகல் கடலூராலஜிக்கு (ஊக்கபோனஸாக, ‘பாரதத்தில் மதச்சார்பின்மை அருகிக்கொண்டிருக்கிறது’ எனும் தொடர்பப்பரப்பா பிலாக்கணத்துக்கும்), உடனே அணுகவும்: ஷௌகத்தின் ஹிமாலயம்  April 14, 2022

:-(

பின்குறிப்பு:

“இப்படி தமிழலக்கியத்தின் எல்லா ‘ஆன்மிக நெகிழ்வாலஜி’  சாத்தியக்கூறுகளையும் இக்கட்டுரைவழி பகிர்ந்திருக்கும் நவஸூஃபி மெய்ஞானி கடலூர் சீனு அவர்கள், பிறப்பால் ஒரு இனியஜெயமார்.”

ஆச்சரியமாக இல்லை?

பின்பின்குறிப்பு:

கேவி ஜெயஸ்ரீ அவர்கள் மொழிபெயர்த்த ஷௌக்கத் அவர்களின் குறிப்புகளின் தொகையான ஹிமாலயம் (சிகரங்களினூடே ஒரு பயணம்) என்பது ஒரு நல்ல புத்தகம்தான், ஆனால், சுகுமார் ஆழிக்கோடு அவர்களின் கட்டுரைத் தொகுப்பான ‘தத்வமஸீ” பற்றி அப்படிக் கூறமாட்டேன்; ஆனால் இரண்டையும் தாராளமாகப் படிக்கலாம். (பயப்படாதீர்கள்! படபடக்கும் வெயிலில் குகைக்குள் உட்கார்ந்து ‘இருப்பின் அவஸ்தையைக் குறித்த தேடல்களில்’ ஈடுபடவேண்டிய அவசியமேயில்லை. வசதியாகவே உட்கார்ந்து படிக்கலாம் –  ‘இனிய ஜெயம்’ கடித இலக்கியத்திலும் ஈடுபடவேண்டிய அவசியமும் இல்லை.)

பின்பின்பின்குறிப்பு:

தமிழலக்கிய ஆன்மிக கெர்ரிலாத் தாக்குதல்களிடமிருந்து தப்பிப்பது எப்படி‘ எனும் ஒரு குறுங்கையேட்டினை எழுதுவதாக எண்ணம்; இதனைப் படிக்கும் ஏழரைகளில் சுமார் ஒன்றரை பேர்கள் கோபிக்காமல் ஏகோபித்து அதை வாங்க முன்பதிவு செய்துகொண்டால், வேலையை ஆரம்பிக்கிறேன்.

அனாதரவுக்கு நன்றி.

8 Responses to “[இன்றைய நகைச்சுவை]  ஆன்மிக மெய்யியல் துன்பியல் ‘இனிய ஜெயம்,’ பெரிய மனதுடன் இன்று கொடுத்திருக்கும் அருள்வாக்கு”

  1. Paramasivam Says:

    நவஸூஃபி மெய்ஞானி கடலூர் சீனு அவர்கள், பிறப்பால் ஒரு இனியஜெயமார்.” What a humorous sentence! I couldn’t stop laughing.

    Sivam.


    • சரிசரி,

      ஆனால் ஐயா, முன்பதிவு செய்ய பயப்பட்டுக்கொண்டு, சிரிப்பதில் பயனென் கொல்?

      • Kannan Says:

        தீதும் நன்றும் பிறர் தர வாரா.

        அங்கே போவானேன் அதைப்படிப்பானேன்.

        (எப்படி நம்ம தத்துவம், நானும் ஒரு சின்ன தத்துவப்புடிங்கி ஆக முயற்ச்சிக்கிறேன்).


      • //தீதும் நன்றும் பிறர் தர வாரா.

        Bleddy! அதையெல்லாம் நானே எனக்குத் தந்துகொண்டால் கூட வார முடியாது.

        ஏனெனில் 1) அவை மசுர்வாரும் சீப்பு இல்லை 2) என் தலையில் மசுரும் இல்லை…

        ஏமாந்தா குறுந்தொகையை புட்ச்சிக்கினு வந்த்டுவீங்க்டா, பாவீங்க்ளா!

        மற்றபடி உங்கள் தத்துவம் சரிதான்; நன்றாகத் தைத்துவிட்டது, இப்படியாடே உண்மய போட்டு டமார்னு வொடப்பீங்க? :-(

  2. Ramanathan N Says:

    Pre-order details please (take care of your forgetfulness, please don’t give Charu’s account number)


    • நன்றி சாமியோவ்!

      ஆனாக்க வொங்க வொர்த்தர்க்குனு எள்த படா சோம்பேறித்தனமாகீதுபா.

      அத்தொட்டு இத்தோ ஒரு டெம்பரவரி பொன்மொளி, அப்டியே அள்ளிக்குங்க!
      ‘சோறு கண்ட இடமே சோம்பேறி சொர்க்கலோகம்.’

      போனஸ் பொன்மொளி:’டோப்பாவும் வழுக்கைமண்டையும் சீப்பிருந்தாலும் வாரா’

  3. Bala Says:

    Purva bouthar is more comical than iniya jeyamar. Boss your writing has all elements that would get one laugh aloud and help getting rid of BP etc..don’t charge us please. God bless


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s